தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Wednesday, June 17, 2009

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 17 -"தினமணி" தொடர் ♥


"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 17: முதலாவது சிங்களவர்-தமிழர் கலவரம்!தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்
போக்குவரத்து அமைச்சர் நாலாயிரம் தமிழர்களை இந்தியாவிற்கு அனுப்பிய நிகழ்ச்சிக்குப் பிறகு இந்தியர் பிரச்னையைப் பேசுவதற்காக மகாத்மா காந்தி தனது தூதுவராக ஜவாஹர்லால் நேருவை இலங்கைக்கு அனுப்புகிறார் (1939).

ஆனால், இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை ஒரு தீர்வுக்கு வராமல் தோல்வி அடைகிறது. அப்போது நேரு பல்வேறு தொழில் துறைகளில் இருந்த இந்தியர்களை அழைத்து, இலங்கை இந்தியர்களுக்கான ஒரு காங்கிரûஸ உருவாக்கிக் கொள்ளும்படி அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

இதையொட்டி உருவானதுதான் இலங்கை இந்திய காங்கிரஸ். இது கொழும்பில் உருவாகிப் பின்னர் மலையகத்தில் அறிமுகமாகிறது. இது கட்சியோ, தொழிற்சங்கமோ அல்ல. நேரு வருவதற்கு முன் எஸ். தேசாய் தலைமையில் இருந்த இலங்கை இந்தியர் சங்கமும் வள்ளியப்பச் செட்டியாரின் தலைமையில் இருந்த இந்திய சேவா சங்கமும் இணைந்ததொரு அமைப்பாகும்.

ஆரம்பத்தில் சிங்களப் பேரினவாதம் இந்திய வணிகக் குழுவை வெளியேற்றுவதற்காக மட்டுமே முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது தென் கிழக்கு ஆசிய நாடுகளைப் போன்றே இலங்கையிலும் இந்திய வணிக நிறுவனங்களிலும், நிர்வாகத்திலும் தமிழர்களின் கை மேலோங்கி இருந்தது. ஆனால் இலங்கை இந்தியக் காங்கிரஸ் உருவானபின் சிங்களவர் மத்தியில் ஓர் அச்சம் வேரூன்றியது. இதனைத் தொடர்ந்து, இலங்கையை சிங்களவர் மயமாக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்க அவர்கள் ஆரம்பித்துவிட்டனர்.

அப்போதிருந்த இந்திய வம்சாவளியின் சில பிரிவுகள்:

1. கொழும்பை மையமாகக் கொண்ட, மலையகத் தொடர்பு அற்ற, இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட வியாபாரிகள்.

2. மலையகத்தில் வணிகத் துறையிலும் விவசாயத்திலும் ஈடுபட்டோர். இவர்கள் இந்தியாவின் தொடர்பைத் துண்டித்துத் தோட்ட உரிமையாளர்களாக ஒரு சமூகச் சக்தியாக இருக்கின்றனர். முற்போக்கான தேசிய வாதம் இவர்களிடம் இருந்தது. ஒரு கட்சியாக உருவாகாமல் தொழிற்சங்கமாகவே இது உருவாகியது. மலையகத் தமிழரின் தேசிய இயக்கமாக இத்தொழிற்சங்கம் மாறியது.

3. இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த தோட்டத் தொழிலாளர்கள்.

இவ்வகையான கலவையே இலங்கை இந்தியக் காங்கிரஸôக ஆரம்பத்தில் இருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி (மசட)

1944-இல் சோல்பரிக் கமிஷன் ஆட்சியதிகாரத்தை மாற்றுவதற்கான சிபாரிசினைச் செய்கிறது. அதுவரை சிங்களவர்களுக்கென்று அமைப்பு ஏதுமின்றி இருந்தது. சோல்பரிக் கமிஷனின் ஆலோசனையின் பேரில் ஓர் அமைப்பாக மாறுவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.

முதலாவது பாராளுமன்றத் தேர்தல் காரணமாக அவசர அவசரமாக இக்கட்சி பிறப்பெடுத்தது. இலங்கைத் தேசியக் காங்கிரஸ், பண்டாரநாயகாவின் சிங்கள மகாசபை, முஸ்லிம் லீக் ஆகியவை சேர்ந்து இக்கட்சி உருவாகிறது.

1940-இல் இலங்கை மக்களின் வாழ்விடத் தெரிவுத் தகைமை பதிவு செய்யும் முறை கண்டிப்பாக அமலாக்கம் நடந்ததாலும், 1939-இல் இருந்ததைவிட 1943-இல் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாலும் சமூகரீதியில் சிங்களவர்கள் வளர்ச்சி பெற்றார்கள்.

தமிழர்களின் பங்களிப்பைக் குறைக்கும் வகையில் தமிழர்களுக்கு எதிராக ஓர் அரசியல் கட்சி வடிவத்தில் தங்களை ஸ்தாபனப்படுத்திக் கொள்கிறார்கள். இக்கட்சிதான் மேற்சொன்ன ஐக்கிய தேசியக் கட்சி.

அரசியலில் தங்களுக்குள்ள உரிமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உருவானதே இக்கட்சி.

1947-இல் இதையொட்டிய தேர்தல் வருகிறது. தேர்தலில் 7 மலையகப் பிரதிநிதிகள் வெற்றி பெறுகின்றனர். 20 தொகுதிகளில் மலையகத் தமிழர்கள் கணிசமாக இருக்கின்றனர். இவர்கள் இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்தனர். இதை முறியடிக்க ஐக்கிய தேசியக் கட்சியானது கம்யூனிஸத்திலிருந்து புத்தத்தைப் பாதுகாப்பது என்ற புதிய கோஷத்தை முன்வைத்து இனவாதத்தைத் தூக்கிப் பிடித்தது.

ஆனால், அதையும் மீறி மலையகத் தமிழர்களின் எண்ணிக்கையால் இடதுசாரிக் கட்சிகள் வெற்றி பெறுகின்றன.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் டி.எஸ். சேனநாயகா கோபம் அடைகிறார். அதன் விளைவாக மூன்று சட்டங்களை உடனடியாக இயற்றுகிறார். அவைகள்:

1. குடியுரிமைச் சட்டம்~1948.

