தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!
'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'
-பாவேந்தர் பாரதிதாசன்
ஏதோ ஒரு பாட்டு mp3
ஏதோ ஒரு பாட்டு mp3 | ||
Found at bee mp3 search engine |
Pages
Thursday, August 13, 2009
♥ மரணத்துக்கு வெகு அருகில்.. நான் செய்ய வேண்டிய கடமைகள்: பிரபாகரன் பேட்டி-நக்கீரன் தொடர் ! ♥
மரணத்துக்கு வெகு அருகில்.. நான் செய்ய வேண்டிய கடமைகள்: பிரபாகரன் பேட்டி
புத்தகங்கள்,காயமுற்ற போராளிகள், செஞ்சோலை சிறுபிள்ளைகள் இவர்களோடே அதிக நேரம்செலவிடுவதாய் பிரபாகரன் அவர்கள் நேர்காணலில் கூறியிருந்ததால்
காயமுற்ற போராளிகள் இல்லத்தையும், யுத்தத்தில் பெற்றோரை இழந்த பிஞ்சுகளுக்கு தானே தகப்பனாகி, அவர்களைத் தாலாட்டும் தாய்மடியாய் அவர் உருவாக்கிய செஞ்சோலை இல்லத்தையும் தரிசிக்க விரும்பினேன். அடுத்தநாள் காலை காயமுற்ற பெண் போராளிகள் இல்லத்திற்கு கூட்டிச் சென் றார்கள்.
முல்லைக்கொடி படர்த்திய புறவேலி. வெயில் நிறுத்தம் செழித்த தென்னை மரங்கள். நீர்தெளித்த முற்றம். நாற்புறமும் பூச் செடிகள். என் தெய்வம் வாழும் இடமொன்று கண்டேன். இருபது படுக்கைகள் இருந்திருக்கு மென நினைக்கிறேன். அனைவருமே இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள்ளான பெண் போராளிகள். பாதிப்பேர் முதுகெலும்பில் காயம்பட்டு கழுத்துக்குக் கீழ் முழுதாக அசைவும்,உணர்வும் இழந்தவர்கள். மீதிப்பேர் இடுப்புக்குக் கீழே செயல்திறன் இழந்தவர்கள். கட்டிலில் உடலும் களத்திலே உணர்வுமாய் படுத்திருந்த அப்பிள்ளைகளின் புன்னகைபோல் பூமியில் வேறு எவரிடத்தும் நான்பார்த்ததில்லை. உணராத உணர்வொன்று ஈர்த்தென்னை ஆட்கொண்டு விழி நீராய் வெளிப்பட்ட இரண்டாவது திருக்கோயிலில் நின்றிருந்தேன். முதற் கோயில் பிரான்சு நாட்டிலுள்ள லூர்து மாதா திருத்தலம்.
களமாட முடியாத கவலையின்றி நிரந்தரமாய் படுக்கையிலாகிவிட்ட துயரம் கடுகளவும் அந்தப் பிள்ளைகளுக்கு இருக்கவில்லை. உடல் செயலற்று செத்ததுபோல் ஆனாலும் வெம்பகை முடித்து தமிழீழம் வெல்லும் வேகம் மட்டும் குறையவில்லை. வார்த்தைக்கு வார்த்தை “தமிழீழம் வெல்லும்’ என்றார்கள்.
“”இஞ்செ வாங்கோஃபாதர்” என்று உரிமையோடு அருகில் அழைத்தார் மதி என்ற போராளி.
“”நானும்கேத்தலிக் (ஈஆபஐஞகஒஈ) தான் ஃபாதர். அரியாலை சர்ச், சிஸ்டர் (கன்னியாஸ்திரி) ஆக வேண்டி கான்வென்ட்லெ படிச்சுக் கொண்டிருந்தப்பதான் ஒருத்தருக்கும் சொல்லாத இயக்கத் துக்குப் போனேன். எங்கட நாட்டு நிலையிலெ கான்வென்ட்லெ இருக்கிறதும் புலிகள் இயக்கத்திலெ இருக்கிறதும் ஒன்றுதானே ஃபாதர். கஷ்டப்படாத சனத்துக்காகவும், நீதிக்காகவும் தானே இயேசப்பா சிலுவையிலெ மரிச்சார்? சரிதானே, சொல்லுங்க ஃபாதர்” என்றார். வரலாற்றில் வந்து போன தேவகுமாரர்களை நமது காலத்திற்கேற்றபடி மீள் கண்டெடுத்தல் செய்யும் கடமை தங்களுக்கு உண்டு என கருதியும் எழுதியும் வரும் எனக்கு தனது கடவுளை தமிழீழப் போர்க்களத்திற்கு கொண்டு வந்து நிறுத்திய மதி, மிகுந்த மனநிறைவுதந்தார்.
அப்போல்லோ மருத்துவமனை உயர் பராமரிப்பு பார்த்திருக்கிறேன். ஸ்ரீ ராமச்சந்திராவில் நானே அனுபவித்திருக்கிறேன். தேர்ந்த மருத்துவர்கள், தூய்மை, சரியான மருந்து, நல் உணவு, நேசம் தோய்ந்த கண் காணிப்பு இவைதான் உயர்தர பராமரிப்பின் வரையறையெனக் கொண்டால் அப் போராளிகள் பராமரிக்கப்பட்டவிதம் அப்போல்லாவைவிட ஸ்ரீராமச்சந்திராவை விட மேல்.
உக்கிரபோர் நடக்கும் காலத்தில்கூட வாரம் ஒரு மாலைப்பொழுது இவர்களோடுதான் இருப்பாராம் பிரபாகரன். சாக்லெட் கொண்டு வருவார், அவர்களோடு உணவருந்துவார். களத்தின் கதைகள் பேசிக்கொண்டிருப்பார் என்றார்கள்.
இடுப்புக்கு கீழே செயலிழந்து ஆனால் இரு கைகளும் நன்றாயிருந்த போராளிகளுக்கு கம்ப்யூட்டர் கல்வி கற்றுக்கொடுக்கும் ஏற்பாடுகளை பிரபாகரன் செய்திருந்தார். ஒரு கை இழந்த போராளி ஒருவருக்கு ஜெர்மனியில் எலக்ட்ரானிக்கை விற்கப்படுவதை அறிந்து 46 லட்ச ரூபாய் செலவில் வாங்கிப் பொருத்தியிருக்கிறார்..
உடல்வலி தவிர்த்தலும், உயிரைக் காத்தலும் பொதுவாக சராசரி மனித வாழ்வின் முதன்மையான அக்கறைகள். அதற்காகவே நமது முயற்சிகள், போராட்டங்கள்,சமரசங்கள், சரணடைதல்கள், பொய்கள், அடிபணிதல்கள் அனைத்தும் அமைகின்றன.
இங்கே ஈழ நிலத்தில் அச்சமில்லா புன்னகையோடு மரணத்தை எதிர்கொண்டு உயிரினை ஈகை செய்ய ஆயிரமாயிரம் இளையர்கள் அணிவகுத்து நிற்பதை எண்ணி காரணங்களும் விடைகளும் தேடிய நாட்கள் உண்டு. தங்களது தமிழ் இனத்தின் நீண்ட துன்பவரலாற்றை முடிவுக்குக் கொண்டுவரும் தமிழ் ஈழக் கனவு மட்டுமே அத்
தியாகத்திற்குக் காரணம் என அதுவரை நான் எண்ணியிருந்தேன். ஆனால்பிரபாகரன் என்ற தலைவனின் நேசமும் அதற்குக் காரணம் என்பதை காயமுற்று அசைவின்றிக் கிடந்த இப்போராளிகளின் திருக்கோயிலில் நின்று அறிந்தேன், அகம்நிறைந்தேன்.
அப்போது தாரணிஎன்ற போராளி. “”ஃபாதர்… நீங்க சிவசங்கரியின்டெ கடிதம் வானொலியிலெ படிச்சினிங்களே… சிவசங்கரியின்டெ பருத்தித்துறைதான் என்டெ ஊரும். பள்ளிக்கூடத்திலேர்ந்து நேரா இயக்கத்துக்கு ஓடி வந்திட்டேன். மூன்டு மாசத்துக்குப் பிறகுதான் கேட்டு கேட்டு அம்மா வந்து அழுதது. எனக்கும் அன்டு ரா முழுக்க அழுகையாத்தான் இருந்தது. என்னெண்டு செய்ய ஃபாதர்…சிங்கள ஆமிக்காரன் பள்ளிக்குப்போற எங்கட பிள்ளையள தினமும் சோதனையிடுறகாலம் முடியணும். எங்கட தலைவர் காலத்திலேயே முடியணும்”.
