தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்
There was an error in this gadget

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Wednesday, April 22, 2009

எடைகுறைவோடு இந்தியா

http://www.sinlung.com/wp-content/uploads/2009/04/rahul1.jpgபிரியமுள்ள இளைய ராஜகுமாரன் ராகுல்ஜி அவர்களுக்கு, வணக்கம்.

தாங்கள் நலம் என்று தெரியும் நாங்கள் நலமில்லை. ஆனால் கொஞ்சம் நாளாக தாங்கள் மிகவும் சிரமங்களை அனுபவித்து வருவதை நாடே அறியும். உயர்த்திப் பிடித்த உயர்ந்தரக துப்பாக்கிகளின் பாதுகாப்போடு தாங்கள் கிராமங்களுக்கு செல்வதும், குனிய முடியாத குடிசைகளில் குனிந்து செல்வதும், மூக்கொழுகும் குழந்தைகளை தூக்கி வாஞ்சையுடன் அனைத்துக்கொள்வதும், ஏழைகள் வீட்டில் கிடைக்கின்ற கஞ்சியோ அல்லது கூழோ அவைகளை உண்பதும், பல கரடுமுரடான சாலைகளில் பாதம் நோக அலைந்து திரிவதும், கலாவதியையும் அவளது குழந்தைகளையும் பார்த்து சோகமாய் முகத்தை வைத்துக்கொள்வதும், அப்பா எத்துனை சிரமங்கள் உங்களுக்கு.


நமது நாட்டின் எதிர்கால பிரதமர் என்று காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அந்த விபரீதம் நடக்க மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றாலும் உங்களுடன் சில வார்த்தைகள் பேசவேண்டியுள்ளது.சரி விஷயத்திற்கு வருவோம்.... இந்திய தலைநகர் டெல்லியில் உங்கள் கொள்ளு தாத்தாவான மாமா நேருவின், மன்னிக்கவும், அர்த்தம் மாறிவிட்டது. நேரு மாமாவின் இப்போதைய நினைவகம் உள்ள தீன்மூர்த்தி மார்கில் அமைந்துள்ள இடத்தில்தான், அவரது அப்போதைய வீடு இருந்தது. அந்த வீட்டின் நான்கு வாயில் படிகளிலும் விலை உயர்ந்த நான்கு விதமான கார்கள் நிற்குமாம். ஏனெனில், தனது மகன் எந்த படியில் இறங்கினாலும் அங்கு கார் நிற்க வேண்டும் என்பது மோதிலாலின் விருப்பம். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த தாங்களுக்கு அவரின் சோசலிச கனவோ, அல்லது முதலாளிகளின் கலப்பு பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டதோ தெரியாது. அதே போல குளிரில் நடுங்கும் ஆனால் இதயம் சூடான எங்கள் குடிசையை உண்மை முகம் உங்களுக்கு தெரியாது.

அதே தலைநகரில் உங்கள் பெரியப்பா, அதாங்க "எடா சிறை மீண்ட, தலைவெட்டி புகழ்" வருண் காந்தியின் தந்தையும், ஆடு, மாடுகள் துன்பப்பட்டால் ஓடிச்சென்று வழக்குப்போடும், ஆனால், தன் மகன் மாற்று மத மனிதர்களை வெட்டச்சொன்னால் சந்தோஷப்படுகிற "புளுகிராஸ் புகழ்" மோகனா காந்தியின் கனவருமான சஞ்சைகாந்தி நகரின் அழகு என்ற பெயரில் புலம் பெயர்ந்து தங்கள் வாழ்க்கையின் தெடல்களுக்காக குடியிருந்த குடிசைகளுக்கு எதிராக நடத்திய நரவேடை நாட்டியம் உங்களுக்கு தெரியாது. இப்போதுள்ள பாலிகா பஜாரின் மேலே உள்ள பசுமையான புற்கள் அந்த கதையை பேசும் ..

வினை விதைத்து, விதைத்த வினைக்கு அறுவடை செய்த காரணத்தால், ஏதோ இரு சீக்கிய மத வெறியர்களின் தோட்டாக்களுக்கு பலியான உங்கள் பாட்டி இந்திராவின் மரனத்தால் வாழ்விழந்த, சீரழிந்த, சிதைக்கப்பட்ட, வெட்டிவீசப்பட்ட, உயிரோடு கொளுத்தப்பட்ட, அண்ணா என்னை விட்டு விடுங்கள் என்று கதரும் போது வன்புனர்ச்சி செய்யப்பட்ட ஆயிரமாயிரம் சீக்கிய சகோதரிகளின், விதவையாக மாற்றப்பட்ட, இன்றுவரை சித்த பிரமை பிடித்து அலையும் அந்த தாய்மார்களின் கண்ணீர் உங்களுக்கு புரியாது ராகுல்...

அந்த கொடூரங்களை தடுக்க வேண்டிய உங்கள் தந்தை ஒரு ஆலமரம் விழும் போது அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும் என்று இந்த நரவேட்டைடை நியாயப்படுத்தியது சரியா என யோசியுங்கள் ராகுல்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் இந்தியா முன்னேறும் என்று எந்த நம்பிக்கையில்பேசி வருகிறீர்கள். நாடு விடுதலை அடைந்து 62 ஆண்டுகளில் 6 ஆண்டுகளை தவிர மற்ற ஆண்டுகளெல்லாம் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்தது என்பது தங்கள் அறியாததா? முதல் ஐந்தாண்டு திட்டத்தின் போது அனைவருக்கும் ஆரம்ப இலவச கட்டாய கல்வி என்று உங்கள் கொள்ளு தாத்தா நேரு அறிவித்த இந்த நாட்டில் இன்று வரை கல்வி அறிவு பெறாதவர்கள் 40 கோடிபேர் என தெரியுமா?

