தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Thursday, October 22, 2009

♥ சாராய மன்னர்கள்...! ♥

தாய்மை ஒரு தடையல்ல...

ஜி. மீனாட்சி
http://gloryofwomen.files.wordpress.com/2008/11/woman-in-action.jpg

"பிள்ளை பெறாத பெண்களை மலடி என்று ஏசும் இந்தச் சமுதாயம்தான், குழந்தைகள் பெற்ற பெண்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று ஒதுக்கியும் வைக்கிறது. சற்றே முரண்பாடாகத் தோன்றினாலும், இதுதான் நிஜம்.
கேரள மாநிலத்தில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற பெண்களில் சிலர் கர்ப்பமாக இருந்தனர். இதைக் காரணம் காட்டி இப்பெண்களுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கப்படவில்லை.
"

பிள்ளை பெறாத பெண்களை மலடி என்று ஏசும் இந்தச் சமுதாயம்தான், குழந்தைகள் பெற்ற பெண்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று ஒதுக்கியும் வைக்கிறது. சற்றே முரண்பாடாகத் தோன்றினாலும், இதுதான் நிஜம்.
கேரள மாநிலத்தில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற பெண்களில் சிலர் கர்ப்பமாக இருந்தனர். இதைக் காரணம் காட்டி இப்பெண்களுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கப்படவில்லை.
இந்த விஷயம் மாநில அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. எஸ்பிஐயின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளத்தில் மகளிர் சங்கங்கள் போராட்டம் நடத்தின.
இந்த உத்தரவை பிரதமர் தலையிட்டு நீக்க உத்தரவிட வேண்டும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்களின் நியமனத்துக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடையை எஸ்பிஐ தற்போது நீக்கிக் கொண்டிருக்கிறது.
30 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை, இப்போது விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டின் பிரதான வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் வங்கியில் இத்தனை ஆண்டுகளாக இதுபோன்றதொரு நடைமுறை இருந்து வந்திருப்பது வேதனைக்குரியது.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தாய்மை, கர்ப்ப காலம் என்பது மிகவும் குறுகிய ஒரு காலகட்டமே. மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இப்போதெல்லாம் யாரும் பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை.
எல்லாவிதமான உடல் அசெüகரியங்களுக்கும் உடனுக்குடன் நிவாரணம் பெறத்தக்க வகையில் வீதிகள்தோறும் மருத்துவ வசதிகள் பெருகிவிட்டன.
நவீன மருத்துவ வசதிகளால் தாய்மையை ஒரு சுமையாகவோ, பாரமாகவோ இன்றைய பெண்கள் கருதுவதில்லை.
ஒரு சில அசாதாரண நிலைகளில் கர்ப்ப காலம் முழுவதும் படுக்கையிலேயே ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பெண்களுக்கு வேண்டுமானால் வாய்ப்புகள் மறுக்கப்படலாம். அப்படிப்பட்ட பெண்கள், வெளியிடங்களில் வேலைக்காக விண்ணப்பிக்க மாட்டார்கள் என்பதும் நடைமுறையில் நாம் காணும் உண்மை.
பொதுவாக, தாய்மைப் பேறு, கர்ப்பம் என்பதற்காக மட்டுமே ஒரு பெண்ணின் திறமைகளுக்கு அங்கீகாரம் அளிக்க மறுப்பது எந்தவிதத்திலும் நியாயமல்ல.
சாதனைக்குத் தாய்மை எப்போதும் ஒரு தடையல்ல என்பதை நிஜ வாழ்க்கையில் நிரூபித்து வரும் பெண்கள் ஏராளம். குழந்தைகள் பெற்ற பின்பும் புதிய உத்வேகத்துடன் களம் இறங்கி சாதனை படைத்து வரும் மகளிர் எண்ணற்றோர்.
ஒரு குழந்தை பெற்ற பின்புதான் 1980-ல் விம்பிள்டன் பட்டம் வென்றார் ஈவான் கூலகாங். அவரைத் தொடர்ந்து தற்போது 2009-ம் ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான பட்டத்தை வென்றிருக்கும் பெல்ஜியத்தின் கிம் க்லிஜ்ஸ்டெர்ஸ், இரண்டு வயதுக் குழந்தைக்குத் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறந்து 18 மாதங்களுக்குப் பிறகு முழு உத்வேகத்துடன் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது "கிராண்ட் ஸ்லாம்' பட்டத்தை தட்டி வந்திருக்கிறார் கிம்.
வெளிநாட்டுப் பெண்களை விடுங்கள். நம் நாட்டின் மேரி காம், 2008-ம் ஆண்டு உலகக் குத்துச்சண்டைப் போட்டிகளில் தங்கம் வென்று நான்காவது தடவையாக உலகச் சாம்பியன் பட்டம் வென்றார்.
இவரது சாதனைக்கு இந்திய அரசு கொடுத்த பரிசுதான், 2009-ம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.
அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருதுகளுக்குச் சொந்தக்காரரான மணிப்பூரின் மேரி காம், இரண்டு குழந்தைகளுக்குத் தாயானபிறகுதான் மேற்கூறிய சாதனையைப் படைத்தார்.
விளையாட்டு வீராங்கனைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், சாதனை படைத்த பெண்களில் பெரும்பாலானோர், திருமணத்துக்குப் பிறகோ அல்லது குழந்தை பெற்ற பிறகோதான் வெற்றிச் சிகரத்தை தொட்டிருக்கிறார்கள் என்பது புரியும்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப், கர்ப்பிணியாக இருந்தபோதுதான் புலனாய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதி உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினார். இதுபற்றி அவரே தன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
1990 அக்டோபரில் பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரி காலமானார்.
அந்த ஆண்டு டிசம்பர் சீசன். சென்னை மியூசிக் அகாதெமியில் கூட்டம் நிறைந்து வழிந்தது. 8 மாதக் கர்ப்பிணியான இன்றைய பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் அப்போது நிகழ்த்திய அந்த இசைக் கச்சேரியைக் கேட்டவர்கள், சிலிர்த்துப் போனார்கள்.
எனவே, இதுபோன்ற பழமையான கட்டுப்பாடுகளை எல்லா நிறுவனங்களும் உடனடியாகத் தளர்த்திக் கொள்ள முன்வருவது அவசியம்.

http://4.bp.blogspot.com/_G8SxKAgBgfQ/SdeLxYChu6I/AAAAAAAAAig/US7Le6YK25Y/s400/nice.bmp http://www.vikatan.com/vc/2009/wmalar/ramalakshmiarticle0503_B.jpg

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=142819&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2...