அரைநாள் அப் பரிசுத்த தேவதைகளின் கதைகள் கேட்டேன். ஒவ்வொருவரோடும் தனித்தனியாகப் புகைப்படம் எடுக்க வற்புறுத்தினார்கள்.. ஒரு வாரத்திற்குள் புகைப்பட பிரதிகள் அனுப்ப வேண்டு மென்றும் உத்தரவிட்டார்கள். அவர்களுடனான உரையாடலில் அறிந்து உறைந்து போன முக்கியமான உண்மையொன்று என்னவென்றால் அங்கிருந்தவர்களில் முக்கால்வாசிப் பேர் படுகாயமுற்றது.
சிங்களராணுவத்துடனான சண்டைக்களத்தில் அல்ல, சமருக்குத் தங்களையே ஆயத்தம் செய்த பயிற்சி முகாமில் என்ற விபரம். நிஜமாகவே ஆடிப் போனேன்.
பயிற்சி முகாம் பார்க்க ஆசைப்பட்டேன். அனுமதி கடினம். சாத்தியமில்லை என்றார்கள்.
அப்போதைய அரசியற்பிரிவு பொறுப் பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் கால்பிடிக்காத குறையாய் கெஞ்சினேன். ஒருவாரகால போராட்டத்திற்குப்பின் பயிற்சிப் பிரிவிற்குப் பொறுப்பான…இரு வாரங்களுக்கு முன் தலைவரைப்பாதுகாத்து வீரமரணமடைந்த கடாஃபி அவர்களோடு தொடர்பு ஏற்படுத்தித் தந்தார்.மெய்சிலிர்க்கும் பயிற்சி முகாம் அனுபவத்தை பின்னர் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
பிரபாகரன் அவர்களுடன் நேர்காணல் எளிதாய் நடந்துவிட பயிற்சி முகாம் பார்க்க ஒருவார போராட்டமென்றால் அதன் முக்கியத்துவத்தைநீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள், காத்திருங்கள்.
விடைபெறுமுன்அத்தனை பிள்ளைகளும் சேர்ந்து என்னைக் கேட்டது… “”ஏன் ஃபாதர் இந்தியா எங்கட போராட்டத்தை அழிக்க நினைக்குது? எங்கட சனத்தையும் இந்தியாவையும் விட்டா உலகத்துல எங்களுக்கு வேற யார் ஃபாதர் இருக்கிறாங்கள்? இந்தியா மனசுவெச்சா எங்களுக்கு கெதியிலெ தமிழ் ஈழம் கிடைக்கும்.” இன்றும் அவ்வப்போதுஎன்னைப் பிராண்டும் அப்பிள்ளைகளின் கேள்வி : “”எங்கட சனத்தையும் இந்தியாவையும் விட்டா உலகத்துல எங்களுக்கு வேற யார் இருக்கிறார்கள்?”
விடுதலைப்புலிகளின் நுண்கலைப் பிரிவிற்குப் பொறுப்பாளராயிருந்த சேரலாதன்தான் என்னை தன் வாகனத்தில் கூட்டிச் சென்றிருந்தார்.
“மீண்டும் உங்களை சந்திக்கவருவேன்” என்று கூறி வணங்கிப் புறப்பட்டேன்.
அடர்ந்து கனத்த கனவெளிபோல் மனது நிறைந்திருந்தது. எவருக்கும் தெரியாமல் பூத்துச் சிரிக்கும் காட்டுப்பூக்கள் பல்லாயிரமாய் என்னுள் கண்சிமிட்டி மலர்ந்திருந்தன. என்லூர்து மாதா திருத்தலம்போல் இங்கும் நான் கழுவப்பட்டிருந்தேன். சமீபத்தில் கிளிநொச்சி நகர் சிங்கள ராணுவத்திடம் விழுந்தபோது என் நினைவுக்கு வந்து என்னை தவிக்கவிட்டது காயமுற்ற இத்தேவதைகள்தான். “”கடவுளே, மாதாவே இப்பிள்ளைகளை காத்தருள்வீர்” என்று அதிகாலைவரை ஓரிரவு மன்றாடினேன். நக்கீரன் வாசகர்களே, காட்டுக்குள் இப்பிள்ளைகள் எத்தீங்கும் நேராமல் நல்ல செய்திகள் பிறக்கும் பிறிதொரு நாளுக்காய் உயிர்வாழ வேண்டுமென நீங்களும் உங்கள் விருப்ப தெய்வங்களை மன்றாடுங்கள்.
இன்று உணர்வாளர்கள் அனைவரது மனதிலும் எழுகின்ற கேள்வி, “”பிரபாகரன்எங்கிருக்கிறார்?” இதனை நான் எழுதுகையில் சிங்கள ராணுவம் முல்லைத்தீவில் தமிழ் மக்கள் மீது இறுதி யுத்தம் தொடங்கிவிட்டது. ஞாயிறு இரவு தொடங்கி திங்கள் நண்பகலுக்குள் 1100 தமிழர்கள் கொல்லப்பட்டு 1700க்கும் மேல் படுகாயமடைந்துள்ளனர்.
பிரபாகரன் சரணடைய 24 மணிநேரம் சிங்களம் கெடு விதித்துள்ளது. களநிலையை உள்ளுணர்வோடு யூகிக்க மட்டுமே முடிகிறது. பிரபாகரன் முல்லைத்தீவில் இல்லை என்பதே என் கணிப்பு. படையணிகளும் எதிர்காலப் போராட்டத்திற்காய் பல திசைகளிலும் பிரிந்து சென்றுள்ளார்கள்.
“”எனதுசாம்பல்கூட எதிரிகள் கையில் கிடைக்கக் கூடாது” என தன்னுடன் நிற்கும்தோழர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார் பிரபாகரன். எனது நேர்காணலின் போதுமரணத்திற்கு வெகு அருகில் தான் சென்று வந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
இயற்கை உங்களை ஏதோ ஒன்றிற்காய் காத்து வருகிறதெனக் கருதலாமா?” என்று கேட்டேன். “”நான் செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் இருப்பதாக இயற்கை நினைக்கிறது போலும்” என சிரித்துக்கொண்டே சொன்னார்.
