Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, May 31, 2009

♥ தமிழ் மக்கள் தமது துயரத்தின் உச்சத்தைச் சந்தித்துள்ளார்கள்-சண் தவராஜா ♥

ஈரடி பின்னால் ஓரடி முன்னால்? - சண் தவராஜா


தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அடுத்தது என்ன எனத் தெரியாத சூழ்நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள அதேவேளை புலம்பெயர் தமிழர் மத்தியில் இக்குழப்பம் வெகுவாக நிலவுதுடன் மோதல் உருவாகக் கூடிய அபாயமும் தென்படுகின்றது.

போராட்டம் ஒரு துயர முடிவைச் சந்தித்துள்ளது என்பதற்கு அப்பால் தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் மரணம் தொடர்பாக வெளிவரும் முரணான சேதிகளே மக்களின் துயரத்துக்கும் குழப்பத்துக்கும் அதிகளவில் காரணங்களாக உள்ளன.

இன்றைய நிமிடத்தில் தேசியத் தலைவர் உயிருடன் இருக்கிறாரா

இல்லையா என்பதை ஆராய்வதிலேயே தமிழ் மக்களின் கவனம் வெகுவாகக் குவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விவாவதத்திற்கு கிட்டிய எதிர்காலத்தில் முடிவு இருக்கப் போவதில்லை என்பதே யதார்த்தம்.

அதேவேளை முடிவு காண முடியாத இந்த விடயம் தொடர்பில் சர்ச்சைப்படுவதை விட்டுவிட்டு வேறு விடயங்களில் நாம் அவசரமாகவும் அவசியமாகவும் கவனஞ் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.

இன்றைய நிலையில் தமிழ் மக்கள் தமது துயரத்தின் உச்சத்தைச் சந்தித்துள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இன்னமும் கூட அதிலிருந்து அவர்கள் மீளவில்லை என்பதுவும் உண்மை. ஆனால் இதற்காக நாம் எமது அடுத்த கட்டச் செயற்பாடுகளை மறந்துவிடலாமா? எதிர்பாராத இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை. அதற்காக நாம் ஸ்தம்பிதம் அடைந்துவிட முடியாது. இழப்புக்களைத் தாங்கிக் கொண்டு நாம் முன்னோக்கி நடைபோட வேண்டியது அவசியம்.

ஐ.நா. அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி தற்போது சுமார் 3 இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் போதுமான உணவின்றி, சுத்தமான குடிநீரின்றி, சுகாதார வசதிகள் இன்றி, நடமாடும் சுதந்திரம் இன்றி வாடுகின்றார்கள். இது தவிர பிள்ளைகள் தமது பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளார்கள். பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றார்கள்.

இடைத்தங்கல் முகாம்கள் தவிர போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறிய ஆயிரக் கணக்கான மக்கள் இன்னமும் கிளிநொச்சி பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் அவர்கள் மிக மோசமாக நடத்தப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சிறிலங்கா அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி இன்னமும் சுமார் 9000 வரையான போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இத்தொகை நாளுக்கு நாள் உயர்ந்தும் வருகின்றது. இவர்கள் தடுப்புக் காவலில் மிருகத்தனமாக நடத்தப்படுகின்றார்கள் என்பது சொல்லாமலேயே புரியும்.

இது தவிர காயப்பட்ட நிலையில் கணிசமான எண்ணிக்கையிலான பொது மக்களும் போராளிகளும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இவர்களுள் சுமார் முப்பதாயிரம் வரையானோர் தங்களின் அவயவங்களை இழந்திருக்கிறார்கள். இவர்களில் அநேகருக்குக் கண்துடைப்புச் சிகிச்சைகளே வழங்கப்பட்டு வருவதாக தெரிகின்றது. சிறிலங்கா அரசு நினைத்தால் இவர்களைக் காப்பாற்றவும் முடியும்; கொல்லவும் முடியும்.

இந்நிலையில் இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களில் வாழும் மக்களின் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு என்பவற்றுக்கும் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் விடுதலை மற்றும் மறுவாழ்வு என்பவற்றுக்கும் முன்னுரிமை அழிப்பது நியாயமானது.

ஏற்கனவே சிறிலங்கா அரசிடம் சரணடைந்துள்ள தயா மாஸ்டர் போன்றோர் வழங்கிவரும் தகவல்கள் காரணமாக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய தொடர்ந்தும் ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்ற தமிழ் சிங்கள ஊடகவியலாளர்களுக்கும் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து கொண்டே தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் தந்துவந்த சிங்களப் புத்திஜீவிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளன. விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்கள் பலர் உயிருடன் அரசின் கையில் சிக்கிவரும் நிலையில் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளில் வாழ்வோருக்கும் கூடப் பல நெருக்கடிகள் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

போரட்டத்தின் இறுதி நாட்களில் எவ்வாறு தமிழ் மக்கள் கைவிடப் பட்டார்களோ' அதுபோன்று இவர்களையும் கைவிட்டுவிடலாகாது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

போர் முடிவிற்கு வந்துவிட்டதாக சிறிலங்கா அரசு அறிவத்துள்ள போதிலும் அதன் தமிழர் விரோதப் போக்கும் போர் முனைப்பும் இன்னமும் குறைந்து விடவில்லை. சொல்லப் போனால் அது இன்னமும் அதிகரித்திருக்கிறது என்றே கூற வேண்டும். இதுநாள்வரை போர்க்குற்ற விசாரணைகளுக்காக அஞ்சிக் கொண்டிருந்த சிங்களத் தலைமை மே 26, 27 ஆம் திகதிகளில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 11 ஆவது விசேட கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தைத் தோற்கடித்ததில் இருந்து மேலும் உற்சாகம் பெற்றிருக்கின்றது.

