தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, August 28, 2009

♥ செப்.3: மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம் ♥


செப்.3: மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்முழு அளவு படத்தைப் பார் http://www.kelvi.net/wp-content/uploads/2008/08/610x.jpg

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய, மாநில அரசுகள் மீட்டுக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 3ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதி கோரி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மீனவர்கள் கடந்த 21ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, 5 மாவட்ட விசைப்படகு மீனவர்கள், மீனவர்கள் சங்க தலைவர் போஸ் தலைமையில் ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். இதன்முடிவில், பாரம்பரியமாக கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய, மாநில அரசுகள் மீட்டுக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் 3ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15243

http://www.seithy.com/admin/upload/LANKA%20NAVY009.jpg     http://www.meenagam.org/wp-content/uploads/2009/07/rameshwaram_strike.jpg

♥ இலங்கை முகாம்களில் அனாதையாக சுற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் ♥


இலங்கை முகாம்களில் அனாதையாக சுற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள்


http://www.uthayan.com/Welcome/upload/news_img/2002_Jan_07_014735__thanimai.jpg       http://3.bp.blogspot.com/_WrBPGn8FBCw/SUyDMyexpDI/AAAAAAAAAzM/XrVGkhLe32Q/s400/loneliness.gif


இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்த போது வெளியேறிய 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழர்கள் வன்னி பகுதியில் பல்வேறு அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
 
போர் முடிந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அவர்களை இன்னும் சொந்த ஊருக்கு அனுப்பவில்லை. எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இந்த மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு போதிய உணவு, மருத்து, சுகாதாரம், முறையான கழிப்பிடம்  உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இனதால் பல ஆயிரம் பேர் நோய்வாய்பட்ட நிலையில் இறந்து விட்டனர்
 
தினமும் சிங்கள ராணுவத்தினர் முகாமுக்குள் புகுந்து அங்கு இளைஞர்களையும், இளம் பெண்களையும் விடுதலைப்புலிகள் என்று கூறி அழைத்து செல்கின்றனர். அவர்கள் அதன் பிறகு திரும்பியதே இல்லை. அவர்கள் கதி என்ன ஆகிறது? என்று தெரியவில்லை. அவர்கள் சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
இந்த முகாம்களில் 1064 சிறுவர்  சிறுமிகள் அனாதையாக சுற்றித்திரிகிறார்கள். அவர்களுடைய தாய்  தந்தை உறவினர்கள் கதி என்ன ஆனது என்று தெரிய வில்லை. பெற்றோர்களை தேடி பரிதாபமாக அலைகிறார்கள்.
 
இவர்களுடைய பெற்றோர்கள் போரில் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது ஏதாவது முகாம்களில் இருக்கலாம் என கருதப்படுகிறது. அகதி முகாம்களுக்குள் இதுவரை சர்வதேச குழுக்கள் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே அங்கு நடக்கும் கொடுமைகள் வெளியே தெரியாமலேயே இருக்கிறது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15196


http://1.bp.blogspot.com/_C_BziRP68H0/Sjjj9FVSLVI/AAAAAAAAAEc/ruo4LmFuKhU/s320/tears.jpg
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: சீமான்

http://2.bp.blogspot.com/_Fy2rQRzb5WU/Sl7EMe0ggoI/AAAAAAAAAe0/lfeE9vI2_gA/s400/p2.jpg    http://www.alaikal.com/news/wp-content/seeman7.jpg

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சீமான் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே முள்வேலியில் அடைக்கப்பட்டு சித்திரவதைச் செய்யப்படுவதாக, அவர்கள் தமது இருப்பிடங்களுக்கு குடிபெயரச் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் மாபெரும் பேரணி நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில், இயக்குநர் சீமான் தலைமையில் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வந்த இயக்குநர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழின அழிப்பு போரில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும். குறிப்பாக இந்தியா உடனடியாக அதைச் செய்ய வேண்டும்.
 
