உலக மொழிகளில் தமிழுக்கு 15 வது இடம்
உலகில் இன்று பேசும் மொழிகளில் பழமைவாய்ந்த தமிழ் மொழி 15 வது இடத்தில் இருப்பதாக மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், உலகில் இன்று 6 ஆயிரத்து 800 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. அதில், 2 ஆயிரத்து 261 மொழிகள் எழுத்துருவை பெற்றுள்ளன. ஏனைய மொழிகள் பேச்சு வழக்கில் மாத்திரமே உள்ளன.
1996 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மொழியுரிமை பிரகடனத்தின் படி ஒரு மொழியின் வரலாற்றுத்தன்மை, அதன் எல்லை, அங்கீகரிப்பு, போற்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மொழிகள் தரப்படுத்தப்படுகின்றன. ஆசியாவில் மாத்திரம் 2 ஆயிரத்து 200 மொழிகள் பேசப்படுகின்றன. ஆபிரிக்காவில் 2 ஆயிரம் மொழிகளும், பசுபிக் பிராந்தியத்தில் ஆயிரத்து 300 மொழிகளும், ஐரோப்பாவில் 230 மொழிகளும் பேசப்படுகின்றன.
இந்தநிலையில், உலகில் வாழும் மொழிகள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது தமிழ் மொழி 15 வது இடத்தை பிடித்துள்ளது. மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, மொரீஷியஸ், தென்னிந்தியா, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி, மற்றும் 1862 ம் ஆண்டு பிரிட்டன் காலணித்துவத்தைக் கொண்ட இலங்கையின் மலைநாட்டுப்பகுதி என்பவற்றில் தமிழ் மொழி புழக்கத்தில் உள்ளது.
தமிழ் மொழிக்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. போர்த்துக்கல், நெதர்லாந்து ஐக்கிய இராச்சியம் போன்ற இடங்களில், இதற்கான சான்றுகள் உள்ளன. இவற்றை 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததை போன்று நாசமாக்கமுடியாது என மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com