தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Thursday, July 16, 2009

♥ "ஒரு செயல் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம்...!" ♥

http://4.bp.blogspot.com/_PBT9eH6cCGw/SXnFGj1WhAI/AAAAAAAAByI/iFV9CxVq9mM/s400/06.jpg  http://www.utmb.edu/utmbemployeehelpcenter/images/MPj04371850000%5B1%5D.jpg

http://www.adcet.edu.au/Admin/UploadedFiles/Images/Photos/help.jpg
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நம்மில் பெரும்பாலானோருக்கு நம் தொப்புள் கொடி உறவுகளான
ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் வகையில் உதவ வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது.
அப்படியொரு வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. கும்மிடிப்பூண்டி ஏதிலிகள்
முகாமிலிருக்கும் ஈழத்தமிழ் மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் ஒரு
வாய்ப்பு. ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட  மாணவர்கள் பள்ளிப்படிப்பை
முடித்துவிட்டு மேற்படிப்புக்காக உதவி வேண்டி நிற்கின்றனர். நம்மைப்போலவே
ஈழச்சொந்தங்களுக்கு உதவும் நோக்கம் கொண்ட சிலர் (நடிகர் சூர்யா,
சத்யராஜ், இயக்குனர் மணிவண்ணன் போன்றோர்) அங்குள்ள சில மாணவர்களைத்
தத்தெடுத்து அவர்களுக்கான கல்வி மற்றும் அத்தியாவசியச் செலவுகளை ஏற்றுக்
கொண்டுள்ளனர்.

இது நமக்கான பணியாகவும் நம் கண் முன்னே நிற்கிறது. எனவே நமது
சமூகப்பணியின் தொடர்ச்சியாக நாம் இப்பணியினை ஏற்று ஒரிரு மாணவர்களைத்
தேர்ந்தெடுத்து அவர்களது மேற்படிப்புக்கு உதவலாமே என்ற எண்ணம் தோன்றியது.
நம் ஆர்குட் தமிழ்க் குழுமமான தமிழக அரசியல் குழுமம்( TNP) நண்பர்கள்
சிலருடன் விவாதித்தபோது இதை மிகவும் வரவேற்றனர். இது தொடர்பாக
த.நா.அரசியல் குழும நிறுவனர் நண்பர் கோபாலனைத் தொடர்பு கொண்டு
கேட்டபொழுது அவருக்கும் இத்தகைய எண்ணம் இருப்பதாகக் கூறினர். மேலும்,
இதன் ஆரம்பமாக ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியைத் தேர்வு செய்து அவர்களது
மேற்படிப்புக்கு உதவலாம் என்றும் யோசனை கூறியுள்ளார். அவ்வாறு நாம்
உதவும் பட்சத்தில் ஒரு மாணவருக்கு வருடாந்திர கல்விக்கட்டணம்,
தேர்வுக்கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் மற்றும் செலவுகளை நாம்
ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதோடு அவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும்வரைத்
தொடர்ந்து உதவவெண்டும். சுருக்கமாகக் கூறவேண்டுமானால் நாம்
தத்தெடுத்தவுடனேயே அவர்கள் "நமது பிள்ளைகள்" என்றாகிவிடுகின்றனர். எனவே,
அவர்களுக்கு முழு உதவியும் செய்ய வேண்டும்.

ஈழத்திற்காக களப்பணியில் நம் தோழர்கள் சிலர் ஈடுபட்டிருக்கையில்
கும்மிடிபூண்டி ஏதிலிகள் குடியிருப்பில் , இந்த ஆண்டில் மேல் நிலை
பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் தங்களது மேற்ப்படிப்பை தொடர முடியாத
நிலையில்( 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ) இருப்பது தெரியவந்தது .,
(கடந்த கல்வியாண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் நிறைய பேர் ,
படிப்பை தொடர முடியாத காரணத்தினால், கட்டட வேலைக்கும்,பெயிண்ட்ர் இன்னும்
பலவகை கூலிவேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ..,) அவர்களுக்கு
எவ்வகையிலாவது உதவலாம் என்று பல தொண்டு நிறுவங்களை தொடர்பு கொண்டு
அவர்களுக்கான உதவிகள் கோரப்பட்டுள்ளது .,

நாம் தேர்ந்தெடுத்த பிள்ளைகளின் விபரம்

புவனேசுவரி த/பெ சுப்ரமணியம் , வயது 17 , கும்மிடிபூண்டி.
BE கணினி அறிவியல்
மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரி
திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்...


நிஜந்தன் த/பெ ரவி, வயது 18 , கும்மிடிபூண்டி
Bsc Bio tech
ஜெயா கலைக் கல்லூரி
திருநின்றவூர்
சென்னை.

இவர்களுக்கான கல்வி கட்டணம்
புவனேசுவரி
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 59,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....

நிஜந்தன்
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 35,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....
குறைந்தது ஆண்டுக்கு 1.5 லட்சம் தேவைப்படுகிறது. நான்கு ஆண்டுகள் என்றால்
6 லட்சம் ரூபாய். பெரியதொகைதான். ஆனால் நம்மில் பலர் ஒன்றாய் இணைந்தால்
இது அவரவர் பங்குக்கு சிறு தொகையாகவே வரும். நாம் உறுதியாக நான்கு
வருடமும் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வுதவியை தமிழக அரசியல்
குழுமத்தின் மூலம் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

அதை ஒரு அரசு சாராத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றினைத் தொடங்கி அதன்
மூலம் இது போன்ற உதவிகளைச் செய்யலாம் என்று எண்ணுகிறோம். அதைத் தொடங்க
சில வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றுக்கு சிறிது கால அவகாசம் எடுக்கும்.

அதற்கு முன்  கல்லூரிகள் திறக்க இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் தமிழக
அரசியல் குழும நிர்வாகியான சக்திவேல் அவர்களின்(
http://www.orkut.co.in/Main#Profile.aspx?uid=898104197585368552 )
வங்கிக் கணக்கு மூலம் முதலாவது தவணை உதவியைப் பெறலாம் என்று
எண்ணுகிறோம்.  அவரது ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு விபரம் கீழே:
C Sakthivel
ICICI account no: 620401064769
Branch: Contonment Branch, Trichy

மேலும் வரைவோலை, மற்றும் பணப்பட்டுவாடா அனுப்புபவர்கள் நண்பர் தயாளனின்
விலாசத்திற்கு "C.Sakthivel" என்ற பெயரிலேயே அனுப்பலாம். அவரது விலாசம்
கீழே
D. Dhayalan
B/GF, Kasi Arcade Annex-1
32/1, VOC Street
Kaikan Kuppam (Near Chennai Medical Center)
Valasaravakkam - Post
Chennai - 600087

தங்கள் மூலம் ஈழத்துச் சிறார்களின் கல்வி விளக்கேற்ற ஒரு உதவி அது சிறு
துளியாய் இருந்தாலும், அவர்களுக்குப் பேருதவியாய் இருக்கும் என்று
எதிர்பார்க்கிறோம்.

குறிப்பு:

கும்மிடிப் பூண்டி ஏதிலி முகாமில் இது போன்ற பலர் தங்கள் மேற்கல்விக்
கனவுகளோடு, மண் சுமந்து கொண்டும், கலவை கலந்து கொண்டுமிருக்கிறார்கள்.
தங்களிடம் வைக்கும் வேண்டுகோள் இது தான். தங்களால் ஒரு மாணவனுக்கோ,
அல்லது மாணவிக்கோ அவர்களது மேற்கல்விக்கான செலவை ஏற்றுக் கொள்ளும்
வசதியும், பெரிய மனதும் இருந்தால் தாங்கள் கும்மிடிப்பூண்டி ஏதிலி
முகாமைத் தொடர்பு கொள்ளலாம்.
என்னைத் தாங்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் அதன் முகவரியும்,
தொலைபேசி எண்ணும் வாங்கித் தருகிறேன்.

"அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
இன்ன யாவினும் புண்ணியங்கோடியாம்
ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல்"

என்பார்கள். அதனைச் செயல் படுத்த ஒரு வாய்ப்பு நமக்குக்
கிடைத்திருக்கிறது.
உதவி உயருவோம்..!!!!!

எதிர்பார்ப்பு கலந்த நன்றியுடன்


தமிழக அரசியல் குழுமம் சார்பாக

த.சுரேஷ்

பின் குறிப்பு:
இதைத் தங்கள் தோழர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்

நன்றி !


http://groups.google.com/group/thanthaiperiyar

http://3.bp.blogspot.com/_uS52PSJcn0w/ScsC23kG2EI/AAAAAAAAAhk/3v5v4cpRzsM/s400/puthuvai_20_03_2009_001.JPG    http://tamizharivu.files.wordpress.com/2008/12/untitled.jpg


♥ தமிழ்த்தாய் ஈன்ற தவமகன்! ♥

தமிழ்த்தாய் ஈன்ற தவமகன்!
 
http://3.bp.blogspot.com/_KrCjUAJLEME/R8FdbIPjhjI/AAAAAAAAAr8/Uorp0n10mgU/s400/kamaraj.jpg        http://www.tamilvanan.com/v6116/kamarajar-anna.jpg
 
 

நெடிய பெரிய உருவம்; தெற்கத்தித் தமிழனுக்கே உரிய நாவற்பழக் கருப்பு; படர்ந்த முகம்; பெரிய கண்கள்; அந்தக் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவது சிலருக்கே இயலக்கூடியது.

எடுத்த எடுப்பிலேயே "சொல்லுன்னேன்' என்று செய்திக்கு வந்துவிடுவார். கருத்தோடு பேசினால் கேட்பார்; இல்லையென்றால் கருத்திருமன் ஆனாலும் "சும்மா உளறாதேன்னேன்' என்று வாயை அடைக்கச் செய்து விடுவார்!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நகரம், கிராமம் என்று அவர் தெரிந்து வைத்திருந்ததுபோல், அங்கே கட்சிப் பொறுப்பில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் குலங்கோத்திரத்தோடு தெரிந்து வைத்திருப்பார். யாரைத் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று அவர்களின் நாளாசரி நடவடிக்கைகளிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்து வைத்திருப்பார்.

தேர்தலில் நிற்கக் கட்சியில் பணம் கட்டி இடங்கேட்கும் அவலநிலை அவர் காலத்திலில்லை. கருணாநிதியிலிருந்து விஜயகாந்த் வரை தேர்தலில் போட்டியிட விரும்பும் தன் கட்சியினர் ஒவ்வொருவரிடமும் கேட்கின்ற முதற் கேள்வி, "நீ தேர்தலில் எவ்வளவு செலவழிக்க முடியும்?'

காமராஜ் இப்படி ஒரு அருவருக்கத்தக்க கேள்வியை யாரிடமும் கேட்டதில்லை. ஒருவன் தேர்தலில் ஐந்து கோடி செலவழிக்க முடியும் என்றால், தேர்தலில் வெற்றி பெற்று வந்தபின், அவன் அந்தப் பணத்தைப் போல் ஐம்பது மடங்கைத் தேடிக்கொள்ள நினைப்பதை எப்படித் தடுக்க முடியும்? ஒருவன் ஐந்து கோடி செலவழித்தா மக்கட் பணி ஆற்ற வருவான்?

எத்தகைய போக்குகளை அனுமதித்தால், எத்தகைய பின் விளைவுகள் ஏற்படும் என்று சிந்திக்கும் திறன் காமராஜ் போன்ற இயற்கை அறிவினர்க்கு நிறையவே இருந்தது!

காமராஜுக்கு ஒரு தனிச்செயலர் இருந்தார். அவர் பெயர் வெங்கட்ராமையர். கதர் வேட்டி சட்டையைத் துவைத்துத்தான் போட்டுக் கொள்வார். சலவை செய்து போட்டுக் கொள்ளச் சம்பளம் இடம் கொடுக்காது என்பார்.

எத்தனை தொழிலதிபர்கள் இவர் வழியாகத் தொழில் உரிமம் பெற்று வளம் கொழித்திருப்பார்கள்! அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் சிறு சலனமாவது இந்த வசதிக் குறைவானவருக்கு ஏற்பட்டதுண்டா?

பத்தாண்டுகள் முதலமைச்சராக இருந்த ஒருவரின் தனிச் செயலர் சாகும்போது, எம்.ஜி.ஆர். அவருடைய நிலைமை தெரிந்து வழங்கிய லாயிட்ஸ் அரசுக் குடியிருப்பில் 250 ரூபாய் வாடகை வீட்டில் குடி இருந்துவிட்டு இறந்து போனார்!

உயிர் குடியிருக்க வந்த கூடே சொந்தமில்லாமல் வெந்து போகிறபோது, தான் குடியிருக்கச் சொந்தமாக ஒரு வீடில்லாதது அவருக்கு ஒரு குறையாகவே தெரியவில்லை!

""ஒரு பெண் தன் கற்பைக் காத்துக் கொள்வதில் விடாப்பிடியாக இருப்பது போல, பெருமையும் கருதிக் கருதிக் காத்துக் கொள்ளப்பட்டால் உண்டு; இல்லை என்றால் இல்லை'' என்பான் வான்புகழ் வள்ளுவன்.

ஒரு தனிச் செயலரின் பெருமையே இத்தகையது என்றால், அவனுடைய தலைவனின் பெருமை எத்தகையதாய் இருக்கும்!

இன்றைய அமைச்சர்களின் தனிச் செயலர்களின் பணங்களை எல்லாம் பறிமுதல் செய்தால், ஆறு மாதங்களுக்குத் தமிழ்நாட்டில் வரிப் போடாமல் ஆட்சி நடத்தலாம்!

நம்முடைய அமைச்சர்களின் பணங்களை எல்லாம் பறிமுதல் செய்தால், ஆறு மாதங்களுக்கு இந்தியாவையே வரிப் போடாமல் ஆட்சி நடத்தலாம்!

காமராஜ் நாட்டின் விடுதலைக்காகப் பத்தாண்டுகள் சிறையில் தவமிருந்தவர். நாட்டின் மேன்மைக்காகப் பத்தாண்டுகள் கோட்டையில் கோலோச்சியவர்!

ராஜாஜி கல்விக் கொள்கையில் குளறுபடிகள் செய்ய நேரிட்டு விட்ட போது, அந்த முதலமைச்சர் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்காரவும் காமராஜுக்குத் தெரிந்திருந்தது.

பத்திருபது ஆண்டுகள் தொடர்ந்து பதவிக் கள்ளை உண்டு விட்டபடியால் போதை தலைக்கேறிய பல காங்கிரஸ் அமைச்சர்களைப் பதவியை விட்டு இறக்குவதற்கு, "கே' பிளான் என்று ஒன்றை அறிவித்து, எந்த அவப்பெயரும் இல்லாத தான், ஆட்சி நாற்காலியை உதறிக்காட்டி, மற்றவர்களைப் பதவி விலகச் செய்து, நேருவின் ஆட்சி இயந்திரம் திறம்பட உருள வழி செய்யவும் அவருக்குத் தெரிந்திருந்தது!

சீதையின் கேள்வன் ராமனைப் போல், காமராஜுக்குப் பதவி ஒரு பேறும் இல்லை; பதவியின்மை ஓர் இழப்பும் இல்லை.

அதுவும் ராஜாஜிக்குப் பிறகு நாடாள்வது எளிதில்லை. பரிந்துரைகளுக்காகத் தலைமைச் செயலகத்துக்குப் படையெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து, உங்களுக்கெல்லாம் தலைமைச் செயலகத்தின் தாழ்வாரங்களில் என்ன வேலை என்று கேட்டவர் ராஜாஜி. விற்பனை வரியைப் புகுத்தியவர்; இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ்நாட்டில் குடியை முதன் முதலாகக் குற்றமாக அறிவித்தவர்; ஈடு இணையற்ற படிப்பாளி; இவர் தேறாத நூலுமில்லை; தெளியாத பொருளுமில்லை; பெரிய இலக்கியவாதி; ராஜதந்திரி! மணியம்மையை மணந்து கொள்ளலாமா வேண்டாமா என்று பெரியார் பிறவிப் பகைவரான ராஜாஜியிடம் போய் யோசனை கேட்டாரென்றால், எவ்வளவு மனச்சமநிலை உடையவராக ராஜாஜியைப் பெரியார் கருதியிருக்க வேண்டும்!

அவ்வளவு பெரிய ராஜாஜியைக் கீழே இறக்கவும், அவருடைய நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்துகொண்டு நாடாளவும் எவ்வளவு பெரிய மனத்திறன் வேண்டும்! காமராஜின் பத்தாண்டு கால ஆட்சி ராஜாஜியை மறக்கடித்து விட்டது என்பதுதான் அவருடைய ஆட்சியின் மாபெரும் சிறப்பு!

தமிழ்நாட்டின் கல்வியைச் சுருக்கித் தன்னுடைய புகழை அந்த ஒன்றில் மட்டும் விதிவசமாகச் சுருக்கிக் கொண்டுவிட்டார் ராஜாஜி.

தமிழ் இளைஞர்கள் உலக அளவில் போட்டியிடக் கல்வியறிவு பெறுவது எல்லாவற்றினும் தலையாயது என்பதைத் தன்னுடைய இயற்கையறிவு கொண்டு உணர்ந்த காமராஜ் ஊர்தோறும் பள்ளிகளைக் கட்டினார். ஆடு மேய்க்கச் செல்லுகின்ற பிள்ளைகளைப் பள்ளிக்கிழுக்கப் பகலுணவு அளித்தார். எம்.ஜி.ஆர். பெரும்புகழ் பெறக் காரணமான சத்துணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜ்தான்!

கையளவு நீர் மேட்டிலிருந்து பள்ளத்தில் பாய்ந்தாலும், அங்கே நீர்மின் நிலையம் தோன்றிவிடும் காமராஜ் காலத்தில்!

பின்னால் வந்த கருணாநிதி மின் உற்பத்தி செய்யாமல் கம்பி மட்டும் நீட்டுகிறார் என்பதைக் காமராஜ், ""கம்பி நீட்டப் போகிறார் கருணாநிதி'' என்று நகையாடினார்!

முந்தைய ராஜாஜி ஆட்சியோடு ஒப்பிடப்பட்டுக் ""கல்விக் கண் திறந்த காமராஜ்'' என்று போற்றப்பட்டார்!

பிந்தைய கருணாநிதி ஆட்சியோடும் ஒப்பிடப்பட்டு, ""படிக்கச் சொன்னார் காமராஜ்; குடிக்கச் சொன்னார் கருணாநிதி'' என்னும் வழக்கு மக்களிடையே வழங்கி நிலைபெரும் அளவுக்குக் காலந்தோறும் காமராஜ் புகழ் பெருகியது!

நாட்டின் விடுதலைக்காகச் சிறையிலிருந்த காமராஜ், நாடே இந்திராவால் சிறைக் கூடமாகிவிட்டது கண்டு பதறிவிட்டார்!

வெள்ளைக்காரனிடமிருந்து பெரும்பாடு பட்டு விடுதலை பெற்று, நம் கண் முன்னாலேயே சொந்த நாட்டுக்காரியிடம் அந்த விடுதலையைக் தோற்று விட்டோமே என்னும் கவலை அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்னத் தொடங்கியது.

பேச்சுச் சுதந்திரமில்லை; எழுத்துச் சுதந்திரமில்லை; கூட்டம் கூடுகிற சுதந்திரமில்லை; தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை வலியுறுத்திப் போராடச் சுதந்திரமில்லை; இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்!

இந்திராவின் தேர்தலைச் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதால், பிரதமர், தேர்தல் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவராகச் சட்டம் திருத்தப்பட்டது. நாடாளுமன்றத்தின் ஆயுள் நீட்டிக்கப்பட்டது.

ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள், ஸ்டாலின் காலத்து ரஷ்யா போல, நள்ளிரவில் தாக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டனர்.

தனக்கேற்பட்ட நெருக்கடியை நாட்டுக்கேற்பட்ட நெருக்கடியாக்கி, எல்லாச் சுதந்திரங்களையும் பறித்து விட்டார் இந்திரா!

தான் வழி நடத்திய பழைய காங்கிரசைக் கருத்து வழிப்படுத்தி, அதனை இந்தச் சுதந்திரப் பறிப்புக்கு எதிராக அணி வகுக்கச் செய்து, ஒரு பெரும் போராட்டத்தை நடத்த எண்ணிய காலை, கிருபளானி போன்றவர்களின் அடுத்தடுத்த கைதுச் செய்திகள் காமராஜ் மனம் உடைந்து மரணமடையக் காரணமாயிற்று!

நாம் நாற்காலியில் ஏற்றி வைத்த ஒரு பெண், நாற்காலிதான் பெரிதென்று நாட்டை நாசமாக்கி விட்டாரே என்பதுதான் அவர் மன உடைவுக்குக் காரணம்!

அடிமை இந்தியாவில் பிறந்தார்;

சுதந்திர இந்தியாவில் கோலோச்சினார்;

மீண்டும் அடிமை இந்தியாவில் மறைந்தார்!

அன்னையின் விலங்கொடித்து அன்னியனை விரட்டினார்!

இன்னொரு அன்னையால் பாரத அன்னை விலங்கிடப்பட்ட காலை, மனம் உடைந்து மரணமடைந்தார்!

நாடு குறித்துத் தவிர அவருக்கென்ன தனிக் கவலை இருக்க முடியும்? அவர் உயிர்வாழ ஒரு நாள் முழுவதற்கும் தேவை ஆழாக்கு அரிசி; ஒரு நான்கு முழ வேஷ்டி; ஒரு தொளதொளத்த சட்டை; ஒரு மேல் துண்டு; படிப்பதற்கொரு கண்ணாடி; காலுக்கொரு செருப்பு!

ஒரே உறவினளுமான தாயும் இறந்து விட்டாள்! அவருக்கென்ன கவலை?

தலைமாட்டில் உட்கார்ந்து அழ மனையாளோ, கால்மாட்டில் உட்கார்ந்து அழ மக்களோ இல்லாதவர் அவர்!

அதனால் அவருடைய மரணத்தில் நாடே அழுதது; வானமும் அழுதது!

தாய் மகிழத் தான் மட்டும் வீறிட்டு அழுது கொண்டு பிறந்தவன், நாட்டை வீறிட்டழ வைத்து விட்டுத் தான் அமைதி கொண்டு விட்டான்!

காமராஜால் பண்படுத்தப்பட்டு, வார்த்தெடுக்கப்பட்ட அன்றைய இளைஞர்கள், இந்தக் கட்டுரையாசிரியர் உள்பட, இன்று நடுவயதை அடைந்து புரப்பாரில்லாமல் நாசமாகிப் போனார்கள்!

ராஜாஜி, பெரியார், அண்ணா, காமராஜ் என்று ஒவ்வொருவராக அடுத்தடுத்துப் போய் விட்ட நிலையில், நாடு வெறுமை அடைந்து விட்டது!

