தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!
'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'
-பாவேந்தர் பாரதிதாசன்
ஏதோ ஒரு பாட்டு mp3
ஏதோ ஒரு பாட்டு mp3 | ||
Found at bee mp3 search engine |
Pages
Thursday, May 14, 2009
வீடியோ படம் : இளைஞனின் கதறல் காயப்பட்ட தாய் தந்தையருக்கு இரத்தம் கொடுக்க முடியவில்லை
காயப்பட்டிருக்கும் தனது தாய் தந்தையருக்கு இரத்தம் கொடுக்கமுடியவில்லை ஒரு இளைஞனின் கதறல் நெஞ்சை உலுக்குகிறது
http://www.youtube.com/watch?v=S-uLLWJH3mw
வெடி குண்டுகள் வெடித்த குழிகளில் மிதக்கும் சிறுவர்களின் உடலங்கள்(படங்கள் இணைப்பு)
எறிகணை வீழ்ந்து வெடித்த குழிகளில் மழை நீர். அதில் மிதக்கும் சிறுவர்களின் உடலங்கள் |
சற்று முன்னர் முள்ளிவாய்கால் பகுதியில் இருந்து கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் இவை. எறிகணைகள் பல்குழல் எறிகணைகள் என்பன வந்து வீழ்வதால் பாரிய குழிகள் மண்னில் தோன்றியுள்ளன. அதில் மழை நீர் தேங்கியுள்ளது. இன்று நடந்த அகோர எறிகணைத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இதில் பல சிறுவர்களின் உடலங்கள் இங்கு நீரில் மிதப்பதாகவும், கை, கால் மற்றும் தலைபோன்ற உடல் அங்கங்கள் நிலத்தில் பரவிக் காணப்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவம் நெருங்கி வந்துகொண்டிருப்பதாக ஒலிபரப்பிகளில் அறிவித்து மக்களின் மன நிலையையும் குழப்பும் நோக்கில் இலங்கை அரசு திட்டமிட்டு செயல்படுவதாக கூறப்படுகிறது. கண்ணுக்கு முன்னே ஒரு இனஅழிப்பு நடைபெறுகிறது இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் சர்வதேசம். http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1242233369&archive=&start_from=&ucat=2& |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
மே 14, இன்றைய பாஸ்பரஸ் படுகொலை (படங்கள் இணைப்பு)
பொஸ்பரஸ் குண்டுகளால் இன்று(14.05.2009) தாக்குதல் நடத்தப்படுகிறது |
இலங்கை இராணுவத்தினர் பொஸ்பரஸ் எரி குண்டுகள் மூலம் இன்று முள்ளிவாய்க்கால் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை முதல் ஆரம்பமான எரி குண்டுத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானப்படையினர் நடத்தும் தாக்குதலில் பலர்கொல்லப்பட்டதுடன், இலங்கை இராணுவம் பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசித்தாக்குவதாக தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள், மக்கள் பலர் எரிகாயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளனர். மக்கள் செறிந்துவாழும் பகுதிகள் மீது சர்வதேசரீதியாக தடைசெய்யப்பட்ட இக்குண்டுகளை இலங்கை அரசு வீசிவருவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1242304843&archive=&start_from=&ucat=2& |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
மே 13-ந்தேதி படுகொலைகள் (படங்கள் இணைப்பு )
முள்ளிவாய்க்கால் மீது தொடர் எறிகணைத் தாக்குதல்: மருத்துவமனை செயல் இழந்தது; நுற்றுக்கணக்கானவர்கள் படுகொலை |
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா சிறிலங்கா படையினர் இன்று நடத்திய அகோரமான எறிகணைத் தாக்குதல்களில் பெருமளவு நோயாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், கடுமையான சேதத்துக்குள்ளான தற்காலிக மருத்துவமனையும் செயல் இழக்கும் நிலைக்குச் சென்றிருக்கின்றது. |
இன்றைய தாக்குதலில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட 65 பேரில் 39 பேர் மனோ ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ற இரத்தத்தை உறையவைக்கும் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. இவர்கள் மருத்துவ ஆலோசனைகளுக்காக மருத்துவமனைக்கு வந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் தங்கியிருந்த பகுதியை இலக்கு வைத்து படையினர் நடத்திய தாக்குதலில் அவர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். 'மக்களுக்கான பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதி மீது சிறிலங்கா படையினரால் இன்று புதன்கிழமை காலை முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்கள் பலருடைய உடலங்கள் வீதிகளில் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாகவும் படுகாயமடைந்த பலருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார். முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீதும் எறிகணைகள் பல வீழ்ந்து வெடித்ததில் மருத்துவமனையில் இருந்த 65 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன், 117 பேர் காயமடைந்ததாகவும் வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இங்குள்ள மகப்பேற்று