Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Thursday, June 11, 2009

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 11 -"தினமணி" தொடர் ♥





"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 11 : யாழ்ப்பாணத் தமிழரும், மலையகத் தமிழரும்!



இலங்கையின் மக்கள்தொகை சுமார் இரண்டு கோடியாகும் (2006). சிங்களவர்கள் (74%) மத்திய மற்றும் தென் பகுதிகளில் பரவலாக வசிக்கின்றனர்.

மற்றப் பிரிவுகளாக இலங்கைத் தமிழர் 12.6 சதவிகிதமும், மலையகத் தமிழர் அல்லது இந்திய வம்சாவளியினர் 5.64 சதவிகிதமும், முஸ்லிம்கள் 7.64 சதவிகிதமும், இந்திய முஸ்லிம்கள் 0.2 சதவிகிதமும், மலேசிய நாட்டினர் 0.3 சதவிகிதமும், ஐரோப்பியர் அல்லது கிறிஸ்தவர் 0.3 சதவிகிதமும் இங்கு உள்ளனர்.

மத அடிப்படையில் பார்த்தால் பெüத்தர்கள் 69.3 சதவிகிதமும், இந்துக்கள் 15.5, கிறிஸ்தவர்கள் 7.6, முஸ்லிம்கள் 7.5 சதவிகிதமாகப் பிரிக்கலாம்.

சிங்களவர்கள் பெரும் பகுதியாக வசிக்கும் மத்திய தென் பகுதி இலங்கையில் தமிழர்கள் மட்டும் 38 சதவிகிதம் என்ற விகிதத்தில் வாழ்கின்றனர்.

இலங்கைத் தமிழர்களை ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். இவர்களின் சமூக வாழ்க்கை நிலைகளைக் கொண்டு பிரிக்கும்போது~

வடக்குப் பகுதி யாழ்ப்பாணத் தமிழர், கிழக்குப் பகுதித் தமிழர், ஈழத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம் தமிழர் என்றும்

தொழில் அடிப்படையில் 1. விவசாயிகள், 2. மீனவர் 3. தோட்டத் தொழிலாளர், 4. அரசு அலுவலர், 5. தொழில்துறை வல்லுநர், 6.வணிக முதலாளிகள் என்றும் பிரிக்கலாம்.

வடக்குப் பகுதி யாழ்ப்பாணத் தமிழர்:

யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையாகவும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் குறைந்த அளவிலும் வசிக்கிறார்கள்.

யாழ் மக்களைப் பெருவாரியாக இரண்டு பிரிவுகளில் அடக்க இயலும். சிலர் நிலப்பிரபுக்களாகவும் பலர் உழவர்களாகவும் இருக்கிறார்கள். நிலப்பிரபுக்களில் பலர் பணப்பயிர்களை பயிரிடுகிறார்கள்.

பெரும்பான்மைச் சமூகமாக உழவர் பிரிவு விவசாயம் செய்வதில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய யாழ்பகுதியினர் என்று கொள்ளலாம். யாழ் மக்களிடையே சாதி முறைகளால் மிகுந்த ஏற்றத் தாழ்வு தொடர்ந்து நிலவி வருகிறது. மேட்டுக்குடி மக்கள் கீழ்ப்பிரிவு மக்களை மிகக் கேவலமானவர்களாக வெறுத்து ஒதுக்குகின்றனர். யாழ் உயர்குடியினர் தங்களைச் சங்கிலி மன்னனின் வாரிசுகளாகக் கருதிக் கொள்கின்றனர். இவர்களிடையே சைவம் தீவிரமான மதமாகக் கொள்ளப்படுகிறது.

ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் கல்வி பெறுவதில் முன்னணியில் நின்றதால் அரசு அலுவலர்களாகவும், நிர்வாக இயந்திரங்களில் முக்கியப் பங்கு வகிப்பவராகவும் யாழ் மக்களில் பலர் இருந்து வருகின்றனர்.

கல்வித் துறையில் தரப்படுத்துதலை சிங்கள ஆட்சியாளர் நுழைத்தபோது இவர்களில் பலர் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாகவே படித்த இளைஞர்களும் சிங்கள ஆதிக்க எதிர்ப்பு இயக்கங்களில் தீவிர பங்கெடுக்க முடிந்தது.