கோல மயில்கள் குதித்தாடிய நாட்டில், வக்கரித்த வான்கோழிகள் கொக்கரிக்கின்றன! பண்பட்ட அரசியல் போய் பாழ்பட்ட அரசியல் வந்துவிட்டது!

காந்தி, காமராஜ் காலங்களில் அயோக்கியர்களாக இருந்தவர்கள் இருக்குமிடம் தெரியாமல் இருந்தார்கள்!

இன்று யோக்கியர்களாக உள்ளவர்கள் இருக்குமிடம் தெரியாமல் இருக்கிறார்கள்!

அறிவும், அடக்கமும், எளிமையும், நேர்மையும் குடிகொண்டிருந்த பொதுவாழ்வில், பதவிக்கும் பணத்துக்கும் பல்லிளிப்பதும், பகட்டும், வஞ்சமும், அடுத்துக் கெடுப்பதும் பெருகிவிட்ட பிறகு நாடு வேறு எப்படி இருக்க முடியும்?

இந்த லட்சணத்தில் அண்ணா அறிவாலயத்தை மேற்பார்வை முகவரியாக்கிக் கொண்டுள்ள நாலாந்தரக் காங்கிஸ்காரர்கள் கருணாநிதியை நடுநடுவே மிரட்டுவதற்காகக் "காமராஜர் ஆட்சியை அமைப்போம்' என்று இடையிடையே மிரட்டுகிறார்கள்! கருணாநிதி பனங்காட்டு நரி!

கருணாநிதியின் கைப்பைக்குள் இருக்கிற பீட்டர் அல்போன்ஸýம், பனை வாரியம்தான் விதி நமக்கு விட்ட வழி என்று அமைதி கொண்டு விட்ட குமரிஅனந்தனும், வீரபாண்டியார் வெள்ளை வீசினால்தான் வெல்ல முடியும் என்னும் நிலையிலுள்ள தங்கபாலுவும், காமராஜ் உயிரோடிருந்த காலத்தில், "அவர் சோசலிசவாதியே அல்ல; பிற்போக்குவாதி என்றெல்லாம் காமராஜ் குறித்து இடக்காகப் பேசிவிட்டு, இன்று பன்னாட்டு முதலாளிகளின் பாதக்குறடுகளுக்கு மெருகெண்ணெய் பூசிவிடும் ப.சிதம்பரமும் எப்படிக் காமராஜ் ஆட்சியை அமைக்க முடியும்?

தனக்கு எந்த உடைமையுமில்லை; தனக்கு எந்த உறவுகளுமில்லை என்னும் நிலையிலேயே மக்களைச் சுற்றமாகச் சுற்றிக் கொள்ளும் தன்மை பிறக்கும்!

ஒரு காமராஜ் உருவாக இவ்வளவு பின்னணி வேண்டும்!

தமிழ்த்தாய் ஈன்ற தவமகன் அவன்!

http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=88731&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D!

♥ இலங்கையில் ஐ.நா ஊழியர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தொடர்கிறது...! ♥

இலங்கையில் ஐ.நா ஊழியர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தொடர்கிறது

http://www.viyapu.com/news/wp-content/uploads/2008/09/un-logo-300x2701.jpg         http://www.rspbliverpool.org.uk/Abobby.JPG

இலங்கையில் தொடர்ந்தும் ஐ.நா ஊழியர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றமை, கைது செய்யப்படுகின்றமை குறித்து ஐ.நா சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இலங்கை அதிகாரிகளால் ஐ.நா பணியாயர்களுக்கு எதிர்ராக திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படுகின்ற இந்து நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு முரண்ணானவையாகும். ஆகவே, ஐ.நா அமைப்பு செயலாளர் நாயகத்தை உடன்னடியாக தலையீடுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இலங்கையில் ஐ.நா பணியாளர்களுக்கு எதிர்ரான செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேச சிவில் சேவையின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான நிலையிற் குழுவும் கவலை வெளியீட்டுள்ளது.

ஐ.நா பணியாளர்கட்கு எதிர்ராக இலங்கை அதிகாரிகளின் செயறட்பாடுகள் சிறப்புரிமை தொடர்பான சர்வதேச ஏற்பாடுகளையும் ஐ.நா பணியாளர்களின் சுதந்திரம், மற்றும் உரிமையை மீறுவையாகும் குறிப்பாக கைது செய்யப்படுவர்கள் குற்றச் சாட்டு சுமத்தப்படாமல் தடுத்துவைக்கப்படக் கூடாது அவர்கள் நீதி மன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவேண்டும்.

ஐ.நா பணியானாகள் தமது பணியிணை செய்வதற்கான நடமாட்ட சுதந்திரம் உறுதி செய்யப்படவேண்டும்.

ஐ.நா வின் இரு உள்ளளர் பணியாளாகள் கைது செய்யப்பட்டுள்ளமை ஐ.நா வின் பணிகளுக்கும், பணியாளர்களுக்கும் இலங்கை அரசின் எதிர்ரான நடவடிக்கையாகம்.

http://www.appaa.com/index.php?option=com_content&view=article&id=95:2009-07-16-10-37-50&catid=34:2009-07-08-13-08-35&Itemid=53

♥ இலங்கையை அச்சுறுத்தும் புதிய தீவிரவாத குழுக்கள்! ♥

இலங்கையை அச்சுறுத்தும் புதிய தீவிரவாத குழுக்கள்!


இலங்கையில் 'தமிழீழம்' பெறுவதற்காக ஆயுதம் ஏந்தி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், மே மாதம் 19-ம் தேதி வீழ்த்தப்பட்டது. கால் நூற்றாண்டு காலம் சகல படைபலத்துடன் செயல்பட்ட விடுதலைப்-புலிகள் இயக்கம், சர்வதேச அளவில் பேசப்பட்டது.

தற்கொலைப் படை வீரர்களைக் கொண்ட புலிகள் இயக்கம், தனது சாதனைகளைப் பதிவுசெய்ய தவறினாலும் விமானங்களைக்கூட கட்டமைத்து கொழும்புவில் நடத்திய தாக்குதல், வரலாற்று

சம்பவமாகக் கருதப்படுகிறது. ஒழுக்கம், கட்டுப்பாடு, தியாகம் ஆகியவற்றுக்குப் பெயர்பெற்ற விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டதாக, இலங்கை அரசு அதிகார பூர்வமாக இப்போது அறிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளை ஒழித்துவிட்டதாக இலங்கை அரசு விடுப்பு அளித்து விழா நடத்தி கொண்டாடியதை உலக மக்கள் இன்னும் மறக்கவில்லை. இந்நிலையில் விடுதலைப்புலிகளால் இலங்கையில் இனி செயல்படுவது கடினம் என்று இலங்கை ஊடகங்கள் சில எழுதியதை படித்துவிட்டு இலங்கை அதிபர் ராஜபக்ஷே மகிழ்ச்சி அடைந்தார். இந்த மகிழ்ச்சி நிலையானது அல்ல. அடுத்ததாக அங்கு தலைதூக்கியுள்ள பயங்கரவாத சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இலங்கை அரசுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் ஏற்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கம் போரில் வீழ்த்தப்பட்ட பிறகும், கிழக்கு மாகாணத்தில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இலங்கை அரசின் செயல்பாடுகளை பாதிக்கச் செய்த இந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கை போலீஸ் உளவுத்துறை அதிகாரி ஒருவர், உளவுப்-படை-யுடன் இணைந்து கிராமம் கிராமமாகச் சென்று விசாரணை நடத்தினார். அப்போதுதான், இந்த வன்-முறைச் சம்பவங்களை நிகழ்த்தியது விடுதலைப் புலிகள் அமைப்பினர் அல்ல; கிழக்கு மாகாணத்தில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களே இவற்றுக்-குக் காரணம் என்பது தெரியவந்தது. இந்தக் குழுக்-களின் ரகசிய செயல்பாடு குறித்து தெரிந்தவுடன் இலங்கை அரசு வட்டாரம் அதிர்ந்து போயிருக்கிறது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திரிகோணமலை, மட்டக்களப்பு என மூன்று மாவட்டங்கள் உள்ளன. 9951 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட இந்த மாகாணத்தில், 2001-ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி சுமார் 13 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் மட்டக்களப்பு, அம்பாறை, காத்தான்குடி வட்டாரத்தில் ஆயுதம் தாங்கிய இஸ்லாமியத் தீவிரவாத குழுக்கள் ரகசியமாக இயங்குகின்றன என்று இலங்கையின் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் அரசிடம் தெரிவித்தார். இதையடுத்து சிங்கள ராணுவத்தின் உளவுப்படையினர் இந்த மாவட்டங்களில் முகாமிட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர்.

வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற உளவுப்படை-யினர் நடத்திய ஆய்வில், ஆயுதம் தாங்கிய தீவிரவாத குழுக்கள் கிழக்கில் ரகசியமாகச் செயல்படுவது கண்டறியப்பட்டது. இதைவிட முக்கியமான தகவல் என்னவென்றால், இந்தக் குழுக்களில் உள்ள இளைஞர்களிடம் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், லைட் மிஷன் துப்பாக்கிகள், 9 எம்எம் பிஸ்டல்கள், கையெறி குண்டுகள் ஆகியவை இருப்பது தெரியவந்துள்ளது. காத்தான் குடியில் ரகசியமாகச் செயல்படும் ஒரு குழு-விடம் மட்டும் நாநூறுக்கும் மேற்பட்ட டி-56 ரகத் துப்பாக்-கிகள், முந்நூறுக்கும் மேற்பட்ட உயர்ரக பிஸ்டல்களும் இருப்பது தெரியவந்துள்ளது. பாது-காப்பு அமைச்சகத்திடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்-பட்ட போது, அங்குள்ள அதிகாரிகள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார்கள்.

தீவிரவாதக்குழுக்களிடம் பெருமளவு ஆயுதங்கள் உள்ளன. இவற்றை காடுகளில் உள்ள மறைவிடங்-களில் பதுக்கி வைத்துள்ளனர். இவற்றை கைப்பற்று-வது எளிதான காரியம் அல்ல. இவர்களைக் கைவைத்-தால் அந்தந்தப் பகுதி மக்கள், தேர்தலின்போது தங்களது 'வாக்கு' பலத்தைக் காட்டுவார்கள் என்பதால் இவ்விஷயத்தில் இலங்கை அரசு இப்போது மென்மையான போக்கைக் கடைப்பிடித்துள்ளது. அதாவது கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்களை வைத்துள்ள குழுக்கள், அவற்றை இலங்கை போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகார அறிவிப்பு செய்துள்ளது இலங்கை அரசு.

கிழக்கு மாகாண போலீஸ் இயக்குநர் எடிசன் குணதிலக விடுத்துள்ள அறிவிப்பில், "தீவிரவாத அமைப்புகள் தங்களது ஆயுதங்களை அருகில் உள்ள காவல்- நிலையங்-களில் ஜூலை 2-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். ஆயுதங்களை ஒப்படைப்-போர் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டோம். ஆயுதங்கள் ஒப்படைத்-தவர்கள் தருகின்ற அறிக்-கையை மட்டும் பெற்றுக்-கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜூன் 19-ம் தேதி காவல்துறை அறிவித்த அறிவிப்பை, எந்தத் தீவிரவாதக் குழுவும் சட்டை செய்யவில்லை. அதாவது ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்க-வில்லை. சில இயக்கத்தினர் ஆயுதங்-களை ஒப்படைக்-கப் போவதில்லை என்று தொலை-பேசி மூலம் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டனர். காத்தான்குடி காவல் நிலையத்திற்குத் தினமும் இப்படிப்-பட்ட அனாமதேய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.

இதனால் இந்தக் காவல்நிலைய அதிகாரி அனுராத சந்திரஸ்ரீ தலைமையில் பத்து அதிரடிப் படைகளை காவல் துறையினர் அமைத்துள்ளனர். இதற்கிடையில், கெடு தேதிக்கு முதல்நாள், காத்தான்குடி பள்ளி-வாசலில் சில மர்ம ஆசாமிகள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். ஏ.கே.- 47, டி- 56, கைத்துப்பாக்கிகள் உள்பட 2 லட்சரூபாய் மதிப்புள்ள இந்த ஆயுதங்களை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஜூலை 6-ம் தேதி முதல் இலங்கை காவல்துறையிடம் நேரடியாக ஒப்படைத்-தனர். இதையடுத்து ஜூலை 5-ம் தேதி ராணுவ உதவி-யோடு, காவல்-துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்-கிறார்கள். பிரபாகரனைத் தேடி முள்ளி வாய்க்காலுக்கு மொத்த ராணுவமும் சென்றதுபோல, ஒட்டுமொத்த நடவடிக்கை எடுக்கலாம் என்ற திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த ராஜபக்ஷே இதுவரை அனுமதி தரவில்லை.

இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள பதினைந்-துக்கும் மேற்பட்ட இஸ்லாமியக் குழுக்களும் ஒன்றாக இணைந்து செயல்படவில்லை என்ற போதிலும், 'இஸ்லாமிய அமைப்புகள்' என்ற புரிதலுடன் இவை செயல்படுகின்றன. குறிப்பாக இந்தக் குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தாலிபான் தீவிர-வாதி-களிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் என்ற கூடுதல் தகவல் கிட்டியபோது அதிபர் ராஜபக்ஷே உள்ளிட்ட அமைச்சர்கள் அடுத்தடுத்து என்ன செய்யலாம் என்கிற ஆலோசனையில் இறங்கியிருக்கிறார்கள். புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் திருப்பம் இலங்கை அரசி-யலில் அடுத்த விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

 

---தமிழக அரசியல்---


http://www.appaa.com/index.php?option=com_content&view=article&id=65:2009-07-11-15-57-16&catid=37:2009-07-08-13-09-56&Itemid=59

♥ பட்டினி கிடப்பவனுக்கு உணவு பரிமாறுவதற்கு அனுமதி கேட்பதா?.. ♥

பட்டினி கிடப்பவனுக்கு உணவு பரிமாறுவதற்கு பசியாறியவனிடம் அனுமதி கேட்பது சரியானதா?


காலகண்டன் இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான இந்து (The Hindu) பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.ராம் கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் பேட்டி கண்டிருந்தார்.

அதன் முழு விபரமும் அண்மையில் இந்து பத்திரிகையில் மூன்று நாட்கள் தொடர்ந்து வெளிவந்தது. அதன் மூலம் இந்தியாவின் குறிப்பாக தமிழ் நாட்டின் வாசகர்களுக்கு இலங்கை ஜனாதிபதியின் தற்போதைய நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன்,

இலங்கைப் பத்திரிகைகளும் அப்பேட்டியை பிரசுரித்துள்ளதுடன் அது பற்றிய கருத்துகளையும் கூறியுள்ளன.

இந்தியாவின் இந்து பத்திரிகை நிறுவனம் நீண்டகாலப் பத்திரிகைப் பாரம்பரியத்தைக் கொண்டதாகும். பிராமணிய ஆதிக்கக் கருத்தியல் கொண்ட அந்நிறுவனத்தின் இந்து பத்திரிகை எப்பொழுதும் இந்திய ஆளும் வர்க்கத்தையும் மேட்டுக்குடி நலன்களையும் மையப்படுத்தியே வந்துள்ளதொன்றாகும். இவ் இந்து நிறுவனத்தின் குடும்பத்திலிருந்து வந்தவர் தான் இந்துப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நரசிம்மன் ராம். இவர் மற்றொரு இந்து நிறுவன ஆங்கில சஞ்சிகையான ஃபுரன்லைன் (Front line) க்கும் பிரதம ஆசிரியராக இருந்து வருபவர். இந்த இந்து என். ராம் இந்தியாவின் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானவர் என்றும் அறியப்படுபவர்.

இவற்றுக்கு மேலாக இலங்கையின் ஆளும் தரப்புகளின் தலைவர்களோடு நெருக்கமான உறவுகளையும் கொண்டிருப்பவர். கடந்த 30 வருடகால இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை காரணமான யுத்த சூழலில் இந்து ராம் இலங்கைத் தலைவர்களுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகளிலும் கருத்துப் பரிமாறல்களிலும் ஈடுபட்டு வந்தவர். குறிப்பிட்டுக் கூறுவதானால் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் கருத்துகளையும் எண்ணங்களையும் இலங்கைத் தலைவர்களுக்கு அவ்வப்போது எடுத்துக் கூறுவதிலும் முன் நின்றவர். அவர், இடதுசாரி என்ற தோற்றம் கொண்டிருப்பினும் இந்திய மேலாதிக்க நிலைப்பாட்டை வெவ்வேறு விதங்களில் வற்புறுத்தத் தவறவில்லை என்பது அவரை அவதானித்தவர்களின் கருத்தாகும்.

அந்த வகையில் இந்து பத்திரிகையும் அதன் ஆசிரியர் ராமும் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் மேம்போக்கையும் எதிர் நிலைப்பாட்டையும் கொண்டிருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். இதனால் தமிழ் நாட்டின் தமிழ் உணர்வாளர்கள் என்போரின் ஆத்திரத்திற்கும் ஆட்பட்டவர். தமிழ் உணர்வாளர்கள் உணர்ச்சிவசப்படுவதும் ஆத்திரம் கொள்வதெல்லாம் நியாயமாகிவிட முடியாது. ஆனால், இந்துப் பத்திரிகையும் அதன் ஆசிரியர் ராமும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் யாவற்றையும் புலிகள் இயக்கம் என்ற கறுப்புக் கண்ணாடிக்கு ஊடாகவே பார்த்து வந்தார் என்பது பொதுவான குற்றச்சாட்டாகும். எவ்வாறாயினும் இலங்கையின் பத்திரிகைகளோடும் அவற்றுக்குள்ள கருத்துச் சுதந்திரங்களோடும் ஒப்பிடும் போது இந்திய நிலைமை வேறுபட்டவையாகும். கருத்துச் சுதந்திரமும் அவற்றைக் கூறும் துணிவும் வெளியிடும் பத்திரிகைகளின் தரமும் இங்கிருப்பதை விடப் பலமடங்கு அதிகம் என்று கூற முடியும். இது பற்றித் தனியே விவாதிக்கப்பட வேண்டும்.

எந்தவொரு பத்திரிகைப் பேட்டிகளின் போதும் அதனை வழங்குவோரின் உள்ளக்கிடக்கைகள் எவ்வாறாயினும் வெளிவந்து விடுவது இயல்பானதாகும். அந்தவகையில் நமது நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பேட்டியானது அவரது உள் உறைந்து காணப்படும் பல்வேறு விடயங்களை வெளிக்கொணர்ந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இரண்டு விடயங்களின் மத்தியில் ஜனாதிபதியின் பேட்டியானது இடம்பெற்றிருக்கிறது. ஒன்று முப்பது வருடகால யுத்தத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு அதன் வெற்றிக் களிப்பை ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் பெற்றிருக்கும் தருணமாகும். இரண்டாவது இந்த வெற்றியின் முழக்கங்கள் ஓய்வதற்கு முன்பாக பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டிய சூழ்நிலையாகும். எனவே, அடுத்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் வகையிலும் அறுபது வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று இரண்டாவது தடவையாகப் பதவிக்கு வந்து கொள்வதற்காகவும் உரிய காய்நகர்த்தல்கள் செய்யப்படுவதை ஜனாதிபதியின் பேட்டியில் காணமுடிகின்றது.

அந்த அடிப்படையிலேயே ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு அரசியல் தீர்வு எதுவும் முன்வைக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி தெளிவுபடுத்திக் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி இந்தியா சற்று அழுத்திக் கூற முற்படும் பதின்மூன்றாவது திருத்தம் பற்றி பேட்டி கண்ட என்.ராம் வற்புறுத்திக் கேட்கவும் இல்லை. ஜனாதிபதி அதற்கான பதிலை எச் சந்தர்ப்பத்திலும் விபரமாகக் கூறவும் இல்லை. ஆனால், அதற்கான பதிலை வேறு விதத்தில் ஜனாதிபதி அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். சமஷ்டி முறை என்பது கிடைக்கவே கிடையாது என்று கூறியதன் மூலம் தனது ஒற்றையாட்சி முறைமையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் எதைக் கொடுப்பது, எதை கொடுக்கக்கூடாது என்பது தனக்குத் தெரியும் என்றும் எடுத்துரைத்திருக்கிறார்.

அத்துடன், அவர்கள் கேட்பதை என்னால் வழங்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், சிறுபான்மை இனம் இந்நாட்டில் இல்லை என்று மீண்டும் மீண்டும் ஜனாதிபதி எடுத்துக் கூறி வருகிறார். அதன் அர்த்தம் தான் புரியாத புதிராக இருந்து வருகிறது. அப்படிக் கூறுவதன் மூலம் இந்நாட்டில் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்களும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களும் இல்லை என்று கூறுகிறாரா? அல்லது அவற்றுக்கு இன, மொழி, மத, பிரதேச பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று காட்ட முற்படுகிறாரா? அப்படியாயின் இலங்கையில் தேசிய இனப் பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்பதாகவும் அதற்கான அரசியல் தீர்வு தேவையற்றது என்றும் ஜனாதிபதி முடிவுக்கு வந்துவிட்டாரா? அல்லது இனி எடுக்கப்போகும் நடவடிக்கைகள் யாவும் சிறுபான்மைத் தேசிய இனங்களைப் படிப்படியாகப் பெரும்பான்மைச் சிங்கள தேசிய இனத்துடன் ஒன்று கலக்கச் செய்யும் முயற்சிகளாக இருக்கப்போகின்றதா? போன்ற கேள்விகளையே எழுப்புகின்றன.

ஜனாதிபதியுடனான பேட்டி இடம்பெறுவதற்கு முன்பு இந்து ராம் வவுனியாவிற்குச் சென்று முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்வையிட்டுத் திரும்பினார். அங்கு வசதிகள் யாவும் மக்களுக்கு இருப்பதாகவும் பிரச்சினைகள் அதிகம் இல்லை என்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் காட்சிப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார். அதனைப் பார்த்து திருப்தியுடன் எழுதியும் இருப்பார். ஆனால், மூன்று இலட்சம் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களும் வேதனைகளும் ராமுக்கு காட்டப்பட்டிருக்க நியாயமில்லை. அப்படிப் பார்த்திருந்தாலும் அவர் அக்கறையுடன் அதை எழுதியிருக்க அவரின் பக்கத்தில் நியாயமும் இல்லை. இம் முகாம்களுக்கு வெளியில் இருந்து எவரும் அல்லது பத்திரிகையாளர்களோ ஊடகங்களோ அனுமதிக்கப்படாத நிலையில் இந்து ராம் மட்டும் சென்று வந்திருப்பது அரசுடன் அவர் கொண்டுள்ள நல்லுறவையே எடுத்துக் காட்டுகின்றது என்றே கொள்ளல் வேண்டும்.