2. இந்திய-பாகிஸ்தானிய குடியிருப்புச் சட்டம்~1949.

3. தேர்தல் சட்டத்திருத்தம்~1948.

இவைகள் அனைத்துமே தமிழர்களுக்கு எதிரான சட்டங்களாகும்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWP)

1950-இல் உருளவல்ல என்ற இடத்தில் தமிழ்த் தோட்டத் தொழிலாளரை வெளியேற்றி, அந்த நிலத்தை சிங்களவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கின்றனர். அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்கள் போராடுகின்றனர். இப் போராட்டத்திற்கு ஆதரவாகவும், சிங்களவர்களின் செயல்களைக் கண்டித்தும் பிற தோட்டங்களின் அனைத்துத் தொழிலாளர்களும் போராட ஆரம்பிக்கின்றனர்.

சிறு அளவில் ஆரம்பித்த போராட்டம், தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்கும் அளவில் விரிவடைகிறது. இதற்கு இலங்கை இந்தியக் காங்கிரஸ் தலைமை ஏற்கிறது. இந்தப் போராட்டத்தின் விளைவாகப் பெயர் மாற்றம் அடையப் பெற்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸôக மாறியது. மலையகத் தமிழர்களின் தேசிய உணர்வை இது பிரதிபலித்தது.

இடதுசாரிகள், ஒருபக்கம் வளர்ந்து வரும் சிங்களவர்களின் இன உணர்வைப் பார்க்காது, அதன் விளைவால் ஏற்பட்ட மலையகத் தமிழர்களின் தேசிய உணர்வை நிராகரித்ததன் மூலம், பெருமளவிலான தொழிலாளர்கள் இடதுசாரி அணியிலிருந்து விலகி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பின் அணி திரளத் தொடங்கினர். அந்தச் சூழ்நிலையில் மலையகத் தமிழர்களின் தேசிய உணர்வினைப் பிரதிபலிக்கக்கூடிய ஒரே அமைப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இருக்கிறது. அதனாலேயே லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இதன் தலைமையின்கீழ் திரண்டனர். இந்தக் காங்கிரஸின் தலைவராக நீண்ட பல ஆண்டுகளாக செü. தொண்டமான் இருந்து வந்தார்..

இலங்கைத் தொழிலாளர் கழகம்

1962-இல் தமிழரசுக் கட்சியின் அங்கமாக இலங்கைத் தொழிலாளர் கழகம் தமிழர்கள் மத்தியில் இது உருவாகியது. மறைந்த நாகநாதன் தலைமையில் திவானந்த சுந்தரம் செயலாளராகப் பொறுப்பு ஏற்றார்.

நிர்வாகத் திறன் படைத்த தொழிற்சங்கம் என்பது அன்றையக் காலக் கட்டத்தில் மிகத் தேவையான ஒன்றாக இருந்ததால் இது பெருமளவிற்கு வளர வாய்ப்பு இருந்தது.

1960-இல் தமிழரசுக் கட்சி ஈழத் தமிழர்களின் தேசிய இயக்கமாக வளர்ந்தது. பலவகையான போராட்டங்களை தமிழர்களுக்கு ஆதரவாக, சிங்கள இன வாதத்திற்கு எதிராக இது கட்டமைத்தது. சாஸ்திரி~ஸ்ரீமாவோ ஒப்பந்த எதிர்ப்பில் இது செல்வாக்கு அடைந்தது. 1965-இல் சாஸ்திரி~ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தைத் திருத்தத்தோடு ஏற்றுக்கொண்டு டட்லி சேனநாயகா அரசில் (U.N.P.) பங்கேற்றனர்.

திரும்பவும் ஸ்ரீமாவோ ஆட்சிக்கு வந்தபின் அவரது சுதந்திரக் கட்சியை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தி இலங்கைத் தொழிலாளர் கழகம் செல்வாக்கு பெற்றது. 1958-இல் முதலாவது சிங்களவர்~தமிழர் கலவரம் வெடித்தது. 1956-இல் இருந்துவந்த சிங்கள இனவாதத்தின் வெளிப்பாடாகத் தனிச் சிங்கள மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

பண்டாரநாயக்காவின் தனிச் சிங்கள மொழிச் சட்டம் அமலாக்கப்படுவதை எதிர்த்துதான் தமிழர்களின் போராட்டம் வெடித்தது.

♥ புலிகள் தோற்கவில்லை. இந்தியாவின் ராஜதந்திரம்தான் படுதோல்வியடைந்திருக்கிறது! ♥

தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்!

பழ. நெடுமாறன்
http://www.thaaimann.com/wp-content/uploads/2009/03/sankathi_pic_ofthe_day.jpghttp://www.thaaimann.com/wp-content/uploads/2009/05/4664_1136245576147_1527581102_30330409_7858587_n.jpg


இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த போர் முடிவடைந்துவிட்டது. விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடித்து விட்டோம்'' என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசும் அதற்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டது. ஆனால் இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையைவிட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்.

1980-களில் தொடங்கி இன்று வரை இலங்கையில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்துமாக்கடலின் முக்கியக் கடல், வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஆதிக்கப் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது.

1977-ம் ஆண்டு ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது இந்தியாவின் மேலாதிக்கத்தில் இருந்து விடுபட விரும்பியது. அதற்கு ஒரே வழி அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் உள்ள உறவுகளை வலுப்படுத்துவதேயாகும் எனத் திட்டமிட்டு செயல்பட்டது. இலங்கையின் பொருளாதாரம் மேற்கு நாடுகளுக்கு திறந்துவிடப்பட்டது. இதன் விளைவாகத் தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு மேற்கு நாடுகள் உதவத் தொடங்கின.

