Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, May 30, 2009

♥ பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன் - சீமா‌ன் ♥

பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன் - சீமா‌ன்


seeman20003 பிரபாகர‌ன் செ‌‌த்து‌வி‌ட்டார‌ா‌ம். மா‌வீரனு‌க்கு ஏதடா மரண‌ம். வா‌ர்‌‌த்தை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் அவ‌ர் மரண‌ம் அட‌ை‌ந்‌‌திரு‌க்கலா‌ம்.

வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவ‌ர் ஒருபோது‌ம் மரண‌ம் அடையமா‌ட்டா‌ர். பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன் எ‌ன்று இய‌க்குன‌‌ர் ‌‌சீமா‌ன் கூ‌றினா‌ர்.

இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்‌றிரவு பொதுக்கூட்டம் நடந்தது. இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டு இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் பேசுகை‌யி‌ல், "இய‌க்குன‌ர் பார‌திராஜா ஒரு மாபெரு‌ம் கலைஞ‌‌ன். பாலா, சேர‌ன், த‌ங்க‌ர்ப‌ச்சா‌ன் உ‌ள்‌ளி‌ட்ட எ‌ண்ண‌ற்ற கலைஞ‌ர்க‌ள் பூ‌த்து‌க்குலு‌ங்க காரணமாக உ‌ள்ள அடிமர‌ம். அவ‌ர் அலுவலக வாச‌லி‌ல் உ‌ள்ள வே‌‌ப்பமரமு‌ம் நா‌‌ங்களு‌ம் ஒ‌ன்றாக வள‌ர்‌ந்தவ‌ர்க‌ள். அவ‌ர் அலுவலக‌த்தை தா‌க்‌கியு‌ள்ளன‌ர்.

ஒரு த‌மிழ‌ன் த‌மிழனாக இரு‌ந்தத‌ற்காக ‌கிடை‌த்த ப‌ரிசு இது. ஈழ‌த் த‌‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கை‌யி‌ல் ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு ஆதரவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் இ‌ங்கு ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள். எ‌ன்னை‌‌த் தொட‌ர்‌ந்து 4 முறை ‌சிறை‌யி‌ல் அடை‌த்தா‌ர்க‌ள். நா‌ன் எ‌ன்ன தவறு செ‌ய்தே‌ன். எ‌ன் இன‌ம் அ‌ழி‌க்க‌ப்படுவதை‌க் க‌‌ண்டு ந‌ல்ல அ‌‌ப்பனு‌க்கு‌ப் ‌பிற‌ந்த எ‌ன்னா‌ல் பொறு‌க்க முடிய‌வி‌ல்லை. நா‌ன் ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் எ‌ன் தொ‌‌‌ழி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. எ‌ன்னுடைய காரை எ‌‌ரி‌த்தா‌ர்க‌ள். உ‌யி‌ர் எ‌ன்பது உ‌திரு‌ம் ம‌யிரை‌ப் போ‌ன்றது. ஒரு ல‌ட்ச‌ம் து‌ப்பா‌க்‌கிகளை‌க் கட‌ந்து செ‌ன்று ‌பிரபாகரனை ச‌ந்‌தி‌த்தவ‌ன் நா‌ன். இத‌ற்கெ‌ல்லா‌ம் பய‌ப்பட மா‌ட்டே‌ன். பே‌சினா அடி‌ப்போ‌ம் இதுதா‌ன் ஜனநாயகமா?

தா.பா‌ண்டிய‌ன் காரை எ‌‌‌ரி‌த்தா‌ர்க‌ள். யாரை கைது செ‌ய்‌தீ‌ர்க‌ள். த‌மிழ‌ன் மன‌‌தி‌ல் இடி‌விழு‌ந்து ந‌ி‌ற்‌கிறா‌ன். த‌மி‌‌ழ்‌ச்சா‌தி உறை‌ந்து போ‌ய் ‌கிட‌க்‌கிறது. இ‌ந்‌தியா நட‌த்த‌ வே‌ண்டிய போரை நா‌ங்க‌ள் நட‌‌த்‌தியு‌ள்ளோ‌ம் எ‌ன்று ராஜப‌க்சே கொ‌க்க‌ரி‌க்‌கிறா‌ன். 25,000 ஈழ‌த் த‌‌மிழ‌ர்களை உ‌யிரோடு புதை‌த்து‌ள்ளன‌ர் ‌சி‌ங்கள‌ர்க‌ள். பிரபாகர‌ன் இற‌ந்து ‌வி‌ட்டா‌ர், அவ‌ர் உடலை எ‌‌ரி‌த்து சா‌ம்பலை கட‌லி‌ல் ‌வீ‌சி‌வி‌ட்டோ‌ம் எ‌ன்‌கி‌‌ன்றன‌ர். பிரபாகர‌ன் செ‌‌த்து‌வி‌ட்டார‌ா‌ம். மா‌வீரனு‌க்கு ஏதடா மரண‌ம். வா‌ர்‌‌த்தை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் அவ‌ர் மரண‌ம் அட‌ை‌ந்‌‌திரு‌க்கலா‌ம்.

வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவ‌ர் ஒருபோது‌ம் மரண‌ம் அடையமா‌ட்டா‌ர். பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன். தி‌ரிகோணமலையை அமெ‌ரி‌க்காவு‌க்கு ‌வி‌ட்டு‌க் கொடு‌த்‌திரு‌ந்தா‌ல் இ‌வ்வளவு பெ‌ரிய இழ‌ப்பை ச‌ந்‌தி‌த்து இரு‌க்க மா‌ட்டா‌ர். சி‌ங்கள‌ர்க‌ள் செ‌ய்த அ‌ட்டூ‌‌ழிய‌த்தை‌ப் போல நாமு‌ம் செ‌ய்‌திரு‌க்க வே‌ண்டு‌ம். ஆனா‌ல் ‌பிரபாகர‌ன் செ‌ய்ய‌வி‌ல்லை. க‌ற்ப‌ழி‌ப்புகளை நட‌த்‌தினா‌ர்க‌ள். ப‌ச்‌சிள‌ங் குழ‌ந்தைகளை கொ‌ன்று ‌‌கு‌வி‌த்தா‌ர்க‌ள். பிரபாகர‌ன் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தா‌ல், கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து 5 ல‌ட்ச‌‌‌த்‌திற‌்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ம‌க்களை கொ‌ன்று கு‌வி‌த்‌திரு‌க்க முடியு‌ம். அதை அவ‌ர் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை.