மேலும் இப்பேட்டியின் போது நாட்டில் இனவாதம் இல்லை என்றும் எந்தவொரு தமிழ் வீடும் தாக்கப்படவில்லை என்றும் எந்தவொரு தமிழரும் அச்சுறுத்தப்படவில்லையென்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். அவ்விடயத்தில் தான் மிகக் கவனமாக நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது பெருமளவுக்கு உண்மை தான். குறிப்பிடத்தக்க சம்பவம் இனவெறி அடிப்படையில் இடம்பெற்றிருக்கவில்லை. ஓரிரு தனிப்பட்ட சம்பவங்கள் சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தும் வகையில் இடம்பெற்றிருப்பினும் அவை தொடரவோ விரிவடையவோ இல்லை. புலம் பெயர்ந்த நாடுகளில் புலிகளின் ஆதரவாளர்களும் அவர்கள் சார்ந்த இணையத்தளங்களும் இட்டுக்கட்டியவாறான இனவாதச் சம்பவங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிட வேண்டியதாகும்.

ஆனால், இனவாதம் நாட்டில் இல்லை என்று ஜனாதிபதி கூறுவது ஏற்புடைய ஒன்றல்ல. அவரது அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளுடன் இருந்து வரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் நாளாந்தம் பரப்பி வரும்பேரினவாதப் பேச்சுக்களையும் எடுக்கும் சபதங்களையும் ஜனாதிபதி இனவாதமாகக் கொள்ளவில்லையா? தேசிய பிக்குமார் முன்னணியும் அதன் தலைவர் அமில தேரரும் கூறி வருபவை இன விரிசல்களை மேன்மேலும் அகலமாக்கும் நடவடிக்கைகள் இல்லையா?

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே தெற்கில் விதைக்கப்பட்ட இனவாத நச்சு விதைகள் தான் இன்று வரையான பேரினவாதப்பெரு விருட்சமாகிக் கொண்ட இலங்கை வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது என்ற உண்மை உணரப்படல் வேண்டும். அதேவேளை, வடக்கில் பழைமை வாத தமிழ்த் தேசியவாதமானது அண்மைக்காலத்தில் தோற்கடிக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழீழக் கோரிக்கை வரையான குறுந்தேசியவாதப் பாதையில் பயணித்து வந்த உண்மைகளைக் காணத் தவறக் கூடாது. இவ்விரு போக்குகளில் ஒன்றை ஏற்று மற்றதை மட்டும் நிராகரிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இரு புறத்திலும் அதாவது தெற்கிலும் வடக்கிலும் தோற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பௌத்த சிங்களப் பேரினவாதமும் பழைமைப் பற்றுடனான தமிழ்க் குறுந் தேசியவாதமும் ஒன்றுக்கொன்று ஊட்டமளித்தே வந்திருக்கின்றன. இவற்றால் சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் எவ்வித பலாபலன்களையும் பெறவில்லை. பதிலுக்கு இனங்களிடையேயான இன விரிசல்களும் இன மோதல்களும் பரஸ்பர நிராகரிப்புகளுமே இடம்பெற்று வந்துள்ளன. இதில் தமிழ் மக்களே மிகப் பெரும் இழப்புகளையும் துயரங்களையும் அனுபவித்து வந்துள்ளனர். இன்று இவற்றின் உச்ச கட்டத்தையே காண முடிகின்றது.

இன்றும் கூட குறுந்தேசியவாத வழி நின்று தமிழ் மக்களைத் தவறான பாதையில் பயணிக்க வைத்து அழைத்துச் சென்றவர்களுக்கும் அவற்றை நம்பிச் சென்று அவலங்களைத் தேடி நிற்கும் சாதாரண தமிழ் மக்களுக்கும் உள்ள வேறுபாட்டை ஜனாதிபதியும் ஆளும் தரப்பினரும் அடையாளம் காண மறுப்பது தான் பிரச்சினையின் மையப் புள்ளியாகக் காணப்படுகிறது. இதனை விளங்கிக் கொண்டமையையோ அல்லது அதற்கு தீர்வு காண்பதையையோ ஜனாதிபதி தனது பேட்டியின் போது ஒரு இடத்தில் தானும் வெளிப்படுத்தவில்லை. இன்று யாவற்றையும் விட முதன்மை பெற்று நிற்கும் விடயம் முட்கம்பி வேலிகளுக்கு மத்தியில் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் மூன்று இலட்சம் மக்கள் விடுவிக்கப்படவேண்டிய விடயமாகும்.

அம் மக்கள் சொந்த இடங்களுக்கு மீளச் சென்று இயல்பு வாழ்வு வாழ வழிகள் வகுக்கப்படல் வேண்டும். அவற்றை தள்ளிப்போடும் நடைமுறைகள் மூலம் அம்மக்கள் தொடர்ந்து தண்டிக்கப்படக்கூடாது. வெறுமனே பாதுகாப்புக் காரணங்கள் எனக் கூறி அரசியல் யதார்த்தங்களையும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளையும் உள்ளக் குமுறல்களையும் புறந்தள்ள முடியாது. "இத்தகைய அவலவாழ்வு தொடர்வதை விடச் செத்துத்தொலைந்து போவது மேலானது' என்ற மன நிலைக்கு சொந்த நாட்டு மக்களை யோசிக்க வைப்பது ஒரு சொந்த நாட்டு அரசாங்கத்திற்கு உரிய நிலைப்பாடாக இருக்க முடியாது.

எனவே, வரலாற்றில் பெரும் வெற்றியை வென்றெடுத்துள்ளதாகப் பெருமைப்படும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தூர நோக்கில் அவர் கூறும் சமாதானம் சுபீட்சம் மிக்க இலங்கையைக் கட்டியெழுப்ப முன்வரல்வேண்டும். அதற்குரிய துணிவானதும் உறுதியானதுமான தீர்மானங்களுக்கு உடனடியாக முன்வரல்வேண்டும். அதில் ஒன்று தடுத்து வைக்கப்பட்ட மூன்று இலட்சம் தமிழ் மக்களை விடுவித்து புனர் வாழ்வுக்கு வழி வகுப்பது இரண்டாவது தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான அரசியல் தீர்வுகாண்பது .

அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்கனவே தென்னிலங்கைத் தலைமை வழமையாகப் பாடிவரும் பல்லவி தான் இப்போதும் பாடப்படுகிறது. அதாவது, பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு என்றும் சிங்கள மக்கள் வழங்கும் ஆணை என்றும் கூறப்படுகிறது. இத்தகைய நிலைப்பாட்டினால் தான் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாராளுமன்ற ஆட்சி முறையின் கீழ் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வந்திருக்கிறது. பசித்தவர்களுத்தான் உணவு அவசியமே தவிர ஏற்கனவே பசியாறி இருப்போரிடம் அனுமதி பெற்று உணவு பரிமாற வேண்டிய அவசியம் இருக்கமுடியாது.அது எவ்வகையிலும் நியாயமும் ஆகாது.

எனவே, ஜனாதிபதி இந்து ராமிற்கு வழங்கிய பேட்டியின் போது முன்வைத்த கருத்துகளுக்கும் நிலைப்பாடுகளுக்கும் அப்பால் சென்று மக்கள் படும் துயரங்களுக்கு முடிவும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வும் காணப்படவேண்டும்.

நன்றி:தினக்குரல்

http://www.appaa.com/index.php?option=com_content&view=article&id=64:2009-07-11-15-39-27&catid=35:2009-07-08-13-09-17&Itemid=54

♥ சிங்கள அரசு திசை மாறுகிறது-குமுதம் ♥

சிங்கள அரசு திசை மாறுகிறது-குமுதம்


ழம் இன்றைக்கு மயான பூமியாகக் காட்சி அளிக்கிறது. அந்த கோரக் காட்சிகளைக் காண ஐ.நா. அமைப்புக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சர்வதேசப் பத்திரிகையாளர்கள் எவருமே அனுமதிக்கப்படவில்லை.

அங்கே ஆந்தைகளும் கோட்டான்களும் கூடுகட்டுகின்றன. அந்த செவிவழிச் செய்திகளை வெளியிட்ட சிங்களப் பத்திரிகையாளர்கள்கூட சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களில் பலர்

இன்றைக்கும் விலை வைத்து தேடப்படுகிறார்கள்.

குண்டுவீச்சுக் கொடுமைகளால் எப்படி முல்லைத் தீவு நகரமே இடிபாடுகளாகக் காட்சி அளிக்கிறது என்பதற்குச் சாட்சியாக ஒரே ஒரு புகைப்படம் மட்டும் வெளி உலகை எட்டிப் பார்த்தது. அந்தப் படமும் வானில் பறந்து போகும்போது எடுக்கப்பட்ட மரண சாட்சியாகும்.

கூண்டுக்குள் சிக்கிய சிறைப் பறவைகளாக லட்சோப லட்சம் ஈழ மக்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இரவு நேரங்களில் சிங்கள ராணுவக் கழுகுகள் அங்கே சுதந்திரமாகப் பறந்து வருகின்றன. இளம் ஈழத்து தமிழச்சிகளைக் கொத்திக் கொண்டு போகின்றன. அவர்களில் திரும்பாமலே காணாமல் போனவர்களும் உண்டு. ரத்தத்துளிகளோடு நடைப் பிணமாகத் திரும்பியவர்களும் உண்டு.

சொந்த வீடு வாசல்கள் இருந்தும் முகாம்களில் முடக்கப்பட்ட இளைஞர்களைத் தரம் பிரிக்கிறார்கள். இவர்கள் விடுதலைப் புலிகளோ என்று சந்தேகம் எழுந்தால் போதும். அடுத்த சில தினங்களில் அவர்கள் காணாமல் போகிறார்கள்.

ஈழத்தமிழர்களை முன்னர் சுட்டுப் புதைத்தனர். இப்போது புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டி எடுத்து இரவோடு இரவாக எரியூட்டி சாம்பலாக்குகிறார்கள். இனி அவர்களெல்லாம் காணாமல் போனவர்களின் பட்டியலில் கணக்குச் சொல்லப்படுவார்கள்.

இப்படிப் பல்வேறு வழிகளிலும் இன்றைக்கு ஈழத்தமிழ் இனம் அழிக்கப்படலாம். ஆனால், அந்த ஈழம் சபிக்கப்பட்ட பூமி அல்ல. ஒரு நாள் வேழமாக எழும். இட்லர் விரும்பியபடி யூத இனம் அழிந்தா விட்டது? இல்லை.

ஓர் இனத்தை அழிக்க சிங்கள இனவாதம் தொடுத்த போர் ஓய்ந்துவிட்டது. ஆனால், அதன் அவலங்களும் ஓலங்களும் சர்வதேச சமுதாயத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

என்ன ஆச்சரியம்? இந்திய அரசின் இதயத்தில் கூட ஈரம் சுரந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்ற ஈழத் தமிழர்களை உடனடியாக அவர்களுடைய இல்லங்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்திய அரசு கோரியிருக்கிறது. நல்லது.

இன்றைக்கு முகாம்களில் கால்நடைகளைப் போல் அடைக்கப்பட்ட மக்களில் 24,000 பேருக்கு அம்மை கண்டிருக்கிறது. ஐயாயிரம் பேருக்கு மஞ்சள் காமாலை வந்திருக்கிறது. போதிய மருத்துவ வசதிகள் இல்லை. நோய்களாலும் எஞ்சிய தமிழன் இறப்பைத் தழுவட்டும் என்று சிங்கள இனவாதம் எண்ணக் கூடும்.

கண்ணிவெடிகளை அகற்றிய பின்னர்தான் சூழ்நிலைக் கைதிகளை சொந்த ஊர்களுக்கு அனுப்ப முடியும் என்று சிங்கள அரசு சொல்கிறது. அந்தக் கண்ணிவெடிகளை ஒரே வாரத்தில் அகற்றி விட முடியும்.


ஈழத்தமிழ் உணர்வுள்ளவனுக்கு எதிர்காலம் இல்லை என்று முகாம்களிலேயே தீர்மானிக்கிறார்கள். அந்தச் சித்திரபுத்திரன் வேலை நடைபெறுகிறது. எனவே, முகாம்களில் அடைபட்ட தமிழர்கள் சொந்த மண்ணிற்குத் திரும்ப வேண்டும். அழுவதற்குக் கூட அனுமதியில்லாத அவர்கள் பிறந்த பூமியைப் பார்த்தாவது பெருமூச்சு விடவேண்டும்.
ஏதோ ஈழப் பரப்பைப் பரம்படித்து செம்மைப்படுத்தப்போவதாக இந்திய அரசு கூறுகிறது. அதனை அனுபவிக்க எஞ்சிய தமிழர்களாவது இல்லம் திரும்ப வேண்டாமா?

ஈழத்தை இப்போதைக்கு வெற்றி கொள்ள சீனத்தையும் பாகிஸ்தானையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்ட சிங்கள அரசு, இந்தியாவையும் பயன்படுத்திக் கொண்டது. ஆனால், சோதனையான நேரங்களில் இந்தியாவை நோக்கித்தான் குரல் கொடுக்க முடியும். திருமதி பண்டாரநாயகா ஆட்சிக் காலத்தில் சிங்கள அரசின் சிம்மாசனம் ஆட்டம் கண்டது. அப்போதும் இந்தியாவின் உதவியைத்தான் நாடியது.

ஆனால், இனி இந்தியாவின் தோழமைக்கு சிங்கள அரசு எந்த அளவிற்கு நேசக்கரம் நீட்டும் என்பதனை இனிதான் காணப்போகிறோம். ஈழத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற சிங்கள ராணுவம் உடனடியாகத் தங்கள் முகாம்களுக்குத் திரும்ப வேண்டும் என்று இந்திய அரசு கோரியிருக்கிறது.

அந்தக் காரியம் நடைபெற்றாலே ஈழ மக்கள் ஓரளவிற்கு நிம்மதி பெறுவார்கள். ஏனெனில், இன்றைக்கு ஈழம் முழுக்க புற்றுநோய்க் கட்டிகளாக ராணுவ முகாம்கள் முளைத்திருக்கின்றன. அதுமட்டுமல்ல, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே சிவாலயங்களையும் தேவாலயங்களையும் சிங்கள அரசு ராணுவ முகாம்களாக மாற்றிவிட்டது. இன்றுவரை அந்தத் தெய்வீகத் திருத்தலங்கள் குருதிச் சேற்றில்தான் குளித்துக் கொண்டிருக்கின்றன.

முகாம்களில் அடைபட்டிருக்கின்ற ஈழத்தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப வேண்டும். சிங்கள ராணுவம் தமது முகாம்களுக்குத் திரும்ப வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கைகளை ஏற்றாலே சிங்கள அரசு இந்திய நட்புறவு பற்றி சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது என்று அர்த்தம்.

ஈழப் பிரதேசத்தில் இன்றுவரை இயல்பு நிலை திரும்பாததற்கு என்ன காரணம்? சிங்கள ராணுவத்தினரின் தங்குதடையற்ற நடமாட்டம்தான். அவர்களை எவராலும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனை சிங்கள அரசு அனுமதிக்கிறது. காரணம், தமிழனுக்கு என்று இனி தனி அடையாளம் இருக்கக் கூடாது என்று கருதுகிறது.

ஈழம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பைச் சந்தித்து விட்டது. இடிந்து போன வீடுகளையும் எரிந்து போன வனங்களையும்தான் காண முடிகிறது. எனவே, இந்தப் பிரதேசத்தில் கூட இனி ராணுவ நடமாட்டம் தேவைதானா?

கண்ணிவெடிகளைக் காரணம் காட்டினால், அதனை அகற்றும் பணியை ஒரே வாரத்தில் நாங்களே செய்து முடிக்க முடியும் என்றும் இந்தியா தெரிவித்திருப்பதாக அறிகிறோம்.

இலங்கை அதிபரின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் பாசில் ராஜபக்ஷேயும், ராணுவத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்ஷேயும் அண்மையில் டெல்லி வந்தனர். உண்மையில் அவர்களை அழைத்ததே இந்திய அரசுதான் என்று எண்ணத் தோன்றுகிறது.

அவர்கள் இருவருமே இலங்கை அதிபரின் உடன் பிறப்புக்கள் மட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்தின் அச்சாணியாகச் செயல்படுகிறவர்கள். எனவே, அவர்களை அழைத்து அடுத்து ஈழத்தில் என்ன நடைபெற வேண்டும் என்ற தமது நிலையை இந்தியா தெரிவித்திருக்கிறது. அதனை எச்சரிக்கையாகவும் கூறியிருக்கலாம். இந்தப் பணிகளில் உங்களுக்கு உதவத் தயார் என்று வேண்டுகோளாகவும் தெரிவித்திருக்கலாம்.

ஈழத்தின் மறுசீரமைப்பிற்கு எல்லா வழிகளிலும் இந்தியா உதவி செய்யும். அதே சமயத்தில் கல்வி, வேலை வாய்ப்பு உள்பட அனைத்து உரிமைகளும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சிங்களப் பிரதிநிதிகளிடம் இந்திய அரசு எடுத்துக் கூறியிருக்கிறது.

ஈழமே தங்கள் தாயகம் என்று போராடிய விடுதலைப்புலிகள் இயக்கம், இப்போதைக்கு அழிக்கப்பட்டதாகத் தோன்றலாம். ஆனால், என்னென்ன காரணங்களுக்காக ஈழ விடுதலை இயக்கம் பிறந்ததோ அந்தக் காரணங்கள் அனைத்தும் பசுமையாக இருக்கின்றன என்பதனையும் சிங்கள அதிபரின் தூதர்களிடம் இந்தியா எடுத்துக் கூறியிருப்பதாகவும் அறிகிறோம்.

அந்தக் காரணங்களுக்கு சிங்கள இனவாத அரசு தீர்வு காண வேண்டும். ஆனால், அத்தகைய தீர்வுகளை சிங்கள இனவெறியர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விக்குறிதான்.

`கச்சத்தீவில் ராணுவ தளம் அமைக்க மாட்டோம். சீனம் அங்கே ராணுவதளம் அமைக்கவும் அனுமதிக்கமாட்டோம்' என்று சிங்கள அதிபரின் தூதர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான உரிமைகள் காக்கப்படவேண்டும். அதற்கான உறுதிமொழியை சிங்கள அரசு இதுவரை தரவில்லை.

எல்லை கடந்து வருகின்ற சிங்கள மீனவர்களை இந்தியக் கடற்படையினர் இதுவரை சுட்டுப் பொசுக்கியதில்லை. அவர்களுடைய வலை களை அறுத்தெறிந்ததில்லை. அவர்கள் பிடித்த மீன்களை அள்ளிக் கொண்டதில்லை. சிறைகளில் சித்திரவதை செய்ததில்லை. ஆனால், விடுதலைப்புலிகளைக் காரணம் காட்டி இதுவரை சிங்கள ராணுவம் தமிழக மீனவர்களை வேட்டையாடி வந்தது. இனி புலிகள் என்று காரணம் கூற முடியாது. ஆனால், அத்தகைய கொடுமைகள் இன்றுவரை நீடிக்கவே செய்கின்றன.

இன்னும் ஆறுமாத காலத்தில் ஈழத்தில் வசந்தம் பிறக்கும். முல்லைத் தீவு மணம் பரப்பும் என்று சிங்கள அதிபரின் தூதர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள். ஆறு மாத காலம் என்பது காலைப் பனித்துளியாய் விரைவில் கரைந்து போகும். அதற்குள் நடக்கும் அதிசயத்தைக் காண நாமும் தயாராக இருப்போம்.

ஆனால், இந்தக் கட்டுரையை முடிக்கும்போது மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் உணர்ச்சிக்குரல் கேட்கிறது. வரவேற்கிறோம்.

போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் மறுவாழ்விற்கு சிங்கள அரசு இதுவரை எந்தப் பணியும் தொடங்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். சிங்கள அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாகத் தெரியவில்லை என்றும் அதிருப்தியை அறிவித்திருக்கிறார். செஞ்சிலுவைச் சங்கம் போன்ற உலகத் தொண்டு நிறுவனங்கள் ஈழப் பகுதியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்கிறார். ஈழத்தமிழர்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ள முகாம்களை சர்வதேசப் பத்திரிகையாளர்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்கிறார்.

ஈழத்தமிழர்களின் மறுவாழ்விற்கு உதவியாக இந்திய அரசு 500 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது என்றாலும், ஈழத்தமிழர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களையே இலங்கை அரசு வகுக்கவில்லை என்கிறார். இதனை இந்திய அரசின் முதல் குற்றப்பத்திரிகையாகக் கருதலாமா? சிங்கள அரசு திசை மாறுகிறது என்பதனைத்தான் சிதம்பரத்தின் அடுக்கடுக்கான அறிவிப்புக்கள் உணர்த்துவதாக எடுத்துக் கொள்ளலாமா?

இந்திய அரசு தெரிவித்த எந்த யோசனையையும் இனி சிங்கள அரசு செயல்படுத்தாது. அதற்கு மாறாக, ஈழ மக்களின் சொந்த பூமியை சீனத்திற்குச் சீதனமாகக் கொடுக்கப் போகிறது.

ஆம். முல்லைத் தீவுப் பகுதியின் நிலங்களை முழுமையாகக் கைப்பற்றி, அதனை சீனத்திற்கு அளிக்கிறது. அங்கே பொருளாதார மண்டலங்களை சீனம் அமைக்குமாம்.

அங்கு மட்டுமல்ல திரிகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய ஈழப்பகுதிகளிலும் தமிழர்கள் நிலங்களைக் கைப்பற்றி பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுமாம்.

ஆனால், சிங்களவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்களில் பொருளாதார மண்டலங்கள் அமையாதாம். இனி ஈழத்தமிழன் சொந்த பூமிக்காக சிங்கள அரசிடம் பிச்சை எடுக்க வேண்டும். இல்லையேல், இன்னொரு போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். சிங்கள அரசும் இன்னும் பவுத்த குண்டுகளை பத்திரமாக வைத்திருக்கிறது.

சென்ற வாரத்தில் வந்த சில செய்திகளை மட்டும் டெல்லிக்கு நினைவுபடுத்துகிறோம்.

சிங்களப் பரப்பில் சீனம் புதிய துறைமுகம் கட்டித் தருகிறது. மின் உற்பத்தியைப் பெருக்க சீனத்தோடு புதிதாக உடன்பாடு கண்டிருக்கிறது. சீன முதலீடுகளை வெகுவாகக் கவருவதற்கு சிங்கள வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங் சென்று இருக்கிறார். இரு நாடுகளின் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வழி வகைகள் காணப்படும்.