1983-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் சின்பெத் உளவுப்படையான மொசாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இலங்கைக்கு வந்து சிங்கள ராணுவத்துக்குப் பயிற்சி அளித்தனர். பிரிட்ட னைச் சேர்ந்த சிறப்பு விமானப் படையின் நிபுணர்கள் சிங்கள விமானப் படை விமானிகளுக்கு தமிழர் பகுதிகளில் குண்டு வீசப் பயிற்சி அளித்தனர்.

பிரிட்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனமான கீனி மீனி சர்வீசஸ், சிங்கள ராணுவத்தில் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்க பயிற்சி அளித்தது. தென்னாப்பிரிக்க அரசு மூலம் இங்கிலாந்து சிங்கள ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களை அனுப்பியது.

இலங்கையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வளர்ந்தோங்கிய நிலையில் இந்திய அரசின் கருத்துகள் எதற்கும் சிங்கள அரசு மதிப்புக் கொடுக்கவில்லை. எனவே அதற்கு எதிராக சிங்கள அரசை மிரட்டுவதற்காக பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் அதாவது 1987-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி இந்திய ராணுவ விமானங்கள் முற்றுகைக்கு ஆளாகியிருந்த யாழ்ப்பாணத்தின் மீது பறந்து சென்று உணவுப் பொதிகளை வீசின. இதைக் கண்டு சிங்கள அரசு அச்சம் அடைந்தது. 1987-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி இந்திய-இலங்கை உடன்பாட்டில் கையெழுத்து இட்டாக வேண்டிய நெருக்கடி ஜயவர்த்தனவுக்கு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின் சாரம் பின் வருமாறு அமைந்தது:

""இலங்கைக்கு இந்தியா தனது படையை அனுப்பி தமிழ்ப் போராளிகளின் ஆயுதங்களைக் களைய உதவும். இலங்கையில் அமைதிக்கான சூழ்நிலையை உருவாக்கித் தரும். இதற்குப் பிரதிபலனாக இலங்கையில் உள்ள அனைத்து வேற்றுநாட்டு ராணுவக் குழுக்களை இலங்கை அரசு வெளியேற்ற வேண்டும்'' என்பதே இந்த உடன்பாட்டின் அடிப்படையாகும்.

இதன் மூலம் ஜயவர்த்தன இரண்டு உண்மைகளைப் புரிந்து கொண்டார். 1. இந்திய அரசை நேரடியாகப் பகைத்துக் கொண்டு நிம்மதியாக இருக்க முடியாது. 2. மேற்கு நாடுகளை நட்பு சக்திகளாகப் பெற்றால் இந்தியாவின் தயவு இல்லாமல் தமிழ்ப் போராளிகளை முறியடித்துவிட முடியும் என்ற அவரின் திட்டம் வெற்றி பெறவில்லை.

இந்திய அரசு அவரை மிரட்டியபோது மேற்கத்திய நாடுகள் ஒன்றுகூட அவருக்கு உதவ முன்வரவில்லை. சின்னஞ்சிறிய இலங்கைக்காகத் தங்கள் பொருள்களின் விற்பனைக்கான மிகப் பெரிய சந்தை நாடான இந்தியாவுடன் முரண்பட மேற்கு நாடுகள் தயாராகவில்லை என்பதே உண்மையாகும்.

மேற்கண்ட இரு கசப்பான உண்மைகளை உணர்ந்து கொண்ட சிங்கள அரசு இந்தியாவிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கிழக்கு நோக்கித் திரும்பிற்று. மேற்கு நாடுகள் அவரைக் கைவிட்ட பிறகு இந்தியாவின் பகை நாடான சீனாவின் உதவியை நாட அது முடிவு செய்தது. அதிலிருந்து தொடங்கி சீனாவின் சார்பு நாடாக இலங்கை படிப்படியாக உருவெடுத்தது.

1993-ம் ஆண்டு இலங்கையில் உள்ள கல்லே துறைமுகத்தில் சீனாவின் நோரிங்கோ நிறுவனம் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கு ஒன்றைத் திறப்பதற்கான உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி சிங்கள அரசு தனக்குத் தேவையான ஆயுதங்கள் அனைத்தையும் இந்தக் கிடங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வேறு எந்த நாட்டிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கக் கூடாது. அப்படி வாங்குவதற்கு நோரிங்கோவின் அனுமதி தேவை.

இலங்கையில் சீனாவின் ஆயுதக்கிடங்கு அமைவது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆசியப் பகுதிக்கே ஆபத்தானதாகும். இப்பகுதியில் உள்ள நாடுகளுக்குத் தேவைப்படும் போது உடனுக்குடன் ஆயுத உதவிகளைச் சீனா செய்யமுடியும்.

தென் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கும் அங்கு ராட்சத எண்ணெய்க் கலன்களை அமைப்பதற்கும் புத்தளத்துக்கு அருகே நோரோச் சோலையில் 9000 மொகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் உதவும்படி இலங்கை அதிபர் சந்திரிகா 2005-ம் ஆண்டில் வேண்டிக் கொண்டார். சீனா பெரும் மகிழ்ச்சியுடன் இக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது.

ஏனெனில் ஹம்பன்தோட்டா துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்போது இந்துமாக்கடலில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சீனா நோக்கிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும். நோரோச் சோலையில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டால் அதற்கு 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேதுக் கால்வாயை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவர முடியும்.

2006-ஆம் ஆண்டு இறுதியில் மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியம் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கான துரப்பணி அனுமதியை எவ்வித டெண்டரும் இல்லாமல் சீனாவுக்கு இலங்கை அளித்தது. இதற்காக ஒதுக்கப்பட்ட இடம் சேதுக் கால்வாயிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சேதுகால்வாயில் செல்லும் அனைத்து நாட்டு சரக்குக் கப்பல்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஆகியவற்றை சீனா தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

1974 ஜூலை 8-ம் தேதி இந்திரா காந்தி காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி இந்தத் துரப்பணப்பணியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். ஆனால் அந்த உடன்பாட்டை மீறும் வகையில் இந்தப் பணி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

வான்புலிகளின் விமானத் தாக்குதலை இந்தியா அளித்த ரேடார்களினால் கண்டறிய இயலவில்லை எனக் கூறி சீனாவிடம் ரேடார்களை இலங்கை அரசு பெற்றுக் கொண்டது. அதிக சக்தி வாய்ந்த இந்த ரேடார்கள் மூலம் இந்திய விமானப் படையின் நடமாட்டங்களையும் உளவறிய சீனாவுக்கு வழிவகுக்கப்பட்டது.

