Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, October 16, 2009

♥ இலங்கைக்கு வந்த அனுமனும்,சனியனும்...! ♥

பாபர் மசூதியை இடித்த இந்து முஸ்லீமாக மாறிய விநோதம்








மதம்

1992 டிசம்பர் மாதம் ஆறாம் தேதி (டிசம்பர் 6 என்பது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள்) அத்வானி தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர்களின் வழிகாட்டுதலோடு ஒரு பட்டப் பகலில் ஆயிரக்கணக்கான காவிக் கூட்டத்தினர் 450 ஆண்டுகால வரலாறு படைத்த முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

இந்தியா மட்டுமல்ல, உலகமே அதிர்ந்தது. 17 ஆண்டுகள் பறந்தோடிய நிலையிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடு.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. அன்று பாபர் மசூதியின் நடுக் கோபுரத்தை கடப்பாரையால் இடித்துக் கூத்தாடிய இரு இளைஞர்கள் சிவசேனா அமைப்பினைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சிவசேனா பறக்கும் படையின் துணைத் தலைவர் பல்பீர் சிங், மற்றொருவர் யோகேந்திரபால்.

சரி, அவர்களுக்கு இப்பொழுது என்ன வந்தது? ஒரு சுவையான திருப்பம் இதில் ஏற்பட்டுள்ளது. அந்த இரு இளைஞர்களும் இப்பொழுது முசுலிம்களாக மாறிவிட்டனர் என்பதுதான் அந்தச் சுவையான திருப்பம் மிகுந்த செய்தியாகும்.

பாபர் மசூதி கோபுரத்தின்மீது ஏறி, இரு இளைஞர்கள் யானையின் மத்தகத்தைப் பிளப்பதுபோல செயல்பட்டார்களே ஏடுகளில் அந்தப் படங்களெல்லாம்கூட வெளியானதே சாட்சாத் அந்த இரு இந்து இளைஞர்கள், சிவசேனாவின் சிப்பாய்கள்தான், இப்பொழுது முகம்மது ஆபிராகவும், முகம்மது உமர் ஆகவும் மாறிவிட்டனர்.

இளைஞர்கள் மூளையில் சாயம் ஏற்றி ஏற்றி, வெறித்தனமான போதனைகளை ஊட்டி ஊட்டி, வெறியாட்ட வன்முறைப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்துக் கொடுத்து, மாற்று மதக்காரர்கள்மீது வெறுப்பினைக் கூர்மைப்படுத்தி கூர்மைப்படுத்தி, ஒரு கட்டத்தில் அவர்களை வேட்டை நாய்களாக ஏவிவிடுவார்கள். அவ்வாறு ஏவிவிடப்பட்டு இடிக்கப்பட்டதுதான் பாபர் மசூதி.

காலம் கடந்து இப்பொழுது உண்மையை உணர்ந்து, தாம் செய்த குற்றத்துக்குப் பிராயச்சித்தமாக எந்த மதத்துக்கு விரோதமாக வெறியாட்டம் போட்டார்களோ, அந்த மதத்தோடேயே அய்க்கியமாகும் நிலை ஏற்பட்டுவிட்டது!

பொதுவாக மதம் என்பது விலங்குகளைப் பிடிப்பது, மனிதர்களைப் பிடித்தால் அதைவிட ஆபத்து! ஆபத்து!! நினை-விருக்கட்டும்!

http://thamizhoviya.blogspot.com/2009/10/blog-post_7904.html

மலட்டு கத்தரிக்காய்க்கு அனுமதியா?


http://product-image.tradeindia.com/00211674/b/Brinjal-Hybrid-Seed-PK-123.jpg

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என்று அகில இந்திய விவசா யிகள் சங்கத்தின் தலைவர் எஸ். ராமச் சந்திரன்பிள்ளை மற்றும் பொதுச் செயலாளர் கே. வரதராசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி.கத்தரிக்காயை வணிக ரீதியாகப் பயிரிட அனும தித்து, புதன்கிழமை நடைபெற்ற மர பணு பொறியியல் ஏற்பளிப்புக் குழு (ஜிஇஏசி) கூட்டத்தில் முடிவு மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த முடிவு அமல்படுத்தப்படுமானால், சந்தைக்கு வரும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட முதல் காய்கறியாக கத்தரிக்காய் மாறி விடும்.

இதனை அடுத்து மேலும் பல் வேறு காய்கறிகளும் மரபணு மாற்றம் செய்யப்பட்டு சந்தைக்கு வரத் தொடங்கிவிடும். இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்டு வரும் காய்கறி களின் விதை கள் அனைத்தும் மான் சாண்டோ மற்றும் மஹிகோ போன்ற பன் னாட்டு விதை நிறுவனங்களின் கட்டுப் பாட்டில்தான் இருக்கும். இந்நிறு வனங்கள், இவ்விதைகளுக்கு அநியா யமாய் விலை நிர்ணயித்திடும் . இதனால் இந்திய விவசாயத்தின் எதிர்காலமே இவர்களின் கட்டுப் பாட்டிற்குள் செல்லும் ஆபத்து இருக்கிறது என்று அவர்கள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அவர்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இப்போது அனுமதிக்கப்பட்டி ருக்கிற மரபணு மாற்றம் செய்யப் பட்ட கத்தரிக்காய் அமெரிக்க உதவித் திட்டத்தின் ஒரு பகுதியேயாகும். இத் திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக் கழகம், தார் வாடில் உள்ள வேளாண் விஞ்ஞானப் பல்கலைக்கழகம் மற்றும் வாரணாசி இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவ னம் ஆகியவற்றில் மான்சாண்டோ மற்றும் மஹிகோ பன்னாட்டு விதை நிறுவ னங்களுடன் இணைந்து மேற் கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக உருவாக்கப்பட்டதே ஆகும்.

இதன் பாதிப்பு குறித்து மரபணு பொறியியல் ஏற்பளிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் வேளாண் பொறி யாளர்கள் பலர் குறிப்பிட்டு, இதற்குக் கடும் ஆட்சேபணைகள் தெரிவித் திருக்கின்றனர். ஆனால் இவற்றை அரசு கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை.

கத்தரிக்காயை அடுத்து அரிசி, சோளம், வெண்டை உட்பட 60 வித மான விளைப்பொருள்கள் மீது மர பணு மாற்றம் செய்திட முடிவு எடுக் கப்பட்டிருக்கிறது. இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தி ருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் அனுமதிக்கப்படுவதை அடுத்து, இந்திய விவசாய உற்பத்தி முறை முழுமையாக மான்சாண்டோ/ மஹிகோ போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் தள்ளப்பட்டுவிடும். பின்னர் அவர்கள் நிர்ணயித்திடும் கடும் விலையைக் கொடுத்துத்தான் விவசாயிகள் விதை களை வாங்க வேண்டியிருக்கும். மேலும் இந்தியா உணவு உற்பத்தியில் சுயசார்புத் தன்மையையே முற்றிலு மாக இழக்க வேண்டிய அபாயத்திற் குள் தள்ளப்பட்டு விடும். எனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது.

எனவே, மரபணு மாற்றம் செய் யப்படும் கத்தரிக்காய் மற்றும் பல் வேறு விதைகளை அனுமதிப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது. மர பணு பொறியியல் ஏற்பளிப்புக் குழு வின் அறிக்கையை பொதுமக்களின் விவாதத்திற்காக வெளியிட வேண்டும். பொது விவாதம் இன்றி இத்தகைய திட்டங்களை அரசு அமல்படுத்தக் கூடாது. (ந.நி.)

http://www.theekkathir.in/index.asp


http://farm4.static.flickr.com/3291/2790828480_74d9d886ec.jpg

இலங்கைக்கு முன்பு அனுமன் வந்தான்: இப்போது சனி வந்து விட்டார் – தமிழ் நாளிதழ்


இலங்காபுரிக்கு முன்பு அனுமன் வந்தான்! இப்போ சனீஸ்வரனும் வந்துவிட்டார் என டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக-காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்கள் குழு வருகை குறித்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழின் தலையங்கம் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து வலம்புரியின் தலையங்கம்:

தமிழக எம்.பிக்கள் குழு நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்தது. வழக்கப்படி மங்கள வாத்தியம், பொன்னாடை, மலர்மாலை, வரவேற்ப்பு பாடல், நினைவுப் பரிசு என தடல் புடலான ஏற்பாடு.

இவை எதுவுமே வேண்டாம். தமிழர் பிரச்சினையை கூறுங்கள் என அவர்கள் தெரிவித்த போதிலும், அதனை எம்மவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இருந்தும் தமிழகத்தில் இருந்து வந்த எம்.பிக்கள் குழு அதனை நிராகரித்து விட்டன. அதுவொன்றே தமிழகக் குழுவிடம் விருப்பிற்குரிய செயலாக இருந்தது. இதற்கு மேலாக அந்தக் குழுவிடம் எதனையும் எதிர்பார்க்க முடியவில்லை.

எங்கள் கஷ்டகாலம் தமிழக குழுவிற்கு டி.ஆர்.பாலு தலைமை ஏற்றிருந்தார். அட! ராமா! வந்த மனுஷன் யாழ். பொது நுலகத்தில் இருந்து, வந்தவர்களை அதட்டினார். நேரமில்லை என்று கூறி கருத்துக்களை தட்டிவிட்டார். ஒரு சிலர் கூறிய கருத்துக்களையும் அவர் செவி மடுக்கவில்லை.

வந்த குழு தமிழரின் அவலத்தை கேட்கும் என்றால் சுடுமூஞ்சி டி.ஆர்.பாலு எதற்குமே இடம் தரவில்லை.

ராவணன் காலத்தில் இலங்கைக்கு அனுமன் வந்ததுண்டு. ஆனால் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்த தமிழக எம்.பிக்கள் குழுவுக்கு சனீஸ்வரன் தலைமை ஏற்று வந்ததென்பதை யாழ் பொது நூலகத்திற்கு சென்ற பின்பே தெரிய வந்தது.

சனீஸ்வரனின் பார்வை கனிமொழியின் வாயை அடைத்தது. தொல்.திருமாவளவனை பேசவே விடாமல் தடுத்தது .

அப்படியானால் வந்தது சனீஸ்வரன் என்பதை புரிந்து கொள்வதுடன் டி.ஆர்.பாலு ஒரு தமிழ் உணர்வற்றவர் என்பதும் நிருபணமாகியுள்ளது.

அவரின் தலைமையுரை -யாழ் மக்களுடன் அவர் கலந்துரையாடிய நெறிமுறை, யாழ்ப்பாண பல்கலைக்கழக சமுகத்திற்கு அவர் கொடுத்த கெளரவம் எதுவுமே பொருத்தமானதல்ல. இது அவரின் சிறுபான்மைத் தனத்தையே சுட்டிநிற்கின்றது.

எதுவாயினும் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் தொல்.திருமாவளவன் ஆகியோர் எங்கள் அவல நிலையை எடுத்துரைப்பர் என்ற நம்பிக்கை மட்டுமே எஞ்சியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

http://www.nerudal.com/nerudal.10997.html



ஊடகங்களுக்கு கருத்து வெளியிட இந்திய குழுவுக்கு தடை!


handstopதமது வவுனியா விஜயம் தொடர்பிலான உண்மை நிலவரங்களை ஊடகங்களுக்கு வெளியிட கூடாது என நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக இந்திய நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

வவுனியா முகாமில் உள்ள மக்கள், தமது விஜயத்தின் போது கண்ணீருடன் கதறி அழுது, தம்மை விடுவிக்க வேண்டும் என கோரியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தகவல்களை வெளியிட்டால், இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பாதிப்படையும் என தெரிவித்து, கருத்து வெளியிட தமது குழுவால் தடைவிதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகளுக்கு இடையிலான உறவுகளை கருத்தில் கொண்டு, மக்களின் உண்மை நிலைகளை வெளிப்படுத்தாதிருப்பது தவறானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.nerudal.com/nerudal.11004.html

ராஜபக்சேவுக்குக் கூட நோபல் தரலாம் – கனடா நாளிதழ்



laughing-guy-thumb168075அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. அதற்குப் பேசாமல், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தப் பரிசைக் கொடுத்திருக்கலாம். அவர் இதற்குப் பொருத்தமானவர் என்று கூறியுள்ளார் கனடாவைச் சேர்ந்த ஜோனத்தான் கே என்பவர்.

இதுகுறித்து கனடாவின் நேஷனல் போஸ்ட் செய்தித் தாளில் எழுதியுள்ள கட்டுரை.

இப்போதைக்கு நோபல் அமைதிப் பரிசுக்கு முழுப் பொருத்தமான ஒரே நாடு இலங்கை மட்டுமே. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அதிபர் ராஜபக்சே மேற்கொண்ட நடவடிக்கையால் அங்கு போய் ஓய்ந்துள்ளது. எனவே அவருக்கே இந்தப் பரிசைக் கொடுத்திருக்க வேண்டும்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இலங்கைப் போரால், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆனால் ராஜபக்சே மிகவும் உறுதியாக இருந்து போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைமையே இல்லாமல் செய்து விட்டார்.

ஒரு வலிமை வாய்ந்த கொரில்லா அமைப்பை நவீன போர் முறைகளால் அழித்திருப்பது வரலாற்றில் மிகவும் அரிதான விஷயமாகும்.

ஒரே நாள் இரவில் போர் என்பது இலங்கைக்கு வினோதமான விஷயமாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார் கே.

ஆனால் ஒரே நாளில் 3 லட்சம் பேர் அகதிகளாக திறந்த வெளி முகாம்களில், துப்பாக்கி முனையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தோ அல்லது அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டு அவலமான நிலையில் இருப்பது குறித்தோ கே ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

http://www.nerudal.com/nerudal.11016.html

கடும் குரலில் பாலு கண்டிப்பு – அழுத வவுனியா பெண் கலெக்டர்


tn_12-balu200வவுனியா சென்ற திமுக – காங்கிரஸ் எம்.பிக்கள் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு கடும் குரலில் கண்டித்துப் பேசியதால் வவுனியா பெண் கலெக்டர் பி.எஸ்.எம்.சார்லஸ் அழுது விட்டார். இதையடுத்து அருகில் இருந்த கனிமொழி, டி.ஆர்.பாலுவை தடுத்து அமைதிப்படுத்தினார். பின்னர் பாலு தவிர அனைவரும் பெண் கலெக்டரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

திமுக – காங்கிரஸ் எம்.பிக்கள் குழு இலங்கை சென்றுள்ளது. தமிழர் பகுதிகளின் நிலை குறித்து அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். நேற்று காலை யாழ்ப்பாணம் சென்ற அக்குழுவினர் மாலையில் வவுனியா சென்றனர்.

அப்போது வவுனியா மாவட்ட பெண் கலெக்டர் பி.எஸ்.எம்.சார்லஸ், குழுவினருக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அப்போது அவரது செயல்பாட்டால் கோபமடைந்த டி.ஆர்.பாலு, தனக்கே உரித்தான கடுமையான குரலில், நீங்கள் யார் எங்களது விஷயங்களில் தலையிட, உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கண்டிப்புடன் கேட்டாராம்.

இதுகுறித்து பி.எஸ்.எம்.சார்லஸ் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், குழுவினரின் நடவடிக்கையில் தலையிட நீங்கள் யார், உங்களது தகுதி என்ன என்று கடுமையான குரலில் கேட்டார் டி.ஆர்.பாலு.

அவரது கோபமான பேச்சால் நான் அழுது விட்டேன். இத்தனைக்கும் நான், தமிழக குழுவினரின் விருப்பத்திற்கேற்பதான் ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். ஆனால் அவர் கண்டிப்பான குரலில் பேசியதால் நான் மனம் உடைந்து அழுது விட்டேன்.

இதையடுத்து அருகில் இருந்த கனிமொழி தலையிட்டு பாலுவை அமைதிப்படுத்தினார். அவரும், மற்றவர்களும் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். ஆனால் நான் பேசியதை மறந்து விடுங்கள் என்று மட்டுமே பாலு என்னிடம் கூறினார் என்றார் சார்லஸ்.

இந்த சம்பவம் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.nerudal.com/nerudal.10986.html



[sonia.jpg]

ரபாகரன் 64 படகுகளுடன் தப்பினாரா?






