"பண்டைய தமிழ் நூல்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான சொல்லாகவும் பேராண்மை பயன்படுத்தப்பட்டு உள்ளது...."
பேராண்மை படத்தை எடுக்க தூண்டியது எது?
அதிகாலையின் அமைதியிலே என்பது சோவியத் நாட்டு சிறுகதை.அய்ந்து பெண்களும் ஒரு ஆணும் கொண்ட செம்படைக் குழு ஒன்று ஹிட்லரின் நாஜி ராணுவத்தை எதிர்த்து போராடும்.அந்த கதையை நமது சமுதாயத்திற்கு ஏற்ற மாதிரி சொல்ல முயற்சி செய்துள்ளேன்.
அய்ந்து பெண்களும் ஒரு ஆணும் சேர்ந்து முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கிற ஒரு படத்துக்கு பேராண்மை என்று ஆணை முக்கியப்படுத்தும் பெயர் எதற்கு?
பண்டைய தமிழ் நூல்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான சொல்லாகவும் பேராண்மை பயன்படுத்தப்பட்டு உள்ளது. நான் உருவாக்கியுள்ள அய்ந்து கதாநாயகி கதாபத்திரங்களே ஆண் ஆதிக்க உணர்வு படத்தில் இல்லை என்பதற்கான மறுப்பு.வீராங்கனைகளாக, சம உரிமை கொண்டவர்களாக உள்ள அவர்களையும் உள்ளடக்கியது தான் அந்த பேராண்மை எனும் பெயர்.
இந்து,முஸ்லீம்,கிறிஸ்துவ சமயங்களை சார்ந்த அய்து கதாநாயகிகளை சக்தி,காளி என்று பெண் தெய்வங்களின் பெயரால் உற்சாகமூட்டுவதாக வருகிற காட்சி, பொருத்தமாக இல்லையே?
பெண் தெய்வ வழிபாடு என்பது முன்னோர் வழிபாடுதான்.ஆற்றலின் உருவமாக,சக்தியின் வடிவமாக பெண்களை உற்சாக மூட்டுவதற்காக அத்தகைய காட்சியை வைத்தேன்.எதிர்மறையாக அர்த்தம் கொள்ள வேண்டாம்!
தமிழ்த் தேசிய வாதிகளாய் இருப்பவர்கள் இந்தியாவை காப்போம் என்று இப்படம் சொல்வதை குறை சொன்னார்கள்.நாடு என்பது வெறும் எல்லைக் கோடுகள் அல்ல.சாலைகளும்,காடுகளும்,மலைகளும் அல்ல.
அதனால் தான் எனது பட கதாநாயகன் நாடு என்பது உழைக்கும் மக்கள் தான் என உரக்கப் பேசுகிறான்.
தமிழக சினிமாத் துறையில் முற்போக்கான படங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது?
எந்த ஒரு கருத்தையும் மக்கள் விரும்பும் பாணியில் சொன்னால்,படம் ஓடி விடும்.படத்தை நம்பி பணியாற்றிய பல்வேறு தரப்பினரும் நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.வெறும் கதை அம்சம் மட்டுமல்ல.சினிமாவின் அனைத்து தொழில் நுட்பங்களிலும் உங்களுக்கு நல்ல தேர்ச்சி வேண்டும்.
இன்றைய தமிழ் சினிமா சமூக விஷயங்கள் பேச விரும்புவதே இல்லை.சமூக அக்கறையோடு ஒரு படத்தை நீங்கள் எடுத்துவிட்டால்,அதற்கு எதிராக ஒரு பெரும் பிரச்சாரமே திரையுலகில் நடை பெறுகிறது.நல்ல படங்களுக்கு எதிரான இந்த மனநிலை என்பது கவனமாக,தீவிரமாக பரப்பப்படுகிறது.எது ஓடக்க கூடாது என்று நினைக்கிறார்களோ அந்தப் படத்தைப் பற்றி இது ஓடாது என்று வெறித்தனமாக பிரச்சாரம்
செய்கிறார்கள்.
இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் மனபலத்தோடு புதிய தலைமுறையினர் வரவேண்டும்.
தலித் மக்களின் பிரச்சனைகளை வைத்து படம் எடுக்கும் திட்டம் உள்ளதா?
பேராண்மை கதாநாயகன் பழங்குடியாக இருக்க நேரிட்டதால், தமிழ்நாடு பழங்குடி மக்களின் தலைவர் சண்முகத்தை இந்த படத்துக்காக சந்தித்தேன்.பழங்குடியினர் சமூகத்தில் கற்பழிப்பே கிடையாது.நிர்வாணம் பற்றிய அவர்களது புரிதலே வேறு.
பழங்குடி மக்கள் படம் எடுத்த அனுபவத்திலிருந்து சொல்லுகிறேன்.நான் தலித் மக்களைப் பற்றி படம் எடுப்பதை விட தலித் மக்கள் மத்தியில் இருந்து தயாராகும் இளம் இயக்குநர்கள் தான் என்னை விட சிறப்பாகச் செய்ய முடியும்.அவர்களுக்கு சினிமாத்துறை நுணுக்கங்களை கற்றுத் தரும் விதமான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, நான் உதவ தயாராக இருக்கிறேன்!
தீக்கதிர், வண்ணக்கதிர்,15 நவம்பர் 2009
கூடு
சொந்த வீடு
கட்டுகிறது
குருவி...
நான்
குடியிருக்கும்
வாடகை
வீட்டில்!
போராளி
செத்தவனுக்காக அழுதவன்
நீ...
இவன்
அழுதவனுக்காகச்
செத்தவன்!
வல்லாண்மை
பயங்கரவாதி
என்கிறான்
துப்பாக்கி வைத்திருப்பவனை...
அணுகுண்டு
வைத்திருக்கிறவன்!
போராளி
சொன்னான்:
உன்
சடலம்
மண்ணுக்கு
என்
சாவு
மண்ணுக்கு..!
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
ஆனந்த விகடன் 18.11.09.
கள்ளிக்காட்டு இதிகாசத்தின் 5 பிரதிகளை வாட்டர் ஃப்ரூப் செய்து வைகை அணை நீரில் வீசி எறிந்திருக்கிறார்.நாளை அணையே தூர்ந்து போனாலும்,அந்த மண்ணின் ஆவணமாக அது இருக்குமாம்!
கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும், விளம்பரப் படங்களில் தோன்றுவது இல்லை. குரல் கொடுப்பது என்று கொள்கை வைத்திருக்கிறார்!
மருத்துவமனையில் இருந்தும்,சிறையில் இருந்தும் வரும் கடிதங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் பதில் போடும் பழக்கம் கொண்டவர்!
கவிப்பேரரசு வைரமுத்து
ஆனந்த விகடன்,18.11.09.
அரை மண்டையன்
சமீபத்தில் காஞ்சீபுரத்தில் சிக்கி கோவிலில் காமக் கடவுளாக எழுந்தருளி அருள் வழங்கிய சுவாமி , அர்ச்சகர், அரை மண்டையன் தேவகுருநாதன் கோவில் உல்லாசமாக இருந்ததை அந்த பெண்களுக்குத் தெரியாமலேயே அங்கு அங்கே வைக்கப்பட்ட செல்போன் காமிராகளில் படம் பிடித்து, இந்த படங்களை வெளியில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டி மிரட்டியே மீண்டும் மீண்டும் அதே பெண்களை பணிய
வைத்திருக்கிறான்.
செல்போன் சரிசெய்யும் கடைக்காரன் நம்ம அரைமண்டையன் போனில் பதிவு செய்யப்பட்ட படங்களை பார்த்து அதிர்ந்து போய், அதை பணம் வாங்கி மற்றவர்களுக்கும் பரப்பி விற்றிருக்கிறான்.
இந்து மதத்தின்( இல்லாத) புனிததன்மையை பெரியார் இயக்கம் விமர்சனம் செய்கின்றன என்று கூறும், மதவாத நச்சு பாம்புகளான ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவே(RSS, BJP) நீ ஏன் மவுனம் சாதிக்கிறாய்? இப்ப கருவறை விபச்சார விடுதியாகிறதே எங்கே போனது உன் கோபம்? பூணூல் பாசமா?
_மனிதன்.
ஒரு பறவை
ஒரு மரத்தின் கிளையில் அமரும் போது
அது எந்த கணத்திலும் முறிந்து விடும்
என்ற பயத்தில் அமர்வதில்லை.
ஏனென்றால் அது நம்புவது
அந்த கிளையை அல்ல...
தன் சிறகுகளை..!
-ஜென்
கலைஞரின்...
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் திட்டம்
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் திட்டம்
"அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனையில்தான் சென்று சிசிச்சை பெற்றுகொண்டார். ஆனால், கலைஞர் தனக்கு முதுகுவலி கொஞ்சம் அதிகமானால் கூட அரசு மருத்துவமனைக்கு வராமல் அப்போலோவிலோ ராமச்சந்திராவிலோ சென்றுதான் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்..."
இரா.சரவணன்.
சர்க்கரையைச் சுவைத்தால் தான் இனிக்கும், சர்க்கரை என்று எழுதி நக்கினால் நிச்சயம் இனிக்காது. அதுபோலதான் கலைஞரின் உயிர்காக்கும்
உயர்சிகிச்சைத் திட்டமும் இருக்கும். உயர் சிகிச்சை என்றாலே குறைந்தபட்சம் ஒரு லட்சத்தை தாண்டியதாகத்தான் இருக்கும். அதிலும் உயிர் காக்கும் உயர்சிகிச்சை என்றால் எத்தனை லட்சங்களைத் தாண்டும் என்பதைப் பார்ப்பதற்குபூதக்கண்ணாடியெல்லாம் தேவையில்லை. ஒரு கோடி ஏழை எளிய மக்களுக்கு இதயம்,புற்றுநோய் உள்ளிட்ட 51 வகையான நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளில்சிகிச்சை பெற ரூபாய் ஒரு லட்சம் வரை மருத்துவக் காப்பீடு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதற்கான காப்பீட்டுத் தொகையாக 517 கோடி ரூபாய் மற்றும் சேவை வரியான 48 கோடியும் சேர்த்து, ஆண்டிற்கு 565 கோடி ரூபாயென, நான்கு ஆண்டிற்கு ஆக மொத்தம் 2260 கோடி ரூபாய் பன்னாட்டு தனியார் நிறுவனமான °டார்ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்° கம்பெனிக்கு தாரைவார்க்கும். நமது மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனம் கலைஞரின் கண்களுக்குப் புலப்படவில்லையா?அல்லது, இந்த °டார் ஹெல்த் நிறுவனம் வெறும் 105 கோடி முதலீட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் ஏழை நிறுவனம். அதனால் அந்த
நிறுவனத்திற்கு நாம் காப்பீடு கொடுப்போம் என்று நினைத்தாரோ என்னவோ!
