சென்னை, ஆக. 6-
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக முதல்- அமைச்சர் கருணாநிதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக பெறப்பட்ட நிதியை கொண்டு இலங்கை தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
முதல்- அமைச்சர் கருணாநிதி உத்தரவுப்படி தமிழக அரசு சார்பில் 3 முறை இலங்கை தமிழர்களுக்கு கப்பல் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. முதல் தடவை ரூ.10.07 கோடிக்கும், 2-வது முறை 6.62 கோடிக்கும், 3-வது தடவை 6.90 கோடிக்கும் பொருட்கள் அனுப்பப்பட்டன. இப்போது, 4-வது முறையாக ரூ.15 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்ப தமிழக அரசு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உணவு பொருட்கள், மளிகை சாமான்கள், பிளாஸ்டிக் கேன்கள், செருப்புகள், குழந்தைகளுக்கான துணிகள் உள்ளிட்ட பொருட்கள் இதில் அடங்கும். ரூ.15 கோடி மதிப்புள்ள இந்த பொருட்களை “எம்.சி.பி. ஆம்ஸ்டர்டாம்” என்ற கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கப்பல் இன்று மதியம் 11.50 மணிக்கு சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. 8-ந்தேதி 11 மணிக்கு இது கொழும்பை சென்றடையும். பின்னர் நிவாரண பொருட்கள் அங்குள்ள இந்திய தூதரகம் மூலம், ஐக்கிய நாடு சபை நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு வழங்கப்படும்.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com