Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, August 21, 2009

♥ "அடா! என்னங்கடா உங்க ஜனநாயகம்?" ♥

அடடா என்னவொரு ஜனநாயகம்?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzvWrSYcNynzGIjr8Gwi3jUUcJVSqtMcpIhAepwDP-sPsVvC9_4EFmYAubYYuhjMpXYD4MJJu-7-8XdqisUAaCn3Vtw5kvyB6msy017f9hSC-yoObo8fNdrCjbRQcRaOzkaSu-F-Q8Qr4/s400/tears.jpg



நமது நாட்டில் மத்திய அரசிலாகட்டும், மாநிலங்களிலாகட்டும் ஆட்சியில் அமரும் எந்த கட்சி அல்லது கூட்டணியாயினும் தாங்கள்தான் இந்த நாட்டின் ஒற்றுமையையும், இறையாண்மையும் காக்கப் பிறந்த தேச பக்தர்கள்போல் பேசுவார்கள், சட்டம் இயற்றுவார்கள், வலிமையான பாதுகாப்பு வலயத்திற்குள் நின்று கொண்டு பிடிக்க முடியாத பயங்கரவாதிகளுக்கு இந்த நாட்டின் சார்பாக கடும் எச்சரிக்கைகளை விடுப்பார்கள்.

ஆயினும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடரும், அப்பொழுதெல்லாம் மேற்குறிப்பிட்டது போல் வசனங்கள் பேசுவதும் தொடரும். எப்படி இந்தத் தாக்குதல் நடந்தது, அதற்கு எவருடைய செயலின்மை காரணம் என்றெல்லாம் இரண்டு, மூன்று நாட்களுக்குப் பேசுவார்கள். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் போக, படுகாயமடைந்தவர்களை மருத்துவமையில் சென்று பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வருவார்கள். அப்போதெல்லாம் முகத்தை மிகப் பரிதாபமாக வைத்துக் கொண்டு காயம் பட்ட குடும்பத்தினருடன் அக்கறையுடன் பேசுவார்கள்.

அதன்பிறகு, அடையாளம் தெரியாத அந்தப் பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள் என்று பேச ஆரம்பித்து, பக்கத்து நாடுகளை பழிக்கு இழுத்து பிரச்சனையை எல்லையைக் கடந்து கொண்டு சென்று ஆக்ரோஷமாக விவாதிப்பார்கள். வழக்கு நடக்கும்… பல ஆண்டுகளுக்கு. இப்படித்தான் இருபது ஆண்டுகளாக இந்த நாட்டில் நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வீர வசனங்கள் பேசும் தலைவர்கள்தான் மாறுகின்றனரே தவிர, வசனங்கள் என்னவோ அதேதான்.

அப்படியான வசனங்களில் ஒன்றுதான் ‘இந்த தேசத்தின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுவதை சகித்துக் கொள்ள மாட்டோம்’ என்பது. தேசப் பாதுகாப்பில் தங்களுக்கு உள்ள பற்றைக் காட்ட இவர்கள் சட்டமியற்றுவார்கள். சட்டமியற்றி பயங்கரவாதத்தை எப்படி ஒடுக்குவீர்கள் என்றால் பதிலிருக்காது. அவ்வாறு இயற்றப்பட்ட சட்டங்களால் எந்த அளவிற்கு பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் போது, அந்த சட்டம் போதுமானதாக இல்லை, அதனை மேலும் வலுவூட்ட வேண்டும் என்று பதில் கூறி, சட்டங்களை மேலும் கடுமையாக்குவார்கள்.

இப்படி சட்டங்களைப் போட்டு, அதில் திருத்தம் கொணர்ந்து மேலும் பலப்படுத்தி பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரமளித்து இவர்களால் மேம்படுத்தப்பட்ட சட்டங்க‌ள் அதன் பிறகாவது பயங்கரவாதத்தை வேரறுத்ததா என்றால் இல்லை! ஆனால் இப்படிப்பட்ட சட்டங்களைக் காட்டி தங்கள் அரசியல் எதிரிகளை (எதிர்கட்சி்த் தலைவர்களைத்தான்) கைது செய்து உள்ளே வைப்பது, அப்பாவிகளை கைது செய்து, போதுமான சட்ட வசதிகளை அளிக்காமல் குற்றவாளியாக்கி தண்டிப்பது, அவரே காஷ்மீரத்தைச் சேர்ந்தவராக இருந்தால் தூக்கு தண்டனை கொடுத்துவிட்டு, அவரை ஏன் இன்னமும் தூக்கி்ல் போடவில்லை என்று தேசப்பற்றுடன் குரல் எழுப்புவார்கள். இப்படிபட்ட நாடகங்கள் நமது நாட்டில் குறைவின்றி நடந்து வருகின்றன.