மனிததர்மங்கள் முழுவதுமாய் தோற்கிறபோது இயற்கை இறங்கி வரும். காடுகளுக்குள் துன்புறும் அப்பாவி மக்களைப்போல் வேடமிட்டு சிங்கள சிறப்பு அதிரடிப்படைபிரிவுகள் பிரபாகரன் வருகைக்காய் காத்திருப்பதாய் செய்திகள் வருகின்றன. ஈழத்து எல்லைகளின் காவலன் நல்லூர் முருகன் துணையிருப்பான். பிரபாகரன்அவர்கள் சொன்ன இன்னும் பல விஷ யங்கள்…
நன்றி: நக்கீரன் வாரஇதழ்
♥ துரோக நடனம் ♥
நாட்டியத் தாரகை அங்கையற்கன்னி டக்ளசுடன் இணைந்து நாட்டியம் ஆடுகிறார் |
பிரித்தானியாவில் அனைத்துப் போராட்டங்களிலும் பங்குபற்றி, இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகப் போர்கொடி தூக்கியாடிய நாட்டியத் தாரகை அங்கையற்கன்னி அம்மையார் தற்போது டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து அரசுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கியுள்ளார். புலம்பெயர் லண்டன் வாழ் தமிழர்களில் 'நாட்டியப் பேரரசி' அங்கயற்கண்ணி செல்வராசாவைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு எமது ஈழத் தமிழர்களுக்காக கடைசி வரை நடாத்திய போராட்டங்களில் முதல்வரிசைப் பெண்மணியாகப் பங்களித்து, ஈழவிடுதலை மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பல செயற்பாடுகளில் ஈடுபட்டவர் தான் இந்த வேஷதாரி அங்கயற்கண்ணி. எமது போராட்டங்கள் பற்றி வெள்ளைக்காரப் பெண்மணிகளுக்கும் கூட விளக்கம் கொடுத்துள்ளார். இவரைப்போலத் தான் இருக்க வேண்டும் நமது பெண்மணிகள் எனப் பாராட்டப்பட்டவர் இவர். புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் இறப்புக்கு தனது அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் லண்டன் தமிழ் ஊடகம் மூலம் வெளிப்படுத்தியவர். ஆனால் இப்போது, யாழ்ப்பாணத்தில் அரச படைகளுடன் உள்ள ஒட்டுக்குழுக்களில் ஒன்றான ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இவரும் கூட்டுச் சேர்ந்துள்ளார். யாழ் மாநகரசபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஈ.பி.டி.பி யின் முதல்வரிசைப் பெண்மணி இவர்தான். இறுதி வரைக்கும் லண்டன் புலம்பெயர் வாழ் மக்களுடன் நின்ற இவர் யாழ்ப்பாணம் வந்த உடன், டக்ளஸுடன் சேர்வது சாத்தியமான ஒன்றா? இங்கு தான் நாம் சற்றுச் சிந்திக்கவேண்டியுள்ளது. அப்படியெனில், பல வருடங்களாக அல்லது குறைந்தபட்சம் ஒரு வருடமாவது அந்த ஒட்டுக்குழுவுடன் இவருக்கு தொடர்பு இருந்திருக்கவேண்டும், பரஸ்பர பேச்சுக்கள் நடந்திருந்தால் மட்டுமே யாழ்ப்பாணம் வந்ததும் இவர் டக்ளசைச் சந்தித்திருக்க முடியும். சந்திக்கும் அனைவருக்கும் டக்ளஸ் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றில்லை. இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எனில்... லண்டனில் இருந்தபடி ஏதோ உளவு பார்த்திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறான நம்பிக்கைத் துரோகிகளே எமது சுதந்திரப் போராட்டங்களின் முக்கிய தடைக்கற்கள். ஈழப் போராட்டத்தில் நம்பிக்கைத் துரோகம் என்பது புதிய விடயமல்ல. களத்தில் நின்றவர்களில் கருணாவுடன் முடிந்துவிட்டதாகக் கருதப்பட்ட இந்த நம்பிக்கைத் துரோகம், புலம்பெயர் வாழ் தமிழர்களிடையேயும் ஊடுருவி இருப்பதென்பதை ஜீரணிக்கமுடியவில்லை. இதேபோன்ற துரோகிகள் தான் கே.பி விடயத்திலும் இருந்தார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, தற்போதைய நிலையில் எமது போராட்டம் முற்று முழுதாக புலம் பெயர் வாழ் மக்கள் கைகளுக்கு மாறியிருக்கிறது. இந்தப் போராட்டமும் ஸ்தம்பிக்கும் முன்னர், இவர்கள் போன்றோரை முதலில் களைஎடுப்பது நல்லது. தூரோகிகளை முதலில் அடையாளம் கண்டு அகற்றுவதன் மூலமே நாம் எமது போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த முடியும். http://athirvu.com/target_news.php?subaction=showfull&id=1249918454&archive=&start_from=&ucat=17& |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ ஈழத்தில் தொடரும் துயரம்-வீடியோ ♥
காணொளி) ஈழத்தில் தொடரும் துயரம்
மக்கள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான ஈழத்தில் தொடரும் துயரம் நிகழ்ச்சியை புலம்பெயர் மக்களுக்காக நெருடல் வாயிலாக எடுத்து வருகின்றோம்.
முக்கிய கவனத்திற்கு: காணொளி AUTO PLAYயில் இருப்பதால் இரண்டும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கும், பகுதி இரண்டை நீங்கள் நிறுத்தி விட்டு பகுதி ஒன்றை கேட்க்கவும்.
பகுதி 1
பகுதி 2
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ அதிரவைக்கும் வன்னியிலுள்ள புதிய மரணப் படுகுழிகள்-படங்கள் ! ♥
வன்னியில் பாரிய மனித புதைகுழிகள் |
|
வன்னியில் இறுதிகட்ட யுத்தம் இடம்பெற்றதன் பின்னர் தொடர்சியாக எடுக்கப்பட்ட செய்மதி படங்கள் மூலம் பாரிய மனித புதைகுழிகள் இருப்பதற்கான சாட்சியங்கள் உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை இன்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையானது அரசாங்கம் பாரிய ஆயுதங்களை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தவில்லை என்பதற்கு சவாலாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித புதைகுழிகளும் மோட்டார் எறிகனை தளங்களும் மக்கள் தங்கியிருந்த இடங்களுக்கு அருகில் காணப்படுகின்றமையே இந்த செய்மதி படங்கள் காட்டுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. செய்மதி படங்களின் படி மூன்று பாரிய புதைகுழிகளும் அதனை தவிர மொத்தமாக ஆயிரத்து 346 மனித புதைகுழிகளும் காணப்படுவதாக மன்னப்புச் சபை தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி செய்மதி படங்கள் எடுக்கப்பட்ட போது அங்கு புதைகுழிகள் காணப்படவில்லை. எனினும் மே மாதம் 24ஆம் திகதியளவில் சுமார் 342 புதைகுழிகள் காணப்பட்டதாக லண்டனை தலைமையகமாக கொண்ட மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த குழிகளில் பொதுமக்களா அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளா புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என அந்த சபை தெரிவிக்கவில்லை. எட்வான்ஸ் மென் ஒப் சயன்ஸ் என்ற அமெரிக்க நிறுவனமொன்றே இந்த செய்மதி படங்களை எடுத்துள்ளதாக மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது. புதிய செய்மதி படங்களின் அடிப்படையில் அரசாங்கம் பொது மக்களுக்காக அறிவித்த பாதுகாப்பு வலயங்களை சுற்றி 17 மோட்டார் தளங்கள் உள்ளதையும் காணமுடிகிறது. இந்தநிலையில் இலங்கை படையினரும் தமிழீழ விடுதலை புலிகளும் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியமை தெரிய வந்துள்ளதாக மன்னிப்புச் சபையின் அலுவலரான கிறிஸ்டோப் கோடடெல் தெரிவித்துள்ளார். எனவே இந்த தகவல்களின் அடிப்படையில் வன்னியில் யுத்தம் இடம்பெற்ற இறுதி கட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டை இலங்கையின் பாதுகாப்பு பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல்ல உண்மைக்கு புறம்பானதென குறிப்பிட்டுள்ளார். |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ இரு சிங்கள இளைஞர்கள் சுட்டுக்கொலை: ஆத்திரமடைந்த மக்களால் காவல் நிலையம் நொறுக்கப்பட்டது ♥
கைதான இரு சிங்கள இளைஞர்கள் சுட்டுக்கொலை: ஆத்திரமடைந்த மக்களால் காவல் நிலையம் நொருக்கப்பட்டது
சிறிலங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்ட இரு சிங்கள இளஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு அவர்களின் உடலங்கள் வீதியோரத்தில் வீசப்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தை அடித்து நொருக்கியதுடன், தொடருந்துப் போக்குவரத்தையும் தடுத்து நிறுத்திய சம்பவம் சிறிலங்காவின் அங்குலானை பகுதியில் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் தென்பகுதியில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியான அங்குலானயிலேயே இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான மக்களால் கரையோர தொடருந்து சேவை சில மணி நேரத்துக்கு நிறுத்தப்பட்டது. அதேவேளையில் அங்குலானை காவல்துறை நிலையமும் பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டது.
