இந்தியா கொடுத்த பயிற்சிகளாலும், ஆயுதங்களாலும்தான் விடுதலைப்புலிகளை வென்றோ:இலங்கை அரசு
இலங்கையின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயா நாணயக்கார, நான் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பயிற்சி பெற்றுள்ளேன். இரு நாடுகளும் எமக்கு அதிகளவில் உதவுகின்றன என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ''இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எமது அதிகாரிகளைப் பயிற்சிகளுக்காக அனுப்பிவருகின்றோம். நான் இந்தியாவில் நான்கு பயிற்சி நெறிகளையும் பாகிஸ்தானில் மூன்று பயிற்சி நெறிகளையும் பூர்த்தி செய்தேன்.
இந்தியாவும் பாகிஸ்தானும் பகைமை நாடுகள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் அது தொடர்பாக நாம் எதனையும் செய்ய முடியாது.
இரு நாடுகளிடம் இருந்துமே சிங்கள படையினர் பிந்திய தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
இரு நாடுகளிடம் இருந்துமே நாம் பயன்பெற்றுக்கொண்டுள்ளோம்''என்றூம் தெரிவித்துள்ளார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7654