சிகிச்சைப் பகுதியில் மருத்துவ ஆலோசனைகளுக்காக காத்திருந்த 39 மனோ ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்களும் எறிகணைத் தாக்குதலால் கொடூரமான முறையில் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். இங்கு கோபாலகிருஷ்ணன் என்ற மருத்துவப் பணியாளர் ஒருவரும் கொல்லப்பட்டிருக்கின்றார். இதனைவிட கொல்லப்பட்ட தொண்டர் மருத்துவர் குமார் என அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். இதனைவிட அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பணியாளர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். இவர் மயூரன் சிவகுருநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது தாயாரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன. படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் மக்கள் வசித்துவந்த தற்காலிக கூடாரங்கள் முற்றாகவே எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் பெரும் தொகையான மக்கள் தமக்கு இருப்பதற்கு கிடைத்த சிறிய கூடாரங்களைக் கூட இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையை இலக்கு வைத்தே இன்றைய தாக்குதல்கள் பெருமளவுக்கு இடம்பெற்றிருப்பதால் மருத்துவமனை பாரிய அளவில் சேதடைந்திருப்பதுடன், முற்றாகச் செயல் இழந்து செயற்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனை மீள செயற்படுத்த முடியாத நிலையில் மருத்துவர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவ உதவியாளர்கள் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாலும், பாதுகாப்பு அற்ற சூழ்நிலை அங்கு உருவாகியிருப்பதாலும் படுகாயமடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிப்பதில் பெரும் சிரமம் எதிர்நோக்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனைவிட இந்த தற்காலிக மருத்துவமனையில் 75-க்கும் அதிகமான உடலங்கள் அதனைப் பொறுப்பெடுத்து அடக்கம் செய்வதற்கு யாரும் இல்லாததால் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு வைக்கப்பட்டுள்ள உடலங்களை மருத்துவமனைப் பகுதியிலேயே ஒரு பாரிய குழியை வெட்டி அடக்கம் செய்வதற்குத் திட்டமிடப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று படையினர் மேற்கொண்ட இந்தக் கடுமையான எறிகணைத் தாக்குதல்களையடுத்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காகவும், காயமடைந்த நோயாளர்களை ஏற்றிச்செல்வதற்காகவும் வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் இன்றும் பொருட்களை அங்கு விநியோகிக்க முடியாமல் நீண்ட நேரமாக கடலில் காத்திருந்த பின்னர் திருகோணமலைக்கு திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இப்பகுதியில் காணப்படும் பாரிய உணவு மற்றும் மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடரும் நிலைதான் காணப்படுகின்றது. http://www.puthinam.com/full.php?2b1RuTe0d1fZn0ecGA7I3b4g9GL4d3l6g3cc2HpS2d434QR3a030Rs3e |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
அமெரிக்க அறிவிப்புக்கு விடுதலைப் புலிகள் வரவேற்பு
அமெரிக்க அரச தலைவர் ஒபாமாவின் அறிவிப்புக்கு விடுதலைப் புலிகள் வரவேற்பு |
இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவின் வேண்டுகோளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்றுள்ளார். |
இலங்கையில் நிலையான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் ஒத்துழைக்கத் தயார் என்றும் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐக்கிய நாடுகள் சபையும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து, இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டிய மரபுவழி மனிதநேயத் தலைமைப் பொறுப்பில் இருந்து பின்வாங்கிவிட்டன. எனவே, இப்பொறுப்பை அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா ஏற்று முன்நடத்திச் செல்ல வேண்டும் என்று எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர். அரச தலைவர் பராக் ஒபாமா கூறியதைப்போல, இலங்கையின் பாதுகாப்பான, அதேநேரத்தில் நீடிக்கக்கூடிய அமைதியை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் நிலையான போர் நிறுத்தத்திற்கும் அமைதியை ஏற்படுத்தும் பணிகளுக்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம். இலங்கை தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டு இறுதித் தீர்வு எட்டப்படும் வரை தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் ஆயுதம் ஏந்தியிருக்கிறோம். இலங்கையில் தன்னாட்சியுடைய சுயநிர்ணய உரிமையும், விடுதலையும் வழங்கப்பட வேண்டும் என்ற தமிழர்களின் வேட்கைக்காக, இலங்கையின் எந்தப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களை