இவர்கள் சங்கிலி மன்னனின் நினைவுகளைப் போற்றுவதும், அவன் புகழைப்பாடுதலுமாக இருக்கின்றனர்; இதனாலேயே இவர்கள் மத-இன வெறி கொண்டவர்களாகச் சித்தரிக்கப்பட காரணமாகின்றனர்.

* போர்க்கோலம் (செ.கணேசலிங்கம்), பஞ்சமர் (டேனியல்) போன்ற இலக்கியங்கள் இவர்களின் வெள்ளாள ஆதிக்க மனப்பான்மைக்கான எதிர்ப்பு இலக்கியங்களாகக் கருதப்படுகின்றன.

கிழக்குப் பகுதித் தமிழர்:

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய பகுதிகளில் இவர்கள் வசிக்கிறார்கள், விவசாயப் பொருளாதாரம் இவர்களின் முதுகெலும்பு. இதனால் இந்தப் பகுதியில் சிங்களவர்களை அரசு அடிக்கடி குடியேற்றம் செய்து வருகிறது. மத, இனக் கலவரங்கள் என்று வந்தால் உடனடிப் பாதிப்புக்கு இங்குள்ள தமிழர்கள் ஆளாகின்றனர். ஆங்காங்கே சிங்கள அரசுகள் நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் கொண்டு வந்தபோது பாதிக்கப்பட்டவர்களில் இவர்களே முதன்மையானவர்கள். பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்.

முதலாளிய வணிகத் தமிழர்:

சிலர் வணிகநிதி ஆதாரத்தைக் கொண்டும் வேறு சிலர் தோட்ட அதிபர்களாகவும் இருக்கின்றனர். லேவாதேவி கடன் தொழில் செய்யும் செட்டி நாட்டுக்காரர்கள் கூட இதில் அடங்குவர்.

கொழும்புச் செட்டித் தெருவில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தமிழரின் நகைக்கடைகள் சிங்களவர் பகுதியில் இவர்களுக்குள்ள ஆதிக்கத்தைக் காட்டும்.

மலையகத் தமிழர்களின் குரலாகக் கருதப்படும் தொண்டமான் சுமார் 800 ஏக்கருக்குச் சொந்தமான தோட்டத்தைத் தன்னிடத்தே வைத்துக் கொண்டிருந்தார்.

அமெரிக்க-ஜப்பான் கூட்டுறவு பெற்று உலக வங்கியிடமிருந்து 28 கோடி ரூபாய் கடனுதவியைப் பெற்ற தொழிலதிபர் ஞானம் இதில் அடங்குவார். அவருக்கு ஒப்பான குணரத்தினம், மகாராஜா, வி.வி.ஜி., போன்றவர்களும் தமிழர்களே.

கொழும்பு மாவட்டத்தில் சின்டெக்ஸ் என்ற தொழில் நிறுவனத்தை ஞானம் நடத்துகிறார். இந்தத் தொழிற்சாலையில் ஒப்புக்குக்கூட ஒரு தமிழர் இல்லை. (இருப்பினும் இவரது நிறுவனம் 1983-இல் நடந்த கலவரத்தில் தாக்கப்பட்டது). அதுபோலவே இன்னபிறரது வியாபார நிறுவனங்களும் சிங்களவர்களின் கலவரங்களால் சீர்குலைவதுண்டு.

இவர்கள் தமிழ் ஈழத்துக்கு வெளியே சிங்களவர் பகுதியில் தொழில் நடத்துவதால் ஒவ்வொரு கலவரத்திலும் தாக்கப்படுவார்கள். மீண்டும் அங்கேயே தொழில் தொடங்கி, இழந்த செல்வத்தை மீட்பர்.

மலையகத் தமிழர்:

1815 முதலாக ஆங்கிலேயர்களால் தென்னிந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டவர்கள். மிகக் குறைந்த கூலி வாங்கிக் கொண்டு ரப்பர், தேயிலை, காப்பித் தோட்டங்களில் வேலை செய்பவர்கள். இவர்களின் பயணக் கதை மிக மோசமானது. ஒப்பந்தக் கூலி முறையில் தென்தமிழகத்தில் பிடித்து இலங்கை காடுகளில் வழி நடத்தி அழைத்து வரும்போதே நாலில் ஒரு பகுதியினர் சாவை அணைத்துக் கொண்டனர்.