ஏற்கனவே, மாநில அரசு ஊழியர்களுக்கும் மாநில பொதுத்துறை ஊழியர்களுக்கும் மேற்கண்ட °டார் ஹெல்த் இன்சூரன்° நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் மருத்துவக் காப்பீட்டில், காப்பீட்டாளர்களுக்கு முழுப்பணம் கிடைப்பதில்லை என்ற புகார்களும், ‘உங்களுக்கு வந்திருக்கும் நோய் எங்கள் பட்டியலில் இல்லை’ என காப்பீட்டுத் தொகையை நிராகரிப்பது என பல முறைகேடுகள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட புகார்களுக்கு உள்ளான ஒரு பன்னாட்டு தனியார் நிறுவனத்திடம் இத்திட்டத்தை ஒப்படைத்திருப்பது கலைஞரின் தனியார் மய தாகத்தைக் காட்டுகிறது. தங்களுக்கு வந்திருப்பது உயிருக்கு ஆபத்தான நோய் என்று கண்டறியவே கிட்டத்தட்ட அரை லட்சத்திற்கும் மேல் செலவு செய்ய நேரிடும். இந்த நிலையில் இதய மாற்று அறுவை சிகிச்சையோ,பைபா° சர்ஜரியோ, மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையோ தனியார் மருத்துவமனைகளில் செய்வதென்றால் ஒரு லட்சம் ரூபாயில் முடிகிற விஷயமா?
காப்பீட்டுத் தொகையான ஒருலட்சத்திற்கும் மேல் எவ்வளவு பணத்தை நோயாளிகளிடம் பறிக்க முடியுமோ அவ்வளவையும் பறித்துக்கொண்டு அனுப்பிவிடும். மேலும், ஒரு ரூபாய் மதிப்புடைய ஒரு மருந்து நோயாளியின் கைகளில் கிடைக்கும் போது அதன் விலை 20 ரூபாயாக இருக்கும் சூழலில் மருந்து, மாத்திரைகள், மாதாந்திர செக்கப் போன்ற தொடர் சிகிச்சைக்கு கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் உதவுமா? ஆனால், அரசு மருத்துவமனைகளில் செய்துகொள்ளும் சிகிச்சைகளுக்கு மருந்து,மாத்திரைகள், மாதாந்திர செக்கப் போன்றவைகளும் இலவசமாக கிடைக்கும். லஞ்சம்,ஊழல், முறைகேடு, அலட்சியப் போக்கு, சுகாதாரமின்மை என இப்படி பலகுறைகளையும் மீறிதான் அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பிவழிந்துகொண்டிருக்கிறது. அனைவருக்கும் மருத்துவம் அரசால் எப்படிகொடுக்கமுடியும்? என்று தனது கையாலாகாத்தனத்தை நியாயப்படுத்திக்
கொண்டிருப்பதை விட ஒவ்வொரு ஆண்டும் தனியார் மருத்துவமனைக்கு கொடுக்கும் 565 கோடி ரூபாயில் மாவட்டம் தோறும் அனைத்து வசதிகளுடன் மருத்துவமனைகளும்,தேவையான எண்ணிக்கையில் மருத்துவர்களும், ஊழியர்களும், அனைத்து விதமான அறுவை சிகிச்சை உபகரணங்களும், தரமான மருத்துவ சேவையும் அரசுகொடுக்குமேயானால், இந்த மருத்துவ காப்பீடு அவசியமில்லை. அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனையில்தான் சென்று சிசிச்சை பெற்றுகொண்டார். ஆனால், கலைஞர் தனக்கு முதுகுவலி கொஞ்சம் அதிகமானால் கூட அரசு மருத்துவமனைக்கு வராமல் அப்போலோவிலோ ராமச்சந்திராவிலோ சென்றுதான் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்.
அவர்களது எம்.எல்.ஏ.க்கள் கூட ஏதாவது விழாக்கள் நடந்தால் தவிர) அரசு மருத்துவமனைகளுக்குள் நுழைவதில்லை. வளர்ந்த நாடான அமெரிக்காவில் மருத்துவ சேவைகள் தனியார் இன்சூரன்° நிறுவனங்களிடம் சிக்கியுள்ளதால் நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் இருப்பதுபோன்ற பொதுமருத்துவ சேவையை அமல்படுத்த சட்டங்களைக் கொண்டுவருவதில் அவர்கள் தீவிரமாக இருக்கின்ற போது, அவர்கள் நிராகரித்து,
கைவிடத் துடிக்கும் மருத்துவக் காப்பீட்டு முறையை தமிழகத்தில் அமல்படுத்தியிருக்கிறார் கலைஞர். இந்தத் திட்டத்தால் இன்சூரன்°நிறுவனமும், தனியார் மருத்துவமனைகளும் காப்பீட்டில் ஏற்படும் பிரச்சனைகளால் வழக்கறிஞர்களும்தான் பயனடைவார்களே தவிர மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை. சின்னச்சின்ன எழுத்துக்களில் பாமர மக்களுக்கு புரியாத ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளைச் சுட்டிக்காட்டி காப்பீட்டுத் தொகையை நிராகரிக்கவும் இந்நிறுவனங்கள் தயங்காது. எதிர்காலத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு மட்டும் செலவழித்தால் போதுமென அரசு மருத்துவமனைகளை மூடிவிட நினைக்கும். அப்போது இக்காப்பீட்டிற்கான தொகை அதிகரிக்கும்.
சாதாரண தலைவலி, காய்ச்சலுக்கு கூட பல ஆயிரங்கள் செலவு பிடிக்கும். நோய் இருப்பவருக்கு மருத்துவம் கிடைக்காது. காப்பீடு இருப்பவருக்கே மருத்துவம் கிடைக்கும் நிலை ஏற்படும். 1983ல் வெறும் 139 கோடியாக இருந்த, நோய்களுக்கெல்லாம் தாயான மதுபான டா°மாக் விற்பனை இன்று 15 ஆயிரம் கோடியை எட்டிவிட்டது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை இலவசங்களாகவும் இதுபோன்ற திட்டங்களுக்காகவும் செலவு செய்து பெரிய வள்ளல் என பெயர் வாங்கி, ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியைக் கைவிட்டு, மக்களுக்கான உண்மையான சேவைகளை கலைஞர் செய்வாரா?
ஆக, தனியார் மருத்துவமனைகளில்தான் தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற நிலைக்கு உளவியல்ரீதியாக அப்பாவி ஏழை எளிய மக்களை, இத்திட்டத்தின் மூலம் தயார் செய்வது ஒருபுறம், மக்களுக்கான பொதுமருத்துவ சேவையை கைக்கழுவுவது மறுபுறம். எனவே,
இது கலைஞரின் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் திட்டம் என்பதைத் தவிர வேறல்ல!
சிங்கள கடற்படையினர், இரவு முழுவதும்
பாலியல் கொடுமை செய்து விரட்டியடித்தனர்.
பாலியல் கொடுமை செய்து விரட்டியடித்தனர்.
சிங்கள அட்டூழியம்: இரவு முழுவதும் தமிழர்களை நிர்வாணமாக்கி பாலியல்
கொடுமை
தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர், இரவு முழுவதும்
பாலியல் கொடுமை செய்து விரட்டியடித்தனர்.
நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ராமேஸ்வரம் அருகே இந்திய கடலோர
பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களின் படகுகள் மீன்பிடித்து
கொண்டிருந்தன. அப்போது அங்கு 15 காஸ் படகுகளில் வந்த இலங்கை
கடற்படையினர், மீனவர்களை சுற்றிவளைத்தனர்.
சிலர் சுதாரித்து தப்பினர். கையில் சிக்கியவர்களை ஆடைகளை கழற்ற கூறி,
இரவு முழுவதும் பாலியல் கொடுமை செய்துள்ளனர். ’’மீன்பிடிக்க வந்தால்
இனிமேல் உங்களை அடிக்க போவதில்லை, இது போல நிர்வாண தண்டனை தான்’’
எனக்கூறி சென்றதாக தப்பி வந்த மீனவர்கள் கூறினர்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21076
புகார் கொடுத்து ஆட்டிப் படைக்கும் பெண்கள் : விடுபட தேசிய ஆண்கள் ஆணையம் தேவை
"கள்ளக்காதல் கொலைகளைத் தடுக்க இந்திய தண்டனைச் சட்டம் 497ல் திருத்தம் செய்து, ஆண், பெண் இருவருக்கும் தண்டனை வழங்க வேண்டும்..."
சென்னை : "புகார் மேல் புகார் கொடுத்து இஷ்டம் போல் ஆட்டிப் படைக்கும் பெண்களிடமிருந்து விடுபட, தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு ஆண் கள் பாதுகாப்பு சங்கம், சென்னையில் ஆர்ப்பாட் டம் நடத்தியது. நாடு முழுவதும் ஆண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தங்களின் கோரிக் கைகளை வலியுறுத்தி, சென்னை மெமோரியல் ஹால் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சங்கத்தின் மாநில தலைவர் அருள் துமிலன் தலைமை வகித்தார். "பெண்கள் கொடுக்கும் போலியான வரதட்சணை புகார்களின் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது; வரதட்சணைக் கொடுமையில் சிக்கும் அரசு ஊழியர் களை பணி நீக்கம் செய்யக் கூடாது; கள்ளக்காதல் கொலைகளைத் தடுக்க இந்திய தண்டனைச் சட்டம் 497ல் திருத்தம் செய்து, ஆண், பெண் இருவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். புகார் மேல் புகார்களைக் கொடுத்து இஷ்டம் போல் ஆட்டி வைக்கும் பெண்களிடமிருந்து விடுபட, தேசிய ஆண்கள் ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்; இந்திய கலாசாரத் திற்கும், குடும்ப அமைப்புகளுக்கும் எதிராக 2005ல் கொண்டு வரப்பட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.