விடுதலைப் புலிகளின் கடற்படையிடம் அவர்களால் வடிவமைக்கப் பட்ட மிக வேகமாகச் செல்லக்கூடிய சிறிய ரகப் படகுகள் பல இருந்தன. இவை 23 மணித்துளிகளில் பாக்கு நீரிணையக் கடக்கக்கூடியன. அத்துடன் இலங்கைக் கடற்படையினரிடம் இருந்து கைப் பற்றப் பட்ட படகுகளும் இருந்தன. இவற்றை இலங்க அரச படைகள் கைப் பற்றியதாக காட்சிப் படுத்தவில்லை. இப்படகுகளுக்கு என்ன நடந்தது? இலங்கையில் இருந்து கசிந்த தகவல்களின் படி மே மாததின் இரண்டாம் வாரத்தில் வன்னியில் இருந்து 64 படகுகள் தப்பிச் சென்றதாக செய்மதிப் படப் பதிவுகள் கிடைத்துள்ளனவாம். இப் படகுகளின் மூலம் விடுதலை புலிகளின் முழுத்தலைமையும் தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப் படுகிறது. எஞ்சிய விடுதலைப் புலிகள் பெருமளவு பணத்துடனும் நகைகளுடனும் குடும்பத்தினருடன் மக்களோடு மக்களாக அரச கட்டுப் பாட்டுக்குள் வந்து ஒருவருக்கு பத்தாயிரம் அமெரிக்க டொலர்கள் வரை செலவழித்து தமது உறவினர் அல்லது நண்பர்களாக உள்ளஅரச சார்புத் தமிழ்க் குழுக்களின் உதவியுடன் தப்பிச் சென்று விட்டனர். இறுதிவரை களத்தில் நின்றவர்களில் முக்கியமானவர்கள் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியும் மகளிர் அணித் தலைவி தமிழினியும் மற்றும் அரசியற் துறையினருமே.

அண்மையில் இறுதிக் கட்டப் போரில் பத்மநாதனுடன் படைத் துறையைச் சார்ந்தவர்களில் சாள்ஸ் அன்ரனி மட்டுமே தொடர்பில் இருந்ததாக அயல் நாட்டு உளவுத்துறையின் ஒட்டுக் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி நேரத்தில் பிரபாகரனோ பொட்டு அம்மானோ ஏன் பத்மநாதனுடன் தொடர்பு கொள்ளவில்லை?
இன்றுவரை பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும் எதிரான ராஜீவ் காந்தி கொலை வழக்கு இந்தியாவில் நிலுவையில் ஏன் உள்ளது?

  • இறக்காத ஒரு கரந்தடிப் படைத்(கொரில்லா இயக்கம்) தலைவனை இறந்துவிட்டான் என்று பொய்ப்பிரச்சாரம் செய்தல் எளிது.
  • இறந்த ஒரு கரந்தடிப் படைத்(கொரில்லா இயக்கம்) தலைவனை இறக்கவில்லை என்றும் சாதிக்கலாம்.
இதுவரை இலங்கை அரசு வெளியிட்ட இறந்த பிரபாகரனின் உடலின் படங்கள் நம்ப முடியாதன. இதுவரை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு உறுதியான சாட்சியங்கள் கிடைக்கப் பெறவில்லை.

அழுகிய கனிமொழியா?


எம் தாய் மண்ணைப் பிணவாடையால்
நிறைத்த பன்றிப் பன்னாடைக்கு
தாயகத்து உடன் பிறப்புக்கள்
உடன் வந்து பொன்னாடை போர்த்த
பார்த்துப் புன்னகைக்கும் கனிமொழியே
நீ அழகிய கனிமொழியா?
இல்லை அழுகிய கனிமொழியா?

அன்னை இந்திரா அனுப்பிய தூதர்
பொன்னாடை போர்த்தவில்லை
சிங்களவனை மிரட்டிச் சென்றார்
சில்லறைகள் சுருட்டிச் செல்லவில்லை.

சிங்களவனின் சில்லறைக் கூலிகளாய்
வாழ்ந்தது போதும் தமிழனாய் வாழ்வோம்.
தமிழினத்தைத் தலை நிமிர வைப்போம்.
சரத் பொன்சேகாவின் கோமாளிகளாய்
வாழ்ந்தது போதும் தமிழனாய் வாழ்வோம்.
தமிழினத்தைத் தலை நிமிர வைப்போம்.

திருமா: தன்னைத் தானே தாழ்த்தினாரா?



தோழர் திருமாவளவனைச் சுட்டிக் காட்டி இலங்கைக் குடியரசுத் தலைவர் இவர் பிரபாகரனின் நண்பன். இவரின் நல்லகாலம் இவர் பிரபாகரனுடன் இருக்கவில்லை இருந்திருந்தால் இவரையும் போட்டுத் தள்ளியிருப்போம் என்று கிண்டலடித்தார்.
தோழர் திருமாவும் வேறு வழியின்றி அதைச் சிரிப்புடன் ஏற்றுக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் இருந்தே மேதகு பிரபாகரனுடன் இருந்த தோழர் திருமாவளவனை சந்தேகிப்பது தமிழினத்தின் சாபக்கேடு என்று அவரது இணையத் தளம் கூறுகிறது. நல்ல நண்பனைச் சந்தேகிக்கக் கூடாது என்பதை யாம் அனைவரும் அறிவோம்.

திருமாவை தமிழ்த்தேசியவாதிகள் தங்கள் உற்ற நண்பனாகவே பார்க்கின்றனர். ஆனால் திருமாவை தமிழினக் கொலையாளிகளுடனும் எதிரிகளுடனும் துரோகிகளுடனும் படம் எடுத்துக் கொள்வதை தமிழ்த் தேசிய வாதிகள் விரும்புவார்களா? இலங்கையின் பிரதம மந்திரியாக இருந்த சிறிமாவோ பண்டார நாயக்க இந்தியாவிற்கு பயணம் ஒன்றினை மேற்கொண்டபோது அவருடன் இணைந்து புகைப் படம் எடுத்துக் கொள்ள அப்போதைய முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரி மறுத்துவிட்டார். பின்னர் அது பற்றி அவரிடம் வினவியபோது "அந்த அம்ம தமிழர்கள் விஷ்யத்தில் நல்லமாதிரியாக நடந்து கொள்வதில்லை" என்றார். இத்தனைக்கும் சிறிமாவோ பண்டாரநாயக்கா தமிழர்களைக் கொன்றதில்லை. ஆனால் தமிழர்களைக் கொன்று குவித்து கொள்ளையடித்து கற்பழித்து வதை முகாம்களில் தள்ளியவர்களுடன் தோழர் திருமாவளவன் இணைந்து நிற்பதை யார் ஏற்றுக் கொள்வார்கள்?

இந்தத்தூதுக் குழுவை தோழர் தவிர்த்திருந்திருக்க வேண்டும்.
முகாம்களின் நிலைமை பற்றி அறிய வேண்டுமானால் மெனிக் பாம் முகாம்கள் மட்டுமல்ல மற்ற எந்த முகாமிலுள்ள நிலைமைகள் பற்றி தோழர் திருமாவளவனுக்கு நெருக்கமான தமிழ்தேசியவாதிகள் எடுத்துரைத்திருப்பார்கள். தோழர் திருமாவளவனை இலங்கையில் தமிழர்களைச் சந்திக்க இராணுவம் மறுத்து விட்டது. அவர் இலங்கைக்கு மேற்கொண்டது ஒரு இலங்கை அரசால் நெறிப்படுத்தப் பட்ட பயணம்தான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இப்பயணத்தால் தோழர் திருமாவளவன் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டாரா என்ற கேள்விக்கான விடை அவர் தமிழ் நாடு சென்று வெளிவிடும் பகிரங்க அறிக்கையில்தான் இருக்கும்.

இந்தியத் தூதுக் குழுவின் குட்டு வெளிப்பட்டது.


வன்னியில் உள்ள வதை முகாம்கள் தொடர்பான நெருக்கடி நாளுக்கு நாள் இலங்கை அரசிற்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. மேற்கு நாடுகளிலிருந்தும் மனித நேய அமைப்புக்களிடம் இருந்தும் பல அழுத்தங்கள் இலங்கைமீது அதிகரித்தே வருகின்றது. இதிலிருந்து ஒரு தற்க்காலிக நிவாரணமாவது இலங்கை அரசிற்குத் தேவைப் படுகிறது.

இலங்கை அரசைப் பொறுத்தவரை தமிழர் பிரதேசங்களை சிங்களவர்களைக் குடியேற்றிய பின்னரே அங்கு முகாம்களில் இருக்கும் மக்களை சிங்களவர்களின் கொத்தடிமைகளாக குடியேற்ற வேண்டும்.
இந்தியவைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளை இனி தலையெடுக்க முடியாதவாறு அழிக்கவேண்டும். எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் அழித்தொழிக்க வேண்டும். இதற்கு இன்னும் சிலமாதங்கள் வன்னி முகாம்கள் நீடிக்க வேண்டும்.
இதற்கு டெல்லியில் "ரூம்" போட்டு யோசித்தார்கள். விளைவு ஒரு தூதுக் குழு. பல கட்சிகள் கொண்ட தூதுக் குழுவாயின் அது இலங்கைக்கு சார்பாக நடக்கும் என்று உறுதியிட்டுச் சொல்ல முடியாது. அதற்காக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழு அமைக்கப் பட்டது. இது நடுநிலையானது எனக் காட்ட அகப் பட்டவர்கள் கனிமொழியும் திருமாவளவனும்.

இந்தக் குழு தொடர்பாக கலைஞர் தெரிவித்தது: ''இது அரசு சார்பாகச் செல்லும் குழுவல்ல... தி.மு.க. கூட்டணியின் சார்பாக சென் றிருக்கும் குழு. அக்கறையிருந்தால் எதிர்க்கட்சி எம்.பி-க்களும் செல்லலாம்!''

ஆனால் இந்தக் குழுவின் மீது பல தரப் பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் படுகின்றன:
  • ஜூனியர் விகடன்: மேளதாள வரவேற்பு, மாலை மரியாதைகள் என திருமண விழாவுக்கு வருப வர்களைப் போல தமிழக எம்.பி-க்களுக்கு ராஜ மரியாதை கொடுத்து அழைத்தது சிங்கள அரசு. 'எங்கள் மக்கள் துக்கத்தில் தவிக்கும் நிலையில் ஏன் இத்தனை ஆடம்பர வரவேற்பு?' எனக் கேட்டு தமிழக எம்.பி-க்கள் அதனைத் தவிர்த்திருக்கலாம். அவர்களோ புன்முறுவல் பூத்தபடி... சிங்கள அதிகாரிகளின் விரல் பிடித்து நடந் தார்கள்.
  • உதயன்(யாழ்ப்பாணப் பத்திரிகை):பத்து தமிழக எம்.பிக்களின் யாழ்.வருகை வெறும் பம்மாத்துத் தானா? இன்றைய எரியும் பிரச்சினை பற்றி அறிய வந்தவர்கள் மக்களின் மனஆதங்கத்தை அறிந்துகொள்ள விரும்பவில்லையே! "இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒரே விஷயத்தையே எல்லோரும் சொல்லாதீங்க. வேறு ஏதாவது சொல்லுங்க" என்று கிளிப் பிள்ளைபோல திரும்பத் திரும்ப சற்று அதிகாரத் தொனியில் அங்கு குழுமியிருந்தவர்களை வேண்டினார்.இப்போது இலங்கைத் தமிழர்களின் முன்னாலுள்ள மிகப்பெரிய "எரியும் பிரச்சினை" நலன்புரிநிலையங்களில் வாடும் மக்கள்தான். எனவே அவர்கள் அனைவரும் அதைப் பற்றித்தான் அதிகம் பேசமுடியும். நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகளை அறியத்தான் இந்தியக் குழுவே இலங்கைக்கு வந்திருந்தது வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்கையில் நலன்புரி நிலைய மக்களைப் பற்றி எல்லோரும் கதைப்பதை ரி.ஆர்.பாலு ஏன் விரும்ப வில்லையென்பது புரியவேயில்லை. அத்துடன் அங்கு நிகழ்ந்த கருத்தாடலை வேறொரு திசைநோக்கி நகர்த்தவே அவர் பெரிதும் விரும்பினார்.


கொழும்பில் இருந்து வரும் செய்திகள்:
  • சந்திப்பின்போது இடம்பெயர்ந்தோர் விவகாரம் மற்றும் அரசியல் தீர்வு விடயம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. வடக்கின் நிலைமையை பார்வையிடுவதற்காக தமக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக இதன்போது இந்திய எம்.பி. க்கள் குழு தெரிவித்துள்ளது. மேலும் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றும் நோக்கில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியவை என்றும் இந்திய எம்.பி. க்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் வேலைத்திட்டத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக கூறினார்.
  • இந்திய எம்.பி. க்களின் இலங்கை விஜயத்துக்காக நன்றி தெரிவித்த ஜனாதிபதி இதன்மூலம் தவறான பிரசாரங்கள் குறித்து தெளிவடைய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கருத்து "இதன்மூலம் தவறான பிரசாரங்கள் குறித்து தெளிவடைய முடியும்" இந்தியத் தூதுக் குழுவின் குட்டை உடைத்துவிட்டது. இதற்க்காகத் தானே இலங்கை ஜனாதிபதியின் "அழைப்பின் பேரில்" இந்தக் குழு இலங்கை சென்றது.

கனிமொழி இதுவரை பகிரங்கக் கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை. தோழர் திருமா மக்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர் என்றார். தங்கபாலுவும் வந்தாரா? சுதர்சன நாச்சியப்பன் "மொக்கைத்தனமாக" முகாம்கள் சர்வதேச நியமங்களுக்கு அமைய இருக்கிறது என்றார். இலங்கையில் மெனிக் பாம் மட்டும் முகாம் என்பது மாதிரி இலங்கையும் இந்தத் தூதுக் குழுவும் நடந்து கொள்கின்றன.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தூதுக் குழுவைச் சந்தித்ததின் காணொளியைக் காண இங்கு சொடுக்கவும்: Daily Mirror

http://veltharma.blogspot.com/2009_10_11_archive.html

தமிழினத்தை அழித்த கொடும்பாதகத்துக்கு
நன்றிக்கடனாக பரிசில் பெற்று மகிழும் நாடாளுமன்ற‌


நாயகநாயகிகளைக் கண்டு மகிழுங்கள்:-(?!

இந்திய நாடாளுமன்றக் குழு!


http://www.youtube.com/watch?v=EuGkTRZZesg






Update me when site is updated





♥ நீங்களும் பயங்கரவாதியாகலாம்! - விவரணப்படம் ♥


நீங்களும் பயங்கரவாதியாகலாம்! - விவரணப்படம்


http://appaa.com/index.php?option=com_content&view=article&id=220:2009-09-19-17-00-53&catid=36:2009-08-20-14-57-40

மேலை நாட்டு அரசுகள் தகவல் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி, தமதுபிரஜைகளை கண்காணித்து வருகின்றன. ஒவ்வொரு பிரஜையும்பயங்கரவாதியாக சந்தேகிக்கப்படுகின்றனர். அவர்களது தொலைபேசிஅழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. மின்னஞ்சல்கள் உடைத்துப்படிக்கப்படுகின்றன. ஒருவர் இணையத்தில் பார்வையிடும் தளங்கள் கூட அரசபுலனாய்வுத்துறையின் கழுகுக் கண்களுக்கு தப்பமுடியாது. அவர்கள்நினைத்தால் உங்கள் கணனியில் பதிந்துள்ள விபரக் கோவைகளையும் கவர்ந்துசெல்லலாம்.
"நீங்களும் ஒரு பயங்கரவாதி தான்" என்ற இந்த விவரணப்படம் ஜெர்மன் மக்களுக்கு அறிவுபுகட்டும் முகமாக சில சமூக ஆர்வலர்களால்தயாரிக்கப்பட்டது. ஆங்கில உப-தலைப்புகளுடன் ஜெர்மன் மொழி பேசும்வீடியோ.






http://www.youtube.com/watch?v=pdIA0jeW-24




வன்முறையைப் போதிக்கும் யூத மதகுருக்கள் (ஆவணப்படம்)



ஒரு காலத்தில் மதச்சார்பற்ற நாடாக அறியப்பட்ட இஸ்ரேலின் தோற்றம் மாறுகின்றது. இராணுவத்தில் யூத மத அடிப்படைவாதிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. யூத மதகுருக்கள் தம்மை பின்பற்றும் மதப்பற்றாளருக்கு வன்முறையை நியாயப்படுத்தி போதிக்கின்றனர். அத்தோடு நில்லாது, மத குருக்களே போர்வீரர்களாகவும், அதிகாரிகளாகவும் இராணுவத்தில் கடமையாற்றுவது அதிகரித்து வருகின்றது. அவர்களைப் பொறுத்தவரை "இது கடவுளின் போர்". அன்பைப் போதிக்க வேண்டிய மதகுருமார், மனிதர்களைக் கொல்லும் கொடூர யுத்தத்தில் ஈடுபடும் முரண்நகை. "இது யூத மத குருமாரின் ஜிகாத்" என்று சமாதான ஆர்வலர்கள் பரிகசிக்கின்றனர். பி.பி.சி. தயாரித்த இந்த ஆவணப்படம் மதங்களின் இரத்தம் தோய்ந்த மறுபக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. குறிப்பிட்ட சிலவற்றை வன்முறையாளரின் மதமாகவும், தமது மதம் அன்பை மட்டுமே போதிப்பதாகவும் அடிக்கடி பாசாங்கு செய்பவர்களுக்கு இந்த ஆவணப்படம் சமர்ப்பணம்.

http://www.youtube.com/watch?v=1oiZ8I35Mtg




http://www.youtube.com/watch?v=TXu71uVGwI8

கியூபா, கம்யூனிசம் நிரந்தரம்





பிடல் காஸ்ட்ரோ கடும்சுகவீனமுற்று அரசியலை கை விட்டு விட்டு ஆஸ்பத்திரியில் தஞ்சமடைந்திருந்த நேரம். கியூபாவின் நீண்ட கால ஆட்சித்தலைவர் மரணப்படுக்கையில் விழுந்து விட்டார். காஸ்ட்ரோவிற்கு பின் கியூபா , ஜன நாயகத்திற்கும், சுதந்திரதிட்கும் கதவுகளை திறந்து விடும், என்று மேற்கத்திய ஊடகங்கள் ஆருடம் சொல்லிக்கொண்டிருப்த நேரம். இப்படி ஒரு திருப்புமுனையை வெளிஉலகம் எதிர்பார்த்திருந்த நேரம் தான் எனது கியூபா பயணம் அமைந்தது. ஏற்கனவே பல்வேறு அரசியல் சார்புடயவர்களின் பரிச்சயம் இருந்தாலும் , தினந்தோறும் வந்து குவியம் ஆயிரக்கணக்கான உல்லாச பிரயாணிகளில் ஒருவனாக நானும் போயிருந்ததால் இந்த கியூபா பயணக்கட்டுரை ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையிலேயே விரிகின்றது.

