அதிபர் ராஜபக்சே மீது அதிருப்தி: இலங்கை முன்னாள் ராணுவ தளபதி நாட்டை விட்டு வெளியேறுகிறார்; அமெரிக்கா செல்ல திட்டம்
கொழும்பு, ஆக. 5-
இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. இவர் கூட்டுப்படை தளபதியாக இருந்தார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து இவருக்கு பொதுமக்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உயர்ந்தது. இவர் சென்ற இடங்களில் எல்லாம் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இலங்கை அரசில் இவருக்கு உரிய மதிப்பும் மரியாதையும் தரப்படவில்லை. மேலும் அவரை ராணுவ தளபதி பதவியில் இருந்து நீக்கி விட்டார் எனவும் கூறப்படுகிறது. அதிபர் மகிந்த ராஜ பக்சேயின் இந்த நடவடிக்கைகள் அவரை அதிருப்தி அடைய செய்துள்ளது.
மேலும் பாதுகாப்பு அமைச்சக்கத்தின் செயலாளரும், அதிபர் ராஜபக்சேயின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்சே இன்னும் ஒருபடி மேலே சென்றுள்ளார். சரத்பொன் சேகாவின் அறிக்கைகளை வெளியிடக்கூடாது. அவர் தொடர்பான போட்டோக்கள் மற்றும் கட்டுரைகளை அரசு ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டை விட்டு வெளியேற சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளார்.
அமெரிக்கா சென்று அங்கு குடியேற திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இலங்கையில் 3 மாகாணங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் குழு ஒன்று சரத் பொன்சேகாவை சந்தித்தது. அவரது இந்த முடிவை மறு பரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
அவரது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு அதிபர் மகிந்தா ராஜபக்சேயிடம் எடுத்துக்கூறுவதாகவும் உறுதி அளித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் அவசர கால சட்ட நீடிப்பு மீதான விவாதம் நடக்கும்போது சரத் பொன்சேகா விவகாரம் குறித்து ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயகா பேச இருக்கிறார்.
பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கேயும் பாராளுமன்றத்தில் பேசுகிறார்.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com