2008-ம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு சீனா ரூ. 500 கோடி உதவி அளித்துள்ளது. இந்தியாவையும் ஜப்பானையும் விட பன்மடங்கு அதிக நிதி வழங்கிய நாடாக சீனா திகழ்கிறது. கடந்த காலத்தில் சீனாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கிய வகையில் இலங்கை அரசு 100 கோடி ரூபாய் கடன்பட்டிருந்தது. அந்தக் கடனையும் சீனா தள்ளுபடி செய்தது.

சீனா மட்டுமல்ல, சீனாவின் நட்பு நாடுகளான பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளும் இலங்கைக்கு ராணுவ ரீதியான உதவிகளை அளிக்க முன்வந்தன. இதற்குப் பின்னணியில் சீனா இருந்தது என்பது வெளிப்படையானது.

2006-ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு இலங்கைக்கு ரூ. 300 கோடி மதிப்புள்ள ஆயுத உதவிகளை அளித்தது. இதற்குப் பதில் உதவியாக இலங்கை அரசு இந்தியாவுடன் செய்து கொண்டதைப் போல பாகிஸ்தானுடனும் சுதந்திர வணிக உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது.

தென் இலங்கையில் உள்ள உமா ஆற்றில் 100 மெகாவாட் திறனுக்கான நீர்மின் நிலையம் அமைப்பதற்காகவும் கொழும்புக்கு அருகே உள்ள சபுஸ்கந்தா பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்குவதற்கும் உரிய உரிமங்களை ஈரானுக்கு அளிக்க இலங்கை அரசு முன்வந்தது. பதிலுக்குப் பெருந்தொகை ஒன்றை ஈரான் உதவி நிதியாக வழங்கியது. சீனாவின் ஆதரவு நாடான ஈரானை நட்பு நாடாக்கிக் கொண்டால் சீனா தன்னுடன் இன்னும் நெருக்கமாக வருமென இலங்கை அரசு கருதியது.

சீனாவுடனும் அதன் கூட்டாளிகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே புலிகளுக்கு எதிரான ராணுவ வெற்றிகளை அடைய முடியும் என இலங்கையை உணரச் செய்வதே சீன அரசின் நோக்கம் என்பதையும் அந்த நோக்கத்தில் அது வெற்றி பெற்றுவிட்டது என்பதையும் இந்தியா உணரவே இல்லை.

இதன் விளைவாக நான்காம் ஈழப்போர் தொடங்கிய 2006ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதியிலிருந்து இலங்கை மண்ணுக்குள் சீனாவின் காலடித்தடங்கள் ஆழமாகப் பதிந்துவிட்டன. சீனாவின் நண்பர்களுக்காகவும் இந்தியாவைப் பகைத்துக் கொள்ள இலங்கை தயாராகிவிட்டது. இலங்கையரசின் சீன உறவின் விளைவாக இந்தியாவிற்கு ராணுவ ரீதியாக பெரும் அச்சுறுத்தல்கள் உருவாகிவிட்டன. பாகிஸ்தானுடன் சீனா கொண்டுள்ள நெருக்கமான உறவு வட இந்தியாவுக்கு பெரும் அபாயமாக விளங்குகிறது. அதே அளவுக்கு இப்போது உருவாகியிருக்கும் இலங்கை-சீன உறவு எதிர்காலத்தில் தென்னிந்தியாவிற்குப் பெரும் சவாலாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள், ஏவுகணைத் தளங்கள், அணு உலைகள் ஆகியவற்றை வட இந்தியாவில் அமைத்தால் பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் தாக்குதலுக்கு ஆளாகி அழியும் அபாயம் இருப்பதால் அத்தகைய தொழிற்சாலைகளைத் தென்னிந்தியாவில் அமைப்பது பாதுகாப்பானதென பிரதமர் நேரு கருதி அவ்விதம் செய்தார். தொடர்ந்து வந்த இந்தியப் பிரதமர்களும் இக்கொள்கையைப் பின்பற்றினார்கள். ஆனால் அதற்கும் இப்போது இலங்கை -சீனா -பாகிஸ்தான் அரசின் மூலம் அபாயம் தோன்றிவிட்டது.

இலங்கையரசுக்கு சீன அரசு ராணுவ ரீதியில் உதவி வருவது எதிர்காலத்தில் வணிக நலன்களை கருதி அல்ல. இந்தியா அமெரிக்காவுடன் கொண்டுள்ள கூட்டணியின் விளைவாக இந்துமாக்கடல் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் தான் தனிமைப்பட்டுவிடக்கூடாது எனக் கருதுவதனாலேயேயாகும். ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியில் இப்பகுதியில் உள்ள இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியான்மர், மலேசியா ஆகிய நாடுகளுடன் மிக நெருக்கமான உறவை சீனா வளர்த்து வருகிறது. ஏற்கெனவே பாகிஸ்தான், ஈரான் ஆகியவை சீனாவின் கூட்டாளிகளாகிவிட்டன.

20 வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் இந்தியா மட்டுமே ஒரே ஒரு மேலாதிக்க நாடாக விளங்கியது ஆனால் இப்போது இந்தியாவின் பிராந்திய நலன்களுக்குட்பட்ட பகுதிகளில் சீனா நுழைந்துவிட்டது.

இந்துமாக்கடலில் இயற்கையாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இலங்கை உள்ளது. நிலவியல் அடிப்படையில் அது நடுமையமான இடத்தில் அமைந்துள்ளது. இந்துமாக்கடல் வழியே செல்லும் விமானத்தடங்களுக்கும், கப்பல் தடங்களுக்கும் இலங்கையே நடுமையமாக உள்ளது. எனவே இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையைப் பொருத்து அமைந்துள்ளது. ஆனால் இதுகுறித்து இலங்கை கவலைப்பட்டதில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மற்ற நாடுகளுடன் உறவாடவும், உடன்பாடுகள் செய்துகொள்வதற்கும் இலங்கை ஒருபோதும் தயங்கியதில்லை.