"வரதேரோ" தலைநகர் ஹபனவில் இருந்து 100 கி.மி. கிழக்கே உள்ள குடாநாடு. அங்கே அழகான நீண்ட கடற்கரை ஓரமாக கட்டப்பட்டுள்ள நட்சத்திர ஹோடேல்களில் தான், குறிப்பாக மேற்கைரோபிய மற்றும் கனடாவில் இருந்து வரும் உல்லாசபிரயாணிகள் தங்கவைக்கப்படுகின்றனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர், அன்னிய செலவாணியை ஈட்டும் நோக்குடன் ஆரம்பிக்கபட்ட உல்லாச பிரயாண துறை வருடம்தோறும் ஈட்டும் நிகர லாபம்

அதிகரித்து கொண்டே போகின்றது.

மேலைத்தேய முகவர்களால் அனுப்பப்படும் வாடகை விமானங்களே பெரும்பாலும் வரதேரோ விமானநிலையத்தில் வந்திறங்குகின்றன. விசா விதிகள் தளர்த்தப்பட்ட போதிலும், பயணிகள் அனைவரும் டிஜிட்டல் படம் எடுத்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வெளியே "கியூபா டூர்" என்ர அரசாங்க நிறுவன பேருந்துவன்டிகள் ஹோடேல்களுக்கு அழைத்து செல்ல காத்து நின்றன. விமானநிலையத்தில் இருந்து ஹோட்டல் வரையிலான அறை மணி நேர பயணத்தில், வழியில் எந்தவொரு விளம்பர தட்டியையும் காணமுடியவில்லை. அதற்கு மாறாக, "புரட்சியை தொடர்வோம்" போன்ற வாசகங்களே கண்ணில் பட்டன.

வரதேரோ நகரிற்கு அருகில் வாழும் கியூபா மக்கள் பெரும்பாலும் உல்லாசபிரயான துறையில் தொழில் புரிகின்றனர். இவர்கள் பிற தொழிலாளரை விட அதிக சம்பளம் எடுத்து சற்று வசதியாக வாழ்கின்றனர். இருப்பினும் அவர்களது சம்பளம் அரசால் மட்டுப்படுத்த பட்டிருப்பதால்; டிப்ஸ் பணம், சில்லறை வியாபாரம், அல்லது விபச்சாரம்(தடை செய்யபட்டுள்ளது) ஆகியவற்றில் ஈடுபடுவோர் மட்டும் அதிக வருமானம் ஈட்டுகின்றனர். உல்லாசபிரயானிகளின் வருகையின் பின்னர், ஓரளவு வசதிபடைத்த வர்க்கம் உருவாகியுள்ளது. இத்தனை பிற முதலாளித்துவ நாடுகளின் வர்க்கநிலையோடு ஒப்பிடமுடியவிட்டாலும், இருவேறு சமுக படிநிலை இருப்பது புலனாகும்.

Cuba வருபவர்கள் எல்லோரும் "பெசொவிற்கு மாற்றீடன நாணயம்" (Pesos Convertibles) என்றளைக்கபடும் நாணயத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இது கியூபாவின் தேசிய நாணயமான பெசோ அல்ல! பெறுமதி குறைந்த அதை கியூபா பிரசைகள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். 25 peso = 1 peso convertible. இந்த மாற்று peso அமெரிக்க டாலரின் பெறுமதிக்கு இணையானது. அதாவது சர்வதேச வர்த்தகத்திற்கு தேவைப்படும் அமெரிக்க டாலர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்த peso நாணயதாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. ஏனெனில் நாம் ஒரு அமெரிக்கா டாலரை வங்கி அன்னிய நாட்டில் வைத்திருக்கும் பட்சத்தில், அமெரிக்கா மத்திய வங்கி இன்னொரு டாலரை அச்சடித்து புழக்கத்தில் விடுகின்றது. பொருளாதாரத்தில் நாணயத்தின் பெறுமதி மட்டுமே முக்கியம் என்பதால், கியூபா மக்கள் இந்த peso convertbleஐ "கியூபா டாலர்" என்று அழைகின்றனர்.

கியூபாவில் சாதாரண தொழிலாளர்கள் சுமார் 200 peso சம்பளம் பெறுகின்றனர். அதாவது 8 அமெரிக்கா டாலர்கள். உல்லாசபிரயான துறையில் வேலை செய்வோர் 350 peso சம்பளம் பெறுகின்றனர். அனைத்து தொழிலாளரும் அரசாங்க ஊழியர்கள் என்பதால் அதிகம் சம்பாதிக்க வாய்ப்பு இல்லை. Joint Venture எனப்படும், வெளிநாட்டு நிறுவனங்களுடன், பங்குபோட்டு நிர்வகிக்கப்படும் ஹோடேல்களில் மாத்திரம் 450peso சம்பளம் வழங்கப்படுகிறது.

இந்த நிறுவனங்கள் யாவும் 1990க்கு பிறகு வந்தவை. Soviet
union உதவி கிடைப்பது நின்று விட்ட காலத்தில், வர்த்தக கூட்டாளிகள் இன்றி தனிமைப் பட்ட கியூபா பொருளாதாரம் வீழ்ந்து கொண்டிருந்த காலம் அது. கம்யுனிசத்தை கைவிட விரும்பாமல், அதேநேரம் முதலாளித்துவத்தை தழுவ விரும்பாமல், இறுதியில் Joint Venture திட்டத்திற்கு சம்மதித்தது. அமெரிக்கா தவிர்ந்த, கனடிய மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் உல்லாசபிரயான துறையில் முதலீடு செய்ய முன்வந்தன. கடற்கரையோரமாக கட்டப்பட்ட ஹோடேல்களில், கியூபா அரசாங்கம் 51% பங்குகளையும், அன்னிய நிறுவனங்கள் 49% முதலீடு செய்தன. கிடைக்கும் லாபத்தை இந்த வீதப்படியே பிரித்து கொண்டன. இந்த ஒப்பந்தம் குறிப்பிட்ட வருடங்களே செல்லும். இதனால் தற்போது 10 வருடங்களுக்கு பின்பு பல ஹோட்டல்கள் கியூபா அரசாங்கத்தின் சொந்தமாகி வருகின்றன.

அன்னிய நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம்450 peso வுக்கு மேலே போகக்கூடாது. அப்படி போனால் மிகுதி தொகையை கியூபா அரசாங்கம் பிடித்துகொள்ளும். அப்படி எடுக்கும் பணம் பிற செவைதுறைகளில் பயன்படுத்த படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. இருப்பினும் நாட்டில் பிறரை விட அதிகமாக சம்பாதிக்கும் வசதிபடைத்த வர்க்கத்தை உருவாக விடாமல் இது தடுக்கின்றது. இதனால் சமத்துவம் ஓரளவுக்கேனும் பேணப்படுகின்றது. இருப்பினும் உயர்ந்து வரும் வாழ்கை செலவை ஈடுகட்ட போதுமானதாக சம்பளம் இல்லை.

உல்லாசபிரயனிகள் தமது செலவுகளுக்கு உயர்ந்த விலைகளை (திறந்த பொருளாதாரம் இல்லாததால், அரசாங்கம் விரும்பியபடி விலை நிர்ணயிக்கின்றது) கொடுக்க வேண்டியிருப்பதால், கிடைக்கும் லாபத்தில் பெரும் பகுதி காஸ்ட்ரோ குடும்பத்திற்கு போவதாக முறையிடுகின்றனர். அங்கே மேலைத்தேய பாணி பல்பொருள் அங்காடிகள் உள்ளன. தேவையான எல்லாம் அங்கே கிடைகின்றன. உண்மையில் விலைகள் செயற்கையாக, அமெரிக்காவை விட அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

Castro, கியூபா அரசாங்கத்தை ஊழல் ஆட்சி என்று குறை. இன்னொரு பக்கத்தை பார்ப்பதில்லை. பொதுமக்களுக்கு அத்தியாவசியமான சேவை துறைகளான வைத்தியம், கல்வி, போக்குவரத்து ஆகியன பெருமளவு நிதியை வேண்டி நிற்கின்றன. மேலும் ஊழலை தடுக்கும் நோக்கில் பாராளுமன்ற, நகர சபை உறுப்பினர்கள், பிற அரச அதிகாரிகள், இராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு, சாதாரண தொழிலாளரை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது. மேற்பட்ட துறைகளில் வேலை செய்வோர் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. ஆனால் தேசத்திற்கு முக்கியமானவர்கள். இவற்றை விட ஐ.எம்.எப்., உலகவங்கி போன்ற எதுவும் கடன் வழங்குவதில்லை, என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டும். நீண்ட காலமாக இருந்த என்னை பற்றாகுறை, தற்போது சாவேசின் வெனிசுவேலாவின் நட்பினால் ஈடுகட்டப்படுகின்றது.

நாம் நின்ற இடத்திலிருந்து பல சுற்றுலாக்கள் "கியூபா டூர் "றினால் ஒழுங்கு பண்ண படுகின்றது. இது ஒரு அரச நிறுவனம். அதிலே வேலை செய்பவர்களை எல்லரும் அரச ஊழியர்கள். முதலில் மூன்று நகரங்களின் சுற்றுலா, என்றழைக்கப் படும் "சந்தியாகோ", "திரிநிடாத்", சாந்த கிளாரா" போன்ற நகரங்களை பார்க்க போனோம். சாந்தியாகோ, திரிநிடாத் என்பன காலனிய கால நகரங்கள். சாந்த கிளாரா மாபெரும் புரட்சியாளர் சே குவேராவினால் பிரபலமானது. கியூபாவின் கிழக்கு பகுதியில் இருந்து தனது ஆயுத போராட்டத்தை தொடங்கிய புரட்சிப் படை, மத்தியில் இருக்கும் சாந்த கிளாரா வந்து சேர்ந்த போது வெற்றி உறுதியானது. அங்கே தற்போது சே குவேரவிற்கு நினைவாலயம் கட்டப்பட்டுள்ளது.



அங்கே பொலிவியாவில் கொல்லப் பட்ட சேயினதும், அவரது தோழர்களினதும் எலும்புகள் பாதுகாக்கப் படுகின்றன. மேலும் சே யின் வரலாற்றை கூறும் புகைப் படங்கள், பாவித்த உபகரணங்கள் என்பன காட்சிப் படுத்தப் பட்டுள்ளன . அந்த இடத்தினுள் மட்டும் படம் எடுக்க அனுமதி இல்லை. வெளியில் சே யின் சிலை இருக்கும் மைதானத்தில் சில பேரணிகளும், காஸ்ட்ரோவின் உரையும் இடம் பெரும்.


கியூபா தலைநகர் ஹவானா போகாமல், சுற்றுலா பூர்த்தியடையாது . அது இன்னொரு காலனிய காட்சிகூடம். நகரின் மத்தியில் கியூபாவின் 19 ம் நூற்றாண்டு தேசிய போராட்ட வீரர், "ஹோசே மார்ட்டி" யின் உருவசிலையும் அதனோடு உயர்ந்த கோபுரமொன்றும் கட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்னால் பரந்து விரிந்த மைதானத்தில் தான் கியூபா தேசிய தினம் மற்றும் மே தினம் போன்ற நாட்களில் மாபெரும் பேரணிகள் இடம் பெறும். இந்த மைதானத்திற்கு எதிர் பக்கத்தில் உள்ள அமைச்சு கட்டிட சுவரில் மிகப் பெரிய சே யின் முகம் காணப் படுகின்றது.




கியூபா மக்கள் காஸ்ட்ரோவை பற்றி சில வேளை குறை சொன்னாலும் சே பற்றி நல்லதாக தான் சொல்வார்கள். மேலும் அர்ஜென்டினாவில் பிறந்து தமது நாடு விடுதலைக்காக போராடிய சே பற்றி உயரிய மதிப்பு வைத்திருக்கிறார்கள். இதனால் கியூபாவில் காணும் இடமெல்லாம் சே யின் உருவப் படங்கள் காட்சி தருகின்றன. பாடசாலைகளில் மாணவர்கள் சே போல வாழ்வோம் என்று உறுதிமொழி எடுக்கிறார்கள். கியூபா விற்கு ஆரம்ப காலத்தில் அதிகம் வந்த உல்லாச பிரயாணிகள் இடதுசாரிகள். இதனாலும் சே படம் பொறித்த டி- சேர்த்கள், கை பைகள், பிற நினைவு சின்னங்கள் என்று வியாபாரம் களை கட்டுகிறது. இதை தவிர "ஹவான கிளப்" என்ற ரம் உலகப் புகழ் பெற்றது. அரச நிறுவனமான அது மில்லியன் கணக்கில் அன்னிய செலாவணியை ஈட்டி தருகின்றது. அது போல பெருமளவு லாபம் பெற்று தரும் கியூபா சுருட்டுகள் உற்பத்தி இப்போதும் முன்னணியில் இருக்கிறது. உலகில் சிறந்த சுருட்டுகள் என்று பெயர் பெற்ற அவை, முன்னால் அமெரிக்கா ஜனாதிபதி கென்னடியினதும் மனம் கவர்ந்திருந்தது. இதனால் தானே கியூபா மீது பொருளாதார தடை போட்டு விட்டு, தானே பழக்கத்தை விட முடியாமல் கஷ்டப் பட்டாரம். வீதியில் உல்லாச பிரயாணிகளிடம் சட்ட விரோதமாக சிலர் சுருட்டுகளை விற்கிறார்கள். இவற்றின் தரம் கேள்விக்குரியது.

பொது மக்கள் சில வியாபார முயற்சிகளை செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. உல்லாச பிரயாணிகளுக்காக நினைவு பொருட்களை விற்கும் கடைகள், சிற்றுண்டி விடுதிகள், டாக்சி ஓடுதல், மற்றும் வீட்டு அறையை வாடகைக்கு விடுதல் போன்றவற்றை செய்யலாம். அனால் இவற்றில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வேலை செய்யலாம். இத்தகைய முயற்சிகளால் கிடைக்கும் வருமானம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழில் புரியும் உறவினர்கள் அனுப்பும் பணம் என்பனவற்றால், சில கியூபா மக்களின் வாழ்கை தரம் உயர்ந்துள்ளது.

