யூதர்களும் தமிழர்களும்--அப்பா இணையத்திற்காக ஜானமித்ரன்
இன்றைய நிலையில் உலகத்தமிழர்கள் அன்றயை நாட்களில் தமக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலையில், உலகநாடுகள் எல்லாம் பரவியிருந்த யூதர்கள் எவ்வாறு தம் வழற்சிகள், ஒன்றிய சிந்தனைகள் என்பவற்றின்மூலம் இஸ்ரேல் என்ற தேசத்தினை
உருவாக்கினார்களோ அதேபோல இன்று செயற்படவேண்டும் என பல தரப்புகளிடம் இருந்து கருத்துக்களும் தற்போது வலுப்பெற்று வருவதை நீங்கள் வாசித்திருப்பீர்கள்,
கேள்விப்பட்டிருப்பீர்கள்.இந்த நிலையில் நமக்கு யூதர்களின் போராட்ட வரலாறுகள், அவர்கள் அனுபவித்த வேதனைகள், அவர்களுக்கு நடந்த துரோகங்கள், அவர்கள் எழுச்சி பெற்ற ஒவ்வொரு கட்டத்திலும், அவர்களுக்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உலகில் இடம்பெற்ற மாற்றங்களால் அவர்களின் எழுச்சிகள் அமர்ந்துபோன ஏமாற்ற வரலாறுகள் என்பனபற்றிய முழுமையான வரலாற்றினை நாம் தெரிந்துவைத்திருக்கவேண்டியது அவசியமாக இருக்கின்றது.
இந்த நிலையில் இந்த தளத்தில் இஸ்ரேலின் முழுவரலாற்றினையும் எழுதுவதென்றால் அதற்கு பிறம்பாக ஒரு தளம் அமைக்கவேண்டும் என்பதால் அப்பப்போ எனது வலைப்பதிவுகளில் இஸ்ரேலின் உருவாக்கம் பற்றியும், யூதர்களின் பேளெருச்சி பற்றியும் பதிவுகளை மேற்கொண்டு நண்பர்களான உங்களுடன் பகிரலாம் என நினைத்துள்ளேன்.
ஏனென்றால் இஸ்ரேல் பற்றியோ, அல்லது யூதர்களின் வரலாற்றினையோ சரியாக தெரிந்துகொள்ளாதவர்கள்கூட தமிழர்கள் இன்று யூதர்கள்போல செயற்படவேண்டும், யூதர்கள் இஸ்ரேல் என்ற தேசத்தை எவ்வாறு அமைத்துக்கொண்டார்களோ அதேபோல தமிழர்களுக்கான ஒரு தேசத்தை நாம் அமைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் யூதர்களுடன் தமிழர்கள் ஒத்துப்போகும் சில இடங்கள், தமிழர்கள் யூதர்களாக மாறுவற்கு இன்னும் எடுக்கவேண்டிய விஸ்வரூபங்கள், மாற்றிக்கொள்ளவேண்டிய குண இயல்புகள், இன்னும் செய்யத்தயாராக வேண்டியுள்ள தியாகங்கள் என பலவற்றை சுட்டிக்காட்டவேண்டிய தேவை வந்துள்ளது. எனவே யூதர்கள் மற்றும் இஸ்ரேல், பற்றிய இந்த ஆய்வுத்தொடரினை நீண்டதாக அல்லாமல் மிகவும் சுருங்கியதாக ஆகக்கூடியது மூன்று தொடர்களில் முடிக்க முயற்சிக்கின்றேன்.
"இன்றைய உலகில் நோபல் பரிசுகள் பெற்றவர்கள், ஒஸ்கார் விருதுகள் பெற்றவர்கள், மிகப்பெரிய கலைஞர்கள், புகழ்பெற்ற விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியல் வல்லுனர்கள், அரசியல் ஆய்வாளர்கள், என எந்தத்துறையை வேண்டுமானாலும், அதில் எத்தனை பேரை வேண்டுமானாலும் பட்டியலிட்டுப்பாருங்கள். அந்தப்பட்டியலில் எத்தனை யூதர்கள் உள்ளனர் என கணக்கிட்டுப்பாருங்கள், அதிர்ந்துபோவீர்கள்.
யூதர்களின் சரித்திரமே எத்தனைக்கெத்தனை அவர்கள் போராடினார்களோ, கஸ்டப்பட்டார்களோ அத்தனைக்கத்தனை சாதித்தும் காட்டியுள்ளனர்."
சரி…நாம் இப்போ யூதர்களைப்பற்றிப்பார்ப்போம்….
அது ஒரு வெள்ளிக்கிழமை, ஏப்ரல் மாதத்தில் முதற்கிழமையாக இருக்கலாம் என நம்பப்படும் நாள்.
"நஸரேத் நகரத்தைச்சேர்ந்த இவர், யூதர்களின் அரசன் என்று எழுதி ஒட்டப்பட்ட அந்த சிலுவையில் ஜேசு சிலுவையில் அறையப்பட்ட நாள். (Iesus Nazarenus Rex Inudaeorum –INRI) மூன்றாவது நாள் அவர் உயிர்த்து விண்ணுலகம் சென்றதாக கிறிஸ்தவர்களால் சொல்லப்படுகின்றது. இது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.
