
கொழும்பு, ஆக.6-
இலங்கையில் போர் உச்சக்கட்டமாக நடந்து கொண்டிருந்தபோது போரில் காயம் அடைந்த தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்திய ராணுவ டாக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். 6 மாதங்களுக்கு முன்பு இலங்கை சென்ற அவர்கள் திரிகோணமலை மாவட்டம் புல்மொட்டை என்ற இடத்தில் தற்காலிக ஆஸ்பத்திரி அமைத்து சிகிச்சை அளித்தனர். போரில் காயம் அடைந்து அழைத்து வரப்பட்டவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் இந்த ஆஸ்பத்திரி வவுனியா மாவட்டம் செட்டிகுளத்துக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள மெனிக்பாம் அகதி முகாமில் தங்கியிருந்த தமிழர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
தங்களது பணிகள் முடிந்துவிட்டதால் இப்போது அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்ப ராணுவ டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதர் அலோக்பிரசாத் இலங்கை சுகாதார துறை மந்திரி சிரிபாலடி சில்வாவுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
எங்கள் டாக்டர்கள் குழு பணி முடிந்துவிட்டதால் அவர்கள் நாடு திரும்ப உள்ளனர். இந்த ஆஸ்பத்திரியை இனி இலங்கை சுகாதார துறை எடுத்து நடத்தலாம் என்று கூறியுள்ளார்.
இலங்கை அரசு இந்த ஆஸ்பத்தியை ஏற்று தொடர்ந்து நடத்துமா? என்று தெரியவில்லை. இந்திய டாக்டர்கள் திரும்பியதும் ஆஸ்பத்திரி மூடப்படும் என்று தெரிகிறது.
http://www.maalaimalar.com/2009/08/06121212/CNI023060809.html




























No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com