கியூபா பொருளாதாரம் எப்போதும் ஒரேமாதிரி இருந்ததில்லை. முன்பு சோவியத் யூனியனின் உதவி கிடைத்து வந்த காலத்தில் மக்கள் வசதியாக வாழ்ந்து வந்தனர். அது ஒரு பொற்காலம் என்று கூறலாம். பின்னர் கம்யூனிச நாடுகள் இல்லாமல் போய் எந்த வித வர்த்தக தொடர்பும் இல்லாத காலத்தில், பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்தது. வறுமையில் இருந்து தப்ப மக்கள் தோணிகளில் கடல் கடந்து அமெரிக்கா போய் கொண்டிருந்தனர். உல்லாச பிரயாணிகளின் வருகை, ரம், சுருட்டு போன்றவற்றை சர்வதேச சந்தையில் விற்க கூடியதாகவிருந்தது, மேலும் புதிதாக கிடைத்த சில நாடுகளின் வர்த்தக உறவுகள் போன்றவற்றால்; பொருளாதாரம் ஸ்திரப் படுத்த பட்டு, தற்போது வளர்ந்து வருகின்றது. இருப்பினும் அமெரிக்கா இன்னமும் பொருளாதார தடையை கடை பிடிப்பதும், அதை மீறும் நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய முடியாது என்ற சட்டத்தையும் மீறி பல நாடுகள் உறவை ஏற்படுத்தி வருகின்றன. நாட்டினுள் நிலவும் தட்டுபாடுகளுக்கு கியூபா அரசாங்கம் எப்போதும் இந்த பொருளாதர தடையையே குற்றம் கூறி வருகின்றது. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கியூபா மக்களுக்கு வழங்கப்படும் இலவச கல்வி, இலவச மருத்துவம் என்பன் இன்றும் தொடர்கின்றன. மூன்றம் உலக நாடான கியூபா வில் குழந்தை இறப்பு விகிதம் குறைவு என்பதும், இது மேற்கத்தைய நாடுகளுக்கு இணையானது என்பதும் குறிப்பிடத்தக்கது. வீட்டு வாடகை கூட மிக குறைவே. மக்களின் போக்குவரதிற்கென அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ் வண்டிகள், சைகிள் உற்பத்தி என்பனவற்றை அரசாங்கம் ஊக்குவிக்கின்றது. மேலும் கார் வைத்திருப்போர் போகும் வழியில் பிறரையும் ஏற்றி செல்லுமாறு வற்புறுத்த படுகின்றனர்.

நாட்டை தற்போதும் கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டு வருகின்றது. ஊராட்சி மட்டத்தில், "புரட்சியை பாதுகாக்கும் கமிட்டி " என்னும் அமைப்பு பல்வேறு அரசியல் பொருளாதார முடிவுகளை எடுக்கின்றது. இதில் வீட்டுக்கு ஒருவராவது வருகை தருவதும் கருத்து கூறுவதும் கட்டாயமாக்க பட்டுள்ளது. ஊராட்சி மற்றும் பிராந்திய சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவோர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. கம்யூனிஸ்ட் கட்சியை விட, பிற கட்சிகள் இயங்குவது தடை செய்ய பட்டுள்ளது. பொது மக்கள் அது குறித்து அதிகம் அலட்டி கொள்வதாக தெரியவில்லை. (வெளிநாட்டினர் மட்டுமே கவலைபடுகின்றனர்) அவர்களை பொறுத்த வரை இருக்கும் அரசாங்கம் தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தால் போதுமானது. கியூபா மக்களும், பிறரை போல உணவு, உடை, உறையுள் இவை குறித்து மட்டுமே அதிகம் கவலைபடுகின்றனர். அவர்களும் உலகில் பிற நாடுகளில் நடப்பதை அவதானிக்கின்றனர். வீடுக்கு வீடு வாசல் படி போல பிற நாடுகளில் இருக்கும் பிரச்சினைகளுடன் ஒப்பிடும் போது தமது நாடு பரவாயில்லை என்று பெரு மூச்சு விடுகின்றனர். மக்களின் இத்தகைய மன ஓட்டத்தை புரிந்து கொள்ளததாலேயே அமெரிக்கா போன்ற நாடுகள், கியூபா மக்கள் "ஜனநாயக விடுதலை" க்காக காத்திருப்பதாக மாயையை தோற்றுவித்து வருகின்றனர்.

காஸ்ட்ரோ மரணமடைந்தால், அமெரிக்கா படை எடுக்கலாம் என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் உள்ளது. அப்படி நடந்தால் கியூபா இராணுவமும் எதிர்த்து சண்டை பிடிக்கும், பெரும் போர் மூளும் என்று எம்மோடு கதைத்த மக்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். "நீங்கள் எமது நாடுக்கு வந்தால், நாங்கள் உமது நாட்டிற்கு வருவோம்." என்று கியூபா அரசாங்கம் முன்பிருந்தே அமெரிக்காவிற்கு எதிராக பேசி வருகின்றது. அமெரிக்காவிற்கு அருகில் ஒரு சின்னஞ்சிறு நாடாக இருந்து கொண்டு, ஒரு சர்வதேச வல்லரசை எதிர்த்து பேசும் துணிவு உலகில் வேறு பல பெரிய நாடுகளுக்கே கூட இல்லை. ஹவானா நகர தெருக்களில் இப்போதும் அமெரிக்கா ஜனாதிபதி புஷ் ஐ டிரகுலவாக ( போர் வெறியனாக ) சித்தரிக்கும் விளம்பரதட்டிகள் வைக்க பட்டுள்ளன. அமெரிக்கா கியூபா மீது இராணுவ நடவடிக்கை எடுக்கததற்கு பல காரணங்கள் கூறபடுகின்றன. குருஷேவின் அணு ஆயுத சர்ச்சை ஏற்படுத்திய பாதுகாப்பு ஒப்பந்தம் தொடக்கம், ஈராக் போர் வரை எத்தகைய காரணம் இருந்தாலும், கியூபா உலகில் தனது தனித்துவத்தை தொடர்ந்து பேணி வருகின்றது.



http://appaa.com/index.php?option=com_content&view=article&id=228:2009-09-25-20-51-27&catid=23:2009-08-17-21-11-02

தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் - மகிந்த ராஜபக்சே..! அப்படியெனில் இலங்கை சென்ற தமிழக எம்பிக்கள் யார் ?

யுத்தம் நடைபெற்று கொண்டிருந்த காலத்தில், தமிழகமெங்கும் புயல் வீசியது...இந்தப் புயலில் ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.. இவர்களைப் பார்த்துதான் இவ்வாறு கூறினார் இலங்கை அதிபர் மகிந்தா ..." தமிழக தலைவர்கள்
கோமாளிகள் " என்று...இன்று வரை அது குறித்து ராஜபக்சே எந்தவித வருத்தமோ, தவறோ
என்று கருதவில்லை...மகிந்தாவைப் பொறுத்தவரை சொன்னால் சொன்னதுதான்...எல்லாம்
சரியாக இருக்கும்.
தற்பொழுது தமிழக எம்பிக்கள் குழு இலங்கை சென்று ராஜபக்சே சகோதரர்கள் அனைவரையும், சிரித்து சிரித்து பேசி வந்தனர் இவர்கள்...கோமாளியை விடவும் தரம் தாழ்ந்த நிலையிலேயே இவர்கள் சென்று வந்திருக்க முடியும்...கோமாளிகளை எப்படி கையாள வேண்டுமோ அப்படியே தான் ராஜபக்சே கையாண்டார்...அதன் ஒரு துளி தான் திருமாவைப் பார்த்து நீயெல்லாம் என் சிங்கள சிப்பாயின் ரவைக்குள் சுருண்டு விழுந்திருப்பாய்..! எப்படியோ பிழைத்துக் கொண்டாய்,
(மூன்று நான்கு நிலை எடுத்ததற்கு...! நெடுமாறனை பார்த்து அப்படி சொல்லியிருக்க முடியுமா ..? ) அதற்கு திருமாவும் கோமாளிக்குரிய புன்னகையுடன் தலையை ஆட்டி விட்டு வந்து, இங்கு மீசையை முறுக்குவார்...!
இந்த கோமாளிக் கூட்டத்தின் இன்பச் சுற்றுலா ஒரு விசயங்களை தீர்மானகரமாக தெரியப்படுத்தி விட்டன...தமிழக மக்களிடமும்,,புலம் பெயர் மக்களிடமும் ..! இலங்கை அரசியல் குறித்து, தமிழ் ஈழம் குறித்து இரு நிலைகள் தான் உள்ளன...நான் நடுநிலைமை, மத்தியஸ்தம் செய்கிறேன், கருத்துக்களை பதிவு செய்கிறேன், காங்கிரஸ் பெருச்சாளிகளும் நண்பர்கள், திராவிட ஓநாய்களும் எனக்கு நண்பர்கள், ஆனால் ஈழம், விடுதலைப் புலிகளும் நண்பர்கள் என்று இனி யாரும் கூற முடியாது...! அது அவர்கள் பிரச்சனை..இலங்கையின் இறையாண்மை, மத்தியில் சிங்கள ஆட்சி..மாநிலத்தில் தமிழ் ஆட்சி என்று கூற முடியாது....! மூன்று நான்கு நிலைகள் எடுக்க முடியாது இனிமேல் ..!
இரண்டே நிலை தான் இனிமேல் ; ஈழம் குறித்தும், விடுதலை புலிகள் குறித்தும் ஆதரிக்கின்றாயா ? எதிர்க்கின்றாயா ?
மகிந்த ராஜபக்சே போர்க் குற்றவாளியா ? பயங்கரவாதத்தை அழித்த இலங்கை தலைவரா ? முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களின் சுதந்திரம் ? ஈழத் தமிழர்களுக்கு இலங்கை அரசிடம் நல்ல தீர்வு கிடைக்கும் ?
ஈழ விடுதலை ? ஒன்று பட்ட இலங்கை ?
தேசியத் தலைவர் பிரபாகரன் ? தமிழினக் கலைஞர் கருணாநிதி ?
விண்ணகன், ஈழதேசம்.கொம்
http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=1020:2009-10-16-11-51-48&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

தீபா”வலி”யும் தமிழரும்!


diwali-diyaஉலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.

ஆனால் தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில் உண்டு. அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள்.

இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் “தீபாவளி வாழ்த்துக்கள்” சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது.

ஆனால் இந்த தீபாவளியின் பின்னணி வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? எங்களின் மூதாதையர் அழிக்கப்பட்ட நாளை, தமிழினம் தோற்கடிக்கப்பட்ட நாளை நாம் கொண்டாடுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அதைப் பார்ப்பதற்கு முன் தீபாவளியை தமிழினத்திற்குள் திணித்த ஆரியப் பார்ப்பனர்கள் தீபாவளி குறித்து சொல்லுகின்ற கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.

முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம்.

இப்படி ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப் பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை எப்படி பாயாக சுருட்டலாம் என்றோ, பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோ, பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள் தள்ளியது

ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி வேறு. இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்த பின்பும் கொண்டாடினால் அவர்கள் சூடு சுரணை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரத கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்கள் எனப்படுகின்ற தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு, மொழி ஆக்கிரமிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும் நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன.

சுர பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக சொல்லப்படுகின்ற இராமனும் சரி, அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அசுரர்கள் கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். புராணக் கதைகளை ஆரய்ந்த பாரதத்தை சேர்ந்த நடுநிலையான ஆராய்ச்சியாளர்களும், மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அசுரர்கள் என்று திராவிடர்களையே குறிப்பிடப்படுகிறது என்று கூறி உள்ளார்கள்.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர் நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில் தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து இராவணனையும் கொல்கிறான். இதுதன் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.

கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள். முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து விட்டன.

ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா? நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால். அப்பொழுது எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது. எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.

இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலைவீரனின் நினைவுநாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையோ கொண்டாட வைத்து விட்டார்கள். இதை உணர்ந்து தமிழினம் இந்த தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். இங்கே இன்னும் ஒன்றையும் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும். இன்றைய நாகரீக உலகில் யாருடைய இறப்பும் கொண்டாடப்படுவதில்லை. எம்மை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த எதிரிகள் கொல்லப்பட்ட நாளை நாங்கள் யாரும் கொண்டாடுவதில்லை. கோடிக்கணக்கில் மனிதர்களை கொன்ற கிட்லரின் இறப்பையும் யாரும் கொண்டாடுவதில்லை. இப்படி யாராக இருந்தாலும், ஒரு இறப்பு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் நாம் எமக்காக உயிரை ஈந்த ஒரு மன்னனின் நாளை தீபாவளி என்று மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். இந்த நிலை மாறும் நாளே உண்மையில் தமிழினம் விடுதலை அடைந்த நாளாக இருக்கும்.

கு.கண்ணன்
பெரியார் திராவிடர்கழகம்
“தமிழ்க் குடில்”
6/28, புதுத்தெரு
கண்ணம்மாப்பேட்டை
தியாகராயர் நகர்
சென்னை – 6000 017



Update me when site is updated

♥ குர்து மலையோரம் வீசும் இரத்த வாடை ♥

வேலி - குறும்படம்
http://www.tamilkathir.com/news/1784/57//d,view_video.aspx

மெளனம் _ குறும்படம்
http://www.tamilkathir.com/news/1791/57/_/d,view_video.aspx

பசி - குறும்படம்
http://www.tamilkathir.com/news/1742/57/.aspx

ஜீவனே என் தேசமே!
http://www.tamilkathir.com/news/1800/57/.aspx


Muthamizh
Chennai


Mahinda_Indian_MP13909_1


இ டம்: மெனிக் பாம் முகாம்
பங்கேற்ப்போர்: இந்திய எம்.பிக்கள் குழு, முகாம் மக்கள்
டி.ஆர்.வாலு: என்ன எல்லோரும் சௌக்கியம் தானே? இந்த வருசம் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு தயாராகிகிட்டு இருந்துருபீங்க..தொந்தரவுக்கு மன்னிக்கனும்...நீங்க எதோ இங்க கஷ்டப்படுற மாதிரி அங்க தமிழ்நாட்டுல எல்லாரும் தெருத் தெருவா கத்திகிட்டு இருக்காங்க...தீ குளிக்கிறாங்க. சரி, எதாவது சொல்றதா இருந்தா சொல்லுங்க...எங்களுக்கு நேரம் ஆச்சு...மானாட, மயிலாட தீபாவளி ஸ்பேஷல் போட்டிருப்பாங்க...!! டாக்ளஸ், ஒரு கோக் சொல்லு...
முகாம் நபர்: அய்யா, என் பேரு 'தமிழன்'. உங்ககிட்ட மூனு கேள்விகள் கேக்கனும்...முதல் கேள்வி. 'சுத்தி இருக்கிற நாடுகள் நிம்மதி இல்லாம அவஙளுக்குளேயே அடிச்சிக்கிடு இருந்தா தான் நாம நல்லா இருக்க முடியும்' அப்டிங்றது இந்தியாவோட வெளியுறவு கொள்கை. நேபாளத்தில பிரிச்சு வைக்குறீங்க...அஸ்ஸாம்ல செத்து வைக்கிறீங்க. ஆனா, நாடே அழிஞ்சாலும், சிங்களனால நாளக்கு இந்தியாவுக்கு பாதிப்பு இருக்குன்னு தெரிஞ்சும், தமிழனுக்க்கென்று ஒரு நாடு இருக்க கூடாது'ன்னு சிங்களனுக்கு இப்படி கண்மூடித் தனமா ஆதரவு குடுக்குரீங்களே. அந்த மர்மம் என்ன ?
டி.ஆர்.வாலு: (தொண்டையை செருமுகிறார்...) இந்த கேள்வி கொஞசம் கஷடமா இருக்கு,பதில் தெரியல..அதனால, சாய்ஸ்'ல விட்டுடறேன்... அடுத்த கேள்வி
முகாம் நபர்:இரண்டாவது கேள்வி, ஒரு ராஜிவ் காந்தி உயிருக்காக இன்னும் எத்தனை தமிழர்களோட உயிரை எடுக்கப் போறீங்க ?
டி.ஆர்.வாலு: ஒரு தமிழனா இந்த கேள்வி என்னை கொல்லுது...யோவ் டக்கு, இன்னுமா கோக் வரலை.... ம்ம்..அப்புறம்...மேல சொல்லு தம்பி...
முகாம் நபர்:மூன்றாவது கேள்வி, நடந்ததுக்கு எல்லாம் இரண்டு கருணாக்கள் தான் காரணம். இதுல யாரவது ஒரு கருணாவாவது எங்க பக்கம் இருந்திருந்தா, இப்படி ஓர் அவலம் வந்திருக்காது. இத பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க ?
( டி.ஆர்.வாலு,இந்த கேள்வியை எதிகொள்ள முடியாமல், டாக்ளஸுக்கு கண் ஜாடை காட்டுகிறார்... உணவு எடுத்துவரும் ஆர்மி வான் வருகிறது..உணவு வேளை)
டி.ஆர்.வாலு:உணவு வேளை முடிந்தவுடன், பேட்டி தொடரும்...
தொல்.குருமா: அண்ணே, அவங்ககிட்ட ஒரு வார்த்தயாவது பேசட்டுமா ?
டி.ஆர்.வாலு: ஒரு எழுத்து கூட பேச கூடாது...சிக்கன கடி..சிக்கன கடி..
(உணவு இடை வேளை முடிந்த பிறகு..)
டி.ஆர்.வாலு: ம்ம்..அப்புறம்..வேர எதாவது கேள்வி இருக்கா ?
மற்றொரு முகாம் நபர்:"அய்யா...என் பேரு வன்னியன். நான் உங்ககிட்ட ஐந்து கேள்வி கேக்கனும் ?
டி.ஆர்.வாலு: ம்ம்...கேளு
மற்றொரு முகாம் நபர்:
முதல் கேள்வி. 'சுத்தி இருக்கிற நாடுகள் நிம்மதி இல்லாம அவஙளுக்குளேயே அடிச்சிக்கிடு இருந்தா தான் நாம நல்லா இருக்க முடியும்' அப்டிங்றது இந்தியாவோட வெளியுறவு கொள்கை. நேபாளத்தில பிரிச்சு வைக்குறீங்க...அஸ்ஸாம்ல செத்து வைக்கிறீங்க. ஆனா, நாடே அழிஞ்சாலும், தமிழனுக்க்கென்று ஒரு நாடு இருக்க கூடாது'ன்னு சிங்களனுக்கு இப்படி கண்மூடித் தனமா ஆதரவு குடுக்குரீங்களே. அந்த மர்மம் என்ன ?
இரண்டாவது கேள்வி, ஒரு ராஜிவ் காந்தி உயிருக்காக இன்னும் எத்தனை தமிழர்களோட உயிரை எடுக்கப் போறீங்க ?
மூன்றாவது கேள்வி, நடந்ததுக்கு எல்லாம் இரண்டு கருணாக்கள் தான் காரணம். இதுல யாரவது ஒரு கருணாவாவது எங்க பக்கம் இருந்திருந்தா, இப்படி ஓர் அவலம் வந்திருக்காது. இத பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க ?
நான்காவது கேள்வி: என்னைக்கும் இல்லாம, இன்னைக்கு மட்டும் எப்படி உணவு வண்டி அரை மணி நேரம் சீக்கிரம் வந்தது ?
ஐந்தாவது கேள்வி: இதுக்கு முன்னாடி மூனு கேள்வி கேட்ட 'தமிழன்' எங்கே?
--
பழைய மொந்தையில் புதிய கள்ளை கொடுத்த
ம.பொன்ராஜ்