துட்டகைமுனுவின் பாணியில் தமிழர்களை வெற்றி கொண்டு விட்டோம் என்ற மமதையில் இருக்கும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேலும் ஒரு லட்சம் படையினரை இராணுவத்தில் சேர்க்கவுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் என்ற பெயரை இனிமேல் யாரும் உச்சரிக்காத ஒரு நிலையை உருவாக்கப் போவதாகவும் சூளுரைத்திருக்கின்றார்.

வன்னியில் போர்ப் பிரதேசங்களில் சிக்குண்டிருந்த தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளின் தலைமையையும் சர்வதேச சமூகம் காப்பாற்றும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு - குறிப்பாக புலம்பெயர் தமிழ் மக்களுக்கு - நிறையவே இருந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே புலம்பெயர் நாடுகளில் தொடர்ச்சியான போராட்டங்கள் பல்வேறு வடிவங்களிலும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஊடக விழிப்புணர்வையும் தமிழ் மக்கள் மத்தியில் எழுச்சியையும் ஏற்படுத்தியதைத் தவிர வேறு எதனையும் இத்தகைய போராட்டங்களால் சாதிக்க முடியாமற் போய்விட்டது.

இதேவேளை சிறிலங்கா அரசு மீது போர்க்குற்ற விசாரணையையாவது நடாத்துவதில் சர்வதேசம் விடாப்பிடியாகச் செயற்படும் என்ற எதிர்பார்ப்பும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தேற்கடிக்கப்பட்டதுடன் பொய்த்துப் போனது.

இத்தகைய யதார்த்தங்களின் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வுகள் அமைய வேண்டும்.

தற்போதைய நிலையில் மற்றுமொரு ஆயுதப் போராட்டம் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட முடியாத நிலையே உள்ளது. இத்தகைய தீர்மானம் தற்கொலைக்கு ஒப்பானதுடன் ஏற்கனவே பல்வேறு இழப்புக்களைச் சந்தித்து ஏதிலிகளாக இருக்கும் மக்களுக்கு மேலும் இழப்புக்களை ஏற்படுத்துவதற்கே வழி கோலும்.

இன்றைய நிலையில் அந்த மக்களிடம் உயிர்களைத் தவிர இழப்பதற்கு வேறு எதுவுமே இல்லை. உரிமைப் போராட்டத்துக்கு தன்னலமற்ற ஆதரவை இதுவரை நல்கிய அந்த மக்களுக்கு உரிமைகளைப் பெந்றுத் தருவதில் தவறியிருந்தாலும் ஆகக் குறைந்தது அவர்களிடம் எஞ்சியிருக்கும் உயிர்களைக் காப்பதற்காவாவது நாம் மானசீகமாக முயல வேண்டும்.

எனவே எம்முன்னே இருக்கின்ற ஒரே தெரிவு ஜனநாயக வழிமுறைகளுக்கு ஊடாக எமது இறுதி இலக்கை நோக்கி நகர்த்திச் செல்வதே.

இன்றைய சூழ்நிலையில் களத்தில் விடுதலைப் புலிகளின் தலைமை அகற்றப்பட்டுவிட்ட நிலையில் அல்லது அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் உயிரோடு இருப்பதாகக் கருதப்படும் ஒருசில தலைவர்கள் கூடத் தங்களைப் பகிரங்கமாக வெளிக்காட்ட முடியாத நிலையில் புலம்பெயர் சமூகத்தில் இருந்தே அந்தத் தலைமை - தற்காலிகமாகவேனும் - உருவாக வேண்டிய தேவை இருக்கின்றது.

இது நடைமுறைச் சாத்தியமானதா? இதனால் எதையாவது சாதிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்படலாம்.

ஒரு காரியத்தை முன்னெடுக்கும் போது நாம் முதலில் இலக்கைத் தீர்மானிக்க வேண்டும். அதன் பிறகே இந்த இலக்கை எவ்வாறு சென்றடைவது என்பதைப் பற்றி திட்டமிட வேண்டும்.

தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் சுதந்திரமாக இறைமையுள்ளவர்களாக வாழவே விரும்பினர். இலங்கைத் தீவில் அவர்கள் அவ்வாறு வாழ விரும்பியமைக்கு வலுவான காரணங்கள் நிறையவே உள்ளன. அவர்கள் எதற்காகப் பிரிந்து சென்று தனிநாடு அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தார்களோ. அந்தக் காரணங்கள் இப்போதும் மாற்றமின்றி உள்ளன. எனவே அவர்களது இலட்சியமும் மாற்றமடைய வேண்டிய அவசியமில்லை.

அந்த உன்னத இலட்சியத்தை எட்டுவதற்காக இதுவரை சுமார் 2 இலட்சம் வரையான உயிர்களையும் கோடிக் கணக்கான டொலர் பெறுமதியான சொத்துக்களையும் அவர்கள் இழந்துள்ளார்கள்.

இத்தனை இழப்புக்களின் பின்னும் அவர்கள் தமது இலட்சியப் பாதையில் ஒரு அடியேனும் முன்னேற முடியவில்லை. யதார்த்தமாக நோக்கினால் அவர்கள் முன்னைய நிலையை விடப் பின்னோக்கியே சென்றுள்ளார்கள் எனலாம். இது தேவைக்கும் அதிகமானது.

இந்நிலையில் இன்றைய யதார்த்தம் தமிழ் மக்கள் தமது போராட்டப் பாதையை மாற்றியாக வேண்டிய தேவையை வலியுறுத்தி நிற்கின்றது.

இடம்பெயர்ந்த மக்களைத் தொடர்ந்தும் முகாம்களில் தடுத்து வைத்திருப்பதற்கும் எமது மக்களின் விடுதலைக்காக தீரமுடன் போராடிய போராளிகளை தடுத்து வைத்துச் சித்திரவதை செய்வதற்கும் அவர்களுக்கு ஆதரவு வழங்கிய ஏனையோரை வேட்டையாடுவதற்கும் சிங்கள இனவெறி அரசு தகுந்த காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றது. அதற்கான வாய்ப்பை எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் வழங்கிவிடக் கூடாது.

