வணக்கம் நண்பர்களே.. தேர்தல் களம் பரபரப்பாக இருக்கிறது.. அண்ணன் அழகிரி தேர்தல் களம் காண்கிறார். அவரை பற்றி வலை நண்பர் ஒருவர் தந்த செய்தி. விறுவிறுப்பான நாவலுக்கு ஒப்பானது.. படிங்கள் .....
யார் இந்த அழகிரி ?
கோவில்களில் தேவதாசி முறை ஒழிக்கப் பட்ட பின் வந்த தலைமுறையினர் பிற ஜாதியினரைப் போல சாதாரணமான குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பி, அடுத்த தலைமுறையினர் படித்து முன்னேறி இன்று சமூகத்தில் உயர் நிலைக்கு சென்று விட்டனர். இந்த ஜாதியினரின் முன்னேற்றத்தில் இதே ஜாதியில் இருந்து வந்த கருணாநிதியின் பங்கு முக்கியமானது.. அவர்கள் அனைவருக்கும் அவர் தெய்வம் போல. இன்று இந்த ஜாதியில் யாரும் தாசிகளாகவோ விலைமகளிராகவோ மாறுவது இல்லை. பெரிய சமூக சீர்திருத்தம் நடந்து விட்டது அவர்கள் இனத்தில் இருந்தாலும் அவர்கள் ஜாதியையைப் பற்றித் தெரிந்தவர்கள் அவர்களை மிகவும் கேவலமாக அழைக்கும், தாழ்வாக ஏளனம் செய்யும் நிலமை இன்றும் இருந்து வருகிறது. தமிழ் நாட்டின் முக்கியமான இரண்டு தலைவர்களான அண்ணா என்ற துரைசாமியும், கருணாநிதி என்ற தட்சிணா மூர்த்தியும் இந்த ஜாதியில் இருந்து வந்தது அவர்கள் பெரும் அளவில் முன்னேற வசதியாக இருந்தது, ஈ வெ ரா கூட இந்த இருவரையும் மோசமான வார்த்தைகளில் ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியுள்ளார். அண்ணாத் துரை ஐயங்காருக்குப் பிறந்தவர் என்பார்கள். இந்த ஜாதியில் இன்று பெரும்பாலோர் படித்து ஐ ஏ எஸ், ஐ பி எஸ், டாக்டர், இஞ்சினீயர் என்று முன்னேறி விட்டனர். கருணாநிதி அவர்களை மிகவும் பின் தங்கிய பட்டியலில் சேர்த்தது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.
இன்று பலரும் முன்னேறி விட்டாலும் வெளியில் தங்கள் ஜாதியைப் பொதுவாக பிள்ளைமார்கள் என்றே சொல்லிக் கொள்வார்கள். ஏளனத்துக்கு அஞ்சி தன் சொந்த ஜாதியையயச் சொல்லத் தயங்குவார்கள். தலித்களின் நிலமையய விட இவர்களின் நிலமைக்காக நான் பெரிதும் பரிதாபப் பட்டிருக்கிறேன், அவமானத்தைச் சிலுவையாக சுமக்க நேரிட்டவர்கள்.
இது போன்ற சமுதாயத்தில் மிக இகழ்வாகக் கருதப் பட்ட ஒரு பின்புலத்தில் இருந்து வந்த கருணாநிதிக்கு பல்வேறு தந்திரங்களும், திறமைகளும்,சூழ்ச்சிகளும் தானாகவே கை வந்த கலையாய் வந்து சேர்ந்தன. ஒரு மோசமான சமூகச் சூழ்நிலையில் பிறந்து ஆதிக்க ஜாதி பின்புலன்கள் இல்லாத கருணாநிதியின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாகும். ப்ரூஃ ரீடர், சினிமாக் கம்பெனி எடுபிடி, வசனகர்த்தா, அரசியல் மேடைப் பேச்சாளர் என்று பல்வேறு வேலைகள் பார்த்து தி மு க வின் முக்கியமான நபர்களில் ஒருவராக மிகவும் தந்திரமும், குள்ளநரித்தனமும், அனைத்துக் கீழ்த்தர குணங்களும் நிரம்பிய ஒரு அபாயகரமான அரசியல்வாதியாக கருணாநிதி உருவெடுத்து தி மு க வின் பிற சீனியர் தலைவர்களைப் புறம் தள்ளி, தந்திரமாகத் தலைவர் பதவியைப் பிடித்து இன்று 50 வருடங்களாகின்றன.