Mahinda_Indian_MP13909_4



திருமாவுக்கு ஒரு கடிதம் – வா.மணிகண்டன்



அன்பின் திருமா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக காங்கிரஸ் திமுக கூட்டணி தோற்றுவிடக் கூடாது என்று நினைக்க காரணம் இருந்தது. திமுகக் கூட்டணியில் திருமாவும், அதிமுக கூட்டணியில் வைகோவும் வெல்ல வேண்டும் என்று விரும்பியிருந்தேன். மற்றவர்களைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.

இலங்கைப் போரின் முடிவு பற்றியும் பெரிதாக எதிர்பார்ப்பில்லாத தருணம் அது. ஆயிரக்கணக்கில் தமிழர்கள் மடிவதும், இலட்சக்கணக்கில் தமிழர்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஓடிக் கொண்டிருப்பதுமான செய்திகள் ‘சில’ ஊடகங்களில் வந்து கொண்டிருந்த போது இந்தியா மெளனம் சாதித்துக் கொண்டிருந்தது. டெல்லியில் தமிழனுக்காக உரத்துக் குரல் கொடுக்க யாருமில்லாமல் வெறுமை சூழ்ந்திருந்தது. திருமாவும் வைகோவும் அந்த இடத்தை நிரப்புவார்கள் என்ற நம்பிக்கை துளிர்க்கத் துவங்கிய வேனிற்கால பருவம் அது.

விருப்பம் ஐம்பது சதவிகிதம் நிறைவேறியது. வென்றீர்கள், என்றாலும் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உலவிக் கொண்டிருந்தீர்கள். பெரிதாக வருத்தமடையவில்லை.

ஆனால் நேற்று ராஜபக்சேவுடன் குலாவிய என் இன நொண்டிச் சிங்கத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது அருவெருப்பாக இருந்தது. இது ராஜதந்திரம் என்று சொல்லி மழுப்பப்படும் என்று எங்களுக்குத் தெரியும் என்பதால் அவ்வாறு சொல்லி இன்னும் கொஞ்சம் அசிங்கப்பட வேண்டாம்.

நீங்கள்(குழு) எப்படி பேசினாலும் உங்களின் எந்த வேண்டுகோளும் இலங்கையில் நிறைவேற்றப்படவும் போவதில்லை; இலங்கைத் தமிழனின் வாழ்வும் மாறப்போவதில்லை என்பதை அங்கு செல்வதற்கு முன்பாகவே நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றாலும் புன்னகைத்துக் கொண்டு விமானம் ஏறினீர்கள். என்றாலும் நம்பிக்கையில்லா தமிழர்கள் வாழ்த்துக் கூற தயங்கவில்லை.

முகாம் சந்திப்புகளை முடித்துவிட்டு அதிபரை பார்க்கப் போகும் போது உங்கள் முன்னால் இரண்டு சாத்தியங்கள் இருந்தன. ஒன்று அதிபர் குழாமிடம் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு ஒரு சாமானியத் தமிழனின் கோபத்தையும் கண்டனத்தையும் குழுவில் இருந்த நீ ஒருவனவாவது காட்டியிருக்கலாம்.சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்தை சந்தித்தபோது உங்கள் வீரமும் தைரியமும் செருப்போடு சேர்த்து வெளியில் நின்றுவிட்டது போலிருக்கிறது. கூனிக் குறுகி, சிரித்து வழிந்து நீங்கள் அசிங்கப்பட்டதுமில்லாமல், மொத்த தமிழினத்தையும் கேவலப்படுத்தியிருக்கிறீர்கள்.

அல்லது அதிபரை எதிர்த்து உங்களால் பேச முடியாது என்ற பயம் உங்கள் தொடையை நடுங்கச் செய்திருக்கும் பட்சத்தில் அந்த அதிபர் சந்திப்பை புறக்கணித்து எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

இரண்டும் இல்லாமல் அதிபர் மாளிகையில் குலாவிக் கொண்டு திரும்பியிருக்கிறீர்கள். ராஜபக்ஷேவும் அந்த சகோதரன்களும் என்ன உங்களின் மச்சான் உறவா? அவர்கள் நீங்கள் “இறந்திருப்பீர்கள்” என்பார்கள், அதை நீங்கள் “ஜோக்”காக எடுத்துக் கொள்வீர்கள். எவ்வளவு அவமானகரமான நிகழ்வு இது.

இந்தியா வல்லரசு தேசம் என்ற கொடியேற்றுகிறீர்களே அந்த தேசத்தின் ஆளுங்கட்சி குழுவல்லவா நீங்கள். மிதித்தெறிய வேண்டியவனிடம் மண்டியிட்டு சரணாகதியடைந்த கொள்கை திருவிளக்காக நாடு திரும்பியிருக்கிறீர்கள்.

கொழும்பு செல்லும் நாடாளுமன்ற குழுவில் உங்களின் பெயரைப் பார்த்தவுடன் சரியான முடிவுக்கு வர முடியவில்லை. ராஜபக்ஷேவின் செயல்களை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களோடு செல்லும் உங்களால் என்ன செய்துவிட முடியும் குழப்பம் இருந்தாலும், வாழ்வில் உச்சபட்ச துன்பங்களை உணர்ந்துவரும் மக்கள் வாழும் முகாமுக்கு நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. குறைந்தபட்சம் நமக்காக குரல் கொடுப்பவனை பார்த்துவிட்ட சந்தோஷம் அவர்களுக்கு கிடைக்கலாம்.

அடுத்த நாள் அதிபர் மாளிகையில் அரங்கேறும் அசிங்கத்தை உணராமல் அவர்களும் அழுது புலம்பியிருக்கிறார்கள். வாழ்வின் அடிமட்ட கசப்போடு இலட்சக்கணக்கான மக்கள் கழிந்த பீ மூத்திரத்தின் நாற்றம் இலங்கைக்கே சென்றுமா உங்கள் நாசியில் ஏறவில்லை.

ஹிட்லர் கூட செய்யாத செயல்களைச் செய்பவன் இந்த ராஜபக்சே என்று மார்தட்டிய திருமாவை அவனது கால்களுக்கடியில் குலையும் நாய்குட்டியாக பார்கக் வேண்டி வரும் என்று நினைக்கவில்லை.

தேர்தலுக்கு முன்பாக நீங்கள் காங்கிரஸ் கட்சியை மென்று தின்று கொண்டிருந்தீர்கள். நீங்கள் கொள்கைப் பிடிப்புடையவர் என்ற நம்பிக்கை இருந்ததால் தீவுத்திடலில் சோனியாவுடன் மேடையேற மாட்டீர்கள் என்றிருந்தேன். ஏறினீர்கள். கர்ஜித்தீர்கள். தேர்தலில் வென்றாக வேண்டும், நாடாளுமன்றத்தில் குரல் உயர்ந்தாக வேண்டும் என்பதால் அது தற்காலிக உடன்படிக்கை என்று நானாக சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஆனால் சாதாரண மூன்றாம்தர அரசியல்வாதியின் பதவி ஆசை தவிர உங்களிடம் கொள்கைபிடிப்பு என்று எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் போது ஆயாசமாக இருக்கிறது. வெறும் பதவிக்காகத் தானே இத்தனை கும்பிடுகளும்.குறுகல்களும்

உங்களின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது. இன்று கூட இந்தக் கடிதத்தை பகிரங்கரங்கமாக பதிவு செய்து கொஞ்ச நாட்களாவது தமிழ் உணர்வோடு பேசிய உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் நான் நினைப்பதைத்தான் சாதாரணத் தமிழன் நினைத்துக் கொண்டிருப்பான். பதவியில் இருக்கும் உங்களால் அதை உணர முடியுமா என்று தெரியவில்லை. உங்களின் செயலை கண்டிப்பதற்கு இந்தக் கடிதம் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

ஆனால் ஒன்று, தமிழுக்காக உருவாகும் ஒவ்வொரு தலைவனும் அழிந்து வருகிறான். அல்லது அழிக்கப்படுகிறார்கள்.

யார் திட்டமிடுகிறார்கள்?

வருத்தத்துடன்,

– வா.மணிகண்டன்


ஐ.நா.வின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்தது?:- �ஆனந்த விகடன்� கேள்வி


ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்தது? என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார ஏடான �ஆனந்த விகடன்� கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக விகடன் குழுமத்தின் �ஆனந்த விகடன்� வார ஏட்டில் நிஜ �வில்�லன் யார்? எனும் தலைப்பில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரதமர் மன்மோகன்சிங்கும், ஆளும் காங்கிரசின் தலைவி சோனியா காந்தியும் தீமைக்கு எதிராக வில்லேந்தி நின்ற தசரா கொண்டாட்டக் காட்சி - தமிழனைப் பொறுத்தவரை- இந்த வருடத்தின் தலைசிறந்த அவல நகைச்சுவை!

தீமைகளின் உருவமாக இராவணனைச் சித்திரித்து, அவனைக் �கொடும்பாவி�யாக்கி அம்பு எய்து அருமையான நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் இந்தத் தலைவர்கள். அடுத்தவர் மனைவியைக் கவர்ந்து சென்றான் என்பதுதான் இதிகாச இராவணன் மீதான குற்றச்சாட்டு. மற்றபடி அவன் சுத்த வீரன், யுத்த தர்மத்தை ஒருபோதும் மீறாதவன்!

ஆனால், இன்றைக்கு இலங்கையை ஆள்வோர் மீது உலக சமுதாயம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஒன்றா, இரண்டா? �விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது� என்று ஒருபக்கம் மார் தட்டிக்கொண்டே, போர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இன்னமும் சித்ரவதைகளைத் தொடர்கிறார்கள்!

ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்குத் துணிச்சலை இவர்களுக்கு யார் தந்தது? ஒருபக்கம் முள்வேலி முகாம்களுக்குள் அப்பாவித் தமிழர்களை வதைத்துக்கொண்டே, மறுபக்கம் தன்னைப் புத்தராகவும் புனிதராகவும் காட்டிக்கொள்ள அங்கே இருப்பவர்கள் வேண்டுமானால் வெட்கம் கெட்டவர்களாக இருக்கலாம். �தப்பாக எதுவும் நடக்கவில்லை� என்று இந்திய அரசுமா வெட்கம்கெட்டு பக்கவாத்தியம் வாசிக்க வேண்டும்?

அமெரிக்காவோ, ஐ.நா. சபையோ இலங்கை அரசுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு, இந்திய அரசுதான் மறைமுகத் தடையாக இருக்கிறது என்று இதுநாள் வரை நிலவிவந்த குற்றச்சாட்டுகளை இப்போதாவது பொய்யாக்க வேண்டாமா?

இன்னலுற்ற தமிழர்கள் வாழ்வில் இனியாவது ஒளி தோன்ற வேண்டுமானால்� உருவகக் கொடும்பாவிகளை விட்டுவிடுங்கள்� உண்மைக் கொடும்பாவிகளை நோக்கி வீரத்தைக் காட்டுங்கள். ஆம், நிஜமாகவே உங்கள் வில்லும் அம்பும் திரும்ப வேண்டியது இலங்கையை நோக்கித்தான்! என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://seithy.com/breifArticle.php?newsID=19368&category=Article



இலங்கையை விட்டு தமிழர்கள் வெளியேறுவதை சிங்களவர்கள் ஆட்சேபிப்பதில்லை: இந்திய இணையத் தளம்


இலங்கையை விட்டு தமிழர்கள் வெளியேறுவதை சிங்களவர்கள் ஒருபோதும் ஆட்சேபிப்பதில்லை எனத் தெரிவித்துள்ளது இந்திய இணையத் தளமான ரெடிஃப் டொட் கொம். போர் முடிவடைந்த பின்னர் தமிழ்நாட்டை வந்தடைந்த ஈழத் தமிழ் அகதிகளைச் சந்தித்துப் பேசிய இணையத் தளத்தின் ஊடகவியலாளர் கணேஷ் நாடார் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் உள்ள தமது தமிழ் உறவுகளுக்கான ஆதரவைத் தெரிவிப்பதற்காக தமிழ்நாட்டின் தென்பகுதியான கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த கத்தோலிக்க மக்கள் 15 நாட்களுக்கு முன்னர் வீதிகளில் இறங்கிப் போராடி இருந்தார்கள்.

திருநெல்வேலி மாவட்டத் தலைநகரான நாகர்கோவிலில் எதிர்ப்பு ஊர்வலம் நடத்திய அவர்கள், பின்னர் ஒருநாள் உண்ணாநிலைப் போராட்டமும் நடத்தினார்கள்.

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்கு முன்பாக உண்ணாநிலைப் போராட்டக்காரர்கள் அமர்ந்திருந்தார்கள். புரட்டஸ்தாந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் இருவருமே போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்கள். அரசியல் கட்சிகளின் உள்ளூர் தலைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க அங்கு வந்து உரையாற்றிச் சென்றார்கள்.

ஒற்றுமையை வெளிப்படுத்தும் இந்த ஆதரவுப் போராட்டங்கள் நடந்தபோது தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

அந்த ஊர்வலத்திலோ அல்லது உண்ணாநிலைப் போராட்டத்திலோ அவர்கள் பங்குபற்றி இருக்கவில்லை. விசாரித்ததில், போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில் மூன்று நாட்களுக்கு முகாமைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்று மறைமுகத் தடை விதிக்கப்பட்டிருந்தது எனத் தெரியவந்தது.

