விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைவர் திருவாளர் செ.பத்மனாதன் அவர்கள்
நிலவரங்களை உற்று நோக்கி வருவோருக்கு அதிர்ச்சியையும் திகைப்பையும் ஒரு
சேர ஏற்படுத்தும். ஏனெனில் இலங்கை இந்திய அரசுகள் விரும்பும் முடிவான
தலைவர் இறந்து விட்டார் என்ற முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இனி
விடுதலைப்புலிகள் இயக்கம் அமைதி வழியில் தமிழீழம் அடைய அரசியல்
நடாத்துமென வழிகாட்டிமுறைகளை வகுத்தவர் செ.பத்மனாதன் அவர்கள்.
அதுமட்டுமின்றி அவரது வழிகாட்டலில் நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கப்பட
அனைத்து முன்முயற்சிகளையும் எடுத்தவர். எல்லாவற்றிற்கும் உச்சக்கட்டமாக
இந்திய அரசுடன் தான் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தப்போவதாகவும்
அறிவித்திருந்தார் செ.பத்மனாதன்.
அதே வேளையில் செ.பத்மனாதன் அவர்களைக் கைது செய்ய முயற்சிகள்
எடுக்கப்படுவதாக இருமாதங்களுக்கு முன்பிருந்தே இலஙையின் வெளியுறவு
அமைச்சர் அறிவித்தவண்ணமிருந்தார். இரு நாட்களுக்கு முன்பு புலிகள்
இப்போது புதிய தலைமையின் கீழ் ஒன்று திரண்டு வருவதாகவும், தாங்கள்
அதனையும் முடித்து விடுவோம் என்றும் இலங்கையரசு கருத்து
வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியில் செ.பத்மனாதன்
கைதானதாகவும், கடத்தப்பட்டதாகவும், கொழும்பு கொண்டு செல்லப்பட்டதாகவும்
செய்திகள் வருகின்றன. இந்த எல்லா நிகழ்வுகளையும் சேர்த்துப்
பார்ப்பவர்கள் இவற்றிற்கிடையே ஒரு முரண்பாடும் ஒரு பொருத்தப்பாடும்
இருப்பதை காண முடியும்.
முரண்பாடு:
செ.பத்மனாதன் அவர்கள் கூறியெதெல்லாம் உண்மைதான் என்று எடுத்துக்கொண்டால்
இப்போது நடந்திருப்பது வருத்ததிற்குரியது. ஏனெனில் மென்வழி அரசியல்
(smart politics) மட்டுமே இனி உதவும் என்று உறுதியாக தெரிவித்து இந்திய
அரச்சுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்த முனைந்தவர் கடைசியில் கைதாகியும்,
கடத்தப்பட்டும் உள்ளார். இதன் பின்னணியில் ஒரு பெரியநாட்டின்
உளவுத்துறையின் பங்கு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த பெரிய
நாடு எது என்று யூகிப்பது யாவருக்கும் எளிதே. அப்படியானால் செ. பத்மனாதன்
அவர்களின் மென்வழி அரசியல் குறுகிய காலத்திலேயே தோல்வியடைந்து விட்டதை
தற்போதைய நிகழ்சி காட்டுகிறது. அவர் இந்திய அரசுடன் ஏற்படுத்திய நேரடித்
தொடர்பு இப்படித்தான் முடிந்திருக்கிறது என்பதை எண்ணிப்பர்க்க வைக்கிறது.
இதிலிருந்து ஏராளமான பாடங்களைக் கற்க முடியும்.
பொருத்தப்பாடு:
தலைவர் இறந்து விட்டார் என்பது இலங்கை, இந்திய அரசுகள் விரும்பிய முடிவு.
அவரது இறப்பில்தான் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட முடியும்.
அத்துடன் தமிழீழம் என்ற விடுதலையுணர்வும் ஒரேயடியாக குழிதோண்டிப்
புதைக்கப்பட வேண்டும் என்றும் இரு அரசுகளும் அய்யத்திற்கிடமின்றி
விரும்புகின்றன. இந்த இரண்டையும் நிறைவேற்றத்தான் செ. பத்மனாதன் அவர்கள்
கருவியாகச் செயல்பட்டாரோ என்று கருதுவதில் தவறில்லை. ஏனெனில் என்று அவர்
தலைவர் இறந்து விட்டார் என அறிவித்தாரோ அன்று முதலே பல்வேறு
வட்டாரங்களில் துரோகியாக கருதப்பட்டார். பின்னர் விடுதலைப்புலிகளின்
உயிர் நாடியான விடுதலைப்போராட்டத்தை ஸ்மார்ட் அரசியலாகவும் மாற்றி
உதவினார் என்றும் சொல்லலாம். கடைசியில் அவரும் மர்மமான முறையில்
மறைந்திருப்பது தமிழர்களின் ஸ்மார்ட் அரசியல் கூட தோற்று விடும் என்று
நிரூபிக்க பயன்படலாம். இதன் மூலம் 'விடுதலைப்புலிகள் - தமிழீழம் -
தனிநாடு' என்ற கருத்தாக்கத்திற்கு சமாதி கட்டலாம். இப்படியொரு நாடகம்
நிறைவேற்றப்பட்டிருக்கிறதோ என்று எண்ணுவதும் இந்த நாடகத்தில்
செ.பத்மனாதன் அவர்களுக்கு முக்கிய வேடம் தரப்பட்டதோ என்று எண்ணுவதும்
தவறல்ல.
அனைத்தையும் அண்மை எதிர்காலம் தெளிவாக்கும் என்று நம்புவோம்.
- நிலவரசு கண்ணன்
"Nilavarasu" <email2u.mkannan@gmail.com
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com