Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Tuesday, June 23, 2009

♥ சிங்களர்களின் போலி மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம் ♥

புலம்பெயர் தமிழீழ மக்களுக்கான முக்கிய அறிவித்தல்: சிங்கள இனவாதிகளின் போலி மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம்

vilippu-nerudalhttp://kelvi.net/wp-content/uploads/2008/08/280_mail-300x300.jpg



வன்னி உறவுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக பேரம் பேசும் சிங்கள பெரும்பான்மையினர் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்புகிறார்கள்.

கடந்த சில நாட்களாக புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடையே அங்கலாய்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் மின்னஞ்சல் செய்திகள் பரவுவதாகத் தெரிகிறது. இந்த மின்னஞ்சல் பொதுவாக கனடா வாழ் தமிழர்களுக்கே அனுப்பப்படுகிறது.

தலங்காமாவில் உள்ள கொஸ்வாட்டாவில் அலுவலகம் நடாத்துவதாகக் கூறும் ஒரு சிங்கள இனவாதி, வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளவர்கள் பற்றிய விபரங்களையும், இறந்தவர்கள் விபரங்களை சேகரித்து தருவதாகவும் அதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் கட்டணாம் 25 டொலர்கள் (ரூ.3000) என்றும் கூறி மின்னஞ்சல் அனுப்புகிறார்.

வவுனியா அகதி முகாம்களுக்குள் சென்று வரும் அலுவலர்களுடன் ஆலோசகர் என்ற ரீதியில் தனக்கு தொடர்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தவற விட்ட உடமைகளைத் தேடி எடுப்பதற்கும், இலங்கையில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் கூட தன்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றவாறு இவரது மின்னஞ்சல் நீண்டு செல்கிறது.

கனடிய தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை, இதுபற்றி தாம் ஏற்கெனவே கனடாவின் சகல பகுதிகளிலும் உள்ள மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இது போன்ற மோசடிப் பேச்சுக்களை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோல புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்து மக்களையும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுள்ளார். எமது மக்களின் துக்கத்தையும் அங்கலாய்ப்பையும் பயன்படுத்தி அந்த நபர் பொருள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பதால் இதுபற்றி விழிப்புடன் இருக்குமாறு வாசகர்களை நாமும் கேட்டுக் கொள்கிறோம்.

http://www.nerudal.com/nerudal.8724.html




♥ தமிழீழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ஜெயமோகனுக்கு பதிலடி ♥

http://4.bp.blogspot.com/_z2Nftf5_d-4/SecqJwHfAdI/AAAAAAAALZA/_Cydm8ekqMw/s400/jeyamohan-mar20-2008.jpg
எழுத்தாளர் ஜெயமோகனைப்பற்றி தமிழ் மக்களாகிய நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அவர் தற்போது ஈழவிடுதலையின் அவசியத்தைக் கொச்சைப்படுத்தும் எழுத்து வேலைகளின் ஈடுபட்டிருக்கிறார், அவரது தலைமையின் கீழியங்கும் இணையத்தளமொன்றில்  அவருடன் இணைந்து சாரு என்றொரு எழுத்தாளரும் எழுதிவருகிறார். இவர்கள் இருவராலும்  தமிழீழ மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி எழுதப்பட்ட செய்திக்குப் பதிலாக, தமிழுணர்வு மிக்க ஒரு சகோதரியினால் எழுதப்பட்ட மடல் இது .
 
 
சுயமோகி' என்று ஜெயமோகனை வர்ணித்த சாருவும், சாருவிடம் தொடர்ச்சியான ஒவ்வாமை கொண்டிருந்த ஜெயமோகனும் இணையும் புள்ளியாக, ஈழவிடுதலைப் போராட்டத்தின் தோல்வி அமைந்துவிட்டிருப்பதில் ஈழத்துக்காரியும் மேற்குறிப்பிடப்பட்டிருக்கிறவர்
களின் வாசகியுமாகிய நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

முதலில் சாருவுக்கு,
"சதாம் ஒரு நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர். அந்தத் தேசத்தின் வலிமையான இராணுவமே அவர் கையில் இருந்தது. மக்கள் அவர் பக்கம். விதம் விதமான ஆயுதங்கள். இவ்வளவு இருந்தும் அமெரிக்காவை எதிர்க்க முடியவில்லை. ஒரு மண்குழிக்குள் பதுங்கி வாழ்ந்து, அமெரிக்கச் சிப்பாய்களிடம் சிக்கி, மரணதண்டனை விதிக்கப்பட்டுச் செத்தார். சதாம் உசேனுக்கு அந்த நிலை என்றால், ஒரு மிகச் சிறிய கெரில்லா இயக்கம் எப்படி சிறிலங்கா, இந்தியா, சீனா முதலிய பல நாடுகளின் இராணுவத்தைச் சமாளிக்க முடியும்? இப்படிப்பட்ட சூழலில் ஆயுதத்தைக் கையில் எடுப்பது தற்கொலைக்குச் சமம் அல்லவா?" என்று எழுதியிருக்கிறீர்கள்.
 
'மிகச் சிறிய கெரில்லா இயக்கம்'என்று நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன். எண்ணிக்கையில் எதுவும் இல்லை என்பதை இவ்வளவு அறியப்பட்ட எழுத்தாளராகிய நீங்களும் அறிந்தே இருப்பீர்கள். மிகச் சிறிய கெரில்லா இயக்கத்தின் நெருக்குதல்கள் தாங்கமுடியாமல்தான் இந்திய இராணுவம் தோல்வியோடு திரும்பிவந்தது என்பதை நீங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வஞ்சத்தை, வன்மத்தை பதினெட்டு ஆண்டுகள் கழித்து அவர்கள் தீர்த்துக்கொண்டது வேறு விடயம்.
இத்தனை ஆண்டுகாலப் போருக்குப் பிறகும், இழப்புகளுக்குப் பிறகும் சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை நீங்கள் செய்திகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். அறிந்ததையே மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருக்க இயலாது.
 