மறுபுறம் விடுதலைப் புலிகள் என்ற நாமமே இனி இலங்கைத் தீவில் இருக்கக் கூடாது எனச் சிங்கள தேசம் விரும்புகின்றது. இதனையே புலம்பெயர் நாடுகளில் வாழும் ஒரு சில புத்திஜீவிகளும் மாற்றுக் குழுவினரும் கூட விரும்புகின்றனர்.

இன்றைய நிலையில் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாகத் தோற்றடிக்கப்பட்டாலும் கூட அவர்கள் முன்னெடுத்த போராட்டம் பல சாதனைகளைப் படைத்திருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இன்று உலகத் தமிழினம் ஒன்றுபட்டிருக்கின்றதென்றால் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டிருக்கின்றதென்றால் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசினால் கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளன எனச் சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளதென்றால் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற சிந்தனை உருவாகியுள்ளதென்றால் அது விடுதலைப் புலிகளாலும் தேசிய தலைவர் பிரபாகரனாலுமே சாத்தியப்பட்டிருக்கின்றது. எனவே அந்தத் தியாகமும் பெருமையும் அழிக்கப்படவோ வரலாற்றில் இருந்து அகற்றப்படவோ அனுமதிக்கக் கூடாது.

எனவே இத்தகைய சிந்தனைகளின் அடிப்படையில் புதிதாக உருவாகப் போகும் விடுதலைப் புலிகளின் தலைமை வன்முறை அரசியலைக் கைவிடுவதாக அறிவித்துவிட்டு ஜனநாயக அரசியலில் பிரவேசிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வாழும் கல்விமான்கள் ஊடகவியலாளர்கள் விடுதலை விரும்பிகளை ஆகியோரை உள்ளடக்கிய ஆலோசனைச் சபையொன்றை ஏற்படுத்தி அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிட்டுவதுடன் சிறிலங்கா அரசோ இந்தியாவோ அந்த முயற்சியைப் புறந்தள்ளி விட முடியாத நிலை உருவாகும்.

இன்று யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தேர்தலை ஒத்திப் போடும் முயற்சிகள் பயனளிக்காதவிடத்து தேர்தலில் விடுதலைப் புலிகள் நேரடியாகவோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடாகவே பங்கெடுக்க வேண்டும். விடுதலைப் புலிகள் 90 களில் பதிவு செய்த ~விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி' என்ற அரசியல் கட்சி இன்னமும் சிறிலங்கா தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக இருப்பதை மறந்துவிடக் கூடாது.

ஈழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களுமே துன்ப துயரங்களை அனுபவித்து உள்ளார்கள் என்ற போதிலும் அதிகபட்ச துன்பத்தை துயரத்தை அனுபவித்தவர்கள் வன்னி மக்களே. அனைத்தையும் இழந்த நிலையில் இன்று தடுப்பு முகாம்களில் வாடும் அவர்கள் நிம்மதியாக வாழ தத்தம் இடங்களுக்குத் திரும்ப வேண்டுமாக இருந்தால் முன்னாள் போராளிகளில் கணிசமானோர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாக வேண்டுமாக இருந்தால்

இன்னமும் உயிர்ப்பலி நிகழாமல் தற்போது தென் தமிழீழத்திலும் ஏனைய இடங்களிலும் மறைந்து வாழும் போராளிகள் பொதுமன்னிப்புப் பெற்று சகஜ வாழ்வில் பிரவேசிக்க வேண்டுமாக இருந்தால்

இதுவொன்றே சரியான மார்க்கம்.

இதேவேளை தற்போதைய சோர்வு மனப்பான்மையில் நாம் தளர்ந்து செயலற்றுப் போய்விடாமல் நமது தொடர்புகளைத் தொடர்ந்து பேணி எமது தாயக மக்களின் நலவாழ்வுக்காக நாம் பாடுபட வேண்டும். குறிப்பாக தாய்த் தமிழகத்தில் எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சகல அரசியல் கட்சிகளுடனும் உறவுகளைப் பேணி எமது அரசியல் செயற்பாடுகளுக்கான ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

எமது போராட்டப் பாதையில் நோர்வே சுவிற்சர்லாந்து போன்ற ஒரு சில நாடுகள் எமது மக்களின் நலவாழ்வுக்காக உண்மையாகவே பாடுபட்டிருந்தன. அந்த உறவு தொடர்ந்து பேணப்பட வேண்டும்.

இது தவிர இன்றைய நிலையில் எமக்காகக் குரல்தர சர்வதேச முன்னணி ஊடகங்கள் சில தாமாகவே முன்வந்துள்ளமை பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம். இந்த வாய்ப்பை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அத்துடன் சர்வதேச மன்றமான ஐ.நா.வில் எமது குரல் தொடர்ந்து ஒலிப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். ஐ.நா. மனித உரிமைக் குழுவில் சிறி லங்கா அரசுக்கு எதிராக அண்மையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் முறியடிக்கப்பட்ட போதிலும் அத்தகைய ஒரு முயற்சிக்கு ஊடாக வெளிப்பட்டுள்ள சேதி மிக முக்கியமானது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுத வன்முறையற்ற ஜனநாயக வழிப்பட்ட ஒன்றாக அமைய வேண்டும் என்ற கருத்தையே மேற்குலக நாடுகள் இதுவரை வலியுறுத்தி வந்தன. அன்றைய சூழலில் அக்கருத்தை உள்வாங்கி நாம் செயற்படத் தவறியிருந்த போதிலும் இன்றைய சூழ்நிலையில் அதுவே மிகப் பொருத்தமான தெரிவாக உள்ளது. அது தவிர அத்தகைய தெரிவின் ஊடாக இத்தகைய நாடுகளின் தார்மீக ஆதரவையும் நாம் எமது இலட்சியத்துக்காகப் பெற்றுக் கொள்ள முடியும்.