தினேஷ் துரங்க பெர்னான்டோ, தனுஷ்கா உதயா ஆகிய இரு இளைஞர்களும் நேற்று மாலை அங்குலானை பகுியில் உள்ள பாடசாலை ஒன்றில் நின்றபோது காவல்துறயினரால் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரது பெற்றோரும் அது தொடர்பாக காவல்துறையினரிடம் கேட்டபோது இன்று காலையில் விடுவிப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்ற அதிகாலை அங்குலான காவல்துறை நிலையத்துக்கு பெற்றோர்கள் சென்றபோது கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் கல்கிசை காவல்துறை நிலையத்திடம் கையளிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் கல்கிசயை நோக்கிச் சென்றகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இருவரினது உலடங்களும். இரத்மலானை கூட்டுறவுச் சங்க விற்பனை நிலையத்துக்கு அருகிலும், லுனாவ பாலத்துக்கு அருகிலும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்தே ஆத்திரமடைந்த மக்கள் தொடருந்து சேவையையத் தடுத்ததுடன் காவல்துறை நிலையத்தையும் தாக்கியுள்ளனர். கற்கள் தடிகளுடன் வந்த ஆயிரத்தக்கும் அதிகமான மக்கள் காவல்துறை நிலையத்தை தாக்கியதால் காவல்துறை நிலையம் பலத்த சேதமடைந்தது.
மேலதிகமாக தரைப்படையினரும் காவல்துறையினரும் அழைக்கப்பட்டு அமைதி நிலைநாட்டப்பட்ட போதிலும், அப்பகுதியில் பெரும் பதற்றம் தொடர்கின்றது.
http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=323:2009-08-13-08-46-33&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ "யார் தீவிரவாதி; யார் போராளி என்பதை காலம் தீர்மானிக்கும்!" ♥ சீமானின் வீடியோ முழக்கம்
சீமானின் வீடியோ முழக்கம்
http://www.dailymotion.com/video/xa4b0a_yyyy-yyyyyyyyy-yyyy-yyyyyy-yyyyyy-y_music
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது ! ♥
ராஜபக்சேவை
கொல்ல சதி-சிங்களர் கைது
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவைக் கொலை செய்ய விடுதலைப் புலிகளுடன்
இணைந்து திட்டம் தீட்டிய சிங்களர் ஒருவரை இலங்கை ராணுவம் கைது
செய்துள்ளது. இதனால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜபக்சேவின்
முதல் எதிரியாக விடுதலைப் புலிகள் கூறப்பட்டு வந்த நிலையில் சிங்களர்கள்
மத்தியிலேயே அவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பது
இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும், விடுதலைப் புலிகளுடன் இணைந்து இந்த கொலையை நிறைவேற்ற சிங்களர்
ஒருவர் சதித் திட்டம் தீட்டியுள்ளார்.
ராஜபக்சேவின்
சொந்த ஊரான மதமலுனா அல்லது தங்கல்லே என்ற இடம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு
இடத்தில் வைத்து ராஜபக்சேவைத் தீர்த்துக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இததொடர்பான விரிவான விவரம்...
இலங்கையின் தெற்கு மாகாணத்தில் கவுன்சிலர் டேனி ஹிததீயக என்பவர் படுகொலை
தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்ம துஷா லட்சுமண்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது ராஜபக்சேவைக் கொல்ல திட்டமிடப்பட்ட
சதி அம்பலமானது.
ராஜபக்சேவை
மனித வெடிகுண்டு மூலம் தீர்த்துக் கட்ட சதித் திட்டம்
தீட்டப்பட்டிருந்தது. அதைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக கொழும்பு நகரின்
புறநகரான வெள்ளவத்தையில் மே 14-ம் தேதி தற்செயலாக நடந்த ஒரு சோதனையின்போது
புலிகள் பயன்படுத்தும் தற்கொலைப்படை அங்கி சிக்கியது.
அப்போது
அந்த வீட்டிலிருந்த ஓர் இளைஞர் 7-வது மாடியிலிருந்து கீழே குதித்துத்
தற்கொலை செய்துகொண்டு விட்டார். மேற்கொண்டு துப்பு கிடைக்காமல் திணறியப்
போலீஸருக்கு மதுஷா லட்சுமண் தெரிவித்த தகவல்கள் சதியை
அம்பலப்படுத்தியிருக்கின்றன.
சமன் சந்தனா என்ற சிங்களரின் சகோதரர்
எச். ரூவான். இவர் இலங்கை ராணுவத்தில் பணிபுரிந்தார். 2000-வது ஆண்டில்
விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பிறகு ரூவான் காணாமல்
போய்விட்டார். அவர் என்ன ஆனார் என்று இலங்கை ராணுவம் சமன் சந்தனாவுக்குத்
தகவல் தரவில்லை.
இதனால் கோபமும் சோகமும் அடைந்த சமன் சந்தனா
அதிபரின் உதவியை நாடினார். ஆனால் அவர் உரிய பதில் தரப்படாமல்
அலட்சியப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் மதுஷா லட்சுமண்,
சந்தனாவுக்கு அறிமுகமானார். தன்னுடைய சகோதரர் காணாமல் போன விஷயம் குறித்து
அவர் லட்சுமணிடம் கூறி வருத்தப்பட்டார். விடுதலைப் புலிகளில் சிலரை
எனக்குத் தெரியும் அவர்களை அறிமுகப்படுத்துகிறேன், அவர்கள் மூலம் நீங்கள்
உங்கள் சகோதரர் இருக்குமிடத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று லட்சுமண்
அவரிடம் தெரிவித்தார்.
இதை அடுத்து வவுனியாவில் விடுதலைப்
புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவராக இருந்த ஜூட் என்பவரிடம் சந்தனாவை
அறிமுகப்படுத்தினார் லட்சுமண். அதன் பிறகு சந்தனாவுக்கு உதவி செய்வதாக
வாக்களித்த விடுதலைப் புலிகள், தற்கொலைப் படையைச் சேர்ந்த புலிகளுக்கு
கொழும்பில் மறைவிடத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பதில் கோரிக்கை
விடுத்தனர். அதை சந்தனா ஏற்றுக் கொண்டார்.
சந்தனா தன்னுடைய
சகோதரர் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டாரா என்று அறிய
கிளிநொச்சிக்கு புலிகளின் உதவியோடு சென்றிருக்கிறார். அப்போது இலங்கை
ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையாக போர்
நடந்துகொண்டிருந்தது.
அதன் பிறகு தலைநகர் கொழும்பின் புறநகர்ப்
பகுதியான வெள்ளவத்தையில் மேல்தட்டு சிங்களர்கள் குடியிருக்கும் பகுதியில்
விடுதலைப் புலிகள் தங்கிக்கொள்ள சந்தனா வீடு ஏற்பாடு செய்து கொடுத்தார்.
அந்த இடத்தில்தான் தாமோதரம் பிள்ளை சுஜீந்திரன் என்ற விடுதலைப்புலி
தங்கியிருந்தார். அவருடைய நடமாட்டம் குறித்து சந்தேகம் அடைந்த சில
சிங்களர்கள் போலீஸாருக்கு ரகசியமாக துப்பு கொடுத்தனர்.
போலீஸார்
அந்த குடியிருப்பு வளாகத்தைச் சூழ்ந்துகொண்டு வீடுவீடாக தேடுதல் வேட்டை
நடத்தியபோது சுஜீந்திரன் 7-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை
செய்துகொண்டார். அந்த வீட்டின் மேல் மாடியில், தற்கொலைப் படை வீரர்கள்
அணியும் 4 மேல்சட்டைகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் வெடிகுண்டுகளை
நிரப்பித்தான் தற்கொலைப்படையினர் தாக்குவது வழக்கம்.
இந்த நிலையில், தெற்கு மாகாணக் கவுன்சிலர் கொலை தொடர்பாக மதுஷா லட்சுமணைக்
கைது செய்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து
லட்சுமணை இந்த மாதம் 17-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கூடுதல்
மாஜிஸ்திரேட் தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டிருக்கிறார்.