 
                                                                                           உரிமைகளை இழந்து, இருப்பொன்றே பொருட்டு என்று வாழ்ந்திருப்பதே சரி என ஒரு எழுத்தாளர் சொல்வது எனக்கு நகைப்பளிக்கிறது. சமரசங்கள் செய்துகொள்வதும் சகிப்புத்தன்மையோடிருப்பதும் விட்டுக்கொடுப்பதும் இலக்கிய அரசியலுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் ஒரு மண்ணிற்கு அது எவ்விதத்தில் பொருந்தும்? அமெரிக்காவின் வலிமை தெரிந்தே அதை வியட்நாம் எதிர்த்துப்போராடியது. தென்னாபிரிக்கா எதிரியின் வலிமையை அறியாமல் போராடியது என்று உங்களால் சொல்லமுடியுமா?
"யாழ்ப்பாணம் ஆப்கானிஸ்தானைப் போல காட்சியளிக்கிறது. அங்கே தமிழர்கள் மீண்டும் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது போல அமைதியாக வாழ ராஜபக்சே வழிவகுத்துக் கொடுக்கவேண்டும். இதற்கும் அவரை உலகநாடுகள் நிர்ப்பந்திக்கவேண்டும்"
 
 
    நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்று முடிந்த நாள் 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதியாகும். அந்த நிறைவையொட்டிய கொண்டாட்டங்களின்போது இனவெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட காடைத்தனத்தின்போது கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஒன்பது. அது நீங்கள் குறிப்பிடும் அதே யாழ்ப்பாணத்தில், அதே முப்பதாண்டுகளின் முன் நடந்த படுகொலைதான். நாடளாவிய ரீதியில் தமிழர்களுக்கெதிராக கலவரங்கள் வெடித்த ஆண்டுகளான 1956, 1958, 1971 இவைகூட முப்பதாண்டுகளுக்கு முற்பட்டவைதாம். 1981ஆம் ஆண்டு எங்களது உயிரினும் மேலாகப் போற்றப்பட்ட நூலகம் இனவாதிகளால் எரியூட்டப்பட்டு சாம்பரானது, நீங்கள் குறிப்பிடும் முப்பதாண்டுகளுக்கு ஈராண்டுகளே குறைவான காலகட்டத்தில்தான். ஆக, எங்களுக்கெதிரான இன அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் பொறுத்துக்கொண்டு வாழ நாங்கள் பழகிக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். பேரினவாத ஆண்டைகளின் கீழ் அடிமைகளாக வாழ மறுப்பதை நீங்கள் தவறென்கிறீர்கள்.
நீங்கள் விரும்புவதே போல போராளிகள் இப்போது ஆயுதங்களை மௌனிக்கச் செய்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் சமாதானப் பேச்சாளர்கள் போர்க்களத்திலே ஆயுதங்களைக் கைவிட்டு வெள்ளைக்கொடியோடு சரணடையச் சென்றபோதுதான் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். சரணடையச் சென்ற சமாதானப் பேச்சாளர்களையே எவ்வித அறங்களுமின்றிச் சுட்டுக்கொன்ற அரசு இனியாகிலும் நீதியோடு நடந்துகொள்ளும் என்று நீங்கள் எவ்விதம் எதிர்பார்க்கிறீர்கள்? அப்படித் தமிழர்களோடு அவர்கள் அதிகாரத்தைப் பகிர மறுக்கிறபோது, 'ஆயுதங்களைக் கைவிட்டு அமைதி வழியில் போராட வேண்டும்'என்ற உங்கள் வார்த்தைகளை எங்கு கொண்டுபோய் வைத்துக்கொள்வீர்கள்?
 
                                                        "எங்களைப் பொறுத்தளவில் விடுதலைப் புலிகள் என்ற ஒரு அமைப்பே இனி இல்லை"என்று வெற்றியின் மமதையில் கூறிவரும் கோத்தபாய ராஜபக்சே, யாரைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக முன்னிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்போகிறார்? பேரினவாதத்திடம் விலைபோன கருணா, பிள்ளையான், டக்ளஸையா? இல்லை ஆனந்த சங்கரியையா?  இவர்கள் எல்லோரும் எலும்புபொறுக்கிகள் என்பது ஒருபுறமிருக்க; வவுனியா நலன்புரி முகாமில் அவலப்படும் உறவுகளை விடுதலைசெய்வதற்கு,இவர்களின் தலைமையில் இயங்கும் கைக்கூலிக் கும்பல்களால், தலைக்கு ரூபா.50,000 தொடக்கம் 100,000 வரையில் கப்பமாக அறவிடப்படுகிறது. இதுதான், தற்போதைய இவர்களது வியாபாரம் என்பது உங்களுக்குத் தெரியுமா ?? இவர்களையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஒப்பிடுதல் மொட்டந்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப்போட்ட கதையாகத்தான் அமையும் என்பது தமிழ்மக்கள் அனைவருக்கும் நன்கு புரிந்த விடயம்..
 