மரணத்தின்பின்னர் தேவதூதன் உயிர்தெழவில்லை என்பதே யூதர்களின் நம்பிக்கை. ஜேசு மரணத்தின் பின்னர் உயிர்த்தெழவில்லை என்று நம்பியவர்கள் யூதர்களாகவே இருந்தனர்.
ஆனால் ஜேசு உயிர்த்தெழுந்தார் என்று நம்பிய யூதர்களின் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். யூதர்களிடம் பிளவு ஏற்பட்டு, கிறிஸ்தவம் என்றொரு மதம் தோன்றியதன் அடிப்படையே இதுதான். அப்படி ஒரு பிளவு உருவாக காரணமாக இருந்தவன் யூதாஸ். ஜேசுவைக்காட்டிக்கொடுத்தவன், ஜேசுவை கொலை செய்தவன் எனக் கிறிஸ்தவர்களால் குற்றம் சாட்டப்பட்டவன்.
யூதாஸ் என்ற தனி மனிதன் ஒருவன் சரிவர யோசிக்காமல் அவசரப்பட்டு செய்த ஒரு காரியம், யூதர்கள் என்றாலே காட்டிக்கொடுப்பவர்கள் என்று காலம்காலமாக உலகம் மாறி மாறி யூதர்களை பழிவாங்கும் நிலைக்கு ஆக்கியது. இதில் முக்கிமான ஒரு விடயம் என்னவென்றால், ஜேசுவும் யூதனே என்ற வாதம் முன்வைக்கப்படுவதுதான்.
இதன்மூலம் யூதர்கள் அனுபவித்த வலிகள் வேதனைகள் எராளம். இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு என்றால் அது யூதர்களுடையதுதான்.
இந்த நாட்களில் இருந்து ஒரு யுகத்தொடர்ச்சியாக கால காலங்களிலும் யூதர்கள் அனுபவித்த கொடுமைகளும், வேதனைகளும் மிக அதிகம், அவர்களுக்கான ஒரு மேய்ப்பானுக்காக அவர்கள் தமக்குள்ளேயே அழுத காலங்கள் மிக நீண்டவை.
தோழ்கொடுக்க ஆள் இன்றி அவர்கள் ஒரு கையால் தமது நிர்வாணங்களை மறைத்துக்கொண்டே மறுகையால் ஆடைநெய்து அணிந்துகொண்டார்கள்.
யூதர்கள் ஆரம்ப நாட்களில் இருந்து மோஸஸ், ஜோசப், ஜோஸ_வா, சாமுவேல், தாவீது, சொலமன், ஜேசு, ரோமானிய மன்னர்கள், நபிகள் நாயகம், சலாவுதீன், கலிபாக்கள், சிலுவைப்போர், போன்ற மன்னர்களையும், சம்பவங்களையும் கடந்தே யூதர்களின் வரலாறு வருகின்றது. இவை முழுவதையும் பதிவிடுவது இயலாத காரியம் என்பதால் அங்கிருந்து ஒரே பாய்ச்சலாக 18ஆம் நூற்றாண்டுகளில் இருந்து ஆரம்பிக்கலாம் என நினைக்கின்றேன். எனினும் எதிர்வரும் காலங்களில் யூதர்களின் பண்டையகால வரலாறுகளை தொகுத்து சிறு சிறு பதிவுகளாக தருவது சிறப்பாக இருக்கும் எனவும் எண்ணுகின்றேன்.
கி.பி. 1772 தொடக்கம் 1815 க்குள் போலந்து லித்துவேனியா போன்ற சில ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் ஜோர் என்ற மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
அன்றைய ரஷ்யாவின் இளவரசர் பொட்ரம்கின் யுதர்களுக்கு அதரவான ஒரு அறிக்கையினை வெளியிட்டார். "ஐரோப்பிய நாடுகளில் வாழமுடியாத யூதர்கள் ரஷ்யாவுககு வந்து ரஷ்யாவின் தென்பகுதிகளில் வாழலாம் என்பதே அந்த அறிவிப்பு. இது யூதர்களே சற்றும் எதிர்பாராத அறிவிப்பு. எனவே அவர்கள் கூட்டம் கூட்டமாக அங்க சென்று பெரும் குடியிருப்புக்களை உருவாக்கினார்கள்.
துருக்கி மீது பெடையெடுக்கும் நோக்கத்துடன் அதில் தந்திரமாக யூதர்களையும் இணைத்துக்கொண்டார். யூதர்கள் மயங்கும் வண்ணம் பல சலுகைகளையும் வழங்கினார். 1768 இல் ரஷ்யா துருக்கியை கைப்பற்ற போரினை மேற்கொண்டது. இதில் யூதர்களின் படையும் பங்கு கொண்டமையினால் பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு யூதர்களின்மேல் தோன்றியிருந்த வெறுப்பு இன்னும் அதிகரித்தது.