மரு‌த்துவமனை, ப‌ள்‌ளி‌க்கூட‌ம், பொதும‌க்க‌ள் வாழு‌ம் பகு‌‌திக‌ளி‌ல் கு‌ண்டுபோட வே‌ண்டா‌ம் எ‌ன்று கூ‌றி‌வி‌ட்டா‌ர். இ‌ன்றை‌க்கு, பிரபாகர‌னி‌ன் 75 வயது ‌த‌ந்தையு‌ம், 72 வயது தாயாரு‌ம் ‌சி‌ங்கள இராணுவ‌த்‌தி‌ன் ‌பிடி‌‌யி‌ல் இரு‌க்‌கிறா‌‌ர்க‌ள். விசாரணை எ‌ன்‌‌கிற பெய‌ரி‌ல் அழை‌த்து‌ச் செ‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர்க‌ள். அ‌வ‌ர்களை எ‌ப்படியெ‌ல்லா‌ம் ‌சி‌த்ரவதை செ‌ய்‌கிறா‌ர்களோ? தெ‌ரிய‌வி‌ல்லை. சி‌ங்கள இராணுவ‌‌ம் செ‌ய்த அ‌த்து‌மீற‌ல்களு‌க்கு‌ம் ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்களு‌க்கு‌ம் ஆதார‌ம் இரு‌ப்பதாக இ‌ன்றை‌க்கு அமெ‌ரி‌க்கா செ‌ல்‌கிறது. இ‌‌ந்த அமெ‌ரி‌க்கா அ‌ன்றை‌க்கு ஏ‌ன் சொ‌ல்ல‌வி‌ல்லை?ஐ.நா. பொது‌ச் செயல‌ர் பா‌ன் ‌கீ மூ‌ன் எ‌ல்லா‌ம் முடி‌ந்த ‌பிறகு இ‌ன்று இல‌ங்கை‌க்கு செ‌ன்று பா‌ர்வை‌யிடு‌கிறா‌‌ர். உலக‌த் த‌மி‌ழ் இனமே வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்‌திரு‌ந்தபோது அ‌ன்றை‌க்கு அவ‌ர் செ‌ன்‌றிரு‌க்கலாமே? அ‌ன்று செ‌ல்ல‌‌வி‌ல்லை. சீனா செ‌ங்கொடி தூ‌க்‌கி ‌நி‌ற்‌கிறது. அ‌ந்த‌க் கொடியை தூ‌க்க அத‌ற்கு எ‌ன்ன தகு‌தி இரு‌க்‌கிறது. இ‌‌ங்‌கிலா‌ந்து, இ‌ஸ்ரே‌ல் போ‌ன்ற நாடுக‌ள் எ‌ல்லா‌ம் ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ஆதரவாக வ‌ந்து ‌நி‌ற்‌கி‌ன்றன. ஆனா‌ல் இ‌ந்‌தியா எ‌‌திராக உ‌ள்ளது. இதை‌ச் சொ‌ன்றா‌ல் இறையா‌ண்மை ‌மீறலா? நடேச‌ன், பு‌‌‌லி‌த்தேவ‌ன் உ‌ள்‌ளி‌ட்ட 350 பே‌ர் வெ‌ள்ளை‌க்கொடி தா‌ங்‌கி ‌சி‌ங்கள இராணுவ‌த்தை நோ‌க்‌கி வ‌ந்தா‌ர்க‌ள். அவ‌ர்களை வ‌‌ஞ்சகமாக கொ‌ன்று கொடு‌ஞ்செய‌ல் பு‌ரி‌ந்ததை உல‌கி‌ல் யாராவது க‌ண்டி‌த்து‌ள்ளா‌ர்களா?

இதுவரை நட‌ந்தது மு‌ன்னோ‌ட்ட‌ம்தா‌ன். இ‌னி தா‌ண்டா போ‌ர் நட‌க்க‌ப் போ‌கிறது. 5ஆ‌ம் க‌ட்ட‌‌ப் போ‌ரி‌ல் ‌பிரபாகர‌ன் கடை ‌பிடி‌த்த மரபுகளை நா‌ங்க‌ள் கடை‌பிடி‌க்க‌ப் போ‌வ‌தி‌ல்லை. ஒரு ‌சி‌ங்கள‌ன் கூட ‌‌நி‌‌ம்ம‌தியாக உற‌ங்க முடியாத அள‌வி‌ற்கு தா‌க்குவோ‌ம். கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து தா‌க்குத‌ல் நட‌த்துவோ‌ம். மானமு‌ள்ள கடை‌சி ஒரு த‌மிழ‌ன் இரு‌க்கு‌ம்வரை ‌சி‌ங்கள‌ர்களு‌க்கு எ‌திரான போரா‌ட்ட‌ம் தொடரு‌ம். ந‌‌ள்‌ளிர‌வி‌ல் ஒரு பெ‌ண் நகை அ‌ணி‌ந்து பாதுகா‌ப்பாக நட‌ந்து செ‌ல்லு‌ம் போதுதா‌ன் சுத‌ந்‌திர‌ம் ‌கிடை‌த்து ‌வி‌ட்டதாக அ‌ர்‌த்த‌ம் எ‌‌ன்று கா‌ந்‌தி கூ‌றினா‌ர். இ‌ந்த கா‌ந்‌தி‌யி‌ன் கனவை ‌பிரபாகர‌ன் ‌நனவா‌க்‌கினா‌ர்.

அ‌‌ற்புதமான த‌மி‌‌ழ்‌‌த் தேச‌த்தை அ‌ங்கு ‌‌நி‌ர்மா‌ணி‌த்தா‌ர். நீ‌தி‌த்துறை, காவ‌ல்துறை உ‌ள்‌ளி‌ட்ட அனை‌த்து துறைகளையு‌ம் க‌ட்டமை‌த்தா‌ர். அ‌ங்கு ‌திருட‌ன் இ‌ல்லை, எ‌ந்த கு‌ற்றமு‌ம் நடைபெற‌வி‌ல்லை. அ‌ப்படி‌ப்ப‌ட்ட தேச‌த்தை ‌சிறை‌த்து ‌வி‌ட்டா‌ர்க‌ள். இத‌ற்கு காரணமாக இரு‌ந்த இ‌ந்‌திய அரசை க‌ண்டி‌ப்பது தவறா? இ‌ந்‌தியா எ‌ன்றா‌ல் ஒரு தேச‌ம். வா‌‌ஜ்பா‌ய் உ‌ள்‌ளி‌ட்ட வேறு பலரு‌ம் ‌பிரதமராக இரு‌ந்து‌ள்ளா‌ர்க‌ள். தேச‌த்தை நா‌ன் குறை கூற‌வி‌‌ல்லை. கா‌ங்‌கிர‌ஸ் அரசையு‌ம் அத‌ன் தலைமையையு‌ம்தா‌ன் கு‌ற்ற‌ம்சா‌ற்று‌கிறே‌ன்.

இ‌ங்கு‌ள்ள த‌மிழ‌ர்க‌ள் பல‌ர் நட‌‌ந்து கொ‌ண்டதை ‌நினை‌க்கு‌ம்போது அவமானமாக இரு‌க்‌கிறது. பணமா? போரா‌ட்டமா? எ‌ன்ற கே‌ள்‌வி எழு‌ந்த போது, பண‌த்த‌ி‌ன் ப‌க்க‌ம் சே‌ர்‌ந்து ‌வி‌ட்டானே எ‌ன் த‌மிழ‌ன் எ‌ன்று ‌நினை‌த்து வெ‌ட்க‌ப்படு‌கிறே‌‌ன். எ‌ன் ‌வீ‌ட்டு‌க் கூரை ‌தீ‌ப்‌‌பிடி‌த்து எ‌ரியு‌ம்போதுதா‌ன், த‌ண்‌‌ணீ‌ர் எடு‌த்து வருவே‌ன் எ‌ன்ற எ‌ண்ண‌த்த‌ி‌ல் பல த‌‌மிழ‌ர்க‌ள் இ‌ங்கு உ‌ள்ளன‌ர். இ‌ந்த‌நிலை ந‌ல்லதா? உன‌க்கு பா‌தி‌ப்பு வரு‌ம் போது உதவுவத‌ற்கு அரு‌கி‌ல் யாரு‌ம் இரு‌க்க மா‌ட்டா‌ர்‌க‌ள். வைகோ, தா.பா‌ண்டிய‌ன் பாராளும‌ன்ற‌த்த‌ி‌ல் இரு‌ந்தா‌ல், த‌மிழக ‌மீனவ‌ர்க‌‌ள் கட‌லி‌ல் சுட‌ப்ப‌ட்டு செ‌த்‌திரு‌ப்பா‌ர்களா? இ‌னிமேலாவது த‌மிழ‌ர்க‌ள் வெகு‌ண்டு எழ வே‌ண்டு‌ம். இ‌ல்லை‌வி‌ட்டா‌ல், த‌மி‌‌ழ் இன‌த்தை கா‌ப்பா‌ற்ற வே‌ண்டு‌ம்.

