மக்கள் படமாக மாறியுள்ளது பேராண்மை’ இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பேச்சு
“முதலில் நான் மார்க்சியவாதி. மார்க்சியம் என்னை ஈர்த்தது.
மார்க்சியம் தோற்றுவிட்டதாக கூறுகிறார்கள். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு விஞ்ஞானம் எப்படி பொய்யாகும்? மார்க்சியம் என்பது விஞ்ஞானம். அது எப்படி தோற்கும்? ஒரு ஆங்கிலப்படம் பார்க்க தியேட்டருக்குச் சென்றேன். அந்த படத்தில் முதல் காட்சியே லெனின் சிலையை கீழே வீழ்த்துவது போலவும், அரிவாள் சுத்தியல் சின்னத்தை உடைப்பது போலவும் காட்டினார்கள். ஆரம்பமே சரியில்லை. அதனால் நான் உடனே எழுந்து வந்துவிட்டேன்” திண்டுக்கல்லில் ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், தமுஎகச ஆகிய அமைப்புகள் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் இந்தப் பேச்சால் அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது.
அவர் மேலும் தொடர்ந்தார். அதனால் தான் எனது படத்தில் கதாநாயகன் அரிவாளையும், சுத்தியலையும் ஏந்துவது போன்ற காட்சியை ஆரம்பத்தில் வைத்தேன். இது திணிக்கப்பட்டதாக பலர் கூறினர். இது திணிக்கப்பட்டது அல்ல. வலிந்து திணிக்கப்பட்டது. எனது கருத்தை படத்தில் திணிப்பதற்காகத்தானே நான் படத்தை இயக்குகிறேன். அந்தக் காட்சியை ஒரு நாள் முழுவதும் எடுத்தோம். ஒரு ஹீரோவிடம் அரிவாள், சுத்தியலைக் கொடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தமிழ் சினிமா ஹீரோக்கள் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்த காட்சி குறித்து ஜெயம் ரவியுடன் பல்வேறு விவாதங்களை நடத்தியிருக்கிறோம்.
அதுபோல எருமை மாட்டுக்கு பிரசவம் பார்க்கும் நிகழ்ச்சியில் அவர் கோவணம் கட்டிக் கொண்டு வரச்சொன்னவுடன் உடனே வந்து விட்டார். இந்த படக் காட்சியை 3 நாட்கள் எடுத்தோம். எனது 2வது படமான ‘ஈ’ படமும் வெற்றி பெற்றது. இந்த படம் தான் எனக்கு கடைசிப்படமாக இருக்கும் என்றிருந்தேன். ஆனால் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. எவ்வளவு நல்ல படமும் 130 பிரிண்ட்டுகள்தான் எடுப்பார்கள். ஆனால் பேராண்மை 220 பிரிண்ட்டுகள் எடுக்கப்பட்டு 220 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது மக்கள் படமாக மாறியுள்ளது என்பதைக் கேட்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் படம் எடுக்கும் போதே எனது கருத்துக்கு எந்தவித எதிர்ப்பும் காட்டக்கூடாது என்றுதான் தயாரிப்பாளரோடு ஒப்
பந்தம் போடுவேன். தற்போது ஆங்கிலத்திலும் எடுக்க உள்ளோம். ஆனால் அந்த தயாரிப்பாளர்கள் தீவிர வாதியை முஸ்லிமாகக் காட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை மாற்ற முடியாது என்று கூறிவிட்டேன்.
அரசியல் பொருளாதார வகுப்பு பற்றி குறிப்பிட்ட ஜனநாதன் ``பொதுவாக திரைப்படங்களில் கல்லூரிக் காட்சிகள் வரும். ஆனால் பாடம் நடத்துவதாக காட்சிகள் வராது. அப்படியே வந்தாலும் அந்த வகுப்பில் ஆசிரியரை கிண்டல் செய்யும் மாணவர்களைத் தான் காட்டுவார்கள். கல்லூரியைக் கட் அடித்துவிட்டு மாணவர்கள் திரைப்படம் பார்க்க வருகிறார்கள். அப்படி வரும் மாணவர்களுக்கு கல்லூரியில் வகுப்பு எடுப்
பது போன்ற காட்சி அமைந்தால் படத்தை யாரும் பார்க்கமாட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் நான் அந்த வகுப்பில் அரசியல் பொருளாதாரம் பற்றி படத்தின் ஹீரோ வகுப்பு எடுப்பது போன்ற காட்சி அமைத்தேன். அதை யாரும் பார்க்கமாட்டார்கள் என்று ஒரு சில தியேட்டர்களில் அந்த காட்சியை ஆப்ரேட்டர் எடுத்து விட்டார். ஆனால் மதுரையில் அந்த காட்சிக்கு கைதட்டல் கிடைத்தது. அதனையடுத்து மற்ற தியேட்டர்களில் அந்த காட்சியை ஒளிபரப்பினார்கள்” என்றவர்,
எனது படத்தின் தலைப்பு பேராண்மை என்று வைத்துள்ளேன். இந்த விழாவை மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டு நடத்துகின்றன. இந்தப் படம் ஒரு ஆணாதிக்க மனோபாவம் கொண்டது என்றெல்லாம் எதிர்ப்பு வரும் என்று நினைத்தேன். ஆனால் தலைவர்களின் பேச்சு என்னை உற்சாகப்படுத்தியது. இந்தப் படத்தின் வெற்றி மக்களின் வெற்றி. எனது படங்கள் எப்போதும் சமரசத்துடன் இருக்காது என்றார்.
http://theekkathir.in/index.asp
பிரபாகரனை காப்பாற்ற பல நாடுகள் முயற்சி செய்தன: இலங்கை அமைச்சர்
கொழும்பு, டிச.4- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற பல நாடுகள் முயற்சி செய்தன என்று இலங்கை விவசாய மேம்பாட்டுத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர்க் காலத்தில் இலங்கைக்கு வந்த வெளிநாடுகளின் பெரும்பாலான முக்கியப் பிரமுகர்கள் இலங்கையுடனான உறவை வலுப்படுத்த வரவில்லை என்றும், அவர்கள் பிரபாகரனை காப்பாற்றும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டனர் என்றும் அவர் கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், அவர்களின் திட்டம் வெற்றி பெறாத நிலையில் தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அதற்கான பிரதிநிதியாக சரத் பொன்சேகா செயல்படுகிறார் என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=164313&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=
நண்பர்கள் பேசிக் கொண்டார்கள்...
"நீ படகில் ஏறி கடலில் பயணம் செய்கிற போது திடீரென ஒரு புயல் வந்தால் என்ன செய்வாய்?"
"ஒரு நங்கூரத்தைக் கடலில் எறிவேன்."
இன்னொரு புயல் மறுபக்கம் வந்தால்?
இன்னொரு நங்கூரத்தைக் கடலில் எறிவேன்.
இன்னொரு புயல் எதிர்பாராமல் முன்பக்கம் வந்தால்,அப்போது என்ன செய்வாய்?
மற்றொரு நங்கூரத்தைக் கடலில் எறிவேன்
நிறுத்து! இத்தனை நங்கூரம் உனக்கு எங்கிருந்து கிடைக்கும்?
இத்தனை புயல்கள் உனக்கு எங்கிருந்து கிடைத்ததோ,அதே இடத்தில் இருந்து தான்!
மொபைல்களுக்கு 11 இலக்க எண்கள்
மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெருகப் பெருக அவர்களுக்கு எண்கள் ஒதுக்குவதில் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றன மொபைல் போன் சேவை நிறுவனங்கள்.
இப்பிரச்சனையைச் சமாளிக்க இதுவரை 10 இலக்க எண்களாக இருந்த மொபைல் எண்களை இனி 11 இலக்கத்துக்கு மாற்றப்போகிறார்களாம். இதுகுறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
இருப்பினும், இது தொடர்பாக எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் எவ்விதமான வழிகாட்டுதல்களும் வழங்கப்படவில்லை என்றும் தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டில், கடந்த அக்டோபர் வரை, புதிதாக 1.70 கோடி பேர் மொபைல் போன் இணைப்பு பெற்றுள்ளனர். மொத்தம் 48 கோடி பேரிடம் மொபைல் போன் இணைப்புகள் உள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' தெரிவித்துள்ளது.
பெயருக்கு முன்னாலே புரட்சின்னு போட்டுக்கிறானுவ… மானங்கெட்ட பயலுங்க… தங்கர் பாய்ச்சல்
இலங்கை அகதிகளுக்காக ஒரு படம் ஒரு நடிகனும் முன்வரவில்லை - தங்கர்
ஆவேசம்!
எல்லோருக்கும் வாயில் நாக்கு இருக்கும். ஆனால் தங்கர் பச்சானுக்கு
சவுக்கே நாக்காக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எப்போது யாரை நோக்கி
அது திரும்பும் என்றே தெரியாது.
சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த கார்த்திக் அனிதா படத்தின்
ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் பேசிய பேச்சு, படத்தின் ஆடியோ
நிகழ்வுச் செய்தியைக் கூட பின்னுக்குத் தள்ளிவிட்டது.
விழாவில் தங்கர் பேசியது:
"நானெல்லாம் நிஜமான கலைஞன் இல்லை. 36 வருடங்களாக என் தமிழ் மக்கள் அங்கே
கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. அவங்களை பற்றி ஒரு படத்தை எடுக்க
முடிஞ்சுதா? அவங்களோட வாழ்க்கையை எடுக்கணுங்கிறதுக்காக பல வருடங்கள்
போராடி ஒரு கதையை உருவாக்கினேன்.
இதுக்காக 17 ஆயிரம் இலங்கை அகதிகளைச் சந்திச்சிருக்கேன். ஆனால் அதில்
நடிக்க ஒரு நடிகனும் முன்வரவில்லை…"
"அந்தக் கதையை நான் சொல்லி, யார் யார் அந்த கதையிலே நடிக்க மாட்டேன்னு
சொன்னானோ, அத்தனை பேரும் நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரத மேடையிலே
உட்கார்ந்திருந்தான்.
இப்ப தனது பெயருக்கு முன்னாலே புரட்சின்னு போட்டுக்கிறானுவ. தளபதின்னு
போட்டுக்கிறானுவ… மானங்கெட்ட பயலுங்க… இவனுங்களுக்கு அதுக்கு தகுதியே
கிடையாது.
இப்ப இந்த மேடையில சொல்றேன்… இனிமே எவனும் புரட்சின்னோ, தளபதின்னோ பட்டப்
பெயர் போட்டுக்கக் கூடாது. நிஜமான புரட்சின்னா அது முத்துக்குமரன்
செஞ்சதுதான். அவனோட தியாகத்திற்கு முன்னால நானெல்லாம் வெட்கி தலை
குனிகிறேன்…
அதுக்காக எல்லாரும் தீக்குளிச்சி சாவணும்னு நான் சொல்லல… அவனை மாதிரி
உண்மையான உணர்வோட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கக் கத்துக்கங்க… என்றார்.
நங்கூரம் இணையத்திலிருந்து
http://www.nankooram.com/thankar-bachan
முத்தமிழ்வேந்தன்
சென்னை
http://nilavupattu.blogspot.com/2009/12/blog-post_03.html
பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் திருத்தப்பட்டு,விரிவாக்கம் செய்யப்பட்ட இரண்டாம் பதிப்பு 2010 பிப்ரவரியில் வெளியீடு!
திருச்சி வே.ஆனைமுத்து அவர்களால் பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு,01.07.1974 இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வெளியிடப்பெற்றது.அதன் படிகள் விற்றுத் தீர்ந்தன.பல ஆண்டுகளாக அதன் படிகள் விற்பனைக்குக் கிடைக்கவில்லை.உலகு தழுவிய தமிழர்கள் இந்த நூலின் மறுபதிப்பு எப்பொழுது வெளிவரும் என்று ஆர்வமுடன் வினவியவண்ணம் இருந்தனர்.அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தந்தை பெரியார் பல காலம் எழுதியும் பேசியும் வந்த செய்திகள் உரிய வகையில் தொகுக்கப்பட்டு 2010 பிப்பரவரியில்வெளியிடப்பட உள்ளன.முன் வெளியீட்டுத் திட்டத்தில் இந்த நூல்கள் வெளியிடப்படுவதால் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ள அரிய வாய்ப்பு. தெமி 1/ 8 அளவிலான,20 தொகுதிகளைக்கொண்ட(20 Volumes ) இப்பெரும் தொகுப்பு முன்வெளியீட்டுத் திட்டத்தில் மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்க உள்ளது.இத்தொகுப்பு உயரிய,அழகிய,தரமான பதிப்பாக அமைகிறது.100 பக்கங்கள் முதல் 675 பக்கங்கள் வரையிலான தொகுப்புகளாக மொத்தம் 9000 பக்கங்களைக் கொண்டுள்ளது.
பெயர்க்குறிப்பு அடைவு,சொற்குறிப்பு அடைவு, அருஞ்சொற்பொருள் அகராதி,இன்றியமையாத அடிக்குறிப்புகள் தரப்பெற்றுள்ளன.
நூலை வெளியிடுவோர் பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளையினர் ஆவர்.
20 தொகுதிகளைக்கொண்ட 9000 பக்கம் கொண்டு இந்த நூலின் விற்பனை விலை 5,800 உருவா ஆகும்.
ஆனால் முன்பதிவுவிலையில் 3500 உருவாவுக்குக் கிடைக்கும்.
முன்பதிவுத் தொகை செலுத்திப் பதிவு செய்துகொள்ள கடைசி நாள் 15.11.2009.
இரண்டு தவணைகளில் முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர் முதல் தவணையை (2000 உருவா) 15.11.2009 இலும்,இரண்டாம் தவணையை(1800 உருவா) 15.12.2009 இலும் செலுத்தவேண்டும்.
வங்கி வரைவோலையாகத் தொகையை அனுப்ப விரும்புவோர்(Bank Draft)
PERIYAR E.V.RAMASAMY-NAGAMMAI EDUCATIONAL AND RESEARCH TRUST என்று ஆங்கிலத்திலோ பெரியார் ஈ.வே,இராமசாமி -நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளை எனத் தமிழிலோ வரைவோலை எடுத்து,
திரு.வே.ஆனைமுத்து,தலைவர்
பெரியார்-நாகம்மை அறக்கட்டளை,
19,முருகப்பா தெரு,
சேப்பாக்கம்,சென்னை-600005,இந்தியா
பெரியார்-நாகம்மை அறக்கட்டளை,
19,முருகப்பா தெரு,
சேப்பாக்கம்,சென்னை-600005,இந்தியா
என்னும் முகவரிக்கு அனுப்பலாம்.
தொலைபேசி எண்: + 91 44 2852 2862 மின்னஞ்சல் முகவரி:
sinthaniyalan@yahoo.in
periyar_era@yahoo.in
இன்று மகாதீபமாம்! அதாவது மகா கிரிமினல் செயல்பாடு!