கால்நடையாக இராமேஸ்வரம் வரையும், அதற்குப் பிறகு தோணியிலும் மன்னார் கொண்டு செல்லப்பட்டனர். மன்னார் அடைந்ததும் அங்கிருந்தும் பல மைல்களுக்கு அப்பாலுள்ள மத்திய, தென்பகுதி மலைகளுக்கும் கால்நடையாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இப்படி இவர்கள் உடல் நலிவுற்று அங்கு போய்ச் சேரும்போது வழியில் ஏற்படும் மரணங்களுக்குப் பஞ்சமில்லை.

இந்தக் கூலிகளுக்குப் பருவநிலை பாதித்தால் வேலைவாய்ப்பு உத்தரவாதம் இல்லை. மாதக் கணக்கில் பட்டினிப் போராட்டம், ஆயுள் கைதிகளைப் போன்று மாதக்கணக்கில் பட்டினிப் போராட்டம். ஆயுள் கைதிகளைப் போல் இவர்களது வாழ்விடங்கள் சிறு சிறு தடுப்புகளைக் கொண்டிருக்கும் அறைகளைக் கொண்டது.

மகிழ்ச்சி, துன்பம், இறப்பு, பிறப்பு யாவும் இந்த அடுத்தடுத்து இருக்கும் சிறு சிறுதடுப்புகளில்தான்.

இவர்கள் மலையை விட்டுக் கீழே இறங்குவதற்கும், சிறிய நிலங்களைக் கூடச் சொந்தமாய் பெறுவதற்கும் உரிமையற்றவர்கள். இதன்மூலம் கண்டியச் சிங்களப் பகுதிகளில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அடிமைகள் போன்று வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் ஒன்றுபட்ட போராட்டங்கள் ஆதியிலிருந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களாலும், சிங்கள ஆட்சியாளர்களாலும் அடக்கி ஒடுக்கப்பட்டு விட்டன.

அதே சமயம் தமிழ்-சிங்கள பகை மூளுமானால் முதலில் தாக்குதலுக்கு ஆளாவதும் இவர்களே.

நிலச் சீர்திருத்தத்தால் தங்களது நிலங்களையும் கூலி வேலை செய்ய முடியாத நிலையை அடைந்த சிங்கள விவசாயிகளின் கொடுஞ்செயலே இதற்கு காரணமாகிறது. தங்களின் வாழ்க்கை இருண்டு போவதற்கு இந்த மலையகத் தமிழர்களே காரணம் என்பது கண்டியச் சிங்களவரின் கூற்றாகும்.

ஈழத்தில் இருந்த தமிழர்களுக்கும், குடியேறிய தமிழர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமானது. சமீபகாலக் கணக்கெடுப்பில் இவர்களுக்கு சமூக அங்கீகாரமோ, பொருளாதாரச் சலுகைகளோ ஏதுமில்லை என்பது தெளிவாகிறது. இவர்களில் படித்தவர் என்பது கிஞ்சித்தும் இல்லை (Report on consumer finance and socio economic survey 1978-1979)

1928 டொனமூர் சீர்திருத்தத்தின்படி அப்போதைய மலையகத் தமிழருக்கு 40 லிருந்து 50 சதவிகிதம் வரை குடியுரிமை இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தொடர்ந்து ஓராண்டு வசித்த~குடியேறிய தமிழருக்கு அடையாளச் சீட்டினை வழங்கினர்.

ஆனால் 1948-இல் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது வாக்குரிமை நீக்கப்பட்டு, கொடுக்கப்பட்ட அடையாளச் சீட்டினையும் அரசினர் பறித்து விட்டனர்.

1964 வரை இது நீடித்தது. அப்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 9,75,000 பேர் இலங்கையில் நாடற்ற தமிழர்கள் இருந்தார்கள். சிரிமாவோ~சாஸ்திரி ஒப்பந்தப்படி 6,00,000 பேரை இந்தியாவுக்கு திரும்ப அழைத்துக் கொள்வதற்காக கையெழுத்தானது.

மீதமுள்ள 3,75,000 பேருக்கு இலங்கையில் குடியுரிமை வழங்குவதாகவும் ஒப்பந்தம் கூறியது. 1988 வரை குடியுரிமை வழங்குவதை இழுத்தடித்த சிங்கள அரசு ஜே.ஆர். ஜெயவர்த்தனா குடியரசுத் தலைவர் ஆனதும் அனைவருக்கும் குடியுரிமை வழங்கியது.

நாளை: முஸ்லிம் தமிழர்கள்
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=72214&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!