சைவக் கடவுள் கேட்டது
பிள்ளைக்கறி!
சர்வீஸை துவங்கியது சர்ச்சைக்குரிய டெலினார்!
"இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதம் தலைவிரித்தாடும் பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் செல்போன் சேவையை நடத்தி வருகிறது இந்த டெலினார் நிறுவனம். இவர்களிடம் 2 ஜி அலைவரிசையை ஒப்படைத்தால் தேசத்தின் பாதுகாப்பு என்ன ஆவது என்று பாதுகாப்புத் துறை எழுப்பிய கேள்விக்கு கடைசி வரை பதிலே சொல்லவில்லை..."
சென்னை: பெரும் சர்ச்சைக்கும் சந்தேகப் பார்வைக்கும் ஆளான டெலினார்- யூனிடெக் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான யூனினார் தனது மொபைல் சேவையைத் துவங்கியது.
நார்வேயைச் சேர்ந்த நிறுவனம் டெலினார். இந்தியாவின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக்கின் 74 சதவீதப் பங்குகளை சர்ச்சைக்குரிய முறையில் வாங்கியது இந்த நிறுவனம். பின்னர் யூனிடெக்கின் பெயரைப் பயன்படுத்தி பல பெயர்களில் இந்தியாவில் கூட்டாக மொபைல் சேவையைத் துவங்க லைசென்சுக்கு விண்ணப்பித்தது.
போட்டியிட்ட பிற நிறுவனங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, இந்த நிறுவனத்துக்குதான் 2 ஜி அலைவரிசையை ஒதுக்கியது மத்திய தொலைத் தொடர்புத் துறை.
பல்லாயிரம் கோடி மதிப்புள்ள 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வெறும் ரூ.1651 கோடிக்கு யூனிடெக் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
அதுமட்டுமல்ல, 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டைப் பெறும்வரை டெலினார் நிறுவனத் தொடர்பு பற்றி பேசாமல் இருந்த யூனிடெக், அலைவரிசை ஒதுக்கீட்டைப் பெற்ற பிறகு, அடுத்த சில வாரங்களுக்குள் டெலினாருடன் கூட்டணி சேர்ந்ததாக அறிவித்து, தனது 60 சதவிகித பங்குகளையும் டெலினாருக்கு மாற்றியது. யாரும் பிரச்சனை செய்யக் கூடாது என்பதால், யூனினார் என்ற புது நிறுவனத்தை கணக்கில் கொண்டு வந்தது.
இதனைக் கவனித்த இந்திய பாதுகாப்புத் துறை மற்றும் உளவுத் துறை யூனிடெக்கின் மொபைல் சர்வீசுக்கு அனுமதி தருவதை நிறுத்தி வைத்தன.
அதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. இது மிகமிக முக்கியாமானது. இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதம் தலைவிரித்தாடும் பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் செல்போன் சேவையை நடத்தி வருகிறது இந்த டெலினார் நிறுவனம். இவர்களிடம் 2 ஜி அலைவரிசையை ஒப்படைத்தால் தேசத்தின் பாதுகாப்பு என்ன ஆவது என்று பாதுகாப்புத் துறை எழுப்பிய கேள்விக்கு கடைசி வரை பதிலே சொல்லவில்லை, உள்துறை அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்.
மாறாக உயர்மட்ட அளவில் நடந்த பேரங்களுக்குப் பின் யூனினார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது.
இந் நிலையில் தான் அமைச்சர் ராஜாவின் அலுவலகம் சிபிஐ சோதனைக்கு உள்ளானதும், ராஜா விசாரிக்கப்பட்டதும் நினைவிருக்கும்.
இப்போது அதே யூனினார் நிறுவனம் கோலாகலமாக தனது மொபைல் சர்வீஸைத் துவங்கியுள்ளது.
இந்த புதிய மொபைல் சேவையில் உள்ளூர் கட்டணம் வெறும் 29 பைசாதான். எஸ்டிடி கட்டணம் 49 பைசா.
எடுத்த எடுப்பிலேயே 7 தொலைத் தொடர்பு வட்டங்கள், 1000 டீலர்கள், ரூ 2620 முதலீடு என பிற நிறுவனங்களை ஆட்டம் காண வைக்கும் வேகத்துடன் வருகிறது யூனினார்.
http://thatstamil.oneindia.in/news/2009/12/05/controversial-uninor-launches.html
விஜயும் சிம்புவும் எட்டு ஒற்றுமைகள்.
இது ஒன்னும் சீடியஸ் மேட்டரில்ல, ஆனா பொய்யான மேட்டருமில்ல 1 . இரண்டு பேரும் வாரிசு நடிகர்கள், இவர்கள் இருவரும் சினிமாக்கு அப்பாக்களால் வந்தாலும் இரண்டு பேருக்கும் பிரச்சினையே அந்த அப்பாக்கள்தான். 2. விஜய் தன்னை நெக்ஸ்ட் சூப்பர்ஸ்டார்( Next Superstar ) என்றும்,சிம்பு தன்னை லிற்றில் சூப்பர்ஸ்டார்( Little Superstar ) என்றும் தமக்குத்தாமே பில்டப்பண்ணி நொந்து நூடில்ஸ் ஆனவர்கள். 3 . சொல்லிவைத்தாற்போல் இவர்கள் இருவரும் இறுதியாக நடித்த மூன்று படங்களும் இவர்களை ஏமாற்றிவிட்டது. விஜய் (அழகியதமிழ்மகன்,குருவி,வில்லு),சிம்பு(வல்லவன்,காளை,சிலம்பாட்டம்) 4 . இருவரும் ஐந்து பாடல்களுக்கு நடனமாடுவதற்காக 2 .30 மணிநேரம் படம் நடிப்பவர்கள்(?). 5 . இருவரும் எந்தத் தோல்விப்படமாக இருந்தாலும் நூறு அல்லது நூற்றியைம்பது நாட்கள் படத்தை ஒட்டாமல் ஓயமாட்டார்கள். இதில் விஜய் கில்லாடி இவர்மாதிரி தோல்விப்படங்களுக்கு யாரும் வெற்றிவிழா கொண்டாடமுடியாது. 6 .இவர்களது ஒருபடம் ரிலீஸ் என்றால் இவர்களது காலடிபடாத தமிழ்த்தொலைக்காட்சி கலையகங்களே இருக்காது,எல்லா கலையகங்களுக்கும் ஒரு ரவுண்டு கிளம்பிடுவாங்க. 7 . படம் வெளியான அடுத்தநாளே "இந்தத் திரைப்படத்தை வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு நன்றி " அப்பிடின்னு ஒரு அறிக்கை விடுறதில இந்த இரண்டுபேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவரில்லை. 8 . இவர்கள் இருவரும் பஞ்ச்டயலாக் பேச ஆரம்பித்தால் வடிவேலுவையே ஒரம்கட்டிவிடுவார்கள், அம்புட்டு காமடியாயிருக்கும்.
http://eppoodi.blogspot.com/2009/12/blog-post.html
அசல் அமிழ்கிறது... நகல் நர்த்தனமாடுகிறது...!
