விகடனுக்கும் இலங்கை அரசிற்கும் என்ன தொடர்பு?
விகடன் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ஈழத்தைப் பற்றியும் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தியது. அதன் முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முடிவுகள் புலிகளுக்கும் ஈழத்திற்கும் பலத்த ஆதரவு இருப்பதை எடுத்துக் காட்டியது. அதன் பிறகு விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாகவும் ஈழத்திற்கு ஆதரவாளன் போலவும் தன்னைக் காட்டிக் கொள்ளூம்படி தொடர்ந்து பல கட்டுரைகளை ஆனந்தவிகடனிலும் ஜுனியர் விகடனிலும் மட்டுமல்ல அவள் விகடனிலும் வெளிவிட்டது. இதில் விடுதலிப் புலிகள் மிகப் பலமுள்ளவர்களாகப் பொய்யாகப் பல தகவல்கள் வெளியிடப் பட்டது. கட்டுரை ஏதோ ஈழ ஆதரவாகத்தான் இருக்கும். வியாபாரம்!!!ஆனால் விகடனின் “அரசவை” பின்னுட்டக் காரர்களான பாலா, தமிழ் யூகே, வெங்கி, ஹரிஹரன், பார்த்த சாரதி ஆகியோர் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக பற்பல நஞ்சுகள் கக்கப்படும். பின்னூட்டத்தில் ராஜபக்சே தமிழ் நன்கு படித்தவர் என்று கூடப் பொய் சொல்லப் பட்டது. இவர்கள் புலிகளுக்கு எதிராக எந்த விதமான பொய்க் கருத்துக்கள் கூறப்பட்டாலும் அவை பிரசுரிக்கப் படும்.
கதை இப்படி இருக்கும் போது விகடனின் ஒரு உதவி ஆசிரியர் இலங்கையிடம் இலஞ்சம் வாங்கிச் செயற்பட்டதாக செய்திகள் வந்தன.
இப்போது ஜூனியர் விகடனில் பத்மநாதன் தொடர்பான கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. அதில் மிகத் தவறான செய்தி ஒன்று குறிப்பிடப் பட்டுள்ளது:''இலங்கையில் ஆரம்ப கட்டத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் இருந்தனர். விடுதலைப்புலிகள் இயக்கம் ராணுவரீதியாக போரைத் துவக்கி, தொடர்ந்து சண்டை நடத்த வட பகுதியில் செழிப்பாக இருந்த தமிழர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.
1970களில் முப்பது இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் இலங்கையில் இருந்தனர். தமிழர் கூட்டணியின் தேசியகீதத்தில் "வளர் முப்பத்தைந்து இலட்சம் மக்கள் கொண்ட..." என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
அடுத்த பொய்: கிட்டத்தட்ட மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்றனர்.
பிரித்தானியாவில் மட்டும் மூன்று இலட்சத்திற்குக் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர்.
இலங்கையிலோ அல்லது எந்த வெளிநாட்டிலோ வெளிவராத தகவல்கள் "முடிந்தது புலி வேட்டை தொடங்கியது தங்க வேட்டை" என்ற கட்டுரையில் ஜுனியர் விகடன் வெளியிட்டுள்ளது:
- கிட்டத்தட்ட 6,000 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தை சிங்களர் வசிக்கும் பகுதிகள் உட்பட பல இடங்களில் பரவலாக அவர்கள் மறைத்து வைத்ததாக இப்போது சிங்கள ராணுவம் கருதுகிறது.
- இலங்கை முழுவ திலும் சுமார் 40 இடங்களில் ஆயுதப் புதையலும், 23 இடங் களில் தங்கப் புதையலையும் புலிகள் ஒளித்து வைத்திருப்பதாக போர் முடிந்ததுமே இலங்கை ராணுவ வட்டாரங்களுக்கு ரகசியத் தகவல் வந்து சேர்ந்தது.
- இரு வாரங்களுக்கு முன்பு முல்லைத்தீவில் ஒரு பெரும் புதையலை கைப்பற்றியிருக் கிறார்கள். அடுத்த கட்டமாக மட்டக்களப்பு வாகரை பகுதி யிலும், இலுப்படிச்சேனை என்ற இடத்திலும் புதையலை எடுத்திருக்கிறார்கள். இதே மாதிரி கிழக்குப் பகுதியில் வெள்ளான்தோட்டத்திலும், கல்லடியிலும் புதையலைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.
