தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Tuesday, October 27, 2009

♥ டேய்..! ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான். ♥

http://1.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sprv4YlDuXI/AAAAAAAABJs/PqCH4_1D1nc/s320/see.jpg

" இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய் என்று ஆவேசமாக கூறியுள்ளார் இயக்குநர் சீமான்."

இலங்கை சென்ற திருமாவளவனை பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று மிரட்டியிருக்கிறார் ராஜபக்சே. இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய் என்று ஆவேசமாக கூறியுள்ளார் இயக்குநர் சீமான்.

தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகமெங்கும் கலந்தாய்வு கூட்டம், பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார் சீமான். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமம் தீலீபன் திடலில் நேற்று பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.

அவர் கூறுகையில், பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் முதன் முதலில் பேருந்துகளை ஓடவிடாமல் தடுத்து நிறுத்திய மண் இந்த வடகாடு மண். அது மட்டுமல்ல; இது பாவாணன் உலவிய மண். இந்த மண்ணில் நான் பேசுவதை பெருமையாக நினக்கிறேன்.

சுதந்திர இந்தியாதான். ஆனால் நாம் சுதந்திரமாக இருக்கிறோமா? நம் இனம் சுதந்திரமாக இருக்கிறதா? இல்லையே. இது எப்போது மாறும்.

ஈழம் அவ்வளவுதானா. பிரபாகரன் செத்துட்டார் என்று சொல்வது உண்மைதானா என்று கும்பகோணத்தில் என்னிடத்தில் அழுதாள் ஒரு தமிழச்சி. நான் அவளிடம், கலங்காதே. ஈழக்கனவுகள் நிறைவேறும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

ஆண்ட பரம்பரை மாண்டு கிடக்கிறதே. இதைப் பேசுவது தேசப் பிழையா?. அமெரிக்காவில் கூட புலிகள் இயக்கத்தை பற்றி பேச உரிமை இருக்கிறது. அங்கே ஒரு கையில் புலிக் கொடியும் மறுகையில் பிரபாகரன் படமும் ஏந்தி போராட்டம் நடத்த முடிகிறது. ஆனால் இந்தியாவிலோ அது முடியவில்லை.

இலங்கை சென்ற திருமாவளவனை பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று மிரட்டியிருக்கிறார் ராஜபக்சே. இந்தியா, பாகிஸ்தான். ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய். நீ எங்களைப் பார்த்து மிரட்டுகிறாய்.

அண்ணன் ப.சிதம்பரம் சொல்கிறார்...10 மாதத்தில் இலங்கை கடற்படையினரால் ஒரு தமிழக மீனவர் தாக்கப்படவில்லையென்று. இனிமேல் தாக்குபவர்கள் தயவு செய்து ப.சிதம்பரம் முன்பு தாக்குங்கள். அப்போதுதான் அவருக்கு தெரியும்.

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என்று எஸ்.எம்.கிருஷ்ணா சொல்கிறார். அது என் பாட்டன் சொத்து. இதை சிங்களவனுக்கு கொடுக்க நீ யார்?.

முகாம்களில் உள்ள தமிழர்கள் மீண்டும் குடியமர்த்தப்படுகிறார்கள் என்று இங்கே ஆளாளுக்கு கதை விடுகிறார்கள். உறவினர்கள் இருப்பவர்ளை மட்டும் அடையாளம் கண்டு அவர்களை மட்டும் உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

தமிழர்களை அவர்களது பூர்வீக இடங்களுக்கு அனுப்பவில்லை. அதிலும், முகாம்களிலுருந்து அனுப்பப்பட்டவர்களில் பலரை வேறு இடங்களில் வைத்துக் கைது செய்து எங்கோ கொண்டு சென்று விடுகின்றனர்.

பொதுவாக தமிழர்களை வறண்ட பூமியில் தான் குடியமர்த்துகின்றனர். சிங்களர்களை வளமான பூமியில் குடியமர்த்துகின்றனர். இது என்ன கொடுமை. எம் மக்களுக்கு வறண்ட பூமி. சிங்களவர்களுக்கு வளமான பூமியா?.