தீபம்!
இப்படி ஒரு கொடுமையா? பக்தி என்றால் அங்கு மனிதநேயத்துக்குக் கிஞ்சிற்றும் இடம் கிடையாதா?
ஆறறிவுடையவன் மனிதன் என்றால், அவன் எண்ணத்தில் இரக்கம் என்ற ஒரு பொருள் கசியவேண்டாமா?
தாய் பசித்திருக்க தனயன் கோதானம் செய்தானாம் இந்தப் புத்தி பக்தி என்னும் புற்றுநோயின் சேட்டையாகும்.
இந்தியாவின் நிலைமை என்ன? சர்வதேசப் பட்டினி அட்டவணையில் மொத்தம் 88 நாடுகள் உள்ளன என்றால்,, அதில் இந்த புண்ணிய பாரதம் 66 ஆவது இடத்தில் அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்திருக்கிறது.
இவ்வளவுக்கும் இந்த நாட்டில் படைத்தல் கடவுள், காக்கும் கடவுள்களும் இருக்கின்றனவாம். வெட்கம் இல்லாமல் இப்படியும் சொல்லித் திரிகின்றனர்.
இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைவால் அவதிப்படும் குழந்தைகள் 50 விழுக்காடு என்று தேசிய மனித உணவு ஆணையத்தின் தலைவர் நீதிபதி ராஜேந்திரபாபு கூறியுள்ளார்.
உலகில் ஆண்டு ஒன்றுக்குக் குழந்தைகளின் மரணம் 1.25 கோடியென்றால், இந்தியாவில் மட்டும் 25 லட்சமாம். ஆயிரத்துக்கு 58 குழந்தைகள் இந்தியாவில் மரணம் அடைகின்றன. எடைக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் இந்தியாவில் 35 சதவிகிதமாகும். (குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில் இந்தியா இருக்கிறதாம்! _ ஹி.... ஹி.... வாயால் சிரிக்க முடியவில்லை!)
இந்தியாவில் சராசரியாக 57.8 விழுக்காடு கர்ப்பிணிப் பெண்களும், 56.1 விழுக்காடு திருமணம் ஆன பெண்களும், 79.1 விழுக்காடு குழந்தைகளும் ரத்த சோகையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் அன்றைய சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறினார் (தினமணி, 15.3.2007).
இப்படிப்பட்ட நாட்டில் பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால் என்ன நடக்கிறது?
இதோ ஒரு சேதி. திருவண்ணாமலையில் இன்று மகாதீபமாம்! அதாவது மகா கிரிமினல் செயல்பாடு! ஆயிரம் மீட்டர் திரியில், 3500 கிலோ நெய்யைப் பயன்படுத்தி திகுதிகுவென எரியவிட்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்களாம் பக்த கே()டிகள்! இப்படி ஆண்டு ஒன்றுக்கு இந்தியாவில் பாழாவது ரூபாய் 58 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவுப் பொருள்களாம்! பக்தி என்பதே உற்பத்தி நாசமாகும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில்.
இரத்தம் கொதிக்கவில்லையா? பச்சிளம் பிள்ளைகள் பாலுக்கு அழுகையில், குழவிக் கல்லுக்கு நெய் கேட்கிறதா?
கல்லைக் கும்பிட்டுப் பழகியதால், அவர்களின் மனமும் கல்லாகிப் போய்விட்டதோ!
கடவுளை மற, மனிதனை நினை என்றார் தந்தை பெரியார். ஒரே ஒரு கணம் இதனை இந்த மனிதநேய உணர்வை சீர்தூக்கிப் பார்க்கக் கூடாதா?
-------------- மயிலாடன் அவர்கள் 1-12-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை
http://thamizhoviya.blogspot.com/2009/12/blog-post.html
அய்யப்பனும் - அயோக்கியத்தனமும்!
"தன்னை நாடிவரும் பக்தர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியாத கடவுள் அய்யப்பன், சக்தி வாய்ந்தவன் என்றும், பக்தர்களின் குறைகளை, கஷ்டங்களை, நோய் நொடிகளை, பாவங்களைப் போக்குபவன் என்றும் சொல்லுவதெல்லாம் பச்சையான பித்தலாட்டம் அல்லவா..?
ஆனால், நடப்பது என்ன? அய்யப்பப் பக்தர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி மரணம் என்கிற பரிதாப செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மாரடைப்பு ஏற்பட்டு பக்தர்கள் சபரிமலையிலேயே மரணம் என்றும் ஏடுகள் செய்திகளைப் போடுகின்றன. போதும் போதாதற்கு அய்யப்பன் கோயிலில், பிரத்தியேகமாக உள்ள மருத்துவர்கள் இப்பொழுது அறிக்கையினைக் கொடுத்துள்ளனர்.
இதய நோயாளிகள், ரத்த அழுத்தம், கொழுப்பு (கொலஸ்ட்ரால்) பாரம்பரிய இதயநோய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், 55 வயதுக்குமேல் ஆனவர்கள், சபரிமலை ஏறும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
பயணத்திற்குமுன் மருத்துவரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டும். இதயத்தின் செயல்பாட்டைத் தெரிந்துகொண்ட பின்னரே பயணம்பற்றி முடிவெடுக்கவேண்டும்.
அவ்வாறு வரும்போது, வியாதிபற்றிய குறிப்புகளும், சாப்பிடும் மருந்துபற்றிய குறிப்புகளும் டைரியில் எழுதிக்கொண்டு வரவேண்டும்.
மலை ஏறுவதற்கு முன்னர் பம்பையில் அதிக உணவு சாப்பிடக் கூடாது. லேசாக சாப்பிட்டுவிட்டு மலையேறவேண்டும். வயிறு நிறைய சாப்பிட்டால் இதயத்தின் வேலைப் பளுவும் கூடும். மலை ஏறும்போது நெஞ்சு வலியோ, மூச்சுத் திணறலோ, அசாதாரண நிலையோ ஏற்பட்டால், உடனடியாக மலை ஏறுவதை நிறுத்தி, மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறவேண்டும். ஏறும்போது நாடித் துடிப்பு நிமிடத்துக்கு 140 க்குமேல் இருக்கக்கூடாது.
மலையேறும்போது அய்கோர்டின் மாத்திரையை அதிகமாக நாக்குக்கு அடியில் வைப்பதால் ரத்த அழுத்தம் குறைந்து தலை சுற்றல் போன்றவை ஏற்படும்.
மேலும் வழக்கமாக மருந்து சாப்பிடுபவர்கள் மலையேறும்போது ரத்தத்தில் சர்க்கரை குறைந்து உடல் தளர்ச்சி ஏற்படலாம். இதற்காக அவர்கள் கையில் குளுகோஸ் வைத்துக் கொள்ளவேண்டும்!
இவ்வாறு அய்யப்பன் கோயில் சன்னிதான மருத்துவர் ஹரீந்திரபாபு கூறியுள்ளதாக தினமலரே (1.12.2009) கூறியுள்ளது.
இது முழுக்க முழுக்க அய்யப்பன் சக்தியைக் கேலி செய்வதாக இல்லையா? தன்னை நாடிவரும் பக்தர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியாத கடவுள் அய்யப்பன், சக்தி வாய்ந்தவன் என்றும், பக்தர்களின் குறைகளை, கஷ்டங்களை, நோய் நொடிகளை, பாவங்களைப் போக்குபவன் என்றும் சொல்லுவதெல்லாம் பச்சையான பித்தலாட்டம் அல்லவா?
வில்லாளி வீரனே
வீரமணி கண்டனே,
தாங்கி விடப்பா
ஏந்தி விடப்பா
தூக்கி விடப்பா
ஏற்றி விடப்பா
என்று அய்யப்ப சரணம் பாடிச் செல்லும் பக்தர்களைக் காப்பாற்றும் சக்தி அய்யப்பனுக்கு இல்லை என்பதைத்தானே சன்னிதான மருத்துவரின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
எந்தப் பக்தராவது இது கடவுளை அவமதிக்கும் செயல் என்று சொல்லவில்லையே, ஏன்?
இவற்றையெல்லாம்விட மிகக் கேவலமானது அய்யப்பன் பெயரால் நடத்தும் மகரஜோதி பித்தலாட்டம்!
கேரள மின் வாரியத்தைச் சேர்ந்த ஊழியர்கள் செயற்கையாக சூடத்தைக் கொளுத்திக் காட்டுகின்றனர் என்பதை கேரள மாநில முதலமைச்சர், இந்து அறநிலையத் துறை அமைச்சர், அறக்கட்டளைத் தலைவர், கோயில் தலைமை அர்ச்சகர் வரை ஒப்புக்கொண்ட பிறகும் மகரஜோதியை அனுமதிப்பது எந்த வகையில் சரி?
பக்தியின் பெயரால் எந்தப் பித்தலாட்டத்தையும் அரசு அங்கீகாரத்தோடு அரங்கேற்றலாம் என்றால், பக்தியின் யோக்கியதையையும், அரசின் தன்மையையும் தெரிந்துகொள்ளவேண்டாமா?
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது விளங்குகிறதா?
-----------------------" விடுதலை" தலையங்கம் 2-12-2009
http://thamizhoviya.blogspot.com/2009/12/blog-post_9118.html
தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும்: யாழிலிருந்து சனீஸ்வரன்
"கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும்...."
எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும். இவ்வாறு யாழிலிருந்து சனீஸ்வரன் எமது தளத்திற்கு அனுப்பியுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சனீஸ்வரனின் ஆய்வறிக்கையின் முழுவடிவம்:
பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் (பாபா கவுண்டிங் ஸ்ரைல்)
கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். குருதி குடித்தவன் ஒரு அணியில் குடிக்கச் சொன்னவன் மறு அணியில். மான மறத் தமிழச்சிகளின் மானங்கெடுத்தவன் ஒரு அணியில் கெடுக்கச் சொன்னவன் மறு அணியில். எங்கள் செஞ்சொலைக் குழந்தைகளை கொன்று குவித்தவன் ஒரு அணியில் ஏவிவிட்டவன் மறு அணியில்.
சபாஷ் சரியான போட்டி. தமிழனை வெங்களமாடி வென்றவன் யார்? இனி சிங்களம் இதனைத் தீர்மானிக்கும். தமிழனை யார் அதிகம் கொன்றானோ அவனுக்கு வெற்றி வாகை கிடைக்கும். இனவாதம் அவனுக்கு பட்டாபிஷேகம் நடாத்தும். காக்கை வன்னியன்களும் எட்டப்பன்களும் யார் வெல்கிறானோ அவன் பக்கம் போய் ஒண்டிக்கொண்டு அவன் தின்று வீசிய எலும்பை நக்கி உண்டு மகிழ்வர். அவன் கால் கழுவி கிடைத்த நீரை தீர்த்தம் என்று உண்டு மகிழ்வர். அவனே தமிழனின் துயர் தீர்க்க வந்த வீர புருஷன் என்று கோஷமிடுவர்.
ஓரிரண்டு தமிழருக்கு வேலை வாய்ப்பு, சில வாசிகசாலைகளுக்கு கொஞ்சம் காசு. ஆசீர்வதிக்கப்பட்ட சில வீதிகளுக்கு தார். சில கோவில்களுக்கு நிதி, என்று எதிரியினால் பிச்சையிடப்பட அதை தாங்களே வாங்கி வந்ததாக இவர்கள் பீத்திக்கொள்வர். பத்திரிகைகளில் நன்றியுடன் பாராட்டுகிறோம் என்று விளம்பரம் போடச் சொல்வர். இவர்களும் போடாவிட்டால் உயிர் போய்விடும் என்ற அச்சத்தில் போடுவர்.
எங்கள் குருதியிலும் எங்கள் ரணத்திலும் எங்கள் அவலத்திலும் சிங்களம் கொண்டாடும் மாபெரும் தேர்தல் திருவிழா. தமிழனை யார் கூட அடித்தான் என்று சிங்களவன் வாக்கிடப் போகிறான். அவலங்களை அதிகம் புரிந்தவன் யார் என்று சிங்களம் பட்டிமண்டபம் நடாத்தும். ஒரு அணி மறு அணியை தாக்குவதற்கு தமிழன் கருப் பொருளாவான். தமிழச்சிகளின் மானம் சிங்களத்தின் தேர்தலுக்கு வித்திடும்.
எது எப்படியோ வெல்லப்போகிறவன் விக்கிரமபாகு கருணாரட்ண போன்றதொரு இனவாதம் பேசாத சிங்களவனாக இருந்தால் சிங்கள மக்கள் போரை விரும்பவில்லை. அவர்கள் தமிழரை தமது சகோதரர்களாகவே எண்ணுகின்றனர் என்று தமிழர் தரப்பு நம்பலாம். முடியுமா? முடியாது. தமிழனை யார் கூட அடித்தான் என்று பார்க்கும் தேர்தலாகவே இது இருக்கப் போகின்றது.
இப்போது தமிழர் தரப்பு என்ன செய்யப் போகின்றது. தேர்தலைச் சந்தித்து அறிவாயுதம் கொண்டு எதிரியை வீழ்த்தப் போகின்றதா? பொது வேட்டபாளரொருவரை நிறுத்தி வாக்குகளைப் பிரித்து தமிழர் தனித்துவத்தை நிலைநிறுத்தப் போகின்றதா? தமிழர் தரப்பு தீர்மானிக்க வேண்டிய விடயம் இது. தமிழன் வாக்கிடாததால் மகிந்த என்னும் கொடுங்கோலன் வந்தான். அவனையும் சகோதரக் கம்பனிகளையும் வீட்டுக்கனுப்ப வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்காது என்றே நினைக்கின்றேன்.
எது எப்படியோ எங்கள் விடுதலை இயக்கம் விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சுயநலமின்றி சிந்தித்து தமிழ் தேசியத்தை கட்டிக்காக்க வேண்டிய நிலையில் இருப்பதை எவரும் மறந்துவிட முடியாது. கூட்டமைப்பினர் அற்ப சொற்ப சலுகைகளுக்கு மயங்காது கட்டுக் கோப்புடன் செயற்பட்டு வரலாற்றில் இடம் பிடிப்பார்களா?
முள்ளி வாய்க்காலில் கிடைத்த அவலத்திற்கு தமிழர் தரப்பு தரும் பதிலாக இத்தேர்தல் அமையப் போகின்றது. கொன்றவனை கொல்லச் சொன்னவனும் மோதிக் கொள்வார்கள். ஒருவன் மீது மற்றவன் புழுதிவாரித் தூற்றுவார்கள். ஒருவன் செய்த கொடுமைகளை மற்றவன் வெளிக் கொணருவான். போர்க்குற்றங்கள் வெளிவரும். உலகம் விழித்துக் கொள்ளும். தமிழன் ஆயுதத்தால் சாதிக்க முடியாதவற்றைக்கூட அறிவால் சாதித்துக் கொள்வான்.
எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும் இதனை தமிழர் அறிவர்.
பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் …… யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்
-நன்றி தமிழ்வின்
http://www.tamilsguide.com/details.php?nid=1&catid=10120
கனடாவில் மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பேசுவதற்காகச் சென்ற திரைப்பட இயக்குநரும், `நாம் தமிழர்' இயக்கத் தலைவருமான சீமானை கனடா போலீஸார் பேசவிடாமல் தடுத்து, நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டிருக்கிறார்கள். 27-ம் தேதி சென்னை திரும்பிய சீமானிடம் பேசினோம்.
கனடாவில் நீங்கள் கைது செய்யப்பட்டது ஏன்?
``கனடாவுக்குச் செல்லும்போதே உள்ளேயே நுழையவிடாமல் தடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். அங்கே சென்று தலைமறைவாகவே இருந்தேன். அவர்களும் என்னைத் தேடிக் கொண்டேதான் இருந்தார்கள். 26-ம் தேதி மாலை நிகழ்ச்சியில் பேசுவதாக இருந்தேன். தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி அன்று காலையே கைது செய்தனர். முதுகிற்குப் பின்னால் என் கைகளைக் கட்டி, விலங்கிட்டு இழுத்துச் சென்றனர். நான் பேசினால் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகும் என்று அங்கிருந்த அதிகாரி கூறினார். `இதே கனடாவில் 2007-ல் இதே மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறேன். அப்போது கெட்டுப் போகாத சட்டம் ஒழுங்கு இப்போது மட்டும் எப்படி கெட்டுப் போகும்?' என்று கேட்டேன். அதற்கு அந்த அதிகாரி, `தட் இஸ் பாலிடிக்ஸ்' என்றார். `கனடாவை விட்டு உடனே வெளியேறுங்கள்; மீறி இருந்தால் சிறையில் தள்ளுவோம்' என்று எச்சரித்தனர். என்னை வழியனுப்ப வந்த தமிழர்களையும் சந்திக்கவிடாமல் தடுத்துவிட்டனர். இலங்கை அரசு சொல்லி, ஓர் இந்தியனை கனடா அரசு திருப்பி அனுப்பாது. அங்கே என்னை விசாரித்ததே ஒரு சீக்கிய அதிகாரிதான். `ராஜிவ்காந்தி கொலையை நியாயப்படுத்துகிறீர்களா?' என்ற அவரிடம், `நீங்கள் இந்திரா காந்தி கொலையை நியாயப்படுத்துவீர்களா?' என்றேன்.''
அங்கு ஒரு நிகழ்ச்சியில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதற்காகவே நீங்கள் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பியதாக சொல்லப்படுகிறதே?
``புதன்கிழமை (25-ம் தேதி) பல்கலைக்கழக மாணவர்களுடன் பேசினேன். நிச்சயம் அந்தப் பேச்சுக்காக என்னைக் கைது செய்யவில்லை. மாவீரர் நாள் நிகழ்ச்சியில் நான் பேசிவிடக் கூடாது என்றே என்னைக் கைது செய்து திருப்பி அனுப்பினார்கள்.''
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக உங்கள், `நாம் தமிழர்' இயக்கத்தினர் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே?
``இந்தக் கைதின் மூலம் எங்கள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம்போல் ஜோடிக்கப் பார்க்கிறார்கள். பெரும் திரளான இளைஞர்கள் என் பின்னால் திரண்டு வருவதைத் தடுக்கும் வேலைதான் இது. கனடாவில் இருந்து நான் விமான நிலையத்துக்கு வரும்போது, அதிகாலை (27-ம் தேதி) ஒன்றரை மணி. இரண்டரை மணிக்கு வெளியே வந்தேன். விருகம்பாக்கம் அருகே வரும்போது எங்களுடன் வந்த இரண்டு வாகனத்தை காவல்துறையினர் மறித்து அழைத்துச் சென்றனர். அந்தத் தகவல் எனக்குத் தெரிந்ததும் என்னருகில் இருந்த தம்பிகளிடம், `என்னவென்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். தேவையென்றால் நான் வருகிறேன்' என்றேன். அப்படி விசாரிக்கப் போன அந்த மூன்று தம்பிகள்தான் இன்றைக்கு சிறையில் இருக்கிறார்கள்.
விமான நிலையத்தில் பேட்டி எடுக்க வந்திருந்த ஊடகவியலாளர்களின் காணொளியில் அந்தத் தம்பிகள் என்னுடன் இருப்பது பதிவாகியிருக்கிறது. அப்படியிருக்கும்போது, அவர்கள் எங்கிட்டுப் போய் குண்டு வைத்திருக்க முடியும்? மீனம்பாக்கம் எங்கிருக்கிறது? என் அலுவலகம் எங்கிருக்கிறது? ஈ.வி.கே.எஸ். அவர்களின் வீடு எங்கிருக்கிறது? குண்டு வீசவும், கொலை செய்யவும், கட்டப்பஞ்சாயத்து செய்யவும் `நாம் தமிழர்' இயக்கத்தை நான் தொடங்கவில்லை. மிக உயர்ந்த லட்சியமும், நோக்கமும் எங்களுக்கு இருக்கிறது.
இதே ஈ.வி.கே.எஸ். பிறந்தநாள் சுவரொட்டியை என் அலுவலக வாசலில் ஒட்டிவிட்டு, என் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள். அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பாரதிராஜா அப்பா அலுவலகத்தை அடித்து நொறுக்கியதற்கும், தா.பாண்டியன் கார் எரிக்கப்பட்டதற்கும் இன்னும் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. இப்போது கைது செய்யப்பட்ட என் தம்பிகளுக்கும் அந்த சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நான் நிரூபிக்கிறேன். குண்டு வீசியதாகச் சொல்லப்படும் நேரத்தில் அந்தத் தம்பிகள் என்னுடன் இருந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.''
இளங்கோவனுக் கும், உங்களுக்கும் அப்படியென்ன பிரச்னை?
``ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது எங்களுக்கு வருத்தம் உண்டு. பிரபாகரன் படத்தை அவர் கிழிக்க வேண்டிய அவசியம் என்ன? அவருடன் வந்த ஒரு பெண், பிரபாகரன் படத்தை மிதித்திருக்கிறார். அதை அவர் அனுமதித்திருக்க வேண்டியதில்லை. இங்கே பிரபாகரனின் படத்தை அட்டைப் படத்தில் போட்டு அவரைப் பற்றி கட்டுரை எழுதாத பத்திரிகைகளே இல்லை. அவரைப் பற்றி பேசினால் மட்டும் கைது செய்வார்கள் என்றால், எழுத்துச் சுதந்திரம் இருக்கும் அளவுக்கு இந்த நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லையா?''
`என்னுடைய அறையில் தான் உங்களுடைய `நாம் தமிழர்' இயக்கம் உருவானது. சீமான் செயல்பாடுகள் எனக்குப் பிடிக்காததால் அவரைவிட்டுப் பிரிந்துவிட்டேன்' என்று ஜெகத் கஸ்பர் கூறியிருக்கிறாரே?
``ஜெகத் கஸ்பருக்கும், எனக்குமான உறவு துண்டிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமை அடைகிறேன். அவர், `சீமானுக்கு என்ன நாணயம் இருக்கு?' என்றும் பேசியிருக்கிறார். யாரைக் கேட்டு `மௌனத்தின் வலி' என்ற அவருடைய புத்தகத்தில் என்னுடைய கவிதையை வெளியிட்டார்? அவருக்கு என்ன நாணயம் இருக்கு?
எங்களுடைய `நாம் தமிழர்' இயக்கத்துக்கு இவர்தான் பெயர் வைத்தாராம். மதுரையில் கூட்டம் நடத்த `நாம் தமிழர் இயக்கம்' என்ற பெயரில் அனுமதி கோரலாம் என்றவர், வழக்கறிஞர் காமராஜ். அது விவாதிக்கப்பட்டது, இயக்குநர் மணிவண்ணன் அப்பா வீட்டில். இவர், அரசியல் கட்சியா தொடங்க வந்தார்? தொண்டு நிறுவனம் போல் பேசினார். அறக்கட்டளை நிறுவி, அதற்கு `ஜஸ்டிஸ் ஃபண்ட்' திரட்டலாம்' என்றார். திடீரென `நான் பின்னால் இருந்து இயங்குகிறேன்' என்றவர், மருத்துவர் எழிலனுடன் வந்து ஆர்வமே இல்லாமல் பேசிவிட்டுச் சென்றார். என் ஓட்ட வேகம் வேறு. அவரது ஓட்ட வேகம் வேறு. `நாம் தமிழர்' என்று அவர்தான் பெயர் வைத்தாரென்றால், அந்தப் பெயரில் அவரும் ஒரு இயக்கத்தை நடத்தட்டும்; ஒரு கூட்டம் போடட்டும். நானும் கூட்டம் போடுகிறேன். மக்கள் எங்கே வருகிறார்கள் என்று பார்க்கலாம். `ஜெகத் கஸ்பர் இருந்தால் இந்த இயக்கத்தில் சேர மாட்டேன்' என்று நிறையப் பேர் என்னிடம் சொன்னார்கள்.''
கஸ்பர் உங்களையும், புலிகளையும் விமர்சிக்கும் நோக்கம் என்ன?
``முழுக்க முழுக்க அவர் இந்திய உளவுத்துறையின் ஆள். நான் அலைபேசியில் யார் யாருடன் பேசுகிறேன் என்று ஜெகத் கஸ்பர் ஒட்டுக் கேட்கிறார். அவரது நிஜமுகம் புரிந்ததும், அவரைவிட்டு விலகி விட்டேன். அமைதிப் பேச்சு வார்த்தை என்கிற பெயரில் பிரபாகரன் சிறுபிள்ளைத்தனமாக முடிவெடுத்து விட்டார் என்று கஸ்பர் எழுதுகிறார். அதை பிரபாகரன் களத்தில் போராடிக் கொண்டிருந்தபோது அவர் ஏன் எழுதவில்லை? பிரபாகரன் உணர்ச்சிவயப்பட்டுவிட்டார்; அப்படிச் செய்திருக்க வேண்டும், இப்படிச் செய்திருக்க வேண்டும் என்று, பிரபாகரனுக்கு இன்று பாடம் நடத்துபவர், அவரைச் சந்தித்தபோதே ஏன் சொல்லவில்லை? பிரபாகரனைச் சந்தித்த ஒருசில வினாடிகளைப் பெரிதுபடுத்தி, சுயவிளம்பரம் தேடுவதாக இவர் மீது எழுந்த விமர்சனத்துக்கு இன்று வரை பதிலில்லையே!''
தேவர் ஜெயந்தி விழாவில் நீங்கள் கலந்துகொண்டதற்கு உங்கள் இயக்கத்திலேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிதே?
``முத்துராமலிங்கத் தேவர் என்ன மராட்டியரா? மார்வாடியா? குஜராத்தியா? மலையாளியா? அவர் தமிழர் இல்லையா? இந்த மாதிரி பழிபோடுவதை நான் மதிக்கிறேன். இதை நான் தொடர்ச்சியாகச் செய்வேன். நான் என் முன்னோர்களை மதிக்கிறேன். இம்மானுவேல் சேகரனுக்கும், அம்பேத்கருக்கும், ரெட்டைமலை சீனிவாசனுக்கும் வீரவணக்கம் செலுத்தியபோது வராத சாதியம், முத்துராமலிங்கத் தேவரிடம் மட்டும் ஏன் வந்தது?
தீரன்சின்னமலைக்கும், காமராஜருக்கும், வீரநங்கை வேலு நாச்சியாருக்கும், மருது பாண்டியருக்கும் வீர வணக்கம் செலுத்தினாலும் சாதியம் பார்ப்பீர்களா? மதுரை வீரனுக்கு வீரவணக்கம் செலுத்தினால் அந்த சாதியைத் தூக்கிப் பிடிக்கிறேன் என்று சொல்வீர்களா? அங்கே போய் `தேவரின மக்களே திரண்டு வாருங்கள்' என்றா அழைத்தேன்? `முத்துராமலிங்கத் தேவரைவிட சிறந்த தலைவர் இந்த மண்ணில் இல்லை' என்று அங்கே பேசிவிட்டு வரவில்லை. நான் அனைத்து மக்களையும் தமிழர்களாகவே பார்க்கிறேன். என் முன்னால் நிற்பவர்களில் இவன் பள்ளர், பறையர், சக்கிலியர், நாடார், முதலியார் என்று பார்க்க மாட்டேன். என் பின்னால் வந்த பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த தம்பிமார்கள் முத்துராமலிங்கத் தேவருக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். அதேபோல் தேவர் சமூகத்தைச் சேர்ந்த தம்பிகள் என்னால் இம்மானுவேல் சேகரனுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
இருபெரும் மோதல் சக்தியாக இருக்கிறவர்களை இணைப்பது யார்? என்னால்தானே அது நடந்தது. அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ரௌலட் சட்டம் என்கிற வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டு குற்றப் பரம்பரை என்று அறிவித்து வைத்திருந்ததை எதிர்த்துப் போராடிய முத்துராமலிங்கத் தேவரை ஏன் போராளியாகப் பாாக்க மறுக்கிறீர்கள்? அவர் என்ன, மொத்த சாதி அடையாளத்தையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறாரா? வேறு எவன்கிட்டயும் சாதி இல்லையா என்ன? பேனா இருக்கு, பேப்பர் இருக்கு, அரிப்பு இருக்கு என்பதற்காக சீமான் சாதியத்தைக் கையில் எடுத்துவிட்டார் என்று எழுதுவதை நிறுத்துங்கள்! நான் சாதி வெறியனா இல்லையா என்பதை காலம் சொல்லும்.''
பிரபாகரன் சொல்லித்தான் `நாம் தமிழர்' இயக்கத்தைத் தொடங்கினீர்களாமே?
``அண்ணன் (பிரபாகரன்) சொன்னபோது எனக்கு ஆர்வம் இல்லை. தமிழ்த் தேசிய தளத்தில் அண்ணன் திருமாவளவன் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். அங்கே இருந்த போராளிகள் கூட `திருமாவளவன் மீது எங்களுக்கு நல்ல புரிதலைக் கொண்டு வந்தீர்கள்' என்றார்கள். அந்த மண்ணில் திருமாவளவன் போய் நின்றிருந்தாலும் அவரைப் பற்றி அங்கே அதிகமாக நான்தான் எடுத்துப் பேசியிருக்கிறேன். இங்கே இருக்கிற அரசியல் இயக்கங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததால், ஓர் அரசியல் இயக்கத்தின் தேவை அப்போது ஏற்படவில்லை.''
பிரபாகரன் சொல்லித்தான் இயக்கம் தொடங்கினீர்கள் என்றால், தமிழக அரசியலில் பிரபாகரன் தலையிடுகிறார் என்கிற இந்திய அரசின் குற்றச்சாட்டு உண்மையாகிவிட்டதே?
