5வது கட்ட ஈழப்போர் நடக்குமா?யார் தலைமை ஏற்பார்?சீமான் பதில்
பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார்.
''ஐந்தாவது கட்ட ஈழப்போர் நடக்குமா?நடக்காதா?என்பதுதான் பலரும் வெளிப்படையாகவும், மனதுக்குள்ளும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
கண்டிப்பாக 5வது கட்ட ஈழப்போர் நடக்கும். இதுவரை யார் தலைமையேற்று நடத்தினாரோ அவர்தான்...அண்ணன் பிரபாகரன் தான் தலைமையேற்று நடத்துவார்.
தலைவர் தலைமையில் நம் போராளிகள் ஆயுதம் ஏந்துவார்கள். இது நிச்சயம்;இது சத்தியம்'' என்று பேசினார்.
அவர் மேலும், '''போராளி திலீபன் நினைவு தினமான இன்று நான் பிரான்ஸ்-ஜெர்மனி சென்று உரையாற்றவிருந்தேன். சில காரணங்களால் நான் அங்கே போக முடியவில்லை.
அதனால்தான் தமிழகத்திலேயே நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த முடிவெடுத்தேன். புரச்சியாளர்கள் பிறந்த மண்ணில்(பட்டுக்கோட்டை) புரட்சியாளரை பற்றி பேச வந்தேன்.
இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி திலீபன் உண்ணாவிரதம் இருந்தார். தொடர் உண்ணாவிரதத்தால் திலிபன் உடல் மிகவும் மோசமாவதை உணர்ந்தவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடச்சொல்லி கேட்டார்கள்.
திலீபன் கேட்கவில்லை. தலைவர் பிரபாகரன் வந்தால் திலீபன் கேட்பார் என்று முடிவெடுத்தார்கள். தலைவன் சொன்னால் கேட்டு ஆகவேண்டுமே என்று நினைத்த திலீபன் தலைவரை அழைத்து வராதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால் தலைவர் வந்துவிட்டார். தலைவர் வந்ததுமே 'எனக்கு ஒரு சத்தியம் செய்து தரவேண்டும் நீங்கள். அதாவது உண்ணாவிரதத்தை கைவிடச்சொல்லக்கூடாது என்பதுதான் அந்த சத்தியம்'' என்று கேட்டிருக்கிறார் திலீபன்.
உண்ணாவிரதத்திலேயே திலீபன் உயிர் நீத்த பிறகு, என் அண்ணன் பிரபாகரன் சொல்கிறார்...பசி வந்தால் பத்தும் மறந்துபோகும் என்று. ஆனால் திலீபனுக்கு அது பொருத்தமல்ல. போராட்டம், போராளி என்ற எண்ணம் மறந்தே போகவில்லை என்று சொல்கிறார்.
இத்தனை ஆழமான போராட்டத்திற்கு முடிவு அமையும்''என்று பேசினார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17414ஆயுத விசயத்தில் நாங்கள் தமிழ் கடவுளை பின்பற்றுகிறோம்:சீமான்
பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார். ''விதை விதைத்தவன் தான் அறுவடை செய்ய வேண்டும். எங்கே அறுவடை செய்ய வேண்டும் என்பதை இந்திய அரசு முடிவு செய்யவேண்டும்.
விதைத்ததை அப்படியே விட்டுவிட்டு பொய்விட முடியுமா.சிங்களனை விரட்டி சுதந்திரம் பெறுவோம்;அதை நான் தன பெருவோம். அதை நாம்தான் பெருவோம்.
நாம் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று கேட்கிறார்கள். தமிழ் கடவுள் அத்துனையும் ஆயுதம் ஏந்தி இருக்கிறது. அந்த வழியில் வந்த நாங்கள் எப்படி ஆயுதம் ஏந்தாமல் இருக்க முடியும்''என்று பேசினார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17413பிரபாகரனிடம் இந்தியாவை கொடுத்திருந்தால் அப்துல்கலாம் கனவு நிறைவேறியிருக்கும்:சீமான்
பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார்.
''புலிகளை அழித்தால்தான் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தார்கள். அதற்கான வழிகளை எல்லாம் செய்தார்கள். அழித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தானும்,சீனாவும் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இது ஏன் இந்தியாவுக்கு புரியமாட்டேங்குது.
அண்ணன் பிரபாகரன் எப்போதுமே இந்தியாவை தன் நட்பு நாடாகத்தான் பார்த்துவந்தார். அதனால்தான் இந்தியாவை பாதுகாத்து வந்தார். ஆனால் சிங்களவன் இந்தியாவுடன் நெருங்கியே இருந்தான்.
இந்தியா-சீனா எல்லைப்பிரச்சனை வந்தபோது சீனாவுக்குத்தான் ஆதரவாக இருந்தான் சிங்களவன். இப்போதும் ஆதரவாகத்தான் இருக்கிறான். இந்தியா உள்நோக்கத்துடனேயே உதவுகிறது என்று சரத்பொன்சேகா சொல்லியிருக்கிறார். ஈழம் கிடைத்திருந்தால் எப்போதும் நட்பாகவே இந்தியா இருந்திருக்கும்.
2020ல் இந்தியா வல்லராக ஆகும் என்று அப்துல்கலாம் கனவுகண்டார். அந்த கனவு நிறைவேறுவது மாதிரி தெரியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் உண்மை.
