தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!
'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'
-பாவேந்தர் பாரதிதாசன்
ஏதோ ஒரு பாட்டு mp3
ஏதோ ஒரு பாட்டு mp3 | ||
Found at bee mp3 search engine |
Pages
Monday, May 11, 2009
ஓருவேளை உணவுக்காக...
ஓருவேளை உணவுக்காக நீண்ட வரிசையில்…
வருவோர்க்கு அள்ளிக் கொடுத்த வன்னி மக்கள் ஒரு நேரச் சாப்பாட்டுக்காக முகாம்களில் உணவுக்காக பாத்திரங்களை அடுக்கி காத்திருக்கும் நிலையை பாருங்கள்.
அவர்களுக்கு அமைத்துக் கொடுத்த கூடாரங்களில் சிலவும்..
மே 10- அகோரத் தாக்குதலின் வீடியோ காட்சிகள்
http://www.youtube.com/watch?v=MhOEEiAQm9A
|
|
|
| |||||||
| ||||||||||
| ||||||||||
| ||||||||||
| ||||||||||
|
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
சோனியாவுக்கு கறுப்புக்கொடி:நெடுமாறன், பாரதிராஜா உள்ளிட்ட 200 பேர் கைது
ஈழத் தமிழர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து சோனியாவுக்கு 3 இடங்களில் கறுப்புக்கொடி: நெடுமாறன், பாரதிராஜா உள்ளிட்ட 200 பேர் கைது |
இலங்கைத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தமிழ்நாட்டிற்கு வாக்கு கேட்டு வருவதைக் கண்டித்து சென்னையில் 3 இடங்களில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இயக்குநர் பாரதிராஜா உட்பட 200-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். |
எனினும் கறுப்புக் கொடி போராட்டங்கள் நடைபெறவிருப்பதை அறிந்த சோனியா சாலை வழியைத் தவிர்த்து உலங்குவானூர்தி வழியாகத் தீவுத் திடல் சென்றார். இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்குத் துணைபோன சோனியா காந்தி தமிழகம் வரக்கூடாது என்று வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்குத் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு, திரையுலகத் தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம், தமிழக வழக்கறிஞர்கள், தமிழீழ போராட்டக் குழு பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் பழ. நெடுமாறன், பாரதிராஜா, வழக்கறிஞர் கருப்பன், இயக்குநர் ஆர். சுந்தரராஜன், ஓவியர்கள் மருது, வீரசந்தனம், தமிழறிஞர்கள் இறைக்குருவனார், கி.த.பச்சையப்பன், உள்ளிட்டோர் கறுப்புக் கொடி ஏந்தி கலந்து கொண்டனர். சோனியா காந்தி, ராஜபக்ச மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தொடர் முழக்கங்களும் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் பேசிய பழ.நெடுமாறன், "இலங்கையில் கடந்த சில மாதங்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். 5 லட்சம் தமிழர்கள் வாழ்விடங்களை இழந்திருக்கின்றனர். தமிழர்களுக்குச் செல்லும் உணவுப் பொருட்களை சிறிலங்கா அரசு தடுத்துவிட்டதால் நாள்தோறும் 15 தமிழர்கள் பட்டினியால் இறக்கின்றனர். ஒருபுறம் தாக்குதல், மறுபுறம் பட்டினி எனத் தமிழர்களை சிறிலங்காப் படை கொன்று குவிக்கிறது. தமிழர்களின் படுகொலைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதுவரை அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது தமிழகத்திற்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறார். அவரை தமிழினத் துரோகிகள் சிலர் மாலை போட்டு வரவேற்பார்கள். இலங்கையில் போரை நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்காவிட்டால் சோனியா காந்தி எந்தக் காலத்திலும் தமிழகம் வரமுடியாது" என்று எச்சரித்தார். இதைத் தொடர்ந்து தடையை மீறி கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியதாகக்கூறி பழ.நெடுமாறன், இயக்குநர் பாரதிராஜா, வழக்கறிஞர் கருப்பன் உட்பட 200-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இதேவேளையில் பனகல் மாளிகைக்கு அருகிலேயே மற்றொரு இடத்தில் புரட்சிகர தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 50-க்கும் அதிகமானோர் சோனியாவுக்கு எதிராகக் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோன்று, சென்னை நினைவரங்கத்தில் ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் அதிகமானோர், அந்த அமைப்பின் தலைவர் ஷீலு தலைமையில் சோனியாவுக்கு எதிராகக் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர். http://www.puthinam.com/full.php?2b35WTd4b34kbEd04dcpRr4db0eJ7JC34d30VmE3e0dY5RmOce03g7h22cc4Ph0bbe |
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
பாரதிராஜா வீடியோ படம்: எப்படியடா இவனை தமிழன் என்பது
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
நடிகர் மன்சூர் அலிக்கான்:லட்சம் தமிழர்களை கொன்ற இராகுல் காந்தியே திரும்பிப் போ!