சங்கத்தின் தலைவர் அருள் துமிலன் பேசுகையில், "சமூகத்தில் ஆண்களுக்கு பெண்களால் ஏற்படும் கொடுமைகள் அதிகம். ஆண்கள் வெளியில் சொல்வதில்லை. சொன்னாலும் நிவாரணம் கிடைப்பதில்லை. பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு சங்கத் தின் மூலம் சட்ட உதவியும், பாதுகாப்பும் தருகிறோம். ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் சங்கம் தொடர்ந்து ஈடுபடும். தேசிய ஆண்கள் ஆணையம் அமைய வேண்டியதன் அவசியத்தை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்' என்றார்.
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=19001
சோனி எரிக்சன் சென்னை மையம் திடீர் மூடல்: ஊழியர்கள் தவிப்பு
"காலை 10 மணிக்கு, 'மீட்டிங்'பகல் 12 மணியளவில், மையத்தின் அனைத்து நெட்வொர்க்குகளும் துண்டிக்கப் பட்டன. ஒரு மணிக்கு கதவுகள் மூடப்பட்டன..."
சென்னை மணப்பாக்கத்தில் இயங்கிவந்த, சோனி எரிக்சன் மென் பொருள் மேம்பாட்டு மையத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப் பட்டனர். சோனி எரிக்சன் நிறுவனம், சென்னை அருகில் உள்ள மணப் பாக்கத்தில், 2007ம் ஆண்டு, மென் பொருள் மேம்பாட்டு மையத்தைத் துவக்கியது. இங்கு, புதிய மொபைல் போன்களை வடிவமைக்கும் பணி நடந்து வந்தது. சமீபத்தில் வெளியான டி-715 மொபைல், சென்னையில் வடிவமைக்கப்பட்டது தான். அந்த மொபைல் விற்பனை நன்றாகவே இருந்தது.
சோனி எரிக்சன் நிறுவனத்தின் தலைமையில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்டது. புதிய தலைவராக பொறுப்பேற்றவர், உடனடியாக உலகம் முழுவதும் உள்ள அந்நிறுவனக் கிளைகளின் செயல்பாட்டை ஆராய்ந்தார். சென்னை மையம் லாபம் ஈட்டாதது தெரிந்தது. அவர் அனுப்பிய 10 பிரதிநிதிகள், சீனாவில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்தனர். காலை 10 மணிக்கு, 'மீட்டிங்' என அறிவித்து, அனைத்து ஊழியர்களையும் அழைத் தனர். 'சென்னை மையம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், இனியும் இம்மையத்தை நடத்துவதாக இல்லை. இன்றே, இப்போதே இந்த மையம் மூடப்படுகிறது' என, அறிவித்தனர்.
காலையில் உற்சாகமாகப் பணிக்கு வந்திருந்த ஊழியர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். இளம் பெண்களும், வாலிபர்களுமாக இருந்த அவர்கள், குய்யோ முய்யோ என குமுறினர்; அழுதனர். அதிகாரிகள், எதற்கும் மசிவதாக இல்லை. அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று மாத சம்பளம், காசோலையாக வழங்கப்பட்டது. பகல் 12 மணியளவில், மையத்தின் அனைத்து நெட்வொர்க்குகளும் துண்டிக்கப் பட்டன. ஒரு மணிக்கு கதவுகள் மூடப்பட்டன. மொத்த ஊழியர்கள் எத்தனை பேர், அதில் இந்தியர்கள் எத்தனைபேர், அவர்களின் பணிக்காலம் போன்ற தகவல்களை யாரும் கூற முன்வரவில்லை. மென்பொருள் தயாரிப்பு கம்பெனியின் நடைமுறைகளின் படி இந்த நடவடிக்கை இருக்கும் என்று கூறப்பட்டது. கண்ணீரும் கம்பலையுமாக அங்கேயே குழுமியிருந்த ஊழியர்கள், நஷ்ட ஈடாக ஆறு மாத சம்பளத் தொகையை வழங்கும்படி கேட்டு வருகின்றனர்.
நன்றி : தினமலர்
வீடு தேடி அலையும் சரத் பொன்சேக்கா
தன் வினை இப்போது தன்னைச் சுடுகிறது. கூடித் தமிழினக் கொலை செய்த சகோதரர்களும் படைத் தளபதியும் இப்போது எதிர் எதிர் அணியில். கொள்ளை அடித்தவர்களிடை கொள்ளையைப் பங்கிடுவதில் மோதல். மனித உரிமைகளை மீறிப் போரில் வென்றவர்கள்(?) வெற்றிக்கான புகழின் பயனை அடைவதில் மோதிக் கொள்கின்றனர்.
சரத் பொன்சேக்கா தன்னால்தான் போரில் வெற்றி கிடைத்ததாக நினைக்கிறார். அதை மஹிந்த சகோதரர்கள் விரும்பவில்லை. எம்மால்தான் வெற்றியடைந்தீர்கள் என்று வெளியில் சொல்லி வெற்றிக்கனியைப் பறிக்க முடியாமல் இருக்கும் டில்லிக் கும்பல் தனக்குள் சிரித்துக் கொள்கிறது இப்போட்டியைப் பார்த்து. கோபாலபுரத்தில் இருந்து ஒரு முதலை கண்ணீர் வடிக்கிறேன் என்று அறிக்கை விட்டுப் புகழ் தேட முயல்கிறது.
சரத் பொன்சேக்காவை இந்த ஞாயிற்ற்குக் கிழமைக்குள் அவரது அரசால் வழங்கப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறும் படி இலங்கை அரசு பணித்துள்ளது. அவர் ஒரு வீடு தேடி அலைகிறார். அவருக்கு வீடு கொடுக்க வேண்டாம் என்று அதிகாரத் தரப்பில் இருந்து விடுக்கப் பட்ட மிரட்டலால் அவருக்கு யாரும் வீடு கொடுக்கிறார்கள் இல்லை. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்களே!
புரட்சியாளர் பிரபாகரனை வணிகச்சின்னமாக்காதீர்…
வாழ்நாள் புரட்சியாளர் சேகுவேராவின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரின் மூத்த மகள் அலைடா, கியுபாவில் ஓர் அறிக்கை வெளியிட்டார்.
“என் தந்தையின் பெயரையும் படத்தையும் வணிக முத்திரையாக்காதீர்கள். பிரிட்டானிகா வோட்காவிற்கும் ஃபிஸ்ஸி பானத்திற்கும் ஸ்விஸ் கைபேசிக்கும் என் தந்தையின் படத்தை விளம்பரச்சின்னமாகப் பயன்படுத்துவது அவரை அவமதிக்கும் செயலாகும்.
“நிகரமைப் பொருளியலுக்காகப் போராடியவரை மிகைத்துய்ப்பு வாதத்திற்குப் பயன்படுத்துவது முரண்பட்ட செயல். எங்களுக்குப்பணம் தேவை இல்லை. மரியாதைதான் தேவை”.
சேகுவேராவின் புகழ், வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவதை அருவருத்தார் அவர் மகள்.
காமத்திற்கு கண் இல்லை என்பதுபோல் முதலாளியப் பண மோகத்திற்கு முறை கிடையாது. சேகுவேராவை வேட்டையாடியது முதலாளியம்; அவரது புகழ், அவரது பெயர் உலகெங்குமுள்ள இளைஞர்களின் உணர்வுகளில் மின்சாரம் பாய்ச்சுகிறது என்பதைத் தெரிந்துகொண்டபின், அவரைப் பண்டங்களின் விற்பனைச் சின்னமாக மாற்றுகிறது அதே முதலாளியம்.
கொடிய நஞ்சாக சித்தரித்த ஒருவரையே, கொன்றபின் சிறந்த குளிர்பானமாக சித்தரிக்கிறது. இந்த இரண்டுவகை ஹிμ�ம்முறையிலும் தனது லாபம் தான் முதலாளியத்திற்கு முதன்மை நோக்கு.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை வணிகச் சின்னமாகத் தமிழ் நாட்டு இதழ்கள் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அட்டையில் அவர் படம் போட்டால் அமோக விற்பனை. அவர் பற்றிக்கட்டுரை வெளியிட்டால் கடைகளில் இதழ்கள் தீர்ந்து விடுகின்றன.
இந்தப்பின்னணியில் தான் அவர் பற்றிக் கட்டுக்கதைகள் எழுதத் தொடங்கினர் எழுத்தாளர்களும் உளவுத்துறை ஒட்டுண்ணிகளும்.
வாரம் ஒருமுறை வன்னிக்குச் சென்று பிரபாகரனுடன் பிஸ்கட்டும் தேநீரும் அருந்திவிட்டுத் திரும்பியவர்கள் போன்ற தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இவர்களைக் கேட்டுக்கொண்டு தான் பிரபாகரன் அரசியல் உத்திகள் வகுத்தது போலவும், பிரபாகரன் சொற்படிதான் இவர்கள் இங்கே இயங்கியது போலவும் எழுதிக் கவர்ச்சி காட்டுகிறார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டு, வெளிநாட்டுக்கு ஓடிப்போய்; சிங்கள அரசுக்குக் கைக் கூலிகளாக செயல்படும் சிலர், பிரபாகரன் பற்றி புத்தகம் போடுகிறார்கள்; ஏடுகளில் கட்டுரைகள் எழுதுகிறார்கள்.இலக்கியக் குத்தகைக்காரர்கள் நடத்தும் ஏடுகள் சில, புலம்பெயர்ந்த சிங்களக் கைக் கூலிகளின் புலம்பல்களை “நடுநிலையோடு” வெளியிடுகின்றன.
