இலங்கைத் துயரம் பாதித்ததால் விழாக்களைத் தவிர்த்து வந்தேன் ஏ.ஆர். ரஹ்மான்
இலங்கையில் நடந்த துயர சம்பவங்கள், எனது மனதை மிகவும் பாதித்ததால் கடந்த 2 மாதங்களாக எந்த விழாக்களிலும் பங்கேற்கவில்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழாவில் ரஹ்மானுக்கு, கெளரவ டாக்டர் பட்டத்தை ஆளுநர் பர்னாலா வழங்கினார். பட்டத்தை பெற்ற பின் அவர் வழங்கிய ஏற்புரையில் இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்கள் எனது மனதை மிகவும் பாதித்தன. திரையுலகின் மிகப் பெரிய ஆஸ்கார் விருது பெற்ற பின்னரும், கடந்த 2 மாதங்களாக எந்த விழாவிலும் நான் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தேன். அமெரிக்காவுக்குச் சென்று இசையமைப்புப் பணிகளில் ஈடுபட்டு திரும்பிய எனக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை அளித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்ததைக் கேட்டபோது என் மீது முத்து மழை பொழிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என்றார் ரஹ்மான்
ஈழதேசம்.கொம் நிருபர் காணகன்
ஈழத்தமிழர் என்றாலே சிங்களத்தின் பரிசு விசாரணை இன்றி சிறை
ஈழத்தமிழர் என்றாலே சிங்களத்தின் பரிசு திறந்த வெளிச்சிறைச்சாலை அல்லது உள்ளக சிறைச்சாலை வெளியிலிருக்கும் ஈழ தமிழர் சப்பாடு இல்லாமல் பட்டினி உள்ளக சிறைச்சாலையில் விசாரணை இன்றி பட்டினி
கொழும்பு விளக்க மறியல் சாலையில் 200க்கும் மேற்பட்ட தமிழ்க்கைதிகள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 4 ஆவது நாளாகவும் தொடரும் நிலையில் 5 பேரின் நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு சிறைச்சாலை அதிகாரிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீகாந்தா ஆகியோர் விடுத்த வேண்டுகோளை நிராகரித்துள்ள தமிழ்க் கைதிகள், தமது விடுதலை தொடர்பிலோ அல்லது தம் மீது வழக்குத் தொடர்வது குறித்தோ நீதியமைச்சர் மிலிந்த மொர கொட நேரடியாக வந்து உறுதிமொழி தரும் வரையில் தமது போராட்டம் தொடருமென அறிவித்துள்ளனர். நீதியமைச்சர் மிலிந்த மொரகொட தற்போது வெளிநாட்டில் உள்ளார். பிரதி நீதியமைச்சர் புத்திரசிகாமணியை தொடர்பு கொண்டபோது அவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக மொனராகலையில் உள்ளார். அவர் எதிர் வரும் செவ்வாய்க்கிழமையே கொழும்பு வருவார். ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனும் இது தொடர்பாக புத்திரசிகாமணியுடன் பேசியுள்ளார். இந்தக் கைதிகளின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு நீதியமைச்சின் செயலர் சுகத கம்லத்தையாவது சிறைச்சாலைக்கு அனுப்பி கைதிகளுடன் பேச்சு நடத்துமாறு புத்திரசிகாமணியிடம் கோரினேன். சுகத கம்லத் வெளிநாட்டிலிருந்ததாகவும் இன்றிரவு (நேற்று) நாடுதிரும்புவாரெனவும் அவரிடம் இது தொடர்பாக கூறுவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் பெற்றோரும் எம்மைத் தொடர்பு கொண்டு தமது பிள்ளைகளின் உயிர்களைக் காப்பாற்றும் படி கேட்டுள்ளனர். உண்ணாவிரதிகளில் இதுவரை 5 பேரின் நிலை மோசமடைந்துள்ளதாக அறிகிறேன். ஆனால் அவர்கள் உண்ணா விரதத்தை கைவிடத் தயாரில்லை. உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் பலமுறை உண்ணாவிரதமிருந்து அரசியல் வாதிகளாலும் மனித உரிமை அமைப்புக்களாகும் மற்றும் நீதித்துறையாலும் சட்டமா அதிபராலும் வழக்கு விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என வாக்குறுதி வழங்கி உண்ணாவிரத்தை பல முறை கைவிட்டவர்கள் ஆவர். சுமார் 85ம் ஆண்டிலிருந்து கூடி வழக்கு விசாரனை எதுவுமின்றி அவசரகால சட்டத்தின் கீழும் பயங்கரவாத சட்டத்தின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
ஈழதேசம்.கொம் நிருபர் காணகன்
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com