தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்
There was an error in this gadget

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, May 8, 2009

ஏய் தாய் தமிழகமே.....
http://www.video.yahoo.com/watch/4631553


கவிதை...கண்ணீர்......வீடியோ...


http://video.yahoo.com/watch/4943179/13163394


காங்கிரசுக்கு வாக்கு தமிழினத்திற்குத் தூக்கு காங்கிரசுக்கு வாக்கு தமிழினத்திற்குத் தூக்கு துண்டறிக்கை வழங்கி பரப்புரை
பிரசுரித்த திகதி : 08 May 2009

"காங்கிரசுக்கு வாக்கு தமிழினத்திற்குத் தூக்கு!" துண்டறிக்கை வழங்கி தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் பரப்புரை

சிங்கள இனவெறி அரசு ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்து வருகிறது. இதற்கு இந்திய அரசு துணைநிற்கிறது ஆயுதம் வழங்குகிறது உளவு சொல்கிறது. உண்மையில் இந்தப் போரை இந்தியாவே பின்னின்று நடத்துகிறது. சோனியா காந்தியின் ஆதிக்கப் பழிவெறி, மகிந்த இராசபட்சேயின் இனக்கொலை வெறியுடன் சேர்ந்து, தமிழினத்தைக் கொன்றொழித்து வருகிறது. எனவே இனப்பகை காங்கிரசைப்
படுதோல்வி அடையச் செய்து சரியான பாடம் புகட்ட வேண்டும். அது காங்கிரசுக்குத் தண்டனையாக அமைவதோடு, மற்றெல்லாக் கட்சிகளுக்கும் எச்சரிக்கையாக அமையும்.

�       யாருக்கு வாக்களித்தாலும் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்!

�       வரும் தேர்தலில் உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி காங்கிரசைத் தோற்கடியுங்கள்!

�       வீரத் தமிழன் முத்துக்குமாரை விதைத்தோம்! காங்கிரசை ஆழக் குழிதோண்டிப்
புதைப்போம்!

மேற்காணும் செய்திகள் அடங்கிய துண்டறிக்கையைக் காங்கிரசு போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் வழங்கி தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் பரப்புரை செய்துவருகிறது. இப்பரப்புரைக்கு மக்களிடம் கிடைத்துவரும் பெரும் வரவேற்பு காங்கிரசின் தோல்வியை உறுதி செய்வதாக உள்ளது.

இணைப்பு: துண்டறிக்கை

http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1241767936&archive=&start_from=&ucat=2&


 
 

ஈரோட்டில் இடி முழக்கம்

ஈரோட்டில் பாரதிராஜாவின் முழக்கம்என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் துவக்கப்பட்ட பரப்புரைப் பயணத்தின் முதல் கூட்டம் ஈரோட்டில் நடந்தது.

அந்தக் கூட்டத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசியது இது.."நான் எத்தனையோ சினிமா சம்பந்தப்பட்ட கூட்டங்களில் பேசியிருக்கிறேன். எழுத்தாளர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறேன். ஆனால் அரசியல் மேடைகளில் பேசி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.

என்னுடைய அம்மா, அப்பா, என் குடும்பம் முழுவதும் காங்கிரஸ் குடும்பம். 1962-67-களில் காங்கிரஸ் கட்சிக்காக மேடையேறி பேசியிருக்கிறேன். அப்போது எதை எல்லாம் பேச வேண்டும் என்று ஒரு குறிப்பு தருவார்கள். நான் கேட்பேன் "எல்லாம் பொய்யாக இருக்கிறதே.." என்று.. "அரசியல் என்றால் இப்படி எல்லாம் பேச வேண்டும்.." என்று சொல்லி பேசச் சொல்வார்கள். பிறகு எதற்கு பொய் சொல்லும் அரசியல்..? கலைத்தொழிலே போதும் என்று அரசியலைவிட்டு விலகிவிட்டேன். அன்று 'பொய் பேச வேண்டாம்' என்று அரசியலை விட்டேன். இப்போது 'மெய் பேச வேண்டும்' என்று இந்தக் கூட்டத்தில் பேச வந்திருக்கிறேன். என்னை இழுத்து வந்துவிட்டார்கள்.

