நம்புங்கள் நாராயணன்களை நம்பினால், நடுவீதியில் நிற்கவேண்டியதுதான்
சுனாமிக்குக் காரணம் சனிப் பெயர்ச்சியா?
மூட நம்பிக்கை வியாபாரிகள் இருக்கிறார்களே அவர்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், அதுதான் வாய்ப்பு என்று தங்கள் கடையை விரித்துவிடுவார்கள்.
நியூசிலாந்து அருகே பசிபிக் பெருங்கடலில் செப்டம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட சுனாமி-யால் 144 பேர் மரணம் அடைந்தனர். இதேபோல், இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது ரத்தத்தை உறைய வைக்கக் கூடிய துயர நிகழ்வுகளாகும்.
இந்தத் திடீர்ப் பேரழிவுக்குக் காரணம் சனிப் பெயர்ச்சிதான் என்று கண்டுபிடித்திருக்கிறார் ஒரு நவீன கொலம்பஸ்.அவர்தான் ஜோதிடர் காழியூர் நாராயணன்.
இதற்கு ஏடுகளின் விளம்பரம் வேறு!
ஆமாம், இவர்தான் கரைகண்ட ஜோதிடர் ஆயிற்றே வந்ததற்குப்பின் காரணம் சொல்லுவதைவிட, வருவதற்குமுன் ஏன் சொல்லவில்லை அபாய எச்சரிக்கையைச் செய்யவில்லை?
இதுபோன்ற பேர்வழிகள் கடந்த முறை தேர்தலில் சொன்ன ஜோதிடங்கள் எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதற்குப் பின் தலைமறைவாகக் கிடந்தவர்கள் இப்பொழுது ஏதோ ஒரு சாக்கை பயன்படுத்திக்கொண்டும், மக்களின் மறதியில் நம்பிக்கையை வைத்துக்கொண்டும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர் என்பதைப் பொதுமக்கள் சிந்திக்கத் தவறக்கூடாது.
இதுவரை சனிப்பெயர்ச்சி என்பதை மனிதர்களிடத்தில் வைத்துதான் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது நாடுகளை வைத்தும் விளையாட ஆரம்பித்துவிட்டனர். இதன்மூலம் குறுக்கு வழியில் விளம்பரம் கிடைக்கும் அல்லவா!
நிலநடுக்கங்களும், சுனாமிகளும் இப்பொழுதுதான் ஏற்படுகின்றனவா? இதற்கு முன் எத்தனையோ தடவைகள் நடந்ததுண்டே! அதற்கெல்லாம் காரணம் இந்தச் சனிப் பெயர்ச்சிதானா? ஏன் அப்பொழுதெல்லாம் அவ்வாறு கூறவில்லை? அப்பொழுது இருந்த ஜோதிடர்களுக்குச் சாமர்த்தியம் போதாது என்று இந்த நாராயணன்கள் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள் (சொன்னால்தான் பிழைப்புப் போய்விடுமே!) ஆனாலும், உள்ளுக்குள் சிரித்து மகிழ்வார்கள்.
சனி பெயர்ந்தால் அதன் விளைவு பெரிய ஆபத்தாக அல்லவா முடியும்?
கிரகங்கள் ஒன்றையொன்று ஈர்த்திருக்கும் நிலையில், ஒரு கிரகம் பெயர்ந்தால் அதன் விளைவு வேறு கிரகங்களைப் பாதிக்காதா? 75 கோடி மைல் தூரத்தில் உள்ள 73,000 மைல் குறுக்களவு உள்ள சனிக்கிரகம் பெயர்ந்தால், விளைவு என்னவாகும்?
கிரகங்கள் என்ன கூடுவிட்டுக் கூடு பாயும் சித்து விளையாட்டுக்காரர்களா?
இந்த வாரம் ஜூனியர் விகடனில் (4.10.2009, பக்கம் 23) சேஷாத்திரி சாஸ்திரி என்பவர் இந்தச் சனிப் பெயர்ச்சிபற்றி கூறும் கருத்து கவனிக்கத்தக்கதாகும்.
நவக்கிரக வழிபாடு என்பதே இந்த பத்து, இருபது வருடமாக பரவியிருக்கிற தேவையில்லாத கலாசாரம். காசியில் இருக்கும் லிங்கமானாலும், இங்கே ஒரு குளக்கரையில் இருக்கிற லிங்கமானாலும் ஒன்றுதான். இந்தக் கோயிலில் அந்தக் கடவுள் இருக்கிறார், அந்த இடத்தில்தான் அருள்பாலிக்கிறார் என்பதெல்லாம் சிறப்பு சேர்க்க சிலரால் எழுதி வைக்கப்பட்டவைதான். வேறு எந்த தனி முக்கியத்துவமும் இல்லை.
