முல்லைத்தீவில் காயம் அடைந்த தமிழர்கள் மீது புல்டோசரை ஏற்றிக் கொன்றனர்: மனித உரிமைக்குழு குற்றச்சாட்டு
கொழும்பு, ஜூன். 13-
இலங்கையில் மனித உரிமைக்காக போராடும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் அறிக்கையை லண்டனில் இருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிக்கை வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது:-
அதில் கூறியிருப்பதாவது:-
இலங்கை ராணுவத்தினர் கடைசி கட்ட போரின் போது காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ள உத்தரவிட்டனர். அப்பாவி மக்கள் பதுங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அந்த பதுங்கு குழிகள் மீது ராணுவத்தினர் ராணுவ வாகனங்களை ஏற்றி நசுக்கினர். காயம் அடைந்த, குற்றுயிராய் கிடந்த அப்பாவி தமிழர்கள் மீது புல்டோசர்களை ஏற்றிக் கொன்றனர். அவர்களை இறந்தவர்களுடன் சேர்த்து ஒட்டு மொத்தமாக புதைத்தனர்.
சரணடைந்த விடுதலைப்புலிகளையும் சரணடைய வந்த விடுதலைப்புலிகளையும் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தடுப்பு முகாம்களில் வைத்து கைது செய்யப்பட்ட 3000 தமிழீழ விடுதலைப்புலி சந்தேக நபர்களிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர். மக்கள் தங்கியுள்ள தடுப்பு முகாம்களில் மொத்தமாக 7200 பேரை விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
http://www.maalaimalar.com/2009/06/13150240/CNI0570130609.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com