தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Monday, June 1, 2009

♥ பிரித்தானிய தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஈவினிங் ஸ்டான்டட் நாளிதழ் ♥

பிரித்தானிய தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஈவினிங் ஸ்டான்டட் நாளிதழ்
பிரசுரித்த திகதி : 01 Jun 2009

இன்றைய ஈவினிங் ஸ்டான்டட் (EVENING STANDARD) நாளிதழ்,.. பிரித்தானியாவில் ஈழத் தமிழர்கள் நடத்தும் போராட்டம் அடேல் பாலசிங்கம் அம்மையாரால் தூண்டிவிடப்பட்ட போராட்டம் என வர்ணித்து செய்தி வெளியிட்டுள்ளது.  

உடல் நலம் குன்றிய நிலையில் உள்ள அடேல் பாலசிங்கம் அம்மையாரை, சிறுவர்களுக்கு சயனைட் வழங்கியவர் என்றும் அவர் தூண்டுதலின் பெயரில் பிரித்தானியாவில் பலபோராட்டங்கள் நடப்பதாகவும் செய்தியை வெளியிட்டுள்ளது  ஈவினிங் ஸ்டான்டட்(EVENING STANDARD) நாளிதழ்.

எமது விடுதலைப் போராட்டத்தை வெளிநாடுகளில் சீர்குலைக்க, இலங்கை அரசு சில செய்தியாளர்களை விலைக்கு வாங்கி இப்படியான கட்டுரைகளை நாளிதழ்களில் பிரசுரிக்கச் செய்கிறது. இந்த கட்டுரையை எழுதியவர் அமர் சிங் எனும் ஒரு சீக்கியர் ஆவார்.  பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழ் உறவுகளும் கீழ்காணும் மின்னஞ்சல்லூடாக குறிப்பிட்ட நாளிதழின் ஆசிரியருடன் தொடர்புகொண்டு, உங்கள் கண்டனங்களை உடனே வெளிப்படுத்துங்கள்.

editor@standard.co.uk

இங்கு மக்கள் உண்ணாவிரதம் , மற்றும் தொடர்போராட்டம் என தமது சக்திக்கு மீறி உணர்ச்சிபூர்வமாக முனேடுத்துவரும் நிலையில், எமக்கு உதவிசெய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாமல் இருந்தால் அதுவே போது என்பதே எமது மக்களின் ஒருமித்த கருத்தாக இருக்கவேண்டும்...


http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1243857190&archive=&start_from=&ucat=4&


அந்தச் செய்தியைப் பார்வையிட இங்கு அழுத்தவும்

http://www.thisislondon.co.uk/standard/article-23701964-details/article.do?ito=newsnow&


 

♥ உலகத் தமிழினம் ஜெர்மனி, இத்தாலி ♥

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற மாபெரும் பேரணி: 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு


சிறீலங்கா அரசுமேற்கொண்ட தமிழ்இனஅழிப்பிற்கு உரியவிசாரனைகள் ஐ.நாடுகள் சபை மேற்கொண்டு போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரசிற்கு உரியதண்டனை வழங்கவேண்டும் எனக்கோரியும் சிறீலங்கா அரசபடைகளின் தடுப்புமுகாம்களில் உள்ள தமிழ்மக்களை ஐக்கியநாடுகள் சபை பொறுப்பெடுத்து

அம்மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனக்கோரியும் யேர்மன் தலைநகர் பெர்லின் நகரில் மாபெரும் பேரணி ஒன்று தமிழ்மக்களால் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

பேர்லின் வெளிநாட்டு அமைச்சிற்கு முன்பாக நேற்று காலை 11.30 க்கு ஆரம்பித்த பேரணி மதியம் 2.30 மணிக்கு பேர்லினில் பிரசித்தி பெற்ற பிறன்பேர்க்க ரோர் எனும் இடத்தைச் சென்றடைந்தது

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இம் மாபெரும் பேரணி பல கிலோமீற்றர் தூரத்தை மக்கள் வெள்ளமாக நிறைத்திருந்ததது

http://cache.daylife.com/imageserve/04vS08NcYC7bK/610x.jpg

யேர்மனியின் பிரதான வீதிகள் ஊடாக நகர்ந்த இப்பேரணியில் பங்கொண்ட மக்கள் தாயகத்தில் மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் அம்முகாம்களில் மக்கள் படும் அவலத்தை விளக்கும் சுலோகங்களைத் தாங்கிச் சென்றதுடன் தேசியக்கொடி மற்றும் தேசியத்தலைவர் ஆகியோரின் படங்களையும் தாங்கிச் சென்றதுடன் கொத்தொலிகளையும் எழுப்பிச்சென்றனர்.

இப்பேரணி முடிவிடத்தை சென்றடைந்ததும் ஈகைச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஈழத்தின் கதை எனும் தலைப்பில் யேர்மனிய மொழியில் இளையோரால் நிகழ்த்தப்பட்ட நாடகம் மக்களை பெரிதும் ஈர்த்திருந்தது

அத்துடன் யேர்மனிய மொழியில் இளையோர்கள் தற்போதைய நிலைமைகள் சம்பந்தமாக உரையாற்றினர். தமிழர்களின் இலட்சியத்தை அடைய நாம் எல்லோரும் என்றும் துணையாக இருப்போம் என்ற உறுதிமொழியுடன் மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

 

http://cache.daylife.com/imageserve/0eadbQxe12dQt/610x.jpg

http://cache.daylife.com/imageserve/04lI7QY6bh7fy/610x.jpg

http://cache.daylife.com/imageserve/04mtgs0beKgLm/610x.jpg

http://cache.daylife.com/imageserve/07Bs4gz1A76Xi/610x.jpg

 