லட்சம் தமிழர்களை கொன்ற இராகுல் காந்தியே திரும்பிப் போ! - மன்சூர் அலிக்கான் திடீரென கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
இராஜிவ் காந்தியின் மகனும் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களுள் ஒருவருமான இராகுல் காந்தி உலங்கு வானூர்தி மூலம் மக்களாவை பிரச்சாரத்திற்காக மாலை திருச்சிக்கு வந்து சேர்ந்தார். அப்போது மக்களவையின் திருச்சி வேட்பாளரும் நடிகருமான மன்சூர் அலிக்கான் மத்திய பேருந்து நிலையத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து, கையில் கருப்பு கொடியேந்தி, 'லட்சம் தமிழர்களை கொன்ற இராகுல் காந்தியே திரும்பிப் போ!", தமிழின துரோகி இராகுல் காந்தியே தமிழகத்தில் கால் வைக்காதே!" என்று முழக்கமிட்டனர். முன்னறிவிப்பு ஏதுமின்றி, திடீரென மத்திய பேருந்து நிலையம் முன் முழக்கமிட்டதால், காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இராகுல் காந்தியின் உலங்கு வானூர்தி வெஸ்ட்ரீ என்னும் பள்ளி மைதானத்தில் இறக்கப்படும் இடம் மத்திய பேருந்து நிலையம் அருகில் இருந்ததால், காவல்துறையினர் அதிர்ச்சிக்கு காரணம். காவல்துறையினர், உடனடியாய் முழக்கமிட்ட அனைவரையும் கைது செய்து அருகில் உள்ள காவல் நிலையம் கொண்டு சென்றனர். மன்சூர் அலிக்கான் அவ்வப்போது, அதிரடியாய் பல நிகழ்வுகளை செய்து வருவது, திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இராகுலின் வருகையையொட்டி திருச்சி முக்கிய சாலைகள் அனைத்தும் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர். இத்தோடு மதுரை செல்லும் சாலை போக்குவரத்து கடந்த ஒரு மணி நேரமாய் ஸ்தம்பித்துள்ளது. இச்சாலை போக்குவரத்து சரி செய்ய இன்னும் இரண்டு மணி நேரமாகலாம் என்று தமிழ்ச் செய்தி மையத்தின் செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கிறார். காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
பெரியார்
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
. தி.மு.க விஜயகாந்துடன் கள்ள உறவு
ஈழ பிரச்சனைக்காக ஜெயாவுக்கு வாக்களிப்பது தான் தீர்வு- தி.மு.க அனுதாபியின் அலசல் -- ஆக்கம் - வசந்தசேனன் [தட்டச்சுப் பிழைகளுக்கும் சேர்த்தே!]
ஜெயலலிதாவின் தனி தமிழ் ஈழ முழக்கத்தை நம்பி வாக்களிக்கலாமா எனக் குழம்பும் அனைவருக்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்.