உலகின் பல்வேறு மூலைகளிலும் போராடிக் கொண்டிருக்கின்ற பல்வேறு போராட்ட அமைப்புக்களுக்கும் பல்வேறு போராட்ட முன்மாதிரிகளை விடுதலைப் புலிகள் இயக்கம் இதுவரை வழங்கியுள்ளது. எதிர்பாராத வகையில் இத்தகையதொரு இராணுவத் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையிலும் தனது அரசியற் செயற்பாடுகளுக்கு ஊடாக இக்கட்டான நிலையிலும் தனது மக்களின் நலன்களுக்காகத் தன்னைத் தகவமைத்தக் கொண்டு சரியான வழிநடத்தலை வழங்கிய அமைப்பு என்ற முன்மாதிரியை வழங்க விடுதலைப் புலிகள் முன்வர வேண்டும்.

இவை அனைத்தும் விரைந்து செய்யப்பட வேண்டும். தாமதிக்கின்ற ஒவ்வொரு கணமும் நாம் தோல்விப் பாதையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியாகவே அமையும்.

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு. - திருக்குறள்


http://www.tamilwin.com/view.php?2a26QVZ4b32j9Eg04dcuWnZdb0eD7G024d3GYpD3e0dLZLuwce03g2hP3cc4Vj06ae


vanni_20090513004.jpg



vanni_20090513009.jpg


♥ ஈழம் குறித்த சினிமாவை பாரதிராஜா இயக்குகிறார் ♥

ஈழம் குறித்த சினிமாவை பாரதிராஜா இயக்குகிறார்


n1527581102_30330392_750589.jpg



ஈழப் போராட்டத்தின் முப்பாதாண்டுகால ஆயுதப் போராட்டத்தின் கசப்பான முடிவு பாரதிராஜாவை கடுமையாக பாதித்திருக்கிறது. அவர் விரைவில் ஈழ மக்களின் தமிழீழக் கோரிக்கை குறித்த தமிழ் சினிமா ஒன்றை இயக்கப் போகிறார்.
முப்பதாண்டுகால ஆயுதப் போரில் பிரபாகரனின் பங்கும், போராளிகளின் விடுதலை வேட்கையையும் எடுத்துச் சொல்லும் வகையில் அமையப் போகும் இந்தப் படத்தின் திரைக்கதை முடியும் தருவாயில் இருக்கிறது.
முழுக்க முழுக்க புது முகங்களே நடிக்கும் இந்தப் படத்தில் புலிகளின் பகுதியையே மையமாக வைத்து கதையை நகர்த்தப் போகிறார்.




http://i36.tinypic.com/2iht6qu.jpg


♥ ஐ.நா. என்ற ஒரு வெட்டி பொழுதுபோக்கு மன்றம்- சுரேன் சுரேந்திரன் ♥

ஐ.நா. தமிழர்களைத் தோல்வியடைய வைத்துள்ளது – சுரேன் சுரேந்திரன்

suren-surendiran-01சிறிலங்கா இராணுவத்தால் 20,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்த அறிக்கைகளின் பின்பும் ஐ.நா.வானது நடவடிக்கை எடுக்கப் பயப்படும்போது, ஐரோப்பிய ஒன்றியமும் மற்றவர்களும் உடனடியாகச் செயற்பட வேண்டும் என பிரித்தானியா கார்டியன் பத்திரிகையில் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வானது தனது பலவீனத்தையும், மனதாபிமானத்தைக் காப்பாற்ற முடியாமையையும், மீண்டும் உலகுக்குக் காட்டியுள்ளது.

ஐ.நாவின் செயலின்மையால் ர்வான்டா, போஸ்னியா, காசா, மற்றும் டார்வர் போன்ற நாடுகளில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படடார்கள் இன்னும் பலர் இடம்பெயரப்பட்டார்கள் என சுரேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தும் பாடங்கள் ஐ.நாவால் படிக்கப்படவில்லை. உலகத் தமிழ் மக்கள், அரசியல் ஆராய்வாரள்கள், மனிதாபிமான அமைப்புகள் மற்றும் உதவி பணியகங்கள் சேர்ந்து பல எச்சரிக்கைகள் விடுத்திருந்தும் ஐ.நா. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைப் பாதிப்புள்ளாக்கியுள்ளது.

ஒரு போர்நிறுத்தத்தைக் கொண்டுவரவோ அல்லது பாதுகாப்பு வலயங்களுக்குச் சென்று மக்களின் அவலநிலைகளைப் பார்க்கவோ ஐ.நா ஒரு முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேலும் கார்டியனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கைகளின் விவரங்களும் மற்றும் மக்களின் மனிதாபிமான அவலத்தின் தகவல்களும் ஐ.நா.வுக்கு ஏற்கனவே தெரிந்துள்ளன என்று அண்மையில் வெளிவந்த நம்பக்கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன. இவ் உண்மைகளும் இன்னும் ஐ.நாவால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லையென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கனரக ஆயுதங்களும் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும் சிறிலங்கா இராணுவத்தால் பாதுகாப்பு வலயங்களில் இருந்த மக்கள் மீது பாவிக்கப்பட்டதற்கு ஆதாரங்களான செய்மதிப் படங்களும் ஐ.நாவிடம் இருந்துள்ளன.

ஐ.நாவின் செயலாளர் நாயகத்தின் நடவடிக்கைகளும், செயலின்மையும், அவரின் கடமையை முழுதாக உதாசீனப்படுத்தியுள்ளதையே தமிழர்களுக்கு காட்டியுள்ளது.

ஒரு முறையான சுயாதீன விசாரணையே சிறிலங்காவின் இன அழிப்புத் தொடர்பான உண்மைகளையும் அதில் ஐ.நாவின் பங்கையும் வெளியே கொண்டுவரும் என்று தமிழர்கள் நம்புகின்றார்கள்.

