கரும்புலிகள் கொழும்பு அனுப்பப்படவிருந்தனர் – திவயின
வன்னித் தாக்குதல்களைக் குழப்புவதற்காக கொழும்பில் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளவென 30 கரும்புலி வீரர்கள் தயார் படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் கண்டுபிடித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த 30 பேரும் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் தயார்ப்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறப்படுகிறது.
அவர்களின் சீருடைகள், மற்றும் 30 பேரின் தனிப்பட்ட தகவல்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஆண்கள், பெண்கள் என அதிலுள்ள அனைவரும் கப்டன், மேஜர் தரத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் அந்த அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.http://www.meenagam.org/?p=6480





























No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com