அவரை
கொழும்பு குற்றப் பிரிவு போலீஸார் காவலில் எடுத்துத் தீவிரமாக
விசாரிக்கவுள்ளனர். ராஜபக்சேவைப் பிடிக்காத சிங்களர்கள் தனிக் குழுவாக
இயங்கி ராஜபக்சேவைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளனரா என்பது குறித்து
விசாரிக்கப்படவுள்ளது. மேலும், சிங்களர்கள் மத்தியில், புலிகள் ஊடுறுவும்
விதம் குறித்தும் லட்சுமணனிடம் நடக்கவுள்ள விசாரணையில் தெரிய வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:
http://thatstamil. oneindia. in/news/2009/ 08/13/lanka- sinhalese- plot-to-kill- rajapakse- unearthed. html
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ போர்ச் செய்திகள் இன்றித் திணறும் கொழும்பு சிங்கள, ஆங்கில ஊடகங்கள் ♥
போர்ச் செய்திகள் இன்றித் திணறும் கொழும்பு சிங்கள, ஆங்கில ஊடகங்கள் |
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் திடீரென முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் வெளியிடுவதற்கு செய்திகள் இன்றி சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் திணறி வருகின்றன என்று 'இன்ரர் பிறஸ் சேவை' எனும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. |
இது தொடர்பாக 'இன்ரர் பிறஸ் சேவை'க்காக பைசல் சமத் என்பவர் எழுதியுள்ள கட்டுரையின் முக்கிய விபரங்கள் வருமாறு : கடந்த 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக போர்ச் செய்திகளுக்கும் அரச படைகளின் வெற்றிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிட்டு வந்த இந்த ஊடகங்கள், போர் இவ்வாறு திடீரென முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் போர்ச் செய்திகளில் இருந்து ஏனைய செய்திகளுக்கு மாறுவதற்கான தயார் நிலை எதுவும் இன்றியே அவை இருந்தன. திடீரென போர் முடிவுக்கு வந்து படையினரின் வெற்றி ஆரவாரங்களும் ஓய்ந்துவிட்ட நிலையில் எதைச் செய்தியாகப் போடுவது என்று சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் திணறி வருகின்றன. இதனாலேயே கடந்த சில வாரங்களாக, கிழக்கில் முஸ்லிம்களுக்கு இடையிலான பிணக்குகளும் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட யானைக் குட்டிகளும் இந்த ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்திருந்தன. "நாங்கள் எதனைச் செய்தியாக்குவது? இதுதான் இன்று எமது ஊடகவியலாளர்கள் கேட்கும் கேள்வி" என்றார் ஆரியநந்த டொம்பஹகவத்த. சிறிலங்காவில் அதிகளவில் விற்பனையாகும் 'லங்காதீப' சிங்கள நாளேட்டின் ஆசிரியர் அவர். "விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று யார் நினைத்தார்கள்? பிரபாகரன் கொல்லப்படுவார் என்று யார் எண்ணியிருந்தார்கள்? யாருமே இத்தகைய நிலைக்காக தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கவில்லை. குறிப்பாக ஊடகவியலாளர்களான நாங்கள் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கவில்லை" என்றார் அவர். ஏற்கனவே படைத்துறைப் பத்திகளை எழுதி வந்தவர்கள் தொடர்ந்தும் அது பற்றி எழுதி வருகிறார்கள். ஆனால் போர் எப்படி வெல்லப்பட்டது என்பது குறித்தும் படை அதிகாரிகள் மத்தியில் ஏற்படும் மாற்றங்கள் பிணக்குகள் குறித்துமே அப்பத்திகளில் எழுதப்படுகின்றன. இவை இப்போது மக்களுக்கு ஆர்வம் உள்ளவைகளாகத் தெரியவில்லை. "ஒரே இரவில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது. அதனால் போர் எப்படி வெல்லப்பட்டது என்பது போன்ற சில்லறைத்தனமான விடயங்களை நாம் இன்னும் சில மாதங்களுக்கு எழுதியபடி இருப்பது தவிர்க்க முடியாதது. மற்றொரு விடயத்தை நோக்கி மாறிச் செல்லும் வரை இது தொடரத்தான் செய்யும். உடனடியாக நீங்கள் மாறிவிட முடியாது. ஏனெனில் கடந்த பல வருடங்களாக நாங்கள் இத்தகைய ஒரு பாரம்பரியத்தைத்தான் பின்பற்றி வந்துள்ளோம். இதனை திடீரென நிறுத்துவது என்பது, ஒரு மனிதன் தண்ணீர் குடிப்பதை திடீரென நிறுத்துவதற்கு ஒப்பானது" என்று விளக்கமளிக்கிறார் ஆரியநந்த டொம்பஹகவத்த. "ஊடகவியலாளர்கள் தமது நம்பிக்கைகளுடனும் தமக்கு முன்னுள்ள மிகப் பெரிய சவால்களுடனும் இப்போது சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். விவாதங்கள் போரில் இருந்து நாட்டின் மறுசீரமைப்பு, கல்வி, அகதிகள், இன உணர்வுகள், போக்குவரத்து, நாடாளுமன்றம், தேர்தல் நடைமுறைகள், நீதித்துறை என்பவற்றினை நோக்கித் திரும்பி இருக்கின்றன. ஆனால் இதில் உள்ள முக்கியமான சவால் என்னவென்றால், இந்த விடயங்கள் தொடர்பில் செய்திகளை வெளியிட ஊடகவியலாளர்கள் அதிகளவில் படிக்க வேண்டும், பெருமளவு விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும், ஒவ்வொன்றையும் அலசி ஆராய வேண்டும். இவை எல்லாம் மிகக் கடினமானவை. அதிலும் ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி செய்தி பெறும் முன்னைய நடைமுறையுடன் ஒப்பிடும்போது மிகமிகக் கடினமானவை" என்றார் 'ராவய' சிங்கள வார ஏட்டின் ஆசிரியர் விக்டர் ஐவன். http://www.tamilwin.com/view.php?2aSWnVe0dRj060ecGG7r3b4N9E84d3g2h3cc2DpY3d426QV3b02ZLu2e |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ தமிழன் குரலே கேட்கக் கூடாது! ♥
கே.பி.கைது! தலைவர்கள் கொலை! தமிழன் குரலே கேட்கக் கூடாது! -தொடரும் ராஜபக்சேவின் வெறியாட்டம்!
சர்வதேச போலீஸாரால் கைது செய்யப் பட்டிருப்பதாக கூறப்படும் விடுதலை புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான இயக்குனரும் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவரென தன்னைத் தானே அறிவித்துக்கொண்டவருமான கே.பி. எனப்படும் செல்வராஜாபத்மநாதனை கொழும்புக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இலங்கை புலனாய்வுத் துறையினர். இலங்கை அரசின் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான ரகசிய இடத்தில் வைத்து, இந்த விசாரணையை மேற்கொண்டிருக்கும் இலங்கை புலனாய்வுத்துறையினரால் கடுமை யான உளவியல் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார் பத்மநாதன். பத்மநாதன் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம், ஈழத் தமிழர்கள் மத்தியிலும் ஈழ ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச தொடர்புகளில் விசாரித்த போது, ""பத்மநாதன் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறுவது தவறு. அவர் கைது செய்யப்படவில்லை; கடத்தப்பட்டிருக்கிறார்'' என்கின்றனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தை சுட்டிக்காட்டும்போது, ""நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் பத்மநாதன். இதற்கான பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான திட்டமிடல்கள் நடந்து வருகிறது.
இந்த சூழலில் புலிகளின் அரசியல்துறை பொறுப் பாளராக இருந்த நடேசனின் சகோதரர் பாலேந்திரனும் நடேசனின் மகனும் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வந்தனர். பத்மநாதனை சந்திக்கும் முகமாகவே இவர்களது மலேசிய வருகை இருந்தது. அதன்படி கடந்த புதன்கிழமை மஜீத் இந்தியா பகுதியில் அமைந்துள்ள டியூன் ஹோட்டலில் நடேசனின் சகோதரரையும் மகனையும் சந்தித்து விவாதித்தார் பத்மநாதன். அந்த சந்திப்பு நடந்துகொண்டிருந்தபோதே தனக்கு வந்த ஒரு செல் தொலைபேசியின் அழைப்பை அட்டெண்ட் செய்த பத்மநாதன், அந்த அழைப்பிற்கு பதில் சொல்லும் முகமாக ஹோட்டலின் வெளிப்பகுதிக்கு வந்தார். வெளியே வந்தவர் மீண்டும் ஹோட்டலின் உள்ளே வரவில்லை. வெகு நேரம் காத்திருந்த நடேசனின் சகோதரரும் மகனும் அங்கிருந்து பதட்டத்துடன் கிளம்பிவிட்டனர்.