இலங்கையின் இந்தப் போக்கினை கண்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் என்பவர் "இந்துமாக்கடலும் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த நிலையும்' என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்.

"பிரிட்டனின் பாதுகாப்புக்கு அயர்லாந்து எவ்வளவு முக்கியமானதோ, சீனாவின் பாதுகாப்புக்கு தைவான் எவ்வளவு இன்றியமையாததோ அதைப்போல இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிக முக்கியமானதாகும். இந்தியாவின் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும் வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அதனால் அபாயம் நேரிடும்'.

அமெரிக்காவுடன் இந்தியா செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டின் விளைவாக விரிவடையப்போகும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க வலிமையானது எதிர்காலத்தில் தனக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்ற கலக்கம் சீனாவுக்கு உள்ளது. இந்தியாவில் ராணுவ, பொருளாதார முக்கியத்துவம்மிக்க பகுதியாக மாறிவரும் தென்னிந்தியாவின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு இலங்கை தனது முழுமையான கட்டுபாட்டிற்குள் வரவேண்டும் என்பது இந்தியாவின் அவசியத் தேவை என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது.

இலங்கையில் தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் தனது ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவருவதற்கும், விடுதலைப்புலிகளை ஓரங்கட்டுவதற்கும், தான் அளித்த உதவியினால் எதிர்காலத்தில் இலங்கை தனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு நாடாக இருக்கும் என இந்தியா கருதியது குறுகிய காலத்திலேயே பகற்கனவாய் போய்விட்டது. தனது நோக்கம் நிறைவேறியவுடன் இந்தியாவைத் தூக்கியெறிய இலங்கைத் தயங்கவில்லை. இந்தியாவின் தயவு இனி இலங்கைக்குத் தேவையில்லை. இரு அணு ஆயுத வல்லரசுகளான சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்கு உறுதுணையாக நிற்கின்றன.

இலங்கை அதிபர் ராஜபட்சவின் தம்பியும், பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபய ராஜபட்ச கட்டுப்பாட்டில் உள்ள இணையதளத்தில் அவரின் நண்பர் ஜெயசூரியா என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் இந்தியாவைப் பற்றி மிகவும் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

"ஈழத்தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கவேண்டுமென்று எங்களுக்கு ஆணையிட இந்தியாவுக்கு உரிமையில்லை. இந்தியாவிலுள்ள அனைத்து தலைவர்களும், அரசதிகாரிகளும் இலங்கைக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் தமிழர்கள் உள்பட அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் அளிப்பதன் மூலமே இனப்பிரச்னைக்கான அடிப்படைக் காரணங்களை சரிசெய்திட முடியும் என்று கூறியிருக்கிறார். அவரிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால் இந்த அறிவுரையைக் கூற நீங்கள் யார்? உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? இறையாண்மை மிக்க நாடான இலங்கைக்கு எப்படி ஆட்சி செய்ய வேண்டுமென்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

தமிழர்களுக்கு எவ்வித அதிகாரங்களையும் வழங்கமாட்டோம். ஏனெனில் அவர்கள் தனிநாடு கேட்டுப் போராடுவதற்கு அதுவே வாய்ப்பாகிவிடும். அதுமட்டுமல்லாது இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்ட உடன்பாட்டையும் தூக்கியெறிவோம். அதன் மூலம் இந்திய ஆதிக்கத்தின் கடைசி அடையாளங்களையும் துடைத்தெறிவோம்.

எங்கள் நாட்டை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் நீங்கள் விடுதலைப்புலிகளை உருவாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்துவிட்டோம்.'

கோத்தபய ராஜபட்சவின் இணையதளத்தில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரை, அதிபர் ராஜபட்சவின் சம்மதம் இல்லாமல் வெளிவந்திருக்க முடியாது. இலங்கை அரசின் அதிகாரப்பூர்வமான கருத்தையே இந்தக் கட்டுரை எதிரொலிக்கிறது.

இலங்கையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவிக்கவும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மின்வேலி முகாம்களுக்குள் அடைத்துச் சித்திரவதை செய்யவும், சிங்கள இனவெறி அரசுக்கு எல்லாவகையிலும் துணை நின்ற இந்திய அரசுக்கு கிடைத்த கைமாறு இதுதான். இத்துடன் நிற்கப்போவதில்லை. இந்தியாவின் பகை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் வலுவாகக் காலூன்றிவிட்ட நிலையில் தென்னிந்தியாவிற்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் அபாயத்திலிருந்து இந்தியா மீள்வதற்கு வழி உண்டா? என்ற கேள்விக்குரிய விடை இந்தியாவிடம் இல்லை.

இலங்கையில் சிங்கள இனவெறிக்கெதிராக நடைபெற்ற போரில் ஈழத் தமிழர்களோ, புலிகளோ தோற்கவில்லை. மாறாக இந்தியாவின் ராஜதந்திரம்தான் படுதோல்வியடைந்திருக்கிறது!

http://www.thaaimann.com/wp-content/uploads/2009/05/4664_1136245456144_1527581102_30330407_6920669_n.jpg

http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=75041&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D!