�கியூ பிரிவுக் காவல்துறையினருக்கு சொல்லாமல் நாம் எங்கும் செல்ல முடியாது. அப்படி இருக்கையில் நாங்கள் ஊர்வலத்திற்குப் போகப் போகிறோம் என்று எம்மால் எப்படிச் சொல்ல முடியும்? நாங்கள் இங்கு மகிழ்வாக வேலை செய்கிறோம். நாங்கள் பிறந்த நாட்டில் எமக்கு கிடைக்காத சுதந்திரத்தை இங்கு அனுபவிக்கின்றோம்.

உண்ணாநிலைப் போராட்டம் அல்லது ஊர்வலத்தில் கலந்துகொள்வதன் மூலம் இடர்படுவதற்கு நாம் விரும்பவில்லை. அந்தப் போராட்டங்கள் எமக்கானவை என்பது தெரியும், அதை வரவேற்கின்றோம். ஆனால், நாங்கள் பங்கேற்கப் போவதில்லை� என்றார் நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர். கடந்த 21 வருடங்களாக அவர் இந்தியாவிலேயே வசிக்கிறார்.

செரி என்கிற இளம் பெண் கூறுகிறார், �உங்களுக்குத் தெரியுமா, தமிழ் இளம் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் சிங்களச் சிப்பாய்கள் கெட்ட வார்தைகளைப் பயன்படுத்துவார்கள். அதனால் தான் அகதிகள் இன்னும் வந்துகொண்டிருக்கிறார்கள். கடல் வழிகள் இப்போது பாதுகாப்பானவை இல்லை என்பதால், வானூர்தி மூலமாக வருகிறார்கள்� என்று.

�கடவுச்சீட்டும் பணமும் வைத்திருப்பவர்கள் இந்தியா வருவது எந்த வகையிலும் பிரச்சினையானது இல்லை.

அவர்கள் வசிக்கும் கிராமங்களில், கொழும்பில் இருக்கும் தமது உறவினர்களைப் பார்த்து வரப் போவதாக சிங்களப் படையினருக்கு அறிவிப்பார்கள். அவர்கள் கொழும்பை வந்தடைந்ததும் அங்கிருந்து உடனடியாக இந்தியாவிற்குப் புறப்பட்டு விடுவார்கள்.

தமிழர்களில் எவரும் இந்தியாவிற்குச் செல்வதை சிங்களவர்கள் எதிர்ப்பதில்லை. சொல்லப் போனால், இலங்கையில் இருந்து தமிழர்கள் எந்த வெளிநாடுகளுக்குச் செல்வதையும் அவர்கள் எதிர்ப்பதில்லை� என்று ரெடிஃப் டொட் கொம்மிற்குச் சொல்லப்பட்டது.

அப்படி வானூர்த்தி மூலம் இந்தியாவை வந்தடைபவர்களிடம், மண்டபம் அகதிகள் முகாமிற்குச் சென்று பதிவு செய்து கொள்ளுமாறு கூறப்படுகின்றது. பதிவு செய்த பின்னர் கியூ பிரிவு காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்துவர்.

அதன் பின்னர் அவர்கள் முகாமில் தங்கலாம். பண வசதி இருப்பின் வெளி இடங்களிலும் தங்கிக் கொள்ளலாம்.

இலங்கை வாழ்க்கை தொடர்பாக செரி கூறுகையில், �முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதாக சிறிலங்கா அரசு கூறுகின்றது. அது உண்மைதான். அவர்கள் அரிசி தருகிறார்கள். ஆனால் அது ஒருநாள் மதிய உணவிற்கு மட்டுமே போதுமானது� என்றார்.

முகாம்களுக்கு வெளியே தமிழர்களின் வாழ்க்கை சிறிலங்காப் படையினரால் கட்டுப்படுத்தப்படுகிறது. �தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது நிர்வாகம் என்பது எங்கும் கிடையாது. சிப்பாய்கள் இரு என்றால் இருக்க வேண்டும் நில் என்றால் நிற்க வேண்டும். புலிகளின் காலத்தில் இதைவிட நாங்கள் சிறப்பாகவே வாழ்ந்தோம். நாம் வேலை செய்வதற்கும் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதற்கும் அவர்கள் அனுமதித்தார்கள். எங்காவது போக வேண்டும் என்பதற்காக அவர்களிடம் இருந்து அனுமதிச் சீட்டுக்களைப் பெறவேண்டி இருக்கவில்லை. ஆனால், இன்று ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்குச் செல்லப் படையினரிடம் இருந்து அனுமதிச் சீட்டுப் பெற வேண்டி இருக்கின்றது. அது மட்டுமல்ல அங்கிருந்து நாம் எப்போது திரும்பி வருவோம் என்பதையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டி இருக்கின்றது� என்று ஈழத் தமிழ்கள் தெரிவிக்கிறார்கள்.

அங்குள்ள தமிழ் இளைஞர்கள் எப்போதும் வெள்ளை வான் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. விடுதலைப் புலிகளுடனான மோதல்களின்போது இந்த வெள்ளை வான்கள் பெருமளவில் நடமாடின. இலக்கத் தகடுகள் இல்லாமல் தோன்றும் அவை, இளம் ஆண்களையும் பெண்களையும் பிடித்துச் செல்லும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் மறைந்து விட்டாலும் வெள்ளை வான்கள் இன்னும் இருக்கின்றன.

�முகாம்களில் 3 லட்சம் தமிழர்கள் உள்ள நிலையிலும் வெள்ளை வான்கள் அங்கு நுழைவதில்லை� என்றார் வயதான நபர் ஒருவர். �எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர்களால் எவரையும் கடத்த முடியாது. அதனால் இளைஞர்கள் முகாம்களிலேயே தங்கி இருக்க வேண்டும். வெளியே அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை� என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு அந்தச் செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://seithy.com/breifArticle.php?newsID=19333&category=Article



குர்து மலையோரம் வீசும் இரத்த வாடை







துருக்கி, இஸ்தான்புல் நகரம். குர்து சிறுபான்மையின மக்கள் வாழும் புறநகர் பகுதி அன்று வழக்கத்திற்கு மாறாக பதற்றம் காணப்படுகின்றது. முக்கியமான சந்தியில் வேள்வித்தீ போல பெரு நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. நெருப்புக்கு அந்தப்பக்கம் விண்வெளிக்கு செல்பவர்களைப் போல கவச உடையணிந்த பொலிஸ்காரர்கள், தடுப்புச் சுவர் போல வீதியை மறித்துக் கொண்டு நிற்கின்றனர். நெருப்பிற்கு இந்தப் பக்கம், பதின்ம வயதிலான சாதாரண இளைஞர்கள். பொலிசாரை நோக்கி கற்களை வீசியெறிந்து விட்டு ஓடுகிறார்கள். பதிலுக்கு பொலிஸ் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுகின்றது. சாதாரண கடைத் தெரு அன்று யுத்தகளம் போல காணப்படுகின்றது. வியாபாரிகள் கடைகளை இழுத்து மூடிவிட்டு உள்ளுக்குள்ளே பதுங்கிக் கொள்கின்றனர். பொது மக்கள் பாதுகாப்புத் தேடி நாலாபுறமும் ஓடுகின்றனர்.

அங்கே என்ன நடக்கிறது? ஏதாவது அரசியல் ஆர்ப்பாட்டமா? இல்லை. அது ஒரு புதுவருடக் கொண்டாட்டம்! உலகிலேயே துருக்கியில் மட்டும் தான், புதுவருடப் பிறப்பு கலவரத்தை தூண்டும் அரசியல் தினமாக "கொண்டாடப்படுகின்றது". அந்த நாட்டில் மட்டும்தான், சிறுபான்மை குர்து இன மக்களின் "நெவ்ரோஸ்" என்ற தனித்துவமான புத்தாண்டு தினம் தடைசெய்யப்பட்டுள்ளது. மார்ச் 21 ம் திகதியளவில், குர்தியரைப் போல ஒருமித்த புராதன கலாச்சாரத்தை கொண்ட ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நெவ்ரோஸ் கொண்டாடப்படுகின்றது. (வட இந்தியாவில் அதையே "ஹோலி பண்டிகை" என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.) இருப்பினும் துருக்கி பேரினவாதமானது, சிறுபான்மை இனங்களின் எந்தவொரு கலாச்சார அடையாளத்தையும் சகித்துக் கொள்வதில்லை.

துருக்கி நாட்டில், துருக்கி மொழி பேசும் பெரும்பான்மை இனத்தை தவிர, ஆர்மேனியர்கள், குர்தியர், அரேபியர் ஆகிய சிறுபான்மை இனங்கள் (குறிப்பாக கிழக்கு பிரதேசங்களில்) காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். முதலாம் உலகப்போரின் முடிவில், பெருமளவு ஆர்மேனியர்கள் திட்டமிட்ட இனப்படுகொலை மூலம் விரட்டியடிக்கப்பட்டனர். தற்போது துருக்கியில் வாழும், எஞ்சிய சில லட்சம் ஆர்மேனியர்கள் கடந்தகால இனப்படுகொலை பற்றி பேசுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் உயிர்வாழ்தலின் அவசியத்திற்காக, பெரும்பான்மை சமூகத்துக்குள் அடங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தம். அரேபிய சிறுபான்மையினர் வாழும் பிரதேசம், முன்பு சிரியாவின் ஒரு பகுதியாக இருந்தது. பிரெஞ்சு காலனிய அரசால் துருக்கிக்கு தாரை வார்க்கப்பட்டது.

குர்து மக்களின் வாழ்விடம் ஒரு மலைப்பிரதேசமாகும். பொருளாதார ஆதாயமற்ற மலைகள் மீது, எந்தவொரு ஆட்சியாளருக்கும் அதிக அக்கறை இருக்கவில்லை. இதனால் ஓட்டோமான் இஸ்லாமிய அரசு காலத்திலும், குர்து நிலப்பிரபுக்களினால் ஓரளவு சுயாதீனமாக நிர்வகிக்கப்பட்டு வந்தது. முதலாம் உலகப்போர் முடிவில், ஈராக்கை கைப்பற்றிய பிரிட்டிஷார், குர்து இன மக்களின் பிரதேசம் வரை தமது காலனிய ஆட்சிக்கு உட்படுத்தினர். மத்திய கிழக்கில் தேசிய அரசுகளை உருவாக்குவதில் ஈடுபட்ட பிரிட்டிஷ் காலனியவாதிகள், குர்து இனத்தவருக்கு தனியான தேசத்தை தருவதாக உறுதிமொழி கொடுத்தனர். இருப்பினும் கண்ணியமற்ற பிரிட்டிஷ் அதிகாரிகள், உறுதிமொழிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டனர். குர்து மக்களின் தாயகத்தை ஈராக்கிற்கும், துருக்கிக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டு, லண்டன் சென்று ஓய்வெடுத்தனர்.

கமால் அட்டாதுர்க் தலைமையிலான துருக்கி அரசாங்கம், துருக்கி முழுவதும் பாசிச ஆளுமைக்கு உட்படுத்தியது. சிறுபான்மை இனங்கள் கடுமையாக அடக்கப்பட்டன. உத்தியோகபூர்வ மொழியான துருக்கி மொழி மட்டுமே பாடசாலைகளில் போதிக்கப்பட்டது. குர்து மொழியை வீட்டில், வீதியில் பேசுவது கூட தடை செய்யப்பட்டது. குர்தியருக்கே தனித்துவமான பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டமுடியாது. குர்து மொழிக்கே உரிய பிரத்தியேக உச்சரிப்புகளைக் கொண்ட பெயர்களை யாரும் வைத்திருக்க முடியாது. அவை துருக்கிமயப்படுத்த வேண்டும். இந்த அடக்குமுறையின் விளைவாக, தற்போது மறுமலர்ச்சி கண்டுள்ள குர்து மொழி, துருக்கி உச்சரிப்புக்கேற்ப எழுதப்படுகின்றது.

தமிழகத்திலோ, அல்லது இலங்கையிலோ நடந்ததைப் போல, குர்து மொழி உரிமைப் போராட்டம் அப்போது வெடிக்காததற்கு காரணங்கள் உள்ளன. குர்தியர்களில் ஒரு நடுத்தர வர்க்கம் உருவாக நீண்டகாலம் எடுத்தது. பெரும்பாலான குர்து இன மக்கள் உழைக்கும் வர்க்கமாக, ஊரில் உள்ள நிலப்பிரபுவிற்கு கட்டுப்பட்ட பண்ணையடிமைகளாக இருந்தனர். தற்போதும் அந்த நிலைமையில் சிறிதளவே மாற்றம் ஏற்பட்டுள்ளது. குர்து நிலப்பிரபுத்துவ சக்திகள், இன்றுவரை தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க மறுத்து வருகின்றன. நிலப்பிரபுக்கள் தமது வர்க்க குணாம்சம் காரணமாக, இஸ்லாமிய (பெரும்பான்மை குர்தியர்கள் இஸ்லாமியர்கள்) அடிப்படைவாத அரசியலுக்கு ஆதரவளிப்பவர்கள். துருக்கி அரசு இந்த முரண்பாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றது.

எழுபதுகளின் இறுதியில், துருக்கியின் தலைநகர் அங்காராவில், சில படித்த குர்து இளைஞர்கள் இரகசியமாக ஒன்றுகூடினார்கள். வசீகரத் தோற்றம் கொண்ட "அப்துல்லா ஒச்சலான்" என்ற இளைஞர் அந்தக் குழுவிற்கு தலைமை தாங்கினார். குர்து மக்களின் எல்லாவித ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில், ஆயுதப்போராட்டமே ஒரே தீர்வு என முடிவு செய்தனர். பனிப்போர் நிலவிய காலத்தில், மத்திய கிழக்கின் கம்யூனிஸ்ட் சக்திகளுடனான தந்திரோபாயக் கூட்டு, தமது தேசிய விடுதலையை பெற்றுத் தரும் என நம்பினர். தமது இரகசிய தலைமறைவு இயக்கத்திற்கு "குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி" (Partiya Karkerên Kurdistan) சுருக்கமாக "பி.கே.கே" என்ற பெயரிட்டனர். குர்த்தியரின் பிராந்திய தலைநகரான டியார்பாகிரில் 1978 ம் ஆண்டளவில், இயக்கம் ஸ்தாபிக்கப் பட்டது. மத்திய குழு ஒன்றைக் கூட்டி, மார்க்சிச லெனினிச சிந்தாந்தப்படி கட்சியைக் கட்டுவது என முடிவெடுத்தனர். பி.கே.கே. எடுத்த எடுப்பில் கம்யூனிசம் பேசியதற்கு, சமூக ஆதிக்க சக்திகளான நிலப்பிரபுக்களை எதிர்த்துப் போராட வேண்டி இருந்தும் ஒரு காரணம்.

1984 ம் ஆண்டளவில், சர்வதேச சூழ்நிலையும் குர்து ஆயுதப்போராட்டத்திற்கு சாதகமாகவே அமைந்திருந்தது. பனிப்போர், சோவியத் யூனியன் எல்லாம் நிலைத்திருந்த காலம் அது. துருக்கியின் அயல்நாடான சிரியா, மத்திய கிழக்கில் சோவியத் யூனியனின் மனங்கவர்ந்த நண்பனாக இருந்த காலமது. இன்று "பயங்கரவாதிகள் பட்டியலில்" உள்ள அரைவாசி இயக்கங்களுடன், சிரிய அரசுக்கு அன்று தொடர்பு இருந்தது. தேசிய விடுதலை இயக்கங்களை ஆதரிப்பது, ஏகாதிபத்திய எதிர்ப்பு போரின் தந்திரோபாயம், என்ற கொள்கையை பின்பற்றிய சோவியத் யூனியன், சிரியா ஊடாக இயக்கங்களுக்கு ஆயுத விநியோகம் இடம்பெற்றது. ஒரு வல்லரசின் பக்க பலம் காரணமாக இஸ்ரேல் உட்பட எந்த ஒரு நாடும், சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்க அஞ்சியது.

அத்தகைய சர்வதேச பின்புலத்தை பி.கே.கே. கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டது. சிரியாவின் ஒத்துழைப்புடன் துருக்கி எல்லையோரமாக போராளிகளின் பயிற்சி முகாம்களை நிறுவியது. ஒச்சலான் போன்ற தலைவர்கள், தலைநகர் டமாஸ்கஸ்ஸில் தங்கி, பாலஸ்தீன விடுதலை அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதன் மூலம் இராணுவ பயிற்சிகள், ஆயுதங்கள் என்பனவற்றை பெறக்கூடியதாகவிருந்தது. (பிற்காலத்தில், பி.கே.கே. புலம்பெயர்ந்த குர்து மக்களின் உதவியுடன் நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, தனக்கென ஆயுதக் கடத்தலுக்கான வலைப்பின்னல் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டது.) சிரியாவை பின்தளமாக பயன்படுத்திய பி.கே.கே., தனது போராளிகளை துருக்கியினுள் அனுப்பி கெரில்லா நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது.