இ‌ன்றை‌க்கு உலக அமை‌தி‌க்கான நோப‌ல் ப‌ரிசு‌க்கு உக‌ந்த நப‌ர் மா‌வீர‌ன் ‌பிரபாகர‌ன்தா‌ன். இ‌ந்‌‌தியாவு‌ம் ‌‌சீனாவு‌ம் பா‌‌கி‌ஸ்தானு‌ம் எ‌ந்த கால‌த்‌திலாவது ஒ‌ன்றாக சே‌ர்‌‌ந்தது‌ண்டா? எ‌ந்த‌ப் ‌பிர‌ச்சனையை எடு‌த்து‌க்கொ‌ண்டாலு‌ம் ‌சீனாவு‌ம், இ‌ந்‌தியாவு‌ம் அ‌ல்லது இ‌ந்‌தியாவு‌ம், பா‌க‌ி‌ஸ்தானு‌ம் ‌எ‌திரு‌ம் பு‌திருமாக‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரையு‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌‌த்து வை‌த்த பெருமை ‌பிரபாகரனை‌த்தா‌ன் சேரு‌ம். பிரபாகர‌னை எ‌தி‌ர்‌ப்பத‌ற்கு‌த்தா‌ன் இவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரு‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌‌ந்து‌ள்ளா‌ர்க‌ள்.

இல‌‌‌ங்கை‌க்கு எ‌திராக ஐ.நா.சபை‌யி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து, சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து உ‌ள்‌ளி‌ட்ட நாடு‌‌க‌ள் கொ‌ண்டு வ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் இ‌ன்றை‌க்கு தோ‌ற்கடி‌‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது. இல‌ங்கை‌க்கு ஆதரவாக ‌நி‌‌ன்று இ‌ந்த ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா தோ‌ற்கடி‌த்‌திரு‌க்‌கிறது. தீ‌ர்மான‌ம் வெ‌ற்‌றி பெ‌ற்‌றிரு‌ந்தா‌ல் முத‌ல் கு‌ற்றவா‌ளியாக இ‌ந்‌தியா ‌நி‌ன்‌றிரு‌க்கு‌ம். அத‌ன் அரு‌கி‌ல் ‌சீனாவு‌ம், பா‌கி‌ஸ்தானு‌ம் ‌நி‌‌ற்கு‌ம். அ‌ந்த‌ப் ப‌ழி‌க்கு பய‌ந்துதா‌ன் ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌‌‌தியா தோ‌ற்கடி‌த்து‌ள்ளது. எ‌ங்க‌ள் ஆ‌ழ்மன‌தி‌ல் வேதனை‌த் ‌தீ எ‌ரி‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அது எ‌ப்படி வெடி‌த்து வெ‌ளி‌க்‌கிள‌ம்ப‌ப் போ‌கிறது? எ‌ன்பதை‌‌ப் பா‌ர்‌க்க‌த்தா‌ன் போ‌கி‌றீ‌ர்க‌ள். மான‌மி‌க்க ‌வீர‌ம் பொரு‌ந்‌திய த‌மிழ‌ர்‌ கூ‌ட்ட‌ம் இ‌ன்னு‌ம் இரு‌ப்பதை மற‌ந்து‌விட வே‌ண்டு‌ம்" எ‌‌ன்று இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் பே‌சினா‌ர்.

http://www.paristamil.com/tamilnews/?p=12771




வீடியோ படம்
http://www.youtube.com/watch?v=l-bhdtdecoQ

♥ "இலங்கையில் போர் நடந்த பகுதிக்கு பன்னாட்டு சமூகத்தை அனுமதிக்க வேண்டும்: அமெரிக்கா" நக்கீரன் கட்டுரை ♥




இலங்கையில் போர் நடந்த பகுதிக்கு பன்னாட்டு சமூகத்தை அனுமதிக்க வேண்டும்: அமெரிக்கா


இலங்கையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிக்கு சர்வதேச சமூகத்தை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இயன் கெல்லி, இலங்கையின் வடபகுதியில் நடந்த போரின் இறுதி கட்டத்திலும் அதற்குப் பிறகும் அங்கு என்ன நடந்தது என்பது குறித்த துல்லியமான விவரங்களை பன்னாட்டு சமூகம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம் என்று கூறியுள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=9161


பிரபாகரனின் பெற்றோருக்கு சிங்கள அரசு விதித்திருக்கும் தடை!

பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை (76), தாயார் பார்வதி வேலுப்பிள்ளை ஆகியோர் வவுனியாவில் அரசு நடத்தும் அகதிகள் முகாமில் தனியாக தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை இதர உறவினர்களுடன் சேர அனுமதிப்பதில்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதைத் தெரிவித்த ராணுவத்தின் பத்திரிகைத் தொடர்பாளர் உதய நாணயக்கார, அவர்களுடைய பாதுகாப்பு கருதியே இப்படி தனியாக பிரித்து வைக்கப்படுகின்றனர் என்று கொழும்பில் தெரிவித்துள்ளார்.

அகதிகள் முகாமில் உள்ள முதியவர்கள் முதுமையாலும் பல்வேறு வியாதிகளாலும் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு உதவிகள் செய்யும் அளவுக்கு முகாம்களில் மருத்துவ வசதிகள் இல்லை. எனவே அவர்களை அவரவர் மகன், மகள், இதர உறவினர்களுடன் சேர்ந்து தங்க அனுமதிப்பது என்று அரசு முடிவு செய்திருக்கிறது.

ஆனால் பிரபாகரனின் பெற்றோர் மட்டும் பிற உறவினர்களுடன் சேர முடியாமல் தனித்து வைத்தே பராமரிக்கப்படுவர் என்று தெரிகிறது.


http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=9233

♥ இந்திய ஊடகங்களின் ‘நாடக நடுநிலைமை’: ‘குமுதம்’ சாடல் ♥

ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்திய ஊடகங்களின் 'நாடக நடுநிலைமை': 'குமுதம்' சாடல்


kumudam

ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்தியாவில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் 'நாடக நடுநிலைமை'யை கடைப்பிடித்து வருவதாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' வார இதழ் சாடியுள்ளது.
இது தொடர்பாக 'குமுதம்' வார இதழில் வெளிவந்த அரசு கேள்வி - பதில் வருமாறு:

சமீபத்தில் அரசு எரிச்சல்பட்டது எதற்கு?

ஈழப் பிரச்சினையில் ஆங்கில செய்திச் சானல்கள் காட்டிய அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்து. ராஜபக்சவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் செயற்பட்ட விதத்தில் அவர்களின் 'நாடக நடுநிலைமை' வெளிப்பட்டது. ஐம்பது ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கண்ணீர் கஷ்டங்களுக்கு, ஐம்பது நொடியில் தீர்வைச் சொல்லுங்கள் என்று வந்திருப்பவர்களிடம் கேட்கிறார் ஒரு அதிமேதாவிச் செய்தியாளர்.