தமிழக அரசியலின் திராவிட கட்சிகளின் ஆரம்பம் தொட்டு அண்ணா காலம் முதல் தி.மு.க அனுதாபியாக இருந்த எங்கள் குடும்ப வாக்குகள் முதல் முறையாக இந்த முறை ஜெயலலிதாவிற்கு ஆதரவாக விழ போகின்றன. இதில் முழு சந்தோசம் இல்லை என்றாலும் இன்றைய இக்கட்டான சூழ்நிலை கருதி அங்கு நாளாந்திரம் செத்து மடியும் ஈழ தமிழர்களின் நலனுக்காக எங்கள் பாரம்பரிய வாக்க்குகளை , தயக்கங்களை உடைத்து எறிந்து இன்று ஜெயலலிதாவிற்கு தனி தமிழ் ஈழம் தான் தீர்வு என முழங்கும் அந்த உறுதிபாட்டிற்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்து உள்ளோம்..
முதலில் தி.மு.க அரசு தமிழக அரசிய்லில் அதற்க்கு பாதகமான களத்தை பல காலம் முன்பே ஆய்வு செய்து அது இந்த தேர்தலில் குறிப்பிட்ட அளவு வெற்றி பெற பின்னிய சதி வலைகளை ஆராயலாம்
1. தி.மு.க விஜயகாந்துடன் கள்ள உறவு , சன் டிவியில் முரசு சின்னத்திற்கு தொடர் விளம்பரங்கள்
காங்கிரசுடன் விஜயகாந்த் கைகொர்த்து தி.மு.க கூட்டணியில் இடம் பெறுவார் என்ற சூழ்னிலையில் திடீரென்று தி.மு.க விஜயகாந்தை தனித்து நிற்க அசைன்மெண்ட் கொடுத்தது. கூடவே ரொக்கமும் கொடுத்தது.. விஜயகாந்த் தி.மு.க வை எந்த அளவு தாக்கி பெசினாலும் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்காதவாறு கழக கண்மனிகளுக்கு இரகசிய செய்திகள் சென்றன. தி.மு.க வின் எதிர்பார்ப்பு விஜய காந்த் தி.மு.கவை தாக்கி பெசி தி.மு.க எத்ர்ப்பு ஒட்டுகளை பிரிக்க வேண்டும் அவ்வளவே.. தான் தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க மாட்டோம் என நன்கு தெரிந்தும் விஜயகாந்து தனி ஆளாக சிலம்பம் சுற்ற சென்றது இந்த பின்னனி தான்.. ஆதலால் அவர் ஒட்டை பிரிக்க ரொக்கமாக பெற்ற பணம் சுடச்சுட அவர் வீட்டு நல நிதிக்கும், கடனை அடைக்கவும் சென்றது... ஆதலால் தான் தனது கட்சிய்ன் சார்பாக நிற்க்கும் வேட்பாளர்களை கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற எத்தனிக்கும் பெரும் புள்ளிகளை மட்டும் களத்தில் இறக்கினார்..
தி.மு.கவின் ஒரே நம்ப்பிக்கை விஜயகாந்த பிரிக்கும் ஒட்டு.
இப்போது ஜெயலலிதாவிற்க்கு ஈழ ஆதரவு அலை வீசுவதால் சன் டீவி ஒரு படி மேலே சென்று முரசு சின்னத்திற்க்கு, சூரியன் சின்னத்திற்க்கும் வாக்கு அளிக்க சொல்லி தி.மு.க , கருனனநிதி கள்ள உறவை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது
2. வாக்களிக்கும் தேதி , எதிர்ப்பு ஒட்டை தடுத்தல்
மத்தியில் ஆளும் காங்கிரஸ் , பல மாதங்களுக்கு முன்பே உளவு துறை மூலம் இரகசிய விசாரணை மேற்கொண்டு தனக்கு சாதகமாக இருக்கும் வகையில் வாக்கு தேதிகளை தனது அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தை இரகசியமாக நிர்பந்தம் செய்து நிர்ணயம் செய்தது..
