ஆபத்து எப்போதும் தூரத்தில்தான் இருக்கும் என்பதில்லை. நம் நிழலுக்கு அடியிலேகூட இருக்கக் கூடும். உதாரணத்துக்கு... சீனா!
'சீன ராணுவம் வலுவாக வளர்ந்து வருகிறது. எல்லை-யில் பெருமளவில் ராணுவத்தைக் குவித்து வரு-கிறது. பாகிஸ்தானைவிட சீனா பெரிதும்நமக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதைச் சமாளிக்க நமது விமானப் படையிலும் அதிநவீன விமானங்கள்வழங்கப் பட வேண்டும்' என்று அலறியவர் இந்தியாவின் விமானப் படை தலைமை மார்ஷல் பாலி ஹோமி மேஜர்.
அமெரிக்காவுக்கு இணையான ராணுவ மற்றும் பொருளாதார பலத்துடன் சீனா உருவாகி வருகிறது என்று அமெரிக்க உளவுத் துறையின் சமீபத்திய அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவையே சீனா பயமுறுத்துகிறது என்றால், இந்தியாவுக்கு?சமீபத்தில் ஹைனன் தீவில் அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பல் தளத்தை சீனா அமைத்தது. சீனப் பத்திரிகை ஒன்று இது குறித்த தகவலைப் பெருமையாக வெளியிட்டபோது, இந்தியாவுக்குப் பேயறைந்தது போல் இருந்தது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் தளத்தில், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் 20 கப்பல்-களைமறைத்து வைக்க முடியும்.
உலக அளவில் அணு ஆயுதம் மற்றும் பயங்கர ஆயுதங்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவிஞ் ஞானிகளின் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் அமெரிக்கன் சயின்டிஸ்ட்) எடுத்த செயற்கைக்கோள் புகைப் படத்தில் இந்தியாவுக்கு இன்னும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லி உட்பட இந்திய நகரங்களைக்குறி வைத்தபடி சீனா ஏவுகணைகளை நிறுவியிருப்பது தெரிய வந்திருக்கிறது. சீனாவின் கிங்கை மாகாணத்தில் டெலிங்கா அருகே 2,000 சதுர கி.மீ பரப்பளவில் கிட்டத் தட்ட 60 ஏவுகணைத் தளங்களை சீனா அமைத் துள்ளது.
ஒரு பட்டனைத் தட்டினால் போதும், ஒரு சில நிமிடங்களில் டி.எஃப்-21 ரக ஏவுகணைகள் விண்ணில் சீறிப் பாய்ந்து தாக்கும். இந்த ஏவுகணைகளில் அணு குண்டுகளையும் ஏற்றி அனுப்ப முடியும்!
தனது நாட்டுக்குள் இருந்து இந்தியாவைக் குறி-வைப்பதற்கு அடுத்ததாக, அண்டை நாடுகளுக்குள் புகுந்து, தனது தளங்களை நிறுவி வருகிறது சீனா. இதில் முக்கியமானவை, துறைமுகங்கள். சரக்குகளைக் கொண்டுசெல்வதற்காக என்று நொண்டிச்சாக்கு சொன்னா-லும், துறைமுகம் அமையும் இடங்களில் எல்லாம் விரைவில் கடற்படைத் தளத்தை சீனா அமைக்கும் என்று தகவல். உலக அளவில் கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்கு-மதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு சீனா.
வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவில் எண்ணெயைக் கப்பல் மூலம் கொண்டுசெல்கிறது. இந்தக் கப்பல்களின் பாதுகாப்புக்கு எனக் கூறிக்கொண்டு பாகிஸ்-தானில் கவுடார், வங்கதேசத்தில் சிட்டகாங், மியான்மரில் சிட்வி, இலங்கையில் ஹம்பன்தோடா ஆகிய இடங்களில் துறைமுகங்களை அமைத்துள்ளது சீனா.
இந்தத் திட்டத்துக்கு சீனா வைத்துள்ள பெயர், 'முத்து மாலை'. முத்துக்களைக் கோத்தால் முத்துமாலை கிடைப்பது போன்று, இந்தத் துறைமுகங்களை இணைப்பதுதான் சீனாவின் பகீர் பாதுகாப்புத் திட்டம். கண்ணை மூடிக்கொண்டு யோசித்தால், இந்தியாவைச் சுற்றி பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் சீனாவின் இரும்பு வளையம் அமைக்கப்பட்டு-விட் டது. ஒருவிதமான சுழலில் சிக்கி இருக்கிறது இந்தியா.
சீனாவின் எண்ணெய்க் கப்பல்கள் செல்லும் வழிக்கும், வங்க தேசம் மற்றும் மியான்மர் துறைமுகத்துக்கும் சம்பந்தமே இல்லை. இதனால், இந்தத் துறைமுக அபி விருத்திப் பணி மேற்கொள்வது இந்தியா-வுக்கு நெருக்கடி தருவதற்காகத்தான் என்று சந்தேகிக்கப்படு கிறது.
தவிர, சீனா கமுக்கமாக இந்திய எல்லையில் இது-வரை கிட்டத்தட்ட 3 லட்சம் வீரர்களைக் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் சீனா படுகில்லாடி. ஆனால், நாமோ படு லேட்! இப்போதுதான் அலர்ட் ஆன இந்தியா, இன்னும் சில ஆண்டுகளில் சீன எல்லைப் பகுதியில் பாதுகாப்புக்காக இரண்டு புதிய பிரிவுகளைத் தொடங்கி, மொத்தம் 40 ஆயிரம் வீரர்-களை அனுப்ப உள்ளது. பல்வேறு ராணுவ அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள என அதிரடியாக 5 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியா செலவிட உள்ளது.
இந்தியாவை இவர்கள் எதிரியாக நினைக்க என்ன காரணம்?
இந்தியா - சீனா இடையே 3,500 கி.மீ-. நீளம் எல்லை உள்ளது. இதில் சீனா - காஷ் மீர் பகுதியில் 38 ஆயிரம் சதுர கி.மீ. தூரத்தை ஆக்கிர-மித்து வைத்துள்ளது. இந்தியா-வின் கிழக்குப் பகுதியில் 90 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பைத் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறது. அதாவது அருணாச்சலப் பிரதேசம்... சீனாவுடையதாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி பெற்று வந்த அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கணேஷ் கோயு உள்ளிட்ட பயிற்சி அதிகாரிகள் சீனா செல் வதாக இருந்தது.
அனைவருக்கும் விசா கொடுத்த சீன தூதரகம், கணேசுக்கு மட்டும் விசா தரவில்லை. இதற்கு அவர்கள் கூறிய காரணம், கணேஷ் ஒரு சீனப் பிரஜை. சொந்த நாட்டுக் குள் செல்ல விசா தேவை இல்லை என்றது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து, கடைசியில் அந்தப் பயணத்தையே இந்தியா ரத்து செய்தது.
கணேஷ் என்ற தனிப்பட்ட இளைஞ-னுக்கு ஏற்பட்டதல்ல அந்தச் சிக்கல். அது மொத்த இந்தியனுக்கும் வரப்போகிற ஆபத்து.
''பாகிஸ்தானால் ஆபத்து'' என்று சும்மா பேசு பவர்கள், அக்கறையுடன் அலற வேண்டியது இப்போது சீனாவையும் பார்த்துதான்!
சீன படைத்துறை புகைப்படங்கள்
eela pirachanail kothithu pooi irukum tamilarkalai thesai thiruppa ippadi oru saithi varum endu ethir paarthen. but neenga sollurathu unmayakavum irukkalam.
ReplyDelete