நடேசன் உட்பட 12 பேர் எவ்வாறு சிங்கள அரசால் வஞ்சகமாக கொல்லப்பட்டனர் நேரடியாக பார்தவர் சாட்சி --அதிர்வு ரிப்போட்
அவசரமாக அந்த தொலைபேசி அழைப்பு அதில் பேசியவர் சில மணிகளில் இறக்கப்போகிறார் என்பது எனக்கு தெரியாது என்கிறார் புலிகளுக்கும் ஐ.நா சபைக்கும் தொடர்புகளை ஏற்படுத்தும் இணைப்பாளர்.
அந்த தொலைபேசியில் பேசிய பா.நடேசன் அவர்கள் நாங்கள் சரணடைய தயார் பிரித்தானியா அல்லது ஒபாமாவின் அரசாங்கம் எமக்கு பாதுகாப்பு தருமா என வினவினார்,பின் புறத்தில் துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கேட்டவண்ணமே இருந்தன.
அந்த வேளை பல்லாயிரக்கணக்கான மக்கள் கைகளால் கிண்டப்பட்ட பதுங்கு குழிக்குள் கடும் எறிகணை தாக்குதலுக்கு மத்தியில் பதுங்கியிருப்பதாக நேரில் கண்ட சாட்சியாளர் தெரிவித்தார். தொலைபேசியிணைப்பாளர் வெளிநாட்டில் இருக்கிறார்.இணைப்பாளர் தொடர்ந்து குறிப்பிடுகையில் ,பா.நடேசன் தம்மிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்ததாக கூறினார்.
1.தமது இயக்கம் ஆயுதங்களை கீழே வைப்பதாகவும்
2.தாம் பாதுகாப்பாக வெள்யேற உத்தரவாதம்
3.தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல அரசியல் தீர்வு முன் வைக்கப்பட வேண்டும்
உடனடியாக நான் விஜை நம்பியாரை தொடர்பு கொண்டேன்,பான் கி மூனிடமும் தொடர்பு கொண்டேன். அந்த செய்திகள் உடனடியாக இலங்கை அரசுக்குப் பரிமாறப்பட்டது.
புலிகள் சரணடையத் தயாரானதால் இந்த பிரச்சனை ஒரு சுமூகமான வழியில் தீர்க்கப்படப் போகிறது என்ற நம்பிக்கை எனக்கு தோன்றியது. அதனை நான் அவர்களுக்கு கூறினேன். எப்போதுமே கலகலப்பாக இருக்கும் புலித்தேவன் பதுங்கு குழியில் இருந்தவாறு சிரித்தமுகத்துடன் ஒரு புகைப்படத்தை எடுத்து அவரது தொலைபேசியில் இருந்து எனக்கு SMS மூலம் அனுப்பிவைத்தார். என்கிறார் இணைப்பாளர். கடைசி ஞயிற்றுக்கிழமை அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது நிபந்தனைகள் எதுவும் அவர்கள் வைக்கவில்லை என்கிறார் இணைப்பாளர். சரணடைவதைப் பற்றியே நடேசன் பேசியுள்ளார். நியூயோக்கைத் தளமாகக் கொண்டியங்கும் 24 மணிநேர அவசர பிரிவுடன் நான் தொடர்புகொண்டேன், அவர்கள் என்னை இலங்கையில் உள்ள நம்பியாருடன் காலை 5.30 மணிக்கு தொடர்புகளை ஏற்படுத்தினார்.
அவருடன் நான் காலை 5.30 மணிக்குத் தொடர்புகொண்டேன். அப்போது பேசிய நம்பியார், தான் மகிந்தவுடன் பேசியதாகவும் , நடேசன் மற்றும் புலித்தேவன் பாதுகாப்பாக வெளியேற அவர் உத்தரவாதம் கிடைக்கப்பெற்றதாக கூறியுள்ளார். மகிந்தவின உறுதிமொழி விஜய்நம்பியாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
நான் நம்பியாரிடம் நீங்கள் அந்த யுத்தப் பிரதேசத்திற்க்கு போகவில்லையா எனக் கேட்டேன், அவரோ இல்லை, உறுதிமொழி இலங்கை ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருக்கிறது, தாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என என்னிடம் கூறினார், என்றார் இணைப்பாளர். அவர்கள் வெள்ளைக் கொடியை அசைத்தவாறே செல்லவேண்டும் எனக் குறிப்பிட்ட மகிந்த அவர்கள் இராணுவத்தினரிடம் அச்சுறுத்தல் ஏதுமின்றி செல்லவேண்டும் எனக் கூறியுள்ளார்.
லண்டனில் இருந்து நான் அதிகாலை திரும்பவும் தொடர்புகளை மேற்கொள்ள தொடங்கினேன், ஆனால் நடேசனுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் தென்னாபிரிக்காவில் உள்ள புலிகளின் உறுப்பினருடன் தொடர்புகொண்டு நம்பியாரின் செய்திகளை நடேசனுக்குச் சொல்லுமாறு தெரிவித்தேன்.