தங்கள் அரசியல் எதிரிகளை மட்டுமல்ல, அதையும் தாண்டி சில நேரங்களில் மனித உரிமைக்களுக்காக குரல் எழுப்புபவர்களையும் மிரட்டுவதற்கு இந்தச் சட்டங்கள் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையைத்தான் தமிழக அரசு எடுத்துள்ளது.

அதுதான் நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள தமிழக அரசின் ஒரு அறிவிப்பு. “தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயங்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலச்சினைகளை பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் பிரசுரித்தல்/ காண்பித்தல் ஆகியவை சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act -1967) படி தண்டனைக்குரிய குற்றங்களாகும். எனவே, பொதுக் கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரிக்கப்படுகிறது” என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் பெயரில் ஒரு விளம்பரம் செவ்வாய்கிழமையன்று காலையிலும், மாலையிலும் எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது.

அந்தச் சட்டம் கூறுவது என்ன?

1967ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, கடந்த ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு கடுமையாக்கப்பட்ட சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் நோக்கம்:

“இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்குரிய அதிகாரங்களை வழங்கவும், நாட்டின் நலன் கருதி கருத்துரிமைக்கும், ஒன்று கூடுவதற்கும், அமைப்பு அல்லது சங்கங்களை உண்டாக்குவதற்கும் உள்ள உரிமைகள் மீது காரணத்திற்குரிய அளவிற்கு கட்டுப்பாடுகளை (Reasonable restrictions) விதிக்க அரசிற்கு அதிகாரமளிக்கவும் இச்சட்டம் நிறைவேற்றப்படுகிறது” என்று கூறுகிறது.

இதுமட்டுமின்றி, மும்பைத் தாக்குதலிற்குப் பிறகு, பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு சில திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டு சேர்க்கப்பட்டபோது, இச்சட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தும் ஒரு முகப்புரையும் (Preamble) சேர்க்கப்பட்டது. அதன்படி, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து கூடிய ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 1373இன் படியும், அதற்கு முன்னரும் ஐ.நா.பா.பே. நிறைவேற்றிய பல்வேறு தீர்மானங்களின் அடிப்படையிலும், பயங்கரவாதத்தை சர்வதேச அளவில் ஒடுக்குவதற்கு ஏதுவாக இச்சட்டம் பல்வேறு துணைப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு கடுமையாக்கப்பட்டது.

இச்சட்டத்தின் பகுதி 4 பயங்கரவாத நடவடிக்கை மேற்கொள்வோர் மீது தண்டனை அளிப்பது குறித்து வரையறை செய்கிறது. அதில் பயங்கரவாத செயல் எது என்பது குறித்தும் வரையறுக்கப்பட்டுள்ளது (இதனை குறிப்பிடும் இச்சட்டத்தின் பிரிவு 15, 2008ஆம் ஆண்டு திருத்தப்பட்டுச் சேர்க்கப்பட்டது).

“இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது இறையாண்மை ஆகியவற்றிற்கு எதிராகவோ அல்லது மக்களை அல்லது ஒரு பகுதி மக்களை அச்சுறுத்தும் நோக்குடனோ இந்தியாவிலோ அல்லது அயல் நாட்டிலோ, வெடிகுண்டுகள், டைனமைட் அல்லது வேறு ஏதாவது வெடிபொருள் அல்லது எரிக்கின்ற பொருள் அல்லது துப்பாக்கிகள் அல்லது மற்ற கடுமையான ஆயுதங்கள் அல்லது விஷ வாயுக்கள் அல்லது இரசாயண பொருட்கள் அல்லது அபாயத்தை விளைவிக்கக் கூடிய உயிரியல் பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தியாவிலோ அல்லது அயல் நாட்டிலோ மக்களை அச்சுறுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பயங்கரவாத செயல்கள் ஆகும்” என்று கூறியுள்ளது.

