மட்டக்களப்பிலும் மன்னாரிலும் எலும்புக்கூடுகள் மீட்பு
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் நீர்வழங்கல் சபைக்குச்சொந்தமான வெற்றுக்காணியிலிருந்த புதைகுழியொன்றிலிருந்து பல எலும்புக்கூடுகளும் மனித எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்லடி காளிகோயில் வீதியிலுள்ள இவ்வளவினுள் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் காலில் எலும்புத்துண்டொன்று குத்திய போதே அயலவர்கள் உதவியுடன் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸாரின் உதவியுடன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் முன்னிலையில் புதைகுழிதோட்டப்பட்ட போது பல எலும்புகளும் மனித எச்சங்களும் வெளிவந்தன.
மேலும் பெருமளவில் எலும்புத்துண்டுகள் இருக்கும் என்பதால் நாளை செவ்வாய்க்கிழமை (18.08.2009) கொழும்பிலுள்ள இரசாயன பகுப்பாய்வு பிரிவினர் வரும் வரை புதைகுழி தற்காலிகமாக மூடிவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னார் பஜார் பகுதியில் வடிகால் அமைப்பிற்காக குழிகள் தோண்டப்பட்ட போது மிகவும் சிதைந்த நிலையில் மனித எச்சம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் சிதைந்த நிலையில் தலை மற்றும் உடற்பாகங்கள் மீட்கட்பட்டன.
வேலையாட்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து அந்த மனித எச்சங்களையும் தடயங்களையும் பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
இது பலவருடங்கள் பழைமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது
http://www.meenagam.org/?p=8103
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com