இந்த சூழலில் பத்மநாதன் குறித்து விசாரித்த போது, வெளியே வந்த பத்மநாதனை மலேசிய புல னாய்வுத்துறையின் உதவியுடன் இலங்கை புலனாய்வுத் துறையினர் கடத்திசென்றுள்ள தகவல் கிடைத்தது. இந்த கடத்தல் விவகாரத்தில் மலேசிய அரசின் பாதுகாப்பு மற்றும் மலேசிய புலனாய்வு துறையின் தொடர்புகளையும் இலங்கை, மலேசியாவின் கூட்டு சதியையும் மறைப்பதற்காகவே தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் பத்மநாதன் கைது செய்யப்பட்டார் என்று இலங்கை அரசால் செய்தி பரப்பப்படுகிறது. தற்போது இலங்கைக்கு கடத்தப்பட்டுள்ள பத்மநாதன் சிங்கள புலனாய்வு துறையினரால் அங்கு கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக் கிறார்'' என்று விவரிக் கின்றனர். செல்வ ராஜா பத்மநாதன் கைது செய்யப்படவில்லை, கடத் தப்பட்டிருக்கிறார் என்பதை உறுதிசெய்யும் விதத்தில் தாய்லாந்து பிரதமர் அப்சிட்வெஜ்யஜிவா, ""தாய்லாந்தில் அவர் கைது செய்யப்படவில்லை'' என்று தற் போது தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டு கின்றனர் பத்மநாதன் தரப்பினர்.
புலிகளின் வெளியுலக வர்த்தக தொடர்பு கள் அனைத்தையும் கவனித்து வந்தவர் பத்மநாதன். புலிகளின் கப்பல் வர்த்தகம், அதன் நிதிகளை கையாளுதல், புலம் பெயர்ந்த தமிழர்கள் கொடுக்கும் நிதிகள், அதன் மூலம் புலிகளுக்கான ஆயுத கொள்வனவு செய்து அதனை தமிழீழ தாயக பிரதேசத்திற்கு அனுப்புதல் என புலிகளுக்கான அனைத்துலக தொடர்புகளை கவனித்து வந்தவர் இவர்.
புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம் என்று கொக்கரித்துவருகிற ராஜபக்சே, 3 லட்சம் தமிழர்களை முள்கம்பிகளுக்கிடையே சிறை வைத்து கொடுமை செய்து வருகிறார். உணவு, உடை, மருந்து என அடிப்படை வசதிகள் எதுவு மின்றி பைத்தியமாக்கப்பட்டு வருகிறார்கள் தமிழர்கள். இதனால், அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியமற்ற தாகிவிட்ட சூழலில், தமிழர்களின் உரிமைகளை பெறும் முயற்சியில் இலங்கைக்கு வெளியே தமிழீழ அரசை அமைக்கும் முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தார் பத்மநாதன். இந்த சூழலில்தான் பத்மநாதன் இலங்கை புலனாய்வுத் துறை யினரால் கொழும்புக்கு கடத்தப்பட்டி ருக்கிறார்.
இது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினர்களிடம் பேசிய போது, ""தமிழீழ தலைவர்கள் யாரும் இலங்கையிலோ வெளிநாடுகளிலோ இருக்கக்கூடாது, அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார் ராஜபக்சே. புலிகளின் இயக்கத்தை அழித்து எறிந்து விட்டதாக ராஜபக்சே கூறி வருகிற நிலையில், பத்மநாதன் தலைமையில் புலிகள் மீண்டும் ஒருங்கிணையும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சிகளுக் கும் பல்வேறு நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் ஒருமித்த குரல் கொடுத்து வருகின்றனர். இதன்மூலம் மீண்டும் பெரிய அளவில் ஆயுத போராட்டத்தை முன்னெடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் இலங்கையிலும் வெளிநாடு களிலும் மறைமுகமாக செயல்படும் புலிகளின் தலைவர் களை கைது செய்து கொல்லப்பட வேண்டுமென்கிற முடிவை மேற்கொண்டு வருகிறார்.
போர் நடவடிக்கைகள் முடிவுக்குப் பிறகு ராஜ பக்சேவிற்கு சவாலாக இருந்து வருபவர் பத்மநாதன். நாடு கடந்த தமிழீழ அரசு உருவாவதை தடுக்கும் முயற்சியாகவும் உலக தமிழர்கள் ஒரு குடையின் கீழ் அணி திரள்வதை தடுத்து நிறுத்த வேண்டியும் பத்மநாதனை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வர இந்தியா உதவ வேண்டுமென்று இந்திய வெளியுறவு அதிகாரிகளிடம் பகிரங்கமாகவே கோரிக்கை வைத்தவர் ராஜ்பக்சே. அந்த கோரிக்கைக்கு தற்போது பலன் கிடைத் துள்ளது.
ஈழத்தமிழர்களின் செயல்பாடுகள் துளியளவும் இருக்கக்கூடாது என்பது ராஜபக்சேவின் நோக்கமாக இருக்கிறது. முகாம்களுக்கு எந்த வசதியையும் செய்து தருவதில்லை. வணங்காமண் கப்பலில் நிவாரணப் பொருட்கள் உட்பட எந்தப் பொருளையும் அனுமதிப்பதில்லை. முள் கம்பிகளுக்கிடையே சிக்கியிருக்கும் தமிழர்களில் விடுதலைப்புலிகளை அடையாளம் கண்டு அவர்களைத் தனியே பிரித்து அழித்தொழிக்கும் வேலையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது ராஜபக்சே அரசு. இதற்காக செட்டிகுளம் முகாம் உள்ளிட்ட முள்வேலி முகாம்களுக்கு 3 முறை சென்றிருக்கிறார் கருணா. இதுபோல, டக்ளஸ் தேவானந்தாவும் ஒருமுறை சென்று அடையாளம் காட்டியிருக்கிறார். இவர்களால் அடையாளம் காட்டப்பட்ட புலிப்போராளிகளையும் தலைவர்களையும் முகாமிலிருந்து பிரித்து வெவ்வேறு சிறைகளில் அடைத்துவிட்டனர்.
15 நாட்களுக்கு முன்பு, இலங்கையின் பல்வேறு சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்த புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்களான பாலகுமாரன், தங்கன் மற்றும் முக்கிய தளபதிகளான யோகி கரிகாலன், வேலன், லாரன்ஸ், சிவபாலன் உள்பட 120-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அவர்களை கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கி ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர் ராணுவத்தினர். படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை நிர்வாணமாக்கி, அந்த உடல்களை தடுப்பு முகாம்களில் வீசியெறிந்துவிட்டு போனார்கள். தற்போது இலங்கை புலனாய்வு துறையினரால் இலங்கைக்கு கடத்தி வரப்பட்டுள்ள பத்மநாத னும் கொடூரமாக கொல்லப்படலாம். ஆக தமிழீழ தலைவர்கள் என அறியப்படுகிற தலைவர்களை ரகசியமாக படுகொலை செய்து வருகிறார் ராஜ பக்சே'' என்கின்றனர்.
""சொந்த மண்ணில் நசுக்கப்பட்ட ஈழத்தமிழர் கள், வேறு மண்ணிலிருந்தும் செயல்படக் கூடாது என்பதில் வெறியோடு செயல் படுகிறார். உலகின் எந்த ஒரு நாட்டின் மூலையிலிருந்து யாரிடமிருந்தும் "தமிழ் ஈழ' ஆதரவுக் குரல் கேட்டாலும் கே.பி.பாணியில் அவர்களை கொழும்புக்கு கொண்டு வந்து நசுக்கு வதில் வெறித் தன உறுதியோடு இருக்கிறார் ராஜபக்சே'' என்கிறார்கள் கொழும்பு வட்டாரத்தினர். ""புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி, இயக்க செயல்பாடு, உலகளாவிய கவன ஈர்ப்பு ஆகியவற்றை போருக் குப்பின் ஒருங்கிணைக்கும் சக்திகளில் ஒருவராக இருந்தவர் செல்வராஜா பத்மநாதன். அவரைக் கைது செய்ததன் மூலம் புலம் பெயர்ந்த தமிழர் களின் செயல்பாடுகள் முடங்கி விடும் என நினைக்கிறார் ராஜபக்சே. அதற்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவி யையும் கோருகிறார். தங்கள் பூர்வீக மண்ணான தமிழீழத்தில் ஒரு ஈழத்தமிழன்கூட உயிருடன் இருக்கக்கூடாது என்பதுதான் ராஜபக்சே அரசின் திட்டம். இத்தகை கொலைவெறிமிக்க அரசாங்கம் எந்த நாட்டிலும் இருக்காது'' என்கிறார்கள்.