அதிகம் நெல் விளைந்த பூமி கிளிநொச்சி. அங்கே எம் மக்களை இன்னும் குடியமர்த்தவில்லை. கண்ணிவெடி அகற்றுகிறோம் என்கிற பெயரில் நாடகமாடுகிறார்கள். கிளிநொச்சியில் கண்ணி வெடி என்பதே இல்லை. இருந்தால்தானே அகற்றுவதற்கு....

அரசியல் இயக்கமாக மாற்றும் நோக்கில்தான் நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறோம்.

2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டோம். 2014ல் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம். இயக்கத்தை பலப்படுத்துவதே முதல் நோக்கம். அது சட்டமன்ற தேர்தலுக்குள் முடியாது என்பதால்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது இரண்டு காரணங்களுக்காக. ஒன்று காங்கிரசை தோல்வியடையச் செய்ய வேண்டும். இரண்டாவது, தமிழனை தனித்துப் பிரிக்க வேண்டும். இதனால்தான் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

இந்த தேர்தலின் மூலம் தமிழன் இருக்கிறானா? இல்லையா? என்பது தெரிந்து விடும்.

காமராஜர்தான் உண்மையான காங்கிஸ்காரர். அவர் காலத்தில் நாங்கள் வளர்ந்தோம். காமராஜரை பார்க்காத இப்போதிருக்கும் காங்கிரஸகாரர்கள் காமாராஜரா?அது யார் என்று கேட்கிறார்கள்.

காமராஜரோடு காங்கிரஸ் அழிந்துவிட்டது. காங்கிரஸ் மீண்டும் வர வேண்டுமானால் காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் காமராஜர் ஆனால்தான் உண்டு. ஆனால் இது நடப்பது சாத்தியமில்லை.

காங்கிரஸ்காரர்களுக்கு காமராஜர் பெயரைக்கூட சொல்ல தகுயில்லை. ஒரு முறை தேசிய கீதம் பாடிக் கொண்டிருக்கையில் ஒரு குழுந்தை ஆற்றில் விழுந்திருக்கிறது. உடனே காமராஜர் தேசியை கீதத்தை நிறுத்தச் சொல்லிவிட்டு குழந்தையைக் காப்பாற்றினார்.


உயிருக்கு பிறகு தான் தேசியகீதம் என்கிறார். ஆனால், இலங்கையில் எத்தனை உறவுகள் மடிகின்றன. தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினான் பாரதி. இன்று ஒரு இனமே அரை வயிறு சோற்றுக்காக கையேந்தி நிற்கிறதே. என்ன கொடுமை.

இலங்கை சென்று வந்த எம்.பி.க்கள் குழுவில் காங்கிரஸ் எம்.பி. அழகிரி, ’இலங்கையில் அமைதி நிலவுகிறது. தமிழர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆமாம், அமைதியாகத்தான் இருக்கிறார்கள். சுடுகாடு எப்போதும் அமைதியாகத்தானே இருக்கும் என்றார் சீமான்.தமிழனைதேடிக் கொண்டிருக்கிறேன்: ராமதாஸ்

http://1.bp.blogspot.com/_G300mEFhsyg/ScozTtrmpXI/AAAAAAAAAVY/RS58DbB1VsY/s400/478275375_1eed2c7606.jpg


"டாஸ்மாக் கடையிலும், சினிமா தியேட்டரிலும் இளைஞர்கள் முடங்கி விட்டனர். சில இளைஞர்கள் சினிமா நடிகர்களின் பின்னார் செல்கின்றனர். பெண்களை டி.வி. கட்டிப்போட்டு விட்டது....
"திண்டிவனத்தில் ஈழ தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ‘’கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து ஈழபிரச்சினைக்காக இந்த இயக்கம் பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. ஒரு ஆண்டாக நாம் போராடியபோதும் தமிழர்கள் ஒத்த குரல் எழுப்பவில்லை. தமிழனை தேட வேண்டியுள்ளது.

டாஸ்மாக் கடையிலும், சினிமா தியேட்டரிலும் இளைஞர்கள் முடங்கி விட்டனர். சில இளைஞர்கள் சினிமா நடிகர்களின் பின்னார் செல்கின்றனர். பெண்களை டி.வி. கட்டிப்போட்டு விட்டது. தமிழனை நான் தேடி கொண்டிருக்கிறேன்.