டெல்லி அரசு எனக்கு 'பத்மஸ்ரீ' விருது கொடுத்தது. 'பத்மஸ்ரீ பாரதிராஜாவா'..? 'தமிழன் பாரதிராஜாவா..?' எனற கேள்வி வந்தபோது 'தமிழன் பாரதிராஜா' என்கிற பெருமை மட்டும் போதும் என்று முடிவு செய்தேன். தமிழன் என்பதற்கு இணையான வேறு பட்டமே கிடையாது.

"பாரதிராஜா யார் என்று வயலார் ரவிக்குத் தெரியுமா..?" என்கிறார் இளங்கோவன். அவருக்குத் தெரியுமா? நானும், வயலார் ரவியும் 25 ஆண்டு கால நண்பர்கள் என்று.

"முத்துக்குமாரை தெரியாது.." என்கிறார். முத்துக்குமாரை தெரியாமல் தமிழன் இருக்கலாமா? அவருக்கு ஓடுவது தமிழ் ரத்தமா..?
தனி ஈழம் என்று யார் குரல் கொடுத்தாலும் அவர்களை வாழ்த்துகிறோம். துரோகிகளை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம். நல்லவர்களைத் தேடிக் கொள்ளுங்கள். 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இப்போது புரட்சியைத் தொடங்க இருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் தேர்தலில் அது பிரளயமாக மாற வேண்டும்.

ஓட்டு கேட்க சோனியா வரக்கூடாது. அப்படி அவர் சென்னைக்கு வந்தால் மிக பலத்த எதிர்ப்பு காட்ட வேண்டும். தாய்மார்களே.. பொதுமக்களே.. நீங்கள் உங்கள் வீடுகளில் கருப்புத் துணியைக் கட்டுங்கள். சிறு கருப்புத் துணியை அணிந்து கொள்ளுங்கள். யராவது கேட்டால் 'சோனியா வரும் நாள் எங்களுக்குத் துக்க நாள்..' என்று சொல்லுங்கள்.."

இதே கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசியது..


"தந்தை பெரியாருக்கு காங்கிரஸை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. அதை நிறைவேற்ற அவருடைய பேரனாக நான் சிறையில் இருந்து புலியாக வெளியில் வந்துள்ளேன். இன்னும் 10 நாடகள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பேசுவேன்.

இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொல¨யை நடத்துகிறது சிங்கள ராணுவம். அதற்கு துணை போகிறது என் தேசம். இறையாண்மை பேசும் என் தேசம் தலாய்லாமா நாட்டைப் பிரித்து கேட்டால் ஆதரவு அளிக்கிறது. தமிழர்கள் நாட்டை கேட்டால் ஒழிக்க நினைக்கிறது. அப்போது சீனாவுக்கு இறையாண்மை ஒருமைப்பாடு இல்லையா..?

யாரும் எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தராத நிலையில் 'தனி ஈழம்தான் தீர்வு..' என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். அவரை வணங்குகிறேன்.

நான் இப்போது இந்தியா உட்பட உலக நாடுகளை கேட்பது எல்லாம் நீங்கள் விடுதலைப்புலிகளை அழிக்க ஆயுதமோ எந்த உதவி வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் அவர்களுக்கான தடையை மட்டும் நீக்கிவிடுங்கள். தனி ஈழம் மலர பிரபாகரன் நடவடிக்கை எடுப்பார். இந்தியாவில் மட்டும் விடுதலைப்புலிகளுக்கான தடை நீக்கப்பட்டு எங்களை இலங்கைக்கு செல்ல அனுமதித்தால் 15 லட்சம் பேர் இலங்கை செல்ல தயாராக இருக்கிறார்கள். 10 நாட்களில் தமிழ் ஈழம் மலரும்.."


இக்கூட்டத்தில் இயக்குனர்கள் ஆர்.சுந்தர்ராஜன், கவுதமன், சிபிசந்தர், பாடலாசிரியர் அறிவுமதி, எழுத்தாளர் தேவிசந்திரா, பெப்ஸி செயலாளர் சிவா, கலை இலக்கிய சங்கத் தலைவர் சண்முகம், ம.தி.மு.க. தலைமை கழகப் பேச்சாளர் வக்கீல் ராமசிவசங்கர் ஆகியோர் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் சீனாவின் முற்றுகையில் இந்தியா என்ற புத்தகத்தை பாரதிராஜா வெளியிட்டார்.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வரவேற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

நன்றி : தினத்தந்தி


http://truetamilans.blogspot.com/2009/05/blog-post_08.html

எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை,கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை

முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்மகள் எழுதும் கடிதம்


ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை... கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை!

இவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டு தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்ற ஒரு ஈழத் தமிழ்மகள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை வரைந்திருக்கின்றார்.

ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை... கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை!

இவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டு தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்ற ஒரு ஈழத் தமிழ்மகள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை வரைந்திருக்கின்றார்.

அக்கடிதத்தின் முழுவடிவம்:-

வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கூட நாற்காலி கூடவே இருக்க ஏங்கும் குறளோவியம் தந்த தானைத் தலைவா, இராஜதந்திரம் என்னும் பாழாய்ப்போன இடியப்பத்துக்குள் சிக்கி சிறுத்துப் போகும் சிங்கமே, தனக்குத் தானே தந்தி அடிக்கும் அறிவுடை முதல்வா, வார்த்தை ஜாலங்களால் மட்டுமே படை நடாத்தி உலகெல்லாம் வென்ற உலகத் தமிழினத்தின் தலைவா, அந்தப் பட்டத்தை தங்களுக்குத் தந்தவரை அச்சிடப்படமுடியாத வார்த்தைகளாலும், தங்களை அச்சிடப்படக்கூடிய வார்த்தைகளாலும் வணங்குகின்றேன்.

"ஐயோ இரத்தம் பாயுதக்கா. நோவு தாங்க முடியேல்லை அக்கா" என்று வன்னியில் இருந்து கதறும் ஒரு பிஞ்சுக் குழந்தையொன்றின் கதறலை கேட்டு மனமுடைந்துபோய் எழுதும் மடல் இது.

நான் ஈழத்திலிருந்து அகதியாகி அந்நிய தேசமொன்றில் வசிக்கும் பாவப்பட்ட தமிழிச்சி. தங்களை அவமானப்படுத்துவது எனது நோக்கமில்லை... புண்ணைச் சொறிவதில் எனக்கு இன்பமேதுமில்லை. நான் கனடாவிற்கு எட்டு வயதில் ஏதிலியாய் வந்தேன். இப்போது எனக்கு வயது இருபத்து நாலு. கனடா வந்தாலும் தாய் நாட்டையும் தமிழையும் மறக்கவில்லை... மறக்கவும் மாட்டேன்.

தங்களோடு ஒப்பிடும்போது நான் ஒரு சிறுமி. அஃதிருக்க, மேன்மக்கள் மேன் மக்களே என்ற தமிழ் வார்த்தைகள் உங்களுக்கு மட்டும் பொருந்தாமல் போனதேன். நீங்கள் தமிழுணர்வு மிக்கதொரு சிறந்த கதை ஆசிரியர் என்றுதான் இதுவரை தெரிந்து வைத்தோம். ஆனால் தாங்கள் உலகமகா நடிகன் என்று ஈழப் பிரச்சினை தொடர்பான உங்கள் தந்திகளாலும், கேள்வி பதில் அறிக்கைகளாலும் இப்போது அறிந்து கொண்டோம்.

உங்களிடம் இலைமறை காயாய் மறைந்திருந்த நடிப்புத் திறமையை வெளியே கொணர்ந்து வந்த அன்னை சோனியாவுக்கு தமிழ்த்திரையுலகின் சார்பில் கோடி நன்றி. இதற்கு விலையாக ஈழத்திலே கருவிலேயே குண்டுபட்டுச் செத்துப் போன சிசுக்களை யாது செய்ய?

பதவி ஆசைக்காகவும், அரசியல் குப்பைக் காரணங்களிற்காகவும் எங்கள் ஈழத்தமிழ் மக்களை பலியாக்காதீர்கள். அவர்கள் இரத்தம் சிந்துவதைப் பார்த்தும் உங்களுக்கு இரக்கம் வரவில்லை என்றால் நிச்சயமாக நீங்கள் ஒரு மனிதனாகவே இருக்க முடியாது. பதவியை இராஜினாமா செய்யப் போகிறீர்கள் என்று ஆரம்பி்த்து உண்ணாவிரதம் வரை உங்கள் மெகா தொடர் நாடகம் கலைஞர் ரீவியில் வரும் நாடகங்களைப் போலவே இன்னும் தொடர்கின்றது.