 

 

 

 

 

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3603:-25-&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56
இத்தாலி மாந்தோவா மாநகரின் கஸ்தல் கோல்ப்ரதோ எனும் இடத்தில் நடைபெற்ற நினைவு அஞ்சலியும் கண்டனப் போராட்டமும்


31-05-2009 ஞாயிற்றுக்கிழமை இத்தாலி மாந்தோவா மாநகரின் கஸ்தல் கோல்ப்ரதோவிலுள்ள பியாட்சா மர்திரியில்  காலை 9.35 மணியளவில் நினைவு அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகியது. பொதுச்சுடரினை இத்தாலி மேற்பிராந்திய தமிழர் ஒன்றியத்தின் மாந்தோவா பொறுப்பாளர் திரு. தோமஸ் மரியதுரை  அவர்கள் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து எமது மண்ணின் சுதந்திரத்திற்கான வேள்வியில் தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களுக்கும் சிங்கள இனவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து எமது கல்லறைப்

பாசறையில் கலந்துகொண்ட அனைத்து மக்களும் மலர்வணக்கம் செலுத்தினர்.

http://farm4.static.flickr.com/3567/3584274673_50b3de3b74.jpg?v=0

http://farm4.static.flickr.com/3365/3585081216_35607b281e.jpg?v=0

நிகழ்வில் அடுத்ததாக வரலாற்று உரை செல்வி ஸிந்து அவர்களால் அளிக்கப்பட்டது. நிகழ்வின் ஆரம்ப உரை திரு. வேலுப்பிள்ளை செந்தில்நாதன் அவர்களால் வழங்கப்பட்டது. அடுத்த நிகழ்வாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அதனிடையே செல்வி ஜோதிகா குகதாஸ் அவர்களால் இத்தாலி மொழியில் நாட்டின் தற்போதைய நிலைகள் விளங்கவைக்கப்பட்டது. அடுத்ததாக செல்வி கஜசிந்திகா லலிதகுமார் இத்தாலி மொழியில் உரையாற்றினார். இந்நிகழ்வில் இறுதியாக திரு. வேலுப்பிள்ளை செந்தில்நாதன் நன்றியுரை வழங்க நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற தாயகப் பாடலுடன் நண்பகல் 12.45 மணியளவில் நிறைவுபெற்றது.

http://farm3.static.flickr.com/2434/3585081320_50d10d0071.jpg?v=0


http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3601:2009-06-01-09-19-38&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56

♥ கருணாநிதி எங்களை நம்பினார்!’ - ராஜபக்சே வீடியோ பேட்டி ♥

கருணாநிதி எங்களை நம்பினார்!' - ராஜபக்சே வீடியோ பேட்டி


வாக் தி டாக் என்று ஒரு நிகழ்ச்சி… என்டிடிவியில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் எடிட்டராக உள்ள சேகர் குப்தா இதை நடத்துகிறார்.

இந்த நிகழ்ச்சிக்காக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை அவர் நேற்று கொழும்புவில் பேட்டியெடுத்துள்ளார். நேற்று முழுவதும் என்டிடிவியில் அதைத்தான் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.

ஒரு குறைந்தபட்ச குற்ற உணர்வு கூட இல்லாமல், ராஜபக்சேவின் ஊதுகுழலாக மாறி சேகர் குப்தா கேள்வி கேட்பதையும், பல நேரங்களில் ராஜபக்சேவுக்கே எடுத்துக் கொடுப்பதையும் இதில் காணலாம். தமிழர்கள் மீது வட இந்தியர்களுக்கு இருக்கும் விரோத மனப்பான்மைக்கு இந்த நேர்காணல் நிகழ்ச்சி இன்னும் ஒரு உதாரணம்.

தேர்தலுக்காக தமிழகத் தலைவர்கள்தான் ஸ்டன்ட் அடிப்பதைப் போலவும், இந்த வடக்கத்திக்காரர்கள் ரொம்பத்தான் யோக்கிய சிகாமணிகள் என்பது போலவும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கருத்துருவாக்க முயன்று வருவதைப் பார்த்திருப்பீர்கள். ராஜபக்சேயுடனான பேட்டியிலும் அந்த தொனி சேகர் குப்தாவிடம் வெளிப்பட்டதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

ராஜபக்சேவுக்கு பிடித்த மாதிரி கேள்விகள் கேட்டு, அவரது கருத்துக்களைப் பரப்பும் ஒரு முயற்சியாக… தமிழர்களின் ஹீரோவாக ராஜபக்சேவை சித்தரிக்கும் முயற்சி போலவே இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

"பிரபாகரன் தமிழர் பகுதிகளை மட்டும் ஆளவேண்டும் என விரும்பவில்லை… ஒட்டு மொத்த இலங்கையையும் பிடிக்க நினைத்தார்", என்கிறார் ராஜபக்சே.

பிரபாகரன் 'மரணம்' குறித்த செய்தி தனக்கு 19-ம் தேதிதான் தெரியும் என்றும், இந்தியத் தேர்தலுக்காக தமிழர் அழிப்பு வேலையை தள்ளிப் போடவில்லை என்றும், உண்மையில் இந்த வெற்றியை இந்தியத் தேர்தலுக்கு முன் நாங்கள் பெற்றிருந்தால் இந்தியத் தேர்தலில் காங்கிரஸ் இன்னும் அமோக வெற்றி பெற்றிருக்கும் என்றும் அவர் கூறினார்.