தில்லை நாகசாமி
"இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள மெகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2009-ம் ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 45 ரூபாய்க்கும் குறைந்த வருமானத்தில் புழுவினும் கீழாய் வாழ்ந்தபடி உடலுழைப்பை அர்ப்பணிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 35 கோடி."
உழைப்பே உயர்வு தரும் என்று உழைப்புக்கு சற்றும் தொடர்பே இல்லாதவர்கள் அடிக்கடி உரக்கக் குரல் கொடுப்பது வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கவில்லை என்றால் உழைப்பவர்களும் ஒதுங்கிவிடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுவதும் புரிகிறது.
÷தமிழினம் தழைத்து ஓங்கியிருந்த காலத்தில் உழைப்பால் உயர்ந்தவர் என்று ஒருவரைச் சொல்லுகிறபோது, அவர் உடலுழைப்பால் உயர்ந்தவர் என்றே அறியப்பட்டார். சமீபகாலங்களில் அறிவியலின் அதீத வளர்ச்சியால் அமோக பலனடைந்து வருவோர் அறிவுழைப்பு என்று அறியப்படுகின்ற மூளை உழைப்பை முன்னிலைப்படுத்துவதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். மனித குலத்தின் உயிர்ப்புக்கே அடித்தளமாய் விளங்குகின்ற உடலுழைப்பை உதாசீனப்படுத்துவதில் அவர்கள் ஓரணியில் நிற்கின்றனர்.
÷ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிற காரணிகளில் முதலானதும் முக்கியமானதும் உழைப்பாகும். அந்த உழைப்பின் இரு கூறுகளான உடலுழைப்பையும் அறிவுழைப்பையும் இரு கண்களைப்போன்று சமநிலையில் வைத்துப் போற்றுகிற சமுதாயம்தான் வளம் பெற்றுப் பீடுநடை போடும் என்பது சமூக-பொருளியல் தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு. ஆனால் இருவித உழைப்புகளுக்கும் மதிப்பையும் விலையையும் நிர்ணயிக்கிற அதிகாரம் அறிவுழைப்பாளர்களுக்கே இருப்பதால், அவர்கள் இந்த இரு உழைப்பின் மதிப்புகளுக்கிடையே பெரும் பிளவை ஏற்படுத்திவிட்டனர்.
÷பங்குச் சந்தை, இணைய வர்த்தகம், மென்பொருள் உற்பத்தி என்று பட்டியல் நீளுகிற அறிவுசார் துறைகள், உடலுழைப்பை ஓரங்கட்டிவிட்டு கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. உடலுழைப்புக்கு ஐந்தரை அறிவே போதும் என்கிற அறிவுழைப்பாளர்களின் அஞ்ஞான மனப்பாங்கினை, வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல ஆட்சியாளர்களும் ஆமோதிக்கும் பேரவலத்தைக் கேட்பாரில்லை.
÷பாமர மக்களின் உடலுழைப்பால் உருப்பெற்ற விளைவிப்புகளையும் உற்பத்திகளையும் அறிவுழைப்பு என்கிற ஆயுதத்தின் துணையுடன் ஒருசாரார் மாத்திரம் அனுபவித்ததன் விளைவால் சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பெரும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இதுதான் பொருளாதாரச் சரிவின் மூலகாரணம் என்பதை ஓங்கிக் கூறலாம்.
÷பொருளாதார மந்தநிலை எப்போது சீராகும் என்று எதிர்பார்த்து நிற்கும் இந்த வேளையில், இருவித உழைப்புகளுக்கிடையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாகுபாட்டினை மீள்பார்வை செய்வது, சமுதாயத்தின் மீட்சிக்குப் பேருதவியாக இருக்கும்.
÷100 நாள் வேலைத்திட்டத்தில் உடலுழைப்பை அளிப்பவர்களுக்கு தினக்கூலி 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 100 ரூபாயாகக் கொடுக்கப்படும் என்று, மனம் விசாலமாகிவிட்ட நிலச்சுவான்தார் போன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அறிவுழைப்பாளர்கள் மட்டும் எப்படி லகரங்களில் சம்பளம் வாங்குகின்றனர்.
÷அதன் சூட்சுமம் மிகவும் சுலபமானது. அசல் உழைப்பைத் தரும் உடலுழைப்பாளி அந்த உழைப்பை நகல் எடுக்க முடியாது. நகல் எடுக்கவல்ல உழைப்பைத் தரும் அறிவுழைப்பாளி அதை எத்தனை நகல் வேண்டுமானாலும் எடுத்துப் பணமாக்கிக் கொள்ளலாம்.
÷100 அறிவுழைப்பாளிகள் ஒன்று சேர்ந்து 10 கோடி ரூபாய் செலவில் ஒரு மென்பொருளை உருவாக்குகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், அதைக் குறுந்தகடாக்கி பல லட்சம் பிரதிகளை எடுத்துப் பலநூறு கோடிகளுக்கு அவற்றை விற்றுக்கொள்ளலாம்.
÷அவ்வாறு உருவாக்கிய மென்பொருளுக்கு அறிவுசார் சொத்துரிமை வாங்கிக்கொண்டு தொடர்ந்து பன்னெடுங்காலத்திற்கும், ஒருமுறை செய்த அறிவுழைப்பை மீண்டும் மீண்டும் விற்றுப் பணமாக்குகின்றனர். இப்படிச் சுலபமாகச் சேருகின்ற பணத்தில்தான் லகரங்களை சம்பளமாகக் கொடுத்து சமுதாயப் பிளவை உண்டாக்கி வருகின்றனர்.