இன்னும் ஈழத்தமிழர் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதனை நீங்களே உங்கள் கபட நாடகங்களால் கெடுத்து விடுவீர்கள் போல் உள்ளது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ஐயா. ஈழத்தமிழரும் தமிழ்நாட்டுத் தமிழரும் வேறு வேறல்ல. அனைவரும் தமிழர்தான். தமிழன் என்றால் மானம் மரியாதைக்குத் தான் பெயர் போனவன்.

நீங்களோ மரியாதைக்குத்தானும் ஒரு மானமுள்ள இனப்பற்றுள்ள தமிழனாய் இருக்க விரும்புகிறீர்கள் இல்லை. உங்களை மாதிரி பதவி ஆசைக்காக சோனியா அம்மையார் மற்றும் மகிந்த போன்றவர்களின் காலைப் பிடித்துக்கொண்டிருக்கம் சுயநலவாதிகளால்தான் எமக்கு இன்னமும் ஈழம் கிடைக்கவில்லை...விடிவும் கிடைக்கவில்லை.

இந்த வயதில் உங்களுக்கு பதவிப் பித்துத் தேவைதானா? பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். தங்களுக்கு அதுவும் பொய்த்துப் போயிற்றே. பாதி நாட்கள் முதுகு வலி என்று வைத்தியசாலையில் படுத்துறங்கி அறிக்கைப் போர் புரிந்து அரசியல் என்னும் சாக்கடையில் புரண்டு தன்மானத்தை இழந்து பதவி சுகம் காண விரும்பும் வாழ்வெல்லாம் வெல்லமா?

நீங்களே சிந்தியுங்கள். நாங்கள் ஏன் பிறந்தோம் என்று யோசியுங்கள். நாங்கள் மற்றவர்களுக்கு என்ன நல்லது செய்தோம் என்று சிந்தியுங்கள். நாளைக்கு நாங்கள் இறக்கும் போது எங்களுக்காக யாரேனும் அழுவார்களா என்று யோசியுங்கள். ஈழ இனத்தை அழிக்க திட்டம் போட்டுக் கொடுத்த பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையே போர் நிறுத்தம் பற்றி பேச தூதனுப்பியதன் நியமான காரணம் ராஜதந்திரி உங்களுக்குத் தெரியாமல் போனது அதிசயம்தான்.

கூப்பிடு தூரத்திலே கோடி கோடியாய் இரத்ததின் இரத்தங்கள் நீங்கள் இருக்க, வன்னியிலே எம்மினம் இரத்தம் சிந்துவதும் அதிசயம்தான். உங்கள் கட்சியின் பெயரிலேயே திராவிடர் என்ற பதத்தை வைத்துக் கொண்டு ஆரியரோடு கூட்டுச் சேர்ந்து சிங்கள கொடுங்கோல் அரசுக்கு தாங்கள் உதவுவதும் அதிசயம்தான். "ஒரே இரத்தம்" என்ற நாடகம் யாத்த நீங்கள் எண்பத்தைந்து வயசினிலும் இனத்தை விட பதவிதான் முக்கியம் என்று சுயநலவாதியாய் இருப்பதும் அதிசயம்தான்.

உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இந்திய மத்திய அரசு தூதுவரை கொழும்பிற்கு அனுப்பிய மறு நாளில் எல்லாம் குண்டுவீச்சின் வீரியம் கூடுகிறதாம். உங்களுக்குப் போற வழியில் புண்ணியமாய்ப் போகும் தயவு செய்து இனியும் தூதுவர்களை அனுப்பி எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம். மத்திய அரசுக்கு தந்தி அனுப்பிவிட்டோம்...இதற்கு மேல் யாது செய்ய என்ற சாட்டுக்களை விட்டுவிடுங்கள் ஐயா.