சென்னையில் இருக்கும் பெண் நிருபரிடம் 'பிரபாகரன் கொல்லப்பட்டது பற்றி தமிழ்மக்கள் என்ன நினைக்கிறார்கள்?' என்று டெல்லியிலிருந்து கேட்க, அந்த சென்னை நிருபி, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் இரண்டு இளைஞர்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார். இருவருமே 'நல்லது' என்கிறார்கள். உடனே காமிரா பக்கம் திரும்பி, பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள் என்கிறார். அந்த இரண்டு இளைஞர்கள்தாம் தமிழ் மக்களாம். அபத்தம். பொதுவாகவே வடக்கத்திய சானல்களுக்கு தமிழ் மக்கள் என்றால் இளக்காரம்தான்.

இந்த முறை அது அதி ஆவேசமாக வெளிப்பட்டது. அதட்டும் அர்னாப், எட்டு ஊருக்கு கேட்கும் குரலில் பேசும் ராஜ்தீப், மற்றவர்களை பேசவே விடாத பர்க்கா, ஆங்கிலத்தைத் தவிர்த்து பொது அறிவை விருத்தி செய்து கொள்ளாத நொடிக்கு நூறு வார்த்தை பேசும் நிருபிகள்… இவர்கள் ராஜபக்ச நாட்டில் தமிழர்களாகப் பிறக்கட்டும்.

http://www.meenagam.org/?p=4298


♥ அகதிகள் ஈழம் திரும்பலாம்-தமிழ போலீஸ் ♥

இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளின் விபரங்களை சேகரிக்கும் தமிழக பொலிஸார்


இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவிக்கும் அகதிகளின் விபரங்களைச் சேகரிக்கும் பணியில் தமிழகப் பொலிஸார் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட போரினால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து அகதிகளாக வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கையரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இங்கு இலங்கை அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகின்றது. இதனை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதிப்படுத்தியிருந்தார்.

இதன் ஒரு கட்டமாகவே தற்போது இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பும் அகதிகள் தொடர்பான விபரங்களைப் பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.

தமது உயிர், உடமைகளுக்கு பாதுகாப்பும் உத்தரவாதமும் இருக்கும் நிலையில் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல தாம் விரும்புவதாக அகதிகள் கூறியதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

http://tamilwin.com/view.php?2a26QVZ4b32j9Eg04dcuWnZdb0eD7G024d3GYpD3e0dBZLuwce03g2hP3cc4Vj06ae

♥ "என்னாங்கடா இந்தியா ?" காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய தன்மானத் தமிழன் : தமிழருவி மணியன் ♥

"ஈழத் தமிழர் விவகாரத்தில் டென்மார்கிற்கு இருக்கின்ற அக்கறையில் சிறிது கூட இந்தியாவுக்கு இல்லை": தமிழருவி மணியன்




"ஈழத் தமிழர் விவகாரத்தில் டென்மார்கிற்கு இருக்கின்ற அக்கறையில் சிறிது கூட இந்தியாவுக்கு இல்லை" என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' பிரபல வார இதழிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 

"ஈழத் தமிழர்களுக்கு எதிரான வேலையை 1948 ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் ஆரம்பித்துவிட்டது. அப்போது அங்கு தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்ட்டபோது, 'இலங்கை உள்நாட்டு பிரச்னையில் இந்தியா தலையிடாது' என்று நேரு ஒதுங்கிக் கொண்டார்.

சிறிமாவோவின் ஆட்சியில் தமிழர்கள் இன்னல்பட்டபோது அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோவுடன் ஒப்பந்தம் செய்த லால்பகதூர் சாஸ்திரி இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாக வழி செய்தார்.

ஈழத் தமிழர்களுக்காக இந்திரா காந்தி அக்கறை காட்டியதும், ராஜீவ் காந்தி நடவடிக்கை எடுக்க முனைந்ததும் மறுக்கமுடியாத உண்மைகள். இந்திரா காந்தி ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக புலிகளை ஆதரித்தது உண்மை. ராஜீவ் காந்தி புலிகளை வற்புறுத்தி ஒரு ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனவுடன் உருவாக்கினார். அந்த ஒப்பந்தம் இலங்கை அரசிற்கும் ஈழத் தமிழருக்கும் இடையில்தான் நடந்து இருக்கவேண்டும். அதிலேயும் தவறு.

போனவையெல்லாம் போகட்டும். கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, ஐந்து மாதங்கள் தமிழ் இனத்தையே முற்றாக  ஒழிப்பது என ராஜபக்ச அரசு தன் இராணுவத்தைக் கொண்டு ஒரு ஈவு இரக்கமற்ற போரை நடத்தியபோது மன்மோகன் சிங்கின் இந்திய அரசு அதற்குத் துணை நின்றது. இது எந்த வகையில் நியாயம்?

விடுதலைப் புலிகளுக்காகவோ, பிரபாகரனுக்காகவோ இந்திய அரசு போராடியிருக்க வேண்டியதில்லை. ஆனால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு அனைத்துலக போர் விதிகளும் மீறப்பட்டு, அரக்கத்தனமாக ஈழத் தமிழர்களை முற்றாக அழிக்க ராஜபக்ச முனைந்தபோது சோனியா காந்தியோ மன்மோகன் சிங்கோ ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசவில்லை. ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு போரை நிறுத்த வழி செய்யவில்லை.

ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள உகாண்டாவில் வணிகம் செய்யச் சென்ற குஜராத்திகளுக்கு எதிராக வன்முறை நடந்த அடுத்த கணமே இந்திய அரசு துடித்தது. பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிசில் வாழும் சீக்கியர்கள் தலைப்பாகைகள் அணியக் கூடாது என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, பிரான்ஸ் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் அந்த ஆணையை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.

இன்று வியன்னாவில் சீக்கியர் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக செய்தி வந்து சேர்ந்த அந்தக் கணமே பஞ்சாப் எரியத் தொடங்கியது. ஜலந்தர், சண்டிகர், லூதியானா போன்ற நகரங்கள் போராட்டக் களமாக மாறின. உடனே பிரதமர் மன்மோகன் சிங் அமைதி காக்க வேண்டுமென்று சீக்கியர்களுக்கு வேண்டுகோள் கொடுக்கிறார்.

புதிதாக வெளிவிவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற எஸ்.எம்.கிருஷ்ணா அவசர அவசரமாக ஒஸ்திரியாவிலிருக்கும் இந்தியத் தூதரகத்தோடு தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை நடத்துகிறார்.

வியன்னாவில் ஒரு உயிர் பறிக்கப்பட்டது. 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். அதற்கே மத்திய அரசு துடிதுடிக்கிறது.

ஆனால் தமிழகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இலங்கைத் தீவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். உறுப்பு இழந்தார்கள். உறவு இழந்தார்கள். ஈழப் பகுதியே மயானம் ஆகிவிட்டது. எங்கும்  தமிழர்களின் பிணக்குவியல். திசையெல்லாம் தமிழர்களின் மரண ஓலம்.