``அவர் தலையிட வேண்டும் என்பது இல்லை. அவர் சொல்லித்தான் இதைச் செய்யணும் என்பதும் இல்லை. இந்த மண்ணில் எங்கள் மக்களுக்கு ஓர் அரசியல் இயக்கம் வேண்டும் என்று தோன்றியது. அதைக் கட்டமைக்கிறோம். அவர் சொல்லித்தான் ஒவ்வொன்றையும் செய்யணும் என்பது இல்லை.''
தமிழினம், மொழி என்று பேசுவதால் உங்கள் இயக்கத்தின் மீதும், உங்கள் மீதும் பிரிவினைவாதிகள் என்ற பார்வை விழாதா?
``நாங்கள் தனித் தமிழ்நாடு கோரவில்லை. இந்திய தேசிய ராணுவத்தில் என் அண்ணன், தம்பி இருக்கிறார்கள். இலங்கை தேசிய ராணுவத்தில் தமிழர்களை அந்நாடு சேர்த்துக் கொள்ளுமா? அந்த உரிமையை இந்தியா பெற்றுத் தருமா? இந்த மண்ணில் நாங்கள் கேட்கும் இந்தக் கேள்விக்கு இந்த நாடு பதிலே சொல்லவில்லை. தனித் தமிழீழம் ஏன் கேட்கிறோம் என்று, இப்படியான காரணங்களை எங்களால் அடுக்க முடியும். தங்கள் மொழியை உயர்த்திப் பிடிப்பதால் பால்தாக்கரேவும், ராஜ்தாக்கரேவும் பிரிவினைவாதிகள் அல்ல. தமிழர்களுக்கு உரிமை உள்ள தண்ணீரைத் தர மறுப்பதால் மலையாளிகளும், கன்னடர்களும் பிரிவினையைத் தூண்டுகிறார்கள் என்று ஆகிவிடுமா? தமிழன் மட்டும் தேசிய உணர்வோடு இருக்கணும். மற்றவர்கள் எல்லாம் அவரவர் மொழியுணர்வோடு இருக்கலாம் என்பது சரியா? விடுதலைக்குத் தமிழனும் சேர்ந்துதான் போராடினான். ஆனால், இந்தி மட்டும் ஆட்சி மொழியானது எப்படி?
சுதந்திரத்தை அவன் கையில் கொடுத்து விட்டோம். மொத்த அதிகாரத்தையும் அவன் எடுத்துக்கொண்டான். இலங்கையிலும் தமிழனும், சிங்களவனும் போராடி விடுதலை பெற்றார்கள். அதன்பிறகு, சிங்களம் மட்டும் ஆட்சி மொழி; சிங்களவன் மட்டும் அதிபர் என்று திருத்திக் கொண்டான். அதேதான் இங்கேயும் நடக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தில் தமிழில் பேச இன்னும் அனுமதி இல்லையே.''
தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு சகோதர யுத்தம்தான் காரணம் என்று முதல்வர் கூறியிருக்கிறாரே?
``கருணாநிதி எப்போதும் இதைத்தான் சொல்லி வருகிறார். அவரது கருத்தை யாரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. சகோதர யுத்தத்தைத் தூண்டிவிட்டதே இந்திய உளவுத் துறைதான். விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை ஒப்படைக்கச் சொன்னார்கள். புலிகள் ஒப்படைத்த ஆயுதங்களை மாற்றுக்குழுவிடம் கொடுத்து, புலிகளுக்கு எதிராக உசுப்பிவிட்டு, தாக்குதலை நடத்த வைத்தது, இந்திய அரசுதான். கருணா என்கிற துரோகியைக் கொல்லாமல் விட்டதால்தான், இந்த மிகப்பெரிய பின்னடைவைப் புலிகள் சந்திக்க வேண்டியதாகிவிட்டது!'' என்று முடித்தார், சீமான்.
படங்கள்: ஞானமணி
- வே.வெற்றிவேல்
அன்புடன் வெ யுவராசன்.
www.worldtamilwebdesign.com
www.thamizhthottam.blogspot.
மேலும் படிக்க...!
- கிழிந்து போன கஸ்பாரும் அடுத்த கஸ்பாரும் ?
- ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!
- சஞ்சனா ஜெகத்தின் கற்பனைப் பாத்திரமா ?? -வேல்தர்மா
- ஜெகத் கஸ்பார் என்ற ஒரு தெருப் பொறுக்கியின் உலறல்
- ஜெகத் கஸ்பார், கருணாநிதி/கனிமொழி யால் வளர்க்கப்படும் மற்றுமொரு தமிழின துரோகி
- ஜெகத் கஸ்பார் ஒரு போலி அருட்தந்தை, ரோவின் கூலி
- ஜெகத் காஸ்பர் பற்றிய திடுக்கிடும் தகவல் விரைவில் ஆதாரத்துடன் வெளிவர இருக்கிறது
- நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே நக்கீரா
- மறக்க முடியுமா ? ஜெகத் கஸ்பாரின் மறு பக்கம்
- ஜெகத் கஸ்பார் நீங்களுமா ?? இது தான் உங்கள் சுய அடையாளமா ? பகிரங்க மடல்
சரித்திரம் சொல்லும் உண்மைகள்! - ஜெகத் கஸ்பர்
"உலகஒழுங்கு', "பிராந்திய ஒழுங்கு' என்றெல்லாம் எழுதுகிறீர்களே, அவற்றை எப்படி புரிந்து கொள்வது என்று தோழர் ஒருவர் அப்பாவித்தனமாக கேட்டார். அவருக்கு ஓர் சிறு உதாரணத்தை சொன்னேன். தமிழர் இன அழித்தல் யுத்தத்திற்கு அரசியற் தலைமை கொடுத்தவர் ராஜபக்சே. களத்தில் கொடும் ராணுவத் தலைமை கொடுத்தவர் சரத் பொன்சேகா. இருவரும் யுத்தம் முடிந்த ஆறு மாதத்திற்குள் எதிரிகளாகி தேர்தல் களத்தில் சந்தித்துக் கொள்கிறார் களல்லவா? இத்தகு விசித்திரமான அரசியல் ரசாயன மாற்றங்களை கொஞ்சம் உற்று உன்னிப்பாக நோக்கினீர்களென்றால் அத்தகு ரசாயன மாற்றங்களை நிகழ்த்தும் உலக-பிராந்திய ஒழுங்குகள் உங்களுக்குப் புரியும்.
அல்லது, வெற்றி வெறியில் கொக்கரித்து நின்ற ராஜபக்சே சகோதரர்கள் திடீரென ஒருநாள் வெல வெலத்துப் போய் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, இந்திய ராணுவ உதவியை நாடியதாக பொன்சேகா குற்றம் சாட்டியதையும், இந்திய ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டதாக வந்த செய்தி களையும் கூர்ந்து ஆய்ந்தீர்க ளென்றால் புரியும், பிராந்திய ஒழுங்கு என்னவென்று.
அதுபோலவே மேலும் சில நண்பர்கள் கேட்பது, ஈழம் மலரும், ஈழம் வரும் என்றெல்லாம் எழுதுகிறீர்களே, இது நடைமுறையில் சாத்தியமா? இல்லை, துவண்டு கிடக்கும் உணர்வாளர்களை சாந்தப்படுத்த வேண்டி எழுது கிறீர்களா? -இப்படி பல கேள்விகள். ஐயமுறும் நண்பர் களுக்கு எனது பதில்:
அர்மீனியா, அசர்பைஜான், பெலாரஸ், எஸ்தோனியா, ஜார்ஜியா, கசக்ஸ்தான், கிரிக்ஸ்தான், லாத்வியா, லித்துவேனியா, மால்டோவா, தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ் தான், உஸ்பெகிஸ்தான், உக்ரைன், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவ்னியா, குரோஷியா, மாசிடோனியா, செர்பியா மற்றும் மான்டெனேக்ரோ, ஸ்லோ வேனியா, நமீபியா, யெமென், மார்ஷல் தீவுகள், எரித்ரேயா, பலாவ், கிழக்கு திமோர், கொசோவா... என்ன புதிய மொழியில் எழுதுகிறேன் என நினைக்கிறீர்களா? இவை யாவுமே 1990-ம் ஆண்டுக்குப் பின் இப்பூமிப் பந்தில் புதிதாகப் புலர்ந்தெழுந்த நாடுகள். கடந்த இருபது ஆண்டுகளில் மட்டுமே சுமார் 36 நாடுகள் புதிதாக உதயமாகியுள்ளன. தத்தமது தேசியப் பாடல்கள், கொடி கள், சட்டங்கள், நீதி அவைகள், பாராளுமன்றங் களுடன் இன்று இந்நாடுகள் உலகக் குடும்பத்தின் பெருமை மிகு உறுப்பு நாடு களாய் தலைநிமிர்ந்து நிற்கின்றன. ஆக, கடந்த இருபது ஆண்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டாலே ஆண்டொன்றுக்கு சராசரி இரு புதிய நாடுகள் நம் உலக வரைபடத்தில் உருவாகியிருக்கின்றன.
இந்த யதார்த்த உண்மையில் நின்றுகொண்டுதான், கடந்த 2008-ம் ஆண்டு பெப்ருவரி 17ம் நாள் கடைசியாக உலக சமுதாயத்தால் முழு உரிமைகள் கொண்ட தனிநாடாக ஏற்கப்பட்ட கோசொவா நாட்டு மக்கள் அனுபவித்த இன அழித்தல் துயர் களின் வரலாற்று வரை சாட்சியாகக் கொண்டுதான் எழுதுகிறேன், உலக வரைபடமொன்றும் மாற்றப்படா தன்மை கொண்ட சந்திர மண்டலத்துக் கற்பாறைக் களம் அல்ல. அது சதா மாறிக் கொண்டே இருக்கும்.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததும், பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிந்ததும் நம் தலைமுறையினரில் இன்னும் உயிரோடிருக்கிற பலர் பார்த்த அனுபவங்கள். எனில் ஏன் இலங்கையின் இன்றைய நிலப்பரப்பு இரண்டாக பிரிந்து ஈழம் தனியாக மலரக்கூடாது. மலரும். ஒன்றாய் நாம் நின்றால், சுயநலம் அறுத்து தமிழின உணர்வோடும் மானுட அறத்தோடும் உழைத்தால் நிச்சயம் ஈழம் மலரும். வரலாறு தான் நம் நம்பிக்கை. முள்ளி வாய்க்காலின் கூக்குரல்கள் ஓயாது. இறைவன் இருப்பது உண்மையென்றால் ராஜபக்சே கோத்தபய்யா சகோதரர்களை மனித குலத்திற்கெதிராய் குற்றம் புரிந்த பாவிகளாய் வரலாறு விரைவிலேயே அவமானம் செய்யும். அதற்கும் மிகச் சமீபத்திய உதாரணங்கள் பலர் உண்டு.
சிறுபான்மை இசுலாமிய மக்களுக்கெதி ராய் இன அழித்தல் குற்றம் செய்த செர்பிய சர்வாதிகாரி சுலொபொதன் மிலொசொவிச் யுத்தக் குற்றவாளியாய் 2006- மார்ச் மாதம் சிறைக் கம்பிகளுக்குள்தான் மன அழுத்தம் தாங்காது மாரடைப்பில் மரணம் கண்டார். இப்போதும் அனைத்துலக நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகப் பிரகடனம் செய்யப்பட்டு அவ மானத்தின் அடையாளங்களாய் நிற்கிறவர்கள் போஸ்னிய செர்பியத் தலைவர் ரடவன் கரட்சிக், லைபீரிய நாட்டு அதிபர் சார்லஸ் டெய்லர், சூடான் நாட்டு அதிபர் ஒமார் அல் பஷீர்... ஆம் இவர்களைப் போல் ராஜபக்சே-கோத்தபய்யா- பொன்சேகா மூவரும் நிற்க வேண்டும், நிறுத்தப்பட வேண்டும். நிகழும். நிகழ்ந்தே தீரும்.
கடந்த இதழில் மேற்சொன்ன இன அழித்தல் மும்மூர்த்திகளையும் போர்க்குற்றவாளிகளாய் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போற்றுத லுக்குரிய மனிதர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேனல்லவா...? அப்புலத்தில் தேர்ந்த அனுபவம் கொண்ட இவர்களை அணுகி இப்பணியை ஏற்றுச் செய்யும்படி அமர்த்தி அதற்கு ஆகக்கூடிய பெருநிதிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் யார் தெரியுமா? மானுடம் முற்றிலுமாய் ஒருபோதும் மடிந்தோ, வீழ்ந்தோ போவதில்லை என்ற நம்பிக்கையின் செய்தி அது.
இப்புனிதப் பணியைச் செய்யும் படி அக்குறிப்பிட்ட அமைப்பினை அணுகியவர்களும், அதற்கான பெருநிதிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருப்பவர்களும் யாரெனில் -இலங்கையில் கடமையாற்றி, தமிழர் மீது நிகழ்ந்த -நிகழ்த்தப்பட்ட கொடூரங்களையெல்லாம் கண்டு -ஆனால் நம்மைப்போல் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் நின்ற சில நாடுகளின் வெளியுறவு ராஜதந்திர பிரதிநிதிகள் மற்றும் உலக அமைப்புகளில் பணிபுரிந்த சில அதிகாரிகள். இவர்களில் சிலர் பணி ஓய்வு பெற்றுவிட்டவர்கள், சிலர் இப்போதும் பிற நாடுகளில் கடமை யாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் தமிழருக்கு நடந்ததை பொது மானுடத்திற்கு நேர்ந்த அவலமாகவும், அதை அறிந்தும் கண்டும்கூட தங்களால் தடுத்து நிறுத்த முடியாத கையறு நிலையை தமது மனசாட்சிகளின் சவாலாகவும் கருதி நீதி தேடும் இப்புனிதப் பணியில் தம்மை அமைதியாக இணைத்துக்கொண்டிருக் கிறார்கள்.
தொடர்ந்தும், அவர்களை நான் விடாது வினவினேன் : ""ஐயா, கேட்பதற்காய் மன்னித் துக்கொள்ளுங்கள். மேற்குலக நாடுகளிலிருந்து புறப்படும் இத்தகைய முயற்சிகள் அனைத்திற்குள்ளும் அரசியல் வியூகங்களும், கணக்குகளும் இல்லாமல் இருக்காது. தயவு செய்து எதுவானாலும் வெளிப்படையாகக் கூறிவிடுங்கள்'' என்று வலியுறுத்திக் கேட்டேன். அதற்கும் அவர்கள் பொறுமையாகப் பதில் தந்தனர்.