பெருமளவில் முதலீடு செய்ய வருகின்ற சீனக் கம்பெனிகள் குறைந்தபட்சம் 33 ஆண்டுகள் செயல்பட அனுமதிக்கப்படும்.


http://www.appaa.com/index.php?option=com_content&view=article&id=67:2009-07-11-17-26-33&catid=35:2009-07-08-13-09-17&Itemid=54

♥ மொத்த சனத்தொகையில் 1.5 வீதமானவர்கள் சிறைகளில்... ♥

மொத்த சனத்தொகையில் 1.5 வீதமானவர்கள் சிறைகளில்

 EyeJail.jpg Eye Jail image by sofatater
இலங்கையிலுள்ள மொத்த சனத்தொகையில் சுமார் 1.5 சத வீதமானோர் சிறைச்சாலைகளில் இருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி. சில்வா தெரிவித்தார். 

"பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் 25 சிறைச்சாலைகளில் 31 ஆயிரத்து 653 பேர் தற்போது வைக்கப்பட்டுள்ளார்கள். 260 பேர் மரண தண்டனைக் கைதிகள். 184 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகள்" என தெரிவித்துள்ள அவர் இந்தக் கைதிகளில் 541 பேர் தங்களுடைய தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"இந்தக் கைதிகளின் வயதைப் பொறுத்த வரை 46 சத வீதமானோர் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 36.5 சதவீதமானோர் போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள். 3.6 வீதமானோர் பொது இடங்களில் மது போதை குறித்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் 15,000 பேரின் விசாரணை அறிக்கைகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதால் அவர்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறினார்

http://www.appaa.com/index.php?option=com_content&view=article&id=77:--15---&catid=34:2009-07-08-13-08-35&Itemid=53


http://www.topnews.in/law/files/jail.jpg

http://www.faqs.org/photo-dict/photofiles/list/495/876jail.jpg♥ அமெரிக்காவில் ஈழ விடுதலைக் குரல்...! ♥

அமெரிக்காவில் ஓங்கி ஒலித்த தமிழ் ஈழக் குரல்!--விகடன்


பத்தாம் நுற்றாண்டில் வாள் எடுத்துத் தன் வீரத்தைக் காட்டி, உலகை வென்றான் ராஜராஜ சோழன். 21-ம் நூற்றாண்டில் துப்பாக்கி எடுத்து தமிழனின் மானம் காத்தான் மாவீரன் பிரபாகரன். உலகத் தமிழர்களுக்கு முகவரி கொடுத்தவன் அவன்.

ஒருவேளை அவன் மறைந்திருந்தால், அது துரோகத்தால் பெற்ற வெற்றி! சாவே வந்து பிரபாகரனிடம் பிச்சை கேட்டிருக்கும். அஸ்தமனம் என்பது சூரியனின் மரணம் அல்ல, கிழக்கு மீண்டும் சிவக்கும்...

மறுபடியும் உதிக்கும்... அந்த விடியலே தமிழ் ஈழம். இங்கே ஒரு வெள்ளைக்காரப் பெண் ஈழத்தின் வலியைப் பற்றிப் பேசினார். அவரைப் போன்றவர்கள் இன்னும் நிறைய பேர் ஈழம் மலரத் தேவை!'' என்றார் வைரமுத்து.

ஈழ மக்களி டையே தனி யாகப் பேசிக் கொண்டிருந்த போது தமிழருவி மணியன், ''தீக்குச் சியும், தீக்கிரையாக்கி விடும் சிகரெட்டும் ஒரே பெட்டியில் இருக்கலாம். ஆனால், தமிழனும் சிங்களவனும் ஒரே இடத்தில் இருக்கமுடியாது!'' என்றார். ''தமிழ் ஈழம் தவிர்க்க முடியாதது.

ஆனால், யுக்திகளை மாற்றவேண்டும். 20 ஆண்டுகள் முன்பிருந்த அரசியல் சூழல் வேறு. அப்போது அமெரிக்க-ரஷ்ய பனிப் போர். இப்போதோ, இந்தியா-சீனா பனிப்போர் ஆசியாவில் மையம் கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளுமே தமிழர்களை ஆதரிக் காததால்தான் போர் முடிவுக்கு வந்துவிட்டது. இலங்கையைவிட ராணுவ பலம் அதிகம் இருந்தால் போதுமே, தமிழ் ஈழம் பெற்றுவிடலாம் என்று முப்படை கண்ட மாவீரன் உலக நாடுகளின் ஆதரவை பெறத் தயங்கி நின்றான்.

அதுவே எதிராகிவிட்டது. ஆகவே, அநாதைகளாக விடப்பட்டோம். இப்போதுகூட தனிநாடு கேட்கவில்லை. இந்திய அரசில் உள்ள மாநிலங்களுக்கு உள்ள அதிகாரத்தைதான் கேட்கி றோம் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டது. ஆனால், அதை சிங்கள அரசு குப்பையில் போட்டது. அதையாவது மத்திய அரசு தட்டிக் கேட்க வேண்டாமா?

இலங்கை இறையாண்மைக்கு இழுக்கில்லா தனி மாநிலம் பெற அனைத்து ஈழத்தலைவர்களும் கருணாநிதி, ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும். 40 எம்.பி-க்கள் டெல்லியை அசைக்க முடியும். அதற்கு உங்களிடம் முதலில் ஒற்றுமை அவசியம்!'' என்றார்.

விழாவில் கலந்துகொண்டவர்களில் குறிப்பிடத் தக்க கவனத்தைப் பெற்றார் ம.நடராசன். ஜார் ஜியா மாநில ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டேவிட் போய்த்ரிஸ், சுமார் 2 மணி நேரம் ம.நடராசனுடன் பேசி இந்திய அரசியல், தேர்தல் வியூகம் என்று அலசி னாராம். ஈழத் தமிழர்களும் ம.நடராசனை சந்தித்து ஆலோசனை செய்தார்கள்.

அவர்கள் மத்தியில் பேசிய நடராசன், ''இந்திரா உயிரோடு இருந்திருந்தால், பங்களா தேஷ் உருவாக்கியதைப் போல் தமிழ் ஈழம் அமைத்திருப்பார். அவர் ஒரு ராஜதந்திரி. ஆகவேதான், விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்தார். ராஜீவ் காந்தியும் மிக அழகாக ஈழப் பிரச்னையைக் கையிலெடுத்தார். அதற்குள் அவரை சுற்றி இருந்த தீயசக்திகள் இலங்கையிடம் காசு வாங்கிக்கொண்டு, அவர் புத்தியை மழுங்கடித்துவிட்டன. சோனியா தன் மாமியாரையும் மதிக்கவில்லை, கணவரையும் மதிக்கவில்லை..!

ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வடக்கையும் கிழக்கையும்இணைத்து ஒரே தமிழ் நிலம் அமைக்க வழி வகுத்தது. இப்போது இலங்கை உச்ச நீதிமன்றம், அந்த ஒப்பந்தத்தின் 13-வது ஷரத்தை ரத்து செய்து, இந்தியாவின் முகத்தில் கரிபூசி உள்ளது. கணவர் போட்ட ஒப்பந்தத்தை மதிக்காத இலங் கையை தட்டிக்கேட்க சோனியாவுக்கு ஏன் தைரிய மில்லை? இந்தியா-பாகிஸ்தான் போரின்போது அமெரிக்க அதிபரான நிக்ஸன் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார் இந்திரா.

அவர் உடம்பில் இந்திய ரத்தம் ஓடியது. இந்தியாவின் புகழை உலக நாடுகளில் நிலைநிறுத்தினார். ஆனால், இப்போது அண்டை நாடுகளான குட்டி தேசங்கள் நம்மை மதிப்பதில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை, சுதந்திரம் கிடைக்கும் வரை அங்கு அமைதி திரும்பாது; இலங்கையில் அமைதி இல்லாத வரை இந்தியாவில் அமைதி கிடையாது. இதை சோனியா உணர வேண்டும். கலைஞரையும் இனி நம்பிப் பயனில்லை. தமிழ் ஈழம், புலி என்றாலே கடுமையாக எதிர்த்துவந்த ஜெயலலிதா, அங்கே நடக்கும் கொடுமைகளைக் கண்டு தன் 20 வருட நிலைப் பாட்டை மாற்றிக்கொண்டார். இனி, அவரை நம்பலாம்...'' என்று பேசியிருக்கிறார்.

தமிழ் விஞ்ஞானியான 'சந்திராயன்' மயில் சாமி அண்ணாதுரை, வேலூர் ஜி.விஸ்வநாதன்... தமிழ் சினிமா நடிகர்களான பசுபதி, ஜீவா, நடிகை கனிகா ஆகியோர் பேசுகையில் ஈழப் பிரச்னையைத் தொடவில்லை.

அனுராதா ஸ்ரீராம் தமிழ் இசை திரைப்பாடல் நிகழ்ச்சியில் இடை இடையே ஆங்கிலத்தில் பேச, கடுப்பான தமிழ் சங்கத் தலைவர் ஒருவர் 'தமிழில் பேசுங்க' என்று சத்தம் போட்டார். உடனே, அனுராதா ஸ்ரீராம், ''நானும் தமிழச்சிதாங்க. தமிழ்த் திரைப்படத் துறையில் மலையாளிகளும், இந்திக்காரர்களும்தான் அதிகமாகப் பின்னணி பாடுகிறார்கள். உங்கள் கோபத்தை அங்கு சென்று காட்டுங்களேன்... பெருமைப்படுகிறேன்!'' என்றார் பட்டென்று!

பேச்சுகளுக்கிடையில், வன்னியில் நடை பெற்ற படுகொலைகளை, சித்ரவதைகளை புகைப்படங்களாகத் திரையில் காட்டினார்கள். பிணக்குவியல்கள், முடமான மனிதர்கள் என உலுக்கிப்போட்ட அந்தக் காட்சிகளைப் பார்த்து, அந்த அரங்கத்தில் இருந்த குழந்தைகள் பயப்பட, பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கண்களைப் பொத்த வேண்டி வந்தது.


http://www.appaa.com/index.php?option=com_content&view=article&id=66:2009-07-11-17-21-33&catid=35:2009-07-08-13-09-17&Itemid=54

♥ தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்......... ♥

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்.........http://www.tamilnet.com/img/publish/2009/04/28_04_09_foodshortage_03_80137_445.jpg   http://www.superchefblog.com/images/tsunami_tamilnadu500x400.png


பசிக் கொடுமையிலே பரிதவிக்கிறார் பால் முகம் மாறாத ஈழத்துப் பாலகர்கள்.கால் வயிறு கஞ்சிக்கு

கடப்பாரையோடுகடும் வெயிலிலே

உணவு தேடுகின்றார்.

ஊட்டமில்லாத உணவை

நாள்தோறும் உண்பதினால்

வாட்டமான முகத்துடன்

சோட்டமாக வாழுகின்றார்

நம் பாலகர்;.

ஒட்டிய வயிறோடும்

வற்றிய கண்ணோடும்

வாழ்பவர் ஒரு பக்கம்

அறு சுவை மறந்து

ஒரு சுவையாவது

கிடைக்குமா என

ஏங்குபவர் ஒரு பக்கம்

பால் கேட்கும் பாலகனுக்கு

இதயத்தை இரும்பாக்கி

இருண்ட உலகத்தில்

உணவைத் தேடி

அலைபவர் ஒரு பக்கம்

பஞ்சம் தலை விரித்தாட

பட்டினியும் கை கோர்க்க

அடம்பன் கொடியும் உணவாகும் நிலை

தனி ஒருவனுக்க உணவு இல்லையெனில்

ஜெகத்தினை அழித்திடுவோம்என்றான் பாரதி.

கொடுமையில் பெரிய கொடுமைபசிக் கொடுமை

பட்டினியால் பாலகர்கள் நம் தாய் நாட்டில் பரி தவிக்க

பால் பழம் அருகிலிருந்தும்

பாபா படம் போட்டால் தான்சாப்பிடுவேன்

என்கிறதுபுலம் பெயர்ந்த குழந்தை.

சற்று சிந்திப்போம்சாவை விரட்டுவோம்

பட்டினிக்கொடுமையில்பரிதவிக்கும் எம்

உறவுகளைபலம் கொண்டு காத்திடுவோம்;

நன்றி வணக்கத்துடன்

ரத்னா.

http://www.tamilkathir.com/news/1354/58//d,full_view.aspx


http://www.tamilkathir.com/uploads/images/aaivu/2009/01/02vikadan.jpg

"பிரபாகரனுக்கு யாரும் சல்யூட் கூட அடிக்கவில்லை....!" - ஜெகத் கஸ்பர் பேட்டி

அருட்தந்தை ஜெகத் கஸ்பர் நேர்காணல்!

"2002-ல் நான் பிரபாகரனைச் சந்தித்தேன். நான் சந்திக்கும் இடத்திற்குள் அவர் உள்ளே நுழைந்தபோது, அவருக்கு யாரும் சல்யூட் அடிக்கவில்லை. தனக்கான இருக்கையைத் தானே எடுத்துப் போட்டுக் கொண்டார். சின்ன போராளிகள்கூட அவருக்கு வணக்கம் சொல்ல வில்லை. பணிவுடன் கடந்து சென்றார்கள்; அவ்வளவுதான்....."
தமிழர் வாழ்வியல், பண்பாடு, மொழி ஆகிய தளங்களில் சமூக ஆய்வு, சமூக விழாக்கள், இசை முயற்சிகள், பதிப்பு முயற்சிகள், சமுதாய ஊடகம் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார்- சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு சாதித்து வரும் "தமிழ் மையம்' அமைப்பின் நிறுவனர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர்.

இளமையும் துடிப்பும் மிக்க இந்த கத்தோலிக்க குரு, ஈழச் சிக்கல் தீவிரம் கொண்டிருந்த 90-களின் இறுதியில் ஒரு வெற்றிகரமான வானொலி இதழிய லாளராக ஈழ அகதிகளுக்கு இவர் ஆற்றிய பணி அளப்பரியது. தற்போது சென்னையில் வசித்து வரும் இவர், மாநகர வாழ்வில் ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வரும் "சென்னை சங்கமம்', "சென்னை மாரத்தான்' ஆகிய சமுதாய விழாக்களை இணைந்து உருவாக்கியவர்களில் ஒருவர்.

சுதந்திரம், சமத்துவம் ஆகிய இரண்டும் மனித வாழ்வுக்கு இன்றியமையாத இரு கண்கள் என்ற கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஜனநாயகவாதியான ஜெகத் கஸ்பர், அடிப்படை வாதத்தின் அனைத்துவித வடிவங்களையும் அடியோடு வெறுக்கும் தொலைநோக்குத் துறவி. எனினும் மதங்கள், கலாச்சாரங்களுக்கு இடையிலான ஒப்புறவையும், அதுகுறித்த விவாதத்தையும் விரும்பும் இவர் நான்கு நூல்களின் ஆசிரியர். கவனத்துக்குரிய கட்டுரையாளர்.

அவரை "இனிய உதய'த்திற்காக சந்தித்து உரையாடினோம். அதிலிருந்து...

இளையராஜாவின் இசை ஆளுமையைப் பயன்படுத்தி, மாணிக்க வாசகரின் "திருவாசக'த்துக்கு சிம்பொனி இசை வடிவம் தரும் முயற்சியை ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவப் பாதிரியார் முன்னெடுக்கிறார் என்று தெரியவந்தபோது தான், அநேகமாய் உங்கள்மீது புகழ் வெளிச்சம் விழுந்தது என்று நினைக்கிறேன். அருட் தந்தைகளுக்கு இலக்கியப் பணி என்பது புதிதல்ல என்றா லும், உங்களது சிம்பொனி முயற்சி என்பது அடிப்படை மதவாத சக்திகளே பொறாமை கொள்ளும் அளவுக்கு மத நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடித்த ஒரு மாபெரும் முயற்சி யாக அமைந்து விட்டது. பொதுவாக மத குருமார்கள் என்போர் மதப்பற்று கொண் டவர்களாக இருப்பார்கள். நீங்கள் இதிலிருந்து மாறு படுவதாகத் தோன்றுகிறது. உங்களது குடும்பப் பின்னணிக் கும், நீங்கள் முன்னெடுக்க விரும்பும் சமய ஒப்புறவுக்கும் தொடர்பிருக்கிறதா?

""குமரி மாவட்டத்தில் காஞ்சாபுரம் என்னும் சின்னஞ் சிறு கிராமத்தில் பிறந்தவன் நான். எனது தந்தையார் திருமணத் துக்காக கிறிஸ்துவத்தைத் தழுவிக் கொண்ட இந்துக் குடும் பத்தைச் சார்ந்தவர். தாயார் பாரம்பரியமான கிறிஸ்துவக் குடும்பத்தைச் சார்ந்தவர். தந்தை யாரின் உடன்பிறப்புகள், உறவு கள் அனைவருமே தங்கள் மதத் தின்பால் ஆழ்ந்த பற்று கொண் டவர்கள். குடும்பத்துக்கென்று சிவபெருமான் கோவில், முருகப் பெருமான் கோவில், பத்திர காளியம்மன் கோவில் என்று கட்டி வழிபட்டு வருபவர்கள். இன்றும் அந்தக் கோவில்களைப் பேணி வருபவர்கள். இதுபோன்றதொரு பின்னணியில் பிறந்த எனக்கு இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. எங்கள் மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற இந்து- கிறிஸ்துவ கலப்புத் திருமணங்கள் என்பவை வழக்க மான ஒரு யதார்த்தம். இப்படி கலப்புத் திருமணங்கள் நடந்தா லும்கூட பிள்ளை வளர்ப்பு என்பது கிறிஸ்துவ மதம் சார்ந்தே இருக்கும். எனக்கோ இந்த இரண்டு சமயங்களின் பின்னணி யையும் பார்த்து, அறிந்து வளர்கிற வாய்ப்பு அமைந்து விட்டது. இதனால் மத நல்லிணக்கம் என்பது இளமை முதலே எனக் குள் வேர்பிடித்து விட்டது.

அதேபோல எங்கள் ஊர் அமைந்திருந்த விளவங்கோடு தாலுக்கா, இடதுசாரி அரசியல் தீவிரமாக மையங்கொண்டிருக் கும் நிலப்பரப்புக்களில் ஒன்று. இவையெல்லாம் சேர்ந்து சிறுவயதிலேயே ஒரு விரிவான பார்வையைத் தந்துவிட்டன.''

இருவேறு மதப் பின்னணி யில் வளர்ந்த நீங்கள் குருத்து வம் பெற வேண்டும் என்று விரும்பியது உங்கள் தந்தையா, தாயா? பெரும்பான்மையான மாணவர்கள் குருகுலத்தில் படிக்கிறபோதே விலகிவிடுகி றார்கள்- இல்லையா?

""என் தாயாரின் நேர்த்திக் கடன் காரணமாக நான் குரு குலத்தில் சேர்க்கப்பட்டேன். எனது ஏழாம் வயதில் தந்தை யாருக்கு தொடர்ச்சியான தலைவலி. படுத்த படுக்கையாக இருந்து இறந்துபோனார். இப்போது நினைத்துப் பார்க்கிறபோது அது மூளைப் புற்று நோயாக இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். அன்று அதற்கான மருத்துவ வசதிகள் இல்லை. பிறகு நான் எட்டாம் வகுப்பு படிக்கிறபோது, எனக் கும் தொடர்ந்து தலைவலி வந்து விட்டது. என் தந்தையாருக்கு வந்த நோய்தான் எனக்கும் வந்து விட்டதோ என்று பயந்துபோன எனது தாயார், என் தலைவலி குணமாகிவிட்டால் என்னை குருத்துவ வாழ்க்கைக்கு அனுப்பி விடுவதாக இயேசுவிடம் நேர்த்திக்கடனாக வேண்டிக் கொண்டார்.

அவரது வேண்டுதலை இறைமகன் நிறைவேற்றி வைக்க, நான் பத்தாம் வகுப்பு படிக்கிறபோது குருகுலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கே பன்னிரண்டாம் வகுப்பைப் படித்து முடித்தபிறகு மொழிப் பயிற்சி, தத்துவவியல் பயில வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட தைப்போல அந்தக் காலகட்டத் தில் எனக்குள் பல்வேறு கேள்வி கள். கடவுள் இருக்கிறாரா, இல்லையா? கடவுள் இரக்கமுள்ளவர் என்றால் உலகில் ஏன் இத்தனை துன்பங்கள்? மலைக்கும் மடுவுக் குமான ஏற்றத்தாழ்வுகள் ஏன்? பதிலற்ற இந்தக் கேள்விகளோடு குருத்துவ வாழ்க்கையை ஏன் தொடர வேண்டும்... அதை விட்டு விலகி வீட்டுக்குப் போய்விட லாமே என்று எண்ணினேன். ஆனால் நான் இப்படி நினைக் கும்போதெல்லாம் எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துவிடும். என் எண்ணச் சிதறல்கள் ஒரு கட்டுக் குள் வந்து நான் குருத்துவப் படிப்பிலேயே தொடரும் அற்பு தம் நடந்தேறியது. அப்போதெல் லாம் இறைவன் நமக்கென்று ஒரு கடமையை வைத்திருக் கிறார் என்று திடமாக விசுவாசம் கொள்ளத் தொடங்கினேன்.''

பிறகு எப்போது குரு பட்டம் பெற்றீர்கள்? உங்க ளுடைய குருத்துவப் பணியின் தொடக்க காலம் என்பது எப்படி அமைந்தது?

""பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தபிறகு குரு பட்டம் பெறுவதற்கு ஓராண்டு காலம் மொழிப்பயிற்சி. லத்தீன், கிரேக்கம், எபிரேயம் (யூத மொழி), ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளைப் படித்தபிறகு மூன்றாண்டு காலம் தத்துவவியல் பட்டப் படிப்பு. பிறகு ஓராண்டு காலம் ஏதேனுமொரு ஊரில் மக்களோடு களப்பணி செய்ய வேண்டும். அதுவும் முடிந்தபிறகு நான்காண்டு காலம் இறையியல் பயிற்சி. இந்தக் கட்டங்களை யெல்லாம் தாண்டி வந்த பிறகு 1991-ஆம் ஆண்டு ஒரு குருவாக திருநிலைப் படுத்தப்பட்டேன்.