இந்த யுத்தங்களின் பின்னர் ரஷ்யாவில் இருந்து போலந்து பிரிந்துசென்றது. அந்தநேரத்தில் ரஷ்யா போலந்து எல்லைகள் சரியாக பிரிக்கப்படவில்லை. இந்த பிரிவினைச்சுழலில் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திய யூதர்கள் பல நிலங்களையும் வளைத்துப்போட்டார்கள். பல குடியிருப்புக்களை உருவாக்கி பெருமளவில் விவசாயத்திலும் ஈடுபட்டனர்.
நாளடைவில் யூதர்களின்மீது ரஷ்யாவுக்கு இருந்த காழ்ப்புணர்வு உயர்ந்து யூதர்களுக்கெதிரான கலவரங்கள் ஆரம்பித்தன.
ரஷ்யர்களை யூதர்கள் அடிமைப்படுத்த முயல்கின்றார்கள், அவர்களை மதமாற்ற முற்படுகின்றார்கள் என்று பொய்க்குற்றங்களை ரஷ்யர்கள், யூதர்கள் மீது சுமத்தி மேலும் 1802ஆம் ஆண்டு ரஷ்யாவின் மன்னராக இருந்த அலெக்ஸ்ஸாண்டர் 01 என்ற மன்னனால் யூதர்கள் அடித்து விரப்பட்டவேண்டியவர்கள் என்ற தொனிப்பொருளில் பல்வறு அழுத்தங்கள் யூதர்கள் மீது திணிக்கப்பட்டன.
இந்தவேளைகளில் ரஷ்யாவின் கெடுபிடிகள் காரணமாக ரஷ்யாவை விட்டு யூதர்கள் மெல்ல மெல்ல வெளியேறத்தொடங்கினர், அனால் காலங்கள் சென்றாலும் யூதர்களை அடிமைகளாக்க ரஷ்யா முயன்றுகொண்டே இருந்தது. இந்த நிலையில் 1881ஆம் அண்டு ரஷ்ய கிளர்ச்சியாளர்களே அலக்ஸாண்டர் 02 மன்னனை கொலை செய்ய அந்தப்பழியினை யூதர்கள்மீது சுமத்தி யூதர்கள் மீது பெரும் இனவெறியினை கட்டவிழத்து யூதர்களை கொன்று குவித்தனர் ரஷயர்கள். வகைதொகையின்றி யூதர்கள் கொலை செய்யப்பட்டனர். இது ரஷ்யாவில் மட்டும் இன்றி யூதர் ஒழிப்பு நடவடிக்கைகள் மெல்ல மெல்ல ஐரோப்பா முழுக்க பரவ தொடங்கியது.
ரஷ்யாவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் யூதர்கள் மீது கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது, அப்போதைய சக்கரவர்த்தியாக திகழ்ந்த நெப்போலியன் "பாலஸ்தீனத்தில் இருந்துவந்தவர்கள் யூதர்கள், இதன் அடிப்படையில் அவர்களுக்கு அவர்களது குடியேற்ற உரிமைகள் பாதுகாக்கப்படும், இருப்பு அங்கீகரிக்கப்படும்" என அறிவித்தார்.
ஒரு மாபெரும் சக்கரவர்த்தி பாலஸ்தீனம் யூதர்களின் நிலம் என அங்கீகரித்தமையினாலும், ஐரோப்பா முழுவதும் யூதர்களை அடித்து ஒதுக்கியபோதும் தமக்கு அதரவாக குரல் கொடுத்ததாலும், நெப்போலியனை உளமார வாழ்த்தினார்கள் யூதர்கள். கி.பி.1799 இல் நெப்போலியன் எகிப்தில் இருந்து சிரியா நோக்கி படையெடுத்திருந்தார்.
அவரது நோக்கமே அன்றைய பாலஸ்தீனத்தில் இருந்த ஏர்க் கோட்டையினை பிடிப்பதாகும். எனவே போகும்வழியல் பாலஸ்தீன ரமல்லா என்ற இடத்தில் தங்கியிருந்த நெப்போலியன், அங்கிருந்த யூதர்களைத்திரட்டி "நீதி கேட்கும் ஊர்லம்" என்ற பெயரில் ஊர்வலம் ஒன்றை நடத்தினார். இது அவரது இராஜதந்திரமே ஆகும்.
இநதப் போரில் அரேபியர்களை வெற்றி கொள்ள நீங்கள் உதவினால், ஜெருசலத்தினை அவர்களிடமிருந்து மீட்டெடுத்து உங்களுக்கே தருவேன் என யூதர்களிடம் ஊர்வலத்தில் தெரிவித்தார் நெபபோலியன்.
யூதர்கள் உடனடியாக நெப்போலியனின் படையுடன் இணைந்து செயற்பட்டார்கள். அனால் துருக்கிக்கு அப்போது பிரித்தானியாவின் உதவி இருந்தமையினால் நெப்போலியானால் வெற்றிகொள்ளமுடியவில்லை. நாளடைவில் பிற ஐரோப்பிய நாடுகளில் நடந்துகொண்டதுபோலவே யூதர்களை நெப்போலியனும் அடக்கி ஆழ தொடங்கினார்.