- கொட்டயனாவில் இருக்கும் பொன்னம்பல வனேஸ்வரம் கோயிலின் பூசாரியான ரவி குருக்களிடமும் அப்படித்தான் விசாரணை கொண்டுபோன மேப்பை விரித்து, அதில் குறிப்பிட்ட ஓர் இடத்தை அடையாளம் கண்டு தோண்டச் சொல்லியிருக்கிறார்கள். ஐந்து அடிகள் தோண்டியவுடன், ஒரு பாதாள அறை இருந்திருக்கிறது. அதை திறந்து பார்த்த ராணுவத்துக்கு பெரிய அதிர்ச்சி. ஒரு பெரிய பட்டாலியன் ராணுவத்துக்குத் தேவை யான அளவுக்கு பெரும் ஆயுதக்குவியலே அங்கே இருந்திருக்கிறது. அதனுடன், 1,000 கிலோ தங்கம் இருந்திருக்கிறது. அதற்கடியில் மிக மிக முக்கியமான ஆவணங்களும், டைரிகளும் கிடைத்திருக்கிறதாம்.
- ராணுவத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு டைரியில் குறிப்பிட்டிருந்த ஒரு வீட்டை முற்றுகையிட்டிருக்கிறது. அங்கு ஒளிந்திருந்த புலிகளின் கெரில்லா படைப்பிரிவு தலைவர் ராதாவை கடந்த 25-ம் தேதி கைது செய்திருக்கிறார்கள். மேலும் இருவரையும் கைது செய்திருக்கும் ராணுவம், அவர்களை பற்றிய தகவல்களை வெளியே கசிய விடவில்லை.
- தாய்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இரண்டு சரக்கு கப்பல் நிறுவனங்களும், இங்கிலாந்தில் 176 பெட்ரோல் பங்குகளும், கனடாவில் 193 பெட்ரோல் பங்குகளும் புலிகளுக்கு இருப்பதாக இப்போதைக்கு உறுதிப்பட்டிருக்கிறது
http://veltharma.blogspot.com/2009/10/blog-post_03.html
'வடக்கை மீட்டெடுப்போம், ஒருங்கிணைந்த இலங்கையை உருவாக்குவோம்!' என்ற கோஷத்துடன் நான்காம் கட்ட ஈழப் போரில் விடுதலைப்புலிகளை வீழ்த்திய மகிழ்ச்சியை இன்னும்கூட கொண்டாடுகின்றனர் இலங்கையில். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரானபிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவித்த ராணுவம், புலிகள் இயக்கத் தின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்ட கே.பி. என்கிற செல்வராசா பத்மநாபனையும் மலேசியாவில் கைதுசெய்தது. புலிகள் இயக்கத்தின்பணப் பரிமாற்ற விஷயங்களின் முதுகெலும்பாக விளங்கிய பத்மநாபன் விசாரணையில் தரும் தகவல்களை வைத்து, புலிகளின் பெருங்குவியலான புதையல்களின் மீது சிங்கள ராணுவம் தன் புதிய வேட்டையை தொடங்கியிருக்கிறது என்பதுதான் லேட் டஸ்ட்! 'புலிகள் இயக்கம் இனி அவ்வளவுதான்' என ராஜபக்ஷே கொக்கரித்துக் கொண்டிருந்த வேளையில், சர்வதேச நீதிமன்றத்தில் அவரையும், ராணுவத்தினரையும் போர்க் கைதிகளாக நிறுத்தவேண்டும் என்ற முனைப்புடன் பத்மநாபனும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவரான உருத்திரகுமாரனும் தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில்தான் ஒரு சூழ்ச்சி வலை நெய்து, அதில் பத்மநாபனை வீழ்த்தினர் இலங்கை சிறப்பு புலனாய்வு படையினர். புலிகளின் கடந்தகால ரகசியம், எதிர்காலத் திட்டம் குறித்த விவரங்களைக் கேட்டுத் துளைப்பதோடு, அந்த இயக்கம் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் சேர்த்து வைத்திருந்த பணக் குவியல்களை குறிவைத்து பத்மநாபனிடம் கேள்விகள் வீசப்படுகிறதாம். கடந்த 19-ம் தேதி கொழும்பு நகரின் ஓர் அங்கமான கொட்டயணா ('கொட்டாஹெனா' என்றும் சொல்கிறார்கள்) பகுதியில் தேடல் வேட்டை நடத்தியது ராணுவம். அங்குள்ள பொன்னம்பல வனேஸ்வரம் கோயிலில் (பொன்னம்பல