இந்தக் கருணாநிதிக்கு மூன்று மனைவிகள் (வைத்துக் கொண்டவை கணக்கில் இல்லை) முதல் மனைவி பிரபலப் பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி. அந்த மனைவிக்குப் பிறந்தவர் மு க முத்து. இவரைத் தான் தன் வாரிசாகக் கொண்டு வரவேண்டும் என்று ஆரம்பக் காலத்திலேயே கணக்குப் போட்டுக் காய் நகர்த்தினார் கருணாநிதி. நல்ல முகவெட்டும், குரல் வளமும் இருந்த முத்துவை அன்று தி மு க வின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த எம் ஜி யாருக்குப் போட்டியாகக் கொண்டு வர வேண்டும் என்று கருணாநிதி குள்ளநரித்தனமாகப் போட்ட தப்புக் கணக்கு அவருக்கு பெருத்த அடியாக விழுந்தது. மு க முத்துவும் எம் ஜி யார் பாணியிலேயே நடிக்க ஆரம்பித்தார். சமையல்காரன், வெள்ளிக் கிழமை, சொந்தக்காரன் போன்ற பல படங்களில் நடித்த மு க முத்துவின் திட்டமிடப் பட்ட வளர்ச்சி எம் ஜி ஆருக்கு பலத்த ஆத்திரத்தை வரவழைத்து கட்சியில் இருந்து வெளியேற வைத்தது அடுத்த 12 வருடங்களுக்கு கருணாநிதியின் அஸ்தமனத்துக்கு வழிவகுத்தது. எம் ஜி யார் சாகும் வரை கருணாநிதி தலை தூக்க முடியவில்லை. எம் ஜி யாருக்குப் போட்டியாக உருவாக்கிய கருணாநிதியின் மகன் போதைக்கு அடிமையாகி மீள முடியாத குடிகாரனாகி கருணாநிதியாலேயே புறக்கணிக்கப் பட்டு அநாதையாக மாறிப் போனார். பிற்காலத்தில் ஜெயலலிதா கருணாநிதியை அவமானப் படுத்த முத்துவுக்கு 5 லட்சம் நிதியுதவி அளித்தார். முத்து நடைப்பிணமாகிப் போக கருணாநிதியின் ஒரு கனவு சிதைந்தது. பின்னர் இரண்டாவது மனைவியின் பிள்ளைகளின் மீது தன் கனவை மீண்டும் எழுப்பத் தொடங்கினார். மூன்றாவதாக சேர்த்துக் கொண்ட துணைவிக்கு ஒரு மகள். இரண்டாவது மனைவிக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் என்று நினைக்கிறேன். யாரும் கருணாநிதி அளவுக்கு பிரகாசிக்கவில்லையெனினும், நம்பிக்கை இழக்காமல் தன் சாம்ராஜ்யத்தைத் தொடர இருக்கும் வாரிசுகளையே நம்ப ஆரம்பித்தார். அதில் தமிழரசு என்ற மகன் வங்கி வேலைக்குச் சென்று ஆரவாரத்தில் இருந்து ஒதுங்கி விட அரசியலில் ஆர்வம் காண்பிக்க ஆரம்பித்த ஸ்டாலினை மட்டும் தொடர்ந்து தன் வாரிசாக வளர்க்க ஆரம்பித்தார்.. ஸ்டாலின் அரசியல் வாரிசாக வளர்த்து விட்டதால் அழகிரி என்ற மகனுக்கு ஒரு வியாபாரத்தை அமைத்துக் கொடுத்து மதுரையில் கொண்டு போய் செட்டில் பண்ணினார்.