ஆக, இந்தச் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் நோக்கம் (அதன் திருத்தத்திற்குப் பிறகு) இரண்டு தான்:

இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு எதிரான செயல்பாடுகளைத் தடுப்பது;

இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றை சீர்குலைக்கும் நோக்குடன் இந்தியாவிலோ அல்லது அயல்நாட்டிலோ மேற்கொள்ளப்படும் அல்லது அவ்வாறு திட்டமிடப்படும் பயங்கரவாத செயல்களைத் தடுப்பது என்பதே.

அதாவது இந்தியாவின் நாடாளுமன்றத்தால் அரசியல் காரணங்களுக்காகவே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது என்று குற்றம் சாற்றப்பட்டு நிராகரிக்கப்பட்ட பயங்கரவாத தடுப்புச் (POTA) சட்டத்தின் கடுமையான பிரிவுகளை ஒரு திருத்தத்தின் மூலம் ஏற்கனவே இருந்த சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் புகுத்தி, அதன் மூலம் நிராகரிக்கப்பட்ட பொடா சட்டத்தின் சாராம்சம் கொண்டதாகவே இச்சட்டம் மாற்றப்பட்டுள்ளது. எனவே இச்சட்டத்தையும் அரசியல் காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்று அத்திருத்தங்களை எதிர்த்தவர்கள் கூறியதுதான் இப்பொழுது தமிழக அரசின் இந்த அறிக்கையின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்று பொடா சட்டத்தின் கீழ் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, நெடுமாறன் உள்ளிட்டவர்களை அ.இ.அ.தி.மு.க. அரசு கைது செய்து சிறையில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தெளிபடுத்தியது மட்டுமின்றி, அவ்வழக்கிலிருந்து வைகோ உள்ளிட்டவர்களை விடுவித்தும் உத்தரவிட்டது. தடை செய்யப்பட்ட இயக்கத்தினை ஆதரித்துப் பேசுவது, அந்த இயக்கத்திற்கு உதவுவதாக ஆகும் என்ற அரசின் சட்ட விளக்கத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டதாக இருந்தாலும், அதன் நோக்கத்தை அல்லது குறிக்கோளை ஆதரித்துப் பேசுவதற்கு எவரொருவருக்கும் உரிமையுள்ளது என்று அத்தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

எனவே, தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்தோ அல்லது அதன் நோக்கத்தை ஆதரித்தோ பேசுவதும், ஆதரவு திரட்டுவதும் எந்த ஒரு குறிப்பிட்ட கடுமையான சட்டத்தின் நோக்கின்படியும் குற்றமாகாது என்பதும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலும், அதன் பிரிவு 19இன் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள கருத்துரிமைக்கு உட்பட்டதே என்பதும் அத்தீர்ப்பின் சாரமாக இருந்தது.

இப்பொழுது திருத்தப்பட்டு கடுமையாக்கப்பட்டுள்ள அல்லது வலுவூட்டப்பட்டுள்ள சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை காப்பாற்றும் நோக்குடன் இந்திய அரசமைப்பு சட்டம் அளித்துள்ள கருத்துரிமை உரிமையின் மீது காரண அளவிற்கு கட்டுப்பாட்டை (Reasonable restriction) விதிக்க அரசிற்கு இச்சட்டம் அதிகாரமளித்துள்ளது. இந்த அடிப்படையை பயன்படுத்தியே தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த ‘கருத்துரிமைக் கட்டுப்பாட்டு’ அறிக்கை அமைகிறது.

இங்கே கூர்ந்து கவனிக்கத் தக்க ஒரு விடயம் யாதெனில், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவான அல்லது அதன் நோக்கத்தை ஆதரித்து பேசப்படுவது இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிரானதா இல்லையா என்பதே. இந்த அடிப்படை விடயத்திற்கு விடைதேட வேண்டுமெனில் அந்த அறிக்கை எந்த இயக்கத்தை குறிப்பாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது என்பதை ஆராய்வது அவசியமாகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் விடுதலை இயக்கம் அல்லவா?