பிரபாகரன் விஷயத்தில் இந்தியத் தமிழர்கள் பெரிதாக அக்கறை காட்டவில்லை என்றும், அவர் 'மரணம்' முன்பே அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஒரு பாதிப்பும் தமிழ்நாட்டில் வந்திருக்காது என்றும் உறுதியாகக் கூறினார் ராஜபக்சே.

பிரபாகரனைக் 'கொல்வது' குறித்து இந்தியாவுக்கும் தனக்கும் பேச்சுவராத்தைகள் நடந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார் ராஜபக்சே.

தமிழக விவகாரங்கள் குறித்துக் கேட்டபோது,ஜெயலலிதாவுக்கு மக்கள் பதில் சொல்லி விட்டார்கள் என்ற ராஜபக்சே, தமிழக முதல்வர் கருணாநிதி தன் நண்பர்; தனது விருந்தாளியாக அவர் இலங்கைக்கு நிச்சயம் வரவேண்டும் என்றும் அவர் இந்த நிகழ்ச்சியில் கேட்டுக் கொண்டார். ஜெயலலிதாவும் கூட இலங்கைக்கு வரலாம் என்றார் ராஜபக்சே.

வைகோவைப் பற்றி பேசும்போது, அவர் இலங்கைக்கு பாஸ்போர்ட்-விசா இல்லாமல் வந்ததைப் பற்றிக் குறிப்பிட்டார். உடனே, இந்தக் குற்றத்துக்காக அவரை கைது செய்வீர்களா என சேகர் குப்தா கேட்கிறார்.

"அவர் தேர்தலில் தோற்றுவிட்டார் அல்லவா… அப்புறமென்ன… நான் அதை மறந்து மன்னித்துவிட்டேன்!", என்கிறார் ராஜபக்சே.

அட கொடுமையே…

குறிப்பு: இந்தப் பேட்டியைப் பார்ப்பவர்களுக்கு ராஜபக்சேயின் 'ஆங்கில அறிவு' தெளிவாகப் புரியும். அவர் சொல்ல நினைப்பதும், அதற்கு அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் முரண்படுவதைக் காணலாம். நாம் இதைக் குறிப்பிட்டு கிண்டலடிக்க வேண்டாம் என்பதாலேயே அதை செய்தியில் குறிப்பிடவில்லை.

பிரபாகரன் செய்த பெரிய தவறு என்ன என்ற கேள்விக்கு ராஜபக்சே முதலில் தரும் பதிலைக் கவனித்து அதற்கு தமிழர்த்தம் சொல்லுங்கள்!

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3587:2009-05-31-13-29-41&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54
http://www.youtube.com/watch?v=pTpZXXHtW6g

♥ "இலங்கை அரசின் வெற்றிக்கு நாங்களே காரணம்" -பாக்கிஸ்தான் விமானிகள் ♥

இலங்கை அரசின் வெற்றிக்கு பாக்கிஸ்தான் விமானிகளே காரணம் என அந்நாட்டு பத்திரிகை தெரிவிக்கிறது


இலங்கையிடம் உள்ள மிக் 27 ,கிபீர் விமானங்கள் எப் 7 ,மற்றும் MI-24 உலங்கு வானூர்திகள் என்பனவற்றில் பெரும்பாண்மையான விமானங்களை தமது விமானிகளே செலுத்தியதாக தற்போது பாக்கிஸ்தான் பத்திரிகை கூறியிருப்பது இலங்கை அரசை பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இருப்பினும் இந்த தகவலில் எது வித உண்மையும் இல்லை என இலங்கை விமானப்படையின் தளபதி மார்ஷல் ரோசான் குணதிலக மறுத்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தமது விமானப்படையில்

நன்கு பயிற்சி பெற்ற பல விமானிகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.இருப்பினும் தம்மிடம் இருந்து பெற்றுக்கொண்ட 22 அல் காலீட் கவச வாகனங்கள் மூலமே இலங்கை இராணுவம் வெற்றிகரமாக முன்னேறியது என்றும் அந்த  நாழிதளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

அதனையும் மறுத்திருக்கும் உதயநாணயக்கார,  தாம் செக் குடியரசின் தயாரிப்பான T- 55 வகையான கவசவாகனங்களை பாவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானில் உள்நாட்டுப் பிரச்சனை , மதப்பிரச்சனை, மற்றும் தீவீரவாதம் தலைதூக்கி ஆடும் இந்த காலகட்டத்தில், இலங்கையில் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டது பாக்கிஸ்தானின் உதவியால் தான் என்ற் செய்திகள் பரவலாக அடிபடுகின்றன, இச் செய்தி பல நாழிதளில் வெளிவந்தவண்ணம் உள்ளது, பெரும் சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது.

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3600:2009-06-01-08-54-57&catid=35:2008-09-21-04-32-20&Itemid=53

♥ "என் மக்களே எழுந்து நில்லுங்கள்!, அருட்தந்தை ஜெகத்கஸ்பர் "- நக்கீரன் கட்டுரை ♥

   army-21.jpg
tigers-captured-artillery-base-kilinochi.jpg


என் மக்களே எழுந்து நில்லுங்கள்!, அருட்தந்தை ஜெகத்கஸ்பர்

இருபது ஆண்டுகளுக்கு முன் படித்த புத்தகம் ஒன்று தந்த கருத்துக்களை நினைவுக்குக் கொண்டு வர முயல்கிறேன். புத்தகத்தின் பெயர் ""தோல்வியின் பண்பாடு" – Culture of Defeat ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை. ஆனால் அவர் ஜெர்மனி நாட்டுக்காரர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் எழுதப்பட்டது.