""நிச்சயமாக இம் முயற்சியை முன்னின்று செய்யும் எங்களுக்கோ, இதனை செய்யும்படி எம்மைப் பணித்து அதற்கான செலவுகளைச் செய்யும் தனி மனிதர்களுக்கோ பொதுமானுடக் கரிசனையொன்றைத் தவிர்த்து வேறெந்த அரசியல் நோக்கும் இல்லை. அதேவேளை ஒன்றை நீங்கள் அறிய வேண்டும். என்ன வென்றால் மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லையென்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு ராஜபக்சே, கோத்தபய்யா, பொன்சேகா மூவர் மீதும் உள்ளூர வெறுப்பே கொண்டுள்ளனர். இவர்களை ஆதரித்து ஆட்சி பீடத்தில் நிலைபெறச் செய்யும் அக்கறை எந்த மேற்கு நாட்டுக்கும் இல்லை. ஆதலால் எம் முயற்சிக்கு ஒரு கட்டத்தில் இந்நாடுகள் ஆதரவு தருகின்ற வாய்ப்பும், அதனால் இலங்கை மீதான போர்க்குற்ற நீதி விசாரணை என்றேனும் ஒருநாள் வெற்றிபெறும் வாய்ப்பும் அதிகம்'' என்றார்கள். நீதி நிற்கும்! மானுடம் வெல்லும்!
உலகத் தமிழர்கள் இன்று செய்ய வேண்டியவை என்ன என்பது பற்றி அவர்கள் குறிப்பிட்டுச் சொன்ன சில விடயங்கள் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானவை. தமிழீழப் போராட்டம் மீது கவிந்த பயங்கரவாதம் என்ற நச்சுத் திரையை நிரந்தரமாய் நீக்கிவிடவும், தமிழரின் அரசியல் சுயநிர்ணய உரிமையை நிறுவியும் உதவக்கூடிய ஆலோசனைகள் முதலானதாகவும் மிக முக்கியமாகவும் அவர்கள் வலியுறுத்திக் குறிப்பிட்டது, மேற்குலகம் இன்று ஒருவகையான குற்றப்பழி உணர்வில் நிற்கிறது. தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன அழித்தல் பாவத்தில் தமக்கும் மறைமுக பங்கு உண்டு என நினைக்கிறது. ஏதாவது செய்ய வேண்டும் -குறைந்தபட்சம் தமிழ் மக்களுக்கான உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என விரும்புகிறது. தயவுசெய்து புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும் உங்கள் தமிழர்களோடு உங்களுக்கு தொடர்பிருந்தால் மேற்குலக நாடுகளின் இக்குற்றப்பழி உணர்வை கனப்படுத்தி தேசிய பாரமாக்கும் செயற்பாடுகளை தாமதமின்றி பெரிய அளவில் மேற்கொள்ளச் சொல்லுங்கள் - என்றனர்.
போருக்கெதிரான பத்திரிகையாளர்கள் இருபதுபேர் இணைந்து ஆக்கி நல்லேர் பதிப்பகம் வெளியிட்ட "ஈழம்-மௌனத்தின் வலி' புத்தகத்தை தற்செயலாக என் மேஜையில் கண்டு, புரட்டிப் பார்க்கலாமா என கேட்டனர். பின்னர் ஆயிரம் ரூபாய் கொடுத்து பத்து புத்தகங்கள் வாங்கிக் கொண்டனர். தமிழ் அவர்களுக்குப் புரியாது. ஆனால் அப்பதிவின் பின்புலத்தை எடுத்துச் சொன்னேன். அடுத்தநாள் தொடர்புகொண்டு கூறினார்கள்: இப்புத்தகம் போல் உலகத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் கருத்துக்களோடு ஆங்கிலத்தில் ஓர் ஆக்கம் செய்து உலகெங்கும் -குறிப்பாக மேற்குலக நாடுகளின் மக்களுக்கு வினியோகிக்கும்படி புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களுக்குச் சொல்லுங்கள் என சற்றேறக்குறைய மன்றாடிக் கேட்டுக்கொண்டனர். ஆம், உலக மனசாட்சியின் குற்ற உணர்வை பாரமுடையதாக்குங்கள். தமிழருக்கு அநீதி செய்துவிட்டோம் என ஒவ்வொரு நாடும் உணரச் செய்யுங்கள் -என்றனர்.
அவ்வாறே தமிழர்கள் இந்நாட் களில் செய்யக்கூடாத சிலவற்றையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
(நினைவுகள் சுழலும்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=22042
போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்! - ஜெகத்
ஈழம்வரும். ஈழம் மலரும். ஈழம் சாத்தியமே. இவ்வாறு எழுதுவதை அதீத கனவு விருப்பாகக் கருதி நின்ற பலருக்கு வேகமாக மாறிவரும் காட்சிகள் நம்பிக்கை தந்துள்ளன. நாட்டுக்குள் ராஜபக்சே சகோதரர்கள் திடீரென அடைந்துள்ள பதற்றமும், உலக அளவில் போர்க்குற்றங்கள் தொடர்பாக எடுக் கப்பட்டுவரும் அமைதியான, உறுதியான முயற்சி களும் அத்தகு நம்பிக்கையை மேலும் அதிகரித் துள்ளன. எனவேதான் நாமும் ஈழம் மலர இன்று செய்யப்படவேண்டியவற்றை பொறுப்புணர்வுடன் சிந்திக்கத் தலைப்படுகிறோம்.
கடந்த இதழ்களில் மூன்று விடயங்களை கோடிட்டிருந்தோம். வதை முகாம்களிலிருந்து மக்களை மீட்டு அவர்கள் மறுவாழ்வு தொடங்க உதவு தல் முதலானது; தமிழீழ தாயக நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறாது தடுத்தல் இரண்டாவதும் மிக அடிப்படையானதும். குறிப்பாக அடுத்த பனிரெண்டு மாத காலம் இவ்விடயத்தில் உலகத் தமிழர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இயங்கவேண்டிய காலம். இந்தியாவும், உலக நாடுகளும் உறுதியான ராஜதந்திர அழுத்தங்களைக் கொடுப்பதும், இலங்கைக்குள் தமிழ் அரசியற் சக்திகள் ஒன்றிணைந்து இது தொடர்பாக ஒரே குரலில் முழங்கி இயங்குவதும் சிங்களக் குடியேற் றங்களைத் தடுத்து நிறுத்துவதில் முக்கிய பங்காற்ற முடியும். மூன்றாவதாக தமிழீழ விடுதலைப் போராட்டம் மீது கவிந்த "பயங்கரவாதம்' என்ற நச்சுத்திரையை அகற்றி ஈழத்தமிழர்கள் வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் தனித்துவமான ஓர் தேசிய இனம், அதனாலேயே அவர்கள் சிங்களப் பேரின வாதத்தால் இன அழித்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக் கிறார்கள். அவர்கள் பாதுகாப்பாக எதிர்காலத்தில் வாழவேண்டுமென்றால் அவர்களுக்கென தனி நாடு அமைக்கும் அரசியல் சுயநிர்ணய உரிமையை அவர்களுக்கு வழங்குவதுதான் தீர்வு என்ற நிலைப்பாட்டினை உலகம் ஏற்றுக்கொள்ளச் செய்தது. இது மிக மிக முக்கியமானது.
தமிழர் மீது நிகழ்ந்த இன அழித்தல் போர்க்குற்றங்களை முறைப்படி பதிவு செய்து நிறுவி ஆதாரபூர்வமாக நம்மால் நிரூபிக்க முடியுமெனில், உலகினது மனசாட்சியின் முன் அதுவே நம் மக்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைக்கான மிகப்பெரும் அறைகூவலாய் நிற்கும். உலகம் அதனை சுலபமாகப் புறந்தள்ளவோ, நிராகரித்துவிடவோ முடியாது.
நீதியை நிலைநாட்டுதல் என்பதே நம்பிக்கையுடன் நாம் மேற்கொள்ளும் இடைவிடாத முயற்சிகள்தான். இம்முயற்சியில் தமிழர்களாகிய நாம் தனித்துவிடப்பட்டவர்களல்ல. சிதைக்கப்பட்ட நம் பொது வரலாற்று ஆன்மாவின் வலிகளைப் பகிர்ந்து கொள்ளவும், மீண்டுமொரு வசந்த காலத்திற்காய் அதனை ஆற்றுப்படுத்தி மீட்கவும் பாருலகின் பொது மானுடம் நிச்சயம் நம்மோடு இணையத்தான் செய்யும் என்ற நம்பிக்கையை இரண்டொரு நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வொன்று தந்தது.
போர்க்குற்றங்களை முறைப்படி பதிவு செய்யும் அனைத்துலக அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கடந்த திங்கட் கிழமையன்று தொடர்புகொண்டு பேசினர். போர்க்குற்றங் களுக்கு உள்ளாக்கப்பட்ட அப்பாவி மக்கள் பலருடைய வாக்குமூலங்களை அவர்கள் சேகரித்துவிட்டதாகவும், மேலும் சில திசைகளில் முக்கிய ஆதாரங்கள் இருந்தால்தான் வலுவான, "போர்க்குற்ற வழக்கினை' உருவாக்க முடியுமென் றும் கூறி அதற்கு உதவ முடியுமா என்றும் கேட்டார்கள். அவர்கள் கேட்டவற்றை நான் இங்கு பதிவு செய்கிறேன். ஏனென்றால் இதனைப் படிக்கிற யாருக்கேனும் அவை தொடர்பான சிறு சாட்சியம் சாத்தியப்பட்டாலும்கூட அது இலங்கையை உலக அரங்கில் போர்க்குற்றவாளியாய் நிறுத்திட பேருதவியாய், வலுவான சாட்சியமாய் அமையக்கூடும். பின்வரும் சாட்சியங்களை அவர்கள் கேட்டார்கள், கேட்கிறார்கள்.
நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் வெள்ளைக் கொடியேந்தி சரணடைய வந்த விடுதலைப்புலிகள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டது நாம் அறிந்தது. உலகின் பார்வையில் இது மிக முக்கியமான போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் அதை நேரில் கண்டவர்கள் குறிப்பாக சரணடையச் சென்றவர்களில் யாரேனும் உயிர்தப்பியிருந்தால் அவர்களில் ஒருவரது வாக்குமூலமே போதுமானது என்கி றார்கள். உலகில் அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை பாது காப்பாக எல்லா செலவுகளையும் செய்து வெளிநாடு ஒன் றிற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பதிவு செய்ய அவர்கள் தயாராயிருக்கிறார்கள். அதுபோலவே சரணடைய முயன்ற பிற போராளிகளை -குறிப்பாக புலிகளின் அரசியற் பிரிவினரை சிங் கள ராணுவம் சுட்டுக்கொன்றதைக் கண்டவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களின் வாக்குமூலங்களையும் கேட்கிறார்கள்.
இரண்டாவதாக, சிங்கள ராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் சாட்சியம். அப்பாவி ஜீவன்களை வல்லுறவுக்கு உள்ளாக்குவதை மிக மோசமான போர்க்குற்றமாக மேற்குலகம் வரையறுக்கிறது. அமெரிக்காவின் இந்நாள் வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன்கூட இது விஷயத்தில் மிக உறுதியாய் பேசி வருவதோடு -இலங்கையை "குற்றவாளி நாடு' என்றே ஒரு உரையில் வருணித்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து இதுதொடர்பான வாக்கு மூலங்களைப் பெறுவது சுலபமானதல்ல. அதேவேளை உலக மனிதாபிமானச் சட்டங்களின்படி இரண்டாம் நிலை சாட்சியங் கள்கூட போதுமானது என்கிறார்கள். அவ்வாறு வல்லுறவுக்கு உள்ளான தமிழ்ப்பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அக்கொடுமை யை யாரிடமாவது பகிர்ந்துகொண்டிருந்தால் -குறிப்பாக மருத் துவர், தன்னார்வ நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், அருட் தந்தையர்கள், அருட்சகோதரியர்கள் ஆற்றுப்படுத்துநர் (ஈர்ன்ய்ள்ங்ப்ப்ர்ழ்) இவ்வாறான யாரோடேனும் பகிர்ந்துகொண்டிருந்தால் இவர்கள் முன்வந்து அப்பெண்களுக்காய் சாட்சியம் கூறலாம். அவை அனைத்துலக போர்க்குற்ற/மனிதாபிமான சட்டங்களின் முன் நிற்கும் தன்மை கொண்டவையே என்கிறார்கள்.
அதுபோலவே சரணடைந்த பெண் போராளிகள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாய், தொடர்ந்தும் அக்கொடுமை நடந்தேறி வருவதாய் சொல்லப்படுகிறது. அது தொடர்பான நேரடி அல்லது இரண்டாம் நிலை சாட்சியங்களையும் அந்த அமைப்பினர் கேட் கிறார்கள்.
நான்காவதாக முள்ளிவாய்க்கால், வவுனியா, இன்னபிற இடங்களில் -அதாவது போரின் இறுதி மாதங்களிலும், போருக்குப் பின்னரும் நடந்தேறிய மானுட அவலங்களை தங்கள் கேமராக்களிலும், கை பேசிகளிலுமாய் புகைப்படம் எடுத்தவர்கள் யாரேனும் இருந்தால் -அவர்களது கேமராக்கள், கைபேசி களிலேயே இன்னும் அப்படங்கள் பாதுகாப்பாக பதிவில் இருந்தால் அவை மிக முக்கியமான போர்க்குற்ற ஆதாரங்களாக நிற்கும் வலுக் கொண்டவை. இணையதளங்களில் பேரவலத்தின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் காணக்கிடக் கின்றனதான். ஆனால் அவை சட்டத்தின் முன் ஆதாரங்களாக ஏற்கப்படும் தன்மை கொண்டவை யல்ல. மாறாக கேமராக்களும், கைபேசிகளும் தீர்க்கமான, உறுதியான ஆதாரங்களாக நிற்கும். அவ்வாறு யாரிடமாவது இருந்தால் அவர்கள் முன்வந்து தருமாறு விரும்பிக் கேட்கிறார்கள்.
மேற்சொன்ன நான்கு திசை ஆதாரங்களை யார் தர முன் வந்தாலும் அவர்களது பெயர், விபரங்கள் அனைத்தையும் பூரண ரகசியத்தன்மையோடு பாதுகாத்திட அவர்கள் வாக்குறுதி தருகிறார்கள். இன அழித்தல், போர்க்குற்ற நீதி தேடும் புனித மான வரலாற்று முயற்சியில் யாராவது மேற்சொன்ன சாட்சியங்களாக இருந்தால் வரலாற்றுப் பொறுப்புணர் வுடனும், பொது மானுடக் கடமையுணர்வுடனும் தயவு செய்து தொடர்பு கொள் ளுங்கள். எனது முகவரி : ஜெகத் கஸ்பர், 68, லஸ் கோவில் சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004.
மின் அஞ்சல்: jegath66@yahoo.co.uk. இணைய தளம் www.jegathgaspar.com.