தமிழக அரசின் இந்த அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை குறிப்பிட்டே வெளியிடப்பட்டுள்ளது என்பது விவரம் அறிந்த எவருக்கும் எளிதில் புரியக் கூடியதே. அதன் வெளிப்பாடு இந்த விளம்பரம் அளிக்கப்படுவதற்கு முன்னரே - ஞாயிறு, திங்கட்கிழமைகளில் - சென்னையில் பல்வேறு இடங்களில், அமைந்தகரையில் திங்கட்கிழமை விடுதலை சிறுத்தைகள் நடத்திய மாநாடு தொடர்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளிலும், அவர்கள் நிறுத்தியிருந்த விளம்பரப் பதாகைகளிலும் அச்சிடப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படத்தையும், ஈழம் என்ற வார்த்தையும் காவல் துறையினர் அழித்திருந்தனர். ‘அழிக்கச் சொல்லி அரசு உத்தரவிட்டிருந்தது, அதனால் அழித்துள்ளோம்’ என்று காவல் துறையால் பதில் கூறப்பட்டதாக செய்திகளும் வந்திருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தமிழக மக்களிடையே பரவலான, ஆழமான ஆதரவு உள்ளது என்பதும், எந்த நோக்கத்திற்காக அந்த இயக்கம் ஆயுதம் தரித்துப் போராடியதோ அந்த இயக்கத்தின் நோக்கமான தமிழீழ விடுதலையை தமிழக மக்கள் பலமாக ஆதரிக்கின்றனர் என்பதும், அந்த இயக்கத்தையும், அந்த விடுதலை நோக்கத்தையும் ஆதரிக்கும் அரசியல், அரசியல் சார்பற்ற அமைப்புகளுக்கே இந்த எச்சரிக்கை அறிவிப்பு என்பதும் நன்றாகவே புலனாகிறது.

நமது கேள்வி இதுதான்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கதிற்கு ஆதரவாகப் பேசுவதும், அந்த இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் படத்தை விளம்பரத்தில் போடுவதும் எவ்வாறு இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எதிரான நடவடிக்கை என்று ஆகும்?

இன அழிப்பை தட்டிக் கேட்காததேன்?

இலங்கை விடுதலைப் பெற்ற 1948ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் பூர்‌வீகக் குடிமக்களான தமிழர்களுக்கும், 150 ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார செழிப்பிற்கும் காரணமான மலையகத் தமிழர்களுக்கும் இயல்பாக இருந்த உரிமைகளை, அடுத்தடுத்து வந்த சிறிலங்க அரசுகள் ஒவ்வொன்றாக பறித்து தமிழர்களை சம உரிமையற்றவர்களாக, இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கியது. மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தது. அதற்கு இந்திய அரசு முழுமையாக ஒத்துழைத்தது. சம உரிமை கோரி தமிழர்கள் மேற்கொண்ட சாத்வீகப் போராட்டங்கள் அரச படைகளால் கடுமையாக ஒடுக்கப்பட்டது. தமிழர்களை அழித்து அவர்களை எந்த உரிமையும் அற்ற அடிமைகளாக மாற்ற தொடர்ந்து முயற்சி நடந்தது, இன்றும் நடக்கிறது.

தங்களுடைய சாத்வீகப் போராட்டம் ஆயுத பலத்தால் ஒடுக்கப்பட்டதையடுத்து அதன் இயற்கையான நேர் வினையாக தமிழர்கள் ஆயுதமெடுத்துப் போராடத் துவங்கினர். அந்த ஆயுதப் போராட்டத்தை இந்தியா (இந்திரா காந்தி பிரதமராக இருந்துபோது) ஆதரித்தது, அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்தது மட்டுமின்றி, ஆயுதங்களையும் கொடுத்தது, நிதியுதவியையும் செய்தது. ஏனெனில் தமிழர்களின் ஆயுதம் தாங்கிய போராட்டத்ததின் நியாயத்தை இந்திய அரசு (அன்று) உணர்ந்திருந்தது.

அப்படி ஆயுதமேந்தி ஈழத் தமிழர்களின் சுய நி‌ர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வலிமையாக வளர்ந்து, சிறிலங்க அரசின் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னி‌ன்றுப் போராடி முடக்கியது. அடுத்தடுத்து வந்த சிறிலங்க அரசுகள் மேற்கொண்ட தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தி அதன் ஆயுத பலத்தை நிர்மூலமாக்கியது. தமிழர் இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணும் நிலைக்கு சிறிலங்க அரசை பலமுறை தள்ளியது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீரம் சொரிந்த போராட்டமே.

