தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, July 26, 2009

♥ தமிழகத்திலேயே தமிழர்களை அடிக்கும் சிங்களர்கள்! ♥

தமிழகத்திலேயே தமிழர்களை அடிக்கும் சிங்களர்கள்!

'தமிழனுக்கு இதைவிட கேவலம் வேறென்ன வேணும்ங்க?! ஈழத்துல நம்மாளுங்களை அழிச்சப்பதான் தட்டிக்கேட்கத் திராணியில்லாம இருந்துட்டோம். ஆனா, தமிழ்நாட்டுக்குள்ளே வந்து சிங்களன் நம்மளை அடிக்கிறான்னா எவ்வளவு திமிரு இருக்கணும்!'' - கனல் வார்த்தை தெறிக்கிறது திருப்பூர் திசையிலிருந்து!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகிலுள்ள காளாம்பாளையத்தில் 'மெர்டியன் அப்பேரல்ஸ்' என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. வினோத்குமார் என்ற வட இந்தியருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில்,

சுமார் ஆயிரத்து ஐந்நூறு பணியாளர்கள் பணிபுரிகி றார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கினர் தமிழர்கள். மற்றவர்கள் ஒரிஸ்ஸா, உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், ஜூலை 17-ம் தேதி கம்பெனி கேன்டீ னுக்குள் ஒரு பெரிய மோதல் உருவாகி, தமிழர்கள் தர்ம அடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஒரிஸ்ஸா

மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் கடியும், அடியும் வாங்கிய செல்ல பாண்டியன் அதைப் பற்றிச் சொல்கிறார். ''மூணு மாசத் துக்கு முன்னாடி வரைக்கும் நல்லாதான் இருந்துச்சுங்க கம்பெனி. ஆனா, சமீந்தா பண்டாராங்கிற சிங்களன் என்னிக்கு இங்கே ஜெனரல் மேனேஜரா வந்து சேர்ந் தாரோ... அன்னிலேருந்து எங்களுக்கு ஆரம்பிச்சுதுங்க தலைவலி. அந்தாளுக்கு தமிழர்களைக் கண்டாலே பத்திக் கிட்டு எரியும். நாங்க எதைப் பண்ணினாலும் தப்புன்னு சொல்லித் திட்டுறது, மிரட்டுறதுன்னு டார்ச்சர் பண்ணிட்டே இருப்பாரு. எல்லாத்தையும் தாங்கிட்டு வேலை பார்த்துட்டு இருந்தோம். அதனால, மத்த மாநிலத் துக்காரங்களை வச்சு தமிழ் ஆளுங்களை வம்பு பண்ண ஆரம்பிச்சாரு. குறிப்பா, ஒரிஸ்ஸா ஆளுங்ககிட்ட, 'நீங்க தமிழனுங்ககூட பழக்கம் வச்சுக்கக்கூடாது'னு சொல்லி யிருக்காரு. அவங்க முதல்ல இதைக் கண்டுக்கல. ஆனா, 'வேலையை விட்டு தூக்கிடுவேன்'னு மிரட்டுனதால, அவங்க எங்ககிட்டே தேவையில்லாம முறைச்சுக்க ஆரம் பிச்சுட்டாங்க. லேசா ஆரம்பிச்ச உரசல், நாளாக நாளாக வளர ஆரம்பிச்சுடுச்சு.

அன்னிக்கு கேன்டீன்ல வச்சு எங்களுக்கும், ஒரிஸ்ஸாக் காரங்களுக்கும் சின்ன வாக்குவாதம் உருவாச்சு. ஆனா,

திடீர்னு அவங்க அடிதடியில இறங்கிட்டாங்க, கத்திரி மாதிரி இருக்கிற ட்ரிம்மரை எடுத்து கண்டபடி கீறிவிட் டாங்க. தமிழருங்களைப் பார்த்து பார்த்து அவங்க அடிச் சாங்க; கடிச்சாங்க. அவனுங்ககிட்ட கடிபட்டதுல எனக்கு ரத்தம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. உடனே,

இதைப் பற்றி நிர்வாகத்துகிட்ட சொன்னோம். ஆனா, கொஞ்சமும் கண்டுக்காம, தமிழர்களை அடிச்சவங்களை பாதுகாக்கறதுலேயே குறியா இருந்தாங்க. அப்புறம் நாங்க எல்லாம் அடிச்சுப் பிடிச்சு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம்!''

என்கிறார் வேதனையாக. இவரைப் போலவே ரவி என்பவ ரையும் ட்ரிம்மரால் நெஞ்சில் கீறிவிட்டிருக்கின் றனர். ஏஞ்சல் என்கிற பையனுக்கும் அடி விழுந்திருக்கிறது.

இதனைக் கண்டித்த தமிழர் தொழிலாளர்கள் தங்கள் கம்பெனிக்கு எதிரே பந்தல் போட்டு ஆக்ரோஷத்துடன் போராட்டத்தில் உட்கார்ந்து விட்டார்கள். அவர்களில் ஒருவரான கமலநாதன்,