விடுதலைப்புலிகளை ஆதரிப்பது போல் தொடங்கி பின்னர் தூற்றி எழுதுவது அல்லது கழிவிரக்கம் காட்டுவதுபோல் நடித்துப் பின்னர் கடிப்பது அவர்கள் உத்தி. எல்லாம் சந்தை மயம்! சிங்களத்தின் சின்னத் தூதுவர் அம்சாவிடம் ஊதியம் பெற்ற ஊடகத்துறையினர் பற்றி செய்திகள் அம்பலமாகி வருகின்றன. புலனாய்வு வாரமிருமுறை ஏடொன்றின் செய்தி ஆசிரியர் ஒருவர் கைக்கூலி வாங்கியே கோடீஸ்வரன் ஆகிவிட்டாராம். அதனால் அந்த ஏடும் அவரை நீக்கிவிட்டதாம்.
இன்னொரு பக்க வேதனை, தமிழக அரசியலில் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை வணிகச் சின்னமாகப் பயன்படுத்துவது இன்னொருபக்க வேதனையாகும். பிரபாகரன் சொல்லியதால்தான் மக்களவைத் தேர்தலில் காங்கிரசை ஆதரித்தேன் என்று ஒரு தலைவர் கூறுகிறார். இன்னொருவரோ பிரபாகரன் கட்டளைக்கேற்ப என் அரசியலை வகுத்துக்கொண்டேன் என்கிறார்.
தமிழ்நாட்டில் அவரவர் எடுக்கும் அரசியல் சந்தர்ப்பவாத நிலைபாடுகளை ஞாயப்படுத்த பிரபாகரன் பெயரைப் பயன்படுத்துவதும், அவர் சொல்லித்தான் செய்தேன் என்பதும் அவர் பெயருக்குக் களங்கம் சேர்ப்பதாகும்.
பிரபாகரன் நிகழ்காலத்தின் ஈடு இணையற்ற விடுதலைப் புரட்சியாளர். விடுதலை இயக்கத் தலைவர். போர் முறையில் தேர்ந்த திறனும், அரசியலில் ஆழ்ந்த அறிவும் பெற்றவர். அவருடைய ஆற்றல், அர்ப்பணிப்பு ஆகியவை தமிழ்நாட்டு மக்களிடையே அவர்க்குப் பெரும் புகழை ஈட்டித்தந்துள்ளன. தமிழகத் தமிழர்கள் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய கல்வி நிறைய இருக்கிறது. தமிழ்த் தேச விடுதலைக்கு, தமிழ்மொழி விடுதலைக்கு, சாதி ஒழிப்பிற்கு, பெண் விடுதலைக்கு, சமத்துவப் பொருளியல் வளர்ச்சிக்கு என அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம், ஏராளம்.
அதேபோல் போலிப்பட்டங்களைப் புனைந்து கொள்ளாத அவரது எளிமையும் தன்னடக்கமும் தமிழ்நாட்டிற்குத் தேவையான பாடங்கள். குடும்பப் பதவி அரசியல் கொடி கட்டிப் பறக்கும் இந்நாட்டில், குடும்பத்தையே போர்க்களத்தில் போராளிகளாக இறக்கிவிட்ட அவரது ஈகம் நாம் பின்பற்ற வேண்டிய அரியசெயல்.
“கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை”
என்ற வள்ளுவப் பெருந் தகையின் போர் வரிகளுக்கேற்ப புலிப்படையை மட்டுமின்றி தம் குடும்பத்தையே பகைப்படையை எதிர்த்துக் போர்க்களத்தில் நிறுத்தியவர் பிரபாகரன்.
இத்தனைச் சிறப்புகள் கொண்ட அரிய தலைமை தமிழினத்தில் தோன்றியதால் தமிழினத்தின் பெருமை உலகு தழுவி விரிந்தது. ஆனால் அத்தகு தலைமையைத் தமிழ்நாட்டில் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அவரை மலினப்படுத்துதல் கூடாது. தமிழின உணர்வாளர்களில் சிலர் ரசனை உணர்வுகளில் மூழ்கி விடுகின்றனர். வீரத்தின் வர்ணனையையும் ரசிப்பது, சோகத்தின் வர்ணனையையும் ரசிப்பது என்ற நிலையில் இருக்கின்றனர்.
“பிரபாகரனோடு பேசி விட்டு வந்தேன்”
“பிரபாகரன் எனக்குக் கட்டளை இட்டார்”
என்று ஒருவர் சொன்னால் அச் சொற்களில் மயங்கிவிடுகின்றனர்.
யாராக இருந்தாலும் பின்வருமாறு கேளுங்கள்:
“பிரபாகரன் பெருமைகளைப் பேசுங்கள்; விடுதலைப்புலிகளின் சாதனைகளைப் போற்றுங்கள். ஆனால் ஈழ விடுதலைக்கும், தமிழ்நாட்டு விடுதலைக்கும் நீங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்கள்? உங்கள் வேலைத்திட்டம் என்ன? உங்கள் புரட்சிப்பணி என்ன?”
இப்படிப்பட்ட வினாக்கள் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியலை செம்மைப்படுத்த உதவும். மேனாமினுக்கி அரசியலைத் தடுக்கும்.
—
நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
http://www.meenagam.org/?p=16709
சோக பூமியில் துரோக அரசியல்: சீன அடிமை Vs அமெரிக்க பொம்மை!
போரில் தோற்றவர்களைவிட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்’ என்பது புத்தனின் வாக்கு! தனது வலது பக்கத்தில் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவையும் இடது பக்கத்தில் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் தனது தம்பியுமான கோத்தபயவையும் வைத்துக்கொண்டு, ஈழத்தில் இரக்கமற்ற ரத்தக் கொடுமையை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தாவின் அரசியல் ஆளுமை காரணமா… ஃபொன்சேகாவின் ராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்!
மே 18-ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றாகமுடித்து விட்டதாக நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷே அறிவித்த அன்றே, இந்தப் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. ஃபொன்சேகாவைத் திருப்திப்படுத்த நான்கு நட்சத்திரங்களைக்கொண்ட ஜெனரல் பதவி தரப்பட்டது. மகிந்தாவுக்கு இணையாக ஃபொன்சேகாவும்சிங்களர் களால் கொண்டாடப்பட்டார். பத்திரிகைகள் அவரை வானளாவப் புகழ்ந்தன. இதுமகிந்தா வுக்குச் சகிக்கவில்லை. ஃபொன்சேகாவுக்கு நெருக்கமான ஏழு பத்திரிகையாளர்கள் தனியாக அழைக்கப்பட்டு, மிரட்டி அனுப்பப் பட்ட தகவல்தான் முதல் ஆரம்பம். ராணுவத்தளபதி யாக இருந்தால், அவர் தரைப் படை வீரர்களை மொத்தமாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்வைத்து எதையும் செய்துவிடுவார் என்பதால், ‘முப்படை களுக்கும் சேர்ந்த பொறுப்பு’ தரப்பட்டது. முக்கிய மானதாக அது சொல்லப்பட்டாலும் எந்த அதிகாரமும் இல்லாத பதவி அது. முறைப்படி டிசம்பர் 18-ம் தேதி ஃபொன்சேகா ஓய்வு பெற வேண்டும். அதற்குப் பின்னால் விளையாட்டுத் துறையின் ஆலோசகராக இருக்கலாம் என்று மகிந்தா போட்ட உத்தரவு, தன்னைக் கிண்டல் செய்யும் காரியம் என்று நினைத்து, ஃபொன்சேகா அவமானத்தில் நெளிந்தார்.
பாதுகாப்பு கூட்டுப் படைத் தலைமை அதிகாரி அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த ஃபொன்சேகாவுக்கு எந்தக் கோப்புகளும் அனுப்பவில்லை. பழைய கோதா வில் பல விஷயங்களைக் கேட்டு அனுப்பினார் அவர். ‘முப்படைகளும் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்பார்கள். அப்போது விளக்கம் அளித் தால் போதுமானது’ என்று விளக்கம் தந்தார்கள். அடுத்த நாள் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய கோத்த பய, ‘ஃபொன்சேகாவுக்கு அதிக அதிகாரம் வழங்கி னால், அது ஆபத்தானதாக இருக்கும்’ என்றார். ஃபொன்சேகாவுக்கு நெருக்கமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இப்படித் தொடர்ச்சியாக வந்த எந்தத் தகவலும்ஃபொன் சேகாவுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. இந்த மோதலைக் கொழும்பு பத்திரிகைகள் எழுதியது. இதை உற்றுக் கவனித்த எதிர்க்கட்சிகள், ஃபொன்சேகாவை அரசியலுக்கு அழைத்து வந்தால் நல்லது என்று நினைத்தன. ‘யூனிஃபார்மைக் கழற்றிவைத்துவிட்டு யாரும் அரசியலுக்கு வரலாம்’ என்று வஞ்சகத்தை மறைத்துவைத்துமகிந்தா வும் பச்சைக் கொடி காட்டினார்.
இந்த நிலையில்தான், ஃபொன்சேகாவின் அமெரிக்கப் பயணம் மர்மமான முறையில் நடந்தது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களைச் சர்வதேச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுபோகும் காரியத்தில் மும்முரமாக இருக்கும் நாடு அமெரிக்கா. அதற்கான ஆதாரங்களைத் திரட்டும் வேலையில் அது இறங்கியுள்ளது. அந்த நாட்டின் க்ரீன் கார்டுவைத்திருக்கும் ஃபொன்சேகா, இலங்கையின் ராணுவத் தளபதியாக இருப்பது அதற்கு வசதியாகப்போனது. அவரை அங்கு வரவழைத்து விசாரித்து வாக்குமூலம் வாங்க முடிவெடுத்தார்கள்.
‘நாட்டுக்கு விரோதமான எதையும் நான் செய்ய மாட்டேன்’ என்று அமெரிக்காவில் இருந்து திரும்பிய ஃபொன்சேகா கொழும்பு விமான நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்தார். தேவையான அளவுக்குத் தகவல்கள் அனைத்தையும் அவர் அமெரிக்காவுக்குக் கொடுத்துவிட்டார் என்றே கொழும்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. ‘அதைவிட முக்கியமாக ஃபொன்சேகாவை அதிபர் தேர்தலில் நிற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்கள். அந்தத் தைரியத்தில்தான் அவர் இருக்கிறார்’ என்றும் சொல்கிறார்கள். இதன் பின்னணி ரொம்பவே பீதியைக் கிளப்புவதாக இருக்கிறது.