ஐக்கிய நாடுகளுடைய செயலாளர் பான் கீ மூன் நேரில் சென்று இலங்கை நிலவரங்களைக் கண்டு நெஞ்சம் துடித்தார். இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் உணவு, தண்ணீர், மருந்து எதுவும் இன்றி மரணத்தோடு போராடுகிற நிலையையும், வன்னிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதையும் கருத்தில் கொண்டு இலங்கை அரசு போர் குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா. சபையில் மனித உரிமை அமைப்பின் சிறப்பு விவாதத்தில் கொண்டு வர வேண்டுமென்று பிரித்தானியாவும், டென்மார்க்கும் செயல்பட்டன. இந்த சிறப்பு விவாதத்தைத் தடுப்பதற்காக சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும், கியூபாவும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக நிற்கிறது இந்தியா. என்ன அநியாயம்?

நமது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காமல், ராஜபக்ச அரசுக்குத் துதி பாடுகிறது காங்கிரஸ் அரசு. மனித உரிமை சபையில் சிறப்பு விவாதம் நடக்க வேண்டுமென்றால் 16 நாடுகளின் ஆதரவு தேவை. இந்த ஆதரவைத் திரட்டுவதற்கு சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்கிற்கும் மனசாட்சி ஒன்று இருந்தால் காங்கிரஸ்காரர்களுக்கு தமிழ் இனத்தின் மீது பற்றும் பாசமும் இருந்திருந்தால் இந்த ஆதரவை இந்தியா முன்னின்று திரட்டியிருக்கவேண்டும்.

ஆனால், எங்கேயோ இருக்கும் டென்மார்க் தன் சொந்த முயற்சியால் பிற நாடுகளின் ஆதரவைத் திரட்டி சிறப்பு விவாதம் நடப்பதற்கு வழிவகுத்து இருக்கிறது. இதைத் தடுக்க இந்தியா எல்லா வகையிலும் பாகிஸ்தானோடு சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகிறது.

பெற்ற தாயாக நினைத்து காங்கிரஸை தமிழர்கள் நேசிக்கின்றனர். ஆனால் மாற்றான் தாயாக தமிழர்களை காங்கிரஸ் புறக்கணித்து வருகிறது. தமிழக மக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்'' என்று ஆவேசமாய் தெரிவித்தார் தமிழருவி மணியன்.

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3569:q---------q--&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54

♥ மாறுமா தமிழரின் தலைவிதி?-- ஆனந்த விகடன் கட்டுரை ♥

மாறுமா தமிழரின் தலைவிதி?-- விகடன்






விதியென்று சொல்வதா, சர்வதேச சமூகத்தின் சதி என்று சொல்வதா..? அனைவரும் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஐ.நா. மனித உரிமை கவுன் சிலின் சிறப்புக் கூட்டம் தமிழர்களுக்கு எந்த நீதியையும் வழங்காமல் தோல்வியில் முடிந்து விட்டது!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகள் பற்றி விவாதிப் பதற்குத்தான் அந்த சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார்கள். ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட பதினேழு நாடுகள்

இதற்காகக் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால், அவர்களின் முயற்சி இப்போது இலங்கையின் சூழ்ச்சியாலும், அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு இன்மை யாலும் 'வெற்றிகரமாக'த் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்காக ஐரோப்பிய நாடுகள் முயற்சி எடுத்தபோதே, அதைத் தோற்கடிக்க இந்தியா களமிறங்கிவிட்டது. அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த தூதர்களின் கூட்டத்தை மே 15-ம் தேதி கூட்டினார்கள். அதில் இந்தியா, பாகிஸ்தான்,

எகிப்து, கியூபா ஆகிய நாடுகளின் தூதர்களைக்கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது. ஜூன் மாதம் நடக்கவிருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் வரைக்கும் இந்தக் குழு இலங்கைக்கு ஆதர வான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்று முடிவுசெய்யப்பட்டது. 'ஐரோப்பிய யூனியன் நாடுகள் சில, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்காக செய்துவந்த முயற்சிகளை முறியடித்து, அதற்கு மாற்றாக சில யோசனைகளை முன்வைப்பது' என்பதே இக்குழுவின் நோக்கமென்றும் அறிவிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் கடைசிக் கட்டப் படுகொலைகள் நடத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகத்தான் இந்தக் குழு அமைக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கதாகும். ஆனால், இந்த முயற்சிகளையும் மீறி, சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுவிடும் என்று தெரிந்த தால்தான், இலங்கை அரசு வன்னியில் அந்த இனப் படுகொலையை அவசர அவசரமாக நடத்தியிருக்கிறது போலும். ஐரோப்பிய நாடுகள் தலையிட்டு தமிழர்களைக் காப்பாற்றிவிடுமோ என்ற அச்சம், இலங்கை அரசுக்கும் அதன் கூட்டாளி நாடுகளுக்கும் வந்திருக்கக்கூடும். முள்ளிவாய்க்கால் பகுதியில் உதவி கேட்டுக் கதறிக்கொண்டிருந்த தமிழர்களுக்கு ஒரு உதவியும் கிடைத்துவிடாமல் இலங்கையும் அதன் கூட்டாளி நாடுகளும் பார்த்துக்கொண்டன. அதேபோலத்தான் இப்போதும் உயிர் பிழைத்துள்ள தமிழர்களுக்கு உதவி கிடைக்காமல் செய்திருக்கிறார்கள்.

http://cache.daylife.com/imageserve/03JAdYH4IZda5/610x.jpg

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் தலைவராக இருக்கும் மார்டின் உகோமெய்பி அந்த சிறப்புக் கூட்டத்தின் தொடக்க உரையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைத் தெளிவாகவே சுட்டிக்காட்டியிருந்தார். அதைவிடவும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் ஹை கமிஷனராக இருக்கும் திருமதி நவநீதம் பிள்ளையின் அறிக்கை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சற்றே நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

'சிவிலியன்கள் மீது கனரக ஆயூதங்களைப் பயன்படுத்தி இலங்கை அரசு தாக்குதல் நடத்தி யதாகவும், மருத்துவமனைகளைப் பலமுறை குண்டு வீசித் தாக்கியதாகவும், சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தளபதிகளை வஞ்சகமாகக் கொலை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவை போரின் நியதிகளை மீறிய செயல்களாகும்' என்று விமர்சித்த நவநீதம் பிள்ளை, 'தமிழர்கள் சிலருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்போவதாக இலங்கை அரசு கூறியிருக்கிறது. அதனை வைத்து தன்னைக் கருணையுள்ள அரசாகக் காட்ட முயல்கிறது. போர்க்காலக் குற்றங்களைச் செய்து இனப்படுகொலையில் ஈடுபட்ட நபர்களைத் தப்பிக்கச் செய்துவிடலாம் எனவும் இலங்கை அரசு திட்டமிடுகிறது' என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மனித உரிமை கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நாடுகளின் சார்பில் சுவிட்சர் லாந்தால் முன்மொழியப்பட்ட வரைவுத் தீர்மானத்தைப் பார்த்தபோதே, அந்தக் கூட்டத்தின் மீதான நம்பிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. இலங்கை அரசின் போர்க்காலக் குற்றங்களைப் புலனாய்வு செய்ய சுயேச் சையான சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, இலங்கை அரசாங்கத்திடமே அந்தப் பொறுப்பைக் கையளிப்பதாக அந்தத் தீர்மானம் அமைந்திருந்தது-

'மனித உரிமைகளும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களும் போர்க்காலத்தில் மீறப்பட்டிருக்கின்றன. அது பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சிவிலியன்கள் மீது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு கவலையளிப்பதாக உள்ளது' என்று அந்த வரைவுத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்கள். 'பிணைக் கைதிகளாக மக்களைப் பிடித்து வைப்பது, சித்ரவதை செய்வது, சட்ட விரோதமான கொலைகள் ஆகியவற்றைப் பற்றி இலங்கை அரசாங்கமே விசாரித்து நீதிவழங்கவேண்டும்' என்றொரு தீர்மானம் அதில் இடம் பெற்றிருந்தது. அந்த வரைவுத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த பதினாறு விஷயங்கள் மட்டும்தான் இலங்கை அரசை சற்று விமர்சிப்பதாக இருந்தது. ஆனால், இதுவும்கூட வாக்கெடுப்பில் தோற்கடிக்கப் பட்டதுதான் வேதனை.