கொலை செய்யப்பட்டாலும் துரத்தியடிக்கப்பட்டாலும் அதே இடங்களில் மீண்டும் வந்து வாழ்வதற்கு யூதர்கள் தயங்கியதே கிடையாது. உலகமெல்லாம் பரவி தங்கள் வியாபாரங்களை வலைப்பின்னலாக பரவச் செய்தவர்கள் யூதர்களே. அதாவது Multi Level Marketing ஐ யூதர்கள் 17அம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டார்கள்.
வியாபாரத்தை விஸ்தரிக்க எந்தவிதமான குறுக்கு வழிகளில் நுளைய அவர்கள் அஞ்சியது கிடையாது. ஆனால் தமது வாடிக்கையாளர்களை அவர்கள் சிறிதளவும் ஏமாற்றவில்லை. எவ்வளவு தாம் முன்னேறினார்களோ அவ்வளவு தமது இனமும் முன்னேற வேண்டும் என்பதில் யூதர்கள் மிக உறுதியாக இருந்தார்கள்.
தம்மினத்தில் யாராவது ஒருவர் ஏதாவது ஒரு துறையில் சிறப்பானவராக இருந்தார் என்றால் அவர் அதேதுறையில் உச்சத்திற்கு செல்ல சகல உதவிகளையும் மற்ற யூதர்கள் வழங்கினர்.
1839 இல் ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள மெஷாக் என்ற இடத்தில் இருந்த பழமையான யூத தேவாலயம் ஒன்று முஸ்லிம்களால் தீ வைததுக்கொழுத்தப்பட்டது. அங்கே பற்ற வைக்கப்பட்ட கலவரத்தீ யூதர்களுக்கு எதிரான முஸ்லிம்களின் தீயாக பரவியது. இஸ்லாமியனாக மாறு இல்லை என்றால் இறந்துவிடு இதுவே முஸ்லிம்களால் யூதர்களுக்கு அன்று கொடுக்கப்பட்ட தெரிவுகள். யூதர்களுக்கு எதிராக எங்கும் முஸ்லிம்கள் கிளர்ந்து எழுந்து யூதர்களை தாக்கினார்கள்.
19ஆம் நூற்றாண்டின் மத்தியில் பல ஐரோப்பிய தேசங்களில் ஜனநாயகம் மலரத்தொடங்கியது. எவ்வாறு ஒவ்வொரு தேசத்திலும் தங்கள் இருப்பை யூதர்கள் நிலைநிறுத்த முயற்சித்தார்களோ, அதேபோல ஜனநாயக நாடுகளிலும் தமது உரிமைகளைப்பெறவும். உரிய பதவிகளைப்பெறவும் முயற்சிகளை செய்தனர்.
1848 இல் பிரான்ஸில் இடம்பெற்ற தேர்தலில் யூதர் ஒருவர் வெற்றி பெற்று நாடாளுமன்றப்பிரதிநிதியானார். தொடர்ந்து 1870 இல் பெஞ்சமின் டி இஸ்ரேலி என்ற யூதர் தேர்தலில் நின்று வெற்றிபெற்று பிரித்தானிய பிரதமராகவே ஆகினார்.
தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைவதென்பது இனி வெறும் கனவுதான் என சொல்ல சோபா சக்திபோன்றவர்களுக்கு அல்ல, வேறு எந்த நாலுகால்களால் தெருவில் ஓடி, நாக்கை தொங்கப்போட்டுத்திரியும் மிருகங்களுக்கும் உரிமை கிடையாது.
ஒரு இனத்தின் வரலாற்றுப்பாதை இப்படித்தான் அமையும் என எவராலும் ஆரூடம் கூறிவிடமுடியாது.
வரலாறுகள் பல மாற்றங்களை உண்டாக்கும். உண்டாக்கியும் இருக்கின்றன. உலகின் தமது எழுச்சிக்காக போராடிய சகல மக்களையும் எடுத்துப்பாருங்கள். அவர்கள் இன்று தாம் நினைத்ததைவிட உயர்ந்த நிலையிலேயே உள்ளனர். உலகவரலாற்றினையும், இயற்கையின் நியதியையும் வைத்து அடித்துச்சொல்லலாம் ஒரு இனத்தின் தன்னை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள், இலட்சியங்கள் தோற்றுப்போனதாக இல்லை.
ஏதோ ஒரு வடிவத்தில் ஏதோ ஒரு தந்திரத்தில், ஏதோ ஒரு முறையில் அவர்களின் இலக்குகள் அடையப்பட்டே தீரும்;. உண்மையான நியாயமான தமது இலட்சியங்களை இன்று அடையாதவர்கள் நிற்சயம் அதை நாளை அடைந்தே தீர்வார்கள்.