மதுரை திருநகரில் கோவிந்த சாமித் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியமர்த்தப் பட்டார் இந்த அழகிரி. இவரது மனைவி மதுரை சமயநல்லூரைச் சேர்ந்த ஒரு தலித். மதுரை பஸ்ஸ்டாண்டில் ஒரு வீடீயோ, காசெட் கடையும், ஒரு டி வி விற்பனை ஏஜென்சியும் இந்த அழகிரிக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப் பட்டது. ஒரு ஸ்கூட்டரில் திருநகரில் இருந்து கிளம்பி கடையில் போய் கடைக்கு வெளியே நின்று தம் அடித்துக் கொண்டிருப்பார். அவரை ஒரு சிலருக்கே கருணாநிதியின் மகன் என்று தெரியும். அவ்வளவு பிரபலம் கிடையாது. தெருக்காரர்கள் யாரும் பேசிப் பழகி பார்த்ததில்லை. எப்பொழுதாவது கருணாநிதி நீளமான காரில் வந்து போவார். அழகிரி அப்பா மாதிரியே காலுக்கு வெள்ளைக் கலர் செருப்புப் போட்டுக் கொள்வார். கார் கூட கிடையாது. அப்பொழுது மதுரையில் நெல்பேட்டை சீனி, பழக்கடைப் பாண்டி, மதுரை முத்து, என்று பல திராவிடக் கட்சிகள் ரவுடிகள் தங்கள் சாம்ராஜ்யத்தை அமைத்திருந்தனர். அதனால் புதிதாக ஒரு ரவுடி பெரிய அளவில் உருவாக வாய்ப்பு இருக்க வில்லை. மேலும் பழனிவேல்ராஜன் போன்ற ஜமீந்தார்கள் தி மு க வின் செல்வாக்கான நபர்களாக இருந்தமையாலும், லோக்கல் ஜாதியான தேவர்கள் இனத்தில் இருந்து வராததாலும் 90 வரை அழகிரி என்பவர் அடையாளமில்லாத சாதாரண ஒரு காசெட் கடை உரிமையாளராக மட்டுமே இருந்தார். 90ல் மீண்டும் கருணாநிதி ஆட்சியைப் பிடித்ததில் இருந்துதான் அழகிரியின் அசுர வளர்ச்சி ஆரம்பித்தது. கருனாநிதி அரசு கலைக்கப் பட்ட பொழுது இவர் தென் தமிழ் நாட்டின் முடிசூடா மன்னராக ஆட்சி செலுத்த ஆரம்பித்தார். தனது வீட்டையும் வாடகை வீட்டில் இருந்து மதுரை டி வி எஸ் நகரினில் உள்ள சத்தியசாய் நகர் பகுதிக்கு மாற்றிக் கொண்டார். எதிர் வீடு தினமலர் ஆசிரியர் லஷ்மிபதியின் வீடு. தினமலர் காரருக்குச் சனி பிடித்தது. மதுரையில் மெதுவாக ரவுடிகளின் தலமை அழகிரியிடம் இடம் பெயர்ந்தது. பழனிவேல் ராஜன் என்ற அரிஸ்டோகிராட் அரசியல்வாதி முதல் பழக்கடைப் பாண்டி போன்ற தேவர் இனத்து ஆட்களின் முக்கியத்துவம் குறைந்தது. அழகிரி ஒரு அதிகார மையமாக உருவெடுக்க ஆரம்பித்தார். கலெக்டர், கமிஷனர், எஸ் பி, எல்லோரும் அவர் வீட்டு வாசலில் காத்துக் கிடக்க ஆரம்பித்தனர். வரிசை வரிசையாக அழகிரியிடம் சிபாரிசுக்காகவும், பதவிகளுக்காகவும் படையெடுக்க ஆரம்பித்தனர். அழகிரியின் பிறந்த நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டன. அமைதியாக இருந்த டி வி எஸ் நகர்/சத்யசாய் நகர் பரபரப்பான அதிகார மையமாக மாறியது. அழகிரியின் பிறந்த் நாட்களின் பொழுதும், திருமண நாளின் பொழுதும், அதிகாரிகளும் கட்சிக்காரர்களும் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தங்கள் கப்பத்தைக் கட்டி விட்டுச் சென்றார்கள். கோடிக்கணக்கான பணம் புரள ஆரம்பித்தது. அழகிரியின் பெண் பெரிய பெண் ஆனது வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது, பல கோடிகள் வசூலாகியது. அடுத்த அடுத்த ஜெயலலிதா ஆட்சிகளின் போது அழகிரி சற்று அடங்கினாலும் அவரது செல்வாக்கு என்றும் அடங்கவேயில்லை. அவரது சாம்ராஜ்யம் பெரிதாக விரிந்தது, தனக்கென்று ஒரு லாயல் சர்க்கிள் உருவாக்கி தனக்கு ஒரு எம் எல் ஏ கோஷ்டியை உருவாக்கி வைத்துள்ளார். இன்றும் அவர் நினைத்தால் ஆட்சியைக் கவிழ்க்கலாம். இப்படி 89 வரை ஸ்கூட்டரில் பயணித்த ஒரு சாதாரண உதாவக்கரை பையன் இன்று பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதி. பண பலம் ,அதிகார