அதே ஆண்டில் முளகு மோடு என்ற ஊரில் உதவிப் பங்குத் தந்தையாக ஓராண்டு காலம் பணிபுரிந்தேன். 92-ஆம் ஆண்டு கருங்கல் என்ற ஊருக்கு அருகில் உள்ள சகாயநகர் மறைமாவட்டத்துக்கு பங்குத் தந்தை யாகப் பணியாற்றச் சென்றேன். கடுமையான உழைப்பை நம்பி, சுயமரியாதையோடு வாழ்கிற எளிய மக்கள் வசிக்கும் ஊர். அங்கு சென்றதும், அங்குள்ள இளைஞர்கள், இளம் பெண் களைக் குழுக்களாகக் கட்டி யெழுப்புகிற வேலையைச் செய்தேன். நான் அங்கு கடமையாற்றியபோது அந்த மாவட்டத்தையே குலுக்கி வந்த "மணலி குலுவிளை' பிரச்சினையைக் கையிலெடுத்தேன். மணலிகுலுவிளை பிரச்சினை என்பது ஒரு குட்டி அயோத்தியா பிரச்சினை போன்றது. அந்தச் சிக்கலைத் தீர்க்க மதவாத சக்திகளோடு மோதுகின்ற நிலை ஏற்பட்டது. மோதல் என்றால் அது மதம் சார்ந்த மோதல் அல்ல. அரசியல் சட்ட உரிமை சார்ந்து நீதிமன்றம் சென்றேன். ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழிபாடு நடத்துகிற உரிமை இருக்கிறதா, இல்லையா என்ற கோரிக்கையோடு மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி னோம். இறுதியில் அன்றைய ஜெயலலிதா அரசு, நடேசன் பால்ராஜ், நாகூர் மீரான், லாரன்ஸ் ஆகிய மூன்று அமைச் சர்களைக் கொண்ட குழு அமைத்து, அன்றைய மத்திய உள்துறை இணை அமைச்சர் ராஜேஷ் பைலட் தலையீட்டுடன் அந்தப் பிரச்சினையை இருதரப்பு சமாதானத்துடன் முடிவுக்குக் கொண்டு வந்தோம். அந்தப் பிரச்சினையை முன்னெடுத்துச் சென்றதில் போராட்ட ஒருங் கிணைப்பு, ஒரு அரசாங்கம் எப்படி இயங்குகிறது, உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது எத்தனை களைப்பான முயற்சி என்பதையெல்லாம் கற்றுக் கொண்டேன். என்னுடைய மறைப்பணியின் தொடக்க காலம் இதுதான்.''

சிம்பொனி முயற்சிக்குப் பிறகு நீங்கள் பரவலாக அறியப்பட்டாலும், அதற்கு முன்பு பிலிப்பைன்ஸ் "வெரிடாஸ்' சர்வதேச வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகளின் பொறுப் பாளராக இருந்து, ஈழ தேசிய விடுதலைப் போராட்டத்தை உலக மக்களிடம் எடுத்துச் செல்லும் முக்கியப் பணியைச் செய்தவர் என்பதை இங்குள்ள இன உணர்வாளர்கள், ஈழ மக்கள், புலம் பெயர்ந்தவர்கள் நன்கறிவார்கள். அதிலும் உங்களது "உறவுப் பாலம்' நிகழ்ச்சி ஈழப் போரில் சிதறுண்ட எத்தனையோ உறவு களை ஒன்று சேர்த்திருக் கிறது! அதுபற்றிச் சொல்லுங் களேன்?

"" "வெரிடாஸ்' என்பது பிலிப் பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து இயங்குகிற ஓர் அனைத் துலக வானொலி நிலையம். "வெரிடாஸ்' என்ற லத்தீன் மொழிச் சொல்லின் பொருள் "உண்மை' என்பதாகும். கத்தோலிக் கத் திருச்சபைக்கு இரண்டு அனைத்துலக வானொலி நிலையங்கள் இருக்கின்றன. ஒன்று வாடிகன் நகரிலேயே இயங்கக் கூடியது. மற்றொன்று இந்த "வெரிடாஸ்.' வாடிகன் வானொலியானது கிறிஸ்துவ மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பு செய்கிறது. ஆனால் "வெரிடாஸ்' வானொலி திருச்சபைக்குச் சொந்தமானது என்றாலும், அது கிஞ்சித்தும் மதச்சார்பற்ற பொதுநிகழ்ச்சி களை பதினேழு ஆசிய மொழி களில் ஒலிபரப்பு செய்து வருகிறது. "வெரிடா'ஸின் பாரம்பரியம் என்பதே மனித உரிமைகள், சுதந்திரம், விடுதலைப் போராட் டங்கள் ஆகியவற்றுக்கு இயல் பாகத் துணை நிற்பதுதான்.

பிலிப்பைன்ஸ் நாட்டிலே இமெல்டா மார்க்கோஸின் சர்வாதிகாரக் கும்பல் இருபத் தோரு ஆண்டுகாலம் நடத்தி வந்த ராணுவ எதேச்சதிகார ஆட்சியைத் தூக்கி எறிந்த மக்கள் புரட்சியானது நெறி செய்யப்பட்டது எங்கள் "வெரி டாஸ்' வானொலி மூலம்தான்.

மக்கள் புரட்சியை வழி நடத்திய புரட்சித் தலைவர்களான பிடல்ராமோஸ், கர்தினால் சின் போன்றவர்கள் "வெரிடாஸ்' வானொலியிலிருந்து, "புரட்சிக்கு வரும்போது மக்கள் அனைவரும் தத்தமது பாக்கெட் வானொலியை எடுத்து வாருங் கள்' என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதை ஏற்று புரட்சிக்கு வந்த இருபது லட்ச மக்களும் பாக்கெட் வானொ லியை எடுத்து வந்தார்கள்.

பாக்கெட் வானொலியில் தான் மக்கள் இப்போது என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்று வழிகாட்டி னார்கள். ஆக, "வெரிடாஸ்' என்பது ஒரு புரட்சிகர ஊடக மாகச் செயல்படும் பாரம்பரி யத்தைக் கொண்டிருக்கிறது. அதேபோல சீனாவில் உரிமைக் காகப் போராடுகிறவர்கள். அதே போல பர்மாவில் "கச்சின்- கரேன்' சிறுபான்மையின மக்களின் இன விடுதலைப் போராட்டத்தை உறுதியாக ஆதரித்த வானொலி "வெரிடாஸ்'. தவிரவும் அனைத்துலக வானொலி என்பது "கான் பிளிக்ட்சோன்' என்று சொல்லக் கூடிய பிரச்சினை அல்லது சண்டை மையம் கொண்டிருக்கக் கூடிய இடத்தின் உண்மை நிலவரத்தை "வெரிடாஸ்' போன்ற அனைத்துலக வானொலிகள்தான் உள்ளபடி சொல்ல முடியும். ஏனென்றால் போரை நடத்துகிற அரசாங்கத் திற்குப் பொய்யைத் தவிர வேறு நிலைப்பாடு இருக்காது. களத் திலே நிற்கக்கூடிய போராளி களும் போர்த் தந்திரம் கருதி பொய் சொல்கிற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இந்த இரண்டு தரப்பினரிடமிருந்தும் உண்மையை மீட்டெடுக்கிற பெரும்பணியை "வெரிடாஸ்' வானொலி செய்திருக்கிறது.

"வெரிடாஸ்' வானொலியில் நான் பணிபுரிந்தபோது ஈழத் தமிழர் சிக்கலில், உலகத்தோடு அந்த மக்களை இணைக்க முடிந் தது. அந்த மக்களின் உண்மை யான நிலையை- உணர்வுகளை- யதார்த்தத்தை உலகத்துக்கு எடுத்துச் சொல்ல முடிந்தது. இந்த இரண்டு பணிகளையும் செய்தோம். நீங்கள் குறிப்பிட்ட தைப்போல, "உறவுப் பாலம்' நிகழ்ச்சி மூலம் ஈழமக்களின் வாழ்வோடு ஐக்கியப்பட்டோம். நான் "வெரிடா'ஸில் பதவியேற்று நான்கைந்து மாதங்கள் கழிந்த போது, யாழ்ப்பாண இடப் பெயர்வு நடைபெற்றது. ஈழமக்க ளின் துன்பியல் வரலாற்றில் இந்தச் சம்பவம் ஒரு மாபெரும் துயர நிகழ்வு. ஒரே இரவில் பத்து லட்சம் தமிழ் மக்கள் கையில் கிடைத்ததை மட்டும் எடுத்துக் கொண்டு யாழ்ப் பாணத்தை விட்டு இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய அவல நிலை! 1995 -ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி இரவு நடந்த சம்பவத்தின் பின்னணியில் இலங்கை ராணுவத்தின் கோரமுகம் ஒளிந்து கொண்டிருந்தது. யாழ்ப் பாணத்தை இலங்கை ராணுவம் பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்தது. அன்றிரவு மக்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு அகன்று சென்றிருக்காவிட்டால், குறைந் தது ஐம்பதாயிரம் மக்களைக் கொன்று குவித்திருக்கும் இலங்கை ராணுவம்.

இந்த நிலையில் அந்த மக்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்து, அவர்களுக்கு நம்பிக்கை யைத் தந்து, உறுதியாக அவர் களை வழிநடத்திய ஒரு பணியை எம்முடைய வானொலி செய்தது. அவர்களது மனித உரிமைப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் அவை, அம்னெஸ்டி இன்டர் நேஷனல், உலக செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது. உலகத் தமிழ் மக்களின் மனிதா பிமானத்தை அந்த மக்களுக்காக இணைக்கின்ற ஒரு வேலையைச் செய்தது. இலங்கை தமிழ்ப்பகுதி ஒன்றில் யுத்தம் வெடிக்கிறது என்றால், அங்கே மின்சாரம் கிடையாது, பெட்ரோல் கிடையாது, மண்ணெண்ணெய் கிடையாது, பேட்டரி கிடையாது. இதுபோன்றதொரு நெருக்கடி யான சூழ்நிலையில்தான் அவர் கள் இருந்தார்கள். இரவு எட்டு மணிக்கு யுத்தம் வெடிக்கிறது என்றால், ஒரு குடும்பத்தில் யார் எங்கு ஓடினார்கள் என்றே தெரியாது. எந்த திசையை நோக்கி ஓடுகிறோம் என்று பார்த்து ஓடுகின்ற அவகாசமெல்லாம் இருக்காது. யுத்தம் தொடங்கிய ஒரு அரைமணி நேரத்தில் ஐம்பது, அறுபது ஆண்டுகள் கூடி வாழ்ந்த குடும்பம் சிதறுண்டு போயிருக்கும். அப்பா புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஓடி இருப்பார். அம்மா ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஓடி இருப்பார். பிள்ளைகள் அங்கு மிங்குமாக அலைக்கழிந்து, ராஜமன்னார் வந்து, இறுதியில் அங்கிருந்து ராமேஸ்வரம் வந்து சேர்ந்திருப்பார்கள். யார் எங்கு போனார்கள் என்று தெரியாமல் தவித்துக் கிடப்பார்கள்.

இந்தப் பிரச்சினையை உணர்ந்து கொண்ட நான் "உறவுப் பாலம்' நிகழ்ச்சியைத் தொடங் கினேன். யார் வேண்டுமானா லும் முதலில் கடிதம் எழுதலாம். ராமேஸ்வரம் உள்ளிட்ட அகதிகள் முகாம்களில் இருந்து பெற்றோரைப் பிரிந்து வந்த பிள்ளைகள், பிள்ளைகளைப் பிரிந்து வந்த பெற்றோர் என்று கடிதம் எழுதுவார்கள். அதை நாங்கள் வானொலியில் அறிவிப்பு செய்வோம். இதை சம்பந்தப்பட்ட பிள்ளைகள்- பெற்றோர் (உயிருடன் இருக்கும் பட்சத்தில்) உடனே கடிதம் வழியாகத் தொடர்பு கொண்டு, நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று எழுதுவார்கள். இப்படி நாங்கள் செய்கிற அறிவிப்பை ஈழத்திலே இருக்கக்கூடிய மக்கள் மிதிவண்டிச் சக்கரத்தைச் சுற்றி, டைனமோவில் ரேடியோவின் ஒயரை இணைத்து அதில் கிடைக்கிற மின்சாரத்தைக் கொண்டு கேட்பார்கள். மனித உயிராற்றலை எந்த அடக்குமுறை சக்தியாலும் தோல்வியடையச் செய்ய இயலாது என்பதற்கு இது ஒரு உதாரணம். இப்படி "உறவுப் பாலம்' வழியே தொடர்பு கொள்கிற குடும்பங்களை கடிதங் கள் வழியே தொடர்புகொள்ள வைத்து, திருச்சபைகள் வழியாக வும் ஐ.நா. சபை வழியாகவும் ஏற்பாடுகளைச் செய்து, மீண்டும் ஒன்று சேர்க்கும் பணியை இந்த நிகழ்ச்சியின் வழியே செய்ய முடிந்தது. இப்படி என்னுடைய பணிக்காலத்தில் மட்டும் சுமார் நான்காயிரத்து அறுநூறு குடும்பங்களை ஒன்று சேர்த்து வைத்திருக்கிறேன். 2001-ஆம் ஆண்டுவரை இந்த நெகிழ்வான பணியில் ஈடுபட்டிருந்தேன்.''

"வெரிடாஸ்' போன்று மனித உரிமைக்குக் குரல் கொடுக்கும் ஒரு வானொலி யில் பணிபுரிந்து சென்னை திரும்பிய நீங்கள், இங்கே பண்பாட்டுச் சிதைவுகளாக மாறிப் போயிருக்கும் பண்பலை வானொலிகளைப் பார்த்து வருந்தவில்லையா? தமிழ்நாட்டில் "வெரிடாஸ்' போன்ற வானொலிக்குச் சாத்தியமில்லையா?

""எந்தவொரு ஊடகமாக இருந்தாலும், லாப- நஷ்டக் கணக்குப் பார்த்து- கல்லாப் பெட்டியோடு மல்லுக்கட்டுகிற வர்த்தகமாக நடத்தப்பட்டால் இதுதான் நிலை. ஏனென்றால் இதுவும் முதலீடு. இந்த முதலீட் டின் பின்னணியில் லாப நோக்கத் தோடு அரசியலும் ஒளிந்திருக் கிறது. ஒன்று, மக்களின் சிந்த னையை மழுங்கடித்து அவர்களை ஆட்டுமந்தைகள் ஆக்குவது. இன்னொன்று, தேவைப்படும் போது மக்கள் கருத்தைக் கட்டுப் படுத்தலாம் என்று செயல்படு வது; தங்களுக்கு ஆதரவான அலை தேவைப்படும்போது, மக்களின் பொதுக்கருத்து இதுதான் என்பதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவது. இதிலிருந்து மாறுபட்டு சமூக நோக்கோடு செயல்படுகிற ஊடக நிறுவனங்களும் இருக்கின் றன. ஆனால் இது போதாது.

"வெரிடாஸ்' வானொலி மக்கள் இயக்கமாக மாற முடிந் தது என்றால், அதற்குக் காரணம் அதனுடைய லட்சியங்களும் நோக்குகளும் தெளிவாக இருந்தன. அதற்கு லாப நோக்கம் கிடையாது. "வெரிடா'ஸில் விளம்பரங்கள் ஒலிபரப்பு செய்யப்படுவது இல்லை. "வெரிடாஸ்' மாதிரியான ஒரு வானொலிக்கான தேவை தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தான் இருக்கிறது.

அமெரிக்காவில் வெற்றி கரமான முன்மாதிரியாக பொது மக்களின் வானொலியும் தொலைக்காட்சியும் இயங்கி வருகின்றன. அதாவது பப்ளிக் ஓனர்ஷிப் மூலம் நடத்தப்படும் இந்த வானொலிகளை நல்ல உள்ளம் கொண்டவர்கள் நேயர் களின் நேரடிப் பங்கேற்போடு நடத்த முன்வரலாம்.

இப்போது நாம் உடனடி யாகச் செய்ய வேண்டியது நம்மிடம் இருக்கக்கூடிய கிராமிய மக்களுக்கான சமுதாய வானொலிகளை- தொழில் சார்ந்த வானொலியை நடத்து பவர்கள் கைப்பற்றுவதற்கு முன் னால், சமூக நோக்கம் கொண்டவர் கள் சமுதாய வானொலியில் பங்கேற்க வேண்டும். இப்படிப் பங்கேற்பு செய்வதன் மூலம் சமூக மாற்றத்தைத் தரக்கூடிய- தனி மனித ஆளுமையைக் கட்டி யெழுப்பக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த சமூக இயக்கமாக சமுதாய வானொலிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.''

"வெரிடாஸ்' வானொலி மூலம் செய்து வந்த ஈழப்பணி யிலிருந்து ஏன் வெளியேறினீர் கள்?

""அதற்குக் காரணம் விடுதலைப்புலிகளின் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். 1998 முதல் புலிகளின் "ஓயாத அலைகள்' போர் பெரும் வெற்றி யைச் சந்தித்தது. ஆனையிறவு வரை அவர்களுக்குக் கிடைத்த வெற்றியால், அதுவரை போராட்டத்தில் பங்கேற்காமல் இருந்த மக்கள் பேரளவில் பங்கேற்றது மட்டுமல்லாமல், உலகளவில் பெரிய எழுச்சியைக் கொடுத்தது. இனி தங்கள் உரிமையைத் தாங்களே மீட்டுக் கொள்வார்கள் என்று எல்லாரையும்போல நானும் நம்பிக் கொண்டிருந்தேன்.

இந்த நேரத் தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் படிப்பதற்கான ஒரு வாய்ப்பு திருச்சபையால் எனக்கு வழங்கப் பட்டது. அப்போது எனக்கு முப்பத்தாறு வயது... இத்தனை வயதில் முனைவர் பட்டத்துக்காக ஐரோப்பா சென்றால், எங்கே ஐரோப்பிய வாழ்க்கை முறைக் குப் பழகி அங்கேயே தங்கி விடுவேனோ என்ற கேள்வி எனக் குள் எழுந்தது. எக்காலத்திலும் தாய் மண்ணைப் பிரிவதில்லை என்ற உந்துதலோடு முனைவர் பட்ட வாய்ப்பை நிராகரித்து விட்டு சென்னை வந்து சேர்ந்தேன். பிறகு தமிழ்ச் சமூகம் சார்ந்த ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, சென்னை வந்ததுமே "தமிழ் மையம்' தொடங்கினேன்.''

இளையராஜாவுடன் எப்படி நட்பு ஏற்பட்டது? "திருவாசக' சிம்பொனித் திட்டம் எப்படி உருவானது? அதில் ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மைதானா?

""ஒரு கோடி ரூபாய் என்பது தவறான தகவல். எழுபத்தியிரண்டு லட்ச ரூபாய் கடனாளி ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த அற்புதமான முயற்சிக்கு முன்னால் கடன் எனக்கு சுமை யாகத் தெரியவில்லை. நான் 2002-ல் சென்னை வந்து "தமிழ் மையம்' தொடங்கிய பிறகு, இளையராஜா அவர்கள் நல்ல தொரு இசை முயற்சி செய்ய விரும்புகிறார் என்ற தகவல் தற்செயலாக எனக்குக் கிடைக்க, உடனே அவரைச் சந்தித்தேன். சிம்பொனியில் "திருவாசகம்' திட்டத்தைத் தொடங்கினோம். என்னை இளையராஜாவிடம் அழைத்துச் சென்றவர்கள், எனது வெளிநாட்டுத் தொடர்புகளை எல்லாம் நன்கு அறிந்தவர்கள். நிதி திரட்டுவது எளிதாக இருக்கும் என்பதனால், என்னை அவரிடம் அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் ஈழத் தமிழ் மக்களோடு எனக்கிருந்த உறவை, இந்த இசைத் திட்டத் தோடு நான் தொடர்பு படுத்த விரும்பவில்லை. எளிதாக இருக்கும் என்று தொடங்கிய அந்தப் பணி, பெரும் சுமையாக மாறிவிட்டது. மொத்தம் ஒன்றரை கோடி ரூபாய் திரட்ட வேண்டிய கட்டாயம். ஆனால் நன்கொடைகள் மூலம் பதினைந்து லட்சம்தான் திரட்ட முடிந்தது. வேறு வழியில்லாமல் கன்னாபின்னாவென்று வட்டிக்கு கடன் வாங்கி அந்தத் திட்டத்தை முடித்தேன். தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பதால் இவற்றை சரி செய்துவிடலாம் என்று நம்பி னேன். இதையெல்லாம் அந்த நேரத்தில் நான் சொல்லவில்லை. ஏனென்றால் அந்தப் படைப்பு ஒரு அற்புதமான படைப்பாக வெளிவந்தது. இன்னொரு காரணம் "திருவாசகம்' ஒரு புனிதமான பக்தி நூல். அதை நான் கறைபடுத்த விரும்பவில்லை.''

"திருவாசக' சிம்பொனிக்கு வரவேற்பு எப்படியிருந்தது? திருவாசக சிம்பொனி சிம்பொ னியே அல்ல; அது தேவாலயங் களில் வாசிக்கப்படும் ஆரட் டோரியா என்ற விமர்சனங் கள் வந்ததே?

""திருவாசகத்துக்குப் பெரு வாரியான மக்களிடமிருந்து வரவேற்பு குவிந்தது. என்னைப் பொறுத்தவரை அதுதான் முக்கியம் என்று கருதுகிறேன். எப்போதுமே ஒரு நல்ல முயற்சி யில் இறங்குகிறபோது அடிப் படைவாதிகளிடமிருந்து விமர் சனம் வரும். ஒரு கத்தோலிக்க பாதிரியார் எதற்காக இவ்வளவு பெரும் பணத்தை, ஒரு இந்து "திருவாசக'த்துக்குக் கொட்ட வேண்டும் என்று கிறிஸ்துவ அடிப்படைவாதிகளிடமிருந்து விமர்சனம் வந்தது. இந்து அடிப் படைவாதிகளுக்கோ சமரச சன்மார்க்கம் என்பது சுட்டுப் போட்டாலும் வராது. ஒரு பகைமை இருந்தால்தான் நாம் பிழைப்பு நடத்த முடியும் என்று அஜண்டா வைத்திருப்பவர்கள். எனவே அவர்களிடமிருந்தும் "இதைச் செய்வதற்கு நீ யார்?' என்கிற ரீதியில் எதிர்ப்புகள் வந்தன. யாரும் எதற்கும் உரிமை கொண்டாட முடியாது என்பது எனது கருத்து. மேலும் நாம் சரியாக இருக்கும்போது, யார் நம் சட்டையைப் பிடித்துக் கேட்க முடியும் என்ற கர்வம் எப்போதும் எனக்கு உண்டு. எனவே திருவாசக சிம்பொனி, சிம்பொனி அல்ல என்பதையெல்லாம் நான் காதில் போட்டுக் கொள்ளவோ கண்டுகொள்ளவோ இல்லை. காரணம், உலகில் இரண்டு விஷயங்களை மட்டும்தான் வரையறுத்துக் கட்டுப்படுத்த முடியாது. ஒன்று கடவுள்; மற் றொன்று இசை. இசைக்கென்று பல்வேறு வடிவங்கள் இருக் கின்றன. நாங்கள் முயன்றது சிம்பொனி ஆரட்டோரியா என்ற புதிய வடிவம். இதில் சிம்பொனித் தன்மையும் உண்டு; ஆரட்டோரியா தன்மையும் உண்டு. இந்த இணைதல் மிக மேன்மையாக நிகழ்ந்தது. இதில் யாரை ஏமாற்றினோம் அல்லது ஏமாற்ற வேண்டிய தேவைகள் என்ன? இசைக்கு எந்த பங்களிப் பும் செய்யாமல் விளம்பரம் தேட நினைக்கிற கும்பலின் புலம்பல்களை நாம் பொருட் படுத்தத் தேவையில்லை.''