மலட்டு கத்தரிக்காயும் விசுவாச மந்திரிகளும்

http://2.bp.blogspot.com/_c0LNOGMevAg/SciWFm_5qQI/AAAAAAAAAKM/XYAkFGvlhmg/s320/dsh-brinjal.jpg
"உடன் இருந்த ஜால்ரா அமைச்சர் “மன்னா இருக்கிற காய்களிலேயே மோச மானது இந்த கத்தரிக்காய். கடவுளுக்கு இந்த காயை பிடிக்காததால்தான் அதன் தலையில் ஆணி அடித்து அனுப்பியிருக்கி றார்” என்று கத்தரிக்காயின் காம்பை காட்டினாராம்."

பி.டி. கத்தரிக்காய் எனப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை இந்தி யாவுக்குள் அனுமதிப்பது என்று மன்மோ கன் சிங் அரசு முடிவு செய்தது. இதற்கு கடு மையான எதிர்ப்பு எழுந்த நிலையில், சற்று பின்வாங்கி, ஆராய குழு அமைப்பதாக அறிவித்துள்ளது. ஆராய்ச்சியின் முடிவு அமெரிக்காவின் மலட்டுக்கத்தரிக்காய்க்கு ஆதரவாகவே இருக்கும் என்பது தெளிவு.

விடுதலைப்போராட்ட காலத்தில், நமது நாட்டில் விளையும் வெள்ளரிக்காய்க்கு வெள்ளைக்காரன் விலை வைப்பதா? என்ற நாட்டுப்புற மக்களின் கோபம் “ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா, காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காகிதம் போட்டானாம் வெள்ளக் காரன்” என்ற பாடலாக வெடித்தது.

ஆனால் இப்போது வெள்ளைக்கார னின் கத்தரி செடியையே கைபிடித்து அழைத்துவந்து நம்மூர் தோட்டத்தில் நட்டு வைக்க ஏற்பாடு செய்கிறது உள்ளூர் அரசு. இந்த மலட்டுக்கத்தரிக்காய் நமது நாட்டில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஒட்டுமொத்த விதை கட்டுப்பாடும் பன்னாட்டு கொள்ளை நிறுவனங்களான மான்சாண்டோ மற்றும் மஹிகோ நிறுவனங்களிடம் சென்றுவிடும். ஒருமுறை வாங்கி விதைத்த கத்தரிக்காயி லிருந்து மறுமகசூலுக்கு விதை எடுக்க முடியாது.

இது கத்தரிக்காயோடு நிற்கப்போவ தில்லை. அரிசி, சோளம், வெண்டைக்காய் உட்பட 60 விதமான மலட்டு விதைகள் இந்தியாவுக்குள் குதிக்க வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன.

இந்த விசயத்தில் மட்டுமல்ல, அனைத்து விசயத்திலும் அமெரிக்கா சொல்வதற்கு அப்படியே தலையாட்டும் கொள்கையையே மன்மோகன் சிங் அரசு பின்பற்றி வருகிறது. பருவநிலை மாற்றம் தொடர்பாக இதுவரை பின்பற்றி வந்த நிலையை மாற்றிக் கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட பணக் கார நாடுகளுக்கு பல்லக்கு தூக்கி பல்லி ளித்து நடந்துகொள்ளலாம் என்று பிரதம ருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். இந்த கடிதத்தை கண்டு பிரதமர் மன்மோகன் சிங் அதிர்ச்சியடைந்திருப்பார். அமெரிக்க விசு வாசத்தில் நம்முடைய அமைச்சர்கள் நம் மையே விஞ்சிவிடுவார்களோ என்று நினை திருப்பார்.

இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த தயார் என்று அறிவிக்கிறது அமெரிக்கா. அந்நாட்டு ஆயுத வியாபாரிகளோ தில்லி யில் முகாமிட்டு ஓட்டை உடைசல் ஆயுதங் களையெல்லாம் நமது தலையில் கட்ட கடைவிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா சொன்னபடி இந்தியா வின் அணு உலைகளை பாதுகாப்புத்துறை சார்ந்தது, மின்துறை உற்பத்தி சார்ந்தது என்று தரம் பிரித்து சோதனையிட அந்நாட் டுக்கு வெற்றிலை பாக்கு வைக்கிறது மன்மோகன் சிங் அரசு.

இதையெல்லாம் பார்க்கும்போது கத்த ரிக்காய் சம்பந்தப்பட்ட ஒரு கதைதான் ஞாப கத்துக்கு வருகிறது. ஒரு நாட்டின் மன்னர், அடுத்த நாடு ஒன்றுக்கு விருந்துக்கு போனாராம். அந்நாட்டு விருந்தில் கத்தரிக் காய் சாம்பார் இடம்பெற்றதாம். இதுவரை கத்தரிக்காய் பற்றி கேள்விப்படாத மன்னர் உடன் வந்த அமைச்சரிடம் இது என்ன காய்? சுவையாக இருக்கிறதே! என்றாராம். அதற்கு ஜால்ரா அமைச்சர் “இதுதான் மன்னா கத்தரிக்காய். கடவுளால் ஆசீர் வதிக்கப் பட்ட காய் இது. அதனால்தான் கடவுள் அதன் தலையில் கிரீடம் வைத்திருக்கிறார்” என்று கத்தரிக்காய் காம்பைக் காட்டினாராம்.

மகிழ்ந்த மன்னர், இனி நமது அரண் மனையிலும் கத்தரிக்காய் சமையல் கன ஜோராக நடக்கட்டும் என்று கூறினாராம். மன்னர் கூறிவிட்டாரே என்று காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் கத்தரிக்காய் சாம்பார், கூட்டு, பொரியல் என்று அனைத்தும் கத்தரிக்காய் மயம் ஆகிவிட்டதாம். தொடர்ந்து ஒருமாதம் இதே நிலை நீடிக்க, மன்னருக்கு உடல் எல்லாம் அரிப்பு ஏற்பட்டுவிட்டதாம். கோபம் அடைந்த மன்னர், “இது என்ன எழவு காய், இதையே போட்டு சாகடிக்கிறீர்களே” என் றாராம். உடன் இருந்த ஜால்ரா அமைச்சர் “மன்னா இருக்கிற காய்களிலேயே மோச மானது இந்த கத்தரிக்காய். கடவுளுக்கு இந்த காயை பிடிக்காததால்தான் அதன் தலையில் ஆணி அடித்து அனுப்பியிருக்கி றார்” என்று கத்தரிக்காயின் காம்பை காட்டினாராம்.