தாய் தமிழ்நாடே என்ன செய்கிறாய்? என உலகத் தமிழர்கள் கேட்கின்றனர். மேலும் அவர்கள் உங்களைத்தான் நம்பியுள்ளோம் என்கின்றனர்.

ஒவ்வெரு முறையும் நான் கடிதம் எழுதிய பிறகுதான் முதலமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார். டெல்லிக்கு தாங்கள் சென்று திரும்பியபின் இன்று வரை தலையை தாழ்த்தி கொண்டிருக்கிறோம். ஒன்றுமே நடக்க வில்லை என்பதால் தான் மக்களிடம் பிரச்சினையை கொண்டு செல்கிறோம்.

இலங்கை பிரச்சினைக்காக 16 பேர் தீக்குளித்தனர். ஆனால் 7 கோடி தமிழர்களிடம் எந்த சலனமும் எழ வில்லை.

விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று கூறுவது தவறு. விடுதலை போராட்டம் நடத்துபவர்கள் பயங்கரவாதிகள் கிடையாது. பிரபாகரன் தீவிரவாதி கிடையாது.

இலங்கை பிரச்சினையில் தமிழக அரசு எதுவும் செய்ய வில்லை. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது எதிர் கட்சியாக இருந்த தி.மு.க., இலங்கை பிரச்சினைக்காக எப்படியெல்லாம் முழங்கியது? பேரணிகள் நடத்தியது? ஆனால் இன்றைய நிலை என்ன?

விடுதலைப்போர் என்றைக்கும் முடிவுக்கு வராது. அரசியல் தீர்வுக்கு தயாராக இல்லை.

தமிழர்களிடையே ஒற்றுமை கிடையாது. பீகாரை சேர்ந்த ஒருவன் மும்பையில் தாக்கப்பட்டால் பீகார் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள். அதே போல்தான் பல மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

விரைவில் இலங்கை மண்ணில் தனிநாடு உருவாகும். அதற்காக நாம் பாடுபடுவோம்’’என்று தெரிவித்தார்.

http://www.tamilamutham.net/test/images/stories/sept09/Mann.jpg

மீனுக்கும்
மீனவனுக்கும்
ஒரே பாடை....
படகு!
_கவிஞர் தாமரை

http://4.bp.blogspot.com/_oJQaUAHT-5M/So06X39VoEI/AAAAAAAAAAM/vbQnN-YEr2w/s320/thamarai201.jpg[Eelam.jpg]

[UN.jpg]

மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

இன்னும் கொஞ்ச நாட்களில் நீங்கள் சாம்பார் வைப்பதற்காக காய்கறியை எடுப்பதற்கு பிரிட்ஜை திறந்தால் அங்கேயிருக்கும் தக்காளி உங்களைப் பார்த்துவிட்டு தாவிக் குதித்து ஓடஆரம்பிக்கும். கத்தரிக்காய் ஜம்ப் பண்ணி ஓடிப்போய் டைனிங்டேபிள் அடியிலே ஒளிந்து கொள்ளும். முருங்கைக் காயைப் பிடித்து இழுத்தால் அது வராமல் முரண்டு பிடிக்கும். இதெல்லாம் கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் கூடியவிரைவில் இதுபோல நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கெல்லாம் காரணம் இந்த மரபணு மாற்றம் தான். மரபணு (DNA) குறித்து நமக்கு ஓரளவிற்குத் தெரிந்திருக்கும். ஆனால் அது என்ன மரபணு மாற்றம். ரொம்ப சிம்பிள். இப்ப ஒரு தவளையைப் பிடித்து அதன் ஜீனை எடுத்து தக்காளியின் ஜீனில் செலுத்தி விட்டால் அது தான் மரபணு மாற்றம்.