படுதோல்வியின் வலியிலும் அவமானங்களிலும் உழன்ற ஜெர்மனி நாட்டு மக்களை பின்புலமாகக் கொண்டு வெளிவந்த புத்தகம். அப்புத்தகத்தின் மறக்க முடியாத சில வரிகள் இவை: ""உன்னை தோற்கடித்தவனின்

இலட்சி யங்களை விட உனது இலட்சியங்கள் உயர்ந்தவையாக இருந்தால், எதிரியின் ஒழுக்கத்தை விட உனது ஒழுக்கம் மேலானதாக இருந்தால் நீ உண்மையில் தோற்றுப் போகவில்லை. அழிவினூடேயும் நீ தலைநிமிர்ந்து நிற்கலாம்!".

நான் பலமுறை பார்த்தும் சலித்துப் போகாத ஆங்கிலத் திரைப்படம் கிளாடியேட்டர் (Gladiator) மகத்தான ராணுவத் தளபதியான மாக்சிமுஸ், சதியால் சந்தையில் அடிமையாக்கப்பட்டு, உரோமாபுரி நகரத்து மக்களின் கேளிக்கைக்காக உயிரை பணயம் வைத்து சண்டையிடும் கிளாடியேட்டர் ஆகி, அப்பேரரசின் மன்ன னுக்கே சவால் விட்ட கதைதான் கிளாடியேட்டர். அப்படத்தின் ஒரு இடத்தில் மாமன்னன் ஜூலியஸ் சீசர் மாக்சிமுஸை தன் போர்க்களக் கூடாரத் திற்கு இரவுப் பொழுதில் அழைப்பார். ""வா… மாக்சிமுஸ் என் காதோடு கதை பேசு… உரோமாபுரி என்றால் என்ன?" என்று கேட்பார். என்ன பதில் சொல்வ தென்று தெரியாமல் திரைப்படத்தின் கதாநாயகன் மாக்சிமுஸ் நிற்பான். அவனை உற்றுப் பார்த்து சீசர் சொல் வார். ""உரோமாபுரி என்பது ஓர் எண்ணம். வனைவு. உயர்ந்தவை என நாம் கனவு கொள்ளும் அனைத்திற்கும் தாய்மடி கிடைக்குமிடம். மாக்சிமுஸ்… உரோமாபுரியின் இன்றைய ஒழுக்கம் அவநம்பிக்கை தருகிறது. இன்னும் ஓர் கடும்பனிக் காலத்தை அது தாக்குப் பிடித்து நிற்குமென நான் நம்பவில்லை. உன் படைகளை தயாராய் வைத்திரு. உரோமாபுரிக்கு நீ தேவை" என்பார் சீசர்.

""சியர்சியாவின் சிவந்த குன்றுகளிலே அடிமைகளின் பிள்ளைகளும் அடிமைப் படுத்தியவர்களின் பிள்ளைகளும் ஒன்றாகக் கரம் கோர்த்து விளையாடித் திரியும் காலம் வரும் எனக் கனவொன்று வைத்திருக்கிறேன்… I have a dream் என்ற மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின் உரையை நாம் மறக்க முடியுமா? அரை நூற்றாண்டிலேயே அவரது அரசியற் பேரன் பராக் ஒபாமா அடிமை வரலாற்றின் பழைய ரத்தக் கறைகளை புதிய கனவுகளால் கழுவிடும் உன்னதத்தினை காண்கிறபேறு நமது கண்களுக்குக் கிடைக்க வில்லையா?

கிளி ஜோசியக்காரர்களை எனக்குப் பிடிக்கும். நேரம் இருந்தால் எங்கு அவர்களை பார்த்தாலும் கையை நீட்டிவிடுவேன். அவர்கள் சொல்லும் எதையுமே நான் நம்புவதுமில்லை, அவர்கள் சொல்லும் எதுவும் நடப்பதுமில்லை. ஆனால், 50 ரூபாய் கொடுத்துவிட்டால் வஞ்சகமின்றி நம்பிக்கை வார்த்தைகளை மடி நிறைய கொட்டிக் கொடுப்பார்கள். நான் கை நீட்டுவதோ அவ் வார்த்தைகளுக்காக அல்ல. அவர்கள் கடைபிடிக்கும் தொழில்நுட்பத்தை ரசிப்பதற் காக. முதலில் ரெண்டும் கெட்டானாகத் தொடங்குவார்கள்… ஆபத்து என்பதுபோல் நடுவழியில் கொக்கி போடுவார்கள்… எல்லாம் சரியாகி பிரமாதமாக இருக்கும் என்ப தாக முடிப்பார்கள். இன்னும் 10 ரூபாய் போட்டுக் கொடுக்கலாம் போல் நமக்கு இருக்கும். நானறியா நாள் முதல் இயற்கை இரகசியமாய் வைத்திருக்கும் விஷயங்களில் ஒன்று நம்பிக்கை வார்த்தைகளுக்கு இருக்கிற உயிர் தரும் ஆற்றல்.