விவாதம் முடிந்தபிறகு, சுவிட்சர்லாந்தால் முன்மொழியப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக பதினேழு வாக்குகளும், எதிராக இருபத்திரெண்டு வாக்குகளும் பதிவாயின. எட்டு நாடுகள் நடுநிலை வகிப்பதாக அறிவித்தன. இந்தத் தீர்மானம் தோற்கடிக்கப் பட்டதைவிடவும் வேதனையான விஷயம், இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்ற தென்பதுதான். இலங்கை அரசின் தீர்மானத்துக்கு ஆதரவாக இருபத்தொன்பது நாடுகளும் எதிராக பன்னி ரெண்டு நாடுகளும் வாக்களித்துள்ளன. ஆறு நாடுகள் நடுநிலை வகித்தன.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தில் இலங்கை அரசு அடைந்துள்ள வெற்றி, முழுக்க முழுக்க இந்தியாவால் கிடைத்த வெற்றியாகும். தமிழர் களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழித்தொழிப்புப் போருக்கு உதவியது மட்டுமல்லாது, அதன்பிறகும் சர்வதேச சமூகத்தின் விமர்சனங்களிலிருந்து இலங் கையை காப்பாற்றுவதற்கும் இந்தியாதான் உதவி செய்துகொண்டிருக்கிறது. இது இங்குள்ள தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயம்.

இலங்கை அரசைப் பாதுகாப்பதற்காக இந்தியா தன்னுடைய தலைவலி நாடாகக் கருதிவரும் பாகிஸ் தானோடு தன்னையுமறியாமல் கூட்டுச் சேர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பொருளாதாரத் துறையிலும் சர்வதேச அரங்கிலும் இந்தியாவுக்கு போட்டியாகக் கருதப்படும் சீனாவோடும் கைகோத்திருக்கிறது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் நமக்குப் பல கேள்விகளை எழுப்புகின்றன. இலங்கையின் இனவாத அரசு இதுவரை நடத்திவந்த போரில் இந்தியாவும் கூட்டாளியாக இருந்தது உண்மைதானா? இலங்கையின் இன அழித்தொழிப்புக் கொள்கைக்கு இந்தியா இந்த அளவுக்கு ஆதரவளிப்பது ஏன்? இவையெல்லாம் ராஜதந்திர நடவடிக்கைகளா, அல்லது வெளியுறவுத் துறையில் உள்ள ஒரு சிலரின் தமிழர் விரோத அணுகுமுறையால் விளைந்த கொடுமைகளா? இதற்கெல்லாம் இந்திய அரசுதான் விளக்கமளிக்க வேண்டும்.

இலங்கையில் நடந்து முடிந்துள்ள போரும், தற்போது தொடர்ந்துகொண்டு இருக்கும் அவலங்களும் நமக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகின்றன. ஐ.நா. சபை, சர்வதேச சமூகம் போன்றவற்றின்மீது நம்பிக்கை வைப்பதில் பயனில்லை என்பதே அது. ஐ.நா. சபை என்பது இளிச்சவாய் நாடுகளை மிரட்டுவதற்காக வல்லரசுகளால் பயன்படுத்தப்படும் ஒரு உபகரணம், அவ்வளவுதான். ஈரானை மிரட்ட வேண்டுமா? வடகொரியாவை முடக்க வேண்டுமா? அதற்குத்தான் ஐ.நா. சபை பயன்படும். அமெரிக்கா ஏதாவது ஒரு நாட்டின்மீது படையெடுத்துச் செல்லவேண்டுமென்றால், அதற்கு ஒப்புதல் வழங்க ஐ.நா. தேவைப்படும். மற்றபடி, இத்தகைய சர்வதேச அமைப்புகளால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இதற்கு முன்பும் பலமுறை இப்படியான சிறப்புக் கூட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் பத்தாவது சிறப்புக் கூட்டம் நடந்தது. அதற்கு முந்தைய ஆண்டு நான்கு சிறப்புக் கூட்டங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீன பிரச் னையை இப்படிப் பலமுறை விவாதித்திருக்கிறார்கள். ஒன்பதாவது சிறப்புக் கூட்டத்தில் பாலஸ்தீன பிரச்னை விவாதிக்கப்பட்டபோது, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, பாலஸ்தீனத்தில் தாக்குதல் நிறுத்தப்பட்டதே தவிர, பிரச்னை தீரவில்லை.

இன்றைய சர்வதேசச் சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. சபையோ அல்லது வேறெந்த சர்வதேச அமைப்புகளோ எந்த நீதியையும் வழங்கிவிடமுடியாது என்பதே உண்மை. இத்தகைய அமைப்புகள் யாவும் அரசாங்கங்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள உருவாக்கி வைத்திருக்கும் ஏற்பாடுகள்தான்.

எனவே, ஈழத் தமிழர்கள் தற்போதைய இக்கட்டான சூழலிலிருந்து மீண்டு வருவது அவர்களுடைய சுயேச்சையான முயற்சிகளின் மூலம்தான் சாத்தியப்படும் போலிருக்கிறது. உலக அளவில் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள மக்கள் இயக்கங்களோடு ஒன்றிணைந்து தம்முடைய நியாயங் களுக்கு ஆதரவைத் திரட்ட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில், சர்வதேச நாடுகள் பலவற்றில் ஈழத்தமிழர்கள் எழுச்சியோடு போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், அந்தப் போராட்டங்களுக்கு அந்தந்த நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகளோ மக்களோ பெரிய அளவில் ஆதரவை வழங்கிவிடவில்லை. ஈழத் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் அரசாங்கங்களை அணுகி சிறிய அளவில் லாபி செய்ததும் உண்மை. என்றாலும், அதனால் போரை நிறுத்தவோ தமிழர்கள் மீதான இனப் படுகொலையைத் தடுக்கவோ முடியவில்லை.

இந்த யதார்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனவே, இனியாவது மக்கள் இயக்கங்களோடு ஒருங்கிணை வதற்கான வழிகளை அவர்கள் தேடவேண்டும். ஈழப் பிரச்னையைக் கையிலெடுத்துப் போராடிக்கொண்டு இருக்கும் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாதவரை, இவர்களின் குரல்களுக்கு இந்திய அரசு மதிப்பளிக்காது. எனவே, ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை முன்வைத்தாவது இங்குள்ள அரசியல் கட்சிகள் யாவும் ஒருங்கிணைய வேண்டியது அவசியம்.

தற்போது இலங்கையில் அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் யாவரும் அவர்களுடைய சொந்த வீடுகளுக்குத் திரும்புகிற தைரியம் வரவேண்டும். அதற்கு இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து இலங்கை அரசு கொடுக்கும் வெற்று வாக்குறுதிகளை இந்தியாவும் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருப்பது தமிழர்களை ஏமாற்றுவதாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல், தமிழர்களுக்கு அங்கே சமமான உரிமைகள் கிடைக்க, ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.

