1919 ஆம் ஆண்டு ஜாலியான்வாலாபாக்கில் ஒரு மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ,துப்பாக்கி குண்டுகள் தீரும் வரைக்கும் சுடச் சொல்லி சுட்டுக் கொல்ல ஆணையிட்டான், ஜெனரல் டயர் ஆங்கிலே பரங்கித் தலையன்.350 பேருக்கும் மேல் செத்துப் போனார்கள்..!
இந்த படுகொலையை....
மனசு வெடிக்க...
உதடுகள் துடிக்க துடிக்க ...
தன் மகனுக்கு சொல்லிப் போனாள்,தாய்!
அந்த சிறுவன் அந்த மைதானம் போய் ,அந்த ரத்தம் தோயிந்த மண்ணை தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டான் .
இளைஞானாக வளர்ந்து,இங்கிலாந்துக்கு கப்பல் ஏறினான்.
ஜெனரல் டயர் முன்னால் தோன்றி கேட்டான்.
ஜாலியான்வாலாபக் நினைவிருக்கிறதா என்று
"இந்தா,இந்திய பரிசு!" என்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்!
இங்கிலாந்து நீதி மன்றத்து ,நீதிபதி கேட்டான்.
"உன் கடைசி ஆசை என்ன?"
நான் இறந்த பிறகு என் உடலை இங்கிலாந்து மண்ணில் புதைக்க வேண்டும்!
வியப்படைந்து காரணம் கேட்டான் ,நீதிபதி.
"6 ஆயிரம் கிமீ பரவியுள்ள இந்தியாவை நீங்கள் 200 ஆண்டுகள் ஆக்கிரமித்துக் கொண்டீர்கள்!
இங்கே புதைக்கப் பட்டால் ,இங்கிலாந்தின் 6 அடி மண்ணையாவது ,நான் ஆக்கிரமிப்பேன்!"என்று சொன்னான்.
அந்த இளைஞனின் பெயர் தான் உத்தம்சிங்!
_மனிதன்,சென்னை.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com