பைபிளில் நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் படித்து, இப்போதும் மறக்காமல் வைத்திருக்கிற பகுதிகள் எவையென்று கேட்டால் கடவுள் தன் தூதர்கள் வழி, தோல்விகளை மட்டுமே சம்பத்தாய் சுமந்து வந்த தன் யூத மக்களுக்கு வழங்கிய நம்பிக்கையின் வார்த்தைகள்தான். ""என் மக்களே… எழுந்து நில் லுங்கள்… உங்கள் துக்க உடைகளையும் துயரக் கோலத்தையும் தூரப் போடுங்கள். கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமாய் சிதறுண்டு போன என் பிள்ளைகளாகிய உங்களை மீண்டும் நான் கூட்டிச் சேர்ப்பேன்… அடிமைகளாய் சிதறிய உங்களை பெருமையின் ஆடைகள் அணிவித்து உரிமைக் குடிமக்களாய் கூட்டி வருவேன். அந்நாளில் பாலைவனத்தில் லீலி மலர்கள் பூக்கும். பாறைகளினின்று நீரூற்றுகள் புறப்படும்… இவ்வாறு பல நூறு வரிகளை நான் மறவாது மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு வார்த்தையும் வசீகரமாய் தூவிச் செல்கிற நம்பிக்கை.

எனவே தான் நொறுங்கிப் போய், இருள் கவிந்து, செல்லும் திசை தெரியாது நிற்கும் நமது ஈழத்தின் ரத்த உறவுகளுக்கு நாம் தொடர்ந்து தரவேண்டியது நம்பிக்கை. எப்படி மழையும் பனியும் மண்ணில் விழுந்தபின் தம் பயனைத் தராது திரும்புவதில்லையோ அவ்வாறே நம்பிக்கை வார்த்தைகளும். எல்லா இரவுகளும் விடியும். எல்லா கொடுமைகளும் முடியும். இலையுதிர் காலம் இதுவென்றால் வசந்தம் விரைவில் வருமென்றுதானே அர்த்தம்?

நான் எழுத்தாளன் அல்ல. எழுதிப் பெரிய பழக்கமும் இல்லை. நண்பர் காமராஜ் அவர்களின் தொடர்ந்த வற்புறுத்தலின் பேரிலேயே "மறக்க முடியுமா?' எழுதத் தலைப்பட்டேன். எழுதத் தொடங்கிய மூன்றாம் வாரத்தில் ஈழத் தமிழ் மக்கள் மீதான இறுதி முற்றுகை தொடங்கியது. அதன்பின் என்னையே நான் ஆற்றுப்படுத்திக் கொள்ளும் களமாகவே தொடர்ந்து எழுதினேன். இக்களம் இல்லாதிருந்தால் ஒருவேளை நானே கூட உடைந்து போயிருப்பேன். நான் எழுதியவை உங்களில் எத்தனை பேருக்கு ஆறுதல் தந்ததென்பது எனக்குத் தெரியாது… ஆனால் நான் தகர்ந்து போய்விடாமல் தாங்கியது இந்த எழுத்து வடிகால்தான். எழுத்தின் வல்லமையை நீண்ட நாட்களுக்குப் பின் உணர உதவிய நக்கீரனுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

கடந்த இதழ் படித்துவிட்டு ""எல்லாம்தான் முடிந்து போயிற்றே… இனியும் அவை பற்றி ஏன் எழுதிக் கிளற வேண்டும்… ஆட்சியில் இருப்போரிடமுள்ள தொடர்பு களை பழுது செய்யாமல் மக்களுக்கு இன்னும் நிறைய நல்ல காரியங்கள் செய்யலாமே…" என்று அக்கறை யுடன் அறிவுரை சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் நான் முதலில் சொன்னது, "சரியாக முடியாதவரை எதையுமே முடிந்துவிட்டதாகக் கருத முடியாது'. Nothing is settled until settled right. மீண்டும் நாம் அனைவருமாய் சொல்வோம், சரியாக முடியாதவரை எதுவும் முடிந்ததாகக் கருதப்பட முடியாது.

முக்கியமாக காழ்ப்புணர்வும் பகைமிகு தன்மையுமின்றி இதய நேர்மையுடன் முன்வைக்கப் படும் உண்மைகள், உறவுகளையும், பரஸ்பர மதிப்பினையும் வலுப்படுத்துமென்பதே எனது ஜனநாயக அனுபவமும், நம்பிக்கையும். நானொன்றும் கட்டுப்பெட்டித்தனமான கத்தோலிக்க குருவானவர் அல்ல. கொஞ்சம் விட்டேத்திதான். என்னிடத்தில் குறைகளும் பல உண்டு. எனினும் சுயநலனுக்காய் பொய்கள் சொன்னதாய் நினைவில்லை. அதுவும் மனித உயிர்கள் சம்பந்தப்படுகையில் உண்மை சொல்லத் தயங்குவதுபோல் பாவம் வேறெதுவுமில்லை.

உண்மைக்கு உள்ள பிறிதொரு குணாதிசயம் விடாப்பிடித்தன்மை. பொதுவாக நீங்கள் பார்த்தீர்களென்றால், பொய் காற்று வேகத்தில் பரவும். எல்லா இடத்திலும் முதல் ஆளாய் போய் நிற்கும். ஆனால் உண்மை, ஆமை போல. உருண்டு, புரண்டு, விழுந்து, எழுந்து, சிராய்ப்புகள் பட்டு, களைத்துப் போய் -ஆனால் வந்து சேரும். காலதாமதம் ஆகுமே தவிர, உண்மை நிச்சயம் வந்து சேரும்.

இதனை நான் இங்கு குறிப்பிட தனிப்பட்ட காரணமும் உண்டு. "சென்னை சங்கமம்' தொடர்பானது அது.