                                                                                    விடுதலைப் புலிகள் தோற்றபின், அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டும் நீங்களும் ஜெயமோகனும் இதுநாள்வரை இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் பேரழிவுகளைக் குறித்துப் பேசாதிருந்தது என்ன காரணத்தினால்? அதிகாரங்களுக்கு அஞ்சுகிறவர்கள், அதற்கு மறைமுகமாகத் துணைபோகிறவர்களுமாகிறார்கள். எனக்கும் இந்த விமர்சனம் பொருந்தும்.
 
                                                                        'காந்திய வழியைத் தேர்வதே நல்லது'என்று நீங்கள், ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறீர்கள். தமது சகோதரர்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்படுகிறார்களே என்று இங்கே காந்திய வழியில் நடத்தப்பட்ட ஊர்வலங்களுக்கும், உண்ணாவிரதங்களுக்கும் ஏதாவது பலன் இருந்ததா? காந்தியத்திற்குப் பதிலாக, பரிசாகக் கிடைத்தது காவலர்களின் தடியடிகள்தானே? இந்தியாவில் காந்தியம் விடுதலையைப் பெற்றுத் தந்தது என்றால், எல்லா நாடுகளுக்கும் அது பொருந்தும் என்று எந்த அடிப்படையில் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? காந்தியத்தினால்தான் விடுதலை கிடைத்தது என்பதும் சர்ச்சைக்குரியதே.
"நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒரு பங்கு இதுபோன்ற உள்நாட்டுப் போர்களில் அழிந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப்போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் என்று பேசுவதில்லை"
என்று எழுதியிருக்கிறீர்கள் ஜெயமோகன்.
 
                                                                     ஈழத்தில் தமிழினம் அழியும்போது உங்கள் ஒரே வெளிப்பாடாகிய எழுத்தின் வழி நீங்கள் குமுறவில்லை என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டுதானிருந்தோம். சக மனிதன் மீதும் சமூகத்தின் மீதும் நீங்கள் கொண்டிருந்த அக்கறையைக் கண்டு வியந்துகொண்டுதானிருந்தோம். மேற்கண்ட வாசகங்களால் நீங்கள் உங்களைப் பற்றி எந்தவிதமான பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கிறீர்கள்? 'நாடு, மொழி, இனம், எல்லைகளைத் தாண்டிய மானுடநேயன் நான்' என்று உங்களை நிறுவ நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? அப்படிப் பேசுவதென்பதில் இருக்கும் ஒரு சிறிய பம்மாத்தை எங்களைப்போன்ற அறிவிலிகளும் புரிந்துதானிருக்கிறோம். சொந்தக் குழந்தை இறப்பின்போதும் பக்கத்து வீட்டுக்காரனின் குழந்தையின் இறப்பின்போது சிந்தப்படும் கண்ணீரின் அளவை நாங்களும் அறிந்துதானிருக்கிறோம். குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களாயும் வாசகர்களாயும் இருக்கக்கூடிய ஈழத்தமிழர்கள் அடிபடும்போதும் அழிவுறும்போதும் வாய்திறவாத நீங்களா உலகத்தின் ஏதோவொரு மூலையில் இருப்பவனுக்காகப் பேசப்போகிறீர்கள்? நடைமுறையைக் கணக்கிலெடுக்காத இந்தச் சித்தாந்தப் பூச்சாண்டிகளை, புத்தகம் படித்துக் கக்கும் விடயங்களில் இருக்கக்கூடிய பொய்மைகளை நாங்கள் வெறுக்கிறோம். இதே விடயங்களை சமூக அக்கறையுடைய எவராது சொல்லியிருந்தால் எனது வெளிப்பாடு வேறாகவே இருந்திருக்கும்.
 
ஒரு விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்துவிட்டது என்பதற்காக அதன் நோக்கமும் மூலமும் தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்? உதாரணத்திற்கு நீங்கள் ஒரு நாவலை எழுதுகிறீர்கள்… உங்கள் மனதில் உள்ள ஒரு கருவைக் கதையாக விரிக்கிறீர்கள். அது ஒருவகையில் வாசகர்களை முன்னிறுத்தித்தான், அவர்களைச் சென்றடையும் என்ற எதிர்பார்ப்புடன்தான் (நீங்கள் மறுத்தாலும் சிறிய அளவில் எனினும் அதுவே உண்மை) எழுதப்படுகிறது. அது உங்களால் எதிர்பார்த்த அளவுக்கு வாசகர்களைச் சென்றடையவில்லை என்றால், அதை அந்தப் படைப்பின் தோல்வியாகக் கொள்வீர்களா? கலாபூர்வமான படைப்புகள் (நல்ல சினிமா, ஓவியம்) போன்றவை தோல்வியைத் தழுவுவது படைப்பின் தோல்வியா? பார்ப்பவரின் தோல்வியா?
 
தமிழினம் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது தீவிர மௌனத்தில் ஆழ்ந்திருந்த நீங்களெல்லாம் திடீரென்று இப்போது பேச முற்படுவதன் நோக்கம்தான் என்ன? வன்முறை தவறு என்று சொல்லும் நீங்களெல்லாம் இலங்கை அரசின் வன்முறையைப் பற்றி ஏன் பேசவில்லை? இப்போது வந்து 'ராஜபக்சே ஹிட்லர் என்பதை ஒப்புக்கொள்கிறோம்'என்றால் முடிந்துவிட்டதா? வன்முறையை எதிர்ப்பதென்பது அதைப் பிரயோகிப்பவர்களின் அதிகாரத்தைப் பொறுத்து வேறுபடுகிறதா? இந்த விடயத்தில் நீங்களும் எங்கள் நாட்டைச் சேர்ந்த சிலரும் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.
 