போர்க்குற்றங்கள் தொடர்பான இச்செயற்பாட்டில் என்னை அணுகியவர்கள் வெள்ளைக்காரர்கள். அவர்தம் பின்னணி என்ன, தமிழர் மீதான இந்த அக்கறைக்கு அரசியற் காரணங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதையெல்லாம் அறியவேண்டி நேரடியாகவே அவர்களை நான் வினவினேன். எனது கேள்விகளுக்கு அவர்கள் தந்த பதில் ஆறுதலாயும், மிகுந்த நம்பிக்கையாகவும் இருந்தது.
இலங்கையை தமிழருக்கெதிரான போர்க்குற்றவாளியாய் நிறுத்தும் இம்முயற்சியில் இயங்கி வரும் இந்த அமைப்பினர் இப்புலத்தில் முன் அனுபவம் கொண்ட நிபுணர்கள். ஆனால் இப்பணியை ஏற்றுச் செய்யும்படி இவர்களை அணுகி அதற்கு ஆகும் பெரு நிதி பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் யார் என்பதுதான் நெகிழ்வான செய்தியாய் இருந்தது.
(நினைவுகள் சுழலும்) http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21727
நமக்கு விடப்பட்ட சவால்!
அமெரிக்காவின்வேகத்துக்கும் வேறு பின்னணிகள் உள்ளது. அவற்றில் இந்தியப் பெருங்கடல் பிராந்திய வல்லாதிக்க கணக்குகள் உண்டு. அவைதான் அடிப்படையானவை. சீனா- ரஷ்யா-ஈரான் நாடுகளை இப்போது இந்தியப் பெருங்கடலுக்கான ஐரோப்பிய-ஆசிய அச்சுக் கூட்டணி என்கிறார்கள் (Euresian Alliance). தமிழர்களை அழிக்க கனரக, நவீன, ரசாயன ஆயுதங்கள் மற்றும் பெரும் பொருளுதவி கொடுத்துதவியவர்கள் இவர்களென்பதால் ராஜபக்சே சகோதரர்கள் அவர்கள் பக்கமாய் சாய்கிறார்கள். அதன்வழி மேற்சொன்ன நாடுகள் இந்தியப் பெருங்கடலில் வலுவாகிற சூழலை அமெரிக்க மேற்குலகம் இடைமறிக்க விழைகிறது. ராஜபக்சே சகோதரர்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்துவது அதற்கான ஓர் தந்திர வியூகம். அவ்வளவுதான்.
கார்த்திகை 27 வருகிறது. தமிழீழக் கனவு சுமந்து களமாடிக் காவியமாகிய முப்பத்து ஏழாயிரத் திற்கும் மேலான மாவீரர்களையும் சுமார் ஒன்றரை லட்சம் மக்களையும் தமிழுலகம் வணங்கிப் பணியும் நாள். ஈழத்திற்கான இறுதிப்போருக்கு நம்மையெல்லாம் அழைக்கின்ற நாள். தூர விலகி நிற்பதற்கு இதுவரையும் நூறு காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் மே-17 முள்ளிவாய்க்கால் இன அழித்தல் நடத்தி முடிக்கப்பட்ட பின் நாம் விலகி நிற்பதை நியாயப்படுத்த எக்காரணமும் இல்லை.
லட்சோப லட்சம் தமிழ் மக்களின் வீடு, வாசல்களை தரைமட்டமாக்கி, ஆடு, மாடுகள் போல் அடித்துத் துரத்தி உணவு, மருந்து, குடிநீர் மறுத்து குழந்தைகள், பெண்க ளென்றுகூட கருணை காட்டும் மனமின்றி வன்கொலைகள் புரிந்து, வயதுப் பிள்ளைகளோடு பெற்றவர்களையும் நிர்வாணமாய் கரங்களுயர்த்தி நடக்க வைத்து, ஒரேநாளில் இருபதாயிரம்பேரை படுகொலை செய்து, நூற்றுக் கணக்கானவர்களை உயிரோடும் புதைக்க முடிந்த கொடுங்கோலர்களோடு மானமுள்ள எந்தத் தமிழனுக்கும் சமரசம் இல்லை, நீதி கிடைக்கும்வரை, ஈழம் மலரும்வரை நாம் ஓய்வதுமில்லை.
எல்லாவகையிலும் வேதனையுற்று நிற்கிறோம். ஆனால் ஒடுங்கிப் போகவில்லை. மனக்கலக்கம் அடைந்து நிற்கிறோம், ஆனால் மனம் உடையவில்லை -உறுதி தளரவில்லை, வீழ்த்தப்பட்டு நிற்கிறோம், ஆனால் முற்றிலுமாய் அழிந்து போகவில்லை. இந்த நம்பிக்கையோடே அடிபணியமாட்டோம், அறப்போர் தொடரும் எனச் சங்கநாதம் முழங்கி உலகத் தமிழர்கள் மாவீரர்களையும், உயிர் நீத்த மக்களையும் வணங்க அணிவகுக்கிறார்கள்.
நண்பர் ஒருவர் சொல்லிக்கேட்ட ஈழத்துப் புறநானூற்றுக் கதைகளில் ஒன்று இது. தற்கொலைப் போராளி ஒருவர் தன் இலக்கு நோக்கிய பயணத்தை தொடங்குகிறார். அவரை வழிநடத்தி முன்செல்ல வெளியிலும் மறைவிலுமாய் பல அணிகள் இருக்குமாம். இலக்கினை நெருங்கியபின் கடைசியான தாக்குதல் உத்தரவினை புலனாய்வுப் பிரிவின் போராளி ஒருவர் வழங்குவாராம். அவ்வாறே பயணித்து, தடைகள் பல கடந்து தாக்கவேண்டிய இலக்கு வட்டத்தை அடைகிறார் அத்தற்கொலைப் போராளி. அங்குதான் தெரிகிறது தாக்குதலுக்கான இறுதிக் கட்டளையை தரவேண்டிய புலனாய்வுப் போராளியாக நிற்பது ஐயிரண்டு திங்கள் சுமந்து பெற்று ஆசையுடன் தனை வளர்த்த தாய் என்ற உண்மை. இருவரும் போராட்ட இயக்கத்தில் இணைந்து பயணிப்பதுதான் அவர்களுக்குத் தெரியுமேயன்றி, யார் எத்துறையில் கடமையாற்று கிறார்களென்பது இருவருக்குமே தெரியாது. தாயும் மகனும் சந்தித்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. விடுதலைக்கான தியாக வேள்வியில் தன்னை ஆகுதியாக்கும் இறுதிக் கணத்தில் தாயும் மகனும் மீண்டும் ஒருகணம் இறுதியாகச் சந்திக்கிறார்கள். கண்கள் பேசுகின்றன. தாய்மை இடைமறிக்க வில்லை. தமிழீழம் என்ற தாயகக் கனவே அந்த வீரத்தாயின் ஆன்ம உயிராய் நிற்கிறது. கட்டித்தழுவி கண்ணீருடன் கடைசி முத்தம் தரும் அவகாசம்கூட இல்லை. தாக்குதல் கட்டளையை பிறப்பிக்கிறாள் அந்த புதிய புறநானூற்றுத் தாய். அம்மா என்று அழைக்கவோ, இன்னும் சிலகணம் ஈன்ற தாயை அணைத்துப் பிரியவோ அத்தனயனும் எத்தனிக்க வில்லை. கட்டளை பிறந்ததும் இலக்கு நோக்கி நகர்ந்து தீப்பிழம்பாய் தன்னை அர்ப்பணிக்கிறான். தாய்மையின் விகாசங்களில் பிறிதொரு நெருப்பு நிச்சயம் எழத்தான் செய்திருக்கும். இல்லையேல் அவள் தாயில்லை. ஆயினும் தாய்மையின் தவிப்பும், தாயகக் கனவும் தழுவிக்கொண்ட வியாகுலப்பொழுதில் அந்தத் தாய் அரவணைத்தது தாயகக் கனவையே.
ஒன்றா, இரண்டா... தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகள் முப்பத்தேழாயிரத்திற்கும் மேல். அவர்களது முடிவிலா கனவாம் தமிழீழ நாள்தான் கார்த்திகை 27. இவ் ஆண்டின் அப்புனித நாள் முற்றிலும் புதியதோர் காலச்சூழலில் வருகிறது.
முக்கியமானதொரு அறிக்கையினை இம்மாதம் கடந்த 8-ம் தேதியிட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்டிருந்தது. முள்ளி வாய்க்கால் மே-17 ஆயுதப்போராட்ட மௌனிப்புக்குப்பின் விடுதலைப்புலிகளின் கட்டளைத் தலைமை பற்றின தெளிவானதும் வெளிப்படையானதுமான தோற்றப்பாடு இன்னும் நமக்குக் கிட்டவில்லையென்றாலும்- அந்த அறிக்கையின் இரண்டு கருத்துகள் கவனத்திற்குரியவை யாய் இருந்தன.
முதலானது, ""முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வீரமிகு ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்கால் மானிடப் பேரழிவினை தவிர்ப்பதற்காக மௌனிக்கப்பட்டது. இன்றைய சூழலில் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தவேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும் -குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடமும் ஒப்படைக்கப்படுகிறது - என்ற பகுதி.
இரண்டாவது, அரசியல் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிஈழம் அமைக்கும் உரிமை ஈழத்தமிழ் மக்களுக்கு உண்டு என்பதை உலகளவில் துரிதமாய் நிறுவும் பணியில், புலம்பெயர் ஈழமக்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படுகின்ற மக்கள் அவைகள் ஜனநாயக முறையில் அமையவேண்டுமென்ற அறிவுறுத்தலும், அவ்வாறு அமைவதானது மக்கள் பங்களிப்புகளை விரிவுபடுத்தவும், வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும், நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும் உதவக்கூடியதாக அமையும் -என்ற அறிவுறுத்தல்.
இந்தியத் தமிழர்களாகிய நாம் ஏன் ஈழ விடுதலை முயற்சியில் இணைகிறோம் -இணையும் வரலாற்றுக் கடமையில் இருக்கிறோமென்றால் அங்கு அம்மக்கள் அழிக்கப்பட்டமைக்கு ஒரே காரணம் அவர்கள் நாமும் பேசுகின்ற தமிழ்மொழியின் மக்களாயும், அதன்வழி "தமிழர்' என்ற இனத்தவராயுமிருந்ததால். எந்த அடிப்படையில் அடக்குமுறை நிகழ்கிறதோ, அதே அடிப்படையில்தான் எதிர்ப்பதிலும் அமையுமென்ற வகையில் தமிழ்மொழி- இன- தேசிய அடிப்படையில் நின்று சிங்களப் பேரினவாதத்தையும் அதன் துணையாளர்களையும் நாம் எதிர்கொள்கிறோம். இரண்டு அங்கு நிகழ்ந்தது இன அழித்தல்; நடந்தேறிய கொடூர போர்க்குற்றங்கள் ஒன்றிரண்டல்ல; நடந்தவற்றை முறைப்படி பதிவு செய்யும் மிகக் குறைந்தபட்ச நீதிகூட இன்னும் நடக்கவில்லை. இன அழித்தலும் போர்க்குற்றங்களும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள். தமிழரென்ற அடையாளத்தையும் கடந்து மனிதர்கள் என்ற அடிப்படையில் சிங்களப் பேரினவாதத்தையும் அதன் துணையாளர்களையும் நீதித் தணிக்கைக்கும் தண்டனைக்கும் உட்படுத்துவது நம் மானுடக் கடமையாகவும் ஆகிறது.
இன்றைய நிலையில் முதலாகவும், விரைந்தும் யாவரும் ஒன்றாய் இணைந்தும் செய்யவேண்டியது முள்ளிவாய்க்காலுக்குப் பின் மிஞ்சிய மக்களை வதை முகாம்களிலிருந்தும், உலகை ஏமாற்ற அவர்களை வவுனியாவிலிருந்து விடுவித்துவிட்டு மன்னாரிலும் பிற பகுதிகளிலும் அடைத்து வைக்கும் மோசடியிலிருந்தும், ஊர் திரும்பியபின் யாருமறியாமல் இளவயதுப் பிள்ளைகளை தீர்த்துக்கட்டும் கொடுமையினின்றும் மக்களைக் காப்பது. மக்கள் இன்றி ஈழம் எதற்கு? விழிப்புணர்வுடன் உலகத்தமிழர் நடத்தும் இடைவிடா இயங்குதலால் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படும் உலகநாடுகள், அமைப்புகளால் மட்டுமே இதனைச் செய்ய முடியும். அவ்வாறே ஆங்காங்கு கொண்டு அனாதைகளாய் இறக்கிவிடப்படும் நம் மக்கள் மீண்டுமொரு வாழ்வைத் தொடங்குவதற்கான திட்டமிடப்பட்ட பொருண்மிய உதவிகள் செய்தல்.
இரண்டாமது முதலானதற்கு இணையானது. ஒருவகையில் அத னிலும் முக்கியமானது, அடிப்படை யானது. தமிழீழ தாயகம் என்ற நில அலகு காப்பாற்றப்படுதலே அது. யாழ்குடா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ராஜபக்சே-கோத்தபய்யா திட்டப்படி சிங்களக் குடியேற்றங்கள் நடந்தால் -நடப்பது அனுமதிக்கப்பட்டால் ஈழம் என்ற கருதுகோளே இல்லாது போய்விடும். தமிழர் நிலத்தை அபகரித்து சிங்களமயப் படுத்துவதொன்றும் சிங்களப் பேரினவாதத்திற்குப் புதிதல்ல. தமிழீழத்தின் தலைநகரம்- இதயம் என வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இதயத்தில் வணங்கிய திருகோணமலை மாவட்டத்தில் 1827-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 81.8% பேர் தமிழர்கள். 1.3% பேரே சிங்களவர். எஞ்சிய 16.9% பேர் தமிழ் பேசிய இசுலாமிய மக்கள். இதே மாவட்டத்தில் 1981 கணக்கெடுப்பின்போது 81.8 சதமாயிருந்த தமிழர் 36.4 சதமாகச் சுருங்கிவிட்டனர்; 1.3 சதமாயிருந்த சிங்களவர் 36.4 சதமாக விரிந்தனர்.
இன்று கணக்கெடுத்தால் சிங்களவர் திருகோண மலை நிலத்தில் தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும் வியப்பதற்கில்லை. இந்த ஆபத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் நிகழுமேயானால் ஈழத்தை நாம் மறந்தேவிடலாம். கோத்தபய்யா திட்டப்படி இவ்விரு மாவட்டங்களிலும் நெறி செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் விரைவில் தொடங்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகத் தமிழ் மக்கள் முன் நிற்கும் மிகவும் அடிப்படையான சவால் இதுதான். இதனைத் தடுத்து நிறுத்தும் வலு நிலையில் தமிழர்கள் நாம் இன்று இல்லை. இலங்கைக்குள், ஒருமித்த தமிழ் அரசியல் வலுப்பட்டு, அது உலகத்தமிழ் மக்களின் ஒருமித்த வலுவோடு இணைந்து இரண்டுமாய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு உருவாக்கும் தீரா அழுத்தத்தின் மூலமாகவே அதைத் தடுத்து நிறுத்த முடியும். அனைவரும் இணைந்து நின்றால் மட்டுமே இது சாத்தியம். அதைவிடுத்து வள்ளுவப் பெருந்தகை சொல்வதுபோல், "பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையுமாய்' தமிழர் நாம் இப்போதுமிருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது.