÷உடலுழைப்பை நம்பி இருக்கின்றவன் பொருளீட்ட வேண்டுமென்றால் அவன் மீண்டும் மீண்டும் உழைத்தாக வேண்டும். இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் மாட்சி இதுதான். தொடர்ந்து உடலால் உழைப்பவன் வறுமையிலேயே உழல வேண்டும், ஆனால் அறிவால் உழைப்பவன் அதை நகலெடுக்கும் அதிநவீன உத்தியைப் பயன்படுத்தி சட்டத்தின் துணையோடு பெரும் பொருளீட்டி வாழலாம்.
÷இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள மெகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2009-ம் ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 45 ரூபாய்க்கும் குறைந்த வருமானத்தில் புழுவினும் கீழாய் வாழ்ந்தபடி உடலுழைப்பை அர்ப்பணிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 35 கோடி. அசல் அமிழ்ந்து கிடக்கிறது, நகல் நர்த்தனமாடுகிறது.
÷விவசாயமே சுவாசமாகிப் போய்விட்ட நம்நாட்டுக்குக் கட்டுப்பாடற்ற அறிவுசார் சொத்துரிமை எத்தகைய தீங்குகளை விளைவிக்கும் என்பது தெரிந்திருந்தும், இந்திய அரசு சர்வதேச அறிவுசார் சொத்துரிமை விதிமுறைகளுக்குத் தனது ஒப்புதல் முத்திரையைப் பதித்து வருகிறது.
÷இதிலே விந்தை என்னவென்றால், மனிதனின் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அனைத்தும் உடலுழைப்பின் உருவாக்கமாகவே இருக்கிறது. என்றாலும் இவற்றையெல்லாம் சுலபமாகக் கிடைக்கும் பணத்தால் அறிவுழைப்பாளர்கள் கூடுதல் விலைகொடுத்து எளிதாகப் பெற்றுவிடுவதால் உழைத்து உருவாக்கிய வர்க்கத்தினருக்கேகூட அவை கிடைப்பதில்லை. வழிப்போக்கர்களுக்கும் விருந்தோம்பல் செய்து அவர்கள் இளைப்பாற திண்ணைகட்டி வாழ்ந்தவர்கள் இன்று இலவசங்களுக்காக வரிசைகட்டி நின்றே காலத்தைக் கழிக்கின்றனர்.
÷உடலுழைப்பின் மாண்பினை உலகுக்கு உணர்த்திய முதல் இனம் நம் தமிழினம் என்பதுதான் எஞ்சியிருக்கும் பெருமை. உலகப் பொதுமறையாம் திருக்குறளை நமக்களித்த ஐயன் வள்ளுவர் இதைப் பிரகடனம் செய்கிறார். "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் - தொழுதுண்டு பின்செல் பவர்' என்று. உடலை வருத்தி உழைக்கின்ற உழவனுக்கு முதல் மரியாதை செய்து, உலகிலேயே உடலுழைப்பை உயர்த்திப் பிடித்த பெருமகன் திருவள்ளுவர்தான் என்பதில் நெஞ்சம் நெகிழ்கிறது.
÷அதற்கும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த யுகக் கவிஞர் பாரதியார், "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று பின்வரவான தொழிலையும் சேர்த்து வணங்கிப் போற்றுகிறார்.
÷காந்தியடிகள் தமது சத்திய சோதனையில் உடலுழைப்பு பற்றிய சில தீர்க்கமான கருத்துகளை முன்வைக்கிறார். உழைப்பில் உயர்வு தாழ்வு கிடையாது என்கிற சத்தியவாக்குக்கு சாட்சியம் சொல்லிவிட்டு, ஒரு வழக்கறிஞரின் உழைப்பும் ஒரு சிகை அலங்காரத் தொழிலாளியின் உழைப்பும் ஒரே பெறுமானம் உள்ளவைதான் என்கிற ஆங்கில அறிஞர் ஜான் ரஸ்கின் கருத்தை அவர் அப்படியே ஆமோதிக்கிறார். மகாத்மா காந்தியின் பெயரைச் சொல்லி இன்று அரசியல் நடத்துகிறவர்கள் காந்தி ஜயந்தியன்றும், குடியரசு தினத்தன்றும் குல்லாய் போட்டுக் கொண்டு பேட்டி கொடுப்பதே காந்தியம் என்று எண்ணிக்கொள்வது காலத்தின் கோலம்.
÷முன்பெல்லாம் வேளாண் நிலங்கள் பொன்விளையும் பூமி என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்டன. அதன் விளைபொருள்களை விற்றுப் பொன்வாங்கும் சக்தி விவசாயிகளிடம் அன்று இருந்தது. இன்று நிலத்தையே விற்றால்தான் பொன்வாங்க முடியும் என்கிற சூழல் நிலவுகிறது.
÷விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் மாத்திரமல்லாது, தொழிற்சாலைகளில் தொய்வின்றி உழைத்துவரும் தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்கள், மீனவர்கள், இன்னபிற உடலுழைப்பாளர்கள் அனைவரும் தங்கள் இதயத்தின் ஒரு மூலையில் இன்னும் கசிகின்ற நம்பிக்கையால் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
÷லாபமும், சமூக மாண்பும் இல்லாத உடலுழைப்பை விடுத்து, இளைஞர்கள் விரக்தியின் விளிம்புக்குச் சென்று கொண்டிருப்பது சமுதாயத்துக்கு உகந்ததல்ல. உடலுழைப்புக்கு உரிய மதிப்பை, முதல் மரியாதையை விரைந்து மீட்டுத் தருகின்ற கடமையும் கடப்பாடும் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.
÷பிரெஞ்சுப் புரட்சியின்போது பாஸ்டில் சிறையை உடைத்து சமச்சீர் சமுதாயத்துக்கு வித்திட்டதும், ரஷியாவில் சார் மன்னர் ஆட்சிக்கு சாவுமணி அடித்து சோஷலிச சமுதாயம் அமைய அடித்தளமாக இருந்ததும், சீனத்தின் கூன்களை நிமிர்த்தி அதை செஞ்சீனமாக்கியதும் உடலுழைப்பாளர்களின் பெரும் பங்களிப்பே என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்படுவது அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
என்னை துன்புறுத்துவதை நிறுத்தாவிட்டால் `அரசாங்க ரகசியங்களை அம்பலப்படுத்துவேன்' சரத் பொன்சேகா எச்சரிக்கை
கொழும்பு, ஜன.31-
இலங்கையில் அதிபர் ராஜபக்சேயின் அரசாங்கம், அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ராணுவ தளபதியும், எதிர்கட்சிகள் வேட்பாளருமான சரத் பொன்சேகாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில், அவருக்கு ஆதரவு தெரிவித்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் 8 பேர் கைதானார்கள்.
நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள பொன்சேகாவின் அலுவலகத்தில் இருந்த 20 பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொன்சேகா நேற்று மாலை கொழும்பில் நிருபர்களுக்கு ஆவேசமாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னை துன்புறுத்தும் அரசாங்க அதிகாரிகள் செய்த ஊழல்கள் மற்றும் முறை கேடுகள் தொடர்பாக என்னிடம் போதிய ஆவணங்கள் இருந்தன. எனவேதான் அதிபர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன்.
என்னை பயமுறுத்துவோர், தேர்தலின்போது மேற்கொண்ட முறைகேடுகள் தொடர்பான சாட்சியங்களும் என்னிடம் இருக்கின்றன. எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் கூட அவற்றை மக்களுக்கு அம்பலப்படுத்துவேன்.
எனது அலுவலகத்தில் தேடுதல் வேட்டை நடத்துவது, பாதுகாப்பு குறைக்கப்பட்டது, எனக்கு நெருங்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டது போன்ற செயல்களின் தொடர்ச்சியாக என்னை படுகொலை செய்வதற்கே அரசாங்கம் தயாராகி வருகிறது.
எனக்கு பாதுகாப்பு அளித்த 90 படை வீரர்களுக்கு பதிலாக தற்போது 4 போலீஸ்காரர்கள் மட்டுமே கைத்துப்பாக்கிகளுடன் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவத்தில் இருந்து சட்ட ரீதியாக வெளியேறிய 3 ராணுவ ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், 2 கர்னல்கள் எனக்கு ஆதரவளித்ததாக கூறி கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்கள் `சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்காவின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது பொய்யான தகவலாகும். நேற்று மாத்திரம் எனது அலுவலகத்தில் இருந்த 20 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 23 கம்ப்ïட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை யாவும் கோர்ட்டு உத்தரவு இல்லாமல் நடந்தது.
நாட்டின் சட்டம்-ஒழுங்கு அனைத்தும் உடைந்து போய் உள்ளது. யாரும் போலீசுக்கோ, கோர்ட்டுக்கோ போக முடியாது. எந்த நேரத்திலும் யாரும் கைது செய்யப்படலாம். இந்த நிலையில் நாட்டில் அனைவரும் தங்களது பணிகளை உரிய முறையில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நான் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை. எனது உயிரை பாதுகாப்பதற்காக மறைந்து வாழவேண்டி உள்ளது. நானும், எனது மனைவியும், வெளிநாட்டில் படிக்கும் எனது 2 மகள்களும் நாட்டில் இருந்து வெளியேற முடியாதவாறு விமான நிலையத்தில் கறுப்பு பட்டியலில் சேர்த்து விட்டனர்.
பாதுகாப்பு கருதியே நான் 20 அறைகளை வாடகைக்கு எடுத்து ஓட்டலில் தங்கியிருந்தேன். அப்போது என்னையோ அல்லது எதிர்க்கட்சி தலைவரையோ அரசாங்கம் கொலை செய்ய திட்டமிடுவதாக எனக்கு தகவல் கிடைத்தது. எனினும் இதை மறைப்பதற்காகவே, அதிபர் ராஜபக்சேவை கொலை செய்ய நான் திட்டமிட்டதாக பொய்யான செய்தியை அரசாங்கம் பரப்பி விட்டது.
மேற்கண்டவாறு பொன்சேகா கூறினார்.
http://www.maalaimalar.com/2010/01/31070805/sarath.html
பைத்தியமாய்த் திரிந்த மஹிந்தா - இலங்கை தேர்தல் ஒரு அலசல்
பொன்சேகா வெல்வது உறுதி. மஹிந்தா ஊரைவிட்டே ஓடப்போகிறார். ஒரு வெளிநாட்டில் அடைக்கலம் கோரி அங்கு அனுமதி கிடைத்துவிட்டது என ஏகப்பட்ட புரளிச்செய்திகளால் இத்தனை நாட்களும் மஹிந்தாவுக்கு தூக்கமே வந்திருக்காது. மஹிந்தா கூட இந்த வெற்றியை எதிர்பார்த்திருக்கவில்லை. தோற்றால் எப்படியும் தன் மீது பலவிதமான வழக்குகள் பாயும், நிச்சயம் சிறை செல்வது உறுதி. அதனால் தப்பிக்க பலவிதமான வழிகளையும் திறந்து வைத்துக்காத்திருந்த மஹிந்தா குடும்பத்தாருக்கு இது மிக மிக இனிப்பான செய்தி. அத்தோடு இனி தன்னை எதிர்க்க ஆள் இல்லை, தானும் தன் குடும்பமும் இனி யாரைக் கொன்றாலும் என்ன செய்தாலும் கேட்பதற்கு ஆள் கிடையாது என்ற அகந்தையை தன் தலைமீது ஏற்றிக் கொண்டாடுகிறது மஹிந்தாவின் குடும்பம். கிட்டத்தட்ட 16 க்கும் மேற்ப்பட்ட ஊழல் வழக்குகளில் மஹிந்தாவையும் கோத்தபயவையும் சிக்கவைத்து அவர்களை காலத்துக்கும் வெளியே விடாமல் சிறைச்சேதம் செய்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த ரனில் வகையறாக்களுக்கு இந்த வெற்றி ஒரு பேரிடி.
ஊடகங்கள் காட்டிய காணல்:
பொன்சேகா வெற்றி உறுதி என இலங்கை ஊடகங்கள் மற்றுமின்றி சர்வதேச ஊடகங்களும் காட்டிய முனைப்புகள் காணல் நீராகிவிட்டன. இலங்கையின் அரச ஊடகங்கள் மட்டுமே அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை, மஹிந்தாவின் ஆட்சி தொடரும் என செய்திகளை வெளியிட்டன. ஆனால் சரத்பொன்சேகா வெல்வது உறுதி என்றும், தமிழர்களை வேட்டையாடியதின் பலன் உங்கள் இருவருக்குமே சிங்கள மக்கள் மத்தியிலே சமபங்கான நிலையில், இலங்கையில் திணிக்கப்பட்ட விலைவாசி உயர்வு உங்கள் மீது வெறுப்பை உண்டாக்கி விட்டது, எனவே மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்கிறார்கள் என இலங்கையின் உளவுத்துறை அரசுக்கு அளித்த செய்தியைக் கண்டு ஒரு கணம் ஆடித்தான் போனார் மஹிந்தா.