பக்கத்தில் இருந்த தளபதி, மந்திரியிடம் ஏன் இப்படி கத்தரிக்காய் பற்றி மாறி மாறி பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த மதியூகி மந்திரி, நான் என்ன கத்தரிக்காயிடமா வேலை பார்க்கிறேன். மன்னரிடம் தானே வேலை பார்க்கிறேன் என்றாராம்.

இப்போது அமெரிக்க மன்னர் சொல்வ தால் நம்மூர் மந்திரிகள் பி.டி. கத்தரிக்காய் பிரமாதம் என்கிறார்கள். இதனால் அரிப்பு வரப்போவது அவர்களுக்கல்ல; இந்தியா வின் பாரம்பரியமான வேளாண் தொழிலுக்குத்தான்.

மதுக்கூர் இராமலிங்கம்
http://4.bp.blogspot.com/_HtnC2rwwwhM/SoawA-8MbHI/AAAAAAAAB20/J6_nWDDlHUM/s400/water1.jpg
http://theekkathir.in/index.asp

அடிவயிற்றை முறுக்கவில்லையா?


பழ . கருப்பையா

http://www.dinamani.com/Images/article/2009/8/9/8ka.jpg

"திருமாவளவன், ராஜபட்சவுக்குச் சால்வை போர்த்தித் தழுவியிருக்கிறாரே! தழுவும்போது கம்பளிப்பூச்சி ஊர்வது போல் உணரவில்லையா?"ஒரு தமிழ்ப் பெண் தன் தோளைத் தழுவச் சம்மதிக்காமல் தனித்தே வாழும் திருமாவளவன், ராஜபட்சவுக்குச் சால்வை போர்த்தித் தழுவியிருக்கிறாரே! தழுவும்போது கம்பளிப்பூச்சி ஊர்வது போல் உணரவில்லையா?
கட்சிகளெல்லாம் கிடக்கட்டும்! எழுபதாயிரம் ஈழத்தமிழர்கள் சாகவும், ஐந்து லட்சம் தமிழர்கள் புலம் பெயரவும், மூன்று லட்சம் தமிழர்கள் சிங்கள அரசின் முள்வேலிகளில் சிறைவைக்கப்படவும், இரண்டு லட்சம் தமிழர்கள் அகதிகளாய்த் தமிழ்நாட்டில் கதி கெட்டு அலையவும் காரணமான ராஜபட்ச வைத்த விருந்தை உண்ணவும், அவரோடு மனங்கொள்ளாமல் சிரித்துப்பேசி மகிழவும் டி.ஆர். பாலுவாலும், கனிமொழியாலும், திருமாவளவனாலும் எப்படி முடிந்தது?
""ஏன்டி... உன் புருசனைக் கொன்னவனோட உனக்கென்னடி சிரிப்பு வேண்டிக்கிடக்கு'' என்று தாய் மகளிடம் சினந்து கேட்டாளாம். ""போனவன் போயிட்டான்; நான் இருக்கேனே'' என்று மகள் புன்முறுவலோடு விடை இறுத்தாளாம்!
""கடைசி நேரத்தில் நீங்களும் பிரபாகரனுடன் இருந்திருந்தால் உங்கள் கதையையும் முடித்திருப்பேன்'' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ்நாட்டில் இருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனிடம் நேருக்குநேர் நின்று சொல்லியிருக்கிறார்!
நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் ஏதோ வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி போல ராஜபட்சவுக்கு அவ்வளவு சாதாரணமாகத் தெரிகிறது. பஜ்ஜி மாவுக்குத் தனித்து எந்த மதிப்புமில்லை! அது வெங்காயத்தோடோ, வாழைக்காயோடோ சேரும்போதுதான் அதற்குப் பெயரும் கிடைக்கிறது; வடிவமும் கிடைக்கிறது!
இந்தப் பஜ்ஜி மாவுக்கெல்லாம் வடிவம் கொடுப்பவர் கருணாநிதி என்பது ராஜபட்சவின் எண்ணமாக இருக்கலாம்! அப்படிப்பட்ட கருணாநிதியின் உயிர்நாடியோ, சென்னைக் கோட்டையில் இருக்கிறது. சென்னைக் கோட்டையில் கருணாநிதி நீடிப்பதோ, சோனியாவின் தயவில் இருக்கிறது. சோனியாவோ சிங்களவர்களின் உற்ற நண்பர். ஆகவே, சோனியாவின் தோழமை இருக்கும்வரை இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கத் தேவையில்லை என்பது ராஜபட்சவின் எண்ணம்!
ஆனாலும் விடுதலைப் புலிகளைப் பார்த்து விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அமைப்பைத் தோற்றுவித்துக் கொண்ட திருமாவளவன், ராஜபட்ச "உன் கதையையும் முடித்திருப்பேன்' என்று சொன்னதைக் கேட்டுத் திகைத்துப்போய்த் திரும்பி வந்திருக்கலாமா? திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாமா?
""ராஜபட்ச! உன் கதையை முடிப்பதற்குப் பதிலாகப் புத்திகெட்டுப்போய் இந்தியா ஈழத்தின் கதையை முடித்துவிட்ட காரணத்தால், உன்னால் இவ்வளவு எக்காளமாகப் பேச முடிகிறது. எந்த விடுதலை இயக்கத்துக்கும் பின்னடைவுகள் வருவது இயற்கை; ஆனால், ஒரு விடுதலை இயக்கம் என்றாவது ஒரு நாள் தன்னுடைய இலக்கை அடையாமல் முடிந்ததாக வரலாறு இல்லை''-என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்திருந்தால் திருமாவளவன் உலகத் தமிழினத்துக்கே தலைவராகி இருப்பாரே!
ராஜபட்சவின் நாட்டுக்கே போயும் ராஜபட்சவை நேருக்குநேர் நின்று உலுக்குகிற வாய்ப்பைத் தவற விட்டுவிட்டாரே! அதுவும் ராஜபட்ச, "ஈழத்துக்கு நீ வந்திருந்தால் உன்னையும் சுட்டிருப்பேன்' என்று சொல்லி அசிங்கப்படுத்திய பிறகும், அங்கு வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டு, இங்கே நம்முடைய மூலக்கடை முச்சந்தியில் நின்று கொண்டு, "இரத்தம் கொதிக்கிறது' என்று திருமாவளவன் முழங்குவதை, இனி யார் நம்புவார்கள்?
அப்படி நேருக்குநேர் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பார் ராஜபட்ச? கொழும்புச் சிறைக் கொட்டடியில் அடைத்திருப்பாரா? அடைத்திருந்தால் திருமாவளவனை விடுவிப்பது ஆறு கோடித் தமிழர்களின் கடமையாகி இருந்திருக்குமே!
இப்போது முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு, தலையைக் கவிழ்ந்து கொண்டு, ராஜபட்ச அசிங்கப்படுத்தியதற்கு என்னென்னவோ அமைவுகளைத் திருமாவளவன் சொன்னாலும், யார் கேட்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்?
போன இடத்தில் அப்படியெல்லாம் பேசினால், "நன்றாக இருக்குமா?' என்று திருமாவளவனாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! தன்னுடைய நாட்டுக்கு வந்த விருந்தாளியிடம் அப்படிப் பேசியிருக்கலாமா என்று ராஜபட்ச கவலைப்படவில்லையே!
இகழ்பவனின் பின்னால் போய்ப் பெறப் போவதென்ன என்று நம்முடைய அப்பன் வள்ளுவன் கேட்பான்! ""என்மற்று இகழ்வார் பின்சென்று நிலை'' (966).
முன்பொருமுறை தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு உச்சத்திலிருந்தபோது மாநிலங்களின் அமைச்சர்களெல்லாம் பங்கேற்ற கூட்டத்தில், செல்வாக்குமிக்க மத்திய அமைச்சர் மொரார்ஜி தேசாய், "இந்தி இல்லாமல் இந்தியா இல்லை' என்று பேச, "இந்தி இருக்குமானால், இந்தியாவே இருக்காது' என்று அன்றைய தமிழக அமைச்சர் செ. மாதவன் பேசிவிட்டார் என்பதற்காக, ஊர்ஊராக நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் செ. மாதவனை உட்காரவைத்து ஊர்வலம் விட்டு, ஐந்து ஆண்டு அரசியலை இதைச் சொல்லியே ஓட்டினார்களே தி.மு.க.வினர்!
அன்று மாமன்னன் அசோகன் இலங்கைக்குத் தன் மகள் சங்கமித்திரையை அனுப்பிப் பௌத்தத்தை வளர்த்ததுபோல, இன்று தன் மகள் கனிமொழியை அனுப்பிச் சிங்களவர்களோடு நேசத்தை வளர்க்கும் கருணாநிதி, ராஜபட்சவை எதிர்த்துத் திருமாவளவன் பேசுவதை ரசிக்க மாட்டார் என்றாலும், கருணாநிதி ரசிக்காததை எல்லாம் செய்யாமலிருப்பதற்குத் திருமாவளவன் என்ன தி.மு.க.வின் ஆயிரம் விளக்குப் பகுதிச் செயலாளரா?