தற்போது வெற்றி மிதப்பில் இருக்கும் ராஜபக்ஷே இதைத் தானாக செய்துவிடமாட்டார். இந்தியாதான் அவரை செயல்படவைக்க வேண்டும். ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் கூறப்பட்டதுபோல் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களை ஒருங் கிணைத்து தமிழர் தாயகமாக அறிவித்து அதை சுய அதி காரம் கொண்ட அமைப்பாக உருவாக்கினால் மட்டுமே, தமிழர்களுக்கு ஓரளவாவது நியாயம் கிடைக்கும்.

புதிய ஆட்சிப் பொறுப்பேற்று நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து போகிற உறுப்பினர்கள் யாவரும் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஒரே குரலில் பேசினால் நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும். தேர்தல் சமயத்தில் தி.மு.க. கூட்டணியும் அ.தி.மு.க. கூட்டணியும் இந்த விவகாரத்தில் ஒரே குரலில்தான் பேசின. அது தேர்தலுக்காக மட்டுமே பேசப்பட்டதல்ல என்று நிருபிக்க, அக்கட்சிகளுக்கு இப்போது இது ஒரு வாய்ப்பு!

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3568:2009-05-30-10-32-17&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54

♥ "இறுதி கட்ட போரில் 20 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொலை" - மாலைமலர் செய்தி ♥

இலங்கை இறுதி கட்ட போரில் 20 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொலை: இங்கிலாந்து பத்திரிகை தகவல்

30_04_09_vanni_02_80355_445.jpg

லண்டன், மே. 29-
 
இலங்கையில் இறுதி கட்ட போரில் மட்டும் 50 ஆயிரம் தமிழர்களுக்கு மேல் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனால் இலங்கை அரசு இதுபற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை. ஐ.நா. சபை சேகரித்த தகவல்படி 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் "தி டைம்ஸ்" என்ற பத்திரிகை தங்களுக்கு கிடைத்த பல்வேறு தகவல்களை ஆய்வு செய்தும், போர் நடந்த இடங்களை செயற்கை கோள் மூலம் எடுத்த படங்களின் அடிப்படையிலும் ஆய்வு நடத்தி ஒரு தகவலை வெளியிட்டு உள்ளது.
 
அதில் இறுதிக்கட்ட போரில் மட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
 
ஐ.நா.சபை சொல்வதை விட 3 மடங்கு அளவு அதிகமாக உள்ளதாகவும் அந்த பத்திரிகை கூறி உள்ளது. இந்த படுகொலையை போஸ்னியாவில் 1995-ம் ஆண்டு ஒரே நேரத்தில் 8 ஆயிரம் பேர் கொல்லப்பட்டது, சூடான் நாட்டில் 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டது போன்ற படுகொலைகளோடு ஒப்பிட்டு உள்ளது.
 
உலகில் நடந்த மோசமான படுகொலைகளில் இலங்கை படுகொலையும் ஒன்று என்று அந்த பத்திரிகை வர்ணித்து உள்ளது.

http://www.maalaimalar.com/2009/05/29144356/CNI0520290509.html

♥ "இந்த பையன் இப்போ உயிரோடு இருக்கிறானா?" - மாலைமலர் செய்தி ♥

தற்கொலை தாக்குதல் நடத்த விடுதலைப்புலியாக மாறிய சிறுவன் பெற்றோர் பாசத்துக்காக ஏங்குகிறான்



கொழும்பு, மே. 29-
 
இலங்கையில் தலைநகர் கொழும்பில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் ஈழத்தமிழ் சிறுவர் -சிறுமியர்களுக்கான மறுவாழ்வு முகாம் உள்ளது.
 
அங்கு 17 முதல் 25 வயதுக்குட்பட்ட 54 தமிழ் இளைஞர்களும், 40 இளம் பெண்களும் டெய்லரிங், வெல்டிங், கார்பெண்டரி, மெக்கானிக் உள்பட பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.
 
அந்த முகாமில் உள்ள சிறுவர்களில் கணேசலிங்கம் தயாளன் என்ற சிறுவன் மற்ற சிறுவர்- சிறுமியரிடம் இருந்து வித்தியாசப்பட்டு காணப்படுகிறான். விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படை பிரிவான கரும்புலிகள் அமைப்பில் இவன் உறுப்பினராக இருந்துள்ளான். புலிகள் அளித்த பயிற்சி பற்றி அவன் கூறியதாவது:-
 
வவுனியா அருகில் உள்ள பண்டரிக்குளம் என் சொந்த ஊர். சிங்களராணுவ தாக்குதலில் என் தாய், தந்தை இருவரும் செத்துப்போனார்கள். ஆதரவற்ற என்னை ஒரு பாட்டி வளர்த்தார்.
 
10 வயதில் வன்னியில் உள்ள செஞ்சோலை ஆதரவற்றோர் இல்லத்தில் என்னை சேர்த்தனர். அங்கு படித்து வந்தபோது 12 வயதில் விடுதலைப்புலிகளால் அழைக்கப்பட்டேன். மன்னாரில் உளவு பார்க்கும் பணிதான் எனக்கு கொடுக்கப்பட்ட முதல் வேலை.
 
பிறகு ஆயுதங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் வேலை பார்த்தேன். 2007-ம் ஆண்டு நொச்சிக் கிடாவில் சிங்கள ராணுவத்துடன் நடந்த சண்டையில் ஈடுபடுத்தப்பட்டேன். என் கால், கைகளில் காயம் அடைந்தேன்.
 
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டதால் தாய்ப்பாசம் பற்றி எனக்குத் தெரியாமலே போய்விட்டது. இந்த நிலையில் அச்சுதன் மாஸ்டர் கொடுத்த பயிற்சியில் நான் ஈர்க்கப்பட்டேன். அவர் அறிவுரையின் பேரில் கரும்புலிகள் படையில் என்னை இணைத்துக்கொண்டேன்.
 
தற்கொலை தாக்குதல் நடந்த மனவலிமை வேண்டும். அதற்காக யோகா, தியானம் பயிற்சி கொடுத்தனர். கரும்புலிகள் படையில் சேர்ந்ததை பெருமையாக கருதினேன். ஈழத்துக்காக தற்கொலை தாக்குதல் நடத்த தயாரானேன்.
 
கரும்புலிகளாக இருப்பவர்களுக்கும், உளவுப்படையில் இருப்பவர்களுக்கும் "ஓ" தரப் பரீட்சை வைப்பார்கள். மொத்தம் 10 பாடம் கொண்ட அந்த தேர்வில் 6 பாடங்களில் நான் "ஏ" கிரேடு பெற்றேன். 2008 ஜூன் மாதம் என் பயிற்சி முடிந்தது.
 
பிறகு தற்கொலை தாக்குதலுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வரும்வரை காத்திருக்கும்படி கூறினார்கள். கிரிக்கெட் விளையாட்டில் எனக்கு நல்ல ஆர்வம் உண்டு. பள்ளி அணியில், இன்னொரு மாணவன் பெயரில் வெளியிடங்களுக்கு சென்று விளையாடினேன்.
 