குறிப்பாக தனக்கு எதிர்ப்பு நிலவும் மா-நிலங்களில் வாக்கு தேதியை வார இறுதி விடுமுறை நாளை தவிர்த்து ஒரு வேளை நாளில் வைத்தது.. தமிழகத்தில் கூட இலங்கை பிரச்சனையை கருத்தில் கொண்டு வாக்கு தேதியை இறுதி கட்ட நாளில் வியாழக்கிழமை வைத்தது.. இப்படி செய்வதன் மூலம் படித்து பணியில் வெளியூரில் இருக்கும் வாக்காளர்களை வாக்களிக்க செய்ய முடியாமல் தடுத்து விடுவதன் மூலம் தனக்கு எதிர்ப்பு ஒட்டுகளை வெகு வாரியாக குறைத்து விடலாம் என நினைத்து பின்னிய சதி வலை இது.. வாக்கு அளிக்க விடுமுறை என்றாலும் மக்கள் பயனிக்க தேவையான அளவு சிறப்பு இரயில்களை தேர்தல் வாரத்தில் இயக்க வில்லை .. தமிழக அரசும் சிறப்பு பஸ்களை இயக்கவில்லை.. இதன் பின்னனி படித்த வாக்களர்கள் ஒட்டை தடுப்பது ..
இந்த இரண்டு சதி வலையையும்,மீடியாவையும்,
பல கோடி பணத்தையும் மட்டும் நம்பி கருணாநிதி களத்தில் உள்ளார்
தி.மு.க கூட்டணிக்கு எதற்கு நடுனிலை தி.மு.க அனுதாபிகள் வாக்கு அளிக்க கூடாது ?
1. தமிழகத்தில் ஒட்டு போட பணம் கொடுத்தல் என்ற வக்கிர நடைமுறையை கொண்டு வந்து அதனை தொடர்ந்து செயல்படுத்தி பாமரர் ஓட்டை விலைக்கு வாங்குதல்
2. எந்த ஒரு நிலைபாட்டிலும் உறுதியாக இல்லாது இருத்தல்.
3. குடும்ப அரசியல்
தி.மு.க மேலிடத்தின் தற்பொதைய நிலைப்பாடு . கட்சியின் அதிகார, கவுரவ . தலைமை பொறுப்பில் குடும்ப உறுப்பினர்கள் தான் இருக்க வேண்டும். இரண்டாம் நிலை தலைவர்களாக யார் வேண்டுமானாலும் பதிவி வகித்து எவ்வளவு கொள்ளை அடித்து சம்பாதித்து , பதிவு சுகம் அனுபவத்துக் கொள்ளலாம் ஆனால் கட்சி தலைமை பொறுப்பு என்பது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே . இன்று அடுத்த தலைமுறை தலைவர்காளாக அழகிரி மகள்,மகன் என விரிவாக்கம் நடைபெர்று கொண்டே செல்கிறது..
4.மக்களை தொடர்ந்து மீடியாவை வைத்து முட்டாளாக்குவது
தமிழக மக்கள் இன்று பெரிய அளவில் வாழ்வியல் ரீதியாக மாறிவிட்ட சூழ்னிலையில் இன்னமும் மக்களை பழைய காலத்து அரசியல் ஸ்டண்டுகளை நடத்தி நம்பி விடுவார்கள் என முட்டாள் தனம் செய்வது.. பிரதிபா பாட்டிலை குடியரசு தலைவராக்க டெல்லி சென்று தங்கி பல தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்ட கருணாநிதி இன்று பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஈழத்தில் செத்து மடியும் போது கடிதம் எழுதி உள்ளேன், தந்தி அனுப்பி உள்ளேன் என மக்களை தொடர்ந்து முட்டாளாக்கி வருவது.
5. ஈழ பிரச்சனையை புறக்கணித்து கவனக்குறைவாக கையாண்டு வருவது
ஈழ பிரச்சனையில் தி.மு.க காங்கிரஸ் தொடர்ந்து நடத்தி வரும் மகா மட்டமான நாடகம் அனைவரும் அறிந்ததே..