காத்திருந்த சமயம் எனக்கு ஆசியாவில்லுள்ள புலி உறுப்பினரிடமிருந்து முக்கிய தொலைபேசி அழைப்பு வந்தது அதில் கதைத்தவர் , தானும் தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும் இருப்பினும் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்றும் கூறினார். அத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது என்றும் கூறினார்..
அன்று மாலை இலங்கை அரசாங்கம் அவர்களது உடலை தொலைக்காட்சியில் காட்டியது. இங்கு என்ன நடந்தது , ஏன் சரணடையும் போது கொலை நடந்தது என நான் அறிய முற்பட்டேன்.
அப்போது தான் தெரியவந்தது ஞாயிற்றுக்கிழ்மை இரவு நடேசன் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைபின் உறுப்பினர் சந்திரநேரு அவர்களைத் தொடர்புகொண்டிருக்கிறார் என்று. அவரும் மகிந்தாவிடம் உடனடியாகத் தொடர்புகொண்டு, நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரின் பாதுகாப்புக் குறித்து பேசியுள்ளார்.
மகிந்தா தனது உத்தரவாதத்தை வழங்கியுள்ளார், இருப்பினும் சந்திரநேரு தான் நேரடியாகச் சென்று அவர்கள் சரணடைவதை அவதானிக்க விரும்புவதாக ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
மகிந்த தனது இராணுவம் மிகக்கட்டுப்பாடு உடையது என்றும் தனது சொல்லுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள் என்றும் கூறி, யுத்தப் பிரதேசத்திற்கு நீங்கள் ஏன் அனாவசியமாகப் போகவேண்டும், உயிர் ஆபத்துநேரலாம் எனக் கூறியுள்ளார். சற்றுநேரத்தில் தொலைபேசியில் அழைத்த ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ச , அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கியிருந்தார் என இணைப்பாளர் தெரிவித்தார்.
சந்திரநேரு அவசரமாக நடேசனைத் தொடர்புகொண்டு வெள்ளைக் கொடி ஒன்றை பிடித்தவாறு செல்லுமாறும். தான் அன்றைய தினம் மாலை அவரை சந்திப்பதாகவும் கூறியிருகிறார்.
திங்கட்கிழமை காலை(18.05.2009) 6.30 இலங்கை நேரப்படி, நடேசனைத் தொடர்புகொண்ட சந்திரநேரு நீங்கள் ஆயத்தமாக உள்ளீர்களா எனக்கேட்டபோது, பெரும் வெடிச் சத்தங்கள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு கேட்டதாக கூறுகிறார். பதுங்கு குழிக்குள் இருந்த நடேசன் மற்றும் 12 பேரும் வெளியே வந்தனர். பின்னர் நடந்தவற்றை அங்கிருந்து தப்பிவந்த நபர் தெரிவிக்கிறார். அவர்கள் வெளியே வந்து வெள்ளைக் கொடியை அசைத்தவாறே வந்தனர், இலங்கை இராணுவம் கண்மூடித்தனமாக அவர்களை நோக்கி சுட ஆரம்பித்தது.
அப்போது பலர் கொல்லப்பட, புலித்தேவன் மீது குண்டுகள் பாயும் போது நடேசனின் மனைவி சிங்கள பெண்மணி என்பதால் சிங்களத்தில் நாங்கள் சரணடைய வந்திருக்கிறோம் என உரக்கக் கத்தியிருக்கிறார். அதனைக்கூடப் பொருட்படுத்தாமல் இலங்கை இராணுவம் அவரையும் மற்றவர்களையும் சுட்டுக் கொண்றொழித்தனர்.
சரணடைய வந்தவர்களையும் கொண்ற இலங்கை இராணுவம், அந்த 300 பேரையும் விட்டுவைத்திருக்குமா ? .
இங்கு இணைப்பாளர் என்று நாம் கூறுவது மாரியா கொல்வின் அம்மையார். அவர் பல காலமாக விடுதலைப் புலிகளுக்கும் ஜ.நா சபைக்குமான இணைப்பாளராக பணி புரிந்துள்ளார். அவரை 8 வருடத்துக்கு முன்னர் இலங்கை இராணுவம் தாக்கியுள்ளது, இருப்பினும் அவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். பின்னர் நாடு திரும்பிய அவரிடம், முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தப்பிவந்த நபர் ஒருவர் கொடுத்த தகவலை அடுத்தே இந்த ஆக்கம் அதிர்வு இணையம் வழியாக வெளிவந்துள்ளது.
தற்போது கிடைத்த தகவல் படி சந்திர நேரு எ.பி க்கு பசில் ராஜபக்ச விடுத்த அச்சுறுத்தல் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அறியப்படுகிறது.
நன்றி:அதிர்வு இணையம்.
http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1243127770&archive=&start_from=&ucat=4&
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com