தமிழுக்கும், தமிழனுக்கும் கேடு என்றால் சீறிவரும் சிறுத்தையாக இருந்தவரை, நாடாளுமன்றப் பதவியைக் கொடுத்து அடங்கிப் போகும் நிலைக்கு ஆளாக்கிவிட்டாரே கருணாநிதி!
முள்வேலி முகாம்களைப் பார்வையிட, அவற்றின் உண்மை நிலையைக் கண்டறிய மனித உரிமைப் பாதுகாப்புக் கழகத்தினரையும், செய்தியாளர்களையும் அனுமதிக்காத ராஜபட்ச, காங்கிரûஸயும் தி.மு.க.வையும் மட்டும் அழைத்தாராம்! ஈழத்தைச் சுடுகாடாக்கிய ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி தங்களின் சிதைந்துபோன முகங்களைச் சீர்படுத்திக் கொள்ளும் முயற்சிதானே இது? பொத்துக்கிழிந்துபோன பெயரை இழுத்துவைத்துத் தைத்துக் கொள்ளும் முயற்சி அல்லாமல் வேறென்ன?
முள்வேலி முகாம்களில் ஈழத் தமிழர்களை ஆடுமாடுகளைப் போல் அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்துவதை ஓர் அமெரிக்கப் பெண்மணி சத்தம்போட்டு உலகுக்குச் சொல்லிக் கொண்டிருப்பதைத் தமிழ்நாட்டுக்கும் வந்து சொல்ல விரும்பியபோது, அவருக்கு "விசா' வழங்கவிடாமல் தடுத்து நிறுத்தியவர்தானே இந்தக் கருணாநிதி! அந்தப் பெண்மணியின் வருகை தன்னுடைய சாயத்தை வெளுக்கச் செய்துவிடும் என்னும் அச்சம்தானே காரணம்!
இந்தப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் "உல்லாசப் பயணத்தில்' இங்கிருந்தே இலங்கை அதிகாரிகள் உடன்வந்தார்களாம். கொழும்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதாம்; ஹெலிகாப்டர்களில் பறந்தார்களாம்; ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கினார்களாம்; முப்பொழுதும் முப்பழங்களோடும் விருந்துகளாம்; வேதமே பாராட்டிய சோமபானங்களுக்கும் குறைவில்லையாம்! அரசியல் நெறியற்ற டக்ளஸ் தேவானந்தா கூட்டிவைத்த கூட்டத்தில் கலந்துரையாடினார்களாம்! இதற்குச் சிங்களவர்களோடேயே உரையாடியிருக்கலாமே!
ஈழத்துக்கான போர் சிங்களக்காடையர்களோடு மூன்றுமுறை நடந்தது; முப்பதாண்டுக் காலம் நடந்தது; அப்போதெல்லாம் இடையிடையே போர் நடக்கும்; சிங்களக்காடையர்கள் முண்டிப் பார்ப்பார்கள்; பின்பு பின்வாங்கி ஓடிப்போவார்கள்.
ஈழத்தில் வரிவசூல் நடந்தது; காவல் நிலையங்கள் இருந்தன; நீதிமன்றம் நடந்தது; பராமரிப்புப் பணிகளும், நிர்வாகப் பணிகளும் செவ்வனே நடந்தன. அந்தக் காலகட்டம் முழுவதும் அறிவிக்கப்படாத சுதந்திர நாடாகவே ஈழம் இயங்கியது!
நான்காம் ஈழப் போர் ஈழத்தைச் சுடுகாடாக்கியது. சிங்களக்காடையர்கள் ஒன்றும் ஓரிரவில் வீரர்களாய் மாறிவிடவில்லை. இந்தியப் பெருநாடு சிங்களவர்களை முன்னிறுத்தி அந்தப் போரை நடத்தி இந்தக் கொடுமையை அரங்கேற்றியது!
பாரதி சொன்னதுபோல எல்லாமே "பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்ப் போனதுவே!'
நேற்றுவரை சிங்களத்துக்கு நிகராகத் தமிழுக்கு ஆட்சிமொழி உரிமை வேண்டும்; அரசு வேலைகளில் உரிய பங்கு வேண்டும்; இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஈழத்துக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றெல்லாம் போராடியவர்கள், இன்று முள்வேலிச் சிறைகளில் இருந்துகொண்டு குடிக்கவும், குளிக்கவும் தண்ணீர் வேண்டும் என்று கண்ணீர்விடும் நிலைக்கு ஆளாகி விட்டார்களே! பிள்ளைக்குப் பாலில்லை; முதியோருக்கு மருந்தில்லை; கர்ப்பிணிப் பெண்கள் பிள்ளை பெற வசதியில்லை.
ஈழத்துக்கு முற்றாக விடுதலை கேட்டவர்கள் இன்று முள்வேலிச் சிறை முகாம்களிலிருந்து வீட்டுக்குப் போக மட்டும் விடுதலை கொடுத்தால் போதும் என்று கேட்கிறார்கள்; இந்த நிலைக்கு இவர்களை ஆளாக்கிய சோனியா காந்தி, கருணாநிதி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜபட்சவைச் சந்தித்து,""நாட்டுக்கு விடுதலை கேட்கவில்லையே; வீட்டுக்குப் போகத்தானே விடுதலை கேட்கிறார்கள்; கொடுத்துவிட்டுப் போங்களேன்'' என்று எடுத்துச் சொல்லப் போய் இருக்கிறார்கள்! தமிழனின் தலைவிதியைப் பார்த்தீர்களா?