சட்ட வழிகள் ஊடாக சிறிலங்காவையும் மற்றும் ஐ.நா. அதிகாரிகளையும் விளங்குவதும், மற்றும் இடப்பெயர்ந்த தமிழர்களின் துன்பங்களை இல்லாமல் செய்வதும், இப்பொழுது, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, தென்.ஆப்பிரிக்கா மற்றும் ஏனைய மனிதாபிமான கோட்பாடுகளை நம்பும் நாடுகள் இணைந்து செயற்படுவதிலேயே உள்ளது, என கார்டியன் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

http://www.nerudal.com/nerudal.7377.html




இறந்த பெண் போராளியை இழிவு படுத்தியுள்ள சிறிலங்கா இராணுவம்: மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை

301208_1.jpg



http://www.tamilwin.com/view.php?23EWvN200fjYG2eeCG5P3ba59Cw4ddY2f3cccvpM3d44WQF2a021LQ3e


♥ இலங்கை படுகொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாதது: ஐ.நா. ♥

இலங்கையில் பொதுமக்களின் இழப்புக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது: ஐ.நா.




idhayam.jpg
இலங்கையில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகத்தின் பேச்சாளர் எலிசபத் பையர்ஸ் தெரிவித்துள்ளதாவது:

அண்மைய மாதங்களாக இலங்கையில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்வாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் மீண்டும் வெளிப்படையாக தெரிவித்து வந்துள்ளது.

எமது தரவுகளை அரசாங்கத்திற்கும், ஏனைய தரப்பினருக்கும் வழங்கியுள்ளோம். எமக்கு கிடைத்த தகவல்கள் மூலம் கணிப்பிடப்பட்ட எண்ணிக்கைகளே எம்மிடம் உள்ளன. நாம் பொதுமக்களின் இழப்புக்களையும், மக்களின் துன்பங்களையும் வெளியில் தெரிவிப்பதற்கு வெட்கப்படவில்லை. நீண்ட காலமாகவே நாம் எச்சரிக்கைகளை விடுத்து வந்துள்ளோம் என்றார் அவர்.

இறுதியாக நடைபெற்ற பாரிய மோதல்களில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தகவல் வெயிட்டிருந்ததை தொடர்ந்தே ஐக்கிய நாடுகள் சபையின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

இலங்கையில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்ட தகவல்கள் தமக்கு பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தி வருவதாக ஜெனீவாவை தளமாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புக்களும் தெரிவித்துள்ளன.

இதனிடையே சிறிலங்காவுடனான தனது உறவுகளை முறித்துக்கொள்ள விரும்பாததாலேயே போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட தயங்குவதாக பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளிவரும் 'லு மொந்த்' என்ற பத்திரிகை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinam.com/full.php?2a24XTs4b43k8Ci04dcnVv7db0eB7FZ34d3T0oJ3e0dBZRnEce03d5g22cc4Pl29be


adangkath-thamilan-500-336.jpg




அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மனிதச்சங்கிலிப் பேரணி



சிங்கள இனவெறியர்களின் ஆர்ப்பாட்டத்தினை கண்டித்து கனடாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்





dsc02738.jpg

♥ " இது இப்படி இருக்கு?" தமிழனைக் கொள்ள தமிழனையே தயார் படுத்துகிறானாம்,சிங்களன் ? ♥

வடக்கு தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளத் திட்டம்


n1527581102_30330393_8305193.jpg



வடக்கில் உள்ள தமிழ் இஞைர்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வடக்கில் வசித்து வரும் தமிழ் இளைஞர்கள் அந்தப் பிரதேசம் குறித்து நன்றாக அறிந்து கொண்டிருப்பதனால் அவர்களை பணியில் அமர்த்துவது இலகுவானதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கிழக்கு விடுவிக்கப்பட்டதன் பின்னர் அந்தப் பிரதேச பாதுகாப்பு கடமைகளுக்காக சுமார் 800 தமிழ் இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இராணுவம் என்பது சகல இன மக்களும் பங்களிப்பு செய்ய வேண்டியதொன்றென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டின் சகல மக்களும் தாயகத்தை பாதுகாப்பதனை முதன்மை நோக்காக கொண்டு செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
http://www.tamilwin.com/view.php?2a36QVZ4b32j9Eg04dcuWnZdb0eD7G024d3GYpD3e0dfZLumce03g2hP3cc4Vj06ae

♥ புலிகளின் சர்வதேச வலைப்பின்னல் மிகவும் சக்திவாய்ந்தது ♥

புலிகளின் சர்வதேச வலைப்பின்னல் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக இருப்பதாக போகல்லாகம கூறுகிறார்




n1527581102_30330412_646130.jpg

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஆசிய பாதுகாப்பிற்கான உயர்மட்ட மாநாட்டில் றோகித போகல்லாகம கலந்துகொண்டுள்ளார். நேற்றைய தினம் அங்கு உரையாற்றிய அவர், புலிகளில் சர்வதேச வலைப்பின்னல் இன்னமும் பலமுடன், சக்த்திவாய்ந்ததாகவும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளை தாம் அழித்திருந்தாலும், வெளிநாடுகளில் இயங்கும் அவர்களின் வலைப்பின்னல் குறித்து தாம் கவலையடைவதாகக் குறிப்பிட்டுள்ள றோகித போகல்லாகம, அது  விடுதலைப்  புலிகள் மீண்டும் தலைதூக்க ஏதுவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக வெளிநாடுகளில் அவர்களின் செயல்பாடு,  சர்வதேசத் தலைநகரங்களில் அவர்களுக்கு உள்ள செல்வாக்கு, மற்றும் அரசியல் தாலைவர்களுடைய தொடர்புகள் என்பன, அந்த அமைப்பின் வெளிநாட்டு கட்டமைப்பை மிகுந்த பலமுள்ளதாக வைத்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டில் அவர் பல ஆசிய நாட்டு வெளிவிவகார அமைச்சர்களைச் சந்தித்து புலிகளை தடைசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அதிர்வின் ஆசியச் செய்தியாளர் அறியத்தருகிறார்.