♥ இலங்கையில் 224 தமிழர்கள் கட்டாய இடமாற்றம் ♥

இலங்கையில் 224 தமிழர்கள் கட்டாய இடமாற்றம்கொழும்பு, ஜூன் 17- இலங்கையில் மூத்தூர் பகுதியைச் சேர்ந்த 224 தமிழர்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாக வேறு இடத்திற்கு கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் கூறப்பட்டுள்ளதாவது:

திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூத்தூர் என்னுமிடத்தைச் சேர்ந்த 58 குடும்பங்களைச் சேர்ந்த 224 தமிழர்கள் போர் காரணமாக பாதுகாப்பு பகுதிக்கு வந்தனர். அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கீரிமுட்டி என்னுமிடத்தில் உள்ள முகாமில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களை திரிகோணமலை மாவட்டத்தில் கிளிவெட்டி முகாமிற்கு செல்லுமாறு அரசு அதிகாரிகளும் ராணுவத்தினரும் வலியுறுத்தினர். இதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இடம் மாறவில்லை என்றால் அவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நிவாரண உதவிகளும் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனாலும் அவர்கள் இதற்கு சம்மதிக்காமல் வாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போலீஸôர் வரவழைக்கப்பட்டு அவர்கள் வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றப்பட்டனர். அப்போது, ஐநா பிரதிநிதிகளும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்களும் அங்கு இருந்ததாகவும் இணையதளச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நேற்று காலை மொத்தம் 10 பேருந்துகளில் ஏற்றப்பட்ட அவர்கள் வெறுகால் ஆற்றுப்பாலம் வழியாக கிளிவெட்டிக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

அவர்களின் சொந்த கிராமமான மூத்தூரை ராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கிராமத்திலிருந்து 750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2500 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கீரிமுட்டி, பழச்சோலை, வாவடிவெம்பு ஆகிய முகாம்களை மூடுவதற்கு உத்தரவிட்டிருப்பதாகவும் இதையடுத்து கீரிமுட்டியில் தங்கியிருந்த தமிழர்கள் கிளிவெட்டிக்கு மாற்றப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=75322&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

♥ தமிழ்வின்.காம் விடும் புதுக்கரடி ! ♥

தமிழ்வின் தொடரும் விஷமத்தனம்!

http://tamilwin.com

இது வரை நாளும் தலைவர் இறந்து விட்டதாக கதைகட்டி வந்த தமிழ்வின்
குழுவினர் இன்று புது கரடி ஒன்றை அவிழ்த்து விட்டனர். அது என்னவெனில்
விடுத்லைப்புலிகள் இயக்கத்திற்கு தற்போது பொட்டு அம்மான் த்லைமை
தாங்குகிறார் என்பதுதான். பொட்டு அம்மான் தலைவருக்கு நம்பிக்கையானவர்தான்
என்ற போதிலும் துரோகக்குழுவினர் அவரையே தலைவர் என்று கூறுவதன் மூலம்
தலைவர் இறந்து விட்டார் என்று தமிழர்கள் அனைவரும் நம்பி விடுவார்களாம்!
இச்செய்தியை ஒரு இந்திய இணைய தளம் வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ள
தமிழ்வின் அது எந்த தளம் என்று கூறவில்லை. மேலும் பலவாறாக
கதைத்திருக்கும் தமிழ்வின் செய்தி பொட்டுஅம்மானை பத்மனாதனுக்கு எதிரான
ஒரு ஆளுமையாகவும் காட்டுகிறது. இதன் மூலம் பத்மனாதன் குழுவினர்
விடுதலைப்புலிகளின் தலைமையை எதிர்ப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
கடைசியாக தமிழ்வின்னின் புதுக்கரடியானது பொட்டுஅம்மானின் தலைமையிலான
புலிகளின் உளவுப்பிரிவே 3-வது ஈழப்போரை முன்னின்று நடத்தும் என்றும்
கூறுகிறது. இனி வரப்போவது 3-வது ஈழப்போரில்லை, ஐந்தாவது ஈழப்போர் என்பதை
நான் என் கட்டுரையான 'சரணாகதியை முறியடித்தல் -புதிய காலக்கட்டத்தினுள்
புகுமுன்பாக' என்ற கட்டுரையில் விளக்கியிருந்தேன். தமிழ்வின் தொடர்ந்து
விஷமத்தில் ஈடுபடுவதையே அதன் தொடர்ந்த துரோகத்தைக் கக்கும் செய்திகள்
காட்டுகின்றன.

திருமாவளவன் தொடங்கும் ஐந்தாவது ஈழப்போர்!

'காங்கிரசை வேரோடு சாய்ப்பதே என் முதல் வேலை' என்று சூளுரைத்த
திருமாவளவன்  அதே கையோடு காங்கிரசார் காலில் விழுந்து சரணாகதி அடைந்து
ஈழக்கொடுமைகள் பற்றி பேசுவதை விடுத்து தன் ஒரே ஒரு நாடாளுமன்ற
பதவையைபெற்றவர், தற்போது மீண்டும் ஈழப்போர் பற்றி பேச முன்வந்துள்ளார்.

தற்போது விரைவில் ஐந்தாவது ஈழப்போர் தொடங்கும் என்று திருமாவளவன்
அறிவித்துள்ளார். ஆனால் எப்போது, எங்கே என்று சொல்ல வில்லை. ஒருவேளை அவர்
ஐந்தாவது ஈழப்போரினை சத்தியமூர்த்திபவனில் தொடங்கலாம் போலும் என்றும்
கட்சி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

சுமார் 3 லட்சம் தமிழர்கள் உணவு, மருத்துவம், கழிவறை போன்ற அடிப்படை
வசதிகள் கூட இல்லாமல் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் என்று கவலை
வெளியிட்டுள்ள திருமாவளவன் பல ஆயிரம் தமிழர்களும் போராளிகளும் மே 18-ம்
தேதியன்று கொல்லப்பட்டபோது தேர்தல் வெற்றிக்களிப்பில் மூழ்கியிருந்தார்
என்று சொல்கிறார்கள். அதே நேரத்தில்தான் அவர் ஈழத்தமிழர்களை அன்னை சோனியா
காப்பாற்ற வேண்டும் என்றும் அறிக்கை விட்டார் என்று
நினைவுபடுத்துகின்றனர் கட்சி வட்டாரத்தினர். அன்னை சோனியாவை மீறி ஒரு
ஐந்தாவது ஈழப்போரினை திருமாவளவன் தொடங்க முடியுமா என்பதை அவர்தான் விளக்க
வேண்டும் என்றும் கட்சியினர் கூறுகின்றனர்.

