Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Thursday, June 11, 2009

♥ திடுக்கிடும் தகவல் : இலங்கையில் மூன்று மாதத்தில் 53 ஆயிரம் தமிழர்கள் படுகொலை: புள்ளிவிவரங்களுடன் அதிர்ச்சித் தகவல் ♥

வன்னியில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 53,215 அப்பாவித் தமிழ் உறவுகள் படுகொலை: பிரித்தானிய தமிழர் பேரவை





aftermath_idp8.jpg

வன்னிப் பகுதிகளில் ஸ்ரீலங்கா இராணுவத்தினால் இறுதி மூன்று மாதங்களில்  நடாத்தப்பட்ட பாரிய தாக்குதலிகளின் போது 53,215 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானிய தமிழர் பேரவை நடாத்திய ஆய்வுகளின் அடிப்படையிலும், திரட்டப்பட்ட நம்பகரமான தகவல்களின் அடிப்படையிலும்,....

அரச மற்றும் ஐக்கிய நாடுகளின் உத்தியோக பூர்வ வெளியீடுகளின் அடிப்படையிலும் இச்செய்தியை பேரவை வெளியிடுகின்றது.

இவ் ஆண்டின் ஆரம்பத்தில் வன்னிமண்ணில் 330,000 மக்கள் வாழ்ந்ததை அரச அதிபரின் அறிக்கைகளும், அப்பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகளும் ஊர்ஜிதம் செய்கின்றன.

ஆனால் தற்போது அகதி முகாங்களில் 276,785 மக்கள்தான் எஞ்சியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. இவ்வடிப்படையில் தான் நாம் எமது மக்கள் இப்பாரிய தொகையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என அஞ்சுகின்றோம்.

மேலும் சர்வதேசத்தின் வேண்டுகோளுக்கு அமைய அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்து வதை முகாங்களிற்குள் வாடிய 13,130 அப்பாவித் தமிழர்கள் காணாமல் போய் விட்டனர் என ஐக்கிய நாடுகள் சபை ஊர்ஜிதம் செய்துள்ளது.

இத்தகவல்களின் அடிப்படையில் நாம் எமது உறவுகளில் 53,215 பேரை பங்குனி மாதம் முதல் வைகாசி மாதம் வரையிலான ஒரு குறுகிய காலப்பகுதியில் இழந்து நிற்கின்றோம்.

காணாமல் போயுள்ள 13,130 தமிழர்களை மீட்டுத் தாருங்கள்.

அரச கட்டுப்பகுதிக்கு வந்தடைந்த மக்களில் 13,130 காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. இந் நிலையில் இம்மக்களை மீட்டுத்தருமாறு பேரவை அனைத்துத் தரப்பையும் கேட்டுக் கொள்கின்றது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அரசியல் அதிகார ஆசனங்களில் உள்ளவர்கள் காணாமல் போயுள்ள மக்களை மீட்டுத்தருவதில் காத்திரமான பங்கை செய்யமுடியுமென பேரவை நம்புகின்றது. இப்பணியில் நாம் ஒவ்வொருவருக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. முள்கம்பிவேலியின் பின்னால் நிற்கும் மக்களுக்கு தேவையான சகலவற்றையும் பொறுப்பேற்பது தமிழர் அனைவரினதும் தலையாய கடமையாகும்.

ஐக்கிய நாடுகள் சபை

ருவாண்டாப் படுகொலைகள் நீதியின் முன் நிறுத்தப்பட்ட போது மிகவும் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் நீதி வழங்கி அதன் மூலம் உலகில் பிரசித்தி பெற்றவரான ஐ.நா வின் மனித உரிமை ஆணையாளர் நவி. பிள்ளை அம்மையார் , தற்போது இலங்கையின் இனப் படுகொலைகளை நீதியின் முன்நிறுத்தப் பாடுபட்டு வருகின்றார்.

அப்படி ஒரு நீதி விசாரனை நடைபெற்றால் இப்பாரிய படுகொலைகளின் சகல பங்காளர்களும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். ஆகவேதான் அம்மையாரின் முயற்சியை இந்நாடுகள் தடுத்து நிறுத்துவதில் முன் நின்று பாடுபடுகின்றன.

இந்நிலையில் இந்தியா போன்ற நாடுகளின் ஆசீர்வாதத்தினால் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை இயலாததொன்றாகி விட்டது.

ஆனாலும் உலகின் நீதியை நிலைநாட்டுவாதில் அம்மையாரின் நேர்மை பாராட்டத்தக்கதாகும்.

அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் செயளாளர் திரு. பான் கி மூன் அவரோடுள்ள அதிகாரிகள் திரு. நம்பியார் மற்றும் திரு. ஹோம்ஸ் மக்களுக்கேற்பட்ட அவலத்தை குறைத்து வெளியிடுவதாக வரும் செய்திகளை பேரவை கவலையோடு நோக்குகின்றது

பிரித்தானிய மக்களுக்கான வேண்டுகோள்

இவ்வாறான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றாக எமது சக்தியினைத் திரட்டி எமது மக்களுக்கு நடந்த பாரிய படுகொலையை உலகறியச் செய்யவேண்டும்.

காணாமல் போதலை உடனடியாக தடுக்க வேண்டும்.

வெளியேறிவந்த மக்களை ஐ.நா தலைமையில் சர்வதேசம் பொறுப்பேற்று அவர்களின் இயல்பு நிலை வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரவேண்டும் என வலியுறுத்தவேண்டும்.

இப்பாரிய படுகொலையை உலகறியச் செய்வதோடு , காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் மக்களை மீட்க சர்வதேசத்தை வலியுறுத்தவும் , முள்கம்பிவேலியின் பின்னால் நிற்கும் மக்களின் அவலத்தைப் போக்க ஆவண செய்யவேண்டுமெனவும் வலியுறுத்தி மாபெரும் பேரணியை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

இப்பேரணி யூன் 20ம் திகதி, சனிக்கிழமை லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் மரணித்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களது மரணத்திற்கு நீதி கேட்கவும் பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் அனைவரையும் பேரவை அன்போடு அழைக்கின்றது.

முள்கம்பிவேலியின் பின்னால் நின்று எம்மக்கள் புலத்தினைப் பார்த்த வண்ணம் உள்ளனர்.

நன்றி
பிரித்தானிய தமிழர் பேரவை.



aftermath_idp4.jpg

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!