"இன்னும் ஓரு மணித்தியாலத்திற்குள் வன்னியிலே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வராவிடின் தமிழகம் இந்தியாவிலிருந்து பிரிந்து போகும்" என்று ஒரு அறிக்கை விட்டீர்கள் என்றால் ஒரு நிமிடத்திலேயே போர் நிறுத்தம் வந்துவிடும். வேண்டாம், இந்திய இறையாண்மைக்கு எதிராக நீங்கள் எதுவுமே பேச வேண்டாம்.

'இனி காங்கிரஸ்தான் தமிழகத்தின் எதிரி' என்று ஓர் அறிக்கைவிட வேண்டியிருக்கும் என்று மத்திய அரசுக்குச் சொல்லுங்கள்...சொன்னபடி நடவுங்கள்...நாளையே வன்னியிலே போர் நிறுத்தம். உங்கள் பலம் உங்களுக்குத் தெரியவில்லை. முடிந்தால் ஈழ மக்களிற்கு உதவுங்கள். இல்லையேல் ஈழம் பற்றிக் கவிதை வரைவதை, அறிக்கை விடுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.

ஐயா கலைஞர் ஐயா, ஈழத்து மக்களுக்கு சோறும், பால்மாவும் அனுப்ப வேண்டாம். முதலில் அவர்களது உயிரைக் காப்போம். ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை...கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை. தயவுசெய்து நீங்கள் எங்கள் தலைவர் பிரபாகரனின் நண்பன் என்று சொல்லி எங்கள் தலைவனைக் கேவலப்படுத்தாதீர்கள். தங்களை மாதிரி ஒரு சுயநல விரும்பி நிச்சயமாக எங்கள் தலைவனின் நண்பனாக இருக்கவே முடியாது.

உங்களை கெட்ட வார்த்தை சொல்லி திட்ட வேண்டும் என்றுதான் தோன்றுகின்றது. ஆனால் நான் ஒரு ஈழத் தமிழிச்சி என்பதாலும், பெரியவர்களைக் கனம் செய்ய வேண்டும் என்ற தமிழர் பண்புக்காகவும் விட்டு வைக்கின்றேன். என்னைப்போன்ற பல தமிழர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான் இந்த மடலை எழுதுகின்றேன்.

இதை நான் உங்களைப் புண்படுத்துவதற்காக எழுதவில்லை..சிந்திக்க வைப்பதற்காகத் தான் எழுதிகின்றேன். மன்னித்துவிடுங்கள் என்று நிச்சயமாகக் கேட்க மாட்டேன். காங்கிரஸிடம் இன்னமும் கூட்டு வைப்பதற்காக நீங்கள்தான் அதனை அனைத்து தமிழர்களிடமும் கேட்க வேண்டும்.

வாழ்க தமிழ்,

வெல்க தமிழர்,

தமிழர்தான் புலிகள்,

புலிகள்தான் தமிழர்,

எவர் வந்து தடுத்தாலும் விரைவில் மலரும் தமிழீழம்

இப்படிக்கு,

ஒரு தமிழிச்சி.


http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3279:2009-05-05-11-58-25

சீமான் பேச்சு: என் நாடு, என் மக்கள், என் தலைவன் ...!

''யாரும் பொய் பேசித் தப்ப முடியாது!''--சீமான் பேட்டி

மூன்று முறை சிறைக்குள் முடக்கப்பட்ட பிறகும் சீமானின் சீற்றம் குறையவில்லை. காங்கிரஸ் போட்டி யிடும் தொகுதிகளில் மட்டும் பாரதிராஜா, மணிவண் ணன் உள்ளிட்ட திரைப் படையைத் திரட்டிக்கொண்டு வார்த்தை வாள் சுழற்றப் புறப்படுகிறார்.

''முதல் ஒலி பெருக்கி எங்கே தெரியுமா... ஈரோடு. பெரியார் பிறந்த மண்ணில் பெரியாரின் பேரன் இளங்கோவனை எதிர்த்து முதல் முழக்கம். உறவுப் பேரனை எதிர்த்து உணர்வுப் பேரன்கள் பேசுகிறோம்!'' என்கிறபோது அலைபேசி அழைக்கிறது.

ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டி பிரான்ஸில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் செல்வக்குமாரின் தங்கை பேசுகிறார். 'நீங்கள் சொல்லுங்கள் அண்ணா... நீங்கள் சொன்னால்தான் என் அண்ணன் கேட்பான்' என்கிறது குரல். சீமான் கண்களில் நீர் கோக்கிறது. ''களத்தில் நின்றும் போராடு கிறான். நிலத்தில் நின்றும் வாதாடுகிறான். ஆனால், நாம் நாற்காலிச் சண்டையில் கிடக்கிறோம்'' என்றபடி, கேள்விகளை எதிர்கொள்கிறார்...

''பொதுவாக சிறை உடல், மனரீதியாக மாற்றம் செய்யும். உங்களுக்கு?''

''மதுரையில் அமீர் என்னுடன் இருந்தார். கோவை யில் கொளத்தூர் மணியும் மணியரசனும் இருந்தார்கள். புதுவையில் தனிமைச் சிறை. சரியான உணவில்லை, உறக்கமில்லை, நினைத்ததைச் சொல்ல முடியாத அழுத்தம், சிந்தனைத் தவிப்பு... இவை என்னை உடல் அளவில் பலவீனமாக்கி இருக்கலாம். ஆனால் என் இனமும், மொழியும், நாடும், தலைவனும், தத்துவமும், இன்னும் எத்தனை சிறை பார்த்தாலும், எத்தனை முறை பார்த்தாலும் மாறாது; மறையாது!''

''இந்தத் தேர்தல் உங்கள் பார்வையில் எப்படிப்பட்டது?''

''எம் இன வரலாற்றில் இது முக்கியமான தேர்தல். சாதித் தமிழன், கட்சித் தமிழன், மதத் தமிழன் என தமிழன் மூன்று வகைகளில் சிதைந்துகிடக்கிறான். தன் சாதிக்காரனுக்கு அடி விழுந்தால் மட்டும் அவனுக்கு வலிக்கும்; தன் மதத்தவன் தாக்கப்பட்டால் மட்டும் ரத்தம் கொதிக்கும். தன் தலைமை வாய் திறக்கும் வரை போராடுவதில்லை. இது வந்தவனுக்கு வசதியாகப் போனது; பந்தாடினான். காலம் காலமாகப் பிரிந்து கிடந்த இந்தத் தமிழனுக்கு முதல் முறையாக அத்தனை வேறுபாடுகள், மாறுபாடுகளைக் கடந்து இனத்துக்காக வாக்களிக்கவேண்டிய வாய்ப்பு வந்திருக்கிறது. தமிழினத்துக்கு மான உணர்வு இருந்தால், உயிர் இருந்தால் அப்படி ஓர் இனம் வாழ் வது உண்மையானால்... அதை நிரூபிக்கும் தேர்தல் இது!''

''கட்சித் தமிழனைப் பற்றிச் சொன்னீர்கள். நீங்கள் பிரசாரம் செய்யப்போவது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மட்டும்தானே?''

''காங்கிரஸ் கட்சியின் பெயரைச் சொன்னாலே தமிழனுக்குக் கசக்க ஆரம்பித்துப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. நாங்கள் பிரசாரம் செய்வது, எம் இனத்தை அழித்துக்கொண்டு இருக்கும் மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்து.

பிரணாப் முகர்ஜி, கொழும்பு போனார். அவருக்கு சிங்கள அதிகாரி ஒருவன் இலங்கையின் வரைபடத்தைக் குச்சி வைத்துக் காட்டுகிறான். தமிழீழம் முழுக்கப் பரவியிருந்த புலிகளை சின்ன இடத்துக்குள் முடக்கி விட்டதாக அவன் சொன்னதும் பிரணாப் சிரிக்கிறார். இதற்கு என்ன அர்த்தம்? போரை நடத்துவதே இந்தியாதான். இந்தியாவின் எதிரி நாடான சீனா, இலங்கையைச் செல்லப்பிள்ளையாகப் பார்த்து கடற் படைத் தளம் அமைக்கிறது. இன்னொரு எதிரியான பாகிஸ்தான் விமான ஓட்டிகள் 13 பேர் இலங்கையில் இருக்கிறார்கள். நம்முடைய எதிரிகள் சூழ்ந்துள்ள தேசத்தில் எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் புலிகளை ஒழித்தால் மட்டும் போதும் என்று இறங்கு கிறாயே, என்ன நெஞ்சழுத்தம்?