நிலவரசு
கண்ணன்
இதோ அந்த விஷமச் செய்தி

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பொட்டு அம்மான் புதிய தலைவரா? இந்திய இணையத்தளம்

இலங்கையில் நடந்த போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள இராணுவம் தெரிவித்துள்ள நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக பொட்டு அம்மான் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இன்று இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உறுதிப்படுத்தப்படாத அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் நடந்த போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள இராணுவம் சொல்கிறது. ஆனால் பிரபாகரன் உயிருடன் பத்திரமாக இருப்பதாகவும், சில மாதம் கழித்து அவர் வெளியில் வருவார் என்றும் தமிழீழ ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இதனால் பிரபாகரன் விஷயத்தில் மர்மம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக பொட்டு அம்மான் உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொட்டு அம்மான், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். புலிகள் அமைப்பில் உளவுப்படையை தோற்றுவித்தது இவர்தான்.

உலகம் முழுக்க விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வலுவான கிளை அமைப்புகளை ஏற்படுத்தியதில் இவரது பங்கு அதிகமுள்ளது. அந்த வகையில் உலகம் முழுக்க உள்ள ஈழத்தமிழர்களுடன் பொட்டு அம்மானுக்கு பழக்கமும், நெருக்கமும் உள்ளது.

பொட்டு அம்மான் கொல்லப்பட்டதை சிங்கள இராணுவம் இதுவரை உறுதிபடுத்தவில்லை. பொட்டு அம்மானையும் கொன்று விட்டோம் என்று கூறி வரும் சிங்கள இராணுவம் அதற்கான ஆதாரத்தை இதுவரை வெளியிடவில்லை. கடைசி கட்ட போரில் தப்பிச்சென்று விட்ட பொட்டு அம்மான் இப்போதும் வன்னிப்பகுதியில்தான் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் ஈழப் போரின் 3-வது கட்டத்தை இந்த உளவுப்பிரிவே முன்னெடுத்து நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த இணையத்தளம் செய்து வெளியிட்டுள்ளது.


http://tamilwin.com/view.php?2a36QVH4b3dt9Eq34d0SWnL2b02R7GGb4d3aYpD4e0d5ZLukce0cg2h32ccevj0W2e

♥ தென்கொரியா ஆயுதக் கப்பலுக்கு...துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு வரவேற்கும் சிங்கள அரசு..! ♥

தென்கொரியா வழங்கிய 2 கப்பல் ஆயுதங்கள் இலங்கை வந்தன


கொழும்பு, ஜூன். 16-
 
தென்கொரியா இலங்கைக்கு பல்வேறு வித ஆயுதங்கள் மற்றும் பயிற்சி கருவிகளை இலவசமாக கொடுத்துள்ளது.
 
இவற்றை ஏற்றிக்கொண்டு 2 கப்பல்கள் கொழும்பு துறை முகத்துக்கு வந்தன. அவற்றை இறக்கும் பணி நடந்து வருகிறது. இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகளை போரில் தோற்கடித்து இருந்தாலும் மீண்டும் விடுதலைப்புலிகள் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இதற்கு தயாராக உலக நாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்கின்றனர். இதன்படி தென் கொரியாவில் இருந்து ஆயுதங்களை வாங்கி உள்ளனர். இரு கப்பல்களில் துறைமுகம் வந்தபோது சிங்கள ராணுவத்தினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு வரவேற்பு அளித்தனர்.
 
கப்பலில் உயர் ராணுவ அதிகாரிகள் குழு ஒன்றும் வந்துள்ளது. அவர்கள் பாதுகாப்பு துறை செயலாளர் கோதபயா ராஜபக்சேவை சந்தித்து பேசுகின்றனர்.

http://www.maalaimalar.com/2009/06/16121227/CNI0190160609.html

♥ சிங்கள சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 9 பேர் விடுதலை ♥

இலங்கை சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 9 பேர் விடுதலை: கடல் கொந்தளிப்பால் கரை திரும்புவதில் தாமதம்

ராமேசுவரம், ஜூன். 17-
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி மீன்பிடிக்க சென்ற தேவ தாஸ், பைரோம்கான் ஆகியோருக்கு சொந்தமான படகையும் படகில் இருந்த கோவிந்தராஜ், கோட்டைச்சாமி, காளீஸ்வரன், முத்து மலைராஜன் மற்றும் ஷேக் அலாவுதீன், மணி, பாபு, ஜார்ஜ் ஆகிய 9 மீனவர் களையும் இலங்கை கடற் படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனு ராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனை தொடர்ந்து மத்திய மாநில அரசு இலங்கை தூதரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தது. எனவே கடந்த 15-ந்தேதியே நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று மீனவர்கள் 9 பேரும் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டனர். இதனை விசாரித்த நீதிபதி தமிழக மீனவர்களை விடுதலை செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து 9 பேரும் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் இந்திய கடலோர காவல்படை கப்பல் மூலம் மண்டபம் கரைக்கு திரும்ப உள்ளனர்.
கடலில் தொடர்ந்து கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளதால் மீனவர்கள் வருவதில் தாமதம் ஏற்பட லாம் என்று மீன்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


http://www.maalaimalar.com/2009/06/17122217/MDU07170609.htmlஇலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்ந்தால் படகுகளை விற்றுவிட்டு அகதிகளாக செல்வோம்: ராமேசுவரம் மீனவர்கள் கண்ணீர் பேட்டி

