இலங்கை ஜெயிலில் உணவின்றி, தூக்கமின்றி நரக வேதனை அனுபவித்தோம்: தமிழக மீனவர்கள் கண்ணீர் பேட்டி |
இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 21 பேர் புதன்கிழமை மண்டபம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சிறையில் உணவு, தூக்கமின்றி தவித்ததாக கூறினர். |
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 4 ந் தேதி 600 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இதில் கச்சத்தீவு அருகே 5 படகுகளில் மீன்பிடித்து கொண்டு இருந்த மலைச்சாமி (வயது 45), போஸ், ராமச்சந்திரன் (40), ரவிச்சந்திரன் (40), கணேசன், முனியசாமி, சேட்டு, முத்தழகு, பிரேம் (25) உள்பட 21 மீனவர்களையும், படகுகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்றனர். பின்னர் அவர்கள் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 21 மீனவர்களையும், 5 படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்ததன் பேரில் கடந்த 8 ந் தேதி 5 படகுகளையும், 21 மீனவர்களையும் இலங்கை அரசு விடுதலை செய்தது. ஆனால் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு இருந்ததால் அவர்களை ராமேசுவரத்துக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை காலை 10 மணிக்கு 5 படகுகளுடன் 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லைக்கு அழைத்து வந்தனர். அங்கு தயாராக நின்ற இந்திய கடலோர காவல்படையிடம் அவர்களை ஒப்படைத்தனர். பின்னர் இந்திய கடற்படையினர், 21 மீனவர்களையும் மண்டபம் கடலோர காவல் படை முகாமுக்கு அழைத்து வந்தனர். புதன்கிழமை மாலை 4 மணிக்கு மண்டபம் வந்து சேர்ந்த அவர்களிடம் கடலோர காவல்படையினர் மற்றும் மத்திய புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் 21 மீனவர்களும் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனர் இளம்வழுதி, மீன்துறை ஆய்வாளர்கள் சின்னகுப்பன், அஸ்மத்துல்லாகான் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை அடுத்து மீனவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை உறவினர்கள் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர். நிரபராதி விடுதலைக்கான கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம், மீனவர் சங்க தலைவர் போஸ் ஆகியோரும் வரவேற்றனர். விடுதலையாகி வந்த மீனவர்கள் மலைச்சாமி, சேகர், சுப்பிரமணியன் ஆகியோர் நிருபர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது: "கடந்த 4 ந் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 2 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி எங்கள் படகை சுற்றிவளைத்தனர். பின்னர் படகில் ஏறி பைப்களால் தாக்கி எங்களை தரக்குறைவாக பேசினர். அதன்பின் எங்களை பிடித்துச் சென்று தலைமன்னார் கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். அங்கு ஒரு அறையில் 300 க்கும் மேற்பட்ட சிங்கள கைதிகளுடன் எங்களையும் சேர்த்து அடைத்தனர். நாங்கள் தமிழர்கள் என்று தெரிந்ததும் சிறையில் இருந்த சிங்கள கைதிகள் எங்களை தூங்கவிடாமல் சித்ரவதை செய்தனர். அங்கு முறையாக உணவு வழங்கப்படவில்லை. நாங்கள் ஜெயிலில் உணவின்றி, தூக்கமின்றி நரக வேதனை அனுபவித்தோம். கடந்த 15 ந் தேதி அனுராதபுரம் சிறையில் இருந்து விடுதலை என்று கூறி மன்னார் கடற்கரைக்கு எங்களை அழைத்து வந்தனர். ஆனால் அன்று கடல் கொந்தளிப்பு காரணமாக அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆலயத்தில் எங்களை தங்கவைத்தனர். நேற்று தான் எங்களால் வரமுடிந்தது. அவர்கள் எங்களை ஒப்படைக்கும்போது எல்லைதாண்டி மீன்பிடிக்க வரக்கூடாது என்று எச்சரித்தனர்." |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com