பொருத்தமான சூழ் நிலையை எதிர்பார்த்து பதுங்கி யிருக்கும் புலிகள் தரப்போ, புதிய பயிற்சியில் தீவிரமாக இருக் கிறது.
""ஆயுத பலத்தில் இப்போது நாங்கள் பலவீனமாக இருக்கலாம். ஆனால் விடுதலை உணர்வில் மாபெரும் பலத்துடன் இருக்கிறோம். தலைவர் பிரபாகரனின் கட்டளைப்படி உரிய நேரத்தில் எங்கள் பலத்தைக் காட்டுவோம்'' என புலம் பெயர்ந்து வாழும் தமிழர் களுக்கு நம்பிக்கையான செய்தியை அனுப்பியிருப்பதாக காடுகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-கொழும்பிலிருந்து எழில்
எம் தலைவர் பிரபாகரன் சாகவில்லை-காணொளி பாடல்
http://www.youtube.com/watch?v=REA5Ji-EPv4
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
♥ தாயை சந்திக்கும் தருணங்களில்...நக்கீரன் தொடர்...! ♥
எல்லாம்நிறைவேறிய மே 17-ம் நாள் நந்திக்கடல் கரையில் நின்றவர். எங்கும் பிணக்காடாய் கிடந்த முல்லைத்தீவு கடற்கரை யைக் கண்டவர். போராளி. வவுனியா காடுகளை நன்கறிந்தவராயிருந்ததால், தப்பி வந்த முதல் நாள் இரவே காட்டுக்குள் மறைந்து, எப்படியோ கொழும்பு சேர்ந்து, புண்ணியவான்கள் சிலரின் உதவியோடு ஐரோப்பிய நிலப்பரப்பினை சேர்ந்துவிட்டார். மூன்று வாரங்களுக்கு முன் எனக்குத் தொலைபேசினார். மனதின் பாரங்களை இறக்கிவைக்க வேண்டி பிரான்சிலுள்ள லூர்து மாதா திருத்தலம் வந்திருப்பதாகவும், அங்கிருந்தே தொலைபேசுவதாகவும் கூறினார். அந்தப் போராளியின் பெயர் சிவரூபன்.
வேரித்தாஸ் வானொலியில் என் முதல் லூர்துமாதா திருத்தல பயணம் குறித்து படைத்த நிகழ்ச்சி செறிவானது. எனக்கே மிகவும் பிடித்திருந்தது. உலகில் நான் பார்த்து "வியாபாரம்' இல்லாதிருந்த புண்ணிய இடம் அது. அதீத பக்தியெல்லாம் பொதுவில் எனக்கு வராத சமாச்சாரம். ஆனால் இத்தூய மண்ணில் காற்தடம் பதித்த கணத்திலேயே கண்கள் பனித்தன. சுமார் பத்து நிமிடங்கள் கட்டின்றி அழுதுகொண்டி ருந்தேன். சடங்குகளில்தான் விருப்பில்லையே தவிர சரணடையும் ஆன்மீகத்தில் ஆசையுண்டு. அதுவும் ஏழாவது வயதில் தந்தையை இழந்து, தாய் வளர்த்த பிள்ளை நானென்பதால் ஆழ்மனதில் மாதா பற்று அதிகம்.
முதன்முறையாக நான் லூர்துமாதா திருத்தலம் சென்றது 1997-ம் ஆண்டு ஐரோப்பாவின் கோடை காலத்தில். திருத் தலத்தினூடே ஓடும் அருவியை பார்த்துக் கொண்டே மரநிழலொன்றில் முன்பகல் முழுதும் அமர்ந்திருந்த வேளை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் ""குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா, குறை யொன்றும் இல்லை கோவிந்தா'' -பாடல் நினைவுக்கு வந்து மனதை நிறைத்தது. மனதெல்லாம் இனம்புரியா நன்றியுணர்வில் நிறைந்து சிலிர்ப்பாயிருந்தது.
அக்கணத்தில் என் நாட்குறிப்பேட்டை எடுத்து, ""சொல்லில், சொல்லில் வடிக்க முடியா நன்மைகளை நீ செய்தாய், குறை யென்று என் வாழ்வில் ஏதுமில்லை'' என்று எழுதிய பாடலுக்கு 2001-ம் ஆண்டு இசையும் அமைத்தேன். உண்மையில் நிர்வாகம், பேச்சு, எழுத்து இவற்றையெல்லாம்விட என் இயல் பான தாய்மாடி இசை. கிடார், கீ போர்டு எல்லாம் ஒரு காலத்தில் நன்றாக இசைப்பேன். அவற்றையெல்லாம் இழந்துவிட்டேனே என்று அவ்வப்போது மனம் கிடந்து தவிக்கும்.
திருத்தல மர நிழலில் அமர்ந்து எழுதிய அந்தப் பாடலின் சரணத்தில் ""வளர்த்த ஆசைகள் வசமாக வில்லை, நினைத்த காரியம் நிறைவேறவில்லை, ஆனாலுமே அன்பானவா... குறையென்று என் வாழ்வில் ஏதும் இல்லை'' என்ற வரி அவ்வப்போது என் நாவில் வந்து போகிற மறக்க முடியாத வரி. உண்மையில் என் வாழ்வும் அதுதான். வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் இரண்டிலும் சமநிலை பேணப் பயின்றுவிட்டால் குறையென்று வாழ்வில் எதுவுமில்லைதான்.
நான் 1997-ம் ஆண்டு வேரித்தாசில் லூர்துமாதா திருத்தலம் பற்றி படைத்த நிகழ்ச்சியை, வன்னிக் காடுகளுக்குள்ளிருந்து அப்போது கேட்ட போராளியான சிவரூபன் 12 ஆண்டுகளுக்குப் பின் அவர் அத்தலத்தில் நின்றபோது நினைவுகூர்ந்து என்னையும் நினைத் திருக்கிறார். வாழ்வு பாரபட்சம் காட்டி பரிசாகத்தரும் பெறுமதியான பொக்கிஷங்கள் பொன்னோ, பொருளோ, பணமோ அல்ல. இத்தகு முகம் தெரியா மானுட உறவுக்கண்ணிகள்தான்.
இன அழித்தலின் பிணக்காடு வழியே ரத்தமும் சதையும் மிதித்து தன் உயிரை மிச்சப்படுத்திய சைவரான சிவரூபனுக்கு அழுவதற்கோர் தாய்மடி அவசியப்பட்டிருக்கிறது. லூர்துமாதா வீடு நோக்கி ரயில் ஏறியிருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன் சிலுப்பிய கத்தோலிக்க விசுவாசப் பாதுகாப்பு பரிசேயக் கூட்டத்தைப் பற்றி எழுதியிருந்தேனல்லவா? அதென்ன கடவுளின் அருட்செயலோ தெரியவில்லை. இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு மரித்த பின், அவரது உடல் வைக்கப்பட்ட கல்லறைக் கோயிலில் கடமையாற்றும் தமிழகத்து அருட்தந்தை ஒருவர் விடுமுறைக்காய் வந்திருந்தார். காஞ்சிபுரத்துக்காரர். கிறித்தவ உலகின் மிகப்புனிதமான கோயில்களில் ஒன்று இது. இந்தக் கல்லறையினின்றுதான் இயேசுபிரான் சாவின் தளைகளை அறுத்தெறிந்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறித்தவ மக்கள் நம்புகிறார்கள்.
இந்த காஞ்சிபுரத்து அருட்தந்தை என்னைப் பார்க்க வந்திருந்தார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களிடம் சிறியதோர் வேலை ஆகவேண்டியிருக்கிறது, உதவ முடி யுமா என்று கேட்டுத்தான் வந்திருந் தார். உரையாடிக் கொண்டிருந்த போது சொன்னார்:
""உங்களது தயாரிப்பில் இசைஞானி ஆக்கினாரே சிம்பொனியில் திருவாச கம்... என்னமான படைப்பு... (ரட்ஹற் ஹ ஙஹள்ற்ங்ழ் ல்ண்ங்ஸ்ரீங்) என்று சிலாகித்து வியந்தவர் தொடர்ந்தும் சொன்னார். ""ஏறக்குறைய எல்லா நாட்களுமே இயேசுவின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்ட அத்திருக்கோயிலில் பக்தர்களெல்லாம் அகன்றபின் இரவு பத்துமணிக்கு மேல் நான் சிம்பொனியில் திருவாசகம் கேட்பேன்... அப்படியொரு சிலிர்ப்பான அனுபவமாக இருக்கும்...'' என்றார்.
