தென்கொரியா வழங்கிய 2 கப்பல் ஆயுதங்கள் இலங்கை வந்தன
கொழும்பு, ஜூன். 16-
தென்கொரியா இலங்கைக்கு பல்வேறு வித ஆயுதங்கள் மற்றும் பயிற்சி கருவிகளை இலவசமாக கொடுத்துள்ளது.
இவற்றை ஏற்றிக்கொண்டு 2 கப்பல்கள் கொழும்பு துறை முகத்துக்கு வந்தன. அவற்றை இறக்கும் பணி நடந்து வருகிறது. இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகளை போரில் தோற்கடித்து இருந்தாலும் மீண்டும் விடுதலைப்புலிகள் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு தயாராக உலக நாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்கின்றனர். இதன்படி தென் கொரியாவில் இருந்து ஆயுதங்களை வாங்கி உள்ளனர். இரு கப்பல்களில் துறைமுகம் வந்தபோது சிங்கள ராணுவத்தினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு வரவேற்பு அளித்தனர். கப்பலில் உயர் ராணுவ அதிகாரிகள் குழு ஒன்றும் வந்துள்ளது. அவர்கள் பாதுகாப்பு துறை செயலாளர் கோதபயா ராஜபக்சேவை சந்தித்து பேசுகின்றனர்.
http://www.maalaimalar.com/2009/06/16121227/CNI0190160609.html
http://www.maalaimalar.com/2009/06/16121227/CNI0190160609.html





























No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com