தமிழ்ழர்களுக்கு உரிய நாடு ஒன்று இன்றோ அல்லது நாளையோ பிறந்தவிடும் என கால நிர்ணயம் தந்து கூறிவிடமுடியாதுதான், அனால் இன்னும் 10 வருடங்களிலோ அல்லது 100 வருடங்களிலோ அது சாத்தியப்படலாம் அல்லது இன்னும் நாட்கள் எடுக்கலாம். யூதர்களின் வரலாறே இதற்கான சாட்சியம்தானே…சரி நாம் விடயத்திற்கு வருவோம்…
1870 இல் பெஞ்சமின் டி இஸ்ரேலி என்ற யூதர் பிரித்தானியாவின் பிரதமராகவே ஆகிவிட்டாரே. அப்பறம் என்ன நீண்ட நூற்றாண்டுக்குப்பிறகு யூதர்களின் வரலாற்றில் ஒரு வசந்தகாலம் உருவானது. அவர்கள் அதுவரை தாங்கள் அனுபவித்திருக்காத சுகங்களை அனுபவித்தனர். அதுவரை எட்டாத உயரங்களை தொட்டனர். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் யூதர்கள் சம அளவு உரிமைகளை பெற்றனர்.
ஆனால் மறுபக்கம் ஜெர்மனி, போலந்துபோன்ற நாடுகளில் யூதர்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்தவண்ணம் இருந்தனர். கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு "மதம் மாறு அல்லது மடிந்துபோ" என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
பிரிட்டனில் சாதகமான நிலை இருந்தமையினால் யூதக்குடியிருப்புக்களின் எண்ணிக்கை பல மடங்குகள் உயர்ந்தது. ஜோர்ஜ் மன்னர் இரண்டாவது அலெக்ஸ்ஸாண்டர் படுகொலைக்குப்பின்னர் ரஷ்யாவின் யூத ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்துகொண்டே இருந்தது.
தொடர்ந்தும் துரத்தப்படும், அழுத்தப்படும் இனமாக இருந்த யூதர்கள் சிந்தித்தனர்.
நமக்குத் தேவை நாம் நின்மதியாக வாழ்வதற்கு எமக்கேயான நிரந்தரமான ஒரு தேசம். எத்தனைகாலம்தான் நாம் இப்படி ஓடிக்கொண்டே இருப்பது? உலகில் பெரும்பான்மையான இனங்களுக்கு தாம் வாழ்வதற்கென்று நிரந்தரமான தேசங்கள் இருக்கின்றன. நமக்கு மட்டும் ஏன் இந்த நிலை? ஏன் எங்களுக்கு என்று எங்கள் நிலமான பாலஸ்தீன் இருக்கின்றதே! அதை நாங்கள் எப்படி அடைவது? இன்றைய உலகியலின் பார்வையில் அது சாத்தியமே இல்லையே! சாத்தியப்படாதவற்றையும் நாம் எப்படி சாத்தியப்படவைப்பது? என இவற்றைத்தான் அவர்கள் சிந்தித்தார்கள்.
சிறு சிறு குழுக்களாக கூடிப்பேசினார்கள். எல்லாமே இரகசியக்கூட்டங்கள். சுற்றியிருக்கும் சுவர்களில் ஒருவார்த்தைகூட எதிரொலிக்காத வண்ணம் தமது வார்த்தைகளை மிக இரகசியமாகப்பேசினார்கள்.
இவர்களில் தியொட்டர் ஹெசில் என்ற ஜெர்மனியில் இருந்த யூதர், பாலஸ்தீனத்தை நாம் கைப்பற்ற என்ன வழி என்று ஒரு பாரிய திட்டமே போட்டு வைத்திருந்தார்.
அந்த திட்டத்தை நிறைவேற்ற யூதப்பணக்காரர்களின் உதவிகளை அவர் நாடினார். எவ்வளவுதான் பணக்காரர்களாக யூதர்கள் மற்ற நாடுகளில் மாறியிருந்தாலும் அவர்கள் யூதர்கள் என்ற இன உணர்வு மிக்கவர்களாகவே இருந்தார்கள். ஹெசில் இந்த திட்டம் குறித்து பல யூதப்பணக்காரர்களுடன் இரகசியப்பேச்சுக்களை நடத்தினார். ஹெசிலின் இந்த திட்டம் ஜியோனிசம் எனப் பெயரிடப்பட்டிருந்தது.
முதலில் யூதர்களை ஒருங்கிணைக்கவேண்டும். மிகப்பிரமாண்டமான வலையமைப்பு ஒன்றை அமைக்கவேண்டும், உலகில் யூதர்கள் எந்த மூலையில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரினதும் எண்ணங்கள் ஒரே புள்ளியை நோக்கித்தான் குவியவேண்டும். அந்தப்புள்ளிதான் யூதர்களின் பூமியாகிய பாலஸ்தீன். அதனை அடைய எத்தனை காலம்வேண்டுமானாலும், எத்தனை இழப்புக்களை சந்திக்கவேண்டுமானாலும் யூதர்கள் தயாராக இருக்கவேண்டும். சுருக்காகச்சொல்வதென்றால் ஜியோனிஸத்தின் அர்த்தம் கொள்கை நோக்கம் எல்லாம் இதுதான்.