இவர்கள் போனதன் விளைவாக 50,000 தமிழர்கள் முள்வேலி முகாம்களிலிருந்து மறுநாளே விடுவிக்கப்படுவார்கள் என்னும் அறிவிப்பு இலங்கையில் வெளியாகவில்லை; கோபாலபுரத்தில் வெளியாகிறது; ராஜபட்சவும் கருணாநிதியும் வேறுவேறல்லவே; யார் வெளியிட்டால் என்ன? ஆனால், வெளிவிடப்பட்டவர்கள் ஐம்பதாயிரம் பேரா? ஐயாயிரம் பேரா? அல்லது வெறும் அறிவிப்போடு முடிந்துவிட்டதா என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்? யார் இதை அந்த அரக்கர் நாட்டில் சரிபார்க்க முடியும்?
இப்படிக் கருணாநிதி அறிவித்த மறுநாளே சிங்காரச் சென்னையில் சுவரொட்டிகள் மின்னின. ""நான்கே நாளில் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கலைஞரை வணங்குகிறோம்.''
அண்ணா விடுதலை இயக்கமாகத் தோற்றுவித்த ஒரு கட்சியில் விடுதலை என்பதை எவ்வளவு கொச்சையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இதிலுள்ள அவலம்; அதையும் ரசிக்கிறார் கருணாநிதி என்பதுதான் அதைவிடப் பேரவலம்!
உலகத் தமிழ் மாநாடு நடத்த முற்பட்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி. ஈழப் பேரழிவுகளுக்குப் பிறகு உலகத் தமிழர்கள் இந்த மாநாட்டைக் கருணாநிதி நடத்துவதை ஏற்கவில்லை! சில மாதங்களுக்கு இந்த மாநாட்டைத் தள்ளிவைத்து அவர்களை அமைதிப்படுத்தலாம் என்னும் கருணாநிதியின் எந்த முயற்சியும் எடுபடவில்லை. இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயரை மாற்றி நடத்தப் போகிறார்கள். உலகத் தமிழர்களின் சினம் நியாயமானதுதானே!
உலகத் தமிழ் மாநாட்டை அண்ணா நடத்தினார்; எம்ஜிஆர் நடத்தினார்; ஜெயலலிதா நடத்தினார்; ஆனால், கருணாநிதியால் நடத்தவே முடியால் போய்விட்டதே!
தமிழைத் தாயாக உருவகிப்பது தமிழர்களின் வழக்கம். தாய் ஒருத்தி; பிள்ளைகள் இருவர்! இரண்டு பிள்ளைகளுக்கும் இரண்டு மார்பிலும் தமிழ்ப்பால் சுரந்தாள் அவள்! அவர்கள் இனத்தால், நிறத்தால், ரத்தத்தால், பழக்கவழக்கங்களால், பண்பாட்டால் அனைத்தாலும் ஒன்று; நிலத்தால் மட்டுமே வேறு, வேறு!
அண்மையில் அவளுடைய சிறிய பிள்ளைக்கு ஊறு நேர்ந்துவிட்டது; பொறுப்பாளா அவள்? அந்தப் பிள்ளைக்கு ஊறு விளைவித்த அரக்கன் அழிந்து, அந்தப் பிள்ளை தன்னுடைய மண்ணில் காலூன்றும் வரை உறக்கம் வருமா அவளுக்கு?
அந்தச் சிறிய பிள்ளையின் மண்ணைப்பிடுங்கிக் கொள்ள ஓர் அரக்கன் முயன்றான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த அரக்கனுக்குத் துணைபுரிய தில்லிவாசிகள் விரும்பியதையும் புரிந்துகொள்ள முடிகிறது! ஆனால், மூத்த பிள்ளையின் மண்ணிலிருந்தே சிலர் தில்லியின் விருப்பத்தின்பேரில் அரக்கனுக்கு உதவியாக இருந்ததைத்தான் தாயால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! கண்ணகி அழுததைப் போல் அரற்றி அழுகிறாள் தாய்! தன் இளைய மகனின் வம்சத்தில் எண்பதாயிரம் பேர் மண்ணைச் சிவப்பாக்கி விட்டு மாண்டுமடிந்ததை எண்ணி அழுகிறாள். இளைஞர்களெல்லாம் செத்து, இளம்பெண்களே விஞ்சி நிற்கும் கொடுமையை எண்ணி அழுகிறாள். அறத்தை "மடவோய்' என்று வாயாற வைகிறாள். நான் உயிர் பிழைத்திருப்பேனோ என்று அரற்றுகிறாள்!
மறனோடு திரியும் கோல் ""மன்மோகன்'' தவறு இழைப்ப
அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ?''
(-சிலம்பு, துன்பமாலை 40).
இளைய பிள்ளையின் வம்சத்தை அழிக்க மூத்தபிள்ளையின் வழியினரில் சிலரே மாற்றானுக்கு உதவிவிட்டு, தன்னுடைய வெக்கை தணியத் தனக்கே விழா எடுக்க நினைக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்களின் விழாவினைப் புறந்தள்ளி விட்டாள் தாய்! உலகத் தமிழ் மாநாட்டை அவள் ஏற்கவில்லை! தாயல்லளோ அவள்!
அது மட்டுமன்று; தமிழ் மாநாட்டில் அகதிகளாய் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் காஞ்சிபுரத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார் கருணாநிதி!