http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1243754607&archive=&start_from=&ucat=2&


♥ கொலைகாரனுக்கு டாக்டர் பட்டம் ♥

டாக்டர் ஆகிறார்கள் மகிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும்


என்ன வாசகர்களே இவர்கள் இருவரும் எப்போது படித்து டாக்டர் ஆனார்கள் என யோசிக்கவேண்டாம், மிக இலகுவாக இந்தப் பட்டம் பல்கலைக் கழகங்களால் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மகிந்தவுக்கும் கோத்தவுக்கும் கலாநிதி பட்டத்தை கொழும்பு பல்கலைக்கழகம் ஒன்று வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்ததற்காக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு கொழும்பு பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்க தீர்மானித்துள்ளது.

மகிந்தவுக்கு சட்டத்துறையில் கலாநிதி பட்டமும் கோத்தபாயவுக்கு கல்வியலில் சார்ந்த கலாநிதி பட்டமும் வழங்கப்படவுள்ளன. எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உயர்கல்விமான்களுக்கான பட்டமளிப்பு விழாவில் இவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

இனி எல்லாரும் டாக்டர் மகிந்த என்றுதான் அவரை கூப்பிடவேனும்,  அற்பனுக்கு வாழ்வு வந்தா....மீகுதி உங்களுக்கு தெரியும் தானே...



n507913043_1753229_964733.jpg


http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1243752499&archive=&start_from=&ucat=3&

♥ தீயின் சாம்பலிலிருந்து நீங்கள் எழுவது நிச்சயம்-குர்து இனத்தவர் கடிதம் ♥

ஈழத்தமிழ் மக்களுக்கு குர்து இனத்தவர் கடிதம்

கடந்த சில மாதங்களில் பேரிழப்புக்களைச் சந்தித்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு என் ஆழ்ந்த வருத்தமும் அனுதாபமும் உரித்தாகட்டும்.

குர்து இனத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் எண்பதுகளின் இடைப்பகுதியிலிருந்து எம் மக்களின் போராட்டத்தைப் போலவே இலங்கைவாழ் தமிழர்களின் தனி-அரசு விழைகிற விடுதலைப்போராட்டம் பற்றியும் அவதானித்து வந்திருக்கிறேன். அப்போது விடுதலைப்புலிகளின் யாழ் பிரிவில் இருந்த பெண் போராளிகளின் படங்களைப் பார்த்து அவர்கள்மீது காதலும் கொண்டேன்!

விடுதலைப்புலிகள் அமைப்பு தோல்வியைச் சந்தித்தபோதும் தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய ஒன்றாகததான் அதைக் காண்கிறேன். எத்தகைய மறப்போரின் பின்பு வந்திருக்கும் தோல்வி இது! எம் மக்களும் பல முறை தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள் - 1925, 1938, 1946, 1975, 1988, 1991 மற்றும் 1999 என்று பல முறை தோல்வியை நாங்கள் தழுவியிருக்கிறோம்.

ஆனால் விடுதலைப்புலிகள் தத்தம் உயிரையே தியாகம் செய்து அழியாப்புகழ் எய்திய இத்தகைய வீரம் செறிந்த போரை நாங்கள் இதுவரை கண்டதில்லை. உள்ளபடியே மிகப்பெரும் சக்திகள் எதிரணியில் இருந்த இந்தப்போர் உங்கள் தலைவர்களின் உயிர்த்தியாகத்தில் சென்று முடிந்தாலும் அந்தப் போராட்ட நினைவுகளும் உங்கள் தமிழ்மொழியின் பாடல்களிலும் கதைகளிலும் என்றென்றும் நீடித்திருக்கும்.

விடுதலைப்புலிகள், தம்மை விட படைப்பலம் மிகுந்த ராணுவம் நடத்திய இந்தத்தாக்குதலின் இறுதிநாள் வரை - ஏன் இறுதிச்சமர் வரை - தங்கள் தலைவரின் உயிரையும் மூத்த பொறுப்பாளர்களின் உயிர்களையும் பாதுகாத்திருக்கிறார்கள் என்பது வியப்பளிக்கிறது. இது ஒன்றே விடுதலைப்புலிகளின் அறிவுத்திறன், வலிமை, உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான சிறந்த சான்றாகும். பிரபாகரனும் விடுதலைப்புலிகளின் தலைமையும் பிற போராளிகள் அனைவரையும் ஆயுதங்களைக் களையச்செய்து, தாம் மட்டும் மூன்றாவதான ஒரு நாட்டுக்குத் தப்பிச்சென்றிருக்கலாம். ஆனால் தலைமையும் சரி, அவர்தம் குடும்பத்தாரும் சரி, போர்க்களத்திலிருந்து தப்பிச்செல்லவில்லை, தமக்கு முன்பு வீரச்சாவடைந்த பல்லாயிரம் போராளிகளைப் போலவே தாமும் சரணடையாமல் இறுதிவ்ரை போர்புரிந்து வீரச்சாவை எய்தியிருக்கிறார்கள்.

இந்தத்தியாகம், உலகெங்கும் தாம் வரித்துக்கொண்ட ஒரு லட்சியத்துக்காக பிறரை உயிர்த்தியாகம் செய்யச்சொல்லும் தலைவர்களுக்கு நல்லதொரு பாடமாக அமையும். என்னைப் பொறுத்தவரை, கிளர்ச்சியில் ஈடுபட விரும்பும் குர்து தலைவர்கள் உள்ளிட்ட பிற தலைவர்கள் இத்தகைய உயிர்த்தியாகத்தைச் செய்ய முன்வருவார்களா என்பது சந்தேகம்தான்.