காலகாலமாய் உங்கள் கட்சி ஆட்சி செய்ததன் விளைவு என்ன?
http://www.thehindu.com/2008/03/16/images/2008031659321001.jpg

இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமகங்களில் குடிக்க தண்ணீர் கிடையாது, லட்சம் கிராமங்களில் கழிப்பிடம் கிடையாது, இரத்த சோகை நோய் எங்கள் தாய்மார்களின் தேசிய நோயாக மாறிவிட்டது, எதிர்கால இந்தியா எடைகுறைவோடுதான் பிறக்கிறது, வருங்கால தூண்கள் வேலயற்று விரக்தியில் வீதியில் அலைகிறது,

ஆலைகள் மூடுவதுதான் தொழில்துறையின் வேலையாக மாறிவிட்டது, சுதந்திரம் அடையும் போது சில கோடிகளை வைத்திருந்தத சிலர் இன்று லச்சம் கோடிகளை சேர்த்து வத்துள்ளனர். இதற்கும் உங்கள் கட்சியின் கொள்கைக்கும் சம்பந்தம் இல்லை என்று சாதிக்கப்போகிறீர்களா ராகுல்.

அந்நியர்களுக்கு எதிராக போராடிய காங்கிரஸ் கட்சியை அந்நிய நாட்டிடம் அடகு வைக்கும் போக்கை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? சிலியில் அலெண்டேவையும், ஆப்கானில் நஜிபுல்லாவையும், ஈராக்கில் சதாம் உசேனையும் போல பல நாட்டு தலைவர்களை படுகொலை செய்த, வியட்நாம், லிபியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகளில் குண்டுகளி வீசிய, நைஜிரிய ஆற்றுப்படுகையில் ஷெல் கம்பெனிகள் எண்ணெயை உறிஞ்சுவதை எதிர்க்கும் அப்பாவி மக்களை ஆயுதம் தாங்கி அழிக்கும் அமெரிகாவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அணுசக்தியை பயன் படுத்த, அதிலிருந்து மின்சரம் தயாரிக்க நமது சொந்த நாட்டு விஞ்ஞானிகளுக்கு வக்கில்லை என்று கேவலப்படுத்துவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

அதெல்லாம் இருக்கட்டும் எங்கள் தமிழ்நாட்டை தாங்கள் அறிவீர்களா, உத்தபுரம், மேலவளவும், திண்ணியமும் உங்களுக்கு தெரியுமா, சரி இவைகள் தூரத்தில் உள்ளது. கயர்லாஞ்சியாவது தெரியுமா? இந்தியா என்பது உத்திரபிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதி மட்டுமல்ல, கயர்லாஞ்சியும் இந்தியாவின் ஒரு பகுதி என்று உங்கள் இதயம் ஏற்றுக்கொள்கிறதா? அப்படியே எனில் இன்னும் உங்கள் பயணம் அங்கு நீளாதது ஏன் ராகுல், இரண்டு ஏக்கர் நிலம் வைத்து தலைநிமிர்ந்து வாழ ஆசைப்பட்ட காரணத்தால் பையாலால் போட்மாங்கே குடும்பம் சிதைந்த வரலாறு இன்னும் நவீன சமூகத்தின் மீது காரி உமிழ்வது நியாயமா? இந்தியாவில் ஒரு அமெரிக்க மக்கள் தொகை அளவுக்கு தலித் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் சேரிகள் எனும் தனி நாட்டில் அல்லவா வசித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான வடிவங்களில் இன்னும் தீண்டாமை அவர்கள் மீது திணிக்கப்படுவது குறித்து உங்கள் கட்சிக்கு கோபம் இருக்கிறதா?
http://www.hindu.com/2008/10/03/images/2008100356671201.jpg
மன்னிக்கவும் பல இடங்களில் இவைகளை அமலாக்கம் செய்வதே அவர்கள் தானே.
இதெற்கெல்லாம் உங்களுக்கு பதில் சொல்ல நெரமிருக்காது பாவம் நீங்கள் இன்னும் எத்துனை குடிசைகளுக்குள் நின்று புகைப்படம் எடுக்க வேண்டியுள்ளதோ, ஆனால் இந்த கேள்விகள் உங்களை தொடரும் ராகுல். இந்த கடித்தத்தைப் போல் தெசத்தை நேசிக்கின்ற ஆயிரமாயிரம் இளைஞர்கள் உங்களுக்கு கடிதங்களை தொடர்ந்து எழுதுவார்கள்...
நீங்கள் பதில் சொல்லும் வரை அல்லது காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளை கேட்காதவரை.

இறுதியாக. . . . தலைப்பில் கொள்ளுவுக்கு கொம்பு போட்டிருப்பது எழுத்துப் பிழை என நினைக்க வேண்டாம். நெல்சோறு கிடைகாத மக்கள் குதிரக்கு வைக்கும் கொள்ளாவது கிடைக்குமா என்று அலைகழியும் தேசமாக இந்த நாடு மாறிக்கொண்டிருக்கிறது. 77 சதமான மக்களின் ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய் அதை தங்களுக்கு நினைவூட்டவே கொல்லை ஞாபக படுத்தினேன்.

நன்றி ராகுல். மீண்டும் சந்திப்போம்.

http://3.bp.blogspot.com/_x5fK9Vi7BVA/SSLfQ62HoTI/AAAAAAAAAI0/x_2KfYPXHFo/s320/rahul_gandhi.jpg


BY
S.G.RAMESBABU

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!