தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்
There was an error in this gadget

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Wednesday, June 17, 2009

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 17 -"தினமணி" தொடர் ♥


"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 17: முதலாவது சிங்களவர்-தமிழர் கலவரம்!தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்
போக்குவரத்து அமைச்சர் நாலாயிரம் தமிழர்களை இந்தியாவிற்கு அனுப்பிய நிகழ்ச்சிக்குப் பிறகு இந்தியர் பிரச்னையைப் பேசுவதற்காக மகாத்மா காந்தி தனது தூதுவராக ஜவாஹர்லால் நேருவை இலங்கைக்கு அனுப்புகிறார் (1939).

ஆனால், இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை ஒரு தீர்வுக்கு வராமல் தோல்வி அடைகிறது. அப்போது நேரு பல்வேறு தொழில் துறைகளில் இருந்த இந்தியர்களை அழைத்து, இலங்கை இந்தியர்களுக்கான ஒரு காங்கிரûஸ உருவாக்கிக் கொள்ளும்படி அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

இதையொட்டி உருவானதுதான் இலங்கை இந்திய காங்கிரஸ். இது கொழும்பில் உருவாகிப் பின்னர் மலையகத்தில் அறிமுகமாகிறது. இது கட்சியோ, தொழிற்சங்கமோ அல்ல. நேரு வருவதற்கு முன் எஸ். தேசாய் தலைமையில் இருந்த இலங்கை இந்தியர் சங்கமும் வள்ளியப்பச் செட்டியாரின் தலைமையில் இருந்த இந்திய சேவா சங்கமும் இணைந்ததொரு அமைப்பாகும்.

ஆரம்பத்தில் சிங்களப் பேரினவாதம் இந்திய வணிகக் குழுவை வெளியேற்றுவதற்காக மட்டுமே முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது தென் கிழக்கு ஆசிய நாடுகளைப் போன்றே இலங்கையிலும் இந்திய வணிக நிறுவனங்களிலும், நிர்வாகத்திலும் தமிழர்களின் கை மேலோங்கி இருந்தது. ஆனால் இலங்கை இந்தியக் காங்கிரஸ் உருவானபின் சிங்களவர் மத்தியில் ஓர் அச்சம் வேரூன்றியது. இதனைத் தொடர்ந்து, இலங்கையை சிங்களவர் மயமாக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்க அவர்கள் ஆரம்பித்துவிட்டனர்.

அப்போதிருந்த இந்திய வம்சாவளியின் சில பிரிவுகள்:

1. கொழும்பை மையமாகக் கொண்ட, மலையகத் தொடர்பு அற்ற, இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட வியாபாரிகள்.

2. மலையகத்தில் வணிகத் துறையிலும் விவசாயத்திலும் ஈடுபட்டோர். இவர்கள் இந்தியாவின் தொடர்பைத் துண்டித்துத் தோட்ட உரிமையாளர்களாக ஒரு சமூகச் சக்தியாக இருக்கின்றனர். முற்போக்கான தேசிய வாதம் இவர்களிடம் இருந்தது. ஒரு கட்சியாக உருவாகாமல் தொழிற்சங்கமாகவே இது உருவாகியது. மலையகத் தமிழரின் தேசிய இயக்கமாக இத்தொழிற்சங்கம் மாறியது.

3. இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த தோட்டத் தொழிலாளர்கள்.

இவ்வகையான கலவையே இலங்கை இந்தியக் காங்கிரஸôக ஆரம்பத்தில் இருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி (மசட)

1944-இல் சோல்பரிக் கமிஷன் ஆட்சியதிகாரத்தை மாற்றுவதற்கான சிபாரிசினைச் செய்கிறது. அதுவரை சிங்களவர்களுக்கென்று அமைப்பு ஏதுமின்றி இருந்தது. சோல்பரிக் கமிஷனின் ஆலோசனையின் பேரில் ஓர் அமைப்பாக மாறுவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.

முதலாவது பாராளுமன்றத் தேர்தல் காரணமாக அவசர அவசரமாக இக்கட்சி பிறப்பெடுத்தது. இலங்கைத் தேசியக் காங்கிரஸ், பண்டாரநாயகாவின் சிங்கள மகாசபை, முஸ்லிம் லீக் ஆகியவை சேர்ந்து இக்கட்சி உருவாகிறது.

1940-இல் இலங்கை மக்களின் வாழ்விடத் தெரிவுத் தகைமை பதிவு செய்யும் முறை கண்டிப்பாக அமலாக்கம் நடந்ததாலும், 1939-இல் இருந்ததைவிட 1943-இல் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாலும் சமூகரீதியில் சிங்களவர்கள் வளர்ச்சி பெற்றார்கள்.

தமிழர்களின் பங்களிப்பைக் குறைக்கும் வகையில் தமிழர்களுக்கு எதிராக ஓர் அரசியல் கட்சி வடிவத்தில் தங்களை ஸ்தாபனப்படுத்திக் கொள்கிறார்கள். இக்கட்சிதான் மேற்சொன்ன ஐக்கிய தேசியக் கட்சி.

அரசியலில் தங்களுக்குள்ள உரிமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உருவானதே இக்கட்சி.