சென்ற மத்திய ஆட்சிக் காலகட்டத்தில் சோனியாவோடு சேர்ந்துகொண்டு ஈழத்தைச் சுடுகாடாக்கியதை இது போன்ற தீர்மானங்களால் ஈடுகட்டிவிட முடியும் என்று கருதுகிறார் கருணாநிதி!
""ஈழத் தமிழர்களுக்கு எந்தச் சலுகைகள், உரிமைகள் அளித்தாலும் எனக்கு உடன்பாடே! ஆனால், இங்கே ஈழத் தமிழர்கள் மட்டும் அகதிகளாய் இல்லை. திபெத்தியர்கள், பர்மியர்கள், வங்கதேசத்தினர் என்று ஏராளமானோர் அகதிகளாய் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்களை மட்டும் மத்திய அரசு தனித்துப் பிரித்துப் பார்க்குமாறு கருணாநிதியால் செய்ய முடியுமா?
ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை என்றால் அவர்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்புப் போன்ற எல்லாம் உண்டா? அப்போது தானே அது முற்றான குடியுரிமையாய் இருக்க முடியும்!'' என்றெல்லாம் அடுக்கி அடுக்கி எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கேட்டாரே! ஒன்றுக்காவது விடை சொன்னாரா முதலமைச்சர் கருணாநிதி?
கருணாநிதி தான் அங்கம் வகிக்கும் மத்திய அரசை ஏற்கும்படி செய்ய வேண்டும்; அல்லது அரசை விட்டு வெளியே வந்து அதற்காகப் போராட வேண்டும்! அப்படியெல்லாம் இல்லாமல் ஏதோ ஒரு பேச்சுக்குப் போட்டு வைப்போம் என்று, தான் நம்பாததையே தீர்மானமாக்குவது முழு மோசடி இல்லையா?
ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசிலிருந்து என்ன உரிமைகள் பெற்றுக் கொடுத்தாலும் அனைவருக்கும் இசைவே!
கருணாநிதியும், சோனியாவும் அந்த இனத்துக்குச் செய்த கொடுமைகளுக்கு ஈடுகட்டவும், பாவங்களுக்குக் கழுவாய் தேடவும், எந்தச் சலுகை வேண்டுமானாலும் அளிக்கட்டும்; அளிக்க வேண்டும்! வெறும் 500 கோடி ரூபாயை அளித்துக் கைகழுவி விடும் ஏமாற்று வேலை வேண்டாம்!
ஆனால் அவர்கள் பிறப்பால் ஈழத் தமிழர்கள்; ஈழம் அவர்களின் தாயகம்! அங்கே அவர்களுக்கு வீடு வாசல், நிலம் கரை அனைத்தும் உண்டு. அவர்களுக்குச் சொத்துகளும் அங்கேதான்; சொந்தங்களும் அங்கேதான்!
ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி அரசியலில் ஆக்கம் இழந்த பிறகு.... அது நடக்காதா என்ன? முன்பு தெருவிலிருந்தவர்கள் இப்போது திருவை அடைந்திருக்கிறார்கள்; மீண்டும் திருவை இழந்து தெருவுக்குப் போக எவ்வளவு நேரமாகும்?
அப்போது தாங்கள் விரும்பும்வண்ணம் தங்கள் தாயகத்தை ஈழத் தமிழர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்!
தமிழர்களுக்கு இரண்டு தாயகங்கள் உண்டு. ஒன்று தமிழ்நாடு; இன்னொன்று ஈழம்!
போர்த் தோல்வி காரணமாகச் சோர்வுற்றிருக்கும் தமிழர்களை விரட்டிவிட்டால், இலங்கை முற்றாகச் சிங்களவர்களின் நாடாகிவிடும் என்பது ராஜபட்சவின் எண்ணம்! கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, தமிழ்நாடு என்று போனபோன இடங்களில் ஏதாவதொரு உரிமை பெற்று அவர்கள் ஆங்காங்கே இருந்துவிட வேண்டும் என்பதுதான் ராஜபட்சவின் விருப்பம்! அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிவிடும் எண்ணத்தைக் கைவிடச் செய்வதற்காகத்தான் கொடுமைகள் மிகுந்த முள்வேலிச் சிறை முகாம்களின் காலத்தை நீட்டித்துக் கொண்டே போகிறார் ராஜபட்ச!
இறைமகன் ஏசுவை சிலுவையில் அறையக் காரணமான யூத மத போதகர்கள் யாரையாவது ஏசுவின் உண்மைச் சீடர்கள் பதினோரு பேரில் எவனாவது கட்டிப்பிடித்ததுண்டா?
யூத இனத்தையே கருவறுத்த மன நோயாளி ஹிட்லருக்கு எந்த யூதனாவது பட்டாடை போர்த்திப் பாராட்டியதுண்டா?
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில், முன் தோன்றிய மூத்த தமிழினத்தைக் கருவறுத்த ராஜபட்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரும் சிரித்து மகிழ்வதையும் சிலர் கட்டித் தழுவிக் கொள்வதையும் நிழற்படங்களில் பாருங்கள்!
அடிவயிற்றை முறுக்கவில்லையா?