பிரபாகரனிடம் இந்தியாவை ஒப்படைத்திருந்தால் 2020ல் அல்ல; இன்னும் 5 ஆண்டுகளிலேயே உலகின் மிக பெரும் தேசமாக இந்தியாவை மாற்றியிருப்பார். அப்துல்கலாம் கனவு வெகு சீக்கிரமே நனவாகியிருக்கும்''என்று பேசினார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17410ஈழத்து பூமியிலும் பூக்கள் பூக்கின்றன:சீமான்
பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார். ''ஈழத்து பூமியிலும் பூக்கள் பூக்கின்றன. ஆனால் அந்த பூக்களை பெண்கள் சூடுவதில்லை. கடவுளூக்கும் பூஜை செய்வதில்லை. பிறகு அந்த என்னதான் செய்கிறார்கள்.
என் தேச விடுதலைக்காக களமாடி வீரமரணம் எய்திய போராளிகளின் கல்லறைகளுக்குத்தான், சவக்குழிகளுக்குத்தான் போடுகிறார்கள்.
(பொதுக்கூட்டத்திற்கு முன்பு மழை பெய்தது)இங்கே மழை பெய்ததும் இந்த மழைக்கே நாமெல்லாம் அங்கெங்கே ஓடி பதுங்கிக்கொண்டோம். மழை விட்டதும்தான் பொதுக்கூட்டத்திற்கு வந்தோம்.
ஆனால் அங்கே நம் ரத்த சொந்தங்கள் முள் வேலி முகாம்களூக்குள் கிடந்த வெயில்,மழையில் வேதனையுற்றுக்கிடக்கிறார்கள்.
வீரம் செறிந்தவர்கள்தான் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்று அண்ணன் பிரபாகரன் சொன்னார். அந்த வீரம் செறிந்தவர்களே வாருங்கள். மொழி காப்போம்;இனம் காப்போம்''என்று பேசினார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17408
பிரதமரையே அடித்த சிங்களன் தமிழர்களை எப்படி அடித்திருப்பான்:சீமான் பேச்சு
பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் இன்று இரவு (26.9.2009) 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சீமான் பேசும் போது, ''போராளி திலீபன் உரையில் இருந்து ஒன்றை மட்டும் சொல்கிறேன். ''இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு வந்தபோது ஜெயமணி என்ற சிங்கள ராணுவ வீரன் ராணுவ அணிவகுப்பு நடந்தபோது துப்பாக்கியால் ராஜீவின் மண்டையில் அடித்தார்.
ஒரு நாட்டின் பிரதமரையே அப்படி அடித்த சிங்களவன் தமிழர்களை எப்படி அடித்திருப்பான் என்று நினைத்துப்பாருங்கள்''என்றூ பேசியிருகிறார்.
இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் இந்திய அரசால்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17394
முள்வேலியை அறுத்தெறிவோம்;சிங்களர்களை சிறைப்படுத்துவோம்:நாம் தமிழர் இயக்க பேரணியில் கோஷம்
பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் இன்று இரவு(26.9.2009) 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இதையடுத்து மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
''முள்வேலியை அறுத்தெறிவோம்;சிங்களர்களை சிறைப்படுத்துவோம்''என்று பேரணியினர் கோஷமிட்டனர்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17381
பிரபாகரன் -சீமான் இணைந்த படங்கள்:பட்டுக்கோட்டை பரபரப்பு
பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் இன்று இரவு(26.09.2009) 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக பட்டுக்கோட்டை முழுவதும் பிரபாகரனும்-சீமானும் இணைந்திருப்பது போன்ற படங்கள், கட்-அவுட்கள் வைக்கப்பட்டு அந்நகரையே பரபரப்பாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17376
ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி தமிழக தமிழர்கள் மீதும் அக்கறை இல்லாதவர் கருணாநிதி: பொன்னையன்
ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி தமிழக தமிழர்கள் மீதும் அக்கறை இல்லாதவர் தமிழக முதல்வர் கருணாநிதி என்று அதிமுக அரசியல் ஆலோசகர் பொன்னையன் குற்றம் சாட்டியுள்ளார்.
சொந்த நாட்டில் அகதிகளாக உள்ள 3 லட்சம் இலங்கை தமிழர்களை மீண்டும் குடியமர்த்த வலியுறுத் தியும், நதிநீர் பிரச்சினையில் பறிபோகும் தமிழக உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறியதை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு வடசென்னை அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அதிமுக அரசியல் ஆலோசகர் பொன்னையன்,
இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கிறார்கள். கருணாநிதியை பொறுத்தவரை ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி தமிழக தமிழர்கள் மீதும் அக்கறை இல்லாதவர்.
நதி நீர் பிரச்சனைகளில் தமிழகத் திற்கு துரோகம் செய்தவர் கருணாநிதி. அதைப்போலவே ஈழத்தமிழர்கள் பிரச்சனையிலும் அவர் துரோகம் செய்து வருகிறார். அவரை மட்டுமன்றி அவரது குடும் பத்தையே தமிழர்கள் வெறுக்கிறார்கள்.
அகதி முகாம்களில் உள்ள 3 லட்சம் தமிழர்களையும், அவர்களுடைய சொந்த ஊர்களில் குடியமர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் கருணாநிதி மீது தமிழர்கள் கொதிப்புடன் உள்ளனர்.
இதில் சோனியாவும், கருணாநிதியும் தலையிட்டு இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத்தரா விட்டால் அவர்களை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.