"சென்னை சங்கமம்' என்பது மாநகர மக்களுக்குப் புதிய அனுபவமாக மாறி விட்டிருக்கிறது. "சென்னை சங்கம'த்துக்கான பொறி எங்கிருந்து கிடைத்தது?

" ""திருவாசகம்' திட்டத்துக் குப் பிறகு மிகவும் களைத்துப் போயிருந்தேன். அந்தக் கால கட்டத்தில்தான் கனிமொழி அவர்களோடு இணைந்து செயலாற்றுகிற வாய்ப்பு ஏற்பட் டது. அச்சமயத்தில் இயல்பான ஓர் உரையாடல் மூலம் "சங்கமம்' பற்றி நான் அவரிடம் சொன் னேன். தமிழர்களின் தலை நகரமாக இருக்கக்கூடிய சென்னை நகரில் தமிழ்ப் பண்பாடு, வரலாறு சார்ந்த ஒரு விழாகூட இல்லையே என்று ஆதங்கத்தோடு குறிப்பிட்டேன். சென்னையிலே கொண்டாடப் படுகிற ஆங்கிலப் புத்தாண்டாக இருக்கட்டும், கிறிஸ்து பிறப்பாக இருக்கட்டும், தீபாவளியாக இருக்கட்டும் - இவை மூன்றுமே தமிழர்களின் பண்பாட்டு வேர்களைச் சார்ந்த விழாக்கள் அல்ல. எனவே நமது மக்களின் பண்பாடு, வாழ்வியல் சார்ந்த விழா ஒன்றை உருவாக்க வேண்டும். அதை பொங்கலைச் சார்ந்து நாம் உருவாக்கலாம். பொங்கல் என்பது அறுவடை சார்ந்த ஒரு விழா. விவசாயமோ அறுவ டையோ இல்லாத மாநகரில் பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படுகிற நிகழ்ச்சியாக அதை நாம் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டேன். இதை ஏற்றுக் கொண்ட கனி மொழி அவர்கள், "சங்கம'த்தைத் தொடங்கலாம் என்றார். ஒரு சிறிய விழாபோல தொடங்கியது "சென்னை சங்கமம்!' இன்று வரலாறு இதனை வேறுமாதிரி யாகச் சிந்திக்க, வேறுபாடுகளை எல்லாம் மறந்துவிட்டு மாநகர மக்கள் ஒன்றுகூடும் ஒரு விழாவாக "சென்னைச் சங்கமம்' மாறிவிட்டது.''

பேரறிஞர் அண்ணாவின் காலம் தொடங்கி, திராவிடக் கட்சிகளுக்கும்- கிறிஸ்துவ திருச்சபைகளுக்கும் இடையில் மிக இணக்கமான ஓர் உறவு வளர்ந்து வந்திருக்கிறது. இந்த உறவு எத்தகையது?

""முறைசெய்யப்படாத- இயங்கியல் சார்ந்த ஓர் உறவு இது. காரணம், கிறிஸ்துவத்தின் பயணம் என்பதும் சமூகநீதி நோக்கியது. தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில்தான் அது அதிகமாகப் பணி செய்திருக்கிறது. திராவிட இயக்கங்களின் பணியும் இந்தத் தளத்தில்தான் அதிகமாக இயங்கி இருக்கிறது. ஆக ஒன்றுக்கொன்று நெறி செய்யப்படாத கொடுக்கல்- வாங்கல் என்பது, கொள்கை ரீதியான உறவுக்கு வழி செய்தி ருக்கிறது. இதனால் சிறுபான்மை மக்கள் தொடர்ந்து தி.மு.கழக பாரம்பரியத்துக்கே வாக்களித்து வந்திருக்கிறார்கள்.''

தாழ்த்தப்பட்ட- பிற்படுத் தப்பட்ட மக்களிடம் பணி செய்வதில் ஒருமித்த கொள்கை கொண்ட திராவிடக் கட்சிகள் என்றாலும்- கிறிஸ்துவம் என்றாலும்- இந்த இரண்டு தரப்புமே சாதி ஒழிப்பில் தோல்வி அடைந்து விட்டதை ஒப்புக் கொள்கிறீர்களா?

""நிச்சயமாக... சாதியைத் துளிகூட நாம் ஒழிக்கவில்லை. சாதியைப் பற்றிய புரிதலில் எனக் கும்கூட இன்று நிறைய கேள்வி கள் உண்டு. மாறாக இஸ்லாம் சாதி அமைப்பைத் தகர்க்கிற ஆற்றல் கொண்ட ஒரே மதமாக, மார்க்கமாக இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம், வழிபாட்டு முறைகள். நம்பிக்கைகளைப் பொறுத்தவரை மிக எளிமையான மதம் இஸ்லாம். ஒரே கடவுள் என்ற இறைக்கொள்கையோடு, மிகவும் சிக்கலான சடங்குமுறை, சம்பிரதாயங்கள் போன்றவையும் அதற்குக் கிடையாது. மெக்கா இருக்கும் திசையைப் பார்த்து தொழுதால் போதும் என்பதான எளிய வழிபாடு. மாறாக, உருவங் கள், சிலைகள் இவற்றையெல் லாம் அவர்கள் உருவாக்கிக் கொள்வது கிடையாது. இந்த இடத்தில் கத்தோலிக்க மதம், கல்விப்பணியை ஒரு இயக்கமாக எடுத்துக் கொள்வதன் மூலம் சாதியை மெல்ல மெல்ல ஒழித்து விட முடியும் என்று நம்புகிறது. எனவே தாழ்த்தப்பட்ட- ஒடுக் கப்பட்ட மக்களின் விடுதலைக் காகப் பணி செய்வதிலும், தரமான கல்வியை ஜாதியிடம் தீவிரமாக இருக்கும் கிராமப்புறங் களுக்கு ஓர் இயக்கமாக எடுத்துச் செல்வதையும் முக்கிய கடமை யாகக் கொண்டு தொடர்ந்து இயங்கி வருகிறது.''

"நக்கீர'னில் தற்போது நீங்கள் எழுதிவரும் "மறக்க முடியுமா?' கட்டுரைத் தொடரானது, ஈழ விடுதலைப் போர் குறித்த பல்வேறு உண்மைகளை வெளிக் கொண்டு வருவதாக இருக்கி றது!

பிரபாகரன் ஒரு போர் விரும்பி, ஈழ மக்களின்மீது போரைத் திணித்தவர் என்றெல் லாம் இந்திய ஊடகங்கள் சித்தரித்துக் காட்டிய பிம்பத்துக்கும், "இதயத்தில் உண்மையுள்ளவன், எல்லை இல்லா நன்றி உள்ளவன்' என்று நீங்கள் தரும் சித்திரத் துக்குமான வேறுபாடு ஆச்ச ரியமூட்டக்கூடியதாக இருக்கி றது.

அப்படிப்பட்ட பிரபாக ரனை நீங்கள் முதன்முதலாகச் சந்தித்த தருணம் பற்றிக் கூறுங் கள். உண்மையில் புலிகளின் இத்தனை பெரிய வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?


""என்னைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழ் வரலாற்றில் மகத்தான ஒரு விடுதலைப் போராட்டம் என்றால் அது தமிழீழ விடுதலைப் போராட்டம் தான்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்த அளவுக் குக் கட்டியெழுப்ப முடிந்தது என்றால், அதற்கு பிரபாகரன் என்ற மாபெரும் ஆளுமைதான் காரணம்.

தண்ணீரால் சூழப் பட்ட ஒரு நிலப்பரப்பில், மிக மிகச் சிறிய ஒரு இனத்திலிருந்து, அண்டை நாடான இந்தியா எப்படியும் இவர்களை அழித்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தை எப்போதும் காட்டிக் கொண்டிருக்க, உலகத்தில் எந்தவொரு நாட்டின் உதவியும் இல்லாமல், மரபு வழி ராணுவம் என்று நாம் சொல்லுகிற தரைப் படை, பீரங்கிப் படை, கடற் படை; செறிந்த ஒரு புலனாய் வுப் பிரிவு; சர்வதேச அளவி லான ஒரு கொள்வனவுப் பிரிவு; தேர்ந்த உளவுப்பிரிவு; இவற்றையெல்லாம் தாங்கி நடத்துவதற் காக ஒரு நிதிவள ஏற்பாடு; இன்னும் தன் ஆளுகைக்கு உட் பட்ட மக்களுக்கு ஒரு நிர்வாகத்தைக் கொடுக்கிற மேலாண்மைப் பிரிவு- இத்தனையையும் கட்டி எழுப்பிய மனிதன் ஒரு சாதாரண மனிதனாக இருக்க முடியாது. அபூர்வ ஆற்றல்கள் அமையப் பெற்ற ஒரு மனித னால் மட்டுமே இது சாத்திய மாகும்.


எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழர்களுக்கு போர்க்குணம் இருந்தது என்று புறநானூற்றுக் காலத்தை நாம் சொன்னாலும், கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் நாம் போர்க்குணம் மிக்க மக்களாக இருந்தோம் என்பதற்கு எம்மால் எந்தவித ஆதாரங்களை யும் சொல்ல முடியவில்லை. பெரிய அளவில் தொழில் முனைதல் இல்லாத- தாழ்வு மனப் பான்மை கொண்ட- எதையும் விதியே விதியே என்று ஏற்றுக் கொள்கிற ஒரு மக்கள் இனத்தின் மனவெளிகளுக்குள் புகுந்து புரட்சி செய்து, தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக உயிரையும் தரத் தயாராக இருக்கின்ற தலைமுறையையே உருவாக்கிக் காட்டிய மனிதன் சாதாரண மனிதனாக இருக்க முடியாது.

பிரபாகரன் ஒரு அதீதப் பிறவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது.

தமிழினம் பிரபாகரனால் தாழ்ந்ததா, உயர்ந்ததா என்று கேட்டால், உயர்ந்தது என்று உறுதியாகச் சொல்லுவேன். பிரபாகரனின் ஆளுமைக்கு அப்பால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு வரலாற்றுச் சூழமைவுகளும் தாக்கத்தை ஏற்படுத்தின.

முதலில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான பனிப்போர் காலம் அப்படியே நீடித்திருக்குமானால் எப்போதோ ஈழம் கிடைத்திருக்கும். ரஷ்ய வல்லரசு உடைந்து போனதால் பனிப்போர் முடிவுக்கு வந்து விட்டது. இந்த காலகட்டத்தில் தான் ஈழப் போராட்டம் வளர்ச்சி கண்டிருந்தது. பனிப்போர் முடிந்தபிறகு உலகம் ஒற்றைத் திசையில் பயணப்பட ஆரம்பித்தது. நமக்கான ஆதரவு சக்திகள் இல்லாமல் போனார்கள்.

ஈழத்துக்குச் சென்ற இந்திய அமைதிப் படை, பதினைந்தாயிரம் அப்பாவித் தமிழர்களின் மரணத்துக்குக் காரணமாக இருந்தது. அதன் பின்னணியில் ராஜீவ் காந்தி படுகொலை எனும் துயர நிகழ்வு. ஆனால் பதினைந் தாயிரம் மக்களைச் சாகடித்த பழியும் குற்றமும் யாராலும் பேசப் படவில்லை. ராஜீவ்காந்தி படுகொலை மட்டும்தான் பேசப் பட்டது. அதற்காக நான் ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்த வில்லை. அது நடந்திருக்கக் கூடாது. ராஜீவ் மரணத்திற்காக அழுதவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் அந்தவொரு நிகழ்வை வைத்துக் கொண்டு பழிவாங்கித் தீர்க்க வேண்டும் என்ற பழியுணர்ச்சியை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வந்திருக்கிறது; வருகிறது.

இதையும் சந்தித்தபடி புலிகள் ஓர் கட்டுப்பாடு மிக்க இயக்கமாக முன்னேறி வெற்றிகளைக் குவித்து வந்த நேரத்தில்தான், ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்த, பயங்கரவாதம் என்பது ஓர் எதிர் அரசியலாக மாறுகிறது. இதனுடைய எதிர்விளைவுகளை எல்லாம் புலிகள் இயக்கமும் சந்திக்க வேண்டிய கட்டாயம்.

உலக அளவில் புலிகளின் கட்டமைப்புகள், நிதிவளங்கள் எல்லாம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி, பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கமாக முடங்கிப் போய் பெரும் இன்னல்களைச் சந்தித்தார்கள்.

களத்திலே அவர்கள் பெரும் வெற்றியைக் குவித்தாலும்கூட, விடுதலையை முன்நகர்த்திச் செல்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனையிறவு வரைக் கும் வென்று ஏறக்குறைய தமிழ் ஈழத்தை சாதித்துவிட்ட நிலையில்தான்,

ஒருவகையில் அவர்கள் ஏமாற்றப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இழுத்து வரப்படுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்களது இயக்கத்துக்குள் பிளவை உண்டாக்கி, உளவு அமைப்புகளில் ஊடுருவி புலிகளைப் பலவீனப்படுத்தி னார்கள்.

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் புலிகள் சமாதானம் பேசிய கால கட்டத்தில்தான் அவர்களைப் பயங்கரவாதிகளாக உலக நாடு கள் மத்தியில் சித்தரித்துக் காட்டிய ஈன ராஜ தந்திரத்தை சிங்கள அரசு கையாண்டது.

பிராந்திய அளவில், உலக அளவில் பகைவர்களாக இருக்கிற நாடுகள் எல்லாம் இந்த விஷயத்தில் சேர்ந்து நின்றார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து நின்று இலங்கைக்குக் கை கொடுத்தார் கள் என்பதைவிட, அள்ளிக் கொடுத்தார்கள் என்பது சரியாக இருக்கும்.

அதேபோல இந்தியா வும் சீனாவும் சேர்ந்து உதவினார் கள். அமெரிக்காவும் ரஷ்யா வும் சேர்ந்து உதவினார்கள். ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து உதவினார்கள். அவ்வளவு ஏன்- உலகமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து உதவி, தமிழினத்தின் விடுதலை உணர்ச்சியைத் தகர்த்தெறிந்திருக்கிறார்கள். இத்தனை சக்திகளை மீறியும் புலிகள் தாக்குபிடித்து நின்றிருக்கிறார்கள் என்பது ஒரு மகத்தான வரலாறு. அதை நீங்கள் மறுக்கவே முடியாது!

புலிகள் தவறு செய்யாதவர் கள் அல்ல; பல்வேறு தவறு களைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டிய வர்கள்தான். ஆனால் அவற்றையெல்லாம் மீறி அவர்கள் தார்மீகப் போராட்ட நேர்மை கொண்டவர்களாக நடந்து கொண்டார்கள்.

கடைசி கட்டப் போரில் அவர்கள் நினைத்திருந்தால் கொழும்பு நகரில் ஐம்பதாயிரம் பேர்களையாவது கொன்று குவித்திருக்க முடியும். அந்த அளவுக்கு ரசாயன ஆயுதங்களை அவர்கள் நிச்சயமாக வைத்திருந்தார்கள். ஆனால் செய்ய வில்லை.

கடந்த பத்தாண்டுகளில் பார்த்தோமேயானால் சிங்களப் பேரினவாதம் எத்தனை அப்பாவித் தமிழர்களைக் கொன்றார்கள், புலிகள் எத்தனை சிங்களவர்களைக் கொன்றார்கள் என்று கணக்கெடுத்தால், புலிகள் உயிரின் மதிப்பை உணர்ந்த வர்களாகப் போராடியிருக் கிறார்கள். கடந்த பத்து மாதத்தில் மட்டும் சிங்களப் பேரினவாதம் அறுபதாயிரம் பேரைக் கொன்றழித்திருக்கிறது.

புலிகள் அறுநூறு பேரைக்கூட கொல்ல வில்லை. குறிப்பாக அப்பாவி மக்களைக் கொல்லவே இல்லை. "கட்டுநாயக' விமான தளத்தில் அவர்கள் தாக்குதல் நடத்திய போது பயணிகளில் ஒரு உயிர் கூட போய்விடக்கூடாது என்று கவனத்தோடு தாக்குதல் நடத்தினார்கள்.

தாக்குதல் நடத்திய தினத்தன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அன்று மதியம் 1.30 மணிக்கு தரையிறங்கி இருக்க வேண்டும். ஆனால் காலதாம தமாக 3.30 மணிக்குத்தான் தரை இறங்கியிருக்கிறது. பயணிகள் அனைவரும் வெளியே வந்த பிறகே மாலை 5.30 மணிக்குத்தான் தாக்குதல் தொடங்கினார்கள்.

புலிகள் இதைக் குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் 1.30 மணிக்கே தாக்குதல் தொடங்கி இருப்பார்கள் என்றால், இலங்கை விமானப் படையை அன்றைக்கே ஒன்றுமில்லாமல் நிர்மூலம் ஆக்கியிருப்பார்கள்.

ஆனால் என்ன செய்வது? ஊடக பலம் இல்லை. உலகத்தில் எல்லா ரும் அவர்களை அழித்துவிட வேண்டும் என்று துடிக் கிறார்கள்.

சந்திரிகா அம்மையார் 1995 முதல் 2000-ஆவது ஆண்டு வரை மிகப்பெரிய பொருளா தாரத் தடையை அங்கு விதித் திருந்தார். கடுகைக்கூட தமிழ் ஈழத்துக்குள் நுழைய விடாமல் பார்த்துக் கொண்டார். அப்படியிருந்தும் புலிகள் தம் மக்களைப் பட்டினிச்சாவில் விட்டுவிடவில்லை. விவசாயத்தைத் திட்டமிட்டு அவர்கள் நடத்தினார்கள். ஏழு லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு அரிசி வேண்டும், எவ்வளவு தேங்காய் வேண்டும் என்பதைக் கணக்கிட்டு விவசாயத்தை ஒழுங்கு படுத்தினார்கள்.

இவையெல்லாம் உலகத் துக்கு எடுத்துச் சொல்லப்பட வில்லை. ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்தன. எல்லா இயக்கங் களையும் போல இவர்களும் பல தவறுகள் செய்திருக்கிறார்கள். ஆனாலும் எல்லா தவறுகளையும் மீறி ஒரு மகத்தான மக்கள் இயக்கமாக இருந்திருக் கிறார்கள்.

2002-ல் நான் பிரபாகரனைச் சந்தித்தேன். நான் சந்திக்கும் இடத்திற்குள் அவர் உள்ளே நுழைந்தபோது, அவருக்கு யாரும் சல்யூட் அடிக்கவில்லை. தனக்கான இருக்கையைத் தானே எடுத்துப் போட்டுக் கொண்டார். சின்ன போராளிகள்கூட அவருக்கு வணக்கம் சொல்ல வில்லை. பணிவுடன் கடந்து சென்றார்கள்; அவ்வளவுதான்.

தனக்கு தாகம் எடுத்தபோதுகூட தானே போய் தண்ணீர் எடுத்து அருந்தினார். ஒரு தன்முனைப்பு இல்லாத மனிதர். எல்லா பொறுப்புகளையும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, லட்சியத்தை நிர்வகித்துச் செல்லக்கூடியவராக இருந்தார். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் தெளிவாக- பிசிறில்லாமல் அவரால் பதில் சொல்ல முடிந்தது. மிக முக்கிய மாக தாமொரு மாபெரும் தலைவர் என்ற பெருமையே இல்லாத மனிதர்.''

கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்களின் மரணம் குறித்து இந்தியா கிஞ்சித்தும் அலட்டிக் கொள்ளாததும்; ஈழத்தமிழர்களை அழிக்க ஆயுதம், பயிற்சி கொடுத்த துரோகமும்; இந்திய தேசியம் என்ற ஒருமை- ஒரு மாயை என்று இங்குள்ள பெரும் பான்மை தமிழர்களை எண்ண வைத்திருக்கிறது. இந்தப் பழியிலிருந்து இந்தியா விடுபட முடியுமா?

""இந்தியாவின் கை ரத்தப் பழி சுமக்கிறது. இதை ஒரு போதும் அது கழுவிக் கொள்ள முடியாது. என்றேனும் ஒருநாள், தமிழினத்துக்கு அது பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

கடைசி கட்டத்தில், மூன்று லட்சம் மக்கள் ஒரு சிறிய நிலப் பரப்பில் முற்றுகையிடப்பட்டு தொடர்ச்சியான எறிகணை வீச்சு, பாஸ்பரஸ் குண்டுகள், கிளெஸ்டர் குண்டுகள் என்று உயிர்கள் பொசுக்கப்பட்டபோது கூட, அப்போதைய வெளியுறவு அமைச்சர் முற்றுகையிடப்பட்ட இடத்தில் எண்பதாயிரம் பேர் தான் இருக்கிறார்கள் என்றார்.

ஆனால் யுத்தம் முடிந்த பிறகு மூன்று லட்சம் மக்கள் வந்து சேர்ந்தார்கள் இல்லையா?

அப்படியானால் மூன்று லட்சம் பேரில் இரண்டேகால் லட்சம் பேர் செத்தால்கூட பரவாயில்லை என்ற நிலையைத்தான் இந்தியா எடுத்திருக்கிறது. இவையெல் லாம் நினைத்துப் பார்க்க முடியாத துரோகம்.


அதேபோல கடைசி மூன்று நாட்களில் படுகாயம் அடைந்த பத்தாயிரம் மக்களை புல்டோசர் ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள். மே-18-ஆம் தேதி சண்டையில் மட்டும் இருபதாயிரம் மக்களை உயிரோடு புதைத்திருக்கிறார்கள். இவையெல்லாம் தெரியாதவை அல்ல.

லண்டனில் இருந்து வெளிவருகிற "டைம்ஸ்', "கார்டி யன்' பத்திரிகைகள், பாரீஸிலிருந்து வெளிவருகிற "லெமோண்ட்' போன்ற உலக அளவில் மதிக்கப் படும் பத்திரிகைகள் இவற்றையெல்லாம் பதிவு செய்திருக் கின்றன.

இருந்தும்கூட மனித உரிமை ஆணையத்தில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்களித்திருக்கிறது. இந்த இனப்பழியிலிருந்து - இலங்கை யின்பின் நின்ற பாவத்திலிருந்து இந்தியா தப்பித்துக் கொள்ள முடியாது. வரலாற்றின்- மனசாட்சியின் முன்னால் என்றேனும் ஒருநாள் பதில் சொல்லியே தீர வேண்டும்.''

பிரபாகரன் மரணம் குறித்து இருவேறு கருத்துகள் இருந்துவரும் நிலையில், அயல் ஈழம் அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஈழத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் தற்போது என்ன செய்வது என்று குழம்பிக் கிடக் கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

"" "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற பழைய சலித்துப் போன உண்மையைத்தான் நானும் இப்போது சொல்ல விரும்புகிறேன். உலகம் முழுவ தும் தமிழர்கள் ஒரு கருத்தில் பிளவுபடாமல் இணைந்து நின்றார்கள் என்றால், உலகம் நமது கோரிக்கையைக் கேட்டுத் தான் ஆகவேண்டும்- இது ஒன்று.