 
                                                                                                            விடுதலைப் புலிகள் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளில் சிலவற்றை நானும் ஒப்புக்கொள்கிறேன். குறிப்பாக, அரசியல் தொலைநோக்கோடு செயற்படாதது, . ஆனால், அவர்களது விடுதலைப் போராட்டமே ஒரு தவறு என்பதைச் சொல்வதற்கு, உங்களைப் போன்றவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை நான் சொல்லியாக வேண்டும். சொற்களை வைத்து சித்துவிளையாட்டுக் காட்டுவது மட்டும் எழுத்தாளனின் கடமையன்று. சமூகத்தின்பால் அக்கறையுடையவனாக இருப்பதும், செயற்படுவதும் அவர்களது கடமையாகிறது. சமூகத்தால் மதிக்கப்படும் எழுத்தாளன் என்பவனும் ஊடகங்களைப் போலவே மக்களின் கருத்துகளைச் செதுக்குவதில் (அல்லது சிதைப்பதில்) முக்கிய பங்காற்றுகிறான் - ஆற்றுகிறாள் என்ற வகையில், நீங்கள் நச்சுவிதைகளைத் தூவாதீர்கள்.
நான் எல்லாக் காலங்களிலும் பார்வையாளராகவே இருந்திருந்தால், ஈழத்தவள் என்றபோதிலும், உங்களைப் போலவே இதைப் பற்றி எழுதும் தகுதி எனக்கும் இருந்திருக்காது. ஆனால், சில வகைகளிலேனும் அதில் பங்கெடுத்துக்கொண்டவள், பாதிக்கப்பட்டவள் என்றவகையில் எனக்கு அந்த உரிமை இருப்பதாக நான் கருதுகிறேன்.
 
உங்கள் இருவரையும் குற்றஞ்சாட்டுவதற்காகவோ பரபரப்பைக் கிளர்த்துவதற்காகவோ எழுதவில்லை. (அதுதானே இங்கே நடக்கிறது) இழப்பை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களின் துக்கம் புரியாது. இழிவுபடுத்தல்கள் தெரியாது. மனித இனம் மட்டுமல்லாது மிருகங்களும்கூட அதனதன் சுதந்திரத்திற்குப் பங்கம் ஏற்படாமல் வாழ்வதென்பது பிறப்புரிமை. ஏனைய நாடுகளோடு குறிப்பாக தென்னமெரிக்காவோடு ஒப்பிட்டு 'அவர்கள் மட்டுமே அப்படிப் போராடுவதற்கான நிர்ப்பந்தத்தைக் கொண்டிருந்தார்கள்'என்பது நகைப்பிற்குரியது. எனது தெருவில் நான் சுதந்திரமாகத் திரிவதற்கும், எனது மார்புகளை மாற்றான் ஒருவன் என் மறுப்பையும் மீறித் தொடும் இழிநிலைக்கு விட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பதென்பதும் சகித்துக்கொள்ளத்தக்கதுதானா? எனது அயலவரின் குழந்தையைக் கதறக் கதறத் தூக்கிச் சுவரில் மோதித் தலையைச் சிதறடிப்பதை நான் எப்படிச் சகித்துக்கொள்வேன்? தமிழினத்தில் பிறந்துவிட்டேன் என்பதற்காக நான் யார் என்பதை ஒவ்வொரு விசாரணைச் சாவடியிலும் நிரூபித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியந்தான் என்ன? நீங்கள் காற்றைப்போல திரிபவர்கள். எந்த மூச்சுத்திணறலுக்கும் பழக்கப்படாதவர்கள். உங்களுக்கு போராடப் புறப்பட்டதன் நியாயப்பாட்டைப் பற்றியெல்லாம் நான் விளக்கிக்கொண்டிருப்பது வியர்த்தம்.
 