ஆனேஸ்வரர் என்றும் சொல்கிறார்கள்) புதையலின் ஒரு பகுதி ராணுவத்தினரிடம் சிக்கியதாகச் சொல்லப்படுகிறது! கொழும்பில் உள்ள சில தமிழ்ப் பத்திரிகையாளர்களிடம் இது குறித்துப் பேசினோம். ''இலங்கையில் ஆரம்ப கட்டத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் இருந்தனர். விடுதலைப்புலிகள் இயக்கம் ராணுவரீதியாக போரைத் துவக்கி, தொடர்ந்து சண்டை நடத்த வட பகுதியில் செழிப்பாக இருந்த தமிழர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து விட்டனர். கிட்டத்தட்ட மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருமே புலிகள் இயக்கத்துக்கான நிதியை வழங்கி வந்தனர். உலகம் முழுதும் பல்வேறு ஏஜென்டுகள் மூலமாக இவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் நிதி, பத்ம நாபன் மூலமாக புலிகள் இயக்கத்துக்கு வரும். இப்படி வரும் நிதியின் ஒரு பகுதி பத்மநாபன் மூலமாகவே பல்வேறு விதங்களில் முதலீடு செய்யப்படும். இந்த நிதியை புலிகள் எப்போதும் பணமாக வைத்துக் கொண்டதில்லை. உலகின் எந்த மூலையிலும் செல்லுபடி யாகக்கூடிய வகையில் தங்கமாக மாற்றி சேமித்து வைப் பதுதான் அவர்கள் பாலிஸி. பல நூறு கோடி மதிப்பிலான பணம் இப்படி தங்கமாக மாற்றப்பட்டு, அந்தந்த ஏரியா ஆபரேஷனுக்கு ஏற்ப எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பதுக்கி வைக்கப்பட்டது. அப்படித்தான், இலங்கைத் தலைநகர் கொழும்பிலேயே... துறைமுகத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பொன்னம்பல வனேஸ்வரம் கோயிலின் அடியி லும் ஒரு பகுதியை அவர்கள் ஒளித்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக இறுதிக்கட்ட போர் மும்முரம் அடைந்த நேரத்தில், கிட்டத்தட்ட 6,000 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தை சிங்களர் வசிக்கும் பகுதிகள் உட்பட பல இடங்களில் பரவலாக அவர்கள் மறைத்து வைத்ததாக இப்போது சிங்கள ராணுவம் கருதுகிறது. எந்த நேரத்திலும் முழுமூச்சாக ஆயுதங் கள் கொள்முதல் செய்து மீண்டும் போர் தொடுக்கவே இப்படி அவர்கள் புதையல்களாகப் பதுக்கியிருக்க வேண்டும். கடைசியாகக் கிடைத்த சில தகவல்களின்படி, இலங்கை முழுவ திலும் சுமார் 40 இடங்களில் ஆயுதப் புதையலும், 23 இடங் களில் தங்கப் புதையலையும் புலிகள் ஒளித்து வைத்திருப்பதாக போர் முடிந்ததுமே இலங்கை ராணுவ வட்டாரங்களுக்கு ரகசியத் தகவல் வந்து சேர்ந்தது. அந்தப் புதையல் எங்கெங்கு இருக்கிறது என்பது பொட்டு அம்மானுக்கும், கே.பி. எனப்படும் பத்மநாபனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் எனவும் அந்தத் தகவல் மேலும் சொன்னது! பத்மநாபன் கொடுத்த தகவல்களை வைத்து இரு வாரங்களுக்கு முன்பு முல்லைத்தீவில் ஒரு பெரும் புதையலை கைப்பற்றியிருக் கிறார்கள். அடுத்த கட்டமாக மட்டக்களப்பு வாகரை பகுதி யிலும், இலுப்படிச்சேனை என்ற இடத்திலும் புதையலை எடுத்திருக்கிறார்கள். இதே மாதிரி கிழக்குப் பகுதியில் வெள்ளான்தோட்டத்திலும், கல்லடியிலும் புதையலைக் கைப்பற்றியிருக்கிறார்கள். கொட்டயனாவில் இருக்கும் பொன்னம்பல வனேஸ்வரம் கோயிலின் பூசாரியான ரவி குருக்களிடமும் அப்படித்தான் விசாரணை நடந்ததாகச் சொல்லப்படுகிறது. கையோடு கொண்டுபோன மேப்பை விரித்து, அதில் குறிப்பிட்ட ஓர் இடத்தை அடையாளம் கண்டு