http://1.bp.blogspot.com/_4p_yQXbuI_Q/SX9d2DHPMHI/AAAAAAAAAtw/nqMZfojZvNc/s400/thirumal.jpg


http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=142502&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=டெல்லியை ஆட்டிப் படைக்கும் மலையாளிகள்

http://media-cdn.tripadvisor.com/media/photo-s/00/0f/8d/1a/taj-mahal.jpg

முல்லை பெரியாறு அணை விஷயத்தில் சட்டத்தை மதிக்காமலும், நீதிக்கு தலைவணங்காமலும் கேரள அரசு நடந்து கொள்வதையும், அதனை தமிழகம் தலை வணங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணி செயல்படுவதையும் பார்க்கும்போது, இப்பொழுது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிற மாநிலம் எது?


இதில் நமக்கு சந்தேகமே வேண்டாம். இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது கேரளா தான்.

30 மாநிலங்களையும், 3 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட மத்திய அரசின் செயலகங்களா? அல்லது திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகமா? என்று பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு, இன்றைக்கு டெல்லியில் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் நிரம்பி வழிகிறார்கள்.

இந்தியாவா? அல்லது கேரள தேசமா? என்று எண்ணும் அளவுக்கு மலையாள மொழி பேசுகிற கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் மத்திய ஆட்சி நிர்வாகத்தில் மிக முக்கியமான பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

அரசியல் சட்டத்தின்படி நாட்டின் முதல்குடிமகனாக விளங்குபவர் குடியரசு தலைவர். இப்போது குடியரசு தலைவராக இருக்கும் பிரதீபா பட்டிலுக்கு செயலாளராக இருப்பவர் கிறிஸ்டி பெர்னாண்டஸ், பதவியிலிருந்து ஓய்வு பெறும் வயதை தாண்டிய இவருக்கு 4 ஆண்டுகள் பதவி நீடிப்பு கொடுக்கப்பட்டு பிரதீபா பட்டில் பதவியில் இருக்கும் வரையில், இவரும் செயலாளராக பதவியில் நீடிப்பார் என்ற நிலமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.

குடியரசு தலைவருக்கு அடுத்ததாக ஆட்சி தலைவராக இருப்பவர் பிரதமர். பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக இருப்பவர் டி.கே. நாயர். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று விளக்கத் தேவையில்லை.

பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராகவும், ஆட்சியை வழி நடத்திச் செல்பவராகவும் விளங்கி வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் செயலாளராக இருப்பவர் வின்சென்ட் ஜார்ஜ். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.

மாநிலங்களில் எப்படி தலைமைச் செயலாளர் பதவி இருக்கிறதோ, அதைப் போன்று மத்தியில் இருப்பது அமைச்சரவைச் செயலாளர் பதவி. இப்போது அமைச்சரவை செயலாளராக இருப்பவர் கே.எம். சந்திரசேகர், இவருக்கு அடுத்தபடியாக உள்துறை செயலாளராக இருப்பவர் சி.கே. பிள்ளை. செல்வாக்கும், அதிகாரமும் மிக்க இருவருமே கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள்.

வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா மேனன் ராவ், தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலாளர் பி.கே.தாமஸ், விவசாயம் மற்றும் கூட்டுறவு துறை செயலாளர் நந்தகுமார், சிவில் விமானப் போக்குவரத்து துறை செயலாளர் மாதவன் நம்பியார்,

செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ரகு மேனன், நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ராமச்சந்திரன், ஜவுளிச் துறை செயலாளர் ரீட்டா மேனன், கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர் கங்காதரன்,

குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், சட்டத்துறை செயலாளர் விசுவநாதன் ஆகியோரும் கேரளாவைச் சேர்ந்த மலையாள மொழி பேசுகிற அதிகாரிகள்.

எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் எம்.கே.நாராயணன் நாயர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் மாதவன் நாயர் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.

தமிழ்நாட்டிலிருந்தும் 2 அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு போயிருக்கிறார்கள். அந்த இருவரும் கூட கேரளாவை சொந்த மாநிலமாகக் கொண்டவர்கள் தான்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே ஒரு அதிகாரி தான் இப்போது மத்திய அரசில் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது.

மத்தியில் இணை அமைச்சராக இருக்கும் ஒருவர் (ஜெய்ராம் ரமேஷ்) மிகத் துணிச்சலாக தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் மதிக்காமல், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரளாவிற்கு அனுமதி அளிக்கிறார் என்றால், அந்தத் துணிச்சல் அவருக்கு எப்படி வந்தது?.

மத்தியில் ஆளுகின்ற கூட்டணி ஆட்சியில் முக்கியக் கூட்டணிக் கட்சி ஆட்சி நடத்துகின்ற தமிழகத்திற்கு பாதகமாகவும், எதிர்க்கட்சி ஆட்சி நடக்கிற கேரளத்திற்குச் சாதகமாகவும் முடிவெடுக்கும் துணிச்சலை அவருக்கு கொடுத்தது யார்?.

அவர் வெறும் பொம்மை தான். அவருக்கு சாவி கொடுத்து செயல்பட வைத்திருப்பவர்கள் யார்?

மாநில நலனைக் காக்க மத்திய அரசு [^]க்கு சவால் விட்டு வெற்றிக் கொடி நாட்டும், துணிவுமிக்கதாக தமிழகம் மாறினான் ஒழிய முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையிலும், இதர நதி நீர் பிரச்சனைகளில் நமது உரிமையை பாதுகாத்திட முடியாது.


கமலகாசனும், - அக்ரகாரவாசிகளும்

http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2009/09/unnai-pol-oruvan2.jpg

50 ஆண்டுகாலம் திரைப்படத் துறையில் கால் பதித்த கமலகாசனுக்கு பிரம்மாண்டமான விழா எடுக்கப்பட்டுள்ளது. ஏடுகளிலும், இதழ்களிலும் அட்டைப்படக் கதாநாயகனாகவும் அவரே ஜொலிக்கிறார்.

குமுதத்தில் (7.10.2009) அவரின் பேட்டியும் வெளிவந்துள்ளது.

ஒரு காலத்தில் விடி யற் காலையில் குளிச்சிட்டு ஈரத் துணியோடு பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக்கிற வங்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவுபூர்வமான வரிகள் என்னைப் புரட்டிப் போட்டுடுச்சி என்று எடுத்தவுடனேயே வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார் என்கிறது குமுதம்.