5. பெரிய அளவில் ஊழல்
மிக பெரிய அளவில் ஊழல் செய்து சிறப்பாக செயல்பட வேண்டி பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை முடக்கி போட்டது .. அரசு தபால் துறையை முடக்கி தனியார் கொரியர் தொழில் கொடி கட்டி பறக்க அனுமதித்தது.. சேது சமுத்திர திட்டதில் பல கோடி ரூபாய் வீனாய் கடலில் கரைக்கப்பட்டது. அவர்கள் தோண்டிய தூரத்தில் வெள்ளொட்டம் கூட விட முடியாத அளவு மீண்டும் கடல் மண் குவிந்து பணம் வீனானது..
6. பல நல்ல திட்டங்களை அரசியல் லாபத்திற்காக கிடப்பில் பொட்டது
தமிழகம் முழுவதும் நாற்கர சாலை பணிகளை மந்தமாக்கி விட்டு மக்களை சிரமப்படுத்தியது. துறை அமைச்சர் தமிழகத்தை சார்ந்த பாலு தான் என்றாலும் ஒரு மயிரையும் பிடுங்கவில்லை அந்த அமைச்சர்..
ஒக்கெனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இன்ன பிற நல்ல திட்டங்கள் அரசியல் லாபத்திற்காக கிடப்பில் போடபட்டது
ஈழத்திற்க்கு ஜெயலலிதாவை எதற்க்கு ஆதரிக்க வேண்டும்.. ?
இன்றைய சூழலில் ஈழத்தில் இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு கொண்டு செல்ல காங்கிரசு அரசும் அதன் தவறான வெளியுறவுக் கொள்கை தான் காரணம் என்பதை அனைவரும் அறிவர்.. சுமார் இரண்டு இலட்சத்திற்க்கும் மேலான மக்கள் இடம் பெயர்ந்து சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் வாழ்ந்து வருவது மிக பெரிய அவலம் .. இந்த மக்களை புலிகள் இயக்கம் மீண்டும் வலு பெறாமல் இருக்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு திறந்த வெளி முகாம்களில் அடைத்து வைப்பது தான இலங்கை அரசின் திட்டம். இந்தியா காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு கொடுத்து இருக்கும் அசைன்மண்ட் என்ன விலை கொடுத்தாவது, எத்தனை மக்கள் செத்தாலும் கண்டு கொள்ளாமல் புலிகளை முற்றிலுமாக அழித்து விடுவது . அதற்க்கு பிறகு இலங்கையின் போர் கால இழப்பை சரி செய்யும் வகையில் அனைத்து செலவுகளையும் இந்திய அரசு பார்த்து கொள்ளும்.. இந்த ஒரு தவறான வெளியுறவுக் கொள்கையானது இந்திய அரசியலமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் இன மக்களின் உனர்வுகளை புறக்கனித்து புண்படும் படியாக எடுக்கப்பட்ட முடிவானது..
நீங்கள் மீண்டும் காங்கிரஸ், கருணாநிதி கூட்டணிக்கு வாக்கு அளிப்பது என்பது இன்று வரை கொன்று குவிக்கப்பட்ட ஈழ தமிழ்ர்களின் பிணவாடைகளுக்கு நடுவே இந்த தமிழர் எதிர்ப்பு, பதிவு சுக , தன்னலம் மிக்க ஒரு கொடூர கூட்டணிக்கு வாழ்த்து தெரிவிப்பது போல் ஆகும்.. மன்மோகன் சிங்க் தெளிவாக தனி தமிழ் ஈழம் என்பது காங்கிரஸக்கு உடன்பாடில்லை என்றும் இலங்கையை இரண்டாக்க விரும்பாமல் தமிழர்கள் அங்கு தொடர்ந்து அடிமைகளாக, பிச்சை காரர்களாக இருப்பதே நலம் என்பது போல் கூறி உள்ளார்.. இப்படி ஒரு மட்டமான தமிழர் காழ்ப்பு நிலை கொண்டு உள்ள இவரா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் பிரதமர் ? நினைத்து பார்க்கவே பதறுகிறது நெஞ்சம்...