                                                                                                                        பல்லாயிரம் உயிர்களை, வளங்களை இழந்தோம். மனச்சிதைவிற்கு ஆளானோம், தடுப்புமுகாம்களுக்குள் விலங்குகளிலும் கேவலமாக வாழ விதிக்கப்பட்டோம். உலகெங்கிலும் அகதிகளாக அலைவுறும் கேவலத்திற்கும் ஆளானோம் என்றவகையில் தோற்றுவிட்டோம்தான். ஆனால், இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து பெரும்பான்மையினரால் இழிவுசெய்யப்பட்டோம், இரண்டாந்தரக் குடிமக்களாக பாரபட்சம் காட்டப்பட்டோம். எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொடி இல்லை. ஆட்சி மொழி இல்லை. உயர்கல்வியிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. அப்போது எங்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லையே… 'எங்களைக் கண்ணெடுத்துப் பாருங்கள்'என்று கதறிய கதறல் உலகத்திற்குக் கேட்காமல் போன காரணத்தினாலேயே தற்காப்புக்காக ஆயுதங்களைக் கையிலெடுக்கத் தள்ளப்பட்டோம். இந்த முப்பதாண்டு காலப்போராட்டத்தின் பின்பு, இவ்வளவு இழப்பின் பின்புதான் உலகம் எங்களைக் கண்ணெடுத்துப் பார்க்கிறது. (பார்த்துக்கொண்டேயிருப்பார்களா செயலாற்றுவார்களா என்பது அடுத்த கேள்வி) சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இப்போதிருக்கும் நிலையை நாங்கள் வந்தடைவதற்கு (உங்கள் வார்த்தைகளில் சொன்னால் அரசியல் நிலைப்பாட்டிற்கு) என்ன காரணம்? ஆயுதப் போராட்டம்தானே? இது வெற்றியல்லவா? இதை எப்படித் தோல்வியென்று சொல்லலாம்?
ஜெயமோகன்,
உங்கள் வலைத்தளத்தை நானும் படித்துவருகிறேன். எங்கள் ஜனங்கள் கொல்லப்படும்போது நீங்கள் ஆன்மீகம் பேசிக்கொண்டிருந்தீர்கள். எங்கள் குழந்தைகளின் தலைகள் சிதைக்கப்பட்டபோது நீங்கள் சகிப்புத்தன்மையைப் போதித்துக்கொண்டிருந்தீர்கள். பசியால் விழுந்து இறந்தபோது, பௌத்தம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தீர்கள். இந்தியா இலங்கை அரசுக்கு ஆயுதமும் ஆட்படையும் கொடுத்து தமிழர்களைக் கொன்றுகுவிக்கப் பணித்தபோது, அதைக் கேள்வி கேட்காமல் இந்திய இறையாண்மையை உயர்த்திப் பிடிக்கும் இழிவேலையைச் செய்துகொண்டிருந்தீர்கள். தமிழர்களிடம் இலக்கியம் வளர்த்துவரும் நீங்கள், தமிழையே மூலதனமாகக் கொண்டு வளர்ந்துவரும் நீங்கள், தமிழர்களுக்கெதிராகவே இயங்கிக்கொண்டிருந்தீர்கள். உங்கள் சொற்களின் சித்துவிளையாட்டில் நானும் மயங்கித்தானிருந்தேன். உங்கள் எழுத்தை வியந்து போற்றி மின்னஞ்சல் கூட அனுப்பியிருக்கிறேன். உரத்த குரலில் பொய் சொல்வதனால் உண்மையைக் கொன்றுவிட முடியாது என்பதை, சாதாரணளாகிய நானும் அறிவேன். உண்மையின் வேர்கள் மண்ணுக்குள்தான் இருக்கின்றன. இந்த வரட்சி நீங்கும் ஒரு காலத்தில் இலையும் தளிருமாய் அது மண்ணைத் துளைத்து வெளிவரும் என்பதை நீங்களும் மறுக்கமாட்டீர்கள். காத்திருங்கள் ஜெயமோகன். பலரும் பாராட்டும் ஒரு விடயம் அடிப்படையில் சரியாக இருக்கவேண்டுமென்று என்ன கட்டாயம் இருக்கிறது?
 
மேலும், அப்படிச் சொல்லக்கூடிய அருகதை, சமூகப் பொறுப்புணர்வு உங்கள் இருவரிடத்திலும் இல்லை என்பது, உங்களை அவதானித்ததிலிருந்து பிறந்த, தனிப்பட்ட என்னொருத்தியின் கருத்தாக இருக்கிறது. அதுவே இந்தப் பதிவெழுதக் காரணமும் ஆகியது.
இனிவரும் காலங்களில் நான் உங்கள் இருவராலும் கடுமையாக விமர்சிக்கப்படுவேன் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை. இலக்கிய அரசியலின் அடிப்படைத் தன்மைகளான பழிவாங்கல்கள், தூக்கிப்பிடித்தல்கள், தூற்றுதல்கள், துதிபாடல்கள் எல்லாவற்றையும் உணர்ந்தவளாகவே இருக்கிறேன். என்னைக் காட்டிலும், எழுத்தில் நான் வளர்வதைக் காட்டிலும், எங்கள் போராட்டத்தின் நியாயமும், தியாகமும் உங்களைப் போன்றவர்களால் தூர்க்கப்படுவதை, திசைதிருப்பப்படுவதை எதிர்ப்பது எனக்கு முக்கியமாகப்படுகிறது.
தேவதைகள் மௌனமாகிவிட்டால், பேய்கள் உச்சஸ்தாயியில் பாட ஆரம்பித்துவிடுகின்றன. இது பேய்களின் காலமும் களமுமாயிருக்கிறது. என்ன செய்வது?
 
ஈழதேசம் இணையத்திற்காக பண்டாரவன்னியன்

http://eeladhesam.com/

♥ தலைவரின் வழிகாட்டல்கள் மறைமுகமாகவே வந்து சேரும். ♥

இனிவரும் போர்...?---பருத்தியன்
[Untitled-1+copy.jpg]




ஈழத் தமிழினத்தினைப் போல பாவப்பட்ட வேறொரு இனம் தற்போது இருக்கமுடியாது. அந்தளவுக்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும், சர்வதேசத்தினால் முற்றுமுழுதாகக் கைவிடப்பட்ட ஒரு இனமாகவும் ஈழத் தமிழினம் போய்விட்டுள்ளதென்பது சோகத்திலும் சோகமான விடயம்.

உலகநீதி கூறுவோரினதும்... மனிதாபிமானம், மனிதநேயம் பற்றி பேசுவோரினதும்... காந்தியம்,அகிம்சை,கொல்லாமை பற்றி வாய்கிழிய கத்துவோர்களினதும் முன்னிலையில், அவர்களின்

ஆசீர்வாதத்துடனும் முழு ஒத்துழைப்புடனும் தமிழினம் மிகக் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்டதென்பது மனிதகுலமே வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம்.

அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா அவர்கள் ஒரு ஈயை தன் கையால் அடித்துக் கொன்றுவிட்டார் என்பதற்காக அமெரிக்க ஜனாதிபதிக்கெதிராகவே கண்டனங்கள் தெரிவித்த இரக்கமிக்கவர்களின் கண்களுக்கு, ஈழத்தமிழர்கள் துடிதுடிக்க கொன்றொழிக்கப்பட்டது தெரியவில்லையா? அல்லது ஒரு ஈயை விடக் கேவலமானவர்கள் தமிழர்கள் எனக்கருதி அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையா???