குமுதத்தில் சொன்னது இன்னும் பொருத்தம்தான். ஊரில் கிடக்கும் புராணக்-குப்பைகள், ஓட்டை உடைசல்களையெல்லாம் ஒப்பனை செய்து ஊர்வலம் விடும் ஏடாயிற்றே! நன்றாக மூக்கை வெட்டுகிற மாதிரி அதில் பேட்டி தந்துள்ளார். அதற்காகவும் ஒரு சபாஷ் போடலாம் போலத்தான் தோன்றுகிறது.

கமலகாசன் மட்டுமல்ல, மனந்திறந்து தந்தை பெரியார் அவர்களின் நூல்களைப் படிப்போர் யாராக இருந்தாலும் கமலகாசன் நிலைக்கே ஆளாவார்கள் என்பதில் அய்யமில்லை.

அய்யய்யோ அவர் சாமியில்லை என்கிறவர். அந்த நூலைத் தொடாதே, தீண்டாதே, பார்க்காதே, படிக்காதே! என்று ஆரம்பத்திலேயே அச்சக் குரல் கொடுத்து வேண்டுமானால் தடுக்கலாமே தவிர, அதனைத் தொட்டுப் படித்துவிட்டால், எந்தக் கொம்பனாக இருந்தாலும், அறிவுலக ஆசானின் வரிகளை வரித்துக்கொண்டுதான் தீருவார்கள்.

இவ்வார ஆனந்தவிகடனிலும் (14.10.2009) கடவுள்பற்றிய கருத்தை சற்று வித்தியாசமாகச் சொல்லுகிறார்.

நான் கடவுள் இல்லைன்னு சொல்லலை, இருந்தால் நல்லா இருக்குமேன்னுதான் சொல்றேன் என்கிறார். தசாவதாரத்திலும் இதையேதான் கூறுகிறார்!

கடவுள் ஒருவர் இருந்து மக்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுப்பாரேயானால், யார்தான் வேண்டாம் _ இல்லை என்று சொல்லப் போகிறார்கள்? அப்படி ஒருவர் இல்லையே என்பதுதானே பகுத்தறிவாளர்களின் கவலை.

கடவுள் ஒருவர் இருந்து நேராக வந்துவிட்டால் கடவுள் இருக்காருன்னு சொல்லிட்டுப் போறோம் என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லவில்லையா?

கலை உலகின் ஜாம்பவான் ஒருவரின் வாயிலிருந்து இத்தகு கருத்துகள் வெளிவருவது பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு வலிமை சேர்ப்பதே! அதேநேரத்தில் அக்ரகாரவாசிகள் இவரை எப்படியெல்லாம் உள்ளுக்குள் வறுத்துக் கொட்டுவார்கள்! ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்!

---------------- மயிலாடன் அவர்கள் 20-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை
http://thamizhoviya.blogspot.com/2009/10/blog-post_21.html

சாராய சக்கரவர்த்தி..!

http://1.bp.blogspot.com/_XTXH__SZGNQ/SdnY2B2Bj0I/AAAAAAAAAQY/0KOAv9XgewI/s400/image001.jpg http://2.bp.blogspot.com/_rQFtSdPYI1U/Sstt-Sk_57I/AAAAAAAAAQQ/95z8DIFAx0g/s320/tasmac.jpg http://4.bp.blogspot.com/_oLPhenuxLtw/SZlR5ngWzzI/AAAAAAAABCc/C5RHxvGyv7k/s320/4066235.jpg

தமிழ்நாட்டு அரசின் முதன்மையான, அதிக கொள்ளை லாபம் கொழிக்கும் வருமானமே சாராயக் கடை வருமானம் தான்!

தமிழகத்தில் இரண்டு வகையான மதுபானங்கள் விற்கப்படுகின்றன.

ஒன்று...

உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஆதரவோடு சுத்தமான பார்லியில் (தானியங்கள்,பழங்கள்) தயாரிக்கப்படுகின்றன. இது சுத்தமான பார்லியில் தயாரிக்கப்படுலதால் உயர்தட்டு மக்களின் உடல் நலம் கெடுவதில்லை.

இரண்டு...

இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபானங்கள் (IMFL) என்கிற முத்திரையுடன் இந்திய சாராய வியாபாரிகள் தயாரிக்கும் சரக்குகள்.

புரஹிபிஷன் அண்ட் எக்ஸைஸ் சட்டம், கரும்புக் கழிவான மொலாசஸ்ஸிலிருந்தும் மதுபானங்களை தயாரிக்கலாம் என்கிறது.

இந்த சாக்கடை கழிவலிருந்து தயாரிக்கபடும், இந்த மட்டரகமான சரக்குகளைத் தான் அரசு டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வைத்திருக்கிறது!

ஒரு ஃபுல் காலி புட்டியின் (750 மி.லி) சராசரி விலை மூன்று ரூபாய்.அந்த பாட்டிலின் உள்ளே இருக்கும் சாராயத்தின் விலை 9 ரூபாய். ஆக ஒரு புல் பாட்டிலின் அடக்கவிலை வெறும் 12 ரூபாய்தான்.லாபம்,வரி,லொட்டு லொசுக்கு என்று வைத்துப் பார்த்தால் கூட ஒரு பாட்டிலை 20 அல்லது 25 ரூபாயக்குத்தான் விற்க வேண்டும்.

ஆனால் அரசு சாராயக்கடையான டாஸ்மாக் கடையில் விற்கப்படும் மலிவு விலையோ, ரூபாய் 280-இலிருந்து 380 ரூபாய் வரை தான்!

அது போலவே 1 லிட்டர் வாட்டர் பாட்டிலின் அடக்க விலை 1 ரூபாய் 10 காசுதான். ஆனால் கடைகளில் ரூபாய் 12-இலிருந்து 15 வரை விற்கப்படுகிறது!

இப்படி தமிழ்நாட்டை உயர்த்தத் தான்!

வெறும் திரவ உணவை மட்டுமே உண்டு உழைத்துக் கொண்டிருக்கிறார், 85 வயதான உதய சூரியன்!


_மனிதன்.

http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg


http://4.bp.blogspot.com/_nUvUXnRX0bI/Sap1t64c17I/AAAAAAAAAI4/pVVMpzHvU-k/s320/MK.jpg

http://e-forwards.com/wp-content/uploads/2007/08/3292035drunk.jpg
Update me when site is updated

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!