----------------------------------
தமிழக நாட்டுப்படகு மீனவர்களை நிர்வாணப்படுத்தி, மீன்கள், பணம், பிடிக்கட்டுகளை திருடிச் சென்றனர் இலங்கைக் கடற்படை
ஈழத்தமிழர்கள் மேல் இன ஒழிப்பை கடந்த 30 ஆண்டுகளாய் நடத்திக் கொண்டு, இன்று உச்சகட்ட அழிப்பை இலங்கை இராணுவ துணையுடன் செய்து வரும் இலங்கை அரசு, தமிழக தமிழர்களான மீனவ மக்களை நிர்வாணப்படுத்தி கேவலப்படுத்துவதோடு அல்லாமல், கிடைக்கும் பொருளை திருடி சென்றுள்ளது.
நேற்று முன்தினம், இராமேஸ்வரம் பம்பனைச் சார்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 200 பேர் 40 படகுகளில் இந்திய எல்லை பகுதியான கச்சத்தீவு அருகில் பகல் 12 மணியளவில் நங்கூரமிட்டு மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் 6 பெரிய படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை முதலில் மிரட்டி அனுப்புவது போல் நடித்து விட்டு, பின்னர் அனைத்து படகுகளையும், கச்சத்தீவுக்கு போகுமாறு கட்டளையிட்டதோடு மீனவர்களை பயப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் துப்பாக்கியால் வானம் நோக்கி சுட்டுள்ளனர்.
கச்சத்தீவில் மீனவர்களை கொதிக்கும் மணல் மீது நிற்க வைத்து, அவர்களின் துணிகளை கழற்றச் சொல்லியும், அவர்களின் சட்டை, பேண்ட் பைகளில் பணம் மற்றுமுள்ள அனைத்து பொருட்களையும் திருடி விட்டு, பிடித்த மீன்களை தங்களது படகுகளில் ஏற்றிக் கொண்டு, ரப்பர் குழாய்களில் தமிழக மீனவர்களை அடித்துள்ளனர்.
அத்தோடு, மீனவர்களை புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். மீனவர்கள் தமிழக ஊடகங்களுக்கு இது பற்றி எதுவும் வாய்திறந்தால், பின்னர் ஒரு நாள் தங்களிடம் சிக்கினால் புகைப்படங்களை பார்த்து சிறையில் அடைத்து விடுவோம் என மிரட்டிச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஒரு மீனவரான மார்க்ஷன், நமது தமிழ்ச் செய்தி மையத்தித்துடன் தொலைபேசியில் பேசியபோது நடந்தவற்றைக் கூறினார். அவருடன் பேசியதை நாம் ஒலி வடிவில் தனியே தரவுள்ளோம்.
இதுவரை 400 தமிழக மீனவர்களை சுட்டு கொன்றும், பல ஆயிரம் மீனவர்களை ஊனப்படுத்தியும் வந்துள்ள இலங்கை கடற்படையை, தட்டிக்கேட்க முடியாத அரசுகளுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில், சரியான பாடம் புகட்டப் போகிறோம் என்கின்றனர், மீனவ சங்கத் தலைவர்கள்.
தமிழக இராமேஸவரம் மீனவர்கள் 23 பேரையும், சுமார் 6 விசைப்படகையும் நேற்று முன்தினம் சிறைப்படுத்தி சென்ற இலங்கைக் கடற்படையினர், நேற்றும் மீனவர்களை கேவலப்படுத்தி, பொருட்களை திருடி செல்வது குறித்து இந்திய மைய அரசோ, மாநில அரசோ இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.--
______________________
www.tamilnewscenter.com
______________________
www.tamilnewscenter.com
--
www.manitham.net
manitham@manitham.net
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com