சிறிலங்கா அரசாங்கம் தண்டித்து வருகிறது. தமிழர்கள் தமது தாய் மண்ணில் இருந்து வெளியேற்றப்படுவதாலும் எதிர்காலத்திற்கான வாழ்வு நிலையும், கண்ணியமுமின்றி வதை முகாம்களில் அடைத்து வைக்கப்படுவதாலும் கவலை அடைந்துள்ளனர். தமிழர் தாயகத்தின் மீது போர் தொடுத்த சிறிலங்கா அரசு, சிங்களப் படையினரின் தாக்குதலுக்கு அஞ்சி பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அடைக்கலம் புகுந்த தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்ற உலக நாடுகளின் வலியுறுத்தல்களை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது; அவர்களை வதைமுகாம்களில் அடைத்து வைக்கிறது. இலங்கைத்தீவு முழுவதும் அப்பாவித் தமிழ் மக்கள் திடீரென மாயமாவது போன்றவை சுதந்திரமான சாட்சிகள் இல்லாமல் நடைபெற்று வருகின்றன. அரச தலைவர் பராக் ஒபாமா கூறியதைப்போல தமிழ் மக்களைப் பாதுகாக்க உலக மனிதநேயமான சமுதாயத்தின் உடனடி நடவடிக்கை இப்போதைய தேவையாகும். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பேரிலும் மனிதநேயமான மீட்பு நடவடிக்கை என்ற பேரிலும் மனித இழப்புக்களைப் பற்றி கவலைப்படாமல் தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்கா அரசு உலக சமுதாயத்தின் கண்களை மூடி மறைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. இலங்கையில் மனிதாபிமான சிக்கலைப் போக்க சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச தலைவர் பராக் ஒபாமா உறுதியாக வலியுறுத்தியிருப்பதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக தமிழர் தாயகப் பகுதிகளில் நடுநிலையான மனிதநேயமான உதவிப் பணியாளர்களும், ஊடகத்துறையினரும் இருக்க வேண்டியது உடனடித் தேவையாகும். இலங்கை தமிழர்களின் துன்பம் பற்றி விளக்குவதற்காகத் தமது நேரத்தை ஒதுக்கிய அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவுக்கு நாங்கள் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.puthinam.com/full.php?2b1VoUe0d4cYe0ecAA4K3b4g6DB4d3f1e3cc2AmS2d434OO3a030Mt3e |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
முதற் தடவையாக கடும் எச்சரிக்கை ,அமெரிக்க ஒபாமா
மனிதாபிமானப் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் பேரழிவு ஒன்றைத் தவிர்க்க முடியாது: இலங்கை விவகாரத்தில் ஒபாமா முதற் தடவையாக கடும் எச்சரிக்கை (வீடியோ படம் இணைப்பு )
மனிதாபிமானப் பிரச்சினை ஒன்று உருவாகுவதைத் தவிர்க்குமாறும் போர்ப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தேவையான உதவிகள் சென்றடைவதற்கு வழிவகுக்குமாறும் அவசர கோரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா, இந்த மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இது ஒரு பேரழிவாக மாற்றமடையும் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அரசியல் விவகாரங்களை ஒருபுறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு, போரில் அகப்பட்டுள்ள அப்பாவி ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் உயிர்களையிட்டுத்தான் நாம் முதலில் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் வெள்ளை மாளிகையில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அமெரிக்க அரச தலைவர் வலியுறுத்தினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 'மக்களுக்கான பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது சிறிலங்கா படையினர் தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, மருத்துவமனைகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் என்பன தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலுக்குள்ளாகி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவரும் ஒரு நிலையிலேயே அமெரிக்க அரச தலைவர் இந்த அவசர கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.
இங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஒபாமா மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையில் ஒரு மனிதாபிமானப் பிரச்சினை உருவாகியிருக்கின்றது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். போர்ப் பகுதியில் இருந்து அண்மைக்காலத்தில் கிடைத்த செய்திகள் மிகவும் கவலையளிப்பதாக இருக்கின்றது.
இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு எந்தவிதமான வசதிகளும் இல்லாமல், உணவு, குடிநீர், மருந்து மற்றும் வதிவிட வசதிகள் எதுவும் இல்லாமல் அகப்பட்டுள்ளார்கள். இது பாரிய அவல நிலையைத் தோற்றுவித்திருப்பதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் உயிரழிக்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.