ஜெயலிலிதா ஒரு சத்திய பிரமானத்திற்கு இனையான உறுதி பிரகடனத்தை எடுத்து விட்டார்.. தனி தமிழ் ஈழம் தான் தீர்வு என்று .. இனி அவர் அதனை மறைத்து தேர்தலுக்கு பின் மீண்டும் காங்கிரசுடன் உறவு கொள்வார் எனும் சந்தேகத்தை நீங்கள் தவிர்ப்பது நலம்.. ஜெயலலிதா காங்கிரசுடம் தேர்தலுக்கு பிந்தைய கூட்டனி வைக்காமலே தி.மு.க ஆட்சி தமிழ்கத்தில் கவிழும்.. காங்கிரசுக்கு தமிழகத்தில் உள்ள கோஷ்டிகள் தி.மு.கவிடம் ஆட்சியில் பங்கு கேட்டு தானாகவே கருணானிதி ஆட்சி தமிழகத்தில் கவிழும் என்பது தான் உண்மை.. ஜெயலலிதாவை பொறுத்த வரை மூன்றாம் அனி ஆட்சிக்கு வந்தால் அதன் பிரதமர்களை நிர்பந்த படுத்தி இலங்கை விவகாரத்தில் அசுர பாய்ச்சலை காட்டி இரானுவரீதியாக இலங்கையை பிரித்து தமிழர்களுக்கு விடிவை பெற்று தரவும் தான் இந்திரா காந்தியை போல் இரும்புக் கரமான் ஒரு பெண் என்பதை உணர்த்தும் ஆர்வத்தில் உள்ளார்.. அவர் துளியும் துரோகம் செய்ய நினைத்தால் அடுத்து வரும் சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பதை நன்றாக உணர்ந்தவர் ஜெயலலிதா... சொன்னதை மிக ஆணித்தரமாக செய்வதில் ஜெயலலிதாவிற்கு நிகர் அவரே.. அதற்கு அவரது பழைய வரலாறுகளே சாட்சி..
ஆக எந்த கட்சி அனுதாபிகளாக இருந்தாலும் சரி .. ஈழ விவகாரத்தில் தமிழக்கத்தில் மக்களை முட்டாளாக்கி கொண்டு இருக்கும் தி.மு.க கூட்டணிக்கு சம்மட்டி அடி கொடுத்து தமிழன் விழித்து வெகு நாளாகி விட்டது , ஈழ விவகாரத்தில் துரோகம் செய்ய நினைப்பவர்களுக்கு இது தான் பாடம் என்பதை ஆணித்தரமாக தமிழர்களாகிய நாம் நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..
இந்த தேர்தல் தமிழ் மக்களை மீடியாவையும். பணத்தையும் வைத்து முட்டாளாக்கி கொண்டு இருக்கும் தி.மு.க கூட்டணிக்கும் எதிரான பாடம் புகட்டும் வாய்ப்பாகவும் , எதிர் காலத்தில் தமிழகத்தில் வரும் அரசியல் கட்சிகள் அனைத்திற்க்கும் இது ஒரு பாடமாகவும் இருக்கும் வகையில் தயக்கங்களை விட்டு ஒழித்து, தேர்தலை புறக்கணிக்காமல் ஜெயலலிதாவிற்க்கு அந்த தனி தமிழ் ஈழ ஆதரவு முழக்கதிற்க்கு ஆதரவாக தமிழர்கள் வாக்களித்து வெற்றி பெற செய்து தனி தமிழ் ஈழம் காண்போம்
நன்றி:: http://vasanthasenan.blogspot.com/2009/05/blog-post.html?showComment=1242001860000#c775366035251718560
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
கேள்வி கேளுங்கள்: இந்தியத் தலைவர்களின் E-Mail, Fax,Telephone,
Mr.L K Advani (BJP)
webmaster.lkadvanisite@bjp.org
advanilk@sansad.nic.in
Communications Office (Residence: 011-9111-23794124 / Office: 011-9111-23001700 / Fax: 011-9111-23001762/ Fax: 011-9111-23012791)
New Delhi.