ஆரம்பத்தில் துருக்கிப்படைகள் கெரில்லாக்களின் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் நிலைகுலைந்தது. மலைப்பிரதேசம், மறைந்து கொள்வதற்கேற்ற குகைகள், கரடுமுரடான தரையமைப்பு, போன்றன கெரில்லாப் போருக்கு அனுகூலமாக இருந்தது. ஒரு கட்டத்தில், முன்னேறிக் கொண்டிருந்த பி.கே.கே. கெரில்லாப் படையணிகள், சில மலைப்பிரதேச கிராமங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். கெரில்லாப் போராட்டம் உத்வேகத்துடன் முன்னெடுக்கப் படுகையில், குர்து மக்கள் துருக்கி அடக்குமுறையாளருக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள். அதன் பிறகு சுதந்திர குர்திஸ்தான் மலரும் என்று கணக்குப் போட்டனர். ஆனால் அது ஒரு தப்புக்கணக்கு என்று விரைவில் தெரியவந்தது.

துருக்கி அரச படைகள், குர்து நிலப்பிரபுக்களின் உதவியுடன் ஊர்காவல் படைகளை அமைத்தனர். ஊர்காவல் படையில் குர்து சமூகத்தில் இருந்து பலவந்தமாக சேர்க்கப்பட்ட இளைஞர்களும் இருந்தனர். பி.கே.கே. அரசபடைகள் மட்டுமல்லாது, ஊர்காவல்படையும் தனது எதிரி எனப் பிரகடனப்படுத்தியதுடன், குறி வைத்து தாக்கியும் வந்தது. இதனால் கொல்லப்பட்ட ஊர்காவல்படைவீரரின் குடும்பத்தினரையும் பி.கே.கே. பகைத்துக்கொண்டது. குர்து இனத்தில் ஒரு பிரிவினரை போராளிகளுக்கு எதிராக திசை திருப்பி விடும் தந்திரத்தில் துருக்கிய அரசு ஓரளவு வெற்றி பெற்றது. மேலும் துருக்கியில் கட்டாய இராணுவ சேவை அமுலில் உள்ளது. தேசியக் கடமையான இராணுவப் பயிற்சிக்கு செல்லும் 18 வயதிற்கு மேற்பட்ட குர்து இளைஞர்கள், பின்னர் போர் நடக்கும் இடங்களில் கொண்டு போய் விடப்பட்டனர். சில நேரம் சொந்த சகோதரர்களில் ஒருவர் துருக்கி இராணுவவீரனாகவும், மற்றொருவர் பி.கே.கே. போராளியாகவும், எதிரெதிரே நின்று சண்டையிடும் காட்சியை ஒரு கணம் கண் முன்னே கொண்டு வாருங்கள். அப்படிப்பட்ட அவலம் குர்து மக்களின் தவிர்க்கவியலாத தலைவிதி. இரக்கமற்ற போரில் அதிகமாக பலியானது, குர்து இனத்தவர்கள் தாம். "மலைகளுக்கு மட்டுமே தெரியும் எங்கள் கவலை" என்று குர்து மக்கள் மனங்குமுறுவது வெளியுலகிற்கு கேட்கப் போவதில்லை.


துருக்கி அரச படைகளின் பேரினவாத வெறி, குர்து மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு வழி திறந்து விட்டது. ஆயிரக்கணக்கான குர்து வாலிபர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல்போனார்கள். காணாமல் போன மகனை தேடும் பெற்றோர் இராணுவ முகாம் அதிகாரியை தொடர்பு கொள்வார்கள். அப்போது அந்த அதிகாரி: "உங்கள் மகன் எம்மிடம் இல்லை. ஒரு வேளை உங்கள் மகன் பி.கே.கே. யுடன் சேர்ந்திருப்பான்." என்று கூசாமல் பொய் சொல்வார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட இளைஞன், சித்திரவதை செய்யப்பட்டு, எங்காவது ஒரு புதைகுழியில் கொன்று புதைக்கப்பட்டிருப்பான். குர்திஸ்தான் முழுவதும் இது போன்று ஏராளமான புதைகுழிகளுக்குள் ஆயிரக்கணக்கான காணாமல்போன இளைஞர்களின் சடலங்கள் கிடக்கின்றன. துருக்கி பேரினவாதத்தின் இரத்த சாட்சியங்களான அவற்றை தோண்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க, இதுவரை எந்தவொரு சர்வதேச சமூகமும் முன்வரவில்லை.

துருக்கியின் இடதுசாரி மனித உரிமைகள் நிறுவனம் ஒன்று டியார்பாகிர் நகரில் காணாமல் போனவர்களின் வேதனைகளைப் பகிர்ந்து ஆவணப்படுத்தும் மகாநாடு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. அந்த மகாநாட்டிற்கு சென்ற சர்வதேச பிரதிநிதிகளில் நானும் ஒருவன். இஸ்தான்புல்லில் இருந்து நாம் சென்ற பேரூந்து வண்டி, குர்திஸ்தான் எல்லையை அடைந்தவுடன், நாம் ஒரு யுத்த பிரதேசத்திற்குள் பிரவேசிக்கிறோம் என புரிந்து கொண்டோம். வீதித்தடை காவலரணில் கடமையில் இருந்த துருக்கிய படையினர் வண்டியை சோதனையிட்டனர். பயணிகளின் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து விட்டு தான் மேற்கொண்டு செல்ல அனுமதித்தனர். டியார்பாகிர் நகரை அடையும் வரையில் இது போன்ற வீதித் தடை சோதனைகள் தொடர்ந்தன. நாம் செல்லும் வழியெங்கும் இராணுவ வீரர்களின் பிரசன்னம் இருந்தது. தாங்கிகள், கவச வாகனங்களைக் கொண்ட படையணிகள் ஊர்ந்து கொண்டிருந்தன. தப்பித்தவறி இராணுவ தொடரணியை படமெடுக்க வேண்டாம் என்று, எம்மோடு வண்டியில் இருந்த துருக்கி நண்பர்கள் எச்சரித்தனர்.

துருக்கியின் பிற பகுதிகளில் இருந்து, குர்திஸ்தான் முற்றிலும் மாறுபாடான தோற்றத்தைக் கொண்டிருந்தது. துருக்கியின் சன நெருக்கடி மிக்க சிறு நகரங்கள், கிராமங்கள், தொழிற்சாலைகள் போன்றன சில மைல் தூர இடைவெளியில் காணப்பட்டன. குர்திஸ்தானில் அதற்குப் பதிலாக எங்கு பார்த்தாலும் மலைகளை மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. மனிதர்களே வசிக்காத சூனியப் பிரதேசத்திற்குள் வந்து விட்டதைப் போல தோன்றியது. பஸ் வண்டியில் இருந்த அனைவர் முகத்திலும் இனந்தெரியாத அச்சம் காணப்பட்டது. அவர்களது அச்சம் நியாயமானதே. பயங்கரவாத அழிப்பு என்ற போர்வையில், துருக்கிய படைகள் பல குர்து கிராமங்களை நிர்மூலமாக்கி விட்டிருந்தன. வரைபடத்தில் குறிக்கப்பட்டிருக்கும் கிராமங்கள் பல சுடுகாடாக காணப்படுகின்றன. அங்கே வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு என்ன நடந்தது? ஆரம்ப கட்ட இராணுவ நடவடிக்கைகளில் ஏராளமானோர் கொல்லப்பட்டு விட்டனர். மிகுதிப்பேர் பலவந்தமாக தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர். இடம்பெயர்ந்த குர்து மக்கள், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் துருக்கியின் மேற்குக் கரையில் குடியேற்றப்பட்டனர்.

துருக்கி பேரினவாத அரசு, குர்து மக்களின் கட்டாய இடப்பெயர்வை இரண்டு நோக்கங்களுக்காக நெறிப்படுத்தியது. ஒன்று, மக்கள் என்ற தண்ணீரை பிரித்தெடுத்து, கெரில்லாக்கள் என்ற மீன்களை இறக்க விடுதல். இரண்டு, குர்து மக்களின் தாயகக் கோட்பாட்டை நடைமுறைச் சாத்தியமற்றதாக்குதல். முதலாவது நோக்கம் பெருமளவு நிறைவேறவில்லை. முப்பது வருடங்களாக இடையூறின்றி தொடரும் கெரில்லாப்போர் அதற்கு சாட்சி. இருப்பினும் குர்து மக்களின் தாயகக் கோட்பாட்டை சிதைப்பதில் துருக்கி ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. மேற்குக்கரை நகரங்களில் பகைமை கொண்ட துருக்கிய சமூகத்தின் மத்தியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட குர்து மக்கள், ஆயிரம் மைல் கடந்து தாயக பூமியை அடைவதென்பது இயலாத காரியம். அடிமட்ட உழைப்பாளர் வர்க்கமான இவர்களிடம், ஊருக்கு ஒரு முறை சென்று வருவதற்கு கூட பணம் இருக்காது. இந்தப் பிரிவினரில் இரண்டாவது தலைமுறை, குர்திஸ்தான் எப்படி இருக்கும் என்பது கூட தெரியாமல் வளர்ந்து வருகின்றது.

குர்திஸ்தான் எல்லைப் பகுதிகளில் துருக்கி மக்களை குடியேற்றுவதும் நடைபெற்று வருகின்றது. பி.கே.கே. தனது தாயகமான குர்திஸ்தான் என்று உரிமை கோரும் பகுதிகள் சில இன்று துருக்கிமயப்பட்டு விட்டன. "குர்திஸ்தான் தலைநகரம்" என அழைக்கப்படும் டியார்பாகிர் நகரவாசிகளில் அரைவாசிப்பேர் துருக்கியர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் துருக்கி இராணுவத்தில் பணி புரிபவர்களும், அவர்களது குடும்பத்தினருமாகும். மற்றவர்கள் வியாபாரிகள். குர்திஸ்தான் பகுதியில் டியார்பாகிர் மட்டுமே ஒரு நகரத்திற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. அதற்கு அப்பால் அபிவிருத்தியடைந்த பகுதி ஒன்றை காண்பது அரிது. துருக்கி பேரினவாத அரசு, குர்து சிறுபான்மையினர் பிரதேசத்தை வேண்டுமென்றே புறக்கணித்து வந்துள்ளது. தற்போது, ஐரோப்பிய யூனியனின் நெருக்குவாரத்தால் அபிவிருத்திப் பணியை மேற்கொண்டு பயங்கரவாதத்தை ஒழிக்க முயற்சிக்கின்றது.

துருக்கி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தில் அமைந்திருப்பதால், வட அட்லான்டிக் இராணுவ கூட்டமைப்பில் (நேட்டோ) அங்கத்துவம் பெற்றுள்ளது. நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்காவும், ஜெர்மனியும் துருக்கிக்கு இராணுவ உதவி வழங்கி வருகின்றன. துருக்கி இராணுவ அதிகாரிகள் பலர் ஜெர்மனியில் பயிற்சி பெற்றவர்கள். டியார்பாகிர் நகரில் நான் கலந்து கொண்ட மகாநாட்டு மண்டபத்தில், சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இனங்காணப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்த அதிகாரிக்கும், மகாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மன் வழக்கறிஞர் ஒருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரளமாக ஜெர்மன் மொழியிலேயே பேசிய அந்த பொலிஸ் அதிகாரி, "தான் ஜெர்மனியில் ஒரு வருட பயிற்சி பெற்றதாகவும், தனக்கு சட்டம் பற்றி பாடம் எடுக்க வேண்டாமென்றும், ஜெர்மன் பொலிஸ் கூட இப்படித்தான் நடந்து கொள்வார்கள்" என்றும் பதிலளித்தார். மனித உரிமைகள் பற்றி உபதேசம் செய்த ஜெர்மன் வழக்கறிஞரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று வைத்திருந்து தான் விட்டார்கள். மீண்டும் துருக்கிக்கு திரும்பி வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நடவடிக்கை குறித்து ஜெர்மன் அரசு ஆட்சேபிக்காது என்பதும் அவர்களுக்கு தெரியும். ஜெர்மன் அரசு, தனது பிரஜை என்றாலும் "பயங்கரவாத அனுதாபிகள்" விஷயத்தில் அக்கறைப்படுவதில்லை.

துருக்கியில் ஒரு பாராளுமன்றமும், அதில் ஜனநாயகத் தேர்தல்கல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர். தடைசெய்யப்பட்ட பி.கே.கே. யின் ஆதரவைப் பெற்ற, அல்லது அவர்களாலே தோற்றுவிக்கப்பட்ட, குர்து தேசியவாத அரசியல் கட்சி ஒன்று உள்ளது. பெரும்பான்மை குர்து மக்களின் வாக்குகளைப் பெற்று, குர்திஸ்தான் பிராந்தியக் கட்சியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றது. கவனிக்கவும், துருக்கியில் எந்தவொரு கட்சியும் குறிப்பிட்ட இனத்தின் பெயரைக் கொண்டிருக்க முடியாது. அதனால் "ஜனநாயகக்கட்சி" என்று தான் தேர்தலில் போட்டியிட்டார்கள். ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குர்து மொழியில் சத்தியப்பிரமாணம் எடுத்ததற்காக சிறையிலடைக்கப்பட்டார். துருக்கி அரசு பி.கே.கே. மீதான இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நேரங்களில், அந்த அரசியல் கட்சியும் நீதிமன்றத்தால் (பிரிவினைவாத குற்றச் சாட்டில்) தடை செய்யப்படும். பின்னர் அந்தக் கட்சியினர் வேறொரு புதிய பெயரில் நிறுவனமயப்படுவார்கள். எந்தப் பெயரில் தோன்றினாலும், அந்தக் கட்சி பி.கே.கே. ஆதரவாளர்களினுடையது என்று துருக்கி அரசுக்கு நன்றாகவே தெரியும். இதனால் சில சமயம் குர்து கட்சி தலைவர்கள், பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக பகிரங்கமாக அறிவிக்கவேண்டிய நெருக்கடி ஏற்படுகின்றது. குர்து தேசியவாதக் கட்சியில் மட்டுமல்லாது, வேறு பல இடதுசாரிக் கட்சிகளிலும் குர்து இனத்தவர் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. குர்திய மக்கள் அனைவரும் குர்து தேசியவாதிகள் இல்லை.

துருக்கியில் போரை நடத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கிடையாது. அங்கே இராணுவம் மாபெரும் பாசிச நிறுவனமாக வளர்ந்துள்ளது. அட்டதுர்க் ஸ்தாபித்த துருக்கி தேசியத்தை பாதுகாப்பதை லட்சியமாகக் கொண்டுள்ள இராணுவம், மாற்று அரசியல் சக்திகள் அதிகாரம் செலுத்த நினைத்தால், சதிப்புரட்சிக்கும் தயங்காது. இதனால் துருக்கியின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக இருந்த போதிலும், அங்கே இஸ்லாமிய மத அடிப்படைவாதத்திற்கும் இடமில்லை. அத்தகைய நிலையில், குர்திஸ்தான் போர்கள் யாவும் பாராளுமன்ற ஒப்புதல் இன்றி இராணுவ தலைமைப் பீடமே முன்னெடுத்து வருகின்றது. அந் நாட்டில் பேரினவாதிகளின் செல்வாக்கின் கீழ் உள்ள வலதுசாரி வெகுஜன ஊடகங்களும் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வருகின்றன.

துருக்கி/குர்து பிரச்சினை தற்போது புலம்பெயர் நாடுகளிலும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஜெர்மனி, நெதர்லாந்து,சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான துருக்கியரும், கணிசமான அளவு குர்த்தியரும் வசிக்கின்றனர். துருக்கியர்கள் அனேகமாக ஒப்பந்தக் கூலிகளாக வந்து குடியேறியவர்கள். அதற்குமாறாக குர்தியர்கள் போர் தொடங்கிய பின் பெருமளவில் அகதிகளாக வந்தவர்கள். துருக்கிய சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் பேரினவாத ஆதரவாளர்கள். அதற்கு மாறாக குர்திய அகதிகள் மத்தியில் பி.கே.கேயின் செல்வாக்கு அதிகம். புலம்பெயர்ந்த நாடுகளில் பி.கே.கே. பிரமுகர்கள், கட்டாய நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாக ஆங்காங்கே குற்றச் சாட்டுகள் எழுகின்றன. புகலிடத்தில் முரண்பட்ட இரண்டு சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று சேர்வதில்லை. சில சமூக நிகழ்வுகளில் கைகலப்பு ஏற்படுவதுண்டு.