ஜெயிக்கிற சேவல் என் சேவல் *** இந்தியா:
தோள் கொடுப்பான் தோழன் என போர் காலத்தில் பேருதவி புரிந்த காங்கிரஸ் அரசாங்கம் தேர்தல் நேரத்தில் ஜகா வாங்கிக்கொண்டதும் கூட மஹிந்தாவை தனிமைப் படுத்தியது. பொன்சேகாவின் திடீர் தில்லி பயண ரகசிய சந்திப்பில் என்ன நடந்தது என இன்று வரை வெளிவராத அந்த மர்ம முடிச்சுகள் மஹிந்தாவை கலவரப்படுத்தியது. ஆனால் காங்கிரஸ் அரசின் காய் நகர்த்தல் மிக சிறப்பாகவே இருந்திருக்கிறது. அதாவது கிராமத்துப் பழமொழியான பந்தயத்துல ஜெயிக்கிற சேவல் என் சேவல் என அமைதி காத்தது இந்தியா. காங்கிரஸின் இந்த ஊமைக்குத்து நிலை மஹிந்தாவை பேதியாக்கியது. அதாவது ஒருவேளை பொன்சேகா வென்றுவிட்டால் அவருக்கு பாராட்டு விழா எடுக்கக்கூட காங்கிரஸ் தயங்காது எனவும், தன் மீது ஏதேனும் வழக்குத்தொடரப்பட்டால் அதை ஒருபோதும் காங்கிரஸ் அரசாங்கம் கண்டுகொள்ளாது எனவும் நொந்தேபோனார் மஹிந்தா.
கைவிரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு :
யாரையாவது ஒருவரை வீழ்த்தினால் வெற்றிதான் என்ற நோக்கில் இருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவைக் கோரினார் மஹிந்தா. ஆனால் எந்த விதமான முடிவும் எடுக்காமல் மௌனம் காத்தது ததேகூ. இந்த நிலையில் தமிழகம் வந்த சிவாஜிலிங்கம் ததேகூ தனித்துப்போட்டியிடும் என அறிவித்தார். ஆனால் தனித்துப் போட்டியிடுவது மஹிந்தாவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் பொன்சேகாவை ஆதரிப்பதாக ததேகூ அறிவித்தது. இந்த செய்தியுடன் காங்கிரஸ் அரசை அந்த அமைப்பினர் சந்தித்தனர். இந்திய அரசின் புகழுக்கு களங்கம் வந்துவிடாமல் பிரச்சாரம் செய்யுங்கள் என அவர்களிடம் அரசு அறிவுறுத்தியது. ஆனால் தனிப்பட்ட முறையில் உங்களின் முழுமையான ஆதரவு எங்களுக்கு வேண்டும் என்ற மஹிந்தாவின் கோரிக்கையை நிராகரித்து வானத்தைப் போல விஜயகாந்த் மாதிரி நடந்து கொண்டது இந்தியா.
சந்திரிகாவின் அந்தர் பல்டி:
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக பொன்சேகா நிறுத்தப்பட்டிருப்பதும், பலர் அவருக்கு ஆதரவு அளித்திருப்பதும் ஒரு வெற்றி மாயையை உண்டாக்கிவிட சந்திரிகாவும் கூட அதற்கு மயங்கி தனது ஆதரவைக் கொடுத்துவிட்டார். தான் ஒருவேளை தோற்கும் நிலை ஏற்பட்டால் எவ்வாறு தப்பிச்செல்வது போன்ற திட்டங்களை நீண்ட நாட்களாகவே செயல்படுத்தி வந்த மஹிந்தா சகோதரர்கள் தங்களின் தப்பிக்கும் பாதையை எளிதாக்கிக் கொண்டார்கள். இலங்கையில் இருந்து விமானம் வழி செல்லும் சாதாரண பயணிகளுக்குக் கூட கட்டுப்பாடுகளைத் தளர்த்தி சட்டமியற்றினார்கள். தேர்தலில் தோற்றால் நிச்சயம் மஹிந்தாவும், கோத்தபயவும் உள்ளே செல்வது உறுதி என்ற நிலையில் தங்களுக்கெதிரான ஆதாரங்களை அழிக்க முற்பட்டார்கள்.
13 இடங்களில் குண்டுகள் வெடிப்பு :
பொன்சேகாவின் வெற்றியைத் தீர்மானிப்பதில் தமிழர்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட அவற்றைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் மஹிந்தா சகோதரர்கள். இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த 26 ஆம் தேதியன்று அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. பழைய தெலுங்கு சினிமா பாணியில் ஆளுங்கட்சி அலுவலகங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதை செய்தது யார் என இதுவரை இலங்கை காவல்துறையினர் தேடிவருகிறார்களாம். அத்தோடு கருணா குழுவினர் மண்வெட்டி, கோடாலி போன்ற ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை மிரட்டியதாகவும் , ஏற்கனவே பீதியில் இருக்கும் தமிழர்கள் அதிகபட்சமாக வாக்களிக்கச் செல்லவில்லை என்றும், பிற்பகலில் தமிழர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினார்கள் என்றும் செய்திகள் வெளியாயின. மொத்தம் 70 சதவிகிதம் வாக்குகள் பதிவாயின. பதிவான வாக்குகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக பெற்றவரே வெற்றி பெறுவார் என்பது இலங்கை தேர்தல் ஆணைய விதியாகும். கடந்த 2008 ஆம் ஆண்டு தன் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்ததாகவும் ஆனால் இன்றுவரை தன் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை அதனால் தான் வாக்களிக்கவில்லை எனவும் பொன்சேகா சொல்லியிருந்தார்.
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை:
தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளில் மஹிந்தாவே முன்னிலை வகித்தார். இரவு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மஹிந்தா முன்னிலை வகித்தார். இறுதியாக 18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மஹிந்தா வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.