கலை காத்தோம்; பண்பாடு காத்தோம்; மக்களைக் காத்தோமா? காக்கத் தவறியது காங்கிரஸ் அரசு. அது மட்டுமல்ல, கொன்று குவித்தது. எனவே, நாங்கள் எடுத்திருக்கும் முழக்கம், என் இனத்துக்கு உரமானது!''

 ''இது அ.தி.மு.க-வுக்கான மறைமுக ஆதரவல்லவா?''

''ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கொடுத்த குறுந்தகடு பார்த்து மனம் மாறியதாகச் சொல்கிறார் ஜெயலலிதா. அவர் மனம் மாற வேண்டும் என்றுதான் நாம் காத்திருந்தோம். 'தமிழீழம் பெற்றுத் தருவேன்' என்று அவர்சொல் வதை வரவேற்கிறோம். தேர்தலுக்காக ஜெயலலிதா பேசுவதாகக் குற்றம் சொல்கிறார்கள். அதற்காகவாவது நீங்களும் பேசுங்களேன். 'மலர்ந்தால் மகிழ்வோம்' என்பது என்ன கொள்கை? போராடித்தான் வாங்க முடியும். 'சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே' என்றானே கவிஞன்!

அரிசி தருவேன், டி.வி. தருவேன் என்பதைப் போன்றதல்ல, தமிழீழம் வாங்கித் தருவேன் என்ற வாக்குறுதி. இனப் பிரச்னை, உரிமைப் பிரச்னை. இன்று அது சர்வதேசப் பிரச்னை. இதில் யாரும் பொய் பேசித் தப்ப முடியாது. மக்கள் மன்றத்தில் தமிழனுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.''

''உண்ணாவிரதம் உட்கார்ந்து போர் நிறுத்த வாக்குறுதியை வாங்கித் தந்திருக்கிறாரே கருணாநிதி?''

''இந்த வயதில் கலைஞர் உண்ணாவிரதம் உட்கார வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. அதனாலும் எந்தப் பயனும் இல்லையே? போர் நின்றுவிட்டது என்று யார் சொல்ல வேண்டும்? குண்டுச் சத்தம் கேட்கவில்லை என்று யார் சொல்ல வேண்டும்? பயம் அற்ற தமிழன் அதை உலகத்துக்குச் சொல்ல வேண்டும். குண்டு போடும் சிங்களவனும், அதை ஆதரிக்கும் மத்திய அரசாங்கமும் சொன்னால் நம்புவதற்குத் தமிழன் இளிச்சவாயனா? 50 ஆயிரம் பேர் காட்டில் இருப்பதாக ராஜபக்ஷே சொன்னார். இன்று ஒரு லட்சம் பேர் காட்டை விட்டு வெளியேவந்திருப்ப தாகச் சொல்கிறார். புலிகளிடம் இருந்தால் அவர்கள் 50 ஆயிரம், உன்னிடம் வந்தால் ஒரு லட்சமா?

போரைத் தடு என்று நான் கேட்டால், இன்னொரு நாட்டின் இறையாண்மையில் தலையிட முடியாது என்கிறாய். இந்தியாவில் அனைத்து மதத்தவன், இனத்தவனும் ராணுவத்தில் இருந்து இந்தத் தேசத்தைக் காக்கிறான். ஆனால், இலங்கை ராணுவத்தில் சிங்கள வன் மட்டும்தானே உண்டு. அந்த நாட்டை எப்படி இறையாண்மையுள்ள நாடு என்று சொல்ல முடியும்? இவை எல்லாமே தமிழர்களை ஏமாற்ற, கொல்வதை மறைக்கச் சொல்லப்படும் சாமர்த்தியமான வார்த்தை கள்.''

''ஆயுதத்தைக் கீழே போட்டுப் புலிகள் சரணடைய வேண்டும், அதன் பிறகு தமிழர்களுக்குச் சமமான உரிமை தரப்படும் என்று வாக்குறுதி தரப்பட்டுள்ளதே?''