ஆனால் அந்த இயக்கத்தை தனது கைப்பாவையாக்க இந்திய அரசு முயன்றபோது அதனை ஏற்காததால், விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக சித்தரித்த சிறிலங்க அரசின் முயற்சிக்கு துணைபோனது. இந்திய அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட இந்த முரணே, ஈழத் தமிழர்களின் விடுதலை நோக்கத்தை அடிப்படையில் புறக்கணித்து உருவாக்கப்பட்ட இந்திய - சிறிலங்க ஒப்பந்தத்திற்கும், இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப் படைக்கும், புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலிற்கும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இராஜீவ் படுகொலைக்கும் வித்திட்டது. இப்படிப்பட்ட சங்கிலித் தொடர்பான நிகழ்வுகளின் பின்னணி முழுமையாக மக்கள் அறிந்திராத நிலையை தங்களுக்குச் சாதமாக பயன்படுத்திக் கொண்டும், இராஜீவ் படுகொலையை கேடயமாக பயன்படுத்தியும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கத் தலைப்பட்டது இந்திய அரசு. ஆனால் இராஜீவ் படுகொலை ஒரு பழிவாங்கும் நடவடிக்கையே, பயங்கரவாத செயல் அல்ல என்றும், அந்த நடவடிக்கை இந்தியாவை சீர்குலைக்கும் நடவடிக்கை என்று கருதுவதற்கு இடமில்லை என்றும், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது, அதன் முயற்சிக்குத் தடையானது.

அதன் பிறகே, சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளைத் தடுக்கும் சட்டம் அளிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயங்கங்களின் பட்டியில் இந்திய அரசு சேர்த்தது. அதற்கு அது கூறிய காரணம் என்னவெனில், தமிழகத்தை தனி நாடாக்கும் முடிவுடன் செயல்படும் தலைமறைவு இயக்கங்களுக்கு இரகசியமாகப் பயிற்சியளித்ததாக ஒரு குற்றச் சாற்றைக் கூறியது. இது சட்டப்படி நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றச் சாற்று அல்ல.

இச்சட்டத்தின் பகுதி 2, பிரிவு 3இன் படி, (1) எந்த ஒரு அமைப்பும் சட்டத்திற்கு முரணானது என்றோ அல்லது அவ்வாறு ஆகலாம் என்றோ மத்திய அரசு கருதுமானால் ஒரு அரசிதழை வெளியிட்டு அதனை சட்டத்திற்கு முரணான அமைப்பாக அறிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தியே விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் சேர்த்தது மத்திய அரசு.

அவ்வாறு ஒரு அமைப்பை சட்டத்திற்கு முரணான அமைப்பாக அறிவிப்பதற்கு (2) என்ன அடிப்படை என்றும், அதற்கான மற்ற காரணங்களையும் அவசியம் என்று மத்திய அரசு கருதினால் அந்த அரசிதழில் குறிப்பிட வேண்டும் என்று அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அப்படி தெரிவிக்க வேண்டிய விவரங்களையும் கூட, அது பொது நலனிற்கு பாதகமானதாக இருக்கலாம் என்று மத்திய அரசு கருதுமானால் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்தப் பிரிவு கூறுகிறது.

இப்படி எல்லா விதத்திலும் முழு அதிகாரமளிக்கப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.

இவ்வாறு சேர்த்தது சரியா தவறா என்று இதுநாள் வரை நீதிமன்றத்திலோ அல்லது அப்படிப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்யும் இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தீர்பாயத்திலோ (Tribunal) உறுதி செய்யப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஏனெனில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் சார்பாக அந்த இயக்கமோ அல்லது அதன் உறுப்பினரோதான் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்ய வேண்டும் என்று இச்சட்டம் ஒரு நிபந்தனையை (பிரிவு 36) விதிக்கிறது. எனவே விடுதலைப் புலிகள் மீதான தடை இரண்டாண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டே வந்துள்ளது. இப்பொழுதும் தொடர்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சேர்ப்பதோடு நின்றுவிடவில்லை, அதனை அயல் நாட்டு பயங்கரவாத இயக்கமாக (Foreign Terrorist Organization) அறிவித்து தடை செய்யுமாறு வலியுறுத்தி அதன் காரணமாக அந்த இயக்கம் இன்று 30 நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது எப்போது தெரியுமா? நார்வே நாட்டின் அனுசரணையுடன் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க அரசிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி, இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து‌க் கொண்டிருந்தபோதுதான் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகள் பயங்கரவாத இயக்கமாக அறிவித்தன!