ஒரு முறை எமது தொழிற்கல்வி நிலையத்தில் புதிதாக சேர்ந்த ஒரு மாணவன் தன்னை துருக்கி- குர்து இனத்தை சேர்ந்தவராக அறிமுகப்படுத்தினார். உடனே அங்கிருந்த துருக்கி மாணவனுக்கு கோபம் வந்து விட்டது. "துருக்கியில் குர்து இனம் என்று ஒன்று இல்லை. மலை வாழ் துருக்கியர் மட்டுமே உள்ளனர்" என்று சத்தம் போட்டார். அந்த மாணவர் மட்டுமல்ல, பெரும்பாலான துருக்கியின மக்கள் அரச பரப்புரைகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். முற்றிலும் மாறுபட்ட குர்து மொழி பேசும் மக்களை, "மலை வாழ் துருக்கியர்" என்ற அரசு சொல்லிக் கொடுத்த பாலபாடம் துருக்கியர் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது. அதை விட, துருக்கி மக்கள் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள், என்ற சுய பச்சாதாப கலாச்சாரமும் வேரூன்றியுள்ளது. குர்து மக்களின் துயரங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத அளவிற்கு, இனவாதம் மேலோங்கியுள்ளது. பி.கே.கே. தலைவர் ஒச்சலான் கைது செய்யப்பட்ட போது, "இரத்த வெறி பிடித்த கொலைகாரனை தூக்கிலிடுமாறு" ஆயிரக்கணக்கான துருக்கி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். போரில் கொல்லப்பட்ட இராணுவவீரர்களின் படங்களை ஏந்திய தாய்மார் கண்ணீர் வடிக்கும் காட்சியை, தொலைக்காட்சிகள் மனதை உருக்கும் வண்ணம் ஒளிபரப்பின.

பி.கே.கே. தலைவர் ஒச்சலான் கைது செய்யப்பட்ட பின்னர், எஞ்சிய போராளிகள் வட ஈராக்கில் தளமமைத்துக் கொண்டனர். ஈராக் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத சுயாட்சிப் பிரதேசமான, குர்த்தியரின் வட ஈராக் பகுதி, பி.கே.கே. பாதுகாப்பாக பதுங்கியிருக்க ஏதுவான பின் தளமாகும். நீண்ட கால போர் நிறுத்த இடைவேளையின் பின்னர், பி.கே.கே. போராளிகளின் திடீர் தாக்குதலால், இருபதுக்கும் குறையாத இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். துருக்கி மக்கள் மத்தியில் அந்த தாக்குதல் சம்பவம் மீண்டும் தேசிய வெறியை தூண்டிவிட்டது. கொல்லப்பட்டவர்கள் கடமையிலீடுபட்ட இராணுவத்தினரே ஆனாலும், அப்பாவி மக்கள் பலியானது போல ஆவேசப்பட்டார்கள். "துருக்கி இராணுவம் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்" என்று கோஷமிட்டவாறு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். துருக்கியின் நகரங்களில் மட்டுமல்ல, மேலைத்தேய நகரங்களிலும் "துருக்கி அரசை தற்காப்பு இராணுவ நடவடிக்கை" எடுக்கக் கோரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இவற்றை துருக்கி அரசு ஒழுங்கு செய்திருக்கலாம் என்பதில் ஐயமில்லை.

ஈராக் இறைமையுள்ள இன்னொரு நாடு என்ற விஷயம் எல்லாம் துருக்கி இராணுவத்திற்கு ஒரு பொருட்டே அல்ல. பி.கே.கே. மறைவிடங்கள் மீது விமானப்படை குண்டு மழை பொழிய, தரைப்படை முன்னேறியது. ஈராக் நிலப்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, பி.கே.கே. முகாம்களை அழித்தொழிக்க எண்ணியது. தனது நாட்டின் இறைமை குறித்து கவலைப்பட்ட ஈராக் அரசு, அமெரிக்க நண்பனிடம் முறையிட்டது. அமெரிக்க அரசு துருக்கி மீது எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்காது, இராணுவ நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியது. ஏனெனில் அமெரிக்க அரசு ஏற்கனவே பி.கே.கே. யை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்திருந்தது. அவர்களைப் பொறுத்தவரை இதுவும் பயங்கரவாதத்திற்கு எதிரான பதிலிப் போர் தான்.


http://www.appaa.com/index.php?option=com_content&view=article&id=223:2009-09-20-06-05-18&catid=23:2009-08-17-21-11-02



விடுதலைப் புலிகளின் கட்டமைப்பையும் ஒழுக்கத்தையும் பாராட்டாத உலக நாடுகளே இல்லை!!!

http://www.envazhi.com/wp-content/uploads/2009/05/tamil-tigers-460_981150c.jpg
நாங்கள் எதிர்பார்த்தது போலவே, நாங்கள் எதிர்வு கூறியதைப் போலவே சிங்கள தேசத்தின் புலம்பெயர் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்திலும் வேகமாக, கொடூரமாகத் தீவிரமாகி வருகின்றது.

முள்ளிவாய்க்காலில் வீழ்த்தப்பட்டது மனித உயிர்கள். இங்கே வீழ்த்தப்படுவது மனித மனங்கள். புலம்பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைக்கும் முயற்சிகள் யுத்தம் முடிவுக்கு வந்த சில வாரங்களிலேயே ஆரம்பமாகிவிட்டது என்றாலும், தற்போது அதன் வேகம் அச்சம் கொள்ளத்தக்க வகையில் அதிகரித்துச் செல்கிறது.

விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் சிதைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு, எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டு விட்டனர்.

தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்குதல் போன்ற அரச பயங்கரவாதத்தால் முகாம்களுக்கு வெளியே வாழும் மக்கள் அச்சுறுத்தப்பட்டு அடக்கப்பட்டு விட்டார்கள்.

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அதிகம் அசைவியக்கமற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் இருப்புக்கான அளவைத் தாண்டி நகரப் போவதில்லை. நகரவும் அனுமதிக்கப்படப் போவதில்லை. தங்களது இயலாமையை இந்திய சார்பாக மாற்றித் தற்காத்துக் கொள்ளும் நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.

இப்போது, ஈழத் தமிழர்களுக்கு எஞ்சியுள்ள பலம் புலம்பெயர் தமிழீழ மக்களே. யுத்தத்தின் இறுதி நாட்களில் புலம்பெயர் தேசங்கள் எல்லாம் புலிக்கொடி ஏந்திய தமிழீழ மக்களின் போராட்டங்கள் மேற்குலகின் இலங்கை குறித்த கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

சிங்கள தேசத்தால் தொட்டுவிட, நெருங்க முடியாத தூரத்தில் பாதுகாப்பான நிலையில் இருந்து கொண்டு புலம்பெயர் தமிழர்கள் சிங்கள தேசத்திற்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டங்களை நிகழ்த்தியவாறே உள்ளனர். இது சிங்கள தேசத்திற்குப் பாரிய நெருக்குதல்களைக் கொடுத்து வருகின்றன.

அதை விடவும், புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்களால் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் நடவடிக்கைகள் சிங்கள தேசத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளது.

நாடு கடந்த தமழீழ அரசும், உலகத் தமிழர் பேரவையும் அடித்துக்கொண்டு எதிர்த் துருவங்களாக நகரும் என்ற சிங்கள எதிர்பார்ப்பும் தவறாகிவிட்டது. ஆரம்ப கால சலசலப்புக்களைத் தாண்டி இந்த இரு அமைப்புக்களும் சிங்கள அரசை நிலைகுலைய வைக்கும் இரு ஏவுகணைகளாக, ஒரே திசை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றன.

தற்போதைய நிலையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவுகளையும் பரஸ்பர நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தும் முயற்சியில் சிங்கள தேசம் முழு மூச்சாக இறங்கியுள்ளது. சிங்களத்தின் தமிழ்த் தேசியச் சிதைவுக்கான சதிகளுக்காக புலம்பெயர் தேசங்களில் ஒட்டுக் குழுக்களை ஒத்த சில தமிழர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

அண்மைக் காலத்தில் இலங்கையிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர், விடுதலைப் புலிகள் புலிகளுடன் இருந்து நிறம் மாறிய சில கருணாக்கள், சில வரலாற்றுப் பிழையானவர்கள் எனத் தெரிவு செய்யப்பட்ட சிலர் புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

அண்மையில் பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விவாதம் ஒன்றும் இதன் பின்னணியிலேயே நிகழ்த்தப்பட்டது. ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுக்களுடன் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அவர்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியத்திற்காகப் பணி புரிவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டதே அன்றி வேறொன்றும் இல்லை.

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஏராளமான சொத்துக்கள் இருப்பதாகவும், அவற்றைத் தனி நபர்கள் அபகரிப்பதாகவும் நடாத்தப்பட்ட வானொலி விவாதம் அவர்களது அறியாமையின் உச்சத்தையும், துரோகத்தின் வீரியத்தையும் மட்டுமே தமிழர்களுக்கு உணர்த்துவதாக உள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு நிர்வாக ரீதியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்களைக் கொண்டது. விடுதலைப் புலிகளின் இந்தக் கட்டமைப்பையும் ஒழுக்கத்தையும் பாராட்டாத உலக நாடுகளே இல்லை என்று சொல்லலாம்.

சிங்கள தேசத்தில் கூட அவ்வப்போது விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புக் குறித்து அங்கலாய்ப்பது வழக்கம். புலம் பெயர் தேசங்களிலும் இந்த ஒழுக்கம் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததை அனைத்துத் தமிழர்களும் ஏற்றுக் கொள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் நாங்கள் இழந்தது எவ்வளவு? அழிந்தது எவ்வளவு? எங்கள் மக்கள் அழிந்தார்கள்� எங்கள் போராளிகள் அழிந்தார்கள்� எங்கள் தளபதிகள் அழிந்தார்கள்� எங்கள் படைக் கட்டுமானங்கள் அழிந்தன�

இத்தனை அழிவுகளை எதிர்கொண்டும் நிம்மதியாக வாழ மறுக்கப்பட்ட வன்னி மக்கள் வதை முகாம்களில் நாளாந்தம் செத்து மடிகின்ற வேளையில் இப்படியான, புலம்பெயர் தமிழர்களிடம் மனச் சிதைவை ஏற்படுத்தும் இப்படியான விவாதங்கள் திட்டமிட்ட தமிழின அழிப்புச் சதியின் தொடர்ச்சியே.

ஈழத் தமிழர்களிடம் உள்ள வாழ்வின் முதன்மையான இலட்சியங்கள் பிள்ளைகளின் படிப்பு, குடியிருக்க சொந்தமாக ஒரு வீடு. இந்த வாழ்வியல் தொடர்ச்சி புலம் பெயர் தேசங்களிலும் தொடர்கின்றன. அதற்காக ஓடி ஆடிப் பணியாற்றுகின்றனர்.

ஒருவர் தேசியக் கடமையிலும் தன் நேரங்களைச் செலவிடுகிறார் என்ற காரணத்திற்காக அவர் வாங்கும் வீடு, அவர் ஓடும் கார் என்று எல்லாமே தேசியக் கடமையிலிருந்து திருடியதாகக் குற்றம் சுமத்துவது ஈனத் தனமானது. கோழைத்தனமானதும் கூட.

புலம்பெயர் தமிழர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் சிலரால் தவறாகப் பயன்படுத்தப்படுவதான குற்றச்சாட்டை எழுந்தமானமாக கற்பனைவாதத்தின் அடிப்படையில் சுமத்த முடியாது. அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் அதைத் தட்டிக் கேட்கும் தகைமை தனக்கு இருக்கின்றதா? என்பதையும் குற்றம் சுமத்துபவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி என்ற வானொலி யாரால்? எந்த நிலையில்? எந்த அடிப்படையில்? உருவாக்கப்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியத்தை ஐரோப்பிய மண்ணில் சிதைப்பதற்காக சிங்கள தேசத்தால் நியமிக்கப்பட்ட திரு. எஸ். குகநாதன் அவர்கள் தற்போது �டண்� என்ற தொலைக்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இணைந்து கொழும்பிலிருந்து ஒளிபரப்பி வருகின்றார்.

அவரது தமிழ்த் தேசிய சிதைப்புச் சேவையின் ஒரு அங்கமாக பிரான்சிலும் �தமிழ் அலை� என்ற பெயரில் வானொலி ஒன்று தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்றது. முற்று முழுதாக தமிழத் தேசியத்தைச் சிதைக்கும் பணியில் பல வருடங்களாக திரு. எஸ். குகநாதன் அவர்களுடன் இணைந்து நடாத்தியவர்களே தற்போது �ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி� என்ற பெயரில் வானொலியை ஆரம்பித்து நடாத்தப் பணிக்கப்பட்டுள்ளார்கள்.

அடையாளம் காணப்பட்ட தமிழ் அலை வானொலியால் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அதிக சிதைவினை ஏற்படுத்த முடியாது என்பதால், சிங்கள அரசின் முதலீட்டுடன் இந்த வானொலி நடாத்தப்பட்டு வருகின்றது. இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியினை தற்போது ஆரம்பித்து விட்டார்கள் என்பதை இந்த வானொலி விவாதம் உறுதிப்படுத்துகின்றது.

துரோகிகள் புயல் போன்றுதான் உள்ளே நுழைவார்கள். போராளிகள் போலத்தான் தீவிரமாகப் பணியாற்றுவார்கள். இறுதியில் தங்கள் துரோகத்தால் இனத்தையே அழிவுக்குள்ளாக்கி விடுவார்கள்.

இது முள்ளிவாய்க்காலில் நாம் பெற்ற அனுபவம். புலம்பெயர் மண்ணிலும் இது தொடர்கின்றது.



http://seithy.com/breifArticle.php?newsID=19289&category=Article





டி.ஆர்.பாலுவை கடுமையாக விமர்சித்த இலங்கை பத்திரிக்கைகள்!


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுடன் தமிழக எம்.பி.க்கள் நடத்திய கலந்துரையாடலின் போது தமிழக எம்.பி.க்கள்குழுவிற்கு தலைமை வகித்த டி.ஆர்.பாலுவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்து அங்குள்ள பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக எம்.பி.க்கள் குழு யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது அங்கு யாழ்பாணபல்கலைக்கழக நூலகத்தில் மாணவர்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு திரண்டிருந்த மாணவர்கள் ஒருவரைக் கூட முழுமையாக பேச டி.ஆர்.பாலு அனுமதிக்க வில்லையாம்.

மேலும் கனி மொழி, திருமாவளவன் ஆகியோரையும் பேச அனுமதிக்கவில்லையாம். ஒரு மாணவர் எழுந்து ராஜீவ் கொலையை காரணம் காட்டி இலங்கையில் எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். இன்னும் எத்தனை மக்கள் கொல்லப்படப்போகிறார்கள்" என கோபமாக கேட்டபோது தமிழக எம்.பி.க்கள் பதில் சொல்லமுடியாமல் மௌனமாயினர் அதற்குப்பின் ஒரு மாணவரைக்கூட முழுமையாக பேச டி.ஆர்.பாலு அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து கருத்து கூறிய யாழ். பல்லை. மாணவர்கள் 'எங்கள் கஷ்டகாலத்திலும் கஷ்டகாலம் தமிழக எம்.பி.க்கள் குழுவிற்கு டி.ஆர்.பாலு தலைமை ஏற்றிருந்தது."என்று கூறியுள்ளனர். மறுநாள் பத்திரிக்கைகளில் டி.ஆர்.பாலுவின் நடவடிக்கை கடுiமாயக விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. 'இராவணன் காலத்தில் இலங்கைக்கு அனுமன் வந்ததுண்டு.

ஆனால் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்த தமிழக எம்.பி.க்கள் குழுவிற்கு சனீஸ்வரன் தலைமை ஏற்று வந்ததென்பதை யாழ் பொதுநூலகத்திற்கு சென்றபின்பே தெரிய வந்தது"என்று யாழ் வலம்புரி என்ற நாளிதழ் கடுமையாக சாடியிருந்தது. ''உள்நாட்டு மீனவர்கள் பாதுகாப்புக்கே உத்தரவாதம் கொடுக்க முடியாத தமிழக அரசா, இலங்கை தமிழர்களை காப்பாற்றப்போகிறது'' என்றும் பத்திரிக்கைகள் விமர்சனம் செய்திருந்தன

http://www.thenaali.com/thenaali.aspx?N=3429






Update me when site is updated





smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!