பதிவான மொத்த வாக்குகள் : 1,04,95,451
செல்லுபடியானவை 1,03,93,613
மகிந்த ராஜபக்சே = 60,15,934 (57.88 %)
சரத் பொன்சேகா = 41,73,185 (40.15 %)
சிவாஜிலிங்கம் = 9,662 (0.09 %)
விக்கிரமபாகு = 7,055 (0.07 %)
வாக்குகள் எண்ண ஆரம்பித்தவுடன் பொன்சேகாவும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் மற்றும் அவர்களது குழுவினருடன் இலங்கையின் முக்கிய நட்சத்திர விடுதியான ரிரான்ஸ் ஏசியா ஹோட்டலில் தங்கி தங்களின் அடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். இந்த நிலையில் மஹிந்தாவின் முன்னிலைச் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் இவர்கள் அரசுக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாக கூறி அந்த விடுதியை 300க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் சுற்றிவளைத்து அவர்களைச் சிறைபிடித்தனர். அந்தப் பகுதிகளில் சாலைகள் தடுக்கப்பட்டு போக்குவரத்துகள் முடக்கப்பட்டன.
சிறை பிடிக்கப்பட்டவுடன் உள்ளிருந்த படியே சேனல் X க்கு பேட்டியளித்த பொன்சேகா, தன்னை கொலை செய்வதற்கு மஹிந்தா உத்தரவிட்டிருப்பதாகவும், தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குத் தொடரப்போவதாகவும் அறிவித்தார். ஏற்கனவே அயர்லாந்து நீதிமன்றத்தால் போர்குற்றவாளி என அறிவிக்கப் பட்ட மஹிந்த இந்த சிக்கலிலும் மாட்டிக்கொள்ள விரும்பாமல் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார். அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை (தற்போதைக்கு) இல்லை என பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் உதய நாணயகாரா அறிவித்தார்.
திரிகோணமலையில் படுதோல்வியடைந்த மஹிந்தா:
தமிழர்களின் பகுதியான திரிகோணமலையிலும்,மூதூரிலும் மஹிந்தாவை விட பொன்சேகா அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். திரிகோணமலையில் பொன்சேகா 35,877 வாக்குகளும், மஹிந்தா 13,935 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதேபோல மற்றொரு பகுதியான மூதூரில் பொன்சேகா 32,631 வாக்குகளும், மஹிந்தா 21,002 வாக்குகளும் பெற்றிருந்தனர். ஆனால் சிங்களவர்களின் வாக்குகள் கொத்துக்கொத்தாக மஹிந்தாவிற்கு கிடைத்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகளால் கடந்த ஒரு மாத காலம் பைத்தியமாய்த் திரிந்த மஹிந்தாவுக்கு இப்போது தான் அமைதி கிடைத்திருக்கிறது. கடந்த ஒரு மாத காலமும் மஹிந்தா மனஅழுத்தத்தால் மிகுந்த பாதிப்படைந்திருந்தாக அவரின் ஆஸ்தான மருத்துவர்கள் முன்னரே சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெடிப்புகை வாசனையின்றி வாழட்டும்:
பொன்சேகா வென்றால் ராஜபக்சே குடும்பத்திற்கு அவர்களின் தோல்வியையாவது தண்டனையாக அளிக்கலாம் என காத்திருந்த அனைத்து உலகத் தமிழ் மக்களுக்கும் இந்த வெற்றிச்செய்தி கவலையளிப்பதாக உள்ளது. மற்றபடி ராஜபக்சே ஆட்சிக்கு வந்தாலும், பொன்சேகா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் நிலையில் எந்தவிதமான மாறுதலகளும் வந்துவிடப் போவதில்லை. ஒருவேளை பொன்சேகா வெற்றியடைந்திருந்தால் ராஜபக்சேவை குற்றவாளியாக பலவழக்குகளில் சிக்கவைத்து அவரை நிரந்தரமாக உள்ளேவைக்க அல்லது நாடுகடத்த உத்தரவிட்டிருப்பார். இந்த வாய்ப்பும் இப்போது மங்கி பூமராங்காக அது பொன்சேகாவின் மீது பாயும் வாய்ப்பு இருக்கிறது. நடப்பது நடந்தே தீரும். யார் வென்றாலும் சரி அங்கு வாழும் தமிழர்களின் வாழ்க்கையை கோபுரமேற்றி விடப்போவதில்லை. இதுவரை தமிழ்மக்கள் மீது ஏவிய வன்முறைகளை விடுத்து இனியாவது அவர்களை சுதந்திரமாக வாழ அனுமதித்தாலே போதும். இனியாவது எம்மக்கள் வேட்டுச்சத்தமின்றி, வெடிப்புகை வாசனையின்றி மகிழ்ச்சி வாழ்க்கை வாழட்டும்.
http://etiroli.blogspot.com/2010/01/blog-post_28.html
அமெரிக்க போகும் வழியில் போகும் சீனா
பாகிஸ்தானில் தொடங்கி, அப்படியே மியான்மர், இந்தப் பக்கம் இலங்கை, அந்தப் பக்கம் வட கொரியா, அப்புறம் நேபாளம் என செம்படைகளின் தளங்களை விரிவடையச் செய்வதுதான் சீனாவின் நோக்கம் உலகம் முழுக்க ராணுவ தளங்கள் வைத்திருக்கும் அமெரிக்காவை விமர்சனம் செய்துவந்த சீனா, இப்போது இதுபோன்ற ராணுவ தளங்கள் மூலம் பிராந்திய ஒற்றுமை அதிகரிக்கும் என புதிய விளக்கம் கூறி வருகிறது."
அமெரிக்கா முதலாளித்துவ நாடு. சீனா கம்யூனிச நாடு. கொள்கை அடிப்படையில் இரண்டுமே இரு துருவங்கள். ஆனால் சர்வதேச அரசியலில் அதிகாரம், ராணுவ பலம், வலுவான பொருளாதாரம் போன்ற விஷயங்களில் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று போட்டிதான். இந்தப் போட்டி, அடுத்த நாடுகளில் ராணுவ தளங்களை அமைப்பதிலும் வந்துவிட்டது.
உலகிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மட்டும்தான் தங்கள் நாடுகளில் மட்டுமல்லாது மற்ற நேச நாடுகளிலும் ராணுவ தளங்களை வைத்துள்ளன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்துவிட்ட பிறகு, அந்த ஏவுகணைகளை ஆரம்பத்திலேயே அழிப்பதற்கும் ராணுவ தளங்கள் இருக்கும் நாடுகளின் பாதுகாப்புக்கும் இது அவசியமாகிவிட்டது. இந்த ஆசை இப்போது சீனாவுக்கும் வந்துவிட்டது. பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது சீனா.
சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள உக்கூர் பிராந்தியத்தில் தீவிரவாதப் பிரச்னை இருக்கிறது. தனி நாடு கேட்டுப் போராடி வரும் இந்தப் பகுதி தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிய, பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள வடமேற்கு மாகாணத்துடன் சீனா ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போது அந்தப் பகுதியில் ஒரு ராணுவ தளத்தை அமைப்பதன் மூலம் தீவிரவாதிகளை அடக்குவது சீனாவுக்கு எளிதாகிவிடும். இது இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகி விடும் என்பதுதான் பிரச்னை.
பாகிஸ்தான் தனக்குத் தேவையான ராணுவ தளவாடங்களில் 70 சதவீதத்தை சீனாவிடம்தான் வாங்கி வருகிறது. சப்ளையை நிறுத்திவிடுவேன் என மிரட்டியே காரியத்தை சாதிக்கலாம். இந்தியாவை மிரட்ட இதையும் ஒரு வாய்ப்பாக பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம். தனக்கும் பாதுகாப்பு, சீனாவுக்கும் உதவி செய்தது போல் ஆகும் என்பதால் பாகிஸ்தானும் ராணுவ தளம் அமைத்துக் கொள்ள அனுமதிக்கும்.
பாகிஸ்தானில் தொடங்கி, அப்படியே மியான்மர், இந்தப் பக்கம் இலங்கை, அந்தப் பக்கம் வட கொரியா, அப்புறம் நேபாளம் என செம்படைகளின் தளங்களை விரிவடையச் செய்வதுதான் சீனாவின் நோக்கம¢.
உலகம் முழுக்க ராணுவ தளங்கள் வைத்திருக்கும் அமெரிக்காவை விமர்சனம் செய்துவந்த சீனா, இப்போது இதுபோன்ற ராணுவ தளங்கள் மூலம் பிராந்திய ஒற்றுமை அதிகரிக்கும் என புதிய விளக்கம் கூறி வருகிறது.
http://dinakaran.com/masterdetail.aspx?id=4890
போலீஸ் லஞ்சம் கேட்டால்....
‘‘போலீசார் லஞ்சம் கேட்டால் அல்லது காவல் துறை தொடர்பான பிரச்னைகள் இருந்தால், நேரடியாக எனது செல்போன் 98409 83832 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்.
http://www.dinakaran.com/nagaramdetail.aspx?id=4903
Avatar உருவாக்கப்பட்டது எப்படி??? (புகைப்படங்கள்)
உலகமெங்கும் வசூலில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் Avatar திரைப்படம் எவ்வாறு உருவாக்கப்பட்டது சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவற்றை இங்கு பதிவின் மூலம் பகிர்கின்றேன்....
http://techbyvarma.blogspot.com/2010/01/avatar.html
விடுதலை புலிகளின் புதிய இணையதளத்தை நடத்துபவர் மோசடி பேர்வழி-ஜெகத்
கஸ்பர் போடும் புது குண்டு..
மறக்க முடியுமா..என்னும் கட்டுரையை நக்கீரனில் எழுதி வரும் ,ஜெகத்
கஸ்பர் பாதிரியார் இந்த வார இதழில் .புலிகளின் புதிய தமில் இணைய தளமான
www.lttepress. com பற்றி சர்ச்சை க்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார் ,
அதாவது,தான் ஒரு விடுதலை புலியிடம் ,பேசியதாகவும்..அவரிடம் இந்த தளத்தை
பற்றி கேட்ட போது ..இது புலிகளால் நடத்தபடுவதில்லை.இது இந்திய,இலங்கை
அரசு உளவுதுறை வேலை என்றும்...கூறினாராம்.
மேலும் அடுத்த வரியிலேயே,இது லண்டனில் உள்ள ஒரு மோசடி பேர்வழியால்
நடத்தபடுகிறது..என்றும் அவர் அங்கே ஆள்கடத்தல் தொழில் செய்து
சம்பாதிப்பதாகவும் இந்த இணையத்தை மக்கள் யாரும் பொருட்படுத்த வேண்டாம்
எனவும் அந்த விடுதலை புலி கூறியதவும் எழுதி உள்ளார்.
விடுதலை புலிகளின் தளபதி போல...ஜெகத் கஸ்பர் விடும் பீலாவுக்கு அளவு
இல்லாமல் போய்விட்டது.
இந்த ஆளுக்கு எழுத இடம் கொடுத்து ஊக்குவிக்கும் நக்கீரனுக்கு ஈழமக்கள்
கண்டணம் தெரிவிக்க வேண்டும்.
இல்லையேல் ...ஈழமக்களுக்கு இனி நீதான் தலைவர் என பிரபாகரன் தன்னிடம்
கூறியதாக கதையும் விடுவார்.இந்த நல்லவர்.
இவரை பற்றி ,
www.envazhi. com என்வழி இணையதளத்தில் வந்த ஒரு கட்டுரை படித்து பாருங்கள்..!
ஜெகத் கஸ்பர் நல்லவரா கெட்டவரா? அதிர்வு இணையதளம் ஏன் அவரைக் காய்ச்சி எடுக்கிறது?
(பால் பழனி)
முதல் கேள்விக்கு ‘நாயகன்’ பாணி ‘தெரியலியே…’தான் பதில்!
kasperஎனவே அடுத்த கேள்விக்குப் போய்விடலாம்…
ஜெகத் கஸ்பர் ராஜ் நக்கீரனில் மறக்க முடியுமா? தொடரை ஆரம்பித்த புதிதில்
தமிழீழம், விடுதலைப் புலிகள் பற்றிய எழுத்துக்களோடு, பிற அனுபவங்களையும்
அவர் எழுதி வந்தார். பின்னர் இறுதிப் போரின் இறுதிக் கட்டமான மே 17-ம்
தேதிக்குப் பிறகுதான் தொடர்ந்து பிரபாகரன் குறித்த கட்டுரைகளை அவர்
தீவிரமாக எழுதத் துவங்கினார்.
