தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, October 4, 2009

நான் ஏன் புஷ் ஷின் மீது செருப்பை வீசினேன் ?

காஷ்மீரை தனி நாடாக்கும் முயற்சியில் 57 இஸ்லாமிய நாடுகள்

இஸ்லாமிய நாடுகள் ஒருங்கிணைந்து ஓ.ஐ.சி. என்றொரு அமைப்பை வைத்துள்ளன. இந்த அமைப்பில் 57 இஸ்லாமிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் கூட்டம் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நடந்தது. அப்போது காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து மீட்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியது. இதை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது.

இந்த அமைப்பு சார்பில் காஷ்மீருக்கு சிறப்புத்தூதர் ஒருவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்த அப்துல்லா பின் அப்துல் ரஹ்மான் அல் பாக்கர் தூதராக பொறுப்பு ஏற்றுள்ளார்.

இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை தட்டிப்பறிக்க நடந்துள்ள இந்த முயற்சி மூலம் காஷ்மீர் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாறி வருகிறது. பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா, நைஜீரியா ஆகிய நாடுகள் மூலம் இந்த பிரச்சினை பூதாகரமாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சீனா, தன் நாட்டுக்கு வரும் காஷ்மீர் மக்களுக்கு தனி விசா கொடுத்தது. அதாவது காஷ்மீரை தனி நாடு போல சீனா நடத்துகிறது. இதன் தொடர்ச்சியாகவே 57 இஸ்லாமிய நாடுகள் காஷ்மீரை துண்டாக்கி தனி நாடாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.

57 இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் இந்த நடவடிக் கையை காஷ்மீரில் இயங்கும் ஹூரியத் மாநாட்டுக் கட்சி வரவேற்றுள்ளது. அந்த கட்சித்தலைவர்கள் மிர்லாஸ் உமர் பாரூக், நியூயார்க் கூட் டத்தில் பங்கேற்று சிறப்புத் தூதரை வரவேற்று பேசினார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி பிரதமர் சர்தார் யாகூப் மற்றும் காஷ்மீரை தனி நாடாக்ககோரும் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு புதிய தூதரை வாழ்த்தினார்கள்.


மத்திய அரசு இதற்கு வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=௧௭௮௭0

லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரிக்கு இடமாற்றம் .

கிருஷ்ணகிரி டி.ஆர்.ஓ.,வாக இருந்தவர் சண்முகசுந்தரம். நான்கு மாதத்துக்கு முன் கிருஷ்ணகிரிக்கு வந்தார். இவர் வந்த பின், மாவட்டத்தில் அரசு நில ஆக்கிரமிப்பு, குவாரிகள் ஏலம், ரேஷன் அரிசி கடத்தல், மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத குற்றங்கள் கட்டுக்குள் வந்தன.

குறிப்பாக, அரசியல்வாதிகள், ஊழல் அதிகாரிகள், கடத்தல் பேர்வழிகளுக்கு வளைந்து கொடுக்காமல், நேர்மையாக செயல்பட்டதால், அதிகாரிகள் முதல் அரசியல் புள்ளிகள் வரை இவரை கண்டால் "கிலி' அடைந்தனர். இந்நிலையில், டி.ஆர்.ஓ., சண்முகசுந்தரம், திடீரென நீலகிரி மாவட்டம் கூடலூர் ஜென்ம பூமிகள் நிலவரி திட்ட அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவரது இடமாற்றத்தின் பின்னணியில், அரசியல் பின்னணி இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஓசூர் அடுத்த பாகலூருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடந்த 18ம் தேதி கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தார். அப்போது, அவர் பாகலூர் அடுத்த உளியாளம் கிராமத்தில் அம்பேத்கர் சிலையை அனுமதியின்றி திறக்க முயற்சித்தனர். அதற்கு டி.ஆர்.ஓ., சண்முகசுந்தரம் மறுத்ததால் சிலையை திறக்காமல் கொடியை மட்டும் ஏற்றிவிட்டுச் சென்று விட்டார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஓசூர் அடுத்த பாகலூர் சுற்றுவட்டார கிராமங்களில் ஆறு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு ஆக்கிரமித்தனர்.

குடிசைகளின் மீது இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை வருவாய் துறையினர் அகற்றினர். ஆக்கிரமிப்பையும் அதிரடியாக அகற்றினர். டி.ஆர்.ஓ., நீடித்தால், அரசியல் செய்ய முடியாது என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருமாவளவனிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர் ஆளும்கட்சி மேலிட தலைவர்களிடம் பேசி டி.ஆர்.ஓ., இடமாற்றம் செய்யப் பட்டதாக கூறப்படுகிறது. இடமாற்றம் குறித்து டி.ஆர்.ஓ., சண்முகசுந்தரத்திடம் கேட்ட போது, அவர் கூறியதாவது: விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலர் கோவேந்தன் பலமுறை என்னிடம் தொடர்பு கொண்டு, ஏழைகள் குடிசை போட ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் எனக் கூறி என்னை தனியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

அதற்கு நான் மறுத்து விட்டேன். மேலும், சிலை திறப்பு விவகாரத்திலும், நான் கறாராக நடந்து கொண்டேன். இதனால், அவருடைய கட்சியினருக்கு என் மீது அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற இடத்தில் வருவாய்துறையினர் குடிசைக்குள் புகுந்து நகை, பணத்தை எடுத்து சென்று விட்டதாகவும், ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற கர்ப்பிணி பெண்களை எட்டி உதைத்ததாகவும் கூறி என்னிடம் கோவேந்தன் வாக்குவாதம் செய்தார்.