ஜெயவர்த்தனா காலத்தில் அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடாக இருந்தது இலங்கை. ஆனால், இந்தியாவின் நெருக்கடியின்போது தனக்கு அமெரிக்கா எந்த உதவியும் செய்யவில்லை என்று கோபப்பட்டு, உறவைப் புதுப்பிக்காமல் போனார்கள். இதைத் தனக்குச் சாதகமாக சீனா பயன்படுத்திக்கொண்டது. இன்று முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டுப் பிரதேசம்போல இலங்கை மாறியது, அமெரிக்காவுக்கு உறுத்தல். இதை மாற்ற தனக்குக் கிடைத்த துருப்புச் சீட்டாக ஃபொன்சேகாவை அமெரிக்கா இறக்கிவிடக் காத்திருப்பதாகச் சொல் கிறார்கள். ‘நான் எப்போதும் சீனச் சார்பு கம்யூனிஸ்ட்’ என்று சொல்லிக்கொள்பவர் மகிந்தா ராஜபக்ஷே. அவர் ஆட்சிக்கு வந்ததும் ஆறு ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படாத சீன ஆயுதக் கிடங்கு ஒப்பந்தத்தைப் புதுப்பித்தார். அம்பாந்தொட்டையில் சீனத்துறை முகம், புத்தளத்தில் அனல்மின் நிலையம் அமைக்க வழி அமைத்தார். இந்தியாவும் அமெரிக்காவும் அணுசக்தி ஒப்பந்தம் போட்டதுமே இலங்கை மீது சீனாவுக்கு அதிகமான பாசம் பொங்கியது. சுமார் எட்டு நாட்கள் சீனாவில் தங்கி, தனது நட்பைப் புதுப்பித்தார் ராஜபக்ஷே. இது மட்டுமல்லாமல், அமெரிக்க எதிரியான இரானுக்கு உமா ஓயா அணையில் நீர் மின் நிலையமும் கொழும்பில் பெட்ரோல் சுத்திகரிப்பு மையமும் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. ‘யார் என்ன சொன்னாலும், சீனாதான் இலங்கையின் நலனை முழுமையாக விரும்பும் நாடு. அதற்காக இந்தியாவை நாங்கள் பகைக்க மாட்டோம்’ என்று மகிந்தா சொல்லி வருகிறார். ஆனால், அருணாசலப் பிரதேசத்தைச் சொந்தம் கொண்டாடுவது முதல் காஷ்மீர் பகுதிகளை ஆக்கிரமித்துவைத்திருப்பது வரை சீனாவுக்கும் இந்தியாவுக்குமான முட்டல் மோதல்கள் அதிகம். எதிரும் புதிருமான இரண்டு பேரை ஒரே நேரத்தில் நட்பு சக்தியாக இலங்கையால் நினைக்க முடியாது. ‘ராஜபக்ஷேவுக்குச் சாதகமாக அக்டோபர் 15-ம் தேதி இந்திய ராணுவம் உஷாராக இருந்தது’ என்று ஃபொன்சேகா சொன்னதும் அதிர்ச்சி அடைந்துவிட்டது இங்குள்ள மத்திய அரசு. இலங்கைக்குத் தேள் கொட்டினால் இந்தியாவுக்கு நெரி கட்டியது. ‘இன்னும் பல ரகசியங்களை ஃபொன்சேகா வெளியிடுவதைத் தடுப்பதற்காகத்தான் பிரணாப் முகர்ஜி கொழும்பு வந்திருப்பதாகச் சொல் கிறார்கள். ‘இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்’ என்று பிரணாப் சொல்லியிருக்கிறார். தனி ஈழம் கேட்காத, சகோதர யுத்தம் செய்யாத இந்திய மீனவர்களை நித்தமும் அடித்து விரட்டும் சிங்களக் கடற்படையைக் கண்டிக்காத பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசியல் குழப்பங்களைத் தீர்க்கப் போயிருப்பது, அங்குள்ள கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்து மகா சமுத்திரத்தில் அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டுவல் லரசுகளும் நடத்தக் காத்திருக்கும் கோர யுத்தத்தின் முதல் காரியமாக இலங்கையின் அதிபர் தேர்தல்நடக்கப் போகிறது. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளியும் தமிழர்களுக்குநல்லது இல்லை. சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும் நிற்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கே – பிரபாகரன் ஒப்பந்தப்படி பொது மக்கள் வாழும் இடத்தில் இருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற விதியைப் பின்பற்றாமல் கொக்கரித்து புலிகளை முதலாவது கோபப்படுத்தியவர் சரத் ஃபொன்சேகா. அதன் பிறகுதான் மகிந்தா ஆட்சிக்கு வந்தார். அமைதி ஒப்பந்தத்தை அவர் மதிக்கவே இல்லை. எனவே, இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ‘இன்று தமிழர்களுக்கு உரிமை தராமல் போனதற்கு யார் காரணம்?’ என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார் ஃபொன்சேகா. தமிழர்களது வாக்கு வங்கியை வாங்க இப்போதே வலை விரிக்க ஆரம்பித்துவிட்டார் அவர். மீள்குடியேற்றம் என்று சொல்லி ஏற்கெனவே வலையை விரித்துவிட்டார் ராஜபக்ஷே.
இவை இரண்டையும் சீனாவும் அமெரிக்காவும் அகலக் கண்கொண்டு பார்த்து இலங்கைத் தீவைக் கொத்தித் தின்னக் காத்திருக்கின்றன. இந்தியாவின் அடிவயிற்றில் என்னவோ நடக்கப்போகிறது!
நன்றி: ஆனந்த விகடன்
http://www.meenagam.org/?p=16768
காட்டுமிராண்டி காலத்தில் வாழ்கிறோமோ? – ஏ.ஆர்.முருகதாஸ் வேதனை
ஈழம் – மௌனத்தின் வலி என்ற புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் நக்கீரன் கோபால், டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், மிஷ்கின், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். டைரக்டர் முருகதாஸ் பேச்சில் எக்கச்சக்க கோபமும், வேதனையும்…
கற்பனைக்கும் எட்டாத சிந்திக்க முடியாத ஒரு கொடூரம் என்பதை கேள்விபட்டிருந்தாலும் கூட, இந்த புத்தகதில் உள்ள புகைப்படங்களைப் பார்க்கும்போது, ஒரு காட்டுமிராண்டி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஏன் என்றால் இதில் நிறைய விஷயங்கள் நமக்கு தெரியவே இல்லை. நம்ம அறிவுக்கு இதுவெல்லாம் வரவே இல்லை என்று நினைக்கும்போது யாரோட தப்பு. ஏன் இவ்வளவு தகவல் தொழில் நுட்பத்தில் பயங்கரமாக பின்தங்கியிருக்கிறோம். வானத்தை எட்டி விட்டோம் என்று சொல்கிறோம். அனால் இதுவெல்லாம் நமக்கு தெரியவே இல்லை என்று சொல்லும் போது வெட்கமாக இருக்கிறது.
வட இந்தியாவில் போய் இதையெல்லாம் சொன்னால் ‘யா, தி ஸ்ரீலங்கா பிராப்ளம்’ என சாதாரணமாக கேட்பார்கள். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டால், நிதி திரட்டுவதில் தமிழன் தான் முதல் இடத்தில் இருக்கணும். கார்கில் வார் நடந்தது என்றால் நிதி திரட்ட தமிழன்தான் முதல் இடத்தில் நிற்கணும். ஆனால் ஒரு இனம் அழிவது உங்க அறிவுக்கே வராதா? உங்களுக்கு அப்படி ஒன்று நடப்பதே தெரியாதா? யார் தப்பு இது. அரசியல் ஈகோவா? மதமா? இல்ல பழிவாங்கலா? எனக்கு தெரியல.
செயற்கைக்கோளில் இருந்து பார்க்கும்போது மரத்தில் உட்காந்திருப்பது குருவியா, காக்காவா என பார்க்கக்கூடிய அறிவியல், முகாம்களில் எத்தனை பேர் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பதியவே இல்லையா? தமிழனை பார்த்தவுடனேயே அந்த கேமரா திரும்பிடுச்சா? போர் குற்றம் நடக்கிறது என்று ஐ.நா. சோதனை செய்ய வரும்போது, ஒரே நாளில் கிட்டதட்ட 50 ஆயிரம் தமிழர்கள் புல்டோசரால் நசுக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாமே ஊனமுற்றவர்கள், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள்.
ஏன் என்றால் அவர்கள் அடையாளத்தை மறைக்கிறார்கள். பேசினால்தான் தமிழன். தமிழ் பேசும்போது தமிழனாகிறான். தமிழ் பேசும்போது கொலை செய்கிறார்கள். ஆனால் பேசாத குழந்தை. குழந்தைக்கு இன்னும் மொழியே தெரியாது. அந்த குழந்தை என்ன பாவம் செய்தது. அப்பாவி குழந்தைகளை கொலை செய்திருக்கிறார்கள். பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படை கூட ஒரு கொள்கை வைத்திருக்கிறார்கள். அதாவது குழந்தைகள், பெண்களை கொலை செய்ய மாட்டோம் என்று. கூலிப்படைக்கு இருக்கிற ஒரு கட்டுப்பாடு கூட ஒரு ராணுவத்துக்கு கிடையாது.
அணுகுண்டுக்கும், புத்தகத்துக்கும் ஒரே வித்தியாசம்தான். அணுகுண்டு வீசும்போதெல்லாம் வெடிக்கும், புத்தகம் படிக்கும் போதெல்லாம் வெடிக்கும். இந்தப் புத்தகம் அந்த மாதிரியான புத்தகமாக இருக்க வேண்டும்.
அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் நடந்த போரை தடுத்து நிறுத்தியது ஒரே ஒரு புகைப்படம் தான். ஒரு சிறுமி நிர்வாணமாக நடந்து வருவதுபோல் உள்ள புகைப்படம்தான். இங்கு அதைவிட கொடூரமான புகைப்படங்கள் இருக்கின்றன. இந்தப் புகைப்படத்திற்கு இந்த உலகம் என்ன பதில் சொல்லப்போகிறது.