விலங்குகளைக் கூண்டுகளில் அடைத்து வைத்து அவற்றின் சுதந்திரத்தினைப் பறிப்பதற்கே பாய்ந்தடித்து, பதறியடித்துக் கொண்டு கண்டன அறிக்கைகள் விடும் ஈரநெஞ்சத்தவர்கள் , புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் சிங்கள அரசின் கொலைக்கூண்டுகளில் எந்த அடிப்படை வசதியுமின்றி, சுதந்திரமுமின்றி அடைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்படும் அப்பாவித் தமிழர்கள் விடயத்தினைக் கண்டுகொள்ளாமல் கல்நெஞ்சக்காரர்களாக இன்னும் இருப்பது ஏன்???

இவை மட்டுமல்ல... பல்வேறு சந்தர்ப்பங்கள், சம்பவங்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது... ஈழத்தமிழர்கள் ஒட்டுமொத்த சர்வதேசத்தினாலும் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெட்டத்தெளிவாகின்றது. பாரபட்சமான உலகநீதிக்குள் பழிவாங்கப்பட்டிருக்கின்றது ஈழத்தமிழினம்.

தமிழர்களிற்கு அழிவை ஏற்படுத்தியவர்கள் வெளிப்படையான குற்றவாளிகள் என்றால், அதைத் தடுக்க வழிகள் இருந்தும் அதைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் மறைமுகமான குற்றவாளிகளே!.

வல்லரசு வல்லூறுகளின் பிராந்திய வல்லாதிக்கப் போட்டிகளின் நடுவே சிக்குண்டு சின்னாபின்னமாகிப் போனது ஈழத் தமிழரின் வாழ்வு. வளமாய் வாழ்ந்த இனம் இன்று தன் வாழ்வைத் தொலைத்து நிற்கின்றது.

இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் சுயநலன்களுக்கு அப்பாவித் தமிழினம் இரையாகி இழந்தது அதிகம். குறிப்பாக இந்தியாவின் பழிவாங்கல் துரோகத்தனத்தினை என்றுமே ஈழத்தமிழினம் மறக்காது, மன்னிக்காது. அரவணைக்கும் என்று நம்பியிருந்தவர்களின் எதிபார்ப்பையும் எதிர்காலத்தையும் அழித்தொழிக்க சிங்களத்தோடு கூடிநின்று குழிபறித்தது.

சந்தர்ப்பம் பார்த்து ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தியது. சிங்களவெறியர்களின் கொலைவெறியாட்டத்தினை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது சோனியா அம்மையார் தலைமையிலான இந்தியக் காங்கிரஸ் அரசு. புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதை நினைத்து அகமகிழ்ந்து தன் கணவர் இராஜீவ் காந்தியின் சமாதியில் கடந்த மே 21 இல் அவரது நினைவு தினத்தன்று மனநிறைவோடு அஞ்சலி செலுத்தினாராம்.

அதற்கு அவர் பலியெடுத்த அப்பாவித் தமிழ்மக்களின் உயிர்கள்தான் எத்தனை ஆயிரம்? அதைவிட சீனாவின் ஆதிக்கப் போட்டியார்வத்தில் அது சிங்களத்துக்கு அள்ளிக் கொடுத்த கொத்துக் குண்டுகளில் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டது தமிழினம். "பொய்வித்தை வியாபாரி" சீனாவின் வர்த்தக, வல்லாதிக்க நோக்கத்தினால் நொடிக்கப்பட்டது அப்பாவித் தமிழினந்தான்.

இவையோடு சேர்த்து ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் தென்னாசிய நாடுகள் பலவும் சிங்களத்தோடு கூட்டுச் சேர்ந்து ஈழத்தமிழரின் குரல்வளையறுக்க கூடித் திட்டம் போட்டன. அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் இதில் குறைவைக்கவில்லை. அவையும் தம் பங்கிற்கு தமது அதிகாரத்தினை ஆசியப் பிராந்தியத்தில் நிலைநிறுத்த தம்நிலை மறந்து தாளம் போட்டன. இவர்களின் இரட்டை வேட நாடகங்களின் மத்தியில் தன் கொலைவெறியாட்டத்தினை கச்சிதமாக நடத்தி முடித்திருந்தது சிங்களம்.

பல்லாயிரக் கணக்கான தமிழ்மக்களைக் கொன்று குவித்த பின்னரும் சிங்களத்தின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை. தினமும் கொலைகள், கடத்தல்கள், காணாமல்போதல்கள், கைதுகள், சித்திரவதைகள் என்பன இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஈழத்தமிழரின் பாரம்பரிய விழுமியங்கள், அடையாளங்களை இல்லாதொழிப்பதில் சிங்களம் கருத்தாய் செயற்படத் தொடங்கியிருக்கின்றது. தமிழ்மக்களின் பிரதேசங்களை பெளத்த சிங்கள மயமாக்குவதுடன், தமிழர்களுக்கான ஒரு ஆளுமைமிக்க தலைமையை இல்லாமற் செய்வதன்மூலம் தமிழர் என்ற தனித்துவத்தினை, அதிகார பிரதிநிதித்துவத்தினை இழக்கச் செய்வதும், இளம் சமுதாயத்தினர் மத்தியில் கலாச்சாரச் சீரழிவினை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ் விடுதலையுணர்வை அடியோடு இல்லாமற் செய்வதற்கும் முன்னெடுப்புக்கள் நடக்கின்றன.