''தமிழர்களுக்கு உரிமையை வழங்கினால், புலிகள் அடுத்த நிமிடமே ஆயுதம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லையே! நீ அதை வழங்காததால்தானே புலிகள் ஆயுதத்தை எடுத்தார்கள். சொந்தத் தேசத்து மக்களைக் கொல்வது தேசபக்தியாம்... தமிழ் மக்களைத் தற்காத்துக்கொள்வது பயங்கரவாதமா? ஆயுதம் அவர் களிடம் இருக்கும்போதே இத்தனை பேரைக் கொன்றால், இல்லாத நிலையில் மொத்தத்தையும் முடித்துவிட மாட்டார்களா?''

''புலிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டார்கள்; பிரபாகரன் அங்கே இல்லை; இன்னும் சில நாட்களில் முடித்துவிடுவோம் என்று வரும் செய்திகள் உண்மையா?''

''பிரபாகரனை இதுவரை 20 தடவை இந்த ஊடகங்கள் கொன்றிருக்கின்றன. முக்கியத் தளபதிகளான தீபன், கடாபி, துர்கா, விதூஷா, சேரா போன்றவர்கள் இறந்தது உண்மை. அவர்களும் சண்டை போட்டு ராணுவத்தால் கொல்லப்படவில்லை. நயவஞ்சகமாக ரசாயனக் குண்டுகளால் அழிக்கப்பட்டார்கள். தளபதிகள் சிலர் இறந்தாலும் பல தளபதிகளை உருவாக்கக்கூடிய பிரபாகரன் அங்கு இருக்கிறார். 'அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேல்' என்று நினைக்கக்கூடிய பிரபாகரன் அவருடைய மண்ணில்தான் இருக்கிறார்.''

''நீங்கள் பிரபாகரனை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?''

''ஓர் இக்கட்டான சமயத்தில் நான் அவரைச் சந்தித்தேன். இலங்கைக்கு இந்தியா செய்து வரும் உதவிகள் குறித்து அவர் வருத்தப்பட்டார். 'இந்தியாவின் எதிரி நாடுகள் எங்கள் அமைப்புக்கு உதவி செய்ய முன்வந்த போது நான் அதை ஏற்கவில்லை. இது என் தாய் நாடு. இந்தியா என் தந்தையர் நாடு' என்று பிரபாகரன் சொன்னார்.

'பெரியாரைப் படித்த நாங்கள் போராளிகளாக இருக்கிறோம். கரம் பற்றி நடந்த நீங்கள் வாக்காளியாக இருக்கிறீர்கள்' என்று கிண்டலடித்தார். 'தமிழனின் வாளும் வேலும் எங்கடா தம்பி?' என்று என்னிடம் கேட்டார். 'அது பொருட்காட்சியிலும் பூஜை அறையிலும் இருக்கிறது' என்றேன். 'அதனால் தான் எதிரி போட்டுத் தாக்குகிறான்' என்று சிரித்தார்.

போரியல் மட்டுமல்ல, அரசியலும் கலந்த சித்தாந்தி அவர். ஈழத் தமிழனின் வாழ்வியலை வடிக்க அவரால் மட்டுமே முடியும்!''

உருக்கமாக முடிக்கிறார் சீமான்.


http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3298:2009-05-07-14-39-07&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54

வீடியோ கண்ணீர் :தமிழகத்தில் ஒரு தமிழ் தாண்டவம்

தமிழகத்தில் ஒரு தமிழ் மகனின் தாண்டவம்

(இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்திய வீடியோ )

http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ
விஜய் TV யில் நடந்த ஈழத் தமிழர் நிலையை சித்தரிக்கும் நடன நிகழ்சி கண்ணீர் வெள்ளத்தில் மக்கள்

இந்த நடன நிகழ்ச்சியை கொடுத்த பிரேம் கோபால் அவர்களின் தொலைபேசி இலக்கம் இருக்கிறது 00919884623356 , தொடர்புகொண்டு நன்றி தெரிவிக்கவிரும்புவர்கள் தொடர்புகொள்ளவும்

இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் இந்திய அரசின் கெடுபிடிக்கு மத்தியிலும் ஈழத் தமிழர்களுக்காக இதனை நடத்தியிருக்கிறார் அவர் துனிச்சலையும் நாம் பாராட்டுகிறோம்.


நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!