அப்பாவித் தமிழர்கள் எல்லாம் சாகும்போது, போர்க்குற்றம் என்றால், அதைப் பார்த்து வாய் மூடி, கண் மூடி இருப்பது வரலாற்றுக் குற்றம். தரையில் முட்டி அழ வேண்டும் போல் இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையின்மையால் தான் நாம் அழிந்து கொண்டு வருகிறோம். இனியாவது நாம் ஒற்றுமையாக இருந்து இந்த கொடுமைகளை தடுக்க வேண்டும் என்றார் கோபத்துடன்.
http://www.meenagam.org/?p=16522
"ஏனென்றால், எந்தச் சாதியாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் அரசியல்ரீதியாக மிக ஒடுக்கப்படுபவர்கள் பெண்கள்தான்....!''
| ||
''என் பெயர் அகராதி!'' |
|
மக்களுக்காகப் போராடுவது என்பது மகிழ்ச்சியான அனுபவம். ஒருமுறை வீதிக்கு வந்து போராடிப் பாருங்கள். முதல் தடவை தயக்கமாக இருக்கும். நடுக்கம்கூட வரும். ஆனால், அந்தப் போராட்டம் முடிந்ததும் உங்கள் மனதுக்குள் ஒரு கம்பீரமும், பெருமித உணர்வும் பொங்கும். அதுதான் மக்கள்போராட்டங்களின் உண்மையான வெற்றி. குறிப்பாக, பெண்கள் பெரும் எண்ணிக்கையில் அரசியல் போராட்டங்களில் பங்கெடுக்க முன்வர வேண்டும். ஏனென்றால், எந்தச் சாதியாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் அரசியல்ரீதியாக மிக ஒடுக்கப்படுபவர்கள் பெண்கள்தான்!''
நன்றி : விகடன்
--
-- பாக்கியராசன் சே..
நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org
AIDS - அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது ! இதோ ஆதாரத்துடன் !
"எய்ட்ஸ் என்பது மனிதர்களால் சோதனைச் சாலையில், மனிதர்களுக்கு எதிராக கிருமியை உருவாக்க முடியும்..."AIDS : Made in America - பேரழிவு ஆயுதம் - Dr. புகழேந்தி (இந்தியா)
(மருத்துவத் துறையில் தங்கப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் கல்பாக்கம் அணு மின் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதியில் கதிர்வீச்சு அபாயம், குழந்தைகளுக்கு ஆறு விரல்கள் இருப்பது, புற்றுநோய் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். அவரது AIDS: A Biological Warfare? நூலைத் தழுவி இக்கட்டுரையை ச.வேலு தொகுத்துள்ளார். )
இன்று வரை நம்மிடையே "பாதுகாப்பான உறவு" எனப் பரப்பப்பட்ட செய்திகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விசுவாசமான பிரச்சாரங்களும் ஒழுக்கம் பற்றிய விளிம்புக்குள்ளேயே சுற்றிவந்தன. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா தளங்களில் இறக்கிவிடப்பட்ட, இந்த எய்ட்ஸ் பற்றிய மறுபக்க ஆய்வுகள், இன்றுவரை புரிய வைக்கப்பட்ட செய்திகளைத் தலைகீழாக மாற்றியுள்ளது.எய்ட்ஸ் பீதியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஊசி தயாரிக்கும் குழுமங்களும், இரத்தம் செலுத்தும் மையங்களும், ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்களும் கொள்ளையடிக்கத் தொடங்கிவிட்டன.
எய்ட்ஸ் என்பது இயற்கை வியாதியா?
எய்ட்ஸால் இறந்த பலரையும் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவ ஆய்வாளர்களின் அறிக்கை நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது. எயிட்ஸ் என்பது இயற்கையான வியாதியுமல்ல, ஓரினச் சேர்க்கையாளர்களை (Homo Sexuals) ஒழிக்க மட்டும் வந்த வியாதியுமல்ல. கருப்பின மக்களை மட்டும் அழிக்கவந்த வியாதியுமல்ல. எய்ட்ஸ் என்பது மனிதர்களால் சோதனைச் சாலையில், மனிதர்களுக்கு எதிராக கிருமியை உருவாக்க முடியும் என்பதற்கான ஆதாரத்திலிருந்து..
1) எய்ட்ஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பது இன்று உறுதியாகின்றது.
(2) இத்தகைய ஆட்கொல்லிக் கிருமி உருவாக்கங்களின் தேவை என்ன? இது எத்தகைய அழிவுகளை உருவாக்க வல்லது என்பதனையும், இதன் பின்புலம் என்ன என்பதனையும் அறிந்தோமானால், அதிர்ச்சியளிக்கக்கூடிய பல உண்மைகள் புரியவரும்.
எய்ட்ஸின் பின்னணி
அமெரிக்கா தனது மேலாண்மையை நிறுவவும், மூன்றாம் உலக மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும் எய்ட்ஸ் போன்ற கிருமியை உருவாக்கத் திட்டமிட்டது. இதற்கான நிதியை அமெரிக்க காங்கிரஸ் இடமிருந்து (60 மில்லியன்டாலர்கள்) பெற்று அமெரிக்க இராணுவத் தலைமைக்கு (பென்டகன்) வழங்கியுள்ளது. இதற்கு பின்புலமாக செயற்பட்டவர் ஹென்றி கிஸ்சிங்கர் (அமெரிக்காவின் முன்னாள் Secretary of State) என்பதும், இந்த இரகசிய உயிரியல் கிருமியை உருவாக்கும் திட்டத்திற்கு MK-NAOMI (Negroes Are Only Momentary Individuals) எனப் பெயரிடப்பட்டது என்பதும், சீ.ஐ.ஏ.யின் துணையுடன் இத்திட்டத்தின் முழுக் கட்டுப்பாடும் கிஸ்சிங்கர் மற்றும் அவருடன் இருந்த மிகச் சில MK NAOMI விஞ்ஞானிகள் கைகளிலேயே இருந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த இராணுவ உயிரியல் கொல்லி ஆராய்ச்சித் திட்டத்தின் விளைவாக மனிதனில் நோய் எதிர்க்கும் திறனை சீர்குலைக்க உருவாக்கப்பட்ட ஆற்றல் மிக்க கிருமியால் ஏற்படும் (இறப்பும்) முடிவுகளையும், அதற்கான விரிவுபடுத் தப்பட்ட திட்டங்களையும் அம்பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். வழக்கம்போல இச்செய்திகள் வெளிவராமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டுமுள்ளன.
செயல்திட்ட வடிவங்கள்
1964 இல் உலக நாடுகளிலிருந்து பலதரப்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை சேகரிப்பதும், புற்றுநோய் உருவாக்கக்கூடிய வைரஸ் கிருமிகளை பெருமளவில் சோதனைச் சாலைகளில் வளர்ப்பதற்குமான சிறப்பு வைரஸ் புற்றுநோய்த் திட்டமும் (SVCP - Special Virus Cancer Program 1962-77) தேசிய புற்றுநோய் நிறுவனமும் (NCI - National Cancer Institute) அரசின் நிதி உதவியோடு ஒன்றாக இணைக்கப்பட்டு அனைத்து புற்று நோய்களையும் உள்ளடக்கக்கூடிய ஆய்வுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.இவ்வாய்வுத் திட்டத்தின் கீழ், சிம்பன்சி குரங்கின் உறுப்புகளை மனித உடம்பில் பொருத்தி, சோதனை செய்துள்ளனர். 1964 இல் சிம்பன்சி குரங்கின் சிறுநீரகங்களை ஆறு மனிதர்களுக்குப் பொருத்தியதில் ஆறு பேரும் இறந்துள்ளனர். பின்னர் மனிதர்களுக்கிடையே உறுப்பு மாற்றம் செய்ததில் விஞ்ஞானிகள் வெற்றிகண்டுள்ளனர்.
SVCP திட்டத்தின் மூலமே விலங்குகளைப் பாதிக்கும் பல வைரஸ் கிருமிகளை மனிதர்களிடையே பரப்பும் சோதனைகள் நடந்தேறியுள்ளன. இத்திட்டத்தின் வாயிலாக புற்றுநோயை உண்டாக்கவும், மனித நோய் எதிர்ப்புத் திறனை சீர்குலைக்கக்கூடிய பல விலங்கு வைரஸ் கிருமிகள் மனித செல்களுக்கும்(Cells), திசுக்களுக்கும் மாற்றம் செய்யும் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. இக்குழுவில் Robert GalloTk (எய்ட்ஸ் கிருமியின் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்) இடம்பெற்றிருந்தது முக்கிய அம்சமாகும்.
இத்திட்டத்தில் ஜப்பான், ஸ்வீடன், இத்தாலி, நெதர்லாந்து, இஸ்ரேல், உகண்டா, ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
பின்னர் இத்திட்டத்தில் அமெரிக்க இராணுவ உயிரியல் போர்முறை (Biological Warfare) ஆய்வாளர்களும் இணைக்கப்பட்டனர். அக்டோபர் 18, 1971 இல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் உத்தரவின்பேரில் இராணுவ உயிரியல் போர்முறைச் சோதனைச் சாலைகளை SVCP இன் கீழ் கொண்டுவரும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் ஆய்வகத் தேவைகளுக்கான புற்றுநோயை உருவாக்கும் வைரஸ் கிருமிகளை தொடர்ந்து கிடைக்கும் வகையில் செய்தலே அதன் முக்கிய பணி என்றும் மனிதர்களுக்கு நெருக்கமான விலங்குகளைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, (எய்ட்ஸை உண்டாக்கும் HIV அத்தகைய இனத்தைச் சேர்ந்தது) மனிதர்களை பாதிக்கும் வைரஸ் கிருமிகளை பெருமளவு வளர்த்தெடுப்பது போன்றவை பிற பணிகளாகவும் இருக்கும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த ஆய்வகங்களில் தான் சுண்டெலி, பூனை போன்ற வற்றைப் பாதிக்கும் புற்றுநோய் வைரஸ் கிருமிகளை குரங்குகளுக்குச் செலுத்தி அதன்மூலம் குரங்குகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் சோதனையில் வெற்றி அடைந்தனர். இத்தகைய சோதனைகளில், இனம் விட்டு இனம் தாவும் (Species jumping) கிருமிகள் உருவாக்கப் படுவது பொதுவான விசயமாக இருந்து வந்தது.1970 இல் எய்ட்ஸ் ஏற்படுத்தும் HIV கூடவே ஒரு புதுவகை Herpes வைரஸ் ஓரினச் சேர்க்கையாளர்களிடத்து மட்டும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த Herpes வைரஸ் தற்போது எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படும் Kaposis Sacroma (Gay Cancer of AIDS) என்ற நோய்க்குக் காரணம் என நம்பப்படுகின்றது. உலகில் எய்ட்ஸ் தாக்கம் வருமுன் ஆரோக்கியமான இளைஞர்களுக்கு Kaposis Sacroma பாதிப்பு இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை.
எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட பத்து ஆண்டுகள் கழித்து தெரியவந்த (1994இல்) Kaposis Sacroma வைரஸ்களுக் கும் மனிதர்களை ஒத்த தன்மையுள்ள விலங்கினங்களுக்கு (குரங்குகளுக்கு) வியாதியை ஏற்படுத்தும் Herpes வைரஸ்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதும், அத்தகைய வைரஸினைத் தான் பத்தாண்டுகளுக்கு முன்னர் விலங்குகளிடமிருந்து மனித உடலில் வெற்றிகரமாக செலுத்தும் ஆய்வுகள் மும்முரமாக நடைபெற்றன என்பதும் தெளிவாக உள்ளது.
மேலும், கலப்படம் செய்யப்பட்ட தடுப்பூசிகளால் எய்ட்ஸ் வரும் என்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ள துடன், HIV வைரஸ் புற்றுநோயை உண்டாக்கவல்ல கிருமியே எனவும், எய்ட்ஸ் என்பது கொள்ளை நோயாகவரும் ஒருவித புற்றுநோயே என்பதை 1984 இல் Robert Gallo (எயிட்ஸ் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்) தெளிவுபடுத்தி உள்ளார்.
போலியோ தடுப்பூசியை கண்டுபிடித்த ஜோன்ஸ் சால்க்ஸ் செய்த பல ஆய்வுகளில் அவருக்குத் தெரியாமலேயே Hela செல்கள் கலந்திருந்தது அவருக்குப் பின்னர் தெரியவந்துள்ளது. அதே போல் புற்றுநோய் தடுப்பூசி ஆய்வுகளில் Hela செல்கள் அதிகம் கலந்திருப்பது பிறகு தெரியவந்துள்ளது. (4)1951 இல் முதன் முதலில் சோதனைச்சாலைகளில் மனித செல்களை வளர்த்தெடுத்தனர். இதற்கு பால்டிமோர்நகரைச் சேர்ந்த Hennrieta Lacks என்னும் இளம் கறுப்பின பெண்ணின் கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட திசுவே Hela செல் என அழைக்கப்படுகின்றது.இதே போல் இரண்டாம் உலகப் போரின் போது மனித இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட Yellow Fever Vaccine இல் மஞ்சள் காமாலை வைரஸ் (Hepatitis Virus) கலந்திருப்பது பின்னர் தெரியவந்துள்ளது.
1970 - 80 களில் குடர காய்ச்சலுக்கு எதிரான தடுப் பூசிகளில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தில் தயாரான Mycoplasma, வைரஸ் கிருமிகள் கலக்கப்பட்டிருந்ததுடன் இதை டெக்சாஸ் மாநில ஹன்ட்ஸ்விலி சிறைக் கைதிகளுக்குக் கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதை இராணுவமும், மருத்துவ மையங்களும் இணைந்து நடத்தியது. இந்த மனித விரோத பரிசோதனைக் குழுவில் DNA வடிவத்தைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான ஜேம்ஸ் வாட்சனும் ஒருவர் என்பது வெட்கக்கெடான செய்தி. (இவர் தற்போது Human Genome Project இன் முக்கிய அலுவலர்)ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இரகசியமாக செலுத்தப் பட்ட Mycoplasma Penetrans எனும் கிருமியைப் பற்றிய தகவல்களும் மறைத்தே வைக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் டேவிட் என்னுமிடத்தில் ஒரு வகை குரங்குகளிடம் ஏற்பட்ட எயிட்ஸ் கொள்ளை நோய் (Simian AIDS) காரணமாக பெரும்பாலான குரங்குகள் இறந்துள்ளன. இதுவே முதலில் பதிவுசெய்யப்பட்டது. இதுபோன்று நான்கு இடங்களில் இது நிகழ்ந்துள்ளது. இந்த வகை குரங்குகள் இறந்துபோக HIVNa காரணம் எனப் பின்னர் தெரியவந்தது. இச்சம்பவத்தை மறைக்க பல குரங்குகள் அட்லாண்டாவி லுள்ள எர்கிஸ் பகுதிக்கு கடத்திவரப்பட்டன. இவ்வாறு கடத்தப்பட்ட குரங்குகள் அனைத்தும் 1980 வாக்கில் Simian AIDS நோயால் தாக்கப்பட்டு இறந்துள்ளன.
1974ல் கால்நடை மருத்துவர்களால் சிம்பன்சி குரங்குக் குட்டிகளிடம் எயிட்ஸ் போன்ற நோய் உருவாக்கப்பட்டது. இளம் சிம்பன்சி குரங்குக் குட்டிகளை தாயிடமிருந்து பிரித்து, Bovine C Type Virus என்னும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளான மாடுகளிடமிருந்து கிடைக்கும் வைரஸ் கலந்த பாலை மட்டும் கொடுத்தால் அக்குரங்குக் குட்டிகள் ஒரு வருடத்துக்குள் நியுமோனியா காய்ச்சல் (The Gay Pneumonia of AIDS) கண்டு இறந்துள்ளன.
1979இல் பெண்டகன் மையத்தின் உயிரியல் விஞ்ஞானி Dr. Mac Arthur இன் உத்தரவுக்கிணங்க சோதனைச் சாலைகளில் உருவாக்கப்பட்ட HIV அமெரிக்காவில் முற்றிலும் வெறுக்கப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களிடத்து அவர்களுக்குத் தெரிந்தும், தெரியாமலும் பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் விளைவாகவே AIDS கிருமி அவர்களுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தின் மூலம் பரப்பப்பட்டது. அதன் காரணமாக அமெரிக்காவில் AIDS ஆல் பாதிக்கப்பட்டவர்கள் நியுயோர்க் மன்ஹட்டன் நகரைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்களே. மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்திற்கு ஒத்துக்கொண்ட 20 சதவீதமான ஓரினச் சேர்க்கையாளர்கள் இரத்தத்தில் 1980 - 81 வாக்கில் செய்யப்பட்ட ஆய்வில் HIV Positive இருப்பது தெரியவந்தது. இது 1983 இல் 30 சதவீதமாக உயர்ந்து உள்ளது. 1981இல் தான் HIV எயிட்ஸ் க்கு காரணம் என வெளியிடப்பட்டது.
நியுயார்க் நகர மன்ஹட்டன் (Manhatton) தான் எய்ட்சின் பிறப்பிடம். ஆபிரி;க்காவில் 1982ஆம் ஆண்டின் பின்னரே உறுதிசெய்யப்பட்ட AIDS நோயாளிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எய்ட்ஸ் வல்லுநர்கள் சிம்பன்சி குரங்குக ளிடம் இருந்துதான் மனிதனுக்கு எயிட்ஸ் கிருமி தொற்றி உள்ளது எனும் கருத்தை மட்டும் ஏற்றுக்கொள்கின்றனர்.1970களில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் காமாலை தடுப்பூசி சிம்பன்சி குரங்குகளின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்பதும், குரங்குகளிடமிருந்து எய்ட்ஸ் தோன்றி வளர்ந்திருக்கிறது என்பதும் தற்செயல் நிகழ்வு அல்ல.ஆபிரிக்காவில், உலக சுகாதார நிறுவனத்தின் திட்டமான பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், பல மில்லியன் மக்களுக்கு, எய்ட்ஸ் கிருமி கலந்த பெரியம்மை தடுப்பூசி கொடுத்ததன் காரணமாக எயிட்ஸ் பரவியது என்பதை மே 11 1987 டைம்ஸ் பத்திரிகை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது
சோதனை விலங்குகளாக சொந்த நாட்டு மக்கள்
1965இல் உருவாக்கப்பட்ட LEMSIP (The Laboratory for Experimental Medicine and Surgery) என்ற ஆய்வுக்கூடம் 1997 வரை, விலங்குகளிடமிருந்து மனித செல்களில் பரவக்கூடிய வைரஸ் கிருமிகளை ஆய்வுசெய்யும் நியுயார்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகளுக்கு விலங்கின் உறுப்புகளை தொடர்ந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.நியுயார்க் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் தான் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டார்கள் என்பது கவனிக்கத்ததக்கது.1994இல் மக்களின் ஒப்புதல் இல்லாமலேயே பல கதிர்வீச்சு தொடர்பான சோதனைகளை அமெரிக்க மக்கள் மீது அரசு நடத்தியுள்ளதற்கு எதிராக பல்வேறு ஜனநாயக அமைப்புகள் நடத்திய போராட்டத்திற்கு இணங்கிய அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், இவற்றை விசாரிக்க அறிவுரைக் குழுவினை ஏற்படுத்தினார். தனது அறிக்கையில் (3 ஒக்டோபர் 1995) 1960 வரை மருத்துவர்கள் நோயாளிகளின் ஒப்புதல் பெறாமலே அவர்கள்மீது சேதனை செய்துள்ளதை அக்குழு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் 20 வருடங்களுக்கு மேலாக The U.S.Code annotated title 50, Chapter 32, Section 1520, dated July 30, 1977 என்கின்ற இச்சட்டத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சகம் தனது சொந்த மக்களையே சோதனை விலங்குகளாக நடத்த ஒப்புதல் அளித்து வந்துள்ளது.
எய்ட்ஸ் யாரையும் தாக்கலாம் என இருந்தாலும், ஆபிரிக்காவில் ஆண் - பெண் புணர்ச்சிக்குப் பின்பே எய்ட்ஸ் ஏற்பட்டது என்பதும், அமெரிக்காவில் அது ஓரினச் சேர்க்கையாளர்களிடம் (ஆண்களிடம்) அதிகமாகக் காணப்பட்டது என்பதும் தெளிவான விசயங்கள்.