2007 பெப்ருவரியில் முதல் "சென்னை சங்கமம்' நிகழ்ந்தது. தமிழக கலை-பண்பாட்டுக் களத்தில் தீர்க்கமான தாக்கங்களை உருவாக்கி தொடரும் "சென்னை சங்கமம்' அறிமுகமான கதை மிகவும் எளிமையானது. மயிலாப்பூர் லஸ் கோயில் சாலையிலுள்ள தமிழ் மையம் அலுவலகத்தில் கனிமொழி அவர்களோடான உரை யாடலில் பிறந்ததுதான் சென்னை சங்கமம். சென்னை நகர் கொண்டாடும் ஒரு பண்டிகை கூட தமிழர் பண்பாட்டு வரலாற்றை சார்ந்ததாக இல்லையே என்ற ஆதங்கத்தை அளவளாவி, ஏதேனும் செய்ய வேண்டுமெனப் பேசி, கிராமியக் கலைகளை மையப்படுத்தும் சிறியதோர் கலைவிழாவினை தை பொங்கல் காலத்தில் அமைக்கலாம் என முடி வெடுத்தோம்.

மிகச்சிறிய, ஆனால் செறிவான கலைவிழா எண்ணத்தை பூங்காக்கள், வீதிகளெங்கும் தமிழ் கலைகளின் மலர்ச்சியாய் விரிய வைக்கும் எண்ணம் தந்தது. சென்னை சங்கமம் போல் பெங்களூரில் ""பெங்களூரு ஹப்பா" நடத்தி வரும் குழுவினர். பெங்களூரில் நடத்துவது போல சென்னையிலும் நடத்தவேண்டுமென அவர்கள் வந்தி ருந்தார்கள். பல சுற்று விவாதங்கள் அவர்களோடு நடந்தன.

ஆனால் அவர்கள் பணம் செய்வதில் அதிக குறியாய் இருந்தது போன்ற எண்ணம் ஏற்பட்டதால் நாமே எல்லாம் செய்யலாம் என்று முடிவெடுத் தோம். அத்தெளிவான முடிவுக்கு காரணமாயிருந்தவர்களில் சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு அவர்களும் ஓவியர் மருது அவர்களும் முக்கியமான வர்கள். உண்மையில் "சென்னை சங்கமம்' என்று பெயர் சூட்டியது இறையன்பு அவர்கள். நீங்காது பதிந்துவிட்ட இளங்கன்று முகத்தினை முத்திரையாய் வரைந்தவர் மருது அவர்கள். இன்று சென்னை சங்கமம் இந்தியாவின் இரண்டாவது பெரிய கலை-பண்பாட்டு விழாவாக வளர்ந்து நிற்கிறது. ஈராயிரம் கலைஞர்கள், இருபது அரங்குகள், லட்சக்கணக்கான மக்கள் என பிரம்மாண்டமான இந்நிகழ்வை நிர் வகிக்கும் அனுபவங்களை எழுதவே ஏழெட்டு "மறக்க முடியுமா?' களங்கள் தேவைப்படும். அது இப்போதைக்கு அவசியமில்லை. ஆனால், எதிர்பாராத பெருவெற்றியோடு நின்ற முதல் சங்கமத் திற்குப் பின் நடந்த சில நிகழ்வுகள் மறக்க முடியாதவை.

(நினைவுகள் சுழலும்)

நன்றி நக்கீரன்


http://4.bp.blogspot.com/_8nLOvtPrRIc/Sa_SO_zXc4I/AAAAAAAAE3A/3KCj5_-EDjw/s320/rajpak2.jpg   


http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3596:2009-06-01-05-28-27&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54

♥ " சர்வதேச நாடுகள் விடுதலைப்புலிகளுக்கு உதவ கூடாது: சிங்கள மந்திரி வேண்டுகோள்"- மாலைமலர் செய்தி ♥

சர்வதேச நாடுகள் விடுதலைப்புலிகளுக்கு உதவ கூடாது: இலங்கை மந்திரி வேண்டுகோள்

Logo


கொழும்பு, ஜூன். 1-
 
விடுதலைப்புலிகள் இலங்கையில் மட்டும் அல்லாமல் சர்வதேச அளவிலும் இணைப்புகளை ஏற்படுத்தி செயல்பட்டு வந்தனர். அவர்களுக்கு சொந்தமாக கப்பல் நிறுவனமும் இருக்கிறது.
 
இலங்கையில் போரில் விடுதலைப்புலிகள் தோற் கடிக்கப்பட்டாலும் இன்னும் அவர்களுடைய சர்வதேச கிளைகள் செயல்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.
 
இந்த நிலையில் இலங்கை வெளிவிவகார மந்திரி ரோஜிதா பகோலாகமா சர்வதேச நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
 
விடுதலைப்புலிகளின் சர்வதேச அமைப்புகள் இன்னும் செயல்பட்டு வருகின்றனர் அவர்கள் வெளிநாடுகளில் பலம் மிக்கவர்களாக இன்னும் இருக்கிறார்கள் அரசியல் ரீதியாகவும், வலுவாக உள்ளனர்.
 
எனவே சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவும் வகையில் விடுதலைப்புலிகளின் செயல்பாடுகளை அழிக்க வேண்டும். அவர்களுக்கு எந்த வகையில் உதவி வந்தாலும் அதை தடுக்க வேண்டும்.
 
இலங்கையில் தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்படும். இனி எந்த பிரச்சினையும் ஏற்படாமல் அனைத்து தரப்பு மக்களும் சமமாக நடத்தப்படுவார்கள்.
 
இவ்வாறு அவர் கூறினார்.


http://www.maalaimalar.com/2009/06/01120600/CNI023010609.html

♥ "பிரபாகரனை ஏற்றுக் கொள்ளாத அவரின் தந்தை"-தினமணி செய்தி ♥


http://epaper.dinamani.com/newsview.aspx?parentid=11207&boxid=59280&archive=false

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 1-தினமணியில் தொடர் ஆரம்பம் ♥
புதிய பார்வையில் இலங்கையின் வரலாறு! - "ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'

இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து வருகிறது. இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு.