''எங்க முதலாளி வினோத் நல்லவர்தானுங்க ஆனா, அவரோட பையன்கிட்டே... இந்த சமீந்தா பண்டாரா 'கம்பெனியை பக்காவா மாத்திக்காட்டுறேன்!'னு சொல்லி பவர் வாங்கிக்கிட்டு, இந்த ஆட்டம் ஆடுறாரு. இந்த கம்பெனியில ஒரு தமிழன்கூட வேலை பார்க்கக் கூடாதுங்கிறது அவரோட எண்ணம். கூடவே இலங் கையில இருந்து சிலரை கூட்டி வந்திருக்கிறாரு. அவங்களுக்கும் ஏதேதோ பொறுப்பு போட்டுக் கொடுத்திருக்காரு. அந்த இலங்கைக் காரனுங்க தமிழ் ஆளுங்களை கண்காணிச்சு, வம்புக்கிழுக்கிறதே முழுநேர தொழிலா வச்சுருக்கானுங்க. தமிழ் பொண்ணுங்க கிட்டேயும் தரக்குறைவா நடந்துக்கிறாங்க. சுடிதாரை பிடிச்சு இழுக்கிறது, பின்பக்கம் தட்டிட்டு போறதுன்னு மோசமா சிலுமிஷம் பண்றானுங்க. இதையெல்லாம் தட்டிக் கேட்டா, தகராறு வந்து அடி விழுது. இந்தப் போக்கு மாறணும்; சமீந்தாவை வேலையில இருந்து தூக்கணும்னு சொல்லித்தான் இந்தப் போராட்டத்துல உட்கார்ந்திருக்கோம்!'' என்றார்.

மெர்டியன் அப்பேரல்ஸின் ஜெனரல் மேனேஜரான சமீந்தா பண்டாராவை இந்த விவகாரம் தொடர்பாக சந்தித்துப் பேச முயன்றோம். ஆனால், அவர் பேச சம்மதிக்கவில்லை. நிர்வாகத் தரப்பு மட்டும், ''இனவெறித் தாக்குதல் எல்லாம் இங்கே நடக்கல.

தொழிலாளர்களுக்குள்ள நடந்த சின்ன மோதலை பெரிய விஷயமா சிலர் வேணும்னே ஊதிவிட்டிருக் காங்க. இந்த விவகாரம் போலீஸ் கேஸாயிருக்கு. போலீஸ்காரங்களும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்காங்க. நாங்களும் பேச்சுவார்த்தை நடத்து றோம். கூடிய விரைவில் இந்த விவகாரம் சரிசெய்யப்படும்!'' என்று சொல்கிறது.

இந்த கம்பெனியில் மட்டுமில்லை...

திருப்பூரில் பல கம்பெனிகளில் இப்படியரு நிலை இருப்பதாகச் சொல்லிச் சாடும் ம.தி.மு.க-வின் திருப்பூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரான வழக்கறிஞர் பன்னீர்செல்வம், ''திருப்பூர்ல இருக்கிற பல பிரபல பனியன் கம்பெனிகள்ல சிங்களளர்கள் முக்கியப் பொறுப்புல இருக்கிறாங்க. தமிழ் தொழிலாளர்களை நசுக்கிப் பிழியுறதுதான் இவங்களோட முக்கிய வேலையே. 'யூனியன் வைக்கக்கூடாது; சட்டம் பேசக் கூடாது; எதிலும் நியாயம் கேட்கக் கூடாது'ன்னு சொல்லி தமிழ் தொழிலாளர்களோட கழுத்தை நெரிக்கிறாங்க. தமிழ் பெண்கள் கிட்டேயும் பாலியல் அத்துமீறல் நடக்குது. எவ்வளவு கொடுமையான நிலை பாருங்க... இதைவிட பெரிய கேவலம் தமிழனுக்கு வேறென்ன இருந்திடப் போகுது?

இந்த சிங்களர்களுக்கு பெரிய பொறுப்பும், கைநிறைய சம்பளமும், காரும் பங்களாவும் கொடுத்து ஆடவிட்டிருக்கிற பனியன் கம்பெனி முதலாளிகளுக்கு 'தமிழுணர்வு அற்றுப் போயிடுச்சு'ன்னுதானே அர்த்தம்? மெர்டியன் அப்பேரல்ஸ்ல நடந்தது அப்பட் டமான இனவெறித் தாக்குதல்தான். இதை அப்படியே மூடிமறைக்க முயலாம, அந்த சிங்களர்களை உடனடியா வேலையில இருந்து தூக்கி எறியணும். இங்கே இருக்கிற எல்லா கம்பெனிகளுமே எந்த சிங்களர்க ளுக்கும் கூலி வேலை கூட கொடுக்கக்கூடாது. கூடிய சீக்கிரத்தில் அத்தனை கம்பெனி தமிழ் தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்து மிகப்பெரிய போராட்டங்கள்ல இறங்குவோம்!'' என்றார் ஆக்ரோஷமாக.

இதுதொடர்பாக திருப்பூர் பனியன் கம்பெனி உரிமையாளர்கள் சங்கங்களிடம் பேசியபோது, ''ஒருத்தரை வேலைக்கு எடுக் கிறப்போ படிச்சவனா, நிர்வாகத் திறமையானவனான்னு பார்க்கிறோமே தவிர... அவனோட சாதி, இனமெல்லாம் பார்க்கிறதே இல்லை. பனியன் கம்பெ னிகள்ல சிங்களர்கள் ஆட்டம் போடுறாங்க... பெண்களைத் தொந்தரவு பண்றாங்கன்னு சொல்றதெல்லாம் அடிப்படையற்ற குற்றசாட்டுகள். இலங்கையில இருந்து அகதியா வந்த தமிழர்கள் பலபேருக்கு எங்க கம்பெனிகள்ல வேலை வாய்ப்பு கொடுத்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிற எங்களுக்கா தமிழ் இன உணர்வு இல்லை?'' என்று திருப்பிக் கேட்கிறார்கள்.

- எஸ்.ஷக்தி, ஜெ.அன்பரசன்
படங்கள்: தி.விஜய்


http://www.appaa.com/index.php?option=com_content&view=article&id=184:2009-07-25-10-50-48&catid=37:2009-07-08-13-09-56&Itemid=59

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!