ஆயுதம் தாங்கிப் போராடும் குர்து அமைப்புகளுடன் ஒப்பிடும்போது விடுதலைப்புலிகள் அமைப்புக்கென பலங்களும் பலவீனங்களும் உண்டு. பலங்கள் எண்ணில் அடங்காதவை. பலவீனங்களும் தவறுகளும் சில என்றாலும் அவை நீண்டகால நோக்கில் விடுதலைப்புலிகளை அழிப்பதாக அமைந்துவிட்டன என்றே கருதுகிறேன். என் பார்வையில், விடுதலைப்புலிகள் அமைப்புரீதியாக இரு பொதுவான பலவீனங்களைக் கொண்டிருந்தார்கள், குறிப்பிட்ட சில தவறுகளையும் செய்தார்கள்.

முதல் பலவீனம் - விடுதலைப்புலிகளின் அரசியல்-எதிர்பார்ப்புகள் மிக இறுக்கமானவை என்பேன். தங்கள் தமிழீழத் தாயகக் கோரிக்கைக்குப் பரந்துபட்ட பன்னாட்டு ஆதரவு திரளாத நிலையில் இலங்கையில் தமக்கான சுயாட்சியை உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சிக்கான ஒப்ப்ந்தத்தை ஏற்பதே எதார்த்த நிலையை ஒட்டிய தீர்வாக இருந்திருக்கும். அதே சமயம் இலங்கை அரசானது தொடந்து தமிழ்மக்களின் ஆதார உரிமைகளை மீறும்பட்சத்தில் இந்தப்போராட்டத்தைத் தமிழ்மக்களின் அடுத்த தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருக்கவும் வழிவகுத்திருக்கும். அந்தக்கட்டத்தில் கூட்டாட்சி அடிப்படையில் அமைந்த தமிழர்களின் சுயாட்சி-அரசுக்கு மேலதிக பன்னாட்டு அங்கீகாரம் கிட்டியிருக்க முடியும். தவிர, விடுதலைப்புலிகள் போல 'பயங்கரவாத அமைப்பு' என்ற முத்திரையுடன் மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டுப் போகாமல் இருந்திருக்கலாம்.

தமிழீழத் தாயகம் என்ற லட்சியத்திலிருந்து தாம் விலகும் பட்சத்தில் விடுதலைப்புலிகளில் தம்முடைய பாதுகாவலர்களே தம்மைச் சுட்டுக்கொல்லலாம் என்று பிரபாகரன் அறிவித்திருந்தார் என்பதும் விடுதலைப்புலிகள் எத்தனை இறுக்கமாக அமைப்பாக இயங்கினர் என்பதைக் காட்டுகிறது.

விடுதலைப்புலிகளின் இரண்டாவது பலவீனம் - பழிதீர்த்தல், திரும்பத்தாக்குதல் ஆகியவற்றுக்கு தேவையே இன்றி முக்கியத்துவம் வழங்கியதாகும். இங்கே "அரசியல் என்பதன் வேறுவித நீட்சிதான் போர்" என்று க்ளாஸ்விட்ஸ் என்ற அறிஞர் கூறியிருக்கும் பெயர்பெற்ற வாசகத்தை நினைவில் கொள்ள வேண்டும். அரசியலிலும் சரி, போரிலும் சரி, பழிவாங்குதலும் திரும்பத்தாக்குதலும் அடிப்படை லட்சியத்துக்குக் கீழடங்கியவையே. ஆக, எந்த ஒரு செயலையும் அதன் விளைவை வைத்தே மதிப்பிட வேண்டும் - அது அடிப்படை லட்சியத்தை அடையும் வழியில் நாம் முன்னேற வழிவகுக்குமா, இல்லையா என்று ஆராய வேண்டுமே ஒழிய, முன்பு எப்போதோ நடந்த ஏதோ ஓர் அநீதிக்காகப் பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு இனக்குழுவினர் பாணியில் செயல்படுவதில் பொருளில்லை. ராஜீவ் காந்தியின் படுகொலை மற்றும் சிங்களத்தலைவர்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை இத்தகைய பழிவாங்கும் செயல்களே. மாறாக, இந்தத்தலைவர்களில் சிலர் ஒருகட்டத்தில் தமிழ்மக்களின் போராட்டத்துக்குப் பயன்பட்டிருக்கவும் கூடும் என்று நினைக்கிறேன்.

விடுதலைப்புலிகளின் தவறுகளைப் பொறுத்தவரை - 1999-2000-ஆம் ஆண்டுகளில் ஆனையிறவுப்பகுதியைக் கைப்பற்றிய பிறகு எப்படியாவது யாழ்நகரையும் கைப்பற்றி விடுவித்திருக்க வேண்டும். வேறு பகுதிகளைக் கைவிட நேர்ந்தாலும் பரவாயில்லை என இதைச் சாதித்திருக்க வேண்டும். அந்தக்கட்டத்தில் யாழ் குடாநாட்டில் இலங்கை ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள், எனவே பாரிய உயிர்த்தியாகத்துக்குப் பிறகே இது சாத்தியமாகியிருக்கும். என்றாலும் அப்போது இலங்கையின் அரசியல் மற்றும் ராணுவ சக்திகள் நிலைகுலைந்து போயிருந்தனர் என்பது முக்கியம். அந்த வாய்ப்பு நழுவிப்போன பிறகு இறுதியில் விடுதலைப்புலிகள் பல முனைகளில் சமரிட வேண்டி வந்தது எனபதையும் கவனிக்க வேண்டும்.