நாம் இனி இரண்டு திசை களில் பயணப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை ஆயுதப் போராட்டம் நடந்தது. ஆயுதப் போராட்டத்துக்குத் துணையாக அரசியல் பின்னால் நின்றது. இப்போது அரசியல் போராட்டம் முதன்மை பெறும். ஆயுதப் போராட்டம் முடிய வில்லை. அது கட்டாயம் தொடர்ந்து நடக்கும். நாம் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒரு கொரில்லா யுத்தம் மையம் கொள்ளும்.

இந்தப் போரினால் பாதிக் கப்படாத உங்களுக்கும் எனக் குமே இவ்வளவு வேகம் இருக்கும் என்றால், நேரடியான பாதிப்பைச் சந்தித்த அந்த மக்களுக்கு எத்தனை கோபம் இருக்கும். எனவே கொரில்லா யுத்தம் நிச்சயம் நடக்கும். ஆனால் அதனைவிட மேலாக உலக அளவில் ஒரு அரசியலைக் கட்டி எழுப்ப வேண்டும். தமிழகத்தில் ஈழ ஆதரவு அரசியல் என்பது, அனைத் திந்திய மக்களுக்கும் உண்மைகளை எடுத்துச் சொல்வது, ஒவ்வொரு அரசியல் கட்சியிடமும் ஈழம் பற்றி கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியம்.

முல்லைத்தீவில் நடந்த அந்த உச்சபட்சக் கொடுமைதான் தமிழீழத்துக்கான தார்மீக நியாயப்பாடாக இருக்கும் என்பதுதான் எனது கருத்து. தொடர்ந்து நாம் பணியாற்றி னால் 2020-க்குள்ளாக தமிழ் ஈழம் வரும் என்பது எனது நம்பிக்கை!''

உங்களின் கட்டுரைகளில் "போரியல்' பற்றியெல்லாம் பேசுகிறீர்கள்! உங்கள் வாசிப் புத்தளம் பற்றிச் சொல்லுங் கள்?

""நான் குருத்துவப் படிப்பு படித்திருந்தாலும்கூட அதற்கு அப்பால், அரசியல் விஞ்ஞானத் தில் முதுகலைப் பட்டம் பெற்றி ருக்கிறேன். கேந்திரவியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கி றேன். எனவே என்னுடைய வாசிப்பு என்பது ராணுவ வரலாறு, அரசியல் வரலாறு, வியூகம் வகுத்தல் என்பதில் அதிக ஆர்வமுடையதாக இருக்கி றது. மற்றபடி தீவிரமான இலக்கிய வாசிப்பு என்பது எனக்கில்லை. கல்லூரிப் பாடமாக படித்த துணைப்பாட நூல்கள் மூலம் தான் தமிழ் கற்றேன். அந்தக் காலகட்டத்தில், பாரதி, புதுமைப் பித்தன், ஜெயகாந்தனை வாசித்த தோடு சரி. பிறகு என்னை வெகு வாகக் கவர்ந்து கொண்டவை கட்டுரைகள்தான். காரணம், கட்டுரைகள் மட்டுமே நேரடி யாக- காத்திரமாக சமூக மாற்றத் துக்காகப் பேசுகின்றன.''

நேர்காணல் :ஆர்.சி. ஜெயந்தன்.


http://tamilthesiyam.blogspot.com/2009/07/blog-post_515.html

♥ முள் கம்மி முகாமிலும் உயரும் புலிக்கொடி...! ♥


ஈழத் தமிழர்களுக்கு தமிழக தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் – கொளத்தூர் மணி


தமிழன் இமயத்தில் கொடி நாட்டினான் என்றெல்லாம் பேசுவதை விடுங்கள். முதலில் நமது நாட்டில் கொடியை உயர்த்த வேண்டும்.

முள்வேலிக் கம்பிக்குள் அகதி களாக அடைக்கப்பட்ட நிலையிலும்கூட அந்த அகதி முகாமுக்குள் இருந்த தமிழன், உயரமான கம்பத்தில் ஏறி புலிக் கொடியைக் கட்டிப் பறக்க விடுகிறான்

http://2.bp.blogspot.com/_JIXtPYzDuAY/SNGSW1jrEfI/AAAAAAAAAJM/n2zTdmk6_eE/s320/pl0224023.jpg http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXcNLBh_PxI/AAAAAAAAAvo/sV_ezPMKWTA/s320/periyar7.jpg


      http://3.bp.blogspot.com/_fgETTBcBgx8/Rz3BYBzvsRI/AAAAAAAAACU/VYsj66nA82U/s320/asiriyar3.jpg         
http://www.sankathi.com/uploads/images/news/India/Kolaththur%20mani1.jpg                                                                         "ஈழம் இனி செய்ய வேண்டும்" என்ற தலைப்பில் ஜூலை 10 ஆம் தேதி குடந்தையிலும், 11 ஆம் தேதி மயிலாடுதுறையிலும் நடந்த கழகப் பொதுக் கூட்டங்களில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:

ஈழத் தமிழர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பரிசீலிப்பதற்கு முன்னால், இதுவரை, நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஈழம் என்ற சொல், கடந்த காலங்களில் ஒட்டு மொத்த இலங்கையைக் குறிக்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருந் தாலும், இப்போது அது தமிழர்களின் தமிழர் தாயகத்தைக் குறிப்பதற்கான சொல்லாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம்.

தமிழர்களுக்கு தனி மாநிலம், 'மாகாண சபை', 'மாநில சுயாட்சி' என்ற கோரிக்கைகளை முன் வைத்த தமிழர்கள், 1976 இல் வட்டுக்கோட்டையில் கூடிய மாநாட்டில் தமிழ் ஈழக் கோரிக்கையை வைத் தார்கள். மாநாட்டின் தலைவர் தமிழர் கூட்டணியின் தலைவர் செல்வநாயகம் தலைமை தாங்கினார். அதே மாநாட்டில் தமிழர் கூட்டணியின் பெயர் 'தமிழர் விடுதலை கூட்டணி' என்று மாற்றப்பட்டது.

இனி சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது என்று அறவழியில் போராடிய அரசியல் தலைவர்கள் எடுத்த முடிவு தனி ஈழம் என்பதாகும். பிறகு அதே கோரிக்கைக்காக விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தைத் தொடங் கினார்கள். விடுதலைப்புலிகள் மட்டுமல்ல, ஈழத் துக்காக போராடிய ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலொ, புளோட் போன்ற அமைப்புகளின் ஆதரவாளர் களாக இருந்து, பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் களாக தேர்வு பெற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப் பினர்கள் விடுதலைப்புலிகளை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு தமிழ் ஈழக் கோரிக்கையையே முன் வைத்தனர். இன்று துரோகக் குழுக்களாக செயல் பட்டுக் கொண்டிருக்கிற குழுவினரும் தமிழ் ஈழக் கோரிக்கையையே முன் வைத்தனர். அங்கே - அமைதிப்படை என்ற பெயரில் சென்ற இந்திய ராணுவம் தான் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற குழுவின் சார்பில் வரதராஜப் பெருமாள் என்பவரை வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக அமர வைத்தது. அந்த வரதராஜப் பெருமாளே முதலமைச்சராக இருந்தபோது, தமிழ் ஈழத்தையே பிரகடனம் செய்தார். அமைதிப் படை வெளியேறிய போது இனி அமைதி யாக இருக்க முடியாது என்று இந்தியாவுக்கு ஓடி வந்த வரதராஜப் பெருமாள் தமிழ் ஈழத்தை அறிவித்து விட்டுத்தான் ஓடி வந்தார். அவர்கூட தமிழ் ஈழத்தை எதிர்க்கவில்லை. இப்போது அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஆனந்த சங்கரி போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட தமிழ் ஈழத்தை எதிர்க்கவில்லை. ஆக, 1976 இல் வட்டுக் கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்தி லிருந்து அந்த நாட்டில் விடுதலைப்புலிகள் ஆனா லும் புலிகளை எதிர்ப்பவர்கள் ஆனாலும் பொது மக்களும் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்களாகவே இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த நாட்டில் வாழவே முடியாது என்று கருதி, புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள்கூட அந்த நாடுகளில் தமிழ் ஈழத்துக்காகப் போராடிக் கொண் டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அகதிகளாக வந்துள்ள ஈழத் தமிழர்கள் உரிமையற்றவர்களாக கேவலமானவர்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு போராட வேண்டும் என்ற உணர்வு இருக்கிறது. ஆனால் போராடுவதற்கான உரிமைகள் தமிழ்நாட்டில் இல்லை.

தமிழ்நாட்டில் 1938 இல் பெரியார் முன் வைத்த தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கத்தை நெஞ்சில் ஏந்திக் கொண்டிருக்கிற எங்களைப் போன்ற அமைப்புகளும் தமிழ்த் தேச தன்னுரிமை கோரும் தமிழ் தேசியவாதிகளும் ஈழத் தமிழர் விடுதலையை ஆதரித்தார்கள். இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற பொதுவுடைமை கட்சியினரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவே போராடினார்கள். நமது 'அகில இந்திய' தி.மு.க.வின் தலைவர் கலைஞர்கூட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வாயள விலாது பேசியே வந்தார். தமிழக அரசு கூட்டிய காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அக்டோபர்

2 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, உண்ணா விரதப் போராட்டத்தை அனைத்துக் கட்சி ஆதரவு டன் நடத்தியதைத் தொடர்ந்து மயிலை மாங் கொல்லையில் தி.மு.க. கூட்டத்தைக் கூட்டிப் பேசிய கலைஞர்கூட ஈழத் தமிழர்களைப் பாதுகாக்காத இந்த அரசு இருக்கக்கூட தேவை இல்லை என்றார். பிறகு இந்த அரசு என்பது தமிழக அரசு என்று விளக்கம் கூறினார். ஒரு வேளை 'இந்த அரசு' என்பதை 'மத்திய அரசு' என்று தவறாக கருதி, தமது அரசு மீது 356' பாய்ந்து விடக் கூடாது என்று அவர் கருதியிருக்கக் கூடும்.

அதற்குப் பிறகு அக்.14 இல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது. மூன்று தீர்மானங்களை நிறை வேற்றினார்கள். ஈழத்தில் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என்பது முதல் தீர்மானம். இந்திய அரசு அந்தப் போருக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது என்பது இரண்டாவது தீர்மானம். குறிப்பிட்ட காலத்துக்குள் போர் நிறுத்தப்படாவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்பது. மூன்றாவது தீர்மானம் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட, அதில் பங்கேற்ற எல்லா கட்சிகளும், இத் தீர்மானங்களை ஆதரித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியே சென்று, பதவி விலகல் என்பது பற்றி மட்டும் பின்னால் கருத்து கூறுவதாக கூறியது. காங்கிரஸ் கட்சி, பதவி விலகல் பற்றி கூற முடியாது என்று கூறிவிட்டது. ஆனால், அதற்கு முன்னால் இருந்த இரண்டு தீர்மானங்களை எல்லா கட்சிகளுமே ஏற்றுக்கொண்டன. எந்தக் கட்சியும் மறுக்கவே இல்லை.

அந்தக் கூட்டத்துக்கு வராத ம.தி.மு.க.வும், ஜெய லலிதாவும் தீர்மானத்தை ஆதரித்தன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்பதில் கருத்து வேறுபட்டாலும், போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும், இந்தியா ஆயுதங்களை வழங்கக் கூடாது என்பதையும், எந்தக் கட்சியும் இன்று வரை மறுக்கவே இல்லை. அதற்குப் பிறகு, மாணவர்கள், பொதுமக்கள், அரவாணிகள், பார்வையற்றவர்கள் என்று எல்லா பிரிவினரும் போராட்டம் நடத்தி, ஈழத் தமிழர்களுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல், மனிதச் சங்கிலி என்று அனைத்து வடிவங்களிலும் போராட்டங்கள் நடந்தன. நமது சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட சபையில் தீர்மானங்களை மூன்று முறை நிறை வேற்றினார்கள். கடைசியாக 'அய்யகோ, தமிழினம் அழிகிறதே' என்று அழுதுகொண்டே கலைஞர் தீர்மானத்தைப் படித்தார். எல்லோரும் சேர்ந்து போய் பிரதமரிடம் வலியுறுத்தினார்கள். ஆக ஒட்டு மொத்த தமிழினமும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இப்படிப்பட்ட கோரிக்கைக்கு என்ன விளைவு ஏற்பட்டது? நமது தலைவர்களும் இந்த அடிமைப் பட்ட தமிழினமும் முன் வைத்த கோரிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து நாம் என்ன பதிலைப் பெற்றோம்? கடைசியாக கலைஞர், மன்மோகன் சிங்கிடம் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியையாவது கொழும்புக்கு அனுப்புங்கள் என்றார். கோரிக்கைகளைக்கூட இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டாம். விமானத்திலாவது ஒருமுறை கொழும்பு போய் வந்தால் போதும். அவ்வளவுதான். அதுதான் கடைசியாக பிரதமரிடம், கலைஞர்  வைத்த கோரிக்கை.

அதுகூட பல மாதங்களாக நிறைவேற்றப்பட வில்லை. இந்தக் கோரிக்கைக்குக்கூட அதாவது, பிரணாப் போய் வரவேண்டும் என்பதற்காக - சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழகம் வந்த மன்மோகன்சிங்குக்கு கறுப்புக்கொடி காட்டினோம். எங்கள் தோழர்கள் ஆயிரம் பேர் கைதானார்கள். அப்போதும் மன்மோகன் சிங் விரைவில் பிரணாப் கொழும்புக்கு செல்வார் என்றுதான் கூறினார். அப்புறம் பிரணாப் போய் வந்தார். போய் வந்தவர் சொன்னார், 48 மணி நேர போர் நிறுத்தம் வர இருக்கிறது என்று. உடனே, இது போர் நிறுத்தம் அல்ல; 48 மணி நேர கெடு. அதற்குள் எல்லோரும் போரில்லாப் பகுதிக்கு வந்து விட வேண்டும், அதற்கான கெடு என்று இலங்கை அரசு கூறியது.

ஆக, தமிழகத்தில் போராட்டங்கள், கோரிக்கை கள் எதற்கும் வளைந்து கொடுக்காத மத்திய அரசு, இவ்வளவு அழுத்தங்களுக்குப் பிறகும், ஒரே ஒரு முறை - பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பி வைத்தது. அவ்வளவு தான். தமிழகத்தின் ஒட்டு மொத்தமான கோரிக்கைக்கு மத்திய அரசு எந்த விதமான அசைவைக் கூட தமிழர்களுக்கு சாதக மாகக் காட்டவில்லை.

ஆனால், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வாழும் தேசிய இனங்கள், பல்வேறு கோரிக்கை களை முன் வைக்கிறார்கள். மராட்டியத்தில் வாழும் மராட்டியர்கள், இந்தியில் பேசக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைக்கிறார்கள். மராட்டியில் பேசு என்கிறான். இந்தி பேசுவோரை மராட்டியத்தை விட்டு விரட்டுகிறான். சிறிய கோரிக்கைகளுக்கு எல்லாம் கூட தாக்குதல் நடத்துகிறான். ரயில்களை கொளுத்துகிறான். கன்னட செய்தி நேரத்தை தள்ளி வைத்து, சம°கிருதத்தில்  செய்தியை ஒளிபரப்பி யதற்காக கலவரம் நடத்தினான்.

கருநாடகத்தில் உள்ள இந்திய தொலைக்காட்சி அலுவலகத்துக்குள்ளேயே நுழைந்து கன்னடர்கள் தாக்கினார்கள். ஆஸ்திரியாவில் சீக்கிய மதகுரு தாக்கப்பட்டதற்காக பஞ்சாபில் சீக்கியர் கலவரம் நடத்தி ரூ.7000 கோடி பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள். இதற்கெல்லாம் அம்மாநில அரசுகள் அவர்கள் மீதெல்லாம் வழக்குகள் போடவில்லை. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவில்லை. பாதுகாப்புப் பகுதியாக கருதப்படும் மத்திய அரசு தொலைக்காட்சி நிலையத்தில் புகுந்து தாக்கியவர்கள் மீது கூட அத்துமீறி நுழைந்ததாக மட்டும் வழக்கு தொடர்ந்தார்கள். அடுத்த நாளே அனைவரும் வெளியே வந்துவிட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஆதரித்துப் பேசினாலே தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. ஆனால், உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டப்படியே குற்றமல்ல என்று பலமுறை கூறிவிட்டது. ஆனாலும், தி.மு.க. ஆட்சி வழக்கு போடுவதை நிறுத்தவே இல்லை. ஒவ்வொரு வழக்கிலும் உயர்நீதிமன்றம் இந்த அரசின் கன்னத்தில் ஓங்கி அறைகிறது. அதற்குப் பின்னாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போடுகிறார்கள். சட்டம் ஒழுங்கு குலைந்து போனால் தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது. பொது ஒழுங்கு குலைந்து போனால்தான் பயன்படுத்த வேண்டும்.

சட்டம் ஒழுங்கு என்பது வேறு; பொது ஒழுங்கு என்பது வேறு. ஏற்கனவே பார்ப்பனர் பூணூலை அறுத்த 'குற்றத்துக்காக' இந்த ஆட்சி, எங்கள் தோழர்கள் பெரம்பலூர் லட்சுமணன், தாமோதரன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தி யது. வேறு எந்த முன் வழக்கும் அவர்கள் மீது இல்லை. இந்த ஒரே வழக்குக்காக, அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போட்டார் கலைஞர்.

மத்திய அரசுக்கு பயந்து அவர்களைத் திருப்திப் படுத்தவே தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பயன் படுத்துவதாக சமாதானம் கூறினார்கள். இப்போது மத்திய அரசே கூறிவிட்டது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியது தவறு என்று. இராணுவ வாகன மறிப்பு வழக்கில் ம.தி.மு.க. மாணவரணி செயலாளர் சந்திரசேகர் மீது தி.மு.க. ஆட்சி போட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை  தவறாக போடப்பட்டுள்ளதாகக் கூறி மத்திய அரசே ரத்து செய்து விட்டது. அதற்குப் பின்னரும்கூட எங்கள் தோழர் சூலூர் வீரமணி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை போடுகிறார்கள். ஷேக்ஸ்பியர் நாடகத் தில் வருவதைப்போல்

'அரசனை விட அரசனை மிஞ்சிய இராஜ விசுவாசியாக' இவர்கள் செயல் படுகிறார்கள்.

பிற மாநிலத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினால் கூட வழக்குப் போடுவது இல்லை. ஆனால், தி.மு.க. ஆட்சியில் பேசினாலே தேசிய பாதுகாப்பு சட்டம் என்றால், என்ன காரணம்? ஏன் விடுதலை இயக்கங்கள் மீது இவர்களுக்கு இவ்வளவு ஆத்திரம்?

தமிழர்களை எப்படி அடக்கினாலும் அதை ஏற்றுக் கொண்டு விடுவார்கள். எதிர்க்க மாட்டார்கள் என்பதுதான் காரணம். சீக்கியர்கள் கலவரம் நடத் தினால் பயப்படுகிறான்; மத்திய அரசு பணிகிறது. ஆனால், ஆறரை கோடி எண்ணிக்கையாக உள்ள ஒரு இனத்துக்கு ஏன் செவி சாய்க்க மறுக்கிறார்கள்? இந்த சிந்தனையோடுதான் ஈழத் தமிழர்களுக்குநாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சேர்த்து சிந்திக்க வேண்டும்.

ஈழத் தமிழர்கள் - தங்கள் விடுதலைக்காகப் போராடுகிறார்கள். அதில் உறுதியாக இருக்கிறார்கள். எல்லாம் முடிந்து விட்டது என்று அறிவிக்கப்பட்ட  இந்த நிலையிலும்கூட முள்வேலிக் கம்பிக்குள் அகதி களாக அடைக்கப்பட்ட நிலையிலும்கூட அந்த அகதி முகாமுக்குள் இருந்த தமிழன், உயரமான கம்பத்தில் ஏறி புலிக் கொடியைக் கட்டிப் பறக்க விடுகிறான் (கைதட்டல்). அந்தத் துணிச்சல் அவனுக்கு இருக்கிறது. தன்னுடன் முகாமுக்குள் உள்ள பெண்ணிடம் ராணுவம் அத்து மீறி நடக்கும்போது அதை எதிர்த்துக் கேட்கும் துணிச்சல் அவனுக்கு இருக்கிறது. அப்படி எதிர்த்துக் கேட்ட இரண்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அத்துமீறி நடந்த ராணுவ அதிகாரியின் துப்பக்கியைப் பிடுங்கி அடித் திருக்கிறார்கள். அதற்காகவும் சுட்டுக் கொல்லப்பட் டிருக்கிறார்கள். முகாமில் அடைத்தாலும் விடுதலை உணர்வை அப்படியே காத்துக் கொண்டிருக்கிற உணர்வோடு அந்தத் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதாக இங்கே நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

அடக்குமுறைகளை நேரில் அறிந்திடாத புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்கள்கூட ஆயுதம் ஏந்திப் போராடத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கு உதவுவதாக எதுவும் செய்யாத, எதுவுமே செய்யும் துணிவில்லாதவர் களாகிய நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்; என்ன செய்ய வேண்டும் என்று! என்ன செய்ய முடியும்? மீண்டும் ஆர்ப்பாட்டம்; ஊர்வலம்; இதைத்தான் செய்வோம். அதற்கு அரசு செவி சாய்க்குமா? பலன் ஏதும் தராமல் கோரிக்கைகளை முன் வைப்பது மட்டுமே பலன் சேர்க்குமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கலைஞர் வேண்டுமானால் கடிதம் எழுதுவார். பிற்காலத்தில் - வரலாற்றில் கடிதம் எழுதியதாக சொல்லிக் கொள்வதற்கு அது பயன்படும். அல்லது அஞ்சல் துறைக்கு 5 ரூபாய் லாபம் சேர்ப்பதற்கும் பயன்படும். வேறு எந்தப் பயனும் நிகழ்ந்து விடாது. பதிவு செய்யக்கூடிய போராட்டங்களாக நமது போராட்டங்கள் இருக்கக் கூடாது. சிறு போராட்ட மாக இருந்தாலும் அதற்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டு நடத்துகிற போராட்டமாக நமது போரட்டம் இருக்க வேண் டும். அது அறவழிப்பட்ட போராட்டமானாலும் சரி, வேறு வகைப் போராட்டமானாலும் சரி, அரசு செவி சாய்க்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்குச் சட்டப்படியான தீர்ப்பை நாம் பெற்ற பிறகும்கூட அதை கேரள மார்க்சி°ட் ஆட்சி அமுல் படுத்த மறுக்கிறது. அதையும் நாம் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்; இது தானே நமது நிலை.