இந்த ஜியோனிஸம், 1975 களில் மிகத்தீவிரமாக மிக இரகசியமாக யூதர்களிடம் பரவிக்கொண்டிருந்தது. ரபிக்கள் ஜியோனிஸம் பற்றி யூதமக்களிடம் விரிவாக, ஆழுத்தம் திருத்தமாக எடுத்துக்கூறினர்.
"யூதர்களிடையே இந்த எண்ணத்தினை மிக ஆழமாக விதைக்கவேண்டும். யூத தேசிய உணர்வை அவர்களுக்குள்த் தூண்டவேண்டும். நமக்கு நாடு வேண்டும் என்றால் நாம்தான் அதற்காக உழைக்கவேண்டும். கலாலங்காலமாக நாம் எத்தனையோ பாhர்த்தாகிற்று, எத்தனையோ இழந்தாயிற்று. யாரும் எமக்கான தனிநாட்டை தட்டில்வைத்து தூக்கிக்கொடுத்துவிடப்போவதில்லை. எல்லோரும் அவர் அவர்களின் சுயநலங்களிலேயே தங்கிருக்கின்றனர். ஆனால் எமக்கான நாட்டை நாமே மலரச்செய்யவேண்டும்"
நாடு என்றால் என்ன? ஒரு நிலப்பரப்பு. குடியிருபுக்கள்.
வணிகநிலங்கள், வயல்வெளிகள் தோட்டங்கள் என பலவற்றை அடுக்கியது. அவ்வளவுதானே? நாம் அவற்றை விலைகொடுத்துவாங்குவோம். வீடுகளில் இருந்து பெரிய நிறுவனங்கள்வரை வாங்குவோம், விவசாயம் செய்ய நிலங்களை வாங்குவோம். வாங்கி வாங்கி யூதர்களுக்கே உரியதாக சேர்ப்போம். சேர்த்துக்கொண்டே போவோம். இப்படி நாம் செய்துகொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் ஒரு பெரிய நிலப்பரப்பினை நாம் காசு கொடுத்துவாங்கியிருப்போம். கிட்டத்தட்ட ஒருதேசமே யூதர்களுக்குச்சொந்தமாக இருக்கம். அந்த நிலப்பரப்பு பாலஸ்தீனமாக இருக்கட்டும் அது தானே எம் பல நூற்றாண்டுக்கனவு! ஹெசிலின் இந்தத்திட்டம் யூதப்பணக்காரர்களை மெய்சிலிர்க்க வைத்தது. உணர்சிவசப்பட்டவர்களாக எவ்வளவு பணம் என்றாலும் வழங்க தாம் தயார் என்றனர்.
இதன் முதற்கட்டமாக 1896ஆம் ஆண்டில் "உலக யூதர் கொங்கிரஸ்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் முதல் மாநாடு சுவிட்ஸர்லாந்தில் மிக இரகசியமாக அழைக்கப்பட்ட ஒரு சிலருடன் நடைபெற்றது. இங்குதான் ; The grand Plane என்ற நூறுபக்க அறிக்கையினை ஹெசில் வாசித்தார். அதை "ஒபரேஷன் பாலஸ்தீன்" என்று கூட அழைக்கலாம். யூதர்கள் இனிவரும் காலங்களில் எப்படி எல்லாம் தமது புத்திசாலித்தனங்களை உபயோகித்து தந்திரமாக காய்களை நகர்த்தவேண்டும். எப்படி எல்லாம் செயற்படவேண்டும், எப்படி எல்லாம் செயற்படக்கூடாது என சகலவற்றையும் விலாவாரியாக தெரிவிக்கப்பட்ட அறிக்கையாக அது இருந்தது.
அந்த அறிக்கையில் யூதர்கள் அன்றைய நிலையில் எப்படி காய்களை நகர்த்தவேண்டும் என சொல்லப்பட்வைகளில் முக்கியமானதை பார்த்தோமானால்,"யூதர்களுக்கு என்று ஒரு தேசத்தை அமைத்தே தீருவோம் என நாம் சபதம் எற்றுக்கொள்வோம். எத்தனை இழப்புக்களை நாம் சந்தித்தாலும், எத்தனைபேர்களை நாம் இழந்தாலும், எந்தச்சூழ்நிலையிலும் எமக்கான தேசம் என்ற நிலையில் இருந்து நாம் பின்வாங்கக்கூடாது.
எம் தேச உருவாக்கலை தகர்க்க பல சக்திகள் எம்மைத்தடுக்க எப்படியான சதித்திட்டங்களையும் தீட்டும், அவற்றை உடனடியாக இனங்கண்டு நாம் தகர்க்கவேண்டும். எம் இனம்மீதான பற்றும், எமக்கான நாடு என்ற உறுதியும் எம்மனங்களில் இருந்தால் எவராலும் எதனையும் செய்துவிடமுடியாது"
ஜேசுவைக்கொன்றவர்கள், ஜேசுவைக்கொன்றவர்கள் என்று நம்மீது பல ஆண்டுகளாக பழி சுமத்தி எம்மை அழித்துக்கொண்டே வருகின்றனர். அவர்களின் அடிப்படை மரபுகளிலும், விசமத்தனமான சிந்தனைகளிலும் ஊறிப்போன இதனை உடனடியாக அழித்துவிடமுடியாது. சாமர்த்தியமாக சமாளிக்க நாம் தயாராகவேண்டும். கிறிஸ்தவர்களுடன் பல வழிகளிலும், தோன்றல்களிலும் நாம் ஒத்திருந்தும் அவர்கள் நீண்ட நாட்களாக எமக்கு தொடர் துரோகங்களையே செய்துவந்துள்ளனர்.
