எனக்கும் உனக்கும் இடைவெளிகள் அதிகம். என்றாலும் நான் உன்னை விரும்பினேன். ஒருவகையில் உன்னை ரசித்தேன். நீ வீரன் என்பதற்காக அல்ல. கடவுளுக்குச் சமனானவன் என்ற கற்பனையாலும் அல்ல. நானே நீயாக எனது உணர்வுகளே உனது உணர்வுகளாக எனது ஆவேசமே உனது ஆவேசமாக பாவித்துக் கொண்டே உன்னில் என்னைக் கண்டேன். இன்று, நீ இல்லை அது குறித்து அழக் கூட முடியவில்லை. எம்மவர் வாழ்வில் ஒருசில பொழுதுகள் அன்று இருந்தன. அந்நியப் படைகள் எமது மண்ணை ஆக்கிரமித்திருந்த காலம் இருண்ட பொழுதுகளே எமக்காக மிச்சமிருந்த காலம் உறவுகளைப் பிரிந்தாலும் அழமுடியாத காலம் . அந்தக் காலங்கள்.. மாறவேண்டுமென்றே நினைத்தோம். நான் வேண்டுதல் செய்தேன். நீயோ உனக்காகவும் எனக்காகவும் போராடினாய். இன்று - நீ.. எம்மிடையே இல்லை தெரிந்தும் பகிரங்கமாக அழ முடியவில்லை. அஞ்சலிக்க முடியவில்லை. இன்று, எமை அழுத்தும் ஷபூட்ஸ்| கால்கள் இல்லை. ஆக்கிரமிப்பாளனின் ஆதிக்கமும் இல்லை. இருந்தும் கூட என்னால அழ முடியவில்லை. என் கையே குரல்வளையை நசிக்கிறது. வளர்த்த கடாவே மார்பில் பாய்கிறது. இதனையா நான் யாசித்தேன் ? இதற்காகவா - நீ.. உன் வாழ்வை அர்ப்பணித்தாய் ? வளர்ப்பு நாய் இறந்ததற்குக் கூட கண்ணீர் வடிக்கும் உலகில். மூன்றுநாள் துக்கம் அனுட்டிக்கும் உலகில் எசமான் இறந்ததற்காய் அழமுடியா அவலம். சரித்திரத்தை உருவாக்கச் சமராடிய உனது சரித்திரமே இன்று மறைக்கப்படும் அவலம். எதிரியினால் அல்ல நேற்றுவரை உனது நண்பனாய் சகோதரனாய் நீ.. இறுதிவரை நம்பியருந்தவர்களால். சுதந்திரத்துக்காகப் போராடிய(?) அடக்குமுறையாளர்களால். காலம் ஒரு பதிலெழுதும் அப்போது உன் கல்லறையில் ஒரு பூ வைப்பேன். அதுவரை……? 16-06-09 -சண் தவராஜா-
http://seithy.com/breifPoems.php?newsID=15761&category=Poems
|
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com