2001 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களை அடுத்து இலங்கையில் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டே தீரும் என்பதற்கொப்ப 2002-ஆம் ஆண்டில் அத்தகைய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதே வேளை, 2004-ஆம் ஆண்டின் இறுதியில் இந்துமாக்கடலில் நிகழ்ந்த சுனாமித்தாக்குதலும் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் அது ஏற்படுத்திய பாரிய அழிவும் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் அடங்கச்செய்திருக்க வேண்டும். இலங்கை அரசுடன் அரைகுறை சமாதானத்தை, சமரசத்தைச் செய்யத் தூண்டியிருக்க வேண்டும். சுனாமி அழிவை அடுத்து, இந்தோனேஷியாவின் அச்சே பகுதி விடுதலை அமைப்பு இத்தகைய சமரசத்துக்குச் சென்றது. ஆக, விடுதலைப்புலிகளும் சுனாமியை உட்கொண்டு தம்முடைய அரசியல் கணக்குகளைப் போ்ட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

விடுதலைப்புலிகளின் அடுத்த பாரிய தவறு, 2005-ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் நடந்த பொதுத்தேர்தல்களைப் புறக்கணித்ததாகும். இந்தத் தேர்தலில் சிங்களக் கடும்போக்குவாதிகள் வெற்றி கண்டனர். தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என மக்களைக் கேட்கக்கூடாது என்பதை எப்போதும் ஒரு பொதுவிதியாகவே கடைப்பிடிக்க வேண்டும். தேர்தலைப் புறக்கணிப்பதன் வழி நம் அதிருப்தியை வெளிக்காட்டலாம், நமக்குள் ஒற்றுமையைப் பேணுவதாக எண்ணிக்கொள்ளலாம். ஆனால் இவையெல்லாம் சாதாரண விடயங்களே. இத்தகைய தேர்தல் புறக்கணிப்பு என்பது நம் எதிரிகளில் மிக மோசமான பகுதியினரிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிடும் நிஜ அபாயத்தில், நீண்ட கால அபாயத்தில் போய் முடியலாம். இவையெல்லாம் மீள முடியாத சிக்கலில் நம்மை ஆழ்த்தலாம்.

விடுதலைப்புலிகளின் அடுத்த தவறு - கருணா செய்த கிளர்ச்சியைக் கையாண்ட விதம். இதை முன்கூட்டியே உணர்ந்து உடனடியாக, நேர்மையாகக் கையாண்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளாக நடந்த வன்முறை, என்னைப்போல தூரத்திலிருந்து அவதானிக்கும் ஒருவருக்கே மிகுந்த வருத்தத்தை அளித்தது எனும்போது அதைக்கண்ட, அனுபவித்த தமிழ்மக்கள் அனைவரும் எவ்வாறு வருத்தப்பட்டு உற்சாகமிழந்து போயிருப்பார்கள் என்பதை என்னால் உணரமுடிந்தது. குர்து இனத்தவன் என்ற முறையில் நானும் எங்கள் அரசியல் அமைப்புகளுக்கிடையில் நடந்த வன்முறையை அறிந்தவன்தான். ஆனால, குர்து இனத்தவரின் எந்த ஒரு ராணுவ அமைப்பும் தன் மீதே துப்பாக்கியைத் திருப்பியதில்லை.

ஒருவேளை பிரபாகரனின் இறுக்கமும் சுனாமிப்பேரழிவும் கருணா மீதும் தாக்கம் செலுத்தியிருக்க முடியும். அதே வேளை வடக்கை முன்வைக்கும் குறுந்தேசியவாதத்தைக் கைக்கொண்ட தவறை பிரபாகரன் செய்தார் என்று வைத்துக்கொண்டால் இந்தப்பிரச்னையை முன்வைத்துக் கிளர்ச்சி செய்த கருணா அதை இன்னமும் குழப்பிவிட்டார் என்றே கூற முடியும். இத்தகைய குறுந்தேசியவாதம் மேலோங்குவதைக் குர்து அமைப்புகள் பெரும் தவறாகக் கணிக்கின்றன என்பதை மனத்தில் இருத்தி இதைச் சொல்கிறேன்.

ஆக, கிழக்குவாழ் தமிழ்மக்களின் தலைவர் என்ற அங்கீகாரம் கருணாவின் தலைக்கேறிவிட்டது என்று நினைக்க இடமுண்டு. பிரபாகரனைவிட தாமே பெரும் தலைவர் என்று கருணா கருதியிருக்கவும் இடமுண்டு. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு துரோகம் செய்து அமைப்பின் தலைவருக்கு எதிராக துப்பாக்கியைத் திருப்பிய கருணாவை வரலாறு மன்னிக்காது என்றே கூறுவேன். என்ன காரணங்கள் இருந்தாலும் சரி, அவற்றைத் தனிப்பட்ட முறையில் முன்வைத்துவிட்டு அவர் அமைப்பிலிருந்து விலகியிருக்கலாம், அப்படி விலகியதற்காகச் சாவையும் எதிர்கொண்டிருக்கலாம். இவ்விரண்டையும் செய்யாமல் துரோகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதன்வழி தமிழ்மக்கள், சிங்களப்பகுதியினர் இருதரப்பும் நம்பாத, மரியாதை செலுத்தாத, நேசிக்காத தலைவராக மாறியிருக்கிறார். இந்தவழியில் அவருக்கு மோசமான முடிவே காத்திருக்கிறது, அப்படியொரு முடிவு ஏற்படும்பட்சத்தில் அந்த முடிவுக்கு இருதரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொள்வார்கள், ஆனால் அதற்காக வருந்த மாட்டார்கள்.

அறிவும் திறமையும் ஆற்றலும் கொண்ட ஈழத்தமிழ் மக்களே, இந்தச் தீயின் சாம்பலிலிருந்து நீங்கள் எழுவது நிச்சயம்! உம் கனவுகள் உயிரோட்டத்துடன் இருக்கட்டும், அப்போது துப்பாக்கித்தோட்டாக்களோ, வாக்குச்சீட்டுகளோ கொண்டு நீங்கள் ஈழத்தை அடைவதும் நிச்சயம்!

நன்றி:திணையிசைசமிகங்சை
4664_1136245216138_1527581102_30330401_7347092_n.jpg


http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3577:2009-05-30-20-14-05&catid=35:2008-09-21-04-32-20&Itemid=53
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!