ஐரோப்பாவில் மிக அதிகமாக வாழ்பவர்கள் கிஸ்தவர்கள்தான். அவர்கள் நம்பகைவர்களே. அனால் இப்போது அது எமக்கு முக்கிமல்ல. உணர்ச்சிகளையும் பழிவாங்கல்களையும் விட்டுவிட்டு, இனிநாம் தந்திரமாக முன்னேறவேண்டும், கிறிஸ்தவர்களுடன் நட்பு கொள்ளவேண்டும். அவர்கள் மனதில் இருந்து நம்மீதான பகைமை உணர்வை சிறிதாவது அகற்றவேண்டும். இந்த திட்டங்கள் உடனடியாக நிறைவேறப்போகும் திட்டங்கள் அல்ல. பல ஆண்டுகள் நாம் தீராமல் உழைப்பதன்மூலம் அடையப்போகும் திட்டங்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இந்த இடத்தின் எம்தமிழினத்தின் இன்றைய சூழலில், யூதர்களாக தமிழர்களையும், கிறிஸ்தவர்கள், ஐரோப்பாவாக இந்தியாவையும், ஜேசுவாக ராஜூவ் காந்தியையும் ஒப்பிட்டு பார்த்து மீண்டும் வாசித்துப்பாங்கள் கன கச்சிதமாக எப்படி பொருத்தமாக உள்ளது என்று)
சரி…யூதர்களின் இந்த திட்டங்களை நிறைவேற்ற பணம் தேவை. அதற்காக யூதர்களால் ஒரு வங்கி உருவாக்கப்படும். அதன் பெயர் "யூத தேசிய வங்கி" யூதர்கள் பாலஸ்தீனத்தில் நிலங்களை வாஙகுவதற்கான சகல உதவிகளையும் அந்த வங்கி தரும் என அறிவிக்கப்பட்டது.
சொன்னபடியே எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக இயங்கியது யூத தேசிய வங்கி. பிற நாடுகளிலும் இருந்த யூதர்கள் மெல்ல மெல்ல பலஸ்தீனத்தை நோக்கி நகரத்தொடங்கினார்கள். பலஸ்தீன யூதர்கள் மௌனமாக புரட்சிக்கு தயாராகிகொண்டிருந்தனர்.
இருபதாம் நூற்றாண்டு பிறந்தபோது, பலஸ்தீனத்தில் இருந்த மொத்த யூதர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு இலட்சத்தை தாண்டியது.
மெல்ல மெல்ல பலஸ்தீனத்தில் யூத நில வங்கிகள் முளைக்க ஆரம்பித்தன. அதிக இலாபம் கிடைக்குதென எண்ணி அரேபியர்கள் யூதர்களின் வலையில் விழுந்தனர். அரேபியர்கள் அபபோது நினைத்ததெல்லாம் ஒன்றுதான். இன்னும் எவ்வளவு அதிகமாக விலை சொல்லலாம் என்பதுதான.; அதன்படியே புறம்போக்கான தங்கள் நிலங்களுக்கு எல்லாம் தாறுமாறாக விலைகளைச்சொன்னார்கள், எவ்வளவு சொன்னாலும் யூதவங்கிகள் அவற்றை வாங்கிப்போட்டுக்கொண்டே இருந்தன. மறுபுறம் யூத வங்கியின் நிலங்கள் பெருகிக்கொண்டே இருந்தன.
இன்னொருபுறம் உலகமெங்கும் உள்ள யூதர்கள் தங்கள் பங்கிற்கு நன்கொடையாக தமது பணத்தினை இந்த வங்கிக்கு வழங்கிக்கொண்டே இருந்தனர். பணம் இல்லாத யூதர்கள் கூட, தம்மாலான வழிகளில், புத்தகம்விற்று, கலைநிகழ்வுகளை நிகழ்த்தி, சாகசங்கள் புரிந்து, என உணர்வுடன் இந்த வங்கிக்கு பணம் வழங்கிக்கொண்டே இருந்தார்கள்.
யூதர்களை எப்படி அடக்கலாம்? இழந்த நிலங்களை எப்படி மீட்கலாம் என அரேபியர்கள் காலம்தாழ்த்தி விழித்துக்கொண்டு தமக்குள் பேசிக்கொண்டிருக்கையில், இன்னும் மிச்சமிருக்கும் நிலங்களையும் எப்படி அபகரிக்கலாம் என யூதர்கள் திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.