மதவெறியின் விஷவேர்கள் இந்த மண்ணில் ஒருபோதும் இங்கு ஆழம் போக முடியாதென்பதற்கு சிவரூபனும் இந்த அருட்தந்தையும் சமீப நாட்களில் நான் கண்ட சாட்சிகள்.
தாயின் திருத்தலத்தில் நின்று சுமார் பத்து நிமிடங்கள் பேசிய சிவரூபன், விம்மி அழுதார். எனது முகவரியை பெற்றுக்கொண்டார். கடைசி நாட்களில் முல்லைத்தீவில் கண்டவற்றையெல்லாம் எழுதி அனுப்பு வேன் என்றார். அவரது கடிதம் நேற்று வந்தது. கடிதம் வடித்த ரத்தக் காட்சி களை அடுத்த இதழில் பதிக்க விழைகிறேன். வேலுப்பிள்ளை பிரபாகரன் பெரியார் வழி. கடவுள் நம்பிக்கை இருக்க வில்லையென்பது நேர்காணலினூடே தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இயற்கையை, ஒவ்வொரு மனித வாழ்வுக்கும் ஓர் அர்த்தம் இருப்பதைத் திடமாக நம்பினார். வாழ்வை மதித்தார், நேசித்தார். நட்பை, மானுடத்தின் மென்மையான உணர்வுகள் யாவற்றையும் கவித்துவத் தன்மையோடு போற்றினார்.
நேர்காணலில் அவரிடம் நான் கேட்ட முதற்கேள்வி அவரது தாயின் நினைவுகளைப் பற்றித்தான்.
""உங்கள் தாயை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? பார்க்க முடியவில்லை, அவர் அருகில் இல்லை என்ற ஏக்கம் எழுவதுண்டா? உங்கள் தாயின் நினைவுகளை உலகத் தமிழரோடு பகிர்ந்துகொள்ளுங்களேன்..'' என்றேன். இதோ வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற மகனின் பதில் :
""தாயை சந்திக்கணும் என்று ஆசை இல்லாமல் ஒரு மகனும் இருக்கமாட்டான். ஆனால் என்னுடைய சூழலை பொறுத்த வரைக்கும் 19 வயதிலேயே நான் தலைமறைவான வாழ்க்கை தொடங்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. சிறு வயதிலிருந்தே எனது வீட்டை விட்டு பிரிந்ததால் எனக்கு அவர்களோடு வாழும், பார்க்கும் அந்த சந்தர்ப்பம் குறைவாகவே இருந்தது. என்னுடைய தாயுடன் நான் செலவிட்ட காலங்கள் அந்த 19 வயது வரைதான். அதிலேயும் 18-19 வயதிலேயே நான் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கிட்டேன்.
அந்த காலகட்டங்களில் போலீஸ் என்னை வெளிப்படையாக தேடவில்லையே தவிர, நான் போராட்ட வாழ்க்கையில் ஈடுபட்டதால் அப்பவே வீட்டில் இருப்பது குறைவு. பிறகு தலைமறைவு வாழ்க்கை யோடு வீட்டுக்குச் செல்வதையே தவிர்த்து விட்டேன்.
அந்த நேரங்களில் என்னைத்தேடி போலீஸ் எப்போதும் வீட்டுக்கு வந்து கொண்டே இருக்கும். எனது தாயைக்கூட விசாரிப்பார்கள். ஒருமுறை என் தாயை போலீஸ் ஸ்டேஷனுக்கு பிடித்துக்கொண்டு போய் ஒருநாள் வைத்திருந்தார்கள்.
அப்படிப் போராட்ட வாழ்வின் ஆரம்பத்தில் இருந்தே வீட்டுத் தொடர்பே இல்லாமல் இருந்துவிட்டேன். எப்போதாவது 5 வருடம் அல்லது 6 வருடம் என நீண்ட இடை வெளிகளுக்குப் பின்புதான் ஒருநாள் அல்லது இரண்டு நாள் என தொடர்ச்சியாக சந்திப் போம்.
இப்பகூட கடைசியாக 87-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் வந்த கால கட்டத்தில் நாங்கள் ஒரு சுமூக சூழலில் இருந்த நேரத்தில் என் தாயை நான் சந்தித்தேன்.
அதன்பிறகு இந்தியாவோடு மோதல் வர, தலைமறைவாக இருந்ததோடு கிட்டத்தட்ட 87-லிருந்து இதுவரைக்கும் என் தாயை சந்திக்கவில்லை.
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
நன்றி....!
Locate IP Address on Map
http://www.google.co.in/transliterate/indic/Tamil
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு: ஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும் தமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்
சற்று முன்...!
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- "தினத்தந்தி " தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)
- "தினமணி" (1)
- "தினமணி" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)
- chat (2)
- firefox (2)
- shortcuts" (1)
- sms (2)
- video (2)
- அரசியல் (12)
- ஆனந்த விகடன் (1)
- இணைய நூல் (3)
- இணைய முகவரிகள் (2)
- இமெயில் (2)
- இமெயில் குழு (2)
- இலங்கை (21)
- ஈழ வரலாறு புத்தகம் (1)
- எல்லாம் (1)
- என் பக்கம் (9)
- கணினி தொழில் நுட்பம் (32)
- கதை (6)
- கலக்கல் டான்ஸ் வீடியோ (1)
- கவிதை (10)
- குர்து இனத்தவர் கடிதம் (1)
- குறும் படம் (2)
- சிரிப்பு (10)
- சினிமா (9)
- சீமான் (11)
- சு.பொ. அகத்தியலிங்கம் (3)
- தமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)
- தமிழச்சி (5)
- தமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)
- தமிழீழ வீடியோ பாடல் (2)
- தமிழீழம் (53)
- தமிழ் 99 (2)
- தமிழ் ஈழம் (11)
- தமிழ் தட்டச்சு உதவி (2)
- தலைவர் பிரபாகரன் தொடர் (12)
- தன்னம்பிக்கை (1)
- தாமரை (4)
- தியாகு (4)
- திருமாவளவன் (1)
- தினத்தந்தி (2)
- தினமணி (55)
- நகைச்சுவை (13)
- நக்கீரன் (2)
- படங்கள் (18)
- பாரதிராஜா (2)
- பிரபாகரன் (15)
- பெரியார் (9)
- பேச்சு (1)
- பேட்டி (4)
- பொதுவுடைமை (5)
- மனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)
- மூட நம்பிக்கை (8)
- மொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)
- ராஜபக்சே (1)
- விடுதலைப் புலிகள் (14)
- விஜய் (5)
- வீடியோ (14)
- வீடியோ படம் (85)
- வைரமுத்து (1)
- ஜி இமெயில் (2)
- ஜி மெயில் (2)
- ஜெகத் கஸ்பார் (1)
முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!
-
▼
2009
(874)
-
▼
August
(110)
-
▼
Aug 13
(10)
- ♥ மரணத்துக்கு வெகு அருகில்.. நான் செய்ய வேண்டிய க...
- ♥ துரோக நடனம் ♥
- ♥ ஈழத்தில் தொடரும் துயரம்-வீடியோ ♥
- ♥ அதிரவைக்கும் வன்னியிலுள்ள புதிய மரணப் படுகுழிகள்...
- ♥ இரு சிங்கள இளைஞர்கள் சுட்டுக்கொலை: ஆத்திரமடைந்த...
- ♥ "யார் தீவிரவாதி; யார் போராளி என்பதை காலம் தீர்மா...
- ♥ ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது ! ♥
- ♥ போர்ச் செய்திகள் இன்றித் திணறும் கொழும்பு சிங்கள...
- ♥ தமிழன் குரலே கேட்கக் கூடாது! ♥
- ♥ தாயை சந்திக்கும் தருணங்களில்...நக்கீரன் தொடர்...! ♥
-
▼
Aug 13
(10)
-
▼
August
(110)