போர் முடிந்தும் இலங்கை அரசு தமிழர்களுக்கு எந்தவித வசதியும் செய்துதரவில்லை: ராமேசுவரம் வந்த பார்வையற்ற பெண் அகதி கண்ணீர் பேட்டி
ராமேசுவரம், ஜூன். 9-
இலங்கையில் விடுதலைப்புலிகளை முற்றிலும் அழித்து விட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்து உள்ளது. தற்போது அங்கு போர் முடிந்து அமைதி நிலவுகிறது. இருந்தபோதிலும் தமிழ் மக்களை இலங்கை ராணுவம் அடிமைப்போல் நடத்தி வருவதாகவும், பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்குவதாகவும் தகவல் கள் வெளியாகின்றன.
இந்த நிலையில் இலங்கை பேச்சாளை கடற்கரையில் இருந்து விஜயன் (வயது35), அவரது மனைவி சாந்தி (32) ஆகிய இருவரும் நேற்று இரவு ராமேசுவரத்திற்கு அகதிகளாக வந்தனர். இதில் சாந்தி இலங்கையில் நடத்திய தாக்குதலில் பார்வை யிழந்தவர். ராமேசுவரத்தில் இறக்கிவிடப்பட்ட அவர்கள் கோவில் போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து வரப் பட்டனர். போலீஸ் துணை சூப்பிரண்டு கமலாபாய், சப்-இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் கியூ பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து பெண் அகதி சாந்தி கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறிய தாவது:-
நாங்கள் கடந்த 2006-ம் ஆண்டு இலங்கை கிளிநொச்சி பகுதியில் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தோம். அப் போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று எனது தாயை பார்ப்பதற்காக நான் சென்றேன். அந்த சமயத்தில் இலங்கை ராணு வத்தினர் நடத்திய பயங்கர தாக்குதலில் எனது தாய் இறந்தார். எனது கண் பார்வையும் பறிபோனது. சிகிச்சைக்காக வவுனியா அரசு ஆஸ்பத்திரியில் நான் அனுமதிக்கப்பட்டேன். ஆனால் அங்கு எனக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வில்லை.
தற்போது இலங்கையில் போர் முடிவுக்கு வந்தும் அந்த அரசு இலங்கை தமிழர் களுக்காக எந்த வசதியையும் செய்துதர வில்லை. தமிழர் கள் தொடர்ந்து அடிமை களாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு மேலும் அங்கு வாழ பிடிக்காமல் நானும் எனது கணவரும் அகதிகளாக இங்கு வந்துள்ளோம்.
இலங்கையில் இருந்து ராமேசுவரம் வருவதற்காக இலங்கை படகோட்டி சீலன் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளோம். நடுக் கடலில் தமிழக மீனவர்கள் உதவியுடன் இங்கு வந்து சேர்ந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com