ஈழம் மலர வேறென்ன நிகழவேண்டும்?
(நினைவுகள் சுழலும்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21280
இத்தாலி பெண்மணி இந்தியாவுக்கு அன்னையாகலாம்; ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு
அம்மாவாகலாம்; என் தலைவன் எனக்கு அண்ணனாகக் கூடாதா? சீமானுடன் ஒரு
நேர்காணல்
வீர வணக்க நாள் நிகழ்வுக்காக கனடா போன ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சீமான்,
அங்கே கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.
‘பிரிவினையைத் தூண்டும் விதமாக சீமான் பேசினார்’ என கனடா அரசு
குற்றம்சாட்ட… இன்னொரு புறமோ இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கனடாவுக்கு
விசிட் அடிக்கும் நேரத்தில், தேவையற்ற சலசலப்புகளைத் தடுக்கும் விதமாகவே
சீமான் திருப்பி அனுப்பப்பட்டதாக பரபரப்பு கிளம்பி இருக்கிறது.
இந்நிலையில் நாம் சீமானை சந்தித்தோம்.
Seeman”கனடாவில் அப்படி என்னதான் பேசினீர்கள்?”
”வருடந்தோறும் கனடாவில் உள்ள ஈழமுரசு பத்திரிகை, மாவீரர் தினத்தை எழுச்சி
நாளாகக் கொண் டாடும். கடந்த 2007-ம் ஆண்டே அந்த விழாவில் நான் கலந்து
கொண்டிருக்கிறேன். அதேபோல் இந்த வருடமும் ‘ஈழமுரசு’ என்னை
அழைத்திருந்தது. இதற்கிடையில் 25-ம் தேதி கனடா மாணவர் சமூகம் என்ற
அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாவீரர் தின நிகழ்வில் நான் கலந்துகொண்டு
பேசினேன். அங்கே பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் ஒரு வார்த்தையைக்கூட
நான் உச்சரிக்கவில்லை. ‘தந்தையர் நாடாக நாம் நினைத்த இந்தியாவும், உலக
நாடுகளும் ஈழ தேசத்தை அவமான சாட்சியாக்கிவிட்டன.
நாம் எதையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது. இனி யாரையும் நம்பி
பலனில்லை. நமக்கான சுதந்திரம், நம் கையில்தான் இருக்கிறது. அதற்காக
யாரும் உயிரைக் கொடுக்க வேண்டாம்; உணர்வையும் ஒற்றுமையையும் கொடுத்தால்
போதும்!’ என்பதுதான் அங்கே நான் வைத்த பிரதான வாதம்.
இதில் எங்கே இருக்கிறது பிரிவினைக்கான சதி? இத்தனைக்கும் கனடா மிகப்
பெரிய ஜனநாயக நாடு. அங்கேயும் ஜனநாயகத்தை நசுக்கும் வேலையை இந்திய தேசம்
கற்றுக் கொடுத்து விட்டதோ என்னவோ… அதனால்தான் காரணமே இல்லாமல் என்னை கைது
செய்து, மாவீரர் நாளில் நான் பேச முடியாதபடி தடுத்து விட்டார்கள்.”
”கைது நடவடிக்கை மிகக் கடுமையாக இருந்ததாகச் சொல்லப்படுகிறதே?”
”மாணவர் சமூக அமைப்பு விழாவில் நான் பேசிவிட்டு வந்த அடுத்தநாள் அதிகாலை
என்னை எழுப்பியது கனடா நாட்டு போலீஸ். ‘இந்தியாவை பழித்துப் பேசியது
ஏன்?’ எனக் கேட்டார்கள். அதை நான் மறுத்ததும், ஏதோ ஏழெட்டு கொலைகளை
நிகழ்த்திய குற்றவாளியைப் போல் கையில் விலங்கிட்டு, பின்புறமாக கட்டி
ரொம்ப தூரத்துக்கு என்னை நடத்திக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு
இந்திய அதிகாரியான சிங் ஒருவர் என்னை விசாரித்தார்.
பல கேள்விகளைக் கேட்ட அந்த அதிகாரி, ‘ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை
நியாயப்படுத்துகிறீர்களா?’ என்றார். ‘உங்கள் சீக்கிய சமூகத்தினர் இந்திரா
காந்தியைக் கொன்றார்களே… அதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா?’ எனக்
கேட்டேன். இதனால் அந்த சிங்குக்கு கோபம் வந்து விட்டது. உடனே நானும்
தலைவர் பிரபாகரனும் இருக்கும் படத்தைக் காட்டி, ‘இவர் உன்னோட பிரதரா?’
எனக் கேட்டார். ‘ஆமாம்… தமிழ் ரத்தம் ஓடும் அனைவருக்குமே அவர்
சகோதரர்தான்!’ எனச் சொன்னேன். அடுத்தடுத்தும் ரெண்டரை மணி நேரத்துக்கும்
அதிகமாக என்னைக் குடைந்து கொண்டே இருந்தார். எதையாவது என் வாயிலிருந்து
பிடுங்கி, என்னை நிரந்தரமாக கனடா சிறை யிலேயே சிக்க வைத்து விட வேண்டும்
என்பதுதான் அவருடைய திட்டமாகத் தெரிந்தது.”
”பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், மறைந்து விட்டதாகவும் மாறி மாறிக்
கிளம்பும் செய்திகளால், உலகத் தமிழர்கள் இரு கூறாகப் பிரிந்து விட்டதாகச்
சொல்லப்படுகிறதே? இதனால்தான், தமிழகத் தலைவர்கள் பலரும் வெளிநாடுகளில்
தங்ளுக்குள் சங்கடம் நேரலாம் என்றெண்ணி இது போன்ற நிகழ்ச்சிகளுக்குப்
போவதில்லை என்றும் கருத்து நிலவுகிறதே?”
”வெளிநாடுவாழ் தமிழர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தலைவர்
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்புகிறார்கள். அதனால்தான்
அவர்களிடையேயான எழுச்சி எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பன்மடங்காகப்
பெருகியிருக்கிறது. வெளிநாடுகளில் பரவியிருக்கும் டக்ளஸ், கருணா போன்ற
வர்களின் ஆதரவாளர்கள்தான் தேவையற்ற குழப்பங்களை தமிழ் மக்கள் மத்தியில்
விதைத்து வருகிறார்கள். பிரபா கரனும், அவர் தலைமையிலான தேசிய ராணுவமும்
அழிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லும் – அதையே நம்பும் உலக நாடுகள், புலிகள்
அமைப்பு மீதான தடையை இப்போதாவது நீக்க வேண்டியதுதானே? இல்லாத
இயக்கத்துக்கு ஏன் தடை நீட்டிக்கிறீர்கள்? தரிசு என்று சொல்லிக்கொண்டே,
அந்த நிலத்துக்கு வேலி போடும் முரண்பாட்டை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள்
ஏன் கடைப்பிடிக்கின்றன? தலைவர் பிரபாகரன் நிஜமாகவே கொல்லப்பட்டிருந்தால்,
அவருக்குரிய வீர வணக்கத்தை தமிழர்கள் தைரியமாக நிகழ்த்தி இருப்பார்கள்.”
”ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டை தாக்கியது உங்களின் ‘நாம் தமிழர்’
அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என போலீஸ் சொல்கிறதே?”
”என் வீட்டை தாக்கி, காருக்கு தீ வைத்து, இளங்கோ வனின் போஸ்டரையும்
ஒட்டிவிட்டுப் போனவர்களின் மீது இன்றுவரை நடவடிக்கை இல்லை? பாரதிராஜாவின்
அலுவலகத்தைத் தாக்கியவர்களின் கார் எண்ணைக் கொடுத்தும் இன்று வரை
யாரையும் கைது செய்யவில்லை. தா.பாண்டியனின் கார் எரிக்கப்பட்டு இத்தனை
மாதங்கள் ஆகியும் யார் மீதும் போலீஸ் வழக்குப் பதியவில்லை. ஆனால்,
இளங்கோவனின் வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் மட்டும் தமிழக போலீஸ் சீறிக்
கிளம்பியிருக்கிறது. அவசர கதியில் எங்களின் ‘நாம் தமிழர்’ அமைப்பைச்
சேர்ந்த தம்பிகள் நால்வரை கொஞ்சமும் உண்மை இல்லாமல் குற்றவாளியாக
ஜோடித்திருக்கிறது போலீஸ்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளங்கோவனை நாங்கள் தோற்கடித்ததற்காக,
வேண்டுமென்றே எங்கள் இயக்கத் தம்பிகளை அவர் கைகாட்டி இருக்கிறார்.
தைரியமிருந்தால் தேர்தல் களத்தில் இளங்கோவன் எங்களோடு மோதிப்
பார்க்கட்டும். சிவாஜி கணேசன், வாழ்ப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் தனிக்
கட்சி ஆரம்பித்தபோது, அவர்களுக்கு சாமரம் வீசிய இளங் கோவனுக்கு
இப்போதுதான் ராஜீவ்காந்தி பாசம் பொத்துக் கொண்டு வருகிறதா? ராஜீவ்
குடும்ப அன்பைப் பெறவும், அரசியலில் தான் இன்னமும் இருப்பதாகக் காட்டிக்
கொள்ளவுமே பிரபாகரனின் போஸ்டரை இளங்கோவன் கிழித்திருக்கிறார். போஸ்டர்
கிழிப்பதும் புளுகு பேசுவதுமே இளங்கோவனுக்குப் பிழைப்பாகிவிட்டது.
இதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை. காற்றில் முறியும் முருங்கையல்ல
நாங்கள்… வேங்கையின் பிடரியை உலுக்கும் புலிகள்!”
- ஜூனியர் விகடன்
மருந்தானது
பிறந்த சிசு...!
இராமகோபாலனுக்கு தமுஎகச கடும் கண்டனம்
"தந்தை பெரியார் பற்றிய பாடங்களை நீக்க வேண்டும் என்று கூறுகிற தைரியம் இந்த நபருக்கு எப்படி வந்தது...?
சென்னை, டிச. 2-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பேராசிரியர் அருணன், பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் விடுத்துள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் பணியில் முதல் கட்டமாக, பாடத்திட்டங்களை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாடத்திட்டம் குறித்த முன் வரைவினை அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன், பாடத்திட்டத்தில் தந்தை பெரியார் பற்றிய பாடம் இருக்கக்கூடாது என்று கூச்சல் போடத் துவங்கியுள்ளார். மேலும் மறுமலர்ச்சி, விழிப்புணர்வு மற்றும் மூட நம்பிக்கை எதிர்ப்பு பற்றிய பாடங்கள் இருக்கக்கூடாது என்றும், இவையெல்லாம் இந்து விரோத நடவடிக்கைகள் என்றும் குற்றம் சாட்டியுள் ளார்.சமச்சீர் கல்விப் பாடங்களை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடத்தப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இராமகோபாலனின் இத்தகைய மத அடிப்படைவாத மிரட்டல்களை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது. விழிப்புணர்வுக் கருத்துக்கள் இந்து விரோதக் கருத்தென்று இவர் கூறுவதன் மூலம், இந்துக்களைக் கேவலப்படுத்தி யுள்ளார். இவருடைய மூடப்பழக்கத்துக்கு ஆதரவான கருத்துக்களை இந்துக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று தமுஎகச வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.
தந்தை பெரியார் பற்றிய பாடங்களை நீக்க வேண்டும் என்று கூறுகிற தைரியம் இந்த நபருக்கு எப்படி வந்தது? இஸ்லாமியர் பற்றியும், கிறிஸ்தவர் பற்றியும் பாடத்தில் வரவே கூடாது என்று கூறும் துணிச்சல் இந்த நபருக்கு எங்கிருந்து வந்தது?இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் இந்திய வர லாற்றில் இடமே இல்லையா? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?
வர்ணாசிரமக் கல்வி என்ற பேரில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலம், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி பெறும் உரிமையை மறுத்து வந்த அதே குரல்தான், இன்று இராமகோபாலன் வடிவில் வந்து நிற்கிறது. இந்த விஷவித்தை தமிழ் மண்ணில் ஊன்ற நாம் அனுமதிக் கக்கூடாது. மதச்சார்பற்ற ஒரு நாட்டில் வாழும் அனைத்துப் பகுதி மக்களும், சகல பகுதி அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற் றும் கலைஞர்களும் ஒரே குரலில் உறுதியுடன் இதை எதிர்த்து நிற்க வருமாறு தமுஎகச அறைகூவி அழைக்கிறது.
ஏதாவது ஒரு குற்றம் சொல்லி, எந்த வகையிலேனும் சமச் சீர் கல்வித் திட்டத்தை முடக்கிவிட வேண்டும் என்கிற அர சியலும் இக்குரலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது. தமிழகத் தில் எடுபடாமல் போன ரத்தக்கறை படிந்த தங்கள் இந்துத் துவா நிகழ்ச்சி நிரலை, இப்பிரச்சனையைப் பெரிதாக்குவதன் மூலம் முன்னுக்குக் கொண்டுவரும் முயற்சியாகவும் நாம் இதைப்பார்க்க வேண்டும்.
தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்காக வலுவாகக் குரல் கொடுக்கும் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களையும் இணைத்துக் கொண்டு, தமிழர் கல்வி உரிமைக்கு எதிரான இராமகோபாலனின் நடவடிக்கைகளை எதிர்த்துத் தமிழக மெங்கும் போராட தமுஎகச தயாராக இருக்கிறது.
இத்தகைய மத அடிப்படைவாதிகளின் குரலுக்குச் செவி சாய்க்காமல் அரசியல் உறுதியுடன் நின்று சமச்சீர் கல்வியை மதச்சார்பற்ற கண்ணோட்டத்துடன் கூடிய பாடத்திட்டத் துடன் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
http://theekkathir.in/index.asp
பிரபாகரனின் பெற்றோரிடம் ஆதரவு கோருகிறார் ஃபொன்சேகா
கொழும்பு, டிச. 2:
பிரபாகரனின் பெற்றோர் ஆதரவு அளித்தால் ஏற்றுக் கொள்வேன் என்று இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத் ஃபொன்சேகா கூறியுள்ளார்.
இலங்கை யில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன் நின்று நடத்தி அந்த இயக்கத்தையும், பிரபாகரனையும் அழிப்பதில் முனைப்புடன் செயல்பட்ட ஃபொன்சேகா தற்போது அரசியல்வாதியாக மாறி பிரபாகரனின் பெற்றோரிடமே ஆதரவு கோரியுள்ளார்.
முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள், பிரபாகரனின் பெற்றோர் என யார் எனக்கு ஆதரவு அளித்தாலும் அதனை ஏற்றுக் கொள்வேன் என்று ஃபொன்சேகா அறிவித்துள்ளார்.
சுமார் 70 வயதைக் கடந்து விட்ட பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை, பார்வதி தம்பதியினர் தற்போது இலங்கையில் சிறப்பு அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
http://dinamani.com/edition/story.aspx?SectionName=World&artid=163442&SectionID=131&
உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் ஜனவரி 12-ல் சந்திப்பு
கொழும்பு, டிச.1: உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி சந்திக்கவுள்
ள னர். இந்த சந்திப்பின் போது, போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்குப் பகுதியில் மறுவாழ்வுப் பணியை மேற்கொள்ளுதல் குறித்து ஆலோசித்து திட்டம் தீட்டவுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் உலகம் முழுவதும் வசிக்கும் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஈழத்தமிழர்கள் பங்கேற்கவுள்ளனர். இலங்கையில் ராணுவத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வந்த 30 ஆண்டுகால போர் முடிவுக்கு வந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் மறுவாழ்வுப் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த மறுவாழ்வுப் பணியில் பங்கேற்க உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு அந்நாட்டு சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமீபத்தில் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பின் பேரில், ஈழத்தமிழர்கள் தற்போது சந்தித்து மறுவாழ்வு திட்டத்தை தீட்டவுள்ளனர்.
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=World&artid=162889&SectionID=131&MainSectionID=131&SEO=&Title=
உற்றார் உறவினரைப் பார்க்க தமிழர்களுக்கு அனுமதி
கொழும்பு, டிச.1: இலங்கையின் வடக்கில் அரசு நடத்திவரும் பல்வேறு முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு செவ்வாய்க்கிழமை புதிய சுதந்திரம் அளிக்கப்பட்டது. அவர்கள் விரும்பினால் முகாமில் உள்ள அலுவலகத்தில் தங்களுடைய பெயர், இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்துகொண்டு முகாமைவிட்டு வெளியேறி தங்களுடைய உற்றார் உறவினர்களைச் சென்று பார்க்கலாம் என்பதே அந்த சுதந்திரம் ஆகும்.
இலங்கையில் உள்ள முகாம்களில் இப்போது அடைபட்டுக்கிடக்கும் தமிழர்களுக்கு இது மிகப்பெரிய நிம்மதியைத் தரும் என்று நம்பப்படுகிறது. முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு சென்று திரும்பிய பிறகு தமிழர்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்ந்து வருகின்றன என்றே கருத இடம் இருக்கிறது. அவர்களை அவர்களுடைய வழக்கமான குடியிருப்புகளில் குடியமர்த்த அரசு தரப்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரியாவிட்டாலும் இந்தச் சலுகை அதை விரைவுபடுத்தும் என்றே பார்வையாளர்கள் நம்புகின்றனர்.
ஜனவரி 31-க்குள் அத்தனை முகாம்களிலிருந்தும் தமிழர்கள் வெளியேறி இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தங்களுடைய பாரம்பரியக் குடியிருப்புகளுக்கே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசு கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
முகாம்களை விட்டு வெளியேறும் தமிழர்கள் எவ்வளவு காலம் வெளியே தங்கலாம், மீண்டும் எப்போது முகாமுக்குத் திரும்ப வேண்டும் என்ற வரைமுறையெல்லாம் இனி செவ்வாய்க்கிழமை முதல் கிடையாது என்று மறுவாழ்வளித்தல் துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் திங்கள்கிழமை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த முகாம்களில் போதிய இட வசதி இல்லை, குடிநீர், கழிப்பிட வசதி இல்லை, மருத்துவ வசதியும் போதாது என்று அதைப் பார்வையிட்ட பலர் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். அத்துடன் உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் சோர்ந்திருந்த தமிழர்களுக்கு முகாம்களில் வழங்கப்பட்ட உணவு போதிய சத்துகள் நிரம்பியதாகவோ, போதுமானதாகவோ இல்லை என்றும் கூறப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக முகாம்களிலும் கூட குடும்பங்கள் ஒன்று சேரவில்லை என்றும் ஆதங்கம் தெரிவிக்கப்பட்டது.
முகாம்களைப் பார்க்க உள்நாட்டு நிருபர்களுக்கும் சர்வதேச நிருபர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் சர்வதேச மனித உரிமைக் குழுவினர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் ஆகியோரும் தங்களுக்கு இலங்கை அரசு அனுமதி மறுப்பதாகத் தொடர்ந்து புகார்களைத் தெரிவித்துவந்தன. இந்த நிலையில் தமிழர்களை முகாம்களிலிருந்தே வெளியே சென்றுவர அனுமதித்திருப்பதால் தமிழர்களின் மன இறுக்கம் குறைய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
வவுனியா மட்டும் அன்றி முல்லைத் தீவிலும் தமிழர்களை மீண்டும் குடியமர்த்த இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது. துணுக்கை, பூநகரி, மல்லாவி பகுதிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் குடியமர்த்தப்படுவார்கள். வவுனியாவின் வடக்கில் மேலும் 18 ஆயிரம் தமிழர்கள் அடுத்த சில நாள்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று வடக்கு மாகாண கவர்னர் ஜி.ஏ. சந்திரசிறி திங்கள்கிழமையே தெரிவித்திருந்தார்.
குடியமர்த்தப்படும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீட்டுக்கு கூரை வேய 12 முதல் 18 கூரைத் தகடுகள் தரப்படுகின்றன. அத்துடன் 10 மூட்டை சிமென்ட் தரப்படுகிறது. அதிலேயே அவர்கள் வீட்டையும் கட்டிக்கொண்டு வேலியும் அமைத்துக் கொள்ள வேண்டும். சமையல் பாத்திரங்கள், ஆறு மாதங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்கள் உள்ளிட்ட ரேஷன் சாமான்கள் தரப்படுகின்றன.
அத்துடன் ஓரளவு சேதம் அடைந்த வீட்டைப் பழுதுபார்த்துச் சீரமைக்க இலங்கை நாணயமான ரூபாயில் 50 ஆயிரம் தரப்படுகிறது. வீடு முற்றிலும் சேதம் அடைந்திருந்தால் 3.5 லட்ச ரூபாய் தரப்படுகிறது. இதை "டெய்லி நியூஸ்' என்ற அரசு செய்திப்பத்திரிகைத் தெரிவிக்கிறது.
தமிழர்கள் குடியமர்த்தப்பட்ட கிராமங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு 3 சக்கர மோட்டார் வாகனம் தரப்படுகிறது. அவசர உதவிக்குப் பயன்படுத்திக்கொள்ள இவை தரப்படுகின்றன.
வடக்கு மாகாண கவுன்சிலில் பணிபுரியும் 146 அரசு அதிகாரிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. தமிழர்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று அவர்களுடைய பிரச்னைகளைக் கேட்டுத் தீர்ப்பதற்காக இóவை வழங்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=World&artid=162885&SectionID=131&MainSectionID=131&SEO=&Title=
அர்ச்சகர் செக்ஸ்லீலை பக்தர்கள் பீதியால் கோவில் வெறிச்சோடியது
காஞ்சீபுரம், டிச. 3-
காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பல பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டதாக அர்ச்சகர் தேவநாதன் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அர்ச்சகர் தேவநாதன் தலைமறைவு ஆனார்.
அவரது முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தேவநாதன் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை இது வரை 2 முறை போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில் அர்ச்சகர் தேவநாதன் கோவில் கருவறையில் எந்ததெந்த பெண்களுடன் எப்படி எல்லாம் செக்சில் ஈடுபட்டதாக போலீசிடம் கோவில் கருவறையில் வைத்து நடித்து காட்டினார். அப்போது சில ஆதாரங்களை கோவிலில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
செக்ஸ் அர்ச்சகர் விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வருகிறது. இதில் பல குடும்ப பெண்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் காஞ்சீபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் ஒரு பெண் தன்னை அர்ச்சகர் தேவநாதன் கருவறையில் வைத்து கற்பழித்து விட்டதாக போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.
இந்த செய்திகள் அனைத்து நாளிதழ்களிலும் வெளியாகின. இதையடுத்து மச்சேஸ்வரர் கோவிலுக்கு பெண்கள் வருவதற்கு தயங்குகிறார்கள். இந்த கோவிலுக்கு வந்து பூஜை செய்தால் தண்ணீர் கண்டம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த பூஜை செய்ய உள்ளூரிலும், வெளிஊரில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
ஆனால் அர்ச்சகர் தேவநாதன் விவகாரம் வெளிவர துவங்கியதால் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வரத்து குறைந்துள்ளது. முக்கியமாக பெண்பக்தர்கள் வருவதே இல்லை. காலையில் 1/2 மணிநேரமும், மாலையில் 1 மணி நேரம் திறந்துள்ளது. தற்போது அந்த கோவிலுக்கு வேறொரு அர்ச்சகர் நியமிக்கப்பட்டு பூஜைகள் செய்து வருகிறார்.
http://www.maalaimalar.com/2009/12/03115422/CNI0180301209.html
“செக்ஸ்” அர்ச்சகரிடம் சிக்கிய டி.வி. நடிகை; புது சி.டி.யால் பரபரப்பு
காஞ்சீபுரம், டிச. 2-
காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன். இவர் கருவறையில் வைத்தே பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆபாச சி.டி.க்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் தலைமறைவான அர்ச்சகர் தேவநாதன் காஞ்சீபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 2 முறை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கோவிலுக்கு வரும் பெண்களை மயக்கியது குறித்தும், தன்னுடன் உல்லாசமாக இருந்த பெண்கள் குறித்தும் திடுக்கிடும் தகவல்களை தேவநாதன் வெளியிட்டுள்ளார்.
மொத்தம் 21 பெண்கள் தேவநாதன் விரித்த செக்ஸ் வலையில் சிக்கியது தெரிய வந்துள்ளது.
இவர்களில் பெரும்பாலான பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி முடித்து விட்டனர். டாக்டர் மனைவி, பேராசிரியர் மனைவி, நர்ஸ், தொழில் அதிபர்களின் மனைவிகள் என தேவநாதனுடன் உல்லாச லீலையில் ஈடுபட்ட பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இவர்களின் வரிசையில் டி.வி. நடிகை ஒருவரும் தற்போது சேர்ந்துள்ளார்.
மச்சேஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்த டி.வி. நடிகையையும் தேவநாதன் தனது ஆபாச வலையில் வீழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. டி.வி. நடிகையும், அர்ச்சகரும் உல்லாசமாக இருப்பது போன்ற புதிய சி.டி. வெளியாகி இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. காஞ்சீபுரம் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இந்த சி.டி. அமோகமாக விற்பனையாவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, இது குறித்து எங்களுக்கும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரித்து வருகிறோம் என்றனர்.
போலீசார் விசாரணை நடத்தியுள்ள 21 பெண்களில் பேராசிரியர் மனைவி மட்டும் முறைப்படி வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தேவநாதனுடன் உல்லாசமாக இருந்த பூக்காரியிடம் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இவரிடமும் முறைப்படி வாக்குமூலம் பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே போலீஸ் விசாரணையின் போது அர்ச்சகர் தேவநாதன் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் விபசாரம் நடப்பதாக பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அர்ச்சகர் தேவநாதனின் வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு 2 நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டது. இன்னும் அவர்கள் விசாரணையை தொடங்கவில்லை. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, தேவநாதன் தொடர்பான பைல்கள் இன்னும் எங்களிடம் வந்து சேரவில்லை, உள்ளூர் போலீசார்தான் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை சூடு பிடிக்கும் பட்சத்தில் “செக்ஸ்” அர்ச்சகர் தேவநாதன் தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.maalaimalar.com/2009/12/02114210/CNI0170201209.html
காஞ்சிபுரம் செக்ஸ் அர்ச்சகர் சி.டி. விற்பனையா? சேலம் உள்பட 4மாவட்டங்களில் கடைகளில் அதிரடி சோதனை
சேலம், டிச 3-
காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் பெண்களை ஏமாற்றி கோவில் கருவறையில் உல்லாசமாக இருந்தார். இந்த காட்சிகள் செல்போனில் எடுக்கப்பட்டு இருந்தது. இதை காஞ்சிபுரம் போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக அர்ச்சகர் தேவநாதன் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இவர் எந்தெந்த பெண்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்து வந்தார் என்றும் விசாரணை நடந்து வருகிறது.
இவர் செல்போனில் எடுத்த காட்சிகள் சி.டி. மற்றும் டிவிடிக்களாக தயார் செய்து சிலர் விற்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சிடிக்கள் எங்கெங்கு உள்ளது என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சேலத்தில் உள்ள சில சி.டி கடைகளுக்கு வாலிபர்கள் சிலர் வந்து அர்ச்சகர் தேவநாதன் சி.டி உள்ளதா என கேட்டு சென்றனர்.
இதை அறிந்த சேலம் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் அனைத்து சி.டி. கடைகளுக்கும் சென்று விசாரித்து வருகிறார்கள்.
இந்த சோதனையில் அர்ச்சகர் சிடி கிடைக்க வில்லை. போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இருப்பினும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அனைத்து உள்ளூர் போலீசார் சி.டி. கடைகளுக்கு சென்று அர்ச்சகர் சி.டி பதுக்கி வைத்து விற்கிறார்களா? என்று கண்காணித்தும் வருகிறார்கள்.
இதுகுறித்து சேலம் வக்கீல் ஒருவர் கூறியதாவது:-
ஆபாச சிடி விற்பது சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் சி.டி. விற்பதாக கூறுகிறார்கள். இந்த சிடி விற்றால் அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில் புனிதமான இடம். இந்த இடத்தில் அர்ச்சகர் அப்படி நடந்து கொண்டிருக்கிறார். இது மன்னிக்க முடியாத செயலாகும். அர்ச்சகர் செய்த தவறை விட , அவர் உல்லாசமாக இருந்த சி.டியை விற்பவர்கள் செய்யும் தவறு பெரிய தவறாகும். இவர்கள் சி.டி.விற்பது நிரூபிக்கப்பட்டால் 7 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
http://www.maalaimalar.com/2009/12/03191703/SLM07031209.html
தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் குடித்தால், ஒவ்வொரு ஆண்டும் அரை கப் தார் சாப்பிடுவதற்கு சமமாம்.
அதாவது அரை கப் அளவு தாரில் உள்ள நச்சுகள் சிகரெட் வழியாக உடம்பிற்குள் செல்கின்றனவாம்!
அலுவலக வாடகை அதிகம் வசூலிக்கும் உலக நகரங்களில்...
லண்டன் முதலிடத்திலும்
மும்பை 7ஆம் இடத்திலும்
டெல்லி 10 ஆம் இடத்திலும் இருக்கின்றன.
பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...
Get more followers