HIV கிருமி இனம், மொழி, பாலினத்தை மதிக்காது எனக் கொண்டால் ஏன் அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மட்டும் எய்ட்ஸ் அதிகம் வரவேண்டும்?
எய்ட்ஸ் வல்லுநர்கள் அமெரிக்காவில் எய்ட்ஸின் பாதிப்பு ஆபிரிக்காவில் இருந்து வந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களைப் பாதிக்குதம் எய்ட்ஸ் கிருமி வகை ஆபிரிக்காவில் இல்லவே இல்லை. பின் இது எப்படிச் சாத்தியம்?
1990களில் அணுவியல் உயிரியல் வல்லுநர்கள் எய்ட்ஸ் கிருமியில் எட்டு வகைகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் D வகை தான் பெருங்குடலைக் (Rectum) தாக்கும் திறனைக் கொண்டது. இந்தவகை எய்ட்ஸ் கிருமி அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களைத் தாக்குகின்றது. மாறாக ஆபிரிக்க எயிட்ஸ் கிருமி பிறப்புறுப்பு செல்களை (Vaginal Cervical Cells) தாக்கும் திறன் இருப்பது தெரியவந்தது. டீ வகைக் கிருமிகளால் அச்செல்களில் பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை.
1997 ஆய்வுகளில் பத்தில்; ஒரு அமெரிக்கருக்கு (வெள்ளை இன) எய்ட்ஸ் எதிர்க்கும் மரபணுக்கள் இருப்பதா கவும், ஆபிரிக்காவில் உள்ள கறுப்பின மக்களில் ஒருவர் கூட எய்ட்ஸ் பாதுகாப்பு மரபணுக்கள் பெற்றிருக்கவில்லை என்பதையும் தெளிவாகக் கூறுகையில் எயிட்ஸ் கிருமி என்பது சில இனக் குழுக்களையும் (கறுப்பர்களையும்) ஓரினச்சேர்க்கையாளர்களையும் திட்டமிட்டு ஒழிக்க உருவாக்கப்பட்ட Designer Virus என்பது தெளிவாகின்றது.
எய்ட்ஸ் கிருமி கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான Robert Gallo 1987இல் Play Boy சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் "எனக்குத் தெரிந்து அமெரிக்காவில் ஆண் -பெண் புணர்ச்சிக்குப் பின் ஏற்பட்ட எய்ட்ஸ் பாதிப்பு இல்லவே இல்லை என்று கூறலாம்" என்றும், "அமெரிக்க பொது மக்களுக்கு எய்ட்ஸ் வியாதி என்றும் பெரும் பிரச்சினையாக இராது" என்றும் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்."அமெரிக்க அதிகார மையங்களை விரிவுபடுத்த ஆற்றல் கொண்ட கிருமியை (Super Germ)உருவாக்குவதன் தேவை அரசுக்கு உள்ளது" A.H.Passerella - Director, Department of Defence, USA.
ஆக எயிட்ஸ் கிருமி அமெரிக்க ஆய்வகங்களில் உருவாகி பல ஆயிரம் மக்களை அழிக்கும் எண்ணத்துடன் (Weapon of mass destruction WMD) உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் இவ்வளவு ஆதாரங்களுடன் தெளிவான பின்பும், அமெரிக்கா மற்றவர்களிடம் உயிரியல் ஆயுதம் இருப்பதாகக் கூறி அவர்களைத் தாக்கும் இவர்களின் யோக்கியதையை நாம் என்னவென்பது?
Reference:1.
Dr. Alan Cantwell Jr. Queer Blood: The secret AIDS Genocide plot.
2. John Seale, M.D. "Origins of AIDS viruses HIV-1 & HIV-2: Fact or Fiction?" The British Journal of the Royal Society of Medicine- 1988 (81: 617-619)
3. Dr Leonard G. Horowitz. "Emerging virusus: AIDS. Ebola", Accident or International (1996)
4. M.Gold, A conspiracy of cells: one woman's immortal legacy and the medical scandal it caused.
5. William Blum, Rough State.
6. "Small pox Vaccine Triggered AIDS Virus" The London Times Front page story 11.05.1987
-நன்றி திரு. யுவன்பிரபாகரன்
விழ விழ எழுவோம் பாகம் - 1, 2, 3, 4
http://www.youtube.com/watch?v=bpFTkVMgd1g&feature=related
http://www.youtube.com/watch?v=OIZN_MXxOOY&feature=related
http://www.youtube.com/watch?v=-KfgduZbWzE
http://www.youtube.com/watch?v=KALUnL2PqTM&feature=related
ஆனந்த விகடனின் ஆரிய வெறி -- வில்லவன்
ஆனந்த விகடன், ‘பொக்கிஷம்’ என்ற தலைப்பின் கீழ் ஓவ்வொரு இதழிலும் அது பழைய காலத்தில் வெளியிட்ட செய்திகள் சிலவற்றை மறுபதிப்பு செய்து வருகிறது. 21-10-2009 நாளிட்ட இதழில் 29-1-1939-இல் வெளியிட்ட ஓரு செய்திக் ‘காலப்பெட்டகம்’ என்ற தலைப்பில் வந்துள்ளது.
”தமிழ்நாடு தமிழர்களுக்கே என அக்காலத்தில் ஓரு கோசம் எழுந்தது. இந்த விபரீதப் போக்கைக் கண்டித்து 29-1-1939 இதழில் எலிவளை எலிகளுக்கே என்னும் தலைப்பில் ஏழுபக்கக் கட்டுரை தீட்டியது விகடன். அதிலிருந்து ஓரு துளி.. ” என்ற முன்னுரையுடன் இப்போது வெளியிட்டுள்ளது.
“வீட்டில் எலிகளின் கூச்சல் அதிகமாய் போயிற்று. எலிவளை எலிகளுக்கே என்று கோசம் போட்டுக் கொண்டே இருந்தன.
வீட்டின் எஜமான் ஓரு கொத்தனை அழைத்து எலிவளை களையெல்லாம் சிமெண்டு போட்டு மூடச்செய்ததால் எலிவளைகள் எலிகளுக்குகே ஆயின.
ஓரு பைத்தியக்கார இயக்கத்துக்கு உபமானம் சொல்லவேணுமானால், உபமானமும் பைத்தியாக் காரத்தனமாகத்தானே இருந்தாக வேண்டும்”.
ஆனந்த விகடன் அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லை என்பதை இம்மீள் பதிப்பும் அதற்கான இன்றைய முன்னுரையும் உறுதி செய்கின்றன. பூணூல் என்பது வெறும் நூல் அல்ல. அது பார்ப்பனர்களின் வர்ணத்திமிருக்கான நரம்பு என்பது மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது.
1938 இல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தந்தை பெரியார் தலைமையில் பேரெழுச்சியாய் நடந்தது. அப்போது பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் திருச்சியிலிருந்து இந்தி எதிர்ப்புப் பரப்புரைப் பேரணி நடைப்பயணமாக சென்னை வந்தது, அவ்வணியினரை சென்னை கடற்கரையில் வரவேற்று மாபெரும் மக்கள் எழுச்சி பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பெரியார், மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க்காவலர் கி.இ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட தலைவர்களும் தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் தந்தைபெரியார் எழுப்பிய முழுக்கமே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது. அதன்பிறகு பெரியார் தமிழர்கள் ஓவ்வொருவரும் தங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பச்சை குத்திக்கொள்ளவேண்டும் என்றும், தங்கள் வீடுகளில் அம்முழுக்கத்தைக் கல்வெட்டில் பதிக்கவேண்டும் என்றும் அறிக்கை கொடுத்தார். அம்முழக்கத்தை மக்கள் ஆதரித்து முழங்கினர்.
அப்போது ஆரிய ஏடான ஆனந்தவிகடனுக்குப் பைத்தியமே பிடித்து விட்டது. அதனால் ‘எலிவளை ஏலிகளுக்கே ’ எனத் தத்துவம் உதித்தது. தமிழ்நாடு எலிவளையாகவே இருக்கட்டும். அந்த எலிவளை தமிழர்களுக்குச் சொந்தமானது. ஆரியப் பார்ப்பனர்களே, உங்களுக்குச் சொந்தமான எலிவளை எங்கே இருக்கிறது?
உங்களுக்கு இங்கே என்ன வேலை? வளைகளை வாழ்விடமாகக்கொண்டுள்ள எலிகள் தம் வளைகளின் மீதான உரிமையைப் பெறக் குரல் கொடுப்பது இயல்பானதுதான். ஆனந்த விகடனே, உன் பூர்வீகம் எது? எங்கள் தோளில் உட்கார்ந்து கொண்டு எங்கள் செவியைக் கடிக்கிறாய்.
கல்பிளந்து, மலைபிளந்து, கழனியெல்லாம் ஊருவாக்கி சொந்த மண்ணை வளமாக்கி சொந்த அரசை உருவாக்கி நாடாண்ட தமிழினத்தை என்றும், தமிழர் தாய்நாட்டை எலிவளை என்றும் இன்றைக்கும் கொச்சைபடுத்தும் ஆனந்த விகடனே, 1938-இல் எழுந்த ”தமிழ்நாடு தமிழர்களுக்கே” என்ற முழக்கம் முடிந்துவிடவில்லை. இன்று மீண்டும் வீச்சோடு எழுகிறது! ”தமிழ்த்தேசத் குடியரசே தமிழர்களின் இலட்சியம்!
tryponraj@gmail.com
"கானகத்தில் உள்ள புலி ஆபத்தானது. அடிப்பட்ட புலி அதை விட ஆபத்தானது. விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று கொக்கரிக்கிறார்கள். இருக்கட்டும்… இப்போது அழிந்தவர்களாகவே இருக்கட்டும். ஆனால் அவர்கள் கொரில்லா முறையில் தாக்க வருவார்கள்… தலைவர் பிரபாகரன் தலைமையில். இதில் ஒரே சிக்கல்… இனி ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும் அந்த வீரத் தம்பிகள்...."
பழ.நெடுமாறன்
பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...