தோண்டச் சொல்லியிருக்கிறார்கள். ஐந்து அடிகள் தோண்டியவுடன், ஒரு பாதாள அறை இருந்திருக்கிறது. அதை திறந்து பார்த்த ராணுவத்துக்கு பெரிய அதிர்ச்சி. ஒரு பெரிய பட்டாலியன் ராணுவத்துக்குத் தேவை யான அளவுக்கு பெரும் ஆயுதக்குவியலே அங்கே இருந்திருக்கிறது. அதனுடன், 1,000 கிலோ தங்கம் இருந்திருக்கிறது. அதற்கடியில் மிக மிக முக்கியமான ஆவணங்களும், டைரிகளும் கிடைத்திருக்கிறதாம். உடனே பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜ பக்ஷே பார்வைக்கு அந்த டைரிகளைக் கொண்டு போயிருக் கிறார்கள். புலிகளோடு தொடர்பு கொண்டிருந்த சிங்கள ராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி... புலிகள் நட்போடும் பகையோடும் இருந்த இந்திய புள்ளிகள் பற்றிய விவரங்களும் அதில் கிடைத்திருக்கிறதாம். இந்திய ஹை கமிஷனர் அலோக் பிரசாதுக்கு இந்த விவரங்களில் சில அளிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, இந்தியாவின் உளவுத் துறையான 'ரா'விலிருந்து இரண்டு அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி அவசரமாக இலங்கை பறந்து வந்து சில விவரங்களை வாங்கிச் சென்றதாகவும் தெரிகிறது. இது குறித்து அரசல் புரசலாக ஒரு வெளிநாட்டு பத்திரிகையில் செய்தி கசிய... அதன் பிறகு தான் சிங்கள உயர் அதிகாரிகள் பலருக்கே விவரம் தெரியும். அந்த டைரிகளில் ஒன்றில் சிங்களத் தலைவர்களைக் குறி வைத்து ஏவப்பட்டதற்கொலை படைகள் பற்றிய சில தகவல் களோடு, கொழும்பில் புலிகளுக்கு உதவக்கூடிய சில பெயர்களும் இருந்ததாகத் தெரிகிறது. உடனே ராணுவத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு டைரியில் குறிப்பிட்டிருந்த ஒரு வீட்டை முற்றுகையிட்டிருக்கிறது. அங்கு ஒளிந்திருந்த புலிகளின் கெரில்லா படைப்பிரிவு தலைவர் ராதாவை கடந்த 25-ம் தேதி கைது செய்திருக்கிறார்கள். மேலும் இருவரையும் கைது செய்திருக்கும் ராணுவம், அவர்களை பற்றிய தகவல்களை வெளியே கசிய விடவில்லை. இந்த டைரிகளில் இருக்கும் சில விவரங்களை வைத்து கே.பி-யிடம் புதிய கேள்விகளை வீசத் துவங்கி இருக்கும் ராணுவம், புலிகளின் வெளிநாட்டு முதலீடுகள் பற்றிய சில முக்கிய விஷயங்களையும் கறந்திருப்பதாகக் கேள்விப்படுகிறோம். தாய்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இரண்டு சரக்கு கப்பல் நிறுவனங்களும், இங்கிலாந்தில் 176 பெட்ரோல் பங்குகளும், கனடாவில் 193 பெட்ரோல் பங்குகளும் புலிகளுக்கு இருப்பதாக இப்போதைக்கு உறுதிப்பட்டிருக்கிறது. இதே போல், அயர்லாந்துக்கு பக்கத்தில் ஒரு தீவு பற்றிய விவரங்களும் விசாரிக்கப்படுகின்றன. இது மட்டுமில்லாமல், இறுதிக் கட்டப் போரில் ராணுவத்தை வீழ்த்துவதற்காக எரித்ரியா நாட்டிடமிருந்து சுமார் 10 இலகுரக விமானங்களை புலிகள் வாங்கியிருந்திருக்கின்றனர். ஆனால், இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளின் தீவிர ரோந்தினால் பிரித்து கப்பலில் கொண்டு வரப்பட்ட அந்த விமான பாகங்களை அதற்கு மேல் கொண்டுவர முடியாமல் தாய்லாந்தில் இறக்கியிருக்கின்றனர். இது போல் இன்னும் பல அதிர்ச்சித் தகவல்களை ராணுவம் கைப்பற்றியிருக்கிறது...'' என்றெல்லாம் கூறுகிறார்கள் இந்த இலங்கை தமிழ்ப் பத்திரிகைக்காரர்கள். | |
|
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com