ராமேசுவரம், ஜூன் 15-
ராமேசுவரத்தில் இருந்து மே 30-ந்தேதி முதல் விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் சென்று வருகின்றனர். 45 நாள் தடைக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் சித்ரவதை செய்ய தொடங்கினர்.
முதலில் 12 மீனவர்களை எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படையினர் அடுத்த சில நாட்களில் கடலுக்கு சென்ற 9 பேரை கடத்தி சென்று இலங்கையில் சிறை வைத்தனர். இதை தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இன்று 9 மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு வழக்கம் போல் கடலுக்கு சென்றனர். ஆனால் விடிய விடிய அழுதாலும் எங்கள் சோகம் தீராது என்பது போல் ராமேசுவரம் மீனவர்களின் பரிதாபம் தொடர்கிறது. நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்கினர்.
மேலும் மீனவர்கள் படகுகள் நிறைய பிடித்த மீன்களை பறிமுதல் செய்துவிட்டு வெறுங்கையாக அனுப்பி விட்டனர். உயிர் பிழைத்தால் போதும் என்று மீனவர்களும் தப்பி வந்துவிட்டனர்.
இலங்கை கடற்படையினர் தாக்கியது குறித்து மீனவர்கள் தெரிவிக்கையில், போர் ஓய்ந்த பிறகாவது நிம்மதியாக மீன் பிடித்து வரலாம் என்று மகிழ்ச்சியுடன் கடலுக்கு சென்றோம். ஆனால் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தை நிறுத்தி கொள்ளவில்லை.
சொல்லமுடியாத அளவுக்கு அவர்கள் சித்ரவதை தொடர்கிறது. இந்த நிலை நீடித்தால் மீன் பிடி தொழில் செய்ய முடியாது. நாங்கள் பல லட்சம் மதிப்புள்ள எங்கள் படகுகளை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு வேறு ஊருக்கு அகதிகளாக செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என்று கண்ணீர் மல்க கூறினர்.

http://www.maalaimalar.com/2009/06/15130821/MDU11150609.html♥ சிங்கள அகதி முகாம்களில் தினமும் 30 தமிழர்கள் மாயம் ♥

இலங்கை அகதி முகாம்களில் தினமும் 30 பேர் மாயம்: மனித உரிமை ஆணையம் தகவல்


இலங்கையில் போரின் போது வெளியேறிய மக்களை பல்வேறு முகாம் களில் அடைத்து வைத்துள்ளனர். இந்த முகாம்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். அவர் களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்க வில்லை. ராணுவத்தினர் முகாமுக்குள் நுழைந்து அத்து மீறல்கள் செய்கின்றனர்.
 
இது தொடர்பாக ஆசிய மனித உரிமை ஆணையம் ஒரு அறிக்கை
வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
 
அகதி முகாம்களில் இருந்து தினமும் 30-க்கும் மேற்பட்டோர் விசாரணைக் காக அழைத்து செல்லப்படுகிறார்கள். விடுதலைப்புலிகளோடு, தொடர்பு உள்ளவர்கள் என்று கூறி அழைத்து செல்கிறார்கள். ஆனால் அவர்கள் திரும்புவது இல்லை. அவர்கள் என்ன கதி ஆகிறார்கள் என்றும் தெரியவில்லை.
 
முகாம்களில் தங்கி இருப்பவர்களை வலுக்கட்டா யமாக வெளியே கொண்டு செல்வதால் ஆட்கள் காணாமல் போவதை தடுக்க முடிய வில்லை.
 
எனவே முகாம்களில் யார்-யார்? இருக்கிறார்கள்? என்பது பற்றி முறையாக பதிவுகள் செய்ய வேண்டும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://maalaimalar.com/2009/06/17111239/CNI0180170609.html

♥ வீரம் விளைந்த மண்ணில் மலட்டு விதையா? ♥

எம்.எஸ். சுவாமிநாதன் //விவசாய நில மோசடி -


ரத்தச் சேற்றில் ஈழ மக்கள் குளித்து நிர்கதியாய் நிற்கும் போது பிராந்திய வல்லூறுகள் ஈழத்தை பங்கு போடத் துடகின்றன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கை வர்த்தக பங்கீடு தொடர்பாக முரண்பாடுகள் எழுந்துள்ளதைப் போல ஒரு தோற்றம் உருவானாலும் உண்மையில் சீனா இந்தியத் தரப்புகளுக்குள் வர்த்தகம் தொடர்பாக இணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் இந்திய பாரம்பரீய விவசாய மரபை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்த இந்த மண்ணின் வளத்தை ரசாயன பூச்சிக் கொல்லி உரங்களால் நாசமாக்கிய இன்றைக்கு இயர்க்கை வேளான் விஞ்ஞானி என்று வேசம் போடும் எம்.எஸ். சுவாமிநாதன் இலங்கை அதிபர் ராஜபட்சேயை சந்தித்திருக்கிறார். முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்களை தடுத்து வைத்து விட்டு வழமையான வன்னிப் பிரதேச விவாசய நிலங்களை தனது வியாபார நோக்கத்திற்கு பங்கிட ஆசைப்பட்டிருக்கிறார் இந்த கொடூர விஞ்ஞானி அன்பர்களே! தயவு செய்து பாரபட்சமில்லாமல் கீழே கொடுத்துள்ள இந்தச் செய்திகளை மொழியாக்கம் செய்து வெளியிடுங்கள் பெரும்பாலான் ஊடகங்களில் இதை வெளிக்கொண்டு வருவதன் மூலம். நாம் இந்த நாசகார ச்கதிகளிடமிருந்து வன்னி மக்களைக் காப்பாதற்கான உணர்வையாவது பெற முடியும் என நம்புகிறேன். அவர்கள் முகாம்களில் இருந்து வாழ்விடங்களுக்கு திரும்பும் போது அவர்களின் காணிகள் அவர்களின் விவசாய நிலங்கள் அவர்களிடம் இருக்க வேண்டும். அதை இந்திய அந்நிய சக்திகள் ஆக்ரமிக்க அனுமதிக்காதீர்கள். அது ஒட்டு மொத்த வன்னி மக்களுக்கும் நாம் வழங்குகிற இன்னொரு தூக்குக் கயிறு. சூழலியல் ஆர்வல் கொண்ட நண்பர்களே! மனித உயிர்களின் பால் அக்கறை கொண்ட தோழர்களே! இதை அம்பலப்படுத்துங்கள்,.

டி.அருள் எழிலன்.


Www.eeladhesam.coMhttp://www.globaltamilnews.net/userfiles/cartoon/ci21408707.jpg
http://www.globaltamilnews.net/userfiles/cartoon/ci21408707.jpg


நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!