அப்படி அந்த தவளையின் ஜீன் மூலம் உற்பத்தியாகும் தக்காளியை கீழேவிட்டால் அது குதித்து குதித்து ஓடஆரம்பிக்கும். இது கற்பனையல்ல. நிஜம்.தாவரவியலில் மெண்டல் சோதனை என ஒன்று இருக்கிறது. அதாவது அந்த சோதனையை செய்தவரின் பெயர் மெண்டல், அவர் மெண்டலா என்று நமக்குத் தெரியாது.அந்த ஆள் தான் முதலில் இந்த மரபணு சோதனையைச் செய்து வெற்றியடைந்தார். அதாவது பட்டாணிச் செடியில் குட்டை,நெட்டை ஆகிய ரகங்களை வைத்து அதன் மரபணுக்களை விதவிதமாகக் கலந்து பல புதிய‌ வெளியீடுகளை உருவாக்கினார். அதன் பின்னர் இந்த மரபணு சோதனை பல உயிரினங்களில் பரிசோதிக்கப் பட்டது. குறிப்பாக பசுமாட்டில் இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு பல புதிய புதிய கலப்பிணங்கள் உருவாக்கப் பட்டன.

ஜெர்சி,சிந்து (நடிகை சிந்து அல்ல) என பல விதமான இனங்கள் உருவாக்கப்பட்டது. சாதாரணமாக நம்ம நாட்டு மாடு, பொழுதுக்கும் புல்லைத் தின்றுவிட்டு மிஞ்சி மிஞ்சிப்போனால் 4 லிட்டர் வரை தான் பால் கொடுக்கும். அதை நம் குடியானவர் 8 லிட்டராக்குவது வேறு கதை. அதற்குப் பிறகு மரபணு மாற்றத்தோடு வந்த இந்த புதியமாடல் டெக்னாலஜி பசுக்கள் ஆவினுக்கு பால் ஊற்றும் டேங்கர் லாரியைப் போல மாறிவிட்டன‌.எத்தனை லிட்டருங்க? என்று கேட்டால் சும்மா 40 லிட்டர் தான் என சாதாரணமாகச் சொல்கிறார் விவசாயி. இத்தனைக்கும் இந்த மாடுகள் நாட்டு மாடுகளை விட குறைவாகத்தான் சாப்பிடுகின்றன. இது தான் மரபணு மாற்றத்தின் விளைவு. அதன் பலன் ஆரம்பத்தில் மிக நன்றாகத்தான் இருக்கும். பலன் மற்றதை விட அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அதன் விளைவுகள் நமக்கு கடைசிவரை தெரியவே தெரியாது. அன்றைக்கு இருந்த நோய்களை விட பல மடங்கு இன்றைக்கு நோய்கள் அதிகமாகிவிட்டன. அதற்கு இதுவும் ஒரு காரணம். உணவே மருந்து என்ற நிலை மாறி இன்றைக்கு மருந்தே உணவு என ஆகிவிட்டது.

இது போன்ற ஒரு மரபணு மாற்றம் செய்யப் பட்ட பருத்திவிதையை அமெரிக்கா கண்டிபிடித்து அதைச்சோதனை செய்வதற்காக இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது.விளம்பரம் செய்தால் போதும் நம் மக்கள் ஆட்டு மூத்திரத்தைக் கூட சுத்தமான இளநீர் என குடிப்பார்கள் என்ற 23ம்புலிகேசியின் வாக்குப்படி என்ன கருமத்தையோ சொல்லி அந்தப் பருத்தி விதைகளை இந்திய விவசாயிகளிடம் தள்ளிவிட்டனர் அமெரிக்க ராசாக்கள்.. அவர்களும் அதை விதைத்து விட்டு பஞ்சி வெடிக்கும் .., பஞ்சி வெடிக்கும் என இலவு காத்த கிளியாக காத்திருந்த விவசாயிகளுக்கு கடைசியில் வெடித்தது பஞ்சி அல்ல.., அவர்களின் நெஞ்சிதான். மஹாராஷ்டிரா,ஆந்திரா என விவசாயிகள் கொத்துக்கொத்தாய் தற்கொலை செய்து கொண்டார்கள். அந்த நிலங்கள் வேறு பயிர் செய்வதற்கு ஏற்றாக இல்லாமல் விசமாக மாறியது.