அதற்கு 1985-ஆம் ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து. இனி, பாவை சந்திரன் தொடர்கிறார்.

-ஆசிரியர்

ஈழத் தமிழர் எனும் இலங்கைத் தமிழர்களும் உலக அளவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், யாங்கூன் என்கிற பர்மா, தாய்லாந்து, மோரிஷஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் ஒன்றல்ல என்ற உண்மைகூட நம்மில் பலர் புரியாமல் விவாதம் செய்து வருகின்றனர். மேலே குறிப்பிட்டவர்களைப் போலக் கடந்த இரண்டு நூற்றாண்டு காலத்தில் வேலைக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் இலங்கைக்குப் போய் அங்கே குடியேறியவர்கள் அல்ல ஈழத் தமிழர்கள்.

அவர்கள் அந்தத் தீவின் பூர்வ குடியினர். மண்ணின் மைந்தர்கள். இந்நிலையில் இலங்கைத் தமிழர் என்பவர் அந்நாட்டையே பூர்வீகமாக கொண்டவர் என்ற உண்மையை எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா - இல்லையா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிற நிலையில் அவர் இல்லாத ஈழமும், ஈழமக்களும் இனி பெறப்போவது என்ன என்பதைவிட, அவர்கள் எதையெல்லாம் இழந்தார்கள் என்று அறிவது அவசியம்.

விடுதலைப்புலிகளாகட்டும் இன்னபிற அமைப்புகளாகட்டும் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் அறிய வேண்டியது அவசியமாகிறது.

அதேபோன்று இந்தியாவின் பார்வை மற்றும் பங்களிப்பு, தமிழகத் தலைவர்களின் பார்வை மற்றும் பங்களிப்பு, உலக நாடுகளின் பார்வை மற்றும் அதன் பங்களிப்பு குறித்தும், இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அளித்த உதவிகள் குறித்தும் அலசவேண்டியதும் அவசியமாகிறது.

இன்று, இலங்கை வரலாற்று ஏடுகளைப் புரட்டுபவர்கள் யாராக இருந்தாலும், உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுவார்களேயானால், அவர்கள், இதுவரை சொல்லப்பட்டிருக்கும் இலங்கை வரலாற்றை ஒதுக்கிவிட்டு, புதிய உண்மைகளின் அடிப்படையில், புதிய பார்வையுடன் இலங்கை வரலாற்றை அணுகவேண்டியது அவசியமாகும்.

இதுவரை சொல்லப்பட்ட இலங்கைத் தீவின் வரலாறு, கற்பனையின் அடித்தளம் மீது கட்டப்பட்ட இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட மாய வரலாறு என்பதற்கான ஆதாரங்கள் நிறையவே கிடைத்துள்ளன. இன்று பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கடுமையான உழைப்பின் மூலம் உண்மைகள் வெளிவரத் தலைப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இன்னும் அதிகமான புதிய உண்மைகள் கிடைக்கலாம்.

மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் மட்டுமே துணையாகக் கொண்டு இந்தியாவின் வரலாற்றைக் கூறுவது எப்படி உண்மைக்குப் புறம்பாக இருக்குமோ, அதுபோலத்தான் சிங்களவரின் இதிகாசமான மகா வம்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு இலங்கை வரலாற்றை எழுதுவது என்பது!

அப்படியென்றால் உண்மையான வரலாற்றை எந்த அடிப்படையில் எழுதுவது அல்லது பார்ப்பது என்ற நியாயமான கேள்வி எழுகிறது. உண்மையான வரலாறு என்பது ஆதாரபூர்வமான உண்மைகளையும், விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வுகளையும் கொண்டு முடிவுக்கு வரவேண்டிய ஒன்றாகும்.

இலங்கை இன்றிருக்கும் ரணகள சூழலில், இனவெறித் தாக்குதல்கள் அத்துமீறி நடக்கும் அந்த குட்டித்தீவின் வரலாற்றுப் பின்னணியை அறிவது, இலங்கைத் தமிழர்களுக்காக மட்டுமன்றி, ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்காகக் கண்ணீர் சிந்தும் ஜனநாயக உணர்வுகொண்ட ஒவ்வொருவரின் கடமையாகிறது.

அந்தக் கடமையுணர்வின்பேரில் நிகழ்ந்த தேடல்களின் விளைவே இத்தொடர். இஃது இலங்கையின் வரலாற்று நூல் மட்டுமல்ல; மாறாகத் தமிழர்களின் போராட்ட வரலாறு, தமிழர்களின் போராட்ட வரலாறோ இலங்கையின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.

எனவேதான், சிங்களவரைவிடத் தமிழர்களுக்கு இலங்கையில் எந்தவிதமான ஆதிபத்திய உரிமைகள் உண்டு, அவர்களது தொன்மையான வரலாறுதான் என்னவென்று அறிந்தோமானால் அரையும் குறையுமான விமர்சனத்திற்கு ஆளாக வழியிருக்காது.

இலங்கையில் இப்படியொரு நிலைமை எதனால் ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? இலங்கையில் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னும் பின்னுமாக இருந்த நிலைமை என்ன? இனரீதியாகவும், மதரீதியாகவும் சட்டவடிவிலும் தமிழர்கள் எப்படியெல்லாம் நசுக்கப்பட்டார்கள்? என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டு அதற்கான விடையைத் தேட...