பிரபாகரன் பேட்டி என ஆரம்பித்தவர், 80 அத்தியாயங்களுக்கு இந்தத் தொடரை
இழுப்பதற்காக இலக்கில்லாமல் பல விஷயங்களைச் சுற்றி வளைத்து எழுதுவதாகவே
தமிழுணர்வாளர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இது மேலோட்டமான
அவதானிப்புதான்.
ஆனால் ஜெகத் கஸ்பரின் உண்மையான முகம் என்ன என்பது இன்னும் பலருக்கு
புலப்படவில்லை. பிரபாகரனை தேசியத் தலைவர் என்று உயர்த்திப் பிடிக்கும்
இந்த மனிதருக்கு, இறுதி நாளில் நிகழ்ந்த துயரத்தில் ஏதோ ஒரு பங்கிருப்பதை
புலம்பெயர் தமிழர்கள் உரக்கச் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இவரைப்
போன்றவர்கள் பேச்சை நம்பித்தான் நடேசன், புலித்தேவன் போன்றோர் வெள்ளைக்
கொடிகளோடு போய் சிங்களவனின் துப்பாக்கி குண்டுகளில் சிக்கி ரத்த
வெள்ளத்தில் கிடந்தார்கள் என்ற உண்மையை கஸ்பரே சுற்றி வளைத்து ஒப்புக்
கொள்கிறார்.
அந்த நாளில் சிங்களத்துக்கு உதவிய இந்திய அரசுக்காக, அல்லது இந்திய
அரசின் சார்பில் இயங்கியவர்களுக்காக கனிமொழியுடன் இணைந்து சில வேலைகளைச்
செய்துள்ளார் கஸ்பர் என்றும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் பிரபாகரனை இவர் தமிழீழத்தில் சந்தித்தது வெறும் 6
நிமிடங்கள் மட்டுமே என்றும், இவருக்கு பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்துக்
கூறினார் என்பதைத் தவிர வேறு தொடர்புகள் இல்லை என்றும் அதிர்வு
கூறுகிறது. இந்த 6 நிமிடச் சந்திப்பை வைத்துக் கொண்டு, புலிகள்
இயக்கத்துக்கே தான்தான் காட்பாதர் என்ற ரேஞ்சுக்கு கஸ்பர் பேசி, எழுதி
வருவது ஏமாற்று வேலை என்பது அதிர்வின் வாதம்.
ஈழத் தமிழர்களுக்காக உண்மையான உணர்வோடு போராடி சிறைவாசம் அனுபவித்த
நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டவர்களை விமர்சிக்கையில் ‘விபச்சாரம்’
போன்ற வார்த்தைகளை கஸ்பர் பயன்படுத்தியதோடு, ஈழப் போராட்டத்தையும்
பிரபாகரனையும் தவறாக வழிநடத்தியவர்கள் என அவர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
‘ஈழப் போராட்டத்தை இந்தியாவின் காலடியில் வைக்கும் கஸ்பரின் முயற்சி
பலிக்காததால் வந்த ஆத்திரத்தின் விளைவு இது’ என்கிறது அதிர்வு.
ஆனால் ஜெகத் கஸ்பரோ, அந்த அதிர்வு தளமே இலங்கை அரசின் ஏஜென்ட் என்று ஒரே
போடாகப் போடுகிறார். அதற்கு பல விளக்கங்களை இந்த வார நக்கீரனில் ‘இணைய
தளப் புல்லுருவிகள்’ என்ற தலைப்பில் தந்துள்ளார். பிரபாகரன் தன்னுடன்
எவ்வளவு நேரம் பேசினார் என்பதற்கு வீடியோவுடன் விரைவில் ஆதாரம்
தருவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் இது முறையான பதிலல்ல. லாவணி மாதிரிதான் தெரிகிறது. கேட்ட
கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘ உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா… எடுத்து
விடட்டுமா?’ என்று மிரட்டுவது அருட்தந்தைக்கு அழகல்ல.
தன்னைச் சுற்றிய பல சந்தேகக் கேள்விகளுக்கு கஸ்பர் பதில் சொல்லித்தானாக வேண்டும்.
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது வேறு நடவடிக்கைகளில் சரியாக
வரலாம். ஆனால் ஒரு இனத்தின் விடுதலைப் போரில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும்
தோழன், அவர்களை நசுக்கத் துடிக்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களான கனிமொழி,
கார்த்தி சிதம்பரத்துக்கும் நண்பன் என்ற தனது நிலைப்பாட்டின் வெளிப்படைத்
தன்மையை அவர் தெளிவாகச் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் இவருக்கும்
ராஜபக்சேவுக்கு பொன்னாடை போர்த்திய திருமாவளவனுக்கும் என்ன
வித்தியாசமிருக்கிறது?
‘இந்தியாவின் உதவியோடு போர்நிறுத்தம் செய்து கொண்டிருக்க வேண்டும்
புலிகள்’ என்று இப்போது சொல்கிறார் கஸ்பர்.
2008 மாவீரர் தின உரை தொடங்கி, போரின் இறுதிக் கணம் வரை ‘இந்தியாவே எமது
நண்பன். இந்தியாவின் மூலம் போர் நிறுத்தம் வேண்டும்’ என்றுதானே தமிழீழ
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அரசியல் பிரிவுத் தலைவர்
நடேசனும் கூறிவந்தார்கள். அதை இந்தியா குறைந்தபட்சம் செவிமடுக்கக் கூட
தயாராக இல்லையே… மாறாக புலிகளை பயங்கரவாத இயக்கம் என்றுதானே கடுமையாகப்
பேசினார்கள் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள்?
இறுதிநாளில், கஸ்பரும் சம்பந்தப்பட்ட அந்த சரணடைவு நிகழ்வில்,
அளிக்கப்பட்ட உறுதியை மீறி தமிழர் தலைவர்கள் கொல்லப்பட்டதற்கான பொறுப்பை
யார் ஏற்பார்கள்?
கஸ்பர் கருத்து சொல்வது தவறல்ல… ஆனால் இங்கே அதோடு நிற்கவில்லை. அந்தக்
கருத்து சொல்லலின் நீட்சி களப்பலியில் அல்லவா முடிந்திருக்கிறது
http://youthsmp3.blogspot.com/
பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...