இது தொடர்பில் உடனடியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இந்த மனிதாபிமானப் பிரச்சினை ஒரு பேரழிவாக மாற்றமடைந்துவிடும். இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அரசியல் விவகாரங்களை ஒருபுறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு, போரில் அகப்பட்டுள்ள அப்பாவி ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் உயிர்களையிட்டுத்தான் நாம் முதலில் எமது கவனத்தைச் செலுத்த வேண்டிய தருணம் இப்போது வந்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியே வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன். பொதுமக்களை அவர்கள் பலவந்தமாககப் படைக்குத் திரட்டிக்கொள்வதும், பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவ்வாறான செயல்கள், அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒதுக்கப்படுவதற்கே வழிசெய்யும்.
ஒபாமா ஆற்றிய உரையின் காணொலி
இந்த மனிதாபிமானப் பிரச்சினையை தவிர்ப்பதற்காக சிறிலங்கா அரசாங்கமும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
முதலாவதாக - ஆயிரக்கணக்கான மக்களின் மரணங்களுக்கு காரணமாகவுள்ள எழுந்தமானமான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதில் பல மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அதேவேளையில் சிக்கலுக்கு உரிய பிரதேசத்தில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தமது உறுதிமொழியை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இரண்டாவதாக - போர் இடம்பெறும் பகுதிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானக் குழு ஒன்று செல்வதற்கும் அங்குள்ள மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதியை வழங்க வேண்டும்.
மூன்றாவதாக - இடம்பெயர்ந்துள்ள சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் மக்களையும் பார்வையிடுவதற்கும் அவர்களுக்குத் தேவையான மேலதிக உதவிகளை வழங்குவதற்கும் ஐ.நா.வையும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தையும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
இந்த வேளையில் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து செயற்பட்டு அங்குள்ள மக்களுக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயாராகவிருக்கின்றது. இதில் தாமதம் கூடாது என நான் நினைக்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் மேலும் மனிதாபிமானப் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.
இதற்கு மேலாக சிறிலங்கா அரசாங்கமானது அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் கெளரவத்தைப் பாதுகாக்கக்கூடியவகையிலான இறுதித் தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் மரணங்கள் இடம்பெறுவது அந்த நாட்டு மக்கள் விரும்பும் சமாதானத்தை அடைவதற்குத் தடையாகவே இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என்றார் அவர்.
http://www.politico.com/singletitlevideo.html?bcpid=1155201977&bctid=23042928001
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
இயக்குநர் அமீர் பேச்சு: தமிழன் திருப்பி அடிப்பான்
தமிழன் எப்படி திருப்பி அடிப்பான் என்பதை சோனியாவுக்கு தேர்தல் முடிவுகள் காட்டும்: இயக்குநர் அமீர் |
தமிழன் எப்படித் திருப்பி அடிப்பான் என்பதை சோனியாவுக்கு எமது தேர்தல் முடிவுகள் கண்டிப்பாக தெரியப்படுத்தும் என்று தமிழீழ ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான அமீர் தெரிவித்துள்ளார். |
இது தொடர்பாக விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழில் வெளிவந்த அவரின் நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு: இங்கிலாந்து ராணிக்கு இருக்கும் ஈவு இரக்கம், இத்தாலி ராணிக்கு ஏன் இல்லை? இதிலிருந்தே இலங்கையில் போரை நடத்தும் சூத்திரதாரி சோனியாதான் என்பது பச்சைப் பிள்ளைக்கும் புரிந்து விடுமே... தமிழன் கொத்துக் கொத்தாக செத்துக் கிடக்கும் நேரத்தில், அதைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட பேசாத சோனியா, இழவு வீட்டில் ஆதாயம் தேடும் ஆளாக தமிழகத்துக்குப் பிரசாரத்துக்கு வந்து போயிருக்கிறார். காங்கிரசை எதிர்த்துப் பிரசாரத்துக்குப் போன திரைத்துரையினர் மீது உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்தின் ஆட்கள் காட்டுமிராண்டி தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதிலாக போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் காங்கிரஸ் துடைத்து எறியப்படும். பி.ஜே.பி-யை மதவாதக் கட்சி என்பதுபோல் காங்கிரசை இனவாதக் கட்சியாகத்தான் இனி தமிழ் மக்கள் பார்ப்பார்கள்! எனக் கொதித்தவரிடம்... திரைத்துறையினர் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக பகிரங்கமாக வாக்கு கேட்கப் போவது தெரிந்துதான் நீங்களும் சேரனும் பிரசாரத்தில் பின்வாங்கி விட்டதாகச் சொல்லப்படுகிறதே? எனக் கேட்டோம். இரட்டை இலைக்கு வாக்கு கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லைதான். ஆனாலும், 'தனி ஈழம் அமைத்தே தீருவேன்' என ஜெயலலிதா முழங்கி இருப்பது உணர்வாளர்களின் கவனத்தை திருப்பி இருக்கிறது. 'யோகி' பட வேலைகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதால்தான் என்னால் பிரசாரத்துக்குப் போக முடியவில்லை. நான் பிரசாரம் செய்யவில்லை என்றால் என்ன? தமிழன் எப்படித் திருப்பி அடிப்பான் என்பதை இத்தாலி ராணிக்கு (சோனியா) நம் தேர்தல் முடிவுகள் கண்டிப்பாக தெரியப்படுத்தும்... என அவர் தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். http://www.puthinam.com/full.php?2aVVs1e0dVh3h0ecFDdL3b4n8BI4d3f0g2cc2EqX2d42dPO3b02ZNm4e |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
நன்றி....!