Tele. (O) : 23034984, 23034285
Tele. (R) : 23014161, 23014481
soniagandhi@sansad.nic.in
President: http://presidentofindia.nic.in/
Smt. Pratibha Devisingh Patil
President of India
Rashtrapati Bhawan, New Delhi 110 004
INDIA
(or http://presidentofindia.nic.in/scripts/writetopresident.jsp)
Fax: +91-11-23017290, +91-11-23017824
7, Race Course Road,
New Delhi-110011
Tel. (011) 3018939, 3011156
Fax. (011) 3019545
cmup@up.nic.in
info@bspindia.org
http://bspindia.org/contact-us.php
+91 2236181 or 91 2239296 or 91 2215501
91 ...
poesgarden123@gmail.com
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
பாரதிராஜா பேச்சு: இளைஞர்கள் புறப்பட தயார்
இளைஞர்கள் இலங்கை செல்லதயார் பாரதிராஜா |
|
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
நன்றி....!
Locate IP Address on Map
http://www.google.co.in/transliterate/indic/Tamil
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு: ஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும் தமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்
சற்று முன்...!
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- "தினத்தந்தி " தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)
- "தினமணி" (1)
- "தினமணி" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)
- chat (2)
- firefox (2)
- shortcuts" (1)
- sms (2)
- video (2)
- அரசியல் (12)
- ஆனந்த விகடன் (1)
- இணைய நூல் (3)
- இணைய முகவரிகள் (2)
- இமெயில் (2)
- இமெயில் குழு (2)
- இலங்கை (21)
- ஈழ வரலாறு புத்தகம் (1)
- எல்லாம் (1)
- என் பக்கம் (9)
- கணினி தொழில் நுட்பம் (32)
- கதை (6)
- கலக்கல் டான்ஸ் வீடியோ (1)
- கவிதை (10)
- குர்து இனத்தவர் கடிதம் (1)
- குறும் படம் (2)
- சிரிப்பு (10)
- சினிமா (9)
- சீமான் (11)
- சு.பொ. அகத்தியலிங்கம் (3)
- தமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)
- தமிழச்சி (5)
- தமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)
- தமிழீழ வீடியோ பாடல் (2)
- தமிழீழம் (53)
- தமிழ் 99 (2)
- தமிழ் ஈழம் (11)
- தமிழ் தட்டச்சு உதவி (2)
- தலைவர் பிரபாகரன் தொடர் (12)
- தன்னம்பிக்கை (1)
- தாமரை (4)
- தியாகு (4)
- திருமாவளவன் (1)
- தினத்தந்தி (2)
- தினமணி (55)
- நகைச்சுவை (13)
- நக்கீரன் (2)
- படங்கள் (18)
- பாரதிராஜா (2)
- பிரபாகரன் (15)
- பெரியார் (9)
- பேச்சு (1)
- பேட்டி (4)
- பொதுவுடைமை (5)
- மனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)
- மூட நம்பிக்கை (8)
- மொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)
- ராஜபக்சே (1)
- விடுதலைப் புலிகள் (14)
- விஜய் (5)
- வீடியோ (14)
- வீடியோ படம் (85)
- வைரமுத்து (1)
- ஜி இமெயில் (2)
- ஜி மெயில் (2)
- ஜெகத் கஸ்பார் (1)
முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!
-
▼
2009
(874)
-
▼
May
(199)
-
▼
May 11
(9)
- ஓருவேளை உணவுக்காக...
- மே 10- அகோரத் தாக்குதலின் வீடியோ காட்சிகள்
- சோனியாவுக்கு கறுப்புக்கொடி:நெடுமாறன், பாரதிராஜா உள...
- பாரதிராஜா வீடியோ படம்: எப்படியடா இவனை தமிழன் என்பது
- நடிகர் மன்சூர் அலிக்கான்:லட்சம் தமிழர்களை கொன்ற இர...
- பெரியார்
- . தி.மு.க விஜயகாந்துடன் கள்ள உறவு
- கேள்வி கேளுங்கள்: இந்தியத் தலைவர்களின் E-Mail, Fax...
- பாரதிராஜா பேச்சு: இளைஞர்கள் புறப்பட தயார்
-
▼
May 11
(9)
-
▼
May
(199)