என்ன நியாயம்! எப்படிப்பட்ட அரசியல் அணுகுமுறை! அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்டுவரும் ஒரு இனத்தின் சுய நிர்ணய உரிமைக்காக போராடும் ஒரு இயக்கத்தை, அது அரசியல் ரீதியான தீர்வு காணும் நோக்குடன் - சர்வதேச சமூகத்தின் வற்புறுத்தலை ஏற்று - தங்கள் இனத்தை அழித்துவரும் அரசுடனேயே பேச்சுவார்த்தை நடத்தும்போது பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்படுகிறது!

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை தெற்காசிய வல்லரசுகளின் ஆதரவுடன் அழித்தொழிக்கும் முயற்சிக்கு வித்திடப்பட்ட முதல் நடவடிக்கை புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது அதனை பயங்கரவாத இயக்கமாக மேற்கத்திய நாடுகள் தடை செய்தன என்றே அரசியல் நோக்கர்கள் பலரும் கருதுகின்றனர்.

அதனால்தான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக நிராகரித்துவிட்டு இராணுவ நடவடிக்கையின் மூலம் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணு்ம் நடவடிக்கையை துணிந்து முன்னெடுத்தார் ராஜபக்ச என்றால், அவருக்கு அந்தத் ‘துணிவை’ அளித்த பின்னணி இதுதான்.

தங்கள் மீது திணிக்கப்பட்டப் போரை நேர்மையாகவும், தீரத்துடன் எதிர்கொண்ட விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க தெற்காசிய வல்லரசுகள் அனைத்தும் சிறிலங்க அரசிற்கு முழு ஒத்துழைப்பை அளித்தன. அதிலும் இந்திய அரசின் ஒத்துழைப்பு எப்படிப்பட்டது என்பதற்கு போர் முடிந்ததாக சிறிலங்க அரசு அறிவிக்கப்பட்டப் பிறகு கோத்தபய ராஜபக்ச அளித்த பேட்டியே சான்றாகும்.

பாதுகாப்பு வலயம் என்று அறிவித்து அப்பகுதிக்கு நிராயுதபாணியாக மக்கள் வந்தவுடன் அவர்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டும், விமான குண்டு வீச்சின் மூலமும் சிறிலங்க இராணுவம் ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு, தாங்கள் வகுத்த யுக்தியே காரணம் என்று ராஜபக்ச பேட்டியளித்துள்ளாரே!

“பாதுகாப்பு வலயத்தை ஐ.நா.வோ அல்லது உலக நாடுகளோ உருவாக்கவில்லை, இராணுவம் தான் உருவாக்கியது. அங்கு அவர்கள் அனைவரும் வந்தப் பிறகு அதன் மீது குண்டு வீசி அனைவரையும் அழித்தோம்” என்று தனது ஆங்கில பத்திரிக்கையாள நண்பரிடம் அளித்த பேட்டியில் ராஜபக்ச கூறியுள்ளாரே? இதனை ஏன் இந்தியா உட்பட எந்த நாடும் கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் கோத்தபய ராஜபக்ச கூறியது போல இவை யாவும் ஒவ்வொரு நாளும் கூடிப்பேசி மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைகள்!

இப்படித்தான் பேசி, ஆலோசித்து, திட்டமிட்டு இறுதிக் கட்டப் போரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று, அடையாளம் ஏதுமின்றி அழித்து, பயங்கரவாதத்தை அழித்து விட்டதாக ராஜபக்ச கூறுகிறார்.


http://seithy.com/breifArticle.php?newsID=17879&category=Article


http://cpraveen.com/suvadugal/wp-content/uploads/2009/01/tsunami-pain.gif


http://theepamnet.files.wordpress.com/2009/07/vp0620.jpg


முழு அளவு படத்தைப் பார்





கொட்டும் முரசே-தமிழீழ எழுச்சிப் பாடல்கள்
http://www.youtube.com/watch?v=g_zRhit18uA

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!