Locate IP Address on Map
http://www.google.co.in/transliterate/indic/Tamil
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு: ஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும் தமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்
சற்று முன்...!
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- "தினத்தந்தி " தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)
- "தினமணி" (1)
- "தினமணி" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)
- chat (2)
- firefox (2)
- shortcuts" (1)
- sms (2)
- video (2)
- அரசியல் (12)
- ஆனந்த விகடன் (1)
- இணைய நூல் (3)
- இணைய முகவரிகள் (2)
- இமெயில் (2)
- இமெயில் குழு (2)
- இலங்கை (21)
- ஈழ வரலாறு புத்தகம் (1)
- எல்லாம் (1)
- என் பக்கம் (9)
- கணினி தொழில் நுட்பம் (32)
- கதை (6)
- கலக்கல் டான்ஸ் வீடியோ (1)
- கவிதை (10)
- குர்து இனத்தவர் கடிதம் (1)
- குறும் படம் (2)
- சிரிப்பு (10)
- சினிமா (9)
- சீமான் (11)
- சு.பொ. அகத்தியலிங்கம் (3)
- தமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)
- தமிழச்சி (5)
- தமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)
- தமிழீழ வீடியோ பாடல் (2)
- தமிழீழம் (53)
- தமிழ் 99 (2)
- தமிழ் ஈழம் (11)
- தமிழ் தட்டச்சு உதவி (2)
- தலைவர் பிரபாகரன் தொடர் (12)
- தன்னம்பிக்கை (1)
- தாமரை (4)
- தியாகு (4)
- திருமாவளவன் (1)
- தினத்தந்தி (2)
- தினமணி (55)
- நகைச்சுவை (13)
- நக்கீரன் (2)
- படங்கள் (18)
- பாரதிராஜா (2)
- பிரபாகரன் (15)
- பெரியார் (9)
- பேச்சு (1)
- பேட்டி (4)
- பொதுவுடைமை (5)
- மனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)
- மூட நம்பிக்கை (8)
- மொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)
- ராஜபக்சே (1)
- விடுதலைப் புலிகள் (14)
- விஜய் (5)
- வீடியோ (14)
- வீடியோ படம் (85)
- வைரமுத்து (1)
- ஜி இமெயில் (2)
- ஜி மெயில் (2)
- ஜெகத் கஸ்பார் (1)
முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!
-
▼
2009
(874)
-
▼
May
(199)
-
▼
May 14
(7)
- வீடியோ படம் : இளைஞனின் கதறல் காயப்பட்ட தாய் தந்தை...
- வெடி குண்டுகள் வெடித்த குழிகளில் மிதக்கும் சிறுவர்...
- மே 14, இன்றைய பாஸ்பரஸ் படுகொலை (படங்கள் இணைப்பு)
- மே 13-ந்தேதி படுகொலைகள் (படங்கள் இணைப்பு )
- அமெரிக்க அறிவிப்புக்கு விடுதலைப் புலிகள் வரவேற்பு
- முதற் தடவையாக கடும் எச்சரிக்கை ,அமெரிக்க ஒபாமா
- இயக்குநர் அமீர் பேச்சு: தமிழன் திருப்பி அடிப்பான்
-
▼
May 14
(7)
-
▼
May
(199)