யூத தேசிய நிதி என்ற பெயரில் ஜியோனிஸ இயக்கத்திற்காக உலக யூதர்களிடமிருந்து பணம், மூட்டை மூட்டையாக குவிந்துகொண்டிருந்தது. யூதர்களின் பொருளாதார பலம் என்பது படு சுபீட்சமாக இருந்தது. சமுதாய பலத்திலும், அவர்கள் முக்கிய நாடுகளின், பெரிய பதவிகளிலும். ஆட்சியாளர்களுக்கு தேவைப்படுபவர்களாகவும் இருந்தார்கள். பண பலம் இருக்கின்றது. எதையும் சாதிக்கலாம் என்ற தைரியம் அவர்களுக்கு இருந்தது, தாராளமாக எங்கும் இலஞ்சத்தை பழக்கிவிட்டார்கள். அதன்மூலம் தமது காரியங்களை பணத்தினால் சாதித்துக்கொண்டார்கள்.
பலஸ்தீனத்தில் மட்டும் இன்றி, இங்கிலாந்துபோன்ற பல மேலை நாடுகளிலும் உயர் அதிகாரிகளுடனான நட்பை, பணத்தினால் பலப்படுத்தி இருந்தார்கள்.
அரேபிய முஸ்லிம்களின் யூதர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் அதிகரித்தபோது யூதர்களுக்காக பலஸ்தீன் என்ற கோரிக்கையோடு, ஹெசில் சில நாடுகளின் ஆட்சியாளர்களை சென்று சந்தித்தார். ஜெர்மனியச்சக்கரவர்த்தி ஹெய்ஸர் வில்லியம் 2, துருக்கியின் சுல்த்தான் மெஹ்ருத் பதிதீன் ஆகிய இருவரும் அவருக்கு உதவ பின்வாங்கினர்.
ஹெசின் பிரிட்டனுக்குச்சென்றார். பிரித்தானியாவுக்குரிய காலணிகளை நிர்வகித்துக்கொண்டிருந்த மூத்த அமைச்சர் ஜோசப் ஷேம் லெலினை சந்தித்து பேசினார். அவர் நிதானமாக யோசித்து, அப்போதிருந்த யதார்த்த நிலையில் யூதர்களுக்கு பலஸ்தீனம் சாத்தியம் இல்லை எனத் தெரிவித்தார். ஆனால் வேண்டும் என்றால் கிழக்கு ஆபிரிக்காவில் உகண்டாவில் யூத நாட்டினை அமைக்கலாம் என்று தெரிவித்தார்.
இந்த பதிலால் ஹெசில் மகுந்த வருத்தமடைந்தார். அப்போதைய நிலமைகளை மட்டும் வைத்துக்கொண்டு எவ்வாறு பலஸ்தீன் யூதர்களுக்கு சாத்தியப்படாது என சொல்லமுடியும் என வேதனைப்பட்டார். என்றாலும் அதை பிரிட்டனிடம் காட்டாமல் இது குறித்து யோசித்து முடிவெடுக்கலாம் எனச்சொல்லிவிட்டு விடைபெற்றார்.
எத்தனை நூற்றாண்டுகளாக நாம் துரத்தப்பட்டு ஓடிக்கொண்டே இருப்பது? நமக்கென்று பலஸ்தீனத்தை வாங்கிவிடலாம் எனத் திட்டம் தீட்டி, அந்த திட்டமும் ஓரளவு வெற்றிகரமாக தனது இலக்கை நோக்கிக்கொண்டு செல்லும் வேளையில், இன்னொரு புறம் எமக்கு எதிரான சக்திகள் கூட்டுச்சேர்ந்துகொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் தீர்;வு தனி நாடுதான். பிரிட்டனின் யோசனைப்படி உகண்டாவை ஏற்றுக்கொண்டால் என்ன? ஒரு தற்காலிகத்தீர்;வு கிடைக்குமே! இதிலிருந்து பலஸ்தீனத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாமே!! என ஹெசில் யோசித்தார்.
இந்த யோசனையினை ஆறாவது யூதர்கள் கொங்கிரஸ் மாநாட்டில் அவர் முன்வைத்தார். அவ்வளவுதான், ஹெசில் தடம்மாறிவிட்டார். பாலஸ்தீன் கனவை கைவிடச்சொல்கின்றார், இவருக்கு பித்து பிடித்துவிட்டது, பிரிட்டனிடம் விலைபோய்விட்டார் இப்படி பல விமர்சனங்களுக்கு அவர் ஆளானார்.
யாருக்காக பாடுபட்டோமோ அந்த மக்களே இப்படித்தாற்றுகின்றார்களே என்று பெருமளவில் உடைந்துபோனார் ஹெசில். இதனால் படுத்த படுக்கையாகி 1904 ஆம் அண்டு இறந்துபோனார். அதன்பின்னரே ஹெசிலின் வார்த்தைகளில் இருந்த உண்மையினையும், தங்கள் வார்த்தைகளில் இருந்த விசத்தன்மையினையும் யூதர்கள் புரிந்துகொண்டு கண்ணீர்வடித்தனர். ஹெசிலிடம் மானசீகமாக மன்னிப்புக்கேட்டுக்கொண்டனர்.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com