அத்தோடு கொஞ்ச நாள் அடங்கிப்போயிருந்த அமெரிக்காவின் கொட்டம் இப்போது மீண்டும் அடுத்த சோதனைக்குத் தயாராகிவிட்டது. எத்தனை முறை ஏமாற்றினாலும் மறுபடியும் நம்புவார்கள் என்ற அமெரிக்காவின் நம்பிக்கை இந்தியாவிடம் வீண் போகவில்லை. இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை சோதிக்க முடிவெடுத்து களம் இறங்கிவிட்டது. மாண் சாண்டோ என்ற அமெரிக்க மாமாவின் டுபாகூர் கம்பெனி தயாரிப்பில் பி.டி (B.T) என பெயரிடப்பட்ட கத்தரி விதைகளை இந்தியாவிலே பரப்ப அனுமதி கொடுத்துவிட்டார் திருவாளர் ஜெய்ராம் ரமேஷ். ஏற்கனவே முல்லைப்பெரியாரு பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து ஆப்பு வைக்கும் இந்த அதிபுத்திசாலி,இப்போது இந்தியாவிற்கே ஆப்பு வைக்கத் தயாராகிவிட்டார்.

இந்த கத்தரி விதைகளைப் பயிரிட்டால் அதைப் பூச்சி பிடிக்காதாம். காரணம் அந்த விதையில் செலுத்தப் பட்டுள்ள பாக்டீரியாக்கள் அதைத் தடுத்துவிடுமாம். அப்பறம் அந்த கத்தரி விதை பயிரிட்ட நிலத்தில் வேறு எதுவும் பயிரிட முடியாதாம். கத்தரி மட்டும் தான் பயிரிட முடியுமாம். அதுவும் அந்த நிறுவனத்தின் பி.டி விதைகள் மட்டும் தானாம். நாட்கள் செல்லச் செல்ல அந்தச் செடிகளைப் பூச்சிப் பிடிக்க ஆரம்பிக்குமாம்.

ஆனால் அதற்கான மருந்தையும்அவர்களே தந்துவிடுவார்களாம்.பின்னர் அவர்கள் வைத்தது தான் விலையாம். நாட்கள்போகப்போக தொலைக்காட்சியின் இரவுச் செய்திகளில் தங்கம் வெள்ளி விலை நிலவரங்கள்வரும் போது இன்றைய கத்தரிக்காய் விலை நிலவரம் என்ற புதிய பகுதியும் வரவாய்ப்பிருக்கிறாம். ஆக இதுதான் நவீன விக்கிரமாதித்தனின் நவீன காலனி ஆதிக்கம்.
வெறும் 3 மாதங்கள் மட்டுமே பரிசோதிக்கப் பட்ட இந்தக் கத்தரிக்காய்களை சாப்பிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக அதன் விளைவுகள் நம் மரபணுவையும் மாற்றி புற்றுநோய், காசநோய், ஈரல் பாதிப்புகள்,கிட்னிகளை செயலிழக்கச் செய்தல் போன்ற பலவிதமான வியாதிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தும் என நம்மூர் இயற்கை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் இந்த கத்தரிக்காய்களை அறவே தடைவிதித்து விட்டனர்.ஆனால் நமது இந்தியத் திருநாட்டில் இதற்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.

நேற்று முன்தினம் உழவர் பேரியக்கம் சார்பில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தக் கத்தரிக்காய் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டன. கேரளாவில் இந்தக் கத்தரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போல தமிழகத்திலும் இதற்குத் தடை விதிக்க வேண்டுமென தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாள்வார் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இப்படியே மரபணு மாற்றம், விஞ்ஞான ஏற்றம் என விதைகளின் வீரியம் அதிகமாக அதனால் பூச்சிகளின் வீரியம் அதிகமாக அதனால் மருந்துகளின் வீரியமும் அதிகமாகி இதே போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தால், நாம் கரப்பான் பூச்சிக்கு அடிக்கும் சாதாரண ஸ்பிரே கூட, போகிற போக்கில் ஸ்பைடர் மேனையே போட்டுத்தள்ளிவிடும் என்பது நிதர்சனமான உண்மை.