என்னைப் பற்றி யாரோ சிங்கள போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டனர். கடந்த நவம்பர் மாதம் நான் பள்ளி நண்பர்களுடன் வெளியூருக்கு கிரிக்கெட் விளையாட சென்றபோது உளவுத்துறையினர் பிடித்துவிட்டனர்.
 
என் கழுத்தில் இருந்த சயனைடு குப்பியும், மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியும் காட்டிக் கொடுத்து விட்டது. கொழும்பில் சில மாதம் வைத்திருந்த என்னை தற்போது இந்த முகாமுக்கு அனுப்பி உள்ளார்கள்.
 
இந்த முகாம்களில் ஓராண்டு இருக்க வேண்டும் என் மனம் மாறிவிட்டது தொடர்ந்து மேல்படிப்பு படிக்க விரும்புகிறேன் என்ஜினீயர் ஆக ஆசைப்படுகிறேன்.
 
இந்த முகாமில் உள்ள எல்லாரும் பயிற்சி முடிந்ததும் அவரவர் பெற்றோரிடம் திரும்பிச் சென்று விடுவார்கள். எனக்கு என்று யாரும் இல்லை. எனக்கு யார் அரவணைப்பு கொடுப்பார்கள்?
 
இவ்வாறு கணேசலிங்கம் கூறினார்.

http://www.maalaimalar.com/2009/05/29152733/CNI0370290509.html

♥ அழகர்புரமே ...! தினமணி கேலிப்படம் ♥









http://epaper.dinamani.com/newsview.aspx?parentid=11167&boxid=2711734&archive=false



♥ "பிரபாகரன் தலைமையில் மீண்டும் போர் வெடிக்கும்"; தொல் திருமாவளவன் பேச்சு- மாலைமலர் செய்தி ♥

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: ஈழத்தில் பிரபாகரன் தலைமையில் மீண்டும் போர் வெடிக்கும்; தொல் திருமாவளவன் பேச்சு

சென்னை, மே.29-

ஈழத்தில் வீர மரணம் அடைந்த விடுதலைப்புலிகளுக்கும், களப்பலியான தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.
 
ஊர்வலத்திற்கு விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் தொல் திருமாவளவன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் ராஜபக்ஷே உருவ பொம்மை தூக்கிலிட்டபடி கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலம் அண்ணாசாலை வழியாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை சென்றடைந்தது.
 
அங்கு ஈழத்தில் வீரமரணம் அடைந்த விடுதலைப்புலிகளுக்கும் களப்பலியான தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவதற்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் பெரிய மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் 50 ஆயிரம் தமிழர்கள் இறந்ததற்காக 50 மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்தது. மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
 
தொல் திருமாவளவன், வீரவணக்கம் செலுத்தும் வகையில் பெரிய மலர்வளையம் வைத்து, பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
 
வீரவணக்கம் வீரவணக்கம் வீரமரணம் அடைந்த விடுதலைப்புலிகளுக்கும், களப்பலியான ஈழத்தமிழர்களுக்கும் வீரவணக்கம். சாகவில்லை சாகவில்லை, பிரபாகரன் சாகவில்லை என்று தொல்திருமாவளவன் முழக்கமிட்டார். அதைத்தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று முழக்கம் செய்தனர்.
 
அப்போது தொல்திருமாவளவன் பேசியதாவது:-
 
ஒரே நாளில் 50 ஆயிரம் பேர்களை கொன்றுவிட்டு உலக மக்கள் பார்வையை மறைக்க பிரபாகரனை சுட்டுக்கொன்றுவிட்டதாக சிங்கள இனவெறியன் கோழைப்பயல் ராஜபக்ஷே அண்டப்புழுகினான். கடந்த ஜனவரி 2-ந்தேதி கிளிநொச்சி பகுதியை ராணுவம் கைப்பற்றியது என்ற செய்தி அறிந்து மிகவும் துடித்துப்போனேன்.
 
அன்று முதல் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினோம். தமிழக தலைவர்களை சந்தித்துபேசினேன். ஆனால் அதில் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. ஜனவரி 15-ந்தேதி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினேன். இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்வதாக தலைவர்கள் கூறியதால் உண்ணாவிரதத்தை கைவிட்டேன்.
 
நான் உண்ணாவிரதம் இருந்ததை பார்த்து தமிழ் இன உணர்வால் பொங்கிய முத்துக்குமார் தீக்குளித்து உயிர் துறந்தார்.
 
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ ஆகியோரிடம் தனி அணி அமைப்போம் என்று மன்றாடினேன். ஆனால் டாக்டர் ராமதாஸ், வைகோ ஆகியோர் அ.தி.மு.க. அணியில் சேர்வதில் தான் குறிக்கோளாக இருந்தனர். அ.தி.மு.க. தேர்தலுக்கு முன்பு ஈழத்தை ஆதரிக்கவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தலுக்கு பிறகு ஈழத்தமிழர்கள் பற்றி பேசவே இல்லை.
 
எங்களை கூட்டணியில் சேர்க்க கூடாது என்று காங்கிரஸ் கூறியது. ஆனால் எங்கள் கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அதன்பிறகுதான் நாங்கள் தி.மு.க.கூட்டணியில் இடம் பெற்றோம். தி.மு.க.வோடு கூட்டு சேர்ந்ததில் எந்த குற்றமும் இல்லை. சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்றோம். அது ஓடுக்கப்பட்ட மக்கள்வாழவும், தமிழர்கள் தலை நிமிரவும் பாடுபடுவேன். ஈழத்தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
 
தேர்தல் பிரசாரத்திற்காக வந்த சோனியா காந்தியிடம் எப்படியாவது இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்யுங்கள் உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினேன். ஆனால் இலங்கையில் லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். கடைசி நிமிடம் வரை இந்திய அரசு நமது வேண்டுகோளை ஒருபொருட்டாக நினைக்கவில்லை. இலங்கைக்கு சீனா உதவுகிறது. தா.பாண்டியன் போன்றவர்கள் சீனா உதவுவது பற்றி பேசமாட்டார்.
 
நடேசன், பூலித்தேவன், சார்லஸ் அந்தோணி ஆகியோர் இறந்த பிறகுதான் எம்.கே.நாராயணன் இலங்கை சென்றார். அதற்கு முன் செல்ல எத்தனை முறை சொன்னோம் கேட்கவில்லை.
 
நாங்களும் புலிகள் தான். நாங்கள் பிரபாகரனின் தம்பிகள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தில் 4-வது கட்ட போர் முடிந்து விட்டது. 5-வது கட்ட போர் மீண்டும் பிரபாகரன் தலைமையில் வெடிக்கும்.
 
இவ்வாறு தொல் திருமாவளவன் பேசினார்.
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
 
ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு பேரவையில் சிங்கள அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
 
போர் மரபுகளை மீறி விடுதலைப்புலிகளின் முன்னணி தலைவர்களான நடேசன், பூலித்தேவன் கொல்லப்பட்டதற்கு சர்வதேச வல்லுனர்களை கொண்டு விசாரணை நடத்தவேண்டும்.
 
3 லட்சம் ஈழத்தமிழர்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தவும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யவேண்டும். ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். தமிழீழத்தை மீட்டுத்தர விடுதலைப்புலிகளின் முன்னணி தளபதிகளோடு பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்கிறோம்.
 
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் வன்னியரசு, ரவிக்குமார் எம்.எல்.ஏ., கலைக்கோட்டுதயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


http://www.maalaimalar.com/2009/05/29090456/chennai.html
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!