ஈழத் தமிழர் மீதான இனப் படுகொலைகளை இலங்கை அரசு விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக்கூட சீனாவும், கியுபாவும் தோற்கடிக் கின்றன. மாறாக, பயங்கரவாதத்தை ஒழித்து விட்டதாக நிதி உதவி கோரும் இலங்கை அரசு தீர்மானத்தை இந்தியாவும், சீனாவும் ஆதரிக்கின்றன. சாட்சிகளற்ற இனப்படுகொலையை அங்கே நடத்தி இருக்கிறார்கள். படுகொலைகளுக்கு சாட்சியாக இருந்த பத்திரிகையாளர் 'இந்து' பார்ப்பான் இராம் - மார்க்சியவாதி போல பேசிக் கொள்ளும் அந்த இராம் - தமிழர் அகதி முகாம்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதாக எழுதுகிறார். ஆனால் இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் நந்தன் சில்வா என்பவர் சுப்பிரமணியம் என்ற தமிழ் புகைப்படக் காரரை உடன் அழைத்துக்கொண்டு போய் அகதிகள் முகாமைப் பார்வையிட்டார். எல்லாவற்றையும் படம் பிடிக்கச் சொன்னார். அவர் தலைமை நீதிபதி என்பதால் புகைப்படம் எடுப்பதை தடுக்க முடியாது. அவர் அறிக்கை கொடுத்தார்.

"இலங்கை நாட்டின் குடிமகனாக இருப்பதை நான் கேவலமாக உணருகிறேன்". அகதி முகாம்களில் எல்லாவற்றுக்கும் கியூ நிற்கிறார்கள். கூடாரத்துக்குள் தலைநிமிர்ந்து நிற்க முடியாது. இடுப்பு ஒடிந்து விடும். 5 பேர் இருக்கவேண்டிய கூடாரத்தில் 30-க்கும் மேல் இருக்கிறார்கள் என்றெல்லாம் அந்த நாட்டின் தலைமை நீதிபதி அறிக்கை விடுத்தார்.

அந்நாட்டு தலைமை நீதிபதி கூறுவதையாவது உலக நாடுகள் காது கொடுத்து கேட்க வேண்டாமா? அதற்குப் பின்னால் அவர் பதவி ஓய்வு பெற்றார். இப்படிக் கூறுவதால், தனது உயிருக்கும் உடைமைக் கும் ஆபத்து நேரிடலாம் என்று கூறிவிட்டே பேட்டி கொடுத்தார். எங்கள் நாட்டில் மனித உரிமைகளை மதிப்பதே இல்லை. எங்கள் நாட்டில் மனித உரிமைகளுக்கும், அறவழிகளுக்கும் யாரேனும் இருந்ததாக உதாரணம் கூறவேண்டுமானால் அது பிரபாகரன் ஒருவர் தான் என்று, அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தனது பதவி ஓய்வு பெறும் நாளில் பேசும் போது கூறியிருக்கிறார். (கைதட்டல்) எத்தனையோ வழக்குகளில் தமிழர்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்ததை எல்லாம் பட்டியல் போட்டுக் காட்டிவிட்டு கூறியிருக்கிறார். புலிகள் கட்டுப் பாட்டுப் பகுதியில் கிரிமினல் குற்றவாளிகள் இருப்பதை பட்டியல் போட்டுக் காட்டி நீதிமன்றம் வழியாக கேட்ட போது புலிகள் அந்த கிரிமினல் குற்றவாளிகளை இலங்கை நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆனால், அதேபோல் புலிகள் கேட்ட குற்றவாளிகளை ஒருமுறைகூட இலங்கை நீதிமன்றம் ஒப்படைத்தது இல்லை என்று, அந்த நிகழ்ச்சியில் நீதிபதி கூறியிருக்கிறார்.

கடைசியாக தலைமை நீதிபதி கூறியிருக்கிறார்: நான் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குப் போன போது  அவர்கள் மரியாதையுடன் நடத்தினார்கள். இவ்வளவு அறவழியைப் பின்பற்றுகிற விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் நான் பாராட்டுகிறேன் என்று. (பலத்த கைதட்டல்)

சிங்கள தேசிய இனத்திலிருந்தே இந்தக் குரல் கேட்கிறது, எத்தனையோ சிங்கள பத்திரிகை யாளர்கள் இலங்கையைக் கண்டித்து எழுதியதற்காக உயிருக்கு பாதுகாப்பு தேடி இந்தியாவில் அடைக் கலம் புகுந்துள்ளனர். அவர்கள் கூட தமிழ்நாட்டில் இல்லை. காரணம், தமிழ்நாடு அரசை நம்பத் தயாராக இல்லை. அதைவிட டெல்லியில் இருக்கும் ஆட் சியை நம்பலாம் என்று டெல்லியில் இருக்கிறார்கள்.

ஒரு சிங்கள பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப் பட்டார். இப்படி சிங்கள இனத்தில் கூட சிலர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாது உரிமைக்கு குரல் கொடுக்கும்போது நம்முடைய தொப்புள்கொடி உறவான தமிழர்களுக்கு நாம் என்ன செய்தோம்? இங்கிருந்து செய்யும் கடமையை நாம்  முழுமையாக செய்திருக்கிறோமா என்று கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இது.

புலிகள் என்று பேசினாலே குற்றம் என்ற நிலை இங்கு இருந்தது. இனி அந்த நிலை வராது. காரணம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஒழித்து விட்டதாக அவர்களே கூறுகிறார்கள். எனவே தடை செய்யப் பட்ட இயக்கத்தை ஆதரிப்பது குற்றமாகிவிடுமே என்ற அச்சம் நீங்கி நீங்கள் செயல்படலாம். ஆபத்து இல்லாத இத்தகைய போராட்டங்களில் ஆயிரக் கணக்கில் நீங்கள் திரண்டு  நமது ஆதரவுக் குரலை எழுப்பவேண்டும். நூற்றுக்கணக்கில் கூடினால் மட்டும் போதாது.

சிறைக்குப் போகும் போராட்டத்துக்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும். காலையில் போராட்டம் நடத்தி, மாலையில் விடுதலையாகும் போராட்டத் துக்கு நாம் பழகிவிட்டோம். எனவே 15 நாள் சிறையிலிருக்கும் போராட்டத்துக்காவாவது உணர்வுள்ள இளைஞர்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் தமிழன் என்று உணர வேண்டும்; நமக்கான அடையாளத்துடன் தனித்த அரசை அமைத்து, நமக்கான அதிகாரம் நம்மிடம் வேண்டும் என்ற ஆவல் நம்மிடம் இருக்க வேண்டும் . அந்த ஆவல் வலுப்பட்டால்தான் இயக்கமாகும்; அந்த எண்ணத்தையாவது நாம் எழுப்ப வேண் டாமா? அதைப் பற்றி சிந்திக்க வேண்டாமா, என்பது தான் முக்கியம். குரல் எழுப்புவது மட்டும் போதாது; இதைச் சொன்னால் பிரிவினைவாதம் என்கிறார்கள்? என்ன பிரிவினைவாதம்? அய்.நா.சபை தோன்றிய பிறகு எத்தனை நாடுகள் தோன்றியிருக்கின்றன? ஏதாவது ஒரு நாட்டிலிருந்து பிரிந்துதான், மற்றொரு நாடு உருவாகிறது. எந்த நாட்டிலும் பிரிவினை வாதம் என்று பேசவில்லை.

இங்கேதான் பிரிவினை வாதம் என்று கூச்சல் போடுகிறான். ஆனால், அய்.நா.மன்றம், ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனது உரிமையை நிர்ணயித்துக் கொள்ள உரிமை உண்டு என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. அய்.நா. மன்றத்தின் சிவில் அரசியல் உரிமை பிரகடனத்தின் முதல் விதி அது தான். தேசிய இனம் பற்றிய புதிய சிந்தனைகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. கனடா நாட்டின் அம்மையார் கரண்பார்க்கர். அவர் தொடர்ந்து தமிழ் ஈழத்துக்கான குரலை எழுப்பி வருகிறார். அதற்காக உலக நாடுகளில் உள்ள எல்லா வழக்கறிஞர்களையும் சந்தித்து, தனது குரலை பதிவு செய்து வருகிறார். அவர்களுக்கான தனித்த நிலம்; தனித்த அடையாளம்; தொடர்ந்த அரசுகள் பற்றி எல்லாம் அவர் சொல்கிறார். இவைகளைத் தவிர மேலும் இரண்டு புதிய கோட்பாடுகளை அவர் சொல்கிறார். அதுதான், இப்போது நம்மிடம் இல்லை. சுதந்திர வேட்கை (றடைட வடி கசநநனடிஅ)  இருக்க வேண்டும் என்பது ஒன்று; அதை நிறைவேற்றிக் கொள்கிற ஆற்றல் (உயயீயbடைவைல) இருக்கவேண்டும் என்பது மற்றொன்று. இந்த இரண்டு மட்டும்  நமக்கு இல்லை. ஆனால், நிலம், தொடர்ந்து நடந்த தமிழர் அரசுகள், கலாச்சாரம் என்ற மூன்றும் நம்மிடம் இருக்கிறது. நாம் சுதந்திர வேட்கையை அதை நிறைவேற்றிக் கொள்கிற ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாததைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அல்லது அந்த நியாயமான உணர்ச்சிகள் நம்மிடம் இல்லை என்பதை விவாதத்திற்காகவாவது நாம் உட்படுத்த வேண்டும். அதைத்தான் தமிழர் களுக்கு உள்ள கடமையாக இப்போது நாம் உணருகிறோம்.

ஈழத் தமிழர்களுக்கான பிரச்சினை ஒரு நாளில் தீர்ந்துவிடப் போவது இல்லை. அது நீண்ட நாள் போராட்டம்; ஒன்றரை லட்சம் தமிழர்கள் ஒரு நாட்டில் இருந்தால் அதில் ஒரு லட்சம் பேர் ஊர்வலத்துக்கு வருகிறார்கள். ஆனால் ஆறரை கோடிப் பேராக இருக்கும்  தமிழ்நாட்டில் 650 பேர்தான். அவ்வளவுதான் போராடியிருப்போம். எவ்வளவு வெட்கக்கேடான நிலை? எளிய போராட் டத்தைக்கூடநாம் நடத்த முன்வருவதில்லை. இப்படி எல்லாம் உள்ள ஒரு இனத்தை அல்லது மக்களை அரசும், அரசு அதிகாரங்களும் அடக்குகின்றன என்று சொன்னால், ஏன் அடக்க மாட்டார்கள்? அடக்கத்தான் செய்வார்கள். இந்த அடக்குமுறை அதிகமானால், நமக்கு ஒரு வேளை உணர்வு வரலாம். வீண் பெருமை பேசிக் கொண்டிருந்தால் போதாது. தமிழன் இமயத்தில் கொடி நாட்டினான் என்றெல்லாம் பேசுவதை விடுங்கள். முதலில் நமது நாட்டில் கொடியை உயர்த்த வேண்டும். நம் நாட்டில் நம் கொடியைப் பறப்பதற்கான சுதந்திரத்தைப் பெறுவதற்கு அதற்கான ஆற்றலை நாம் வளர்த்துக் கொள்வோம். வேட்கையை வளர்ப்போம். ஆற்றலை வளர்த்துக் கொள்ள முயற்சிப்போம். இதைத்தான் ஈழத் தமிழர்களுக்காக இந்தியத் தமிழர்கள் எடுக்க வேண்டிய முயற்சியாக நாங்கள் கருதுகிறோம். இதைத் தொடர்ந்து செய்யலாம். அதுவரை நமது நாட்டில் இருக்கிற, நமக்கு எதிரானவர்களை என்ன செய்யலாம்? முதலாவதாக எதிரானவர்களைப் புறக்கணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்; வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரி யாருடைய உழைப்பு, ஒரு சமூகச் சூழலை உருவாக்கி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா இருக்கிறார் என்றால், ஏறத்தாழ வேறு பெயரில் இருக்கிற பா.ஜ.க.  அவர், நரேந்திர மோடிப் பதவி ஏற்றால், பதவி ஏற்புக்குப் போவார். சென்னைக்கு நரேந்திர மோடி வந்தால், வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார். ஆனால், அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டார். ஏனென்றால், இந்த மண்ணின் சூழல் பா.ஜ.க.வின் கூட்டணியைப் புறக்கணிக்கும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். எனவே அந்த உள்ளம் இருந்தா லும் உணர்வு இருந்தாலும், அவர்களோடு கூட்டுச் சேர அவர் துணியவில்லை. அதே போல, தீண்டத் தகாத கட்சியாக புறக்கணிக்க, வெறுக்கத்தக்க கட்சி யாக காங்கிரஸ் கட்சியை நாம் கருத வேண்டும். அந்த எண்ணத்தை மற்றவர்களுக்கு ஊட்ட வேண்டும். (கைதட்டல்) தொடர்ந்து, நமக்கு துரோகமே செய்து வந்திருக்கிற கட்சி, காங்கிரஸ். நமது உரிமைகளைப் பறித்தவன் யார்? ஈழத்தில் தமிழ்மொழி உரிமையை சிங்களன் பறித்தான் என்றால் - இங்கே நமது மொழி உரிமையைப் பறித்தது யார்?

கடந்த நாடாளுமன்ற இறுதிக் கூட்டத்திலேகூட 47 உயர்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டைப் பறித்து, மாநிலங் களவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்கள். மக்களவையில் நிறைவேற்றுவதற்கு முன்பு, தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. ஒருவேளை, நாடாளு மன்றத்தில் இனி நிறைவேற்றப்படலாம். தமிழர்களை மட்டுமல்ல, சமுதாயத்தில் அடக்கப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்குக்கூட, அவர்கள் துடிக்கிறார்கள். உச்சநீதிமன்றமும் நடுவர் மன்றமும் நமது மாநில உரிமைக்காக காவிரி நீர் உரிமைக்கு வழங்கிய தீர்ப்பைக் கூட அமுல்படுத்த மறுக்கிறார்கள். ஆனால், நாம் அவர்களோடு கூட்டணி சேர்ந்து கொண்டு நமது கூட்டணியில் இருக்கிறார்களே, எப்படி கண்டிப்பது என்று, கூட்டணி தர்மம் பேசி, காங்கிரஸ் கட்சியை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அய்ரோப்பிய நாடுகளில், மனித உரிமையை மிகவும் மதிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில்கூட ஜெர்மனியில் ஹிட்லரைப் பாராட்டிப் பேசினால் குற்றம். இன்று வரை, அதை குற்றமாக வரையறுத்து வைத்துள்ளனர்.

அதுபோல் - தமிழ்நாட்டில் காங்கிரசை ஆதரிப்பது குற்றம் என்ற மனப்பான்மை நமக்கு வரவேண்டும். அதை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும். இப்போது காங்கிரஸ்காரனைவிட நமது 'அகில இந்திய' திராவிட முன்னேற்றக் கழகம் தீவிரமாக ஒருமைப்பாடு பேசுகிறது. கலைஞர் எல்லாம், இப்போது நமக்கு மட்டுமல்ல, ஈழத் தமிழர்களுக்கு கூட அறிவுரை கூறுகிறார். தனி ஈழம் எல்லாம் வேண்டாம். அதை எல்லாம் கைவிடுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். ஏனென்றால், தி.மு.க. - அந்தக் கொள்கை எல்லாம் கைவிட்டு விட்டது அல்லவா? எனவே  எல்லோருமே கொள்கைகளை கைவிட்டுவிட்டால், மக்கள் கொள்கைகளைப் பற்றி கேள்வியே கேட்க மாட்டார்கள் அல்லவா?

ஆனால், அறிவு மிக்க இளைஞர்கள் எழுச்சி பெறத் தொடங்கிவிட்டார்கள். முத்துக்குமார் தனது மரண சாசனத்தில் அரசியல் தலைவர்களையெல் லாம் நம்பாதீர்கள் என்று எழுதி வைத்துவிட்டுப் போனார். எனவே பல இளைஞர்கள் அரசியல் கட்சிகளிலிருந்து விலகி முத்துக்குமார் பெயரில் இயக்கங்களைத் தொடங்கி வருகிறார்கள். மார்க் சி°ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி - முத்துக் குமார் மன்றம் தொடங்கியிருப்பதாக திருப்பரங் குன்றத்தில் தோழர்கள் என்னிடம் கூறினார்கள். கட்சிக் கட்டுப்பாடு என்று சொல்லிக் கொண்டு நமது உணர்வுகளைக்கூட வெளிப்படுத்த முடியாத மடை யர்களாக இனிவரும் இளைஞர் சமூகம் இருக்காது; இருக்கவும் கூடாது. கட்சியில் இருப்பதற்காகவே கட்சியின் கொள்கை துரோகங்களுக்கு துணை போய்க் கொண்டு, உணர்வுகளையேகூட வெளிப் படுத்தாது இருக்க வேண்டுமா?

இந்த மாநிலக் கட்சிகளுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இவர்கள் மசோதா நிறைவேற்றினாலும் கூட, டெல்லியில் உள்ளவர்கள் ஒப்புதலைத்தான் பெற வேண்டும். பதவிக்குப் போகிறவரை கொள்கையை நிறைவேற்றுவதற்காக ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்பார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கெள்கையைக் கைவிடுகிறோம் என்பார்கள். இதைத் தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே இந்தக் கட்சிகளை வழிநடத்துகிற சக்திகளாக நாம் மாறவேண்டும்.

அகில இந்தியா பேசுகிற கட்சிகள்கூட வேறு மாநிலத்தில் எப்படி செயல்படுகிறான்? கருநாட கத்தில் அகில இந்தியாவைப் பேசும் கட்சிகள் தான் இருக்கின்றன. ஆனால், அவன் தனது மாநிலத்திற் காகத்தான் குரல் கொடுக்கிறான். கருநாடகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கட்சியின் பெயரில் அகில இந்தியா என்று இருக்கும். ஆனால் அவன் தனது மாநிலத்துக்காகத்தான் குரல் கொடுக்கிறான். தி.மு.க.வின் பெயரில் அகில இந்தியா இல்லை. ஆனால் அக்கட்சியின் சிந்தனை அகில இந்தியாவாகி விட்டது. இதுமட்டுமல்ல, சர்வ தேசியம் பேசுகிற கியுபா போன்ற நாடுகள் கதை என்ன? குறைந்த பட்சம், தமிழர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு கண்டனமாவது தெரிவித்திருக்கக் கூடாதா?

வியட்நாமில் மைலாய் எனும் கிராமத்தில் 148 பேரை குண்டுவீசி, அமெரிக்க படை கொன்றது. அதற்கு அமெரிக்க நாட்டிலேயே கொந்தளிப்பு எழுந்தது. அப்பாவி மக்களைக் கொல்லாதே என்று வீதிக்கு வந்து போராடினார்கள்.  வியட்நாமிலிருந்து அமெரிக்கப்படை விலகுவதற்கு அதுவும் ஒரு காரணம். அந்த ஆத்திரம் நமக்கு வந்ததா? நமது நாட்டுப் படை அமைதிப்படை என்ற பெயரில் இங்கிருந்து போய் கொன்றதே. 64000 பேரைக் கொன்றதாக, கணக்கு 70000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். 148 பேரைக் கொன்றதற்காக ஒரு ஆதிக்க நாட்டுக்காரன் நாட்டில் அவன் நாட்டிலேயே மக்கள் போராடியபோது நாம் 70000 மக்களைக் கொன்றதற்காக என்ன போராட்டத்தை நடத்தினோம்? அந்த அமைதிப் படையில் தளபதிகளாக இருந்தவர்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். அசோக் மேத்தா, ஹர்கரந்த்சிங் போன்றவர்கள் எல்லாம் தாங்கள் சொன்னதை இந்தியா கேட்கவில்லை என்று பேசுகிறார்கள். புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். திலீபன் எதற்காக உண்ணாவிரதம் இருந்தார்?

இப்போது ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்று பேசுகிறார்களே. அந்த ஒப்பந்தத்தை முறையாக அமுல்படுத்து என்று வலியுறுத்திதான், திலீபன் உண்ணாவிரதம் இருந்தான். இப்போது அந்த ஒப்பந்தத்தை ஆதரித்துப் பேசும் காங்கிரசார், அப்போது, திலீபன் உண்ணாவிரதத்தை ஆதரித்து அல்லவா இருந்திருக்க வேண்டும்? திலீபனை போய் பார்ப்பதற்குக்கூட இந்திய அரசு அங்குள்ள இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. அதற்கு உத்தரவிடவில்லை.

இங்கேயும், நமது நாட்டிலும், என்ன நிலைமை? மக்கள் ரேஷன் கிடைக்கவில்லை, தண்ணீர் லாரி வரவில்லை என்று போராடினால், அதில் தொடர்புடைய அதிகாரிகளா வருகிறார்கள்? காவல்துறையைத்தான் எந்தப் போராட்டமானாலும் கைது செய்வதற்கு அனுப்புகிறான். தொடர்புடைய அதிகாரிகள் வருவது இல்லை. குடிமை உரிமைகளுக்கான போராட்டங்கள் நடக்கும்போது அதிகாரிகளோ, அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ வருவதில்லை. எல்லாவற்றுக்கும் காவல்துறைதான் வரும். மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும், அதை காவல்துறை தான் தீர்த்து வைக்கும் என்று அரசு செயல்படுகிறது. இதை நாம் எதிர்க்காதவரை, அரசு இதைத் தானே செய்யும்? இந்தப் போராட்ட உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்ளாமல், வெறும் ரசிக மனப்பான்மையோடு விடுதலைப் புலிகளைப் பாராட்டிக் கொண்டு குதிரைப் போட்டிக்கு பந்தயம் கட்டுகிறவனைப் போல் நாம் நமது வேட்கையை வளர்த்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

ஈழத் தமிழினம் போராட்டத்துக்கு தயாராகிவிட்ட இனம். தங்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற இனம். அந்தப் போராட்ட உணர்வு இன்றும் குன்றாமல் அவர்களிடம் இருக்கிறது. எனவே அவர்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவார்கள். தங்களுக்கான உரிமையுள்ள ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டு விடுவார்கள்.

ஆனால், தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம் என்ன செய்ய போகிறோம்? நமது குரலுக்கு செவி சாய்க்காத அரசோடு நாம் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா அல்லது இணைந்திருக்க முடியுமா என்பதுபற்றி சிந்திக்கக்கூடத் தயங்கினோம் என்றால் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பதை மட்டுமே, ஈழத் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கான விடையாய் உங்களிடம் விட்டு விடைபெற விரும்புகிறேன்.http://www.puthinam.com/d/p/2009/feb/australia_20090227.jpg  

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!