http://etiroli.blogspot.com/2009/10/blog-post_28.html


போரின் இறுதிப் பத்து நாட்களில் 5,000 அதிகமான சிங்களப் படையினர் பலி! ஜெனரல் சரத்பொன்சேகா

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது 5000-க்கும் அதிகமாக படையிர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

அமெரிக்கா வாசிங்டனில் உள்ள புத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் போர் உக்கிரமடைந்த நிலையில் மே 7ம் நாள் தொடக்கம் மே 17ம் நாள் வரையிலான 10 நாட்களில் 5 ஆயிரத்திற்கு அதிகமான படையினர் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக ஜெனரல் சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

http://kavishan.blogspot.com/2009/10/5000.html


மரகத லிங்கத்துக்கு அரும்பெரும் சக்தி உள்ளதா?


"கடவுளையே கண்டுபிடித்துக் கொடுக்க மனிதர்கள் (காவல்துறையினர்)தான் தேவைப்படுகிறார்கள்.
...."


நேற்று மாலை ஏடுகளில் ஒரு பரபரப்பான செய்தி.

50 கோடி ரூபாய் மதிப்புள்ள திருத்துறைப்பூண்டி மருந்தீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான மரகதலிங்கம் கைப்பற்றப்பட்டது என்பதுதான் அந்தச் செய்தி.

இது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாம். இந்த மரகதலிங்கத்தை இந்திரனே பூஜித்து வந்தானாம். (இடையில் விட்டுவிட்டானோ!)

லிங்கம் என்றால் ஆண் குறி! அது மரகதத்தில் செய்யப்பட்டதாம்! ஆகா, எப்படிப்பட்ட பக்தி!

இன்னும் இந்த மரகதலிங்கத்துக்கு என்ன கூடுதல் விசேஷம்? (கதை அளப்புக்கு என்ன பஞ்சமா?).

அந்த மரகதலிங்கத்தை முசுகுண்ட சக்ரவர்த்தியிடம் கொடுத்து ஏழு பிரசித்திப் பெற்ற கோயில்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருமாறு இந்திரன் கூறினானாம்.

இதன் பொருள் என்ன? இந்த மரகத லிங்கத்துக்கு அரும்பெரும் சக்தி உள்ளது என்பதுதானே இதன் அய்தீகம்.

இவ்வளவு சக்தி வாய்ந்த அதுவும் தேவர்களின் தலைவனான இந்திரனே வழிபட்டு வந்த லிங்கத்தை கொள்ளையர்கள் எப்படி திருடியிருக்க முடியும்?

அப்படி திருடியிருக்கிறார்கள் என்றால் இந்த லிங்கங்கள் தெய்வ சக்தி வாய்ந்தவை என்பதெல்லாம் அசல் டூப்பாக இருக்கவேண்டும். இரண்டில் ஒன்றுதானே உண்மையாக இருக்கவேண்டும்.

நம் முன் நிற்கும் கேள்விகள் இரண்டே இரண்டுதான். மரகதலிங்கத்துக்குத் மகாசக்தி உண்டென்றால், அதனைத் திருடிச் செல்ல முடியுமா? அதனைத் திருடியிருக்கிறார்கள் என்பதிலிருந்து லிங்கத்துக்குச் சக்தியாவது, புடலங்காயாவது என்பதை மரியாதையாக, நாணயமாக ஒப்புக்கொள்ள வேண்டுமா இல்லையா?

இந்த சிவலிங்கத் திருடர்களைக் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரி யார் தெரியுமா? காதர் பாஷா.

இது என்ன அநியாயம்? சிவலிங்கத் திருட்டை ஒரு சாயபு கண்டுபிடிக்கலாமா? என்று அக்ரகாரத்தார் அலறக்கூடும்.கடவுளையே கண்டுபிடித்துக் கொடுக்க மனிதர்கள் (காவல்துறையினர்)தான் தேவைப்படுகிறார்கள்.

கடவுளை மற, மனிதனை நினை! என்ற பெரியார் வாக்கு பலித்ததா இல்லையா?

--------------- மயிலாடன் அவர்கள் 27-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

http://thamizhoviya.blogspot.com/2009/10/blog-post_28.html

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!