வருவாய் துறையை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்றார். அதற்கு, நான், உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்றேன். இந்நிலையில், எனக்கு திடீரென டிரான்ஸ்பர் உத்தரவு வருகிறது. தவறு செய்யாத என்னை திட்டமிட்டு பழிவாங்கி உள்ளனர். உண்மை நிலையை விளக்கி அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்ப உள்ளேன். இவ்வாறு டி.ஆர்.ஓ., கூறினார்.

http://ulalmannargal.blogspot.com/2009/10/blog-post_03.html


நான் ஏன் புஷ் ஷின் மீது செருப்பை வீசினேன் ?

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.Muntazer al-Zaidi embraces his sister upon arrival at the Al-Baghdadya television station following his release from prison Photo: REUTERS

முன்தாஜர் அல் ஜெய்திநான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக். நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன..எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன. ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன். ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.வாய்ப்பு வழிதேடி வந்தது. நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன் நன்றி . .போராட்டம் வலைப்பதிவு

http://asfarmnm.blogspot.com/2009/10/blog-post.htmlஇலங்கை போரில் பாலியல் வன்முறைகள் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டன என்று சொன்ன ஹிலாரிக்கு எதிர்ப்பு

ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு துறைமந்திரி ஹிலாரி கிளிண்டன் பேசினார். அப்போது, இலங்கையில் நடைபெறும் உள்நாட்டு போரில் பாலியல் வன்முறைகள் ( பெண்கள் கற்பழிப்பு) ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றன.

இந்த குற்றத்தை புரிவர்களை தண்டிக்காமல் விடுவது மற்றவர்களையும் இதுபோன்ற குற்றங்களை செய்ய தூண்டுதலாக அமையும் என அவர் பேசினார்.

அவரது இந்த பேச்சுக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹிலாரி கிளின்டனின் இக்கருத்து பொறுப்பற்ற விதமாக உள்ளது என்று இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கருத்தை இலங்கை அரசு அடியோடு நிராகரிக்கிறது. அரசு பொறுப்பில் இருந்து கொண்டு ஹிலாரி கிளிண்டன் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்று மந்திரியும் பாதுகாப்பு விவகார செய்தி தொடர்பாளருமான கேகலிய ரம்புக்வெல் கூறியுள்ளார்.


இதன்கிடையே பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் சிறப்பு பிரதிநிதி ஒருவரை ஐ.நா நியமிக்க வேண்டும் என்று பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் அமெரிக்கா ஆதரவுடன் முன்மொழியப்பட்டது.


ஈழத்தமிழர்கள் முள் வேலிக்குள் தவிக்கும்போது கலைஞருக்கு விருது தேவையா?: டி.ராஜேந்தர்

இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் முள் வேலிக்குள் அகதிகளாய் முடங்கிக் கிடக்கிறார்கள். முல்லை பெரியாறு பிரச்சனையில் தென் மாவட்ட மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு காஞ்சியில் தனக்குத் தானே விருதை கொடுத்துக்கொண்டு மாநில சுயாட்சி என முழங்கும் முதல்வர் கருணாநிதியின் இந்த செயல்தான் அண்ணாவின் கொள்கையா? என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய டி.ராஜேந்தர்,

முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் கேரள அரசு மதிக்காமல் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தது. அது இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த பிரச்சனை முடிவதற்குள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முல்லைப்பெரியாறு பகுதியில் புதி அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக உறுதிபடுத்தி இருக்கிறார். அதே நேரத்தில் தமிழக அரசுக்கு எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இப்படி மத்திய அமைச்சரவையில் பொறுப்புள்ள ஒரு அமைச்சர் பேட்டி கொடுத்திருப்பது உண்மையா? இல்லையா? என்பதை முதல்வர் கருணாநிதி தெளிவுபடுத்துவாரா?

மத்தியில் காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு மந்திரி பதவி கொடுத்துவிட்டு, தமிழர்களுக்கு எதிராக பல அநீதிகளை இழைத்து வருகிறது. திமுகவும் அதை வாய்மூடி பார்த்துக்கொண்டிருக்கிறது.

இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் முள் வேலிக்குள் அகதிகளாய் முடங்கிக் கிடக்கிறார்கள். முல்லை பெரியாறு பிரச்சனையில் தென் மாவட்ட மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு காஞ்சியில் தனக்குத் தானே விருதை கொடுத்துக்கொண்டு மாநில சுயாட்சி என முழங்கும் முதல்வர் கருணாநிதியின் இந்த செயல்தான் அண்ணாவின் கொள்கையா? என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=௧௭௮௩௧

20 ஆயிரம் ராணுவ வீரர்களுக்கு பொதுமன்னிப்பு:சிங்கள அரசு அறிவிப்பு

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் கடுமையான போர் நடந்தபோது உயிருக்கு பயந்து ராணுவ வீரர்கள் பலர் தப்பி ஓடிவிட்டனர். அவ்வாறு தப்பி ஓடியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தது.

இதையடுத்து பலர் சரண் அடைந்தனர். அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி ராணுவத்தில் இருந்து விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இதுவரை 20 ஆயிரத்து 220 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் இப்பணி தொடங்கப்பட்டு செப்டம்பர் மாதம் 30-ந்தேதியுடன் முடிந்தது.

இத்தகவலை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=௧௭௮௧௮இலங்கை கடற்படையை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்


ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராமேஸ்வரத்தில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமேஸ்வரம் திட்டக்குடி முனையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ராமநாதபுரம் மாவட்ட துணைச் செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். இந்திய தேசிய மாதர் சங்க மாநிலச் செயலாளர் பத்மாவதி எம்எல்ஏ., துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ராமசாமி, துணைச் செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் பேசினர்.

வலையில் மீனவர்களை இழுத்து வருவது போலவும், காந்தி வாயில் கருப்பு துணியை கட்டி நூதன முறை ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17791


No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!