இலங்கையில் போர் முடிந்து 3மாதங்கள் ஆகியும், முள் வேலிக்குள் வாழ்விழந்து கிடக்கும் தமிழ் மக்களை உடனடியாக, அவரவர் தம் இருப்பிடங்களுக்கு சென்று குடியேற அனுமதிக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உணவு வசதிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பச்சிளம் குழந்தைகள் பால் இல்லாமல் தவித்து வருகின்றனர். உணவு, உடை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும்.
 
தொடர்ந்து இந்திய அரசும், தமிழக அரசும் இலங்கைக்கு பண உதவி செய்வதை நிறுத்த வேண்டும். மேலும், நம் நாட்டில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். காந்தியை கொன்ற வழக்கில் கூட ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு 17 மாதங்கள் மட்டுமே தடை விதிக்க முடிந்தது. ஆனால் 20 ஆண்டுகளாக ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதற்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.
 
அடுத்த ஆண்டு மே மாதம் 17ம் தேதி தமிழ் மக்களையும், இந்த மண்ணையும் இணைக்கும் விழாவாக, நாம் தமிழர் இயக்கம் அரசியல் இயக்கமாக உருவாகும் என்றார்.


http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15297http://www.envazhi.com/wp-content/uploads/2009/06/seeman11.jpg      http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/seeman_vazhthukal.jpg வணங்காமண் நிவாரணப் பொருட்கள் கடலில் கொட்டப்படும் அபாயம்!

http://live.athirady.org/wp-content/uploads/2009/07/vanni_mission.png


 
கொழும்பு துறைமுகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக தேங்கிக் கிடக்கும் வணங்காமண் நிவாரணப் பொருட்கள் காலாவதியாகியோ அல்லது பழுதடைந்தோ கடலில் கொட்டப்படும் அபாயம் தோன்றியிருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கையில்,

கொலராடோ கப்பலில் எடுத்து வரப்பட்ட நிவாரணப் பொருட்களை அங்கிருந்து வெளியகற்றுவதற்காக சகலவித அனுமதிகளையும் பெற்றுக் கொண்டுள்ள போதிலும், துறைமுக அதிகார சபைக்கு 6.5 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதால் நிவாரண பொருட்களை விநியோகிப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார்.

இத்தொகையை அரசாங்கம் செலுத்துவதற்கு முன்வரும் என தாம் நம்புவதாக தெரிவித்த அவர், இன்றைய தினத்திற்குள் அதற்கான இணக்கம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை நிவாரணப் பொருட்களை வவுனியாவுக்கு கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும்.

நிவாரணப் பொருட்கள் 27 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட நிலையில் கொழும்பு துறைமுகத்தில் சுமார் ஒன்றரை மாதங்களாக தேங்கிக் கிடக்கின்றன. எனவே இந்த பொருட்களில் சில காலாவதியாகி இருக்கக்கூடும் அல்லது பழுதடைந்திருக்கக்கூடும் என கருதப்படுகின்றபோதிலும் அதனை உறுதிப்படுத்த எம்மால் முடியவில்லை என்று கூறியுள்ளார்.


http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15270

http://3.bp.blogspot.com/_VEKcqfuS1p8/SJrfbF3aWMI/AAAAAAAAAFk/mzMK-NlLMf0/S660/Trologo1.png
கரூரில் இலங்கை தேசிய கொடி எரிப்பு


http://www.crossed-flag-pins.com/Friendship-Pins/India/Flag-Pins-India-Sri-Lanka.jpg   http://lasithasilva.files.wordpress.com/2009/06/7653ac43bf614e9313106af9dda5d741.jpg
    
தமிழர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து கொலை செயத் செயலைக் கண்டித்து கரூர் நீதி மன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து, தீ வைத்து எரித்தனர்.


இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் போர் முடிந்த நிலையில் அப்பாவி தமிழர்களை பாதுகாப்பு வளைத்திற்குள் வைத்து இலங்கை ராணுவம் நிர்வாணப்படுத்தி கொடுமை செய்து படுகொலை செய்து வருவதாக தமிழ் ஈழ ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள ராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகளை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த காட்சிகள் தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இலங்கை ராணுவத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இலங்கை வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் ரமேஷ் தலைமையில், வழக்கறிஞர்கள் செயலாளர் நடேசன், இராஜேந்திரன், நன்மாறன் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து தீ வைத்து கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15298


ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம்: சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

 
இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஈழத்தமிழர்களை சுட்டுக்கொல்லப்படுவதாக வெளியாகியுள்ள வீடியோ காட்சிகள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
 
இலங்கை ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரின் போது, இரண்டு தரப்பும் மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டன என்ற குற்றச்சாட்டையும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுமத்தியுள்ளது.


இந்த வீடியோ 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை படைவீரர் ஒருவரால் தமது செல்போன் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர்கள் அழைத்து வரப்பட்டு இலங்கை படையினரால் சுட்டுகொல்லப்படும் காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளன.

இது 1949 ஆம் ஆண்டு ஜெனிவா உடன்படிக்கையின் சரத்து மூன்றில் கூறப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான நியதிகளை மீறும் செயலென மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டியுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்த போர் புலிகளுக்கு எதிரானதென கூறும் நிலையில் இந்த வீடியோ படம் மாறுப்பட்ட விதத்தில் அமைந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐக்கிய நாடுகளின் பணிப்பாளர் ஸ்டீவ் கிரே சோவ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன சர்வதேச ஆணைகுழுவொன்றை அமைத்து இதனை விசாரணை செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.


http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15207http://1.bp.blogspot.com/_ZyZR4iu0lhw/SfMopL2D0jI/AAAAAAAAADU/XmsFGrJMWXA/s400/610x.jpg   http://www.tamilwin.org/photos/full/2009/04/25_02.jpg

♥ " அவரின் முகமா அது?" - ஜெகத் கஸ்பர்-நக்கீரன் தொடர்                     மே-17 வரை நந்திக் கடற்கரை யில் நின்ற சிவரூபன் தொடர்கிறேன்...

எங்கும்பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால் கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத் தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப் பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத் தது.

வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத் தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங் கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடை யின்றிக் கிடந்தன. அநேகம்பேர் எம் குலப் பெண்கள். கொடுமை யை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவு கள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப் பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்க வில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். ""புலி தனியா பிரிஞ்சு வாங்கோ... பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ...'' என்று கொச் சைத் தமிழில் சிங்களன் அறிவித்துக் கொண்டிருந் தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகி லிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள். ""இனி அவன் ஆட்சிதானே... இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்... பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌர வமா செத்திருக்கலாம்...'' என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத் தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் ராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவ னிடம் மெல்லச் சென்று கேட்டேன். "என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?' என்று. ""கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போற வங்களை சுடச் சொல்லி உத்தரவு'' என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், ""இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்... ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத் தோம்'' என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன் னேன், ""ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்'' என்றேன். "பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?' என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு ராணு வக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட் டத்தினர் மீது கேவலச் சிரிப் புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள். தமிழரின் இயலா மை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போன வர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக் காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், "பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ' என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண் ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந் தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக் குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட "புலிகள்' என்று கை நீட்டிக் காட்ட ராணுவத் தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனை யோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்று, ""நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்'' என்பது. இன்னொன்று ""எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்'' என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.

உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரி சோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன். என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

எங்கு கொண்டுபோகிறார் களோ, என்னவெல் லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக் கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (Immigration) மற்றும் சுங்கம் (Customs)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம் பித்தது. ""புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்'', ""ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்'', ""எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்'', ""எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்'' என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின. 1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து "சதுரங்கம் 1,2,3 (Operation Checkmate) என பெயரிட்டு நின்றபோது மண லாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. "உயி ரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது' என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன். போர்க்களத்தில் தன்னையே கொடையாக் கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார்.

(நினைவுகள் சுழலும்)


http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15258


நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!