மொத்தத்தில் இலங்கையில் தமிழினம் என்பது ஒரு தனித்துவ அடையாளமில்லாத அடிமைப்படுத்தப்பட்ட இனமாக ஆக்கப்படக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது. இதையெல்லாம் மீறி தமிழினத்தின்பால் அக்கறைகொண்டு சுதந்திரமிக்க நியாயமான தீர்வொன்றை சிங்கள பேரினவாதிகளிடமிருந்து எதிர்பார்த்தோமானால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவுமில்லை.

இவ்வாறான கீழ்த்தரமான நிலைமை ஈழத்தமிழினத்திற்கு வராமல் தடுக்க என்ன வழி?

ஈழத்தமிழர்கள் அகிம்சை வழியில் போராடி முடியாமல் போக, ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்று முடிவெடுத்து இற்றைக்கு முப்பது வருடங்களுக்கும் மேலாக போராடி ஒன்றரை இலட்சத்துக்கு மேலான மக்களையும், முப்பதினாயிரத்துக்கும் மேலான விடுதலைப் போராளிகளையும் இழந்தும் சர்வதேசத்தின் கரிசனை ஈழத்தமிழர்மீது முழுமையாக ஏற்படாத நிலையில், இவ்வளவு காலமாய் ஈழத்தமிழரை தலைநிமிர்ந்து நடக்க வைத்த ஆயுத்தப் போராட்டமும் முடிவடைந்து விட்டதான கருத்து எல்லாமட்டத்திலும் எழுந்து வருகின்றது.

ஆயுதப் போராட்டம் இனிமேலும் தொடரப்படுவதற்கும் இனி சாத்தியக் கூறுகள் இல்லை என்ற கருத்தும் எழுந்துள்ளது. இவற்றின் உண்மைத்தன்மைபற்றியும், இக்கருத்தினை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்களின் வாதப் பிரதிவாதங்களையும் தாண்டி இனிமேல் தமிழர்களின் போராட்டம் எந்த வழியில், யார் தலைமையில் தொடரப் போகின்றது? அது எவ்வகையான போராட்டமாக அமையும் அல்லது அமையவேண்டும்? தற்போதைய தோல்விகளின் பின் முன்னெடுக்கப்படும் போராட்டம் எந்தளவுக்கு வெற்றியளிக்கும் ? தனி ஈழம் என்ற இலட்சியத்தினையும் நியாயமான தீர்வினையும் அதன்மூலம் அடைய முடியுமா? என பலவாறான கேள்விகள் வரிசையாகக் காத்திருக்கின்றன.

ஆனால், கேள்விகள், விவாதங்களைத் தவிர்த்து காலவோட்டத்தில் நமது இலட்சியப் பாதையில் தடைகளைக் கடந்து பயணிக்கவேண்டிய காலக்கட்டாயத்தில் நாம் நிற்கின்றோம். இங்கு கேள்விகளுக்கோ அல்லது விவாதங்களுக்கோ இடமளிக்கக் கூடாது. இதுவரைகாலமும் நமது தேசியத்தலைவரின் தலைமையில் புலிகள் நமக்காக போராடியிருந்தார்கள், இப்போது நாமே நமது உரிமைகளுக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் நிற்கின்றோம். காலத்தின் , சந்தர்ப்ப சூழலின் தேவையறிந்து இப்படியான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இதன் அர்த்தம் புலிகள் முற்றாக அழிந்து விட்டார்கள் என்பதல்ல. அவர்கள் போராட்டங்களிலிருந்து முற்றாக ஒதுங்கி விட்டார்கள் என்பதல்ல. அவர்களுக்குரிய இடைவேளையிது. இப்போது போராட்டம் தமிழ்மக்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மீண்டும் வரவேண்டும் என கால நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நிச்சயம் மீண்டும் வருவார்கள். ஆனால் அதை தீர்மானிக்கப் போவது, உங்கள் கைகளிலும் சர்வதேசத்தின் கைகளிலும்தான் உள்ளது.

உங்களது போராட்டம்தான் உங்கள் உறவுகளை சிறைக் கூண்டுகளிலிருந்து விடுவிக்கும், காப்பாற்றும். உங்கள் உரிமைகளை உங்களுக்குப் பெற்றுத்தரும்.

புலிகள் தற்காலிகமாக ஒதுங்கிக் கொண்டதன்மூலம் தமிழருக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்கவேண்டிய பொறுப்பை சர்வதேசத்தின் தலையில் போட்டிருக்கின்றார்கள். சர்வதேசம் அதை விரும்பியோ விரும்பாமலோ செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயத்தினை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.

தொடரும் உங்கள் போராட்டங்கள் அதனை அவர்களுக்கு மேலும் வலியுறுத்தும். அதை நாம் செய்ய வேண்டியது நமது தலையாய கடமை. இன்றைக்கு உலக நாடுகள் கொஞ்சமேனும் ஈழமக்களுக்காக குரல்கொடுக்கின்றது என்றால் அது புலம்பெயர் தமிழ்மக்களின் போராட்டங்களினால்தான். இந்நிலையில் நமது ஒற்றுமையைத் தொலைத்துவிட்டு நமக்குள் நாமே கருத்துப்பிளவுபட்டுக் கொள்வதில் எந்த அர்த்தமுமில்லை... பிரயோசனமுமில்லை.

