இலங்கை சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 9 பேர் விடுதலை: கடல் கொந்தளிப்பால் கரை திரும்புவதில் தாமதம்
ராமேசுவரம், ஜூன். 17-
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி மீன்பிடிக்க சென்ற தேவ தாஸ், பைரோம்கான் ஆகியோருக்கு சொந்தமான படகையும் படகில் இருந்த கோவிந்தராஜ், கோட்டைச்சாமி, காளீஸ்வரன், முத்து மலைராஜன் மற்றும் ஷேக் அலாவுதீன், மணி, பாபு, ஜார்ஜ் ஆகிய 9 மீனவர் களையும் இலங்கை கடற் படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனு ராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனை தொடர்ந்து மத்திய மாநில அரசு இலங்கை தூதரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தது. எனவே கடந்த 15-ந்தேதியே நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று மீனவர்கள் 9 பேரும் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டனர். இதனை விசாரித்த நீதிபதி தமிழக மீனவர்களை விடுதலை செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து 9 பேரும் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் இந்திய கடலோர காவல்படை கப்பல் மூலம் மண்டபம் கரைக்கு திரும்ப உள்ளனர்.
கடலில் தொடர்ந்து கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளதால் மீனவர்கள் வருவதில் தாமதம் ஏற்பட லாம் என்று மீன்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
http://www.maalaimalar.com/2009/06/17122217/MDU07170609.html
இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்ந்தால் படகுகளை விற்றுவிட்டு அகதிகளாக செல்வோம்: ராமேசுவரம் மீனவர்கள் கண்ணீர் பேட்டி
ராமேசுவரம், ஜூன் 15-
ராமேசுவரத்தில் இருந்து மே 30-ந்தேதி முதல் விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் சென்று வருகின்றனர். 45 நாள் தடைக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் சித்ரவதை செய்ய தொடங்கினர்.
முதலில் 12 மீனவர்களை எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படையினர் அடுத்த சில நாட்களில் கடலுக்கு சென்ற 9 பேரை கடத்தி சென்று இலங்கையில் சிறை வைத்தனர். இதை தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இன்று 9 மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு வழக்கம் போல் கடலுக்கு சென்றனர். ஆனால் விடிய விடிய அழுதாலும் எங்கள் சோகம் தீராது என்பது போல் ராமேசுவரம் மீனவர்களின் பரிதாபம் தொடர்கிறது. நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்கினர்.
மேலும் மீனவர்கள் படகுகள் நிறைய பிடித்த மீன்களை பறிமுதல் செய்துவிட்டு வெறுங்கையாக அனுப்பி விட்டனர். உயிர் பிழைத்தால் போதும் என்று மீனவர்களும் தப்பி வந்துவிட்டனர்.
இலங்கை கடற்படையினர் தாக்கியது குறித்து மீனவர்கள் தெரிவிக்கையில், போர் ஓய்ந்த பிறகாவது நிம்மதியாக மீன் பிடித்து வரலாம் என்று மகிழ்ச்சியுடன் கடலுக்கு சென்றோம். ஆனால் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தை நிறுத்தி கொள்ளவில்லை.
சொல்லமுடியாத அளவுக்கு அவர்கள் சித்ரவதை தொடர்கிறது. இந்த நிலை நீடித்தால் மீன் பிடி தொழில் செய்ய முடியாது. நாங்கள் பல லட்சம் மதிப்புள்ள எங்கள் படகுகளை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு வேறு ஊருக்கு அகதிகளாக செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என்று கண்ணீர் மல்க கூறினர்.
http://www.maalaimalar.com/2009/06/15130821/MDU11150609.html
http://www.maalaimalar.com/2009/06/15130821/MDU11150609.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com