பல நூல்களை ஆராய முயன்றபோது, எளிதாகக் கிடைத்த Story of Ceylon, Ancient Ceylon போன்ற நூல்களிலும் மற்றும் சிங்களவர் பற்றிய பல நூல்களிலும் சிங்கள புத்தபிக்குகளின் ஒருதலைப்பட்சமான கருத்துக்களே மிகுதியாக இடம் பெற்றிருக்கின்ற என்பதை அறிய முடிகிறது. அந்த நூல்களின் ஆசிரியர்கள் மிகுந்த சிரத்தையுடன் சிங்கள மத குருமார்களுக்கே நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சிங்களவ புத்த குருமார்களும் வரலாற்றில் தங்கள் மதமும், இனமும், கலாசாரமும் பழுதுபடாமல் இருக்க வேண்டும்; தமிழனும், அவனது கலாசாரமும் வீழ்த்தப்பட வேண்டும் - என்ற நோக்கத்திலேயே தகவல் அளித்திருக்கின்றனர் என்பதும் புலனாகிறது.

இலங்கையில் நடைபெறும் இனமோதல்கள் பற்றி உலகப் பத்திரிகைகளில் மாறுபட்ட செய்திகள் வெளியானதால் உலக கிறிஸ்தவ ஆலயங்கள் கழகம் (Council of Churches) சார்பில் அதன் ஆசியக் கிளையின் பிரதிநிதிகள் இலங்கை சென்று அங்கு நடைபெறும் கொடுமைகளை நேரடியாகப் பார்த்து மிக விரிவான அறிக்கையொன்றை (1985-ல்) வெளியிட்டனர்.

அவ்வறிக்கை இத்தொடருக்குப் பேருதவியாக அமைந்தது. அது போன்றே "இண்டர்நேஷனல் கமிஷன் ஆஃப் ஜூரிஸ்ட்' அமைப்பு வெளியிட்ட "எத்னிக் கான்ஃபிளிக்ட் அன்ட் வயலன்ஸ் இன் ஸ்ரீலங்கா' அறிக்கையிலிருந்தும் உண்மைக்கு நெருக்கமான சில செய்திகளைக் கையாண்டிருக்கிறேன்.

நடுநிலை நோக்கோடு, சிங்கள அறிஞர்களே ஒத்துக்கொண்ட தகவல்களை ஆதாரமாகக் கொண்டே இத்தொடர் தொடுக்கப்பட்டுள்ளது.

நண்பர் ஓவியர் சந்தானம் ஒருமுறை சொன்னார்: "சாலையில் போய்க் கொண்டிருக்கிறோம். வயதான மூதாட்டி வாகனம் ஒன்றில் அடிபட்டு வீழ்ந்து விடுகிறார். கூட்டத்தை விலக்கிக்கொண்டு மூதாட்டியைப் பார்க்கிறோம். அவளைக் கண்டு பரிதாபப்பட்டு நம்மால் முடிந்த உதவியைச் செய்கிறோம்.

இது மனித சுபாவம். ஆனால் அடிபட்டு விழுந்த மூதாட்டி நமது தாயாக இருக்கும் பட்சத்தில் நம் உடம்பே ஆடிப்போய்விடும்; ஐயோ அம்மா உனக்கா இப்படி என்று சுற்றுப்புறச் சூழல் மறந்து வீரிடுவோம்'. இது மனித சுபாவம். அதுபோன்று ஈழமக்கள் படும் துயரைக் கருதவேண்டும்.

உலகின் ஏதோவொரு மூலையில் பெரும்பான்மை இனமக்கள், சிறுபான்மையோர் பேரில் நடத்தும் கொடுமைகளைக் கேட்டு வேதனையுறுகிறோம். நம்மால் முடிந்தவரை விமர்சித்துத் தீர்க்கிறோம். மனிதாபிமான உணர்வுள்ளவர்கள் செய்கிற வேலை இது.

ஆனால் நமது நாட்டுக்கு அண்மையில் சற்று ஏறக்குறைய இருபதாவது மைலில் இலங்கையைப் பூர்வீக நாடாகக் கொண்ட நம் சகோதரத் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். சிறார்கள் தரையில் வீசிக் கொல்லப்படுகிறார்கள். அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டுத் தீக்கிரையாகின்றன.

பிள்ளைத்தாச்சியானால் அவளது வயிற்றைக் கிழித்து "தமிழ்ச் சிசுவா தரையிலடி!' என்று சிசுவதை செய்யப்படுகிறது.

இதையெல்லாம் பத்திரிகைகளில் படித்தும், வானொலியில் கேட்டும் மானமுள்ள தமிழனால் எப்படிச் சும்மா இருக்க முடியும்? அதுவும் படைப்புத் துறை சம்பந்தப்பட்ட பத்திரிகையாளன், எங்கோ எதுவோ நடக்கிறது என்று வாளாவிருந்துவிட முடியுமா?

இந்தப் பிரச்னையை எல்லாரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு உண்மை என்னவென்று விளக்கப்படவில்லையா? ஆம் என்றால் இஃது ஆராய்ச்சிக்குரிய விஷயம்தானோ! ஆகவேதான் "ஈழத்தமிழர் போராட்ட வரலாறு' என்ற இத்தொடர் தொகுக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையின் முழுமையான வரலாறாக முதன்முதலாகத் தமிழில் நானறிந்தவரை தொகுக்கப்பட்ட தகவல்களில் தவறு ஏதுமிருக்க வாய்ப்பில்லை. மேலும் இத் தொடரின் சில தலைப்புகளில் வெளியாகும் விஷயங்களில் "கூறியது கூறல்' இருக்கலாம். ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பக் கூறினால் மனதில் பதியும்தானே?


http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=67582&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81!+-+%22%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!