வெளிவரும் செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல் காலம் தன் பாதையில் அனைத்தையும் வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையில் நாம் நமது கடமையை தொடர்ந்து செய்ய வேண்டும். அதிகாரபூர்வமற்ற அநாமதேய அறிக்கைகளைக் கண்டு மனமுடைந்து சோர்ந்து போகாமல் நமது தலைவனின் வரவுகாய் காத்திருப்போம்! அதுவரை விடியலின் வரவுக்காய் உழைத்திடுவோம்! சர்வதேசத்தினை நோக்கி தமிழர்தரப்பு தொடங்கியிருக்கும் இராஜதந்திரப் போரினால் சிங்கள அரசு பலத்த அடிவாங்கப் போகின்றது என்பது நிச்சயம்.

ஆனால் இதனை வார்த்தைகளில் மட்டும் சொல்லிகொண்டிருக்காமல் நமது போராட்டங்கள் செயன்முறைகள் மூலம் அமுல்படுத்துவதன் மூலமே அடையமுடியும். ஒற்றுமை என்பதை நமக்குள் உள்வாங்கி ஓரணியில் திரண்டு ஒருமித்த குரலில் நம் உறவுகளுக்காகவும்,நம் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போமானால் வெற்றி என்றுமே நம் பக்கத்தில் மட்டுமே இருக்கும்.

இருக்கும் - இருக்காது, நடக்கும் - நடக்காது, இருக்கின்றார் - இல்லை என்ற தேவையில்லாத விவாதங்களை முற்றாகத் தவிர்த்துவிட்டு நமது வரலாற்றுக் கடமையை நாம் தவறாது செய்வோம். காலம் எல்லாவற்றையும் நமக்கு வெளிப்படுத்தும். அதுவரை நம்மை முற்று முழுவதுமாக அர்ப்பணிப்போம் நம் தேசத்தின் விடிவுக்காக.

தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் வெளிவரும் செய்திகளின் பின்னணியில் பல ராஜதந்திர நகர்வுகள் இருப்பதாகவே தென்படுகின்றது. அந்த நகர்வுகளின் நகர்வுகளை நமது போராட்டத்தினைப் பற்றி முழுமையாகப் புரிந்து வைத்திருப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். போர்வெற்றிகள் தீர்மானிக்க முடியாத தீர்வினை இராஜதந்திர வெற்றிகள் தீர்மானிக்கும்.

கடந்த காலங்களில் விடப்பட்ட இராஜதந்திர இடைவெளிகளை இம்முறை தமிழர் தரப்பு சரிவர நிவர்த்திசெய்யும். இதன் ஆரம்பப் படிகளாக முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஒருசில விடயங்களினாலேயே சிங்கள அரசு பயங்கொள்ளத் தொடங்கிவிட்டது எனில், இந்த இராஜதந்திரப்போராட்டம் இன்னும் பல அதிசயங்களை தமிழர்களுக்காக செய்வதற்கு காத்திருக்கின்றது.

இவ்வாறான இராஜதந்திரப் போருக்கு உலகம் பூராவுமுள்ள தமிழர்களின் ஆதரவு மிக மிக அவசியம். ஆதலால் நமக்குள் உள்ள கருத்துவேற்றுமைகளை மறந்து ஒன்றாய் களம் புகுவோம். வென்று தலை நிமிர்வோம்!


தலைவரின் வழிகாட்டல்கள் இப்போதைக்கு மறைமுகமாகவே நம்மை வந்து சேரும்.

எனவே உண்மையறிந்து,

களமறிந்து,காலமறிந்து நாம் களம் புகுவோம்!

http://eeladhesam.com/

♥ "இல்லாத இயக்கத்திற்கு தடை எதற்கு?" சீமான் ♥

இல்லாத இயக்கத்திற்கு தடை எதற்கு?: இயக்குனர் சீமான்











வீரத்தமிழன் சீமான் அவர்கள் குறள் தொலைக் காட்சிக்கு வழங்கிய நேர்காணல். புலம்பெயர் தமிழீழ மக்களுக்காக நெருடல் வாயிலாக எடுத்து வருகின்றோம்.


http://www.nerudal.com/nerudal.8696.html

பகுதி 1
http://www.youtube.com/watch?v=_5SidVeUEgE



பகுதி 2

http://www.youtube.com/watch?v=6xWg526dqec



பகுதி 3
http://www.youtube.com/watch?v=OOFcwapQj30



கோவையில் தமிழர் உரிமை முன்னணி சார்பில் ஈழ விடுதலை ஆதரவு பொதுக்கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக

நாடுகளில் புலிகள் அமைப்பு தடை செய்யபப்ட்ட அமைப்பாக இருந்தாலும் அந்நாடுகள் புலம்பெயர் ஈழ மக்களின் போராட்டங்களை நசுக்குவதில்லை. ஏதோ ஒரு வகையில் நமது

நாட்டை விட மேம்பட்ட ஜனநாயகம் அங்கே கடைபிடிக்கப்படுகிறது. புலிகளை தடை செய்யுங்கள் என்று இலங்கை அரசு கோரிக்கை வைக்கிறது அதை நிராகரிக்கிறது ஆஸ்திரேலியா.
தடைவிதித்தால் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டது போலாகிவிடும் என்கிறது அந்த நாடு நாங்கள் ஆஸ்திரேலியாவின் இத்தகைய நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். அதையே இந்தியாவைப் பார்த்துக் கேட்கிறோம். புலிகள் அமைப்பு அழிந்து விட்டதாக இல்லாமல் ஆகிவிட்டதாகச் சொல்கிறீர்கள். அபப்டியானல் அழிந்து போன இல்லாமல் ஆகிப் போன ஒரு அமைப்புக்கு தடை எதற்கு. புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும். என்று பேசினார் சீமான்

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=90:2009-06-22-15-11-42&catid=36:2009-06-20-00-25-22&Itemid=55



http://www.alaikal.com/news/wp-content/seeman7.jpg
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!