1947-இல் இதையொட்டிய தேர்தல் வருகிறது. தேர்தலில் 7 மலையகப் பிரதிநிதிகள் வெற்றி பெறுகின்றனர். 20 தொகுதிகளில் மலையகத் தமிழர்கள் கணிசமாக இருக்கின்றனர். இவர்கள் இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்தனர். இதை முறியடிக்க ஐக்கிய தேசியக் கட்சியானது கம்யூனிஸத்திலிருந்து புத்தத்தைப் பாதுகாப்பது என்ற புதிய கோஷத்தை முன்வைத்து இனவாதத்தைத் தூக்கிப் பிடித்தது.

ஆனால், அதையும் மீறி மலையகத் தமிழர்களின் எண்ணிக்கையால் இடதுசாரிக் கட்சிகள் வெற்றி பெறுகின்றன.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் டி.எஸ். சேனநாயகா கோபம் அடைகிறார். அதன் விளைவாக மூன்று சட்டங்களை உடனடியாக இயற்றுகிறார். அவைகள்:

1. குடியுரிமைச் சட்டம்~1948.

2. இந்திய-பாகிஸ்தானிய குடியிருப்புச் சட்டம்~1949.

3. தேர்தல் சட்டத்திருத்தம்~1948.

இவைகள் அனைத்துமே தமிழர்களுக்கு எதிரான சட்டங்களாகும்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWP)

1950-இல் உருளவல்ல என்ற இடத்தில் தமிழ்த் தோட்டத் தொழிலாளரை வெளியேற்றி, அந்த நிலத்தை சிங்களவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கின்றனர். அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்கள் போராடுகின்றனர். இப் போராட்டத்திற்கு ஆதரவாகவும், சிங்களவர்களின் செயல்களைக் கண்டித்தும் பிற தோட்டங்களின் அனைத்துத் தொழிலாளர்களும் போராட ஆரம்பிக்கின்றனர்.

சிறு அளவில் ஆரம்பித்த போராட்டம், தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்கும் அளவில் விரிவடைகிறது. இதற்கு இலங்கை இந்தியக் காங்கிரஸ் தலைமை ஏற்கிறது. இந்தப் போராட்டத்தின் விளைவாகப் பெயர் மாற்றம் அடையப் பெற்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸôக மாறியது. மலையகத் தமிழர்களின் தேசிய உணர்வை இது பிரதிபலித்தது.

இடதுசாரிகள், ஒருபக்கம் வளர்ந்து வரும் சிங்களவர்களின் இன உணர்வைப் பார்க்காது, அதன் விளைவால் ஏற்பட்ட மலையகத் தமிழர்களின் தேசிய உணர்வை நிராகரித்ததன் மூலம், பெருமளவிலான தொழிலாளர்கள் இடதுசாரி அணியிலிருந்து விலகி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பின் அணி திரளத் தொடங்கினர். அந்தச் சூழ்நிலையில் மலையகத் தமிழர்களின் தேசிய உணர்வினைப் பிரதிபலிக்கக்கூடிய ஒரே அமைப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இருக்கிறது. அதனாலேயே லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இதன் தலைமையின்கீழ் திரண்டனர். இந்தக் காங்கிரஸின் தலைவராக நீண்ட பல ஆண்டுகளாக செü. தொண்டமான் இருந்து வந்தார்..

இலங்கைத் தொழிலாளர் கழகம்

1962-இல் தமிழரசுக் கட்சியின் அங்கமாக இலங்கைத் தொழிலாளர் கழகம் தமிழர்கள் மத்தியில் இது உருவாகியது. மறைந்த நாகநாதன் தலைமையில் திவானந்த சுந்தரம் செயலாளராகப் பொறுப்பு ஏற்றார்.

நிர்வாகத் திறன் படைத்த தொழிற்சங்கம் என்பது அன்றையக் காலக் கட்டத்தில் மிகத் தேவையான ஒன்றாக இருந்ததால் இது பெருமளவிற்கு வளர வாய்ப்பு இருந்தது.

1960-இல் தமிழரசுக் கட்சி ஈழத் தமிழர்களின் தேசிய இயக்கமாக வளர்ந்தது. பலவகையான போராட்டங்களை தமிழர்களுக்கு ஆதரவாக, சிங்கள இன வாதத்திற்கு எதிராக இது கட்டமைத்தது. சாஸ்திரி~ஸ்ரீமாவோ ஒப்பந்த எதிர்ப்பில் இது செல்வாக்கு அடைந்தது. 1965-இல் சாஸ்திரி~ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தைத் திருத்தத்தோடு ஏற்றுக்கொண்டு டட்லி சேனநாயகா அரசில் (U.N.P.) பங்கேற்றனர்.

திரும்பவும் ஸ்ரீமாவோ ஆட்சிக்கு வந்தபின் அவரது சுதந்திரக் கட்சியை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தி இலங்கைத் தொழிலாளர் கழகம் செல்வாக்கு பெற்றது. 1958-இல் முதலாவது சிங்களவர்~தமிழர் கலவரம் வெடித்தது. 1956-இல் இருந்துவந்த சிங்கள இனவாதத்தின் வெளிப்பாடாகத் தனிச் சிங்கள மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

பண்டாரநாயக்காவின் தனிச் சிங்கள மொழிச் சட்டம் அமலாக்கப்படுவதை எதிர்த்துதான் தமிழர்களின் போராட்டம் வெடித்தது.

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!