பலம், அதிகாரிகள் காலில் விழுந்து வணங்குகிறார்கள். ஜெயலலிதா ஏதோ ஒரு காரணத்தினால் வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் அழகிரியை அடிக்காமல் விட்டு வைத்தார். இன்று மதுரையில் அழகிரி வைத்ததுதான் சட்டம், மதுரர முழுக்க ரியல் எஸ்டேட்டுகள் வளளத்துப் போட்டுள்ளார். ஏராளமான பினாமிகள். எதிர்க்கத் துணிந்த பலரும் கடுமையாகத் தாக்கப் பட்டனர். அவரது அதிகார மையத்தை தன் ஜாதி பின்புலம் கொண்டு எதிர் கொள்ள நினைத்த தா கிருஷ்ணன் கொடூரமாக வெட்டிக் கொல்லப் பட்டார். தேவர் ஜாதி வீரம் , பெருமை வெட்டிப் பெருமை என்பது நிரூபிக்கப் பட்டது. அழகிரியின் கை மேலும் பலப் பட்டது. இன்று தமிழ் நாட்டை ஆட்டுவிக்கும் முக்கியமான அரசியல் சக்திகளில் ஒருவர் அழகிரி. ஒரு உதவாக்கரை மகனில் இருந்து தந்திரமும், ரவுடித்தனமும், கொலைவெறியும், பண வெறியும் நிரம்பிய ஒரு கருணாநிதியின் பல அம்சங்களைக் கொண்ட ஒரு வாரிசாக உருவாகியுள்ளார். இவரது மகன் துரை தயாநிதி மதுரையின் மத்தியில் மாபெரும் ஐ டி பார்க்கை தயா ஐ டி பார்க் என்ற பெயரில் கட்டி முடித்து விட்டார். இவரும் ஒரு சினிமா கம்பெனி துவங்கியுள்ளார். தமிழ் நாட்டில் புதுப் படங்கள் அனைத்தும் இவர்களுக்குத்தான் விநியோக உரிமை இவர்கள் சொல்லும் காசுக்குக் கொடுக்க வேண்டும் கொடுக்கா விட்டால் படத்தை தியேட்டரில் வர விட மாட்டார்கள். கம்பெர்னியின் பெயர் ரெட் சன் என்றோ என்னமோ அழகிய தமிழில் வைக்கப் பட்டுள்ளது. அழகிரியின் மகளை அரசியலில் அடுத்த தலைமுறை வாரிசாக கொண்டு வந்து கொண்டிருக்கிறார். வார்த்தை மாதிரியான பத்திரிகைகளில் கூடிய விரைவிலேயே அவரது நூறு பக்க நூதன பேட்டி வரலாம் படிக்கத் தவறாதீர்கள். இன்னொரு பெண் காதல் திருமணம் செய்து அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் பறந்து கொண்டிருக்கிறார். மனைவி காந்திக்கு மதுரையில் மாபெரும் ஜவுளிக் கடை, திருமண மண்டபம் எல்லாம் இருக்கிறது. வாரன் பஃபெட்டை விட இவர்களது சொத்து மதிப்பு அதிகம் இருக்கக் கூடும் என்று அதிகாரபூர்வமான கணக்குச் சொல்லுகிறது.
அந்தக் காலத்தில் வாரிசுகளுக்குள் நடந்த போர்களையும், கொலைகளையும் படித்துள்ளோம் வரலாற்றில். தமிழ் நாடு என்றும் மாறவேயில்லல. வரலாறு மீண்டும் மீண்டும் அரங்கேறுகிறது. சமுதாயத்தால் பழிவாங்கப் பட்ட தாசி குலம் இன்று சமுதாயத்தைப் பழிவாங்குகிறது. கருணாநிதியின் அரஜாகங்களையும் அட்டூழியங்களையும் விட அவரது வாரிசுகளின் அட்டூழியங்கள் இன்னும் உக்கிரமமாக இருக்கப் போகின்றன. இதில் இருந்து எல்லாம் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழ் நாடு விட்டு விடுதலையாகி வருமா ? அழகிரி இன்று தி மு க வில் அசைக்க முடியாத சக்தி. அழகிரி, மாறன் குடும்பம் எல்லோரையும் அனுசரித்துதான் கருணாநிதியும் ஸ்டாலினும் பிழைப்பு நடத்த முடியும். இவர்களது ரவுடித்தனங்களும் , கொள்ளைகளும் மக்களை மெதுவாக விஜயகாந்த் பக்கம் தள்ளி விடும். அது தனிக் கதை. மொத்தத்தில் நம் தலையெழுத்து சரியாக இல்லை. ரவுடிகளின், அயோக்கியர்களின், அழகிரிகளின், ஸ்டாலின்களின், மாறன்களின் தயவில்தான் தமிழக மக்கள் உயிர் வாழ வேண்டிய கேவலமான சூழ்நிலையில்தான் இன்றைய தமிழகம் சிக்கியுள்ளது. இதிலிருந்து மீள்வது மிக மிக கடினம். அழகிரி போன்ற ஆட்களும், மாறன் போன்றவர்களுமே நம் தலைமுறைக்கு முன்மாதிரியாகி விட்ட கேவலமான கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம்.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com