இந்த உலகம் தோன்றியபோதே இருப்பவைதான் சனியும், மற்ற கிரகங்களும். அதற்குப் பின்னால் உருவானவைதான் கோயில்கள். அப்படி இருக்கும்-போது சனீஸ்வரன் திடீரென்று புதுசாக இங்கு வந்தார், அங்கு வந்தார் என்பதெல்லாம் எப்படி சரியாக இருக்க முடியும்? அது ஒரு கோள். அந்தக் கோள், இந்த பிரபஞ்ச இயக்கம் நல்ல முறையில் தொடர்வதற்கு உதவி செய்கிறது. அதற்காக அதற்கு நாம் நன்றி சொல்லலாம், அவ்வளவுதான்! அதை அந்த கிரகத்தின் இடப்பெயர்ச்சி சமயத்தில்தான் சொல்லவேண்டும் என்பதோ... குறிப்பிட்ட கோயிலுக்குத் தேடிச் சென்று தான் சொல்லவேண்டும் என்பதோ கிடையாது. சனியைவிட சூரியனும், சந்திரனும் பூமியில் உள்ளோருக்கு ரொம்ப முக்கியமானவர்கள். அவர்களுக்கும் இடப்பெயர்ச்சி கொண்டாடலாம் என்று கிளம்பினால் என்ன ஆகும்?
இப்படி சொல்கிறவர் தந்தை பெரியாரின் சீடர் அல்ல கருஞ்சட்டைக்காரரும் அல்லர். விடுதலை வாசகரும் அல்லர். சாட்சாத் சாஸ்திரிதான்.
இந்தச் சனிப் பெயர்ச்சி விவரம் எல்லாம் அமெரிக்கர்களுக்கோ, ஜெர்மன்காரர்களுக்கோ தெரியுமா? பல நாடுகளில் எரிமலைகளின் சீற்றங்கள் அடிக்கடி ஏற்படுகின்றனவே காடுகள் பல மாதக் கணக்கில் பற்றி எரிகின்றனவே அவற்றிற்கும் இந்தச் சனிப் பெயர்ச்சிக்கும் தொடர்புண்டு என்று புது மூட்டையை அவிழ்த்துவிட்டாலும் அவிழ்த்து விடுவார்கள் யார் கண்டது?
சுனாமி வருவது, நிலநடுக்கம் ஏற்படுவது, புயல் வீசுவது, கடுமழை பெய்வது ஏன் என்பதற்கான அறிவியல் விளக்கங்களை உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன்கூட ஒழுங்காகச் சொல்லுவான்.
தங்கள் பிள்ளைகளின் புத்தகங்களில் என்ன இருக்கிறது என்பதை குறைந்தபட்சம் பெற்றோர்கள் கருத்தூன்றிப் படித்தாலும் போதுமே, உண்மை விளங்கிவிடுமே!
நம்புங்கள் நாராயணன்களை நம்பினால், நடுவீதியில் நிற்கவேண்டியதுதான் _ எச்சரிக்கை!
-----------------------"விடுதலை" தலையங்கம் 2-1
http://thamizhoviya.blogspot.com/2009/10/blog-post_1714.html0-2009
புகைப்பட கலைஞர்கள்
ஏழு நிமிடம் அதிரவைக்கும் காமெடி வீடியோ .
ஏழு நிமிடம் அதிரவைக்கும் காமெடி வீடியோ .குழந்தைகள் முதல் மிருகங்கள் வரை ஒரே அட்டகாசம்
http://www.youtube.com/watch?v=svEPX2GpoXY
நவீன தாலாட்டு - கவியரசு வைரமுத்து
இந்தியாவுக்கு ஒரு ஆகத்து 15 வந்து விட்டது. இந்திய பெண்களுக்கு ஆகத்து 15 எப்போது?. பொருளாதார உதவி கிடைத்துவிட்டதால் பூட்டியிருந்த விலங்கு நொறுங்கி விடும் என்று கருதினர், போன நுற்றாண்டு பெண்.
ஆனால், பொருளாதார விடுதலை கூட கூட சில புதிய விலங்குகளை பூட்டியிருந்தது என்று இனம் கண்டு கொண்டவள் இந்த நுற்றாண்டு பெண். சிறகு இருந்தும் பறக்க முடியவில்லை என்று விமியவன் வீட்டுக்குள் இருந்த பெண்.
பறப்பதற்கு இரண்டு சிறகுகள் போதவில்லை என்று விசுபுகிறவள் வேலைக்கு போகிற பெண்.
வேலைக்கு போகும் பெண்ண தன் வாழ்க்கைக்கு கொடுக்கும் விலை கொஞ்சம் நஞ்சமில்லை. போன ௧0 ஆண்டில் ஒரு காலும் இந்த நுற்றாண்டில் ஒரு காலும் பதித்து கொண்டு அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் திசையிழந்த பெண்மை திரிசங்கு சொர்கத்தில் திவிகிறாள்.
அலுவலகம் செல்லும் ஒரு பெண்ணின் அவசர தாலாட்டு தான் கவியரசு வைரமுத்து சொல்லும் இந்த கவிதை.
இந்த அவசர நுற்றாண்டில் இருதயம் துடிக்கும் இயந்திரங்களாய் மாறிவிட்டது. மனிதன் நெருப்பில் உட்கார்ந்து கொண்டு வயலின் வாசிக்கிறான். அடுப்பில் உட்கார்ந்துகொண்டு காதலிக்கிறான். கணவனும் மனைவியும் இண்டர்போளில்தாம்பத்தியம் நடுத்துகிறார்கள்.
குழந்தைக்கு முத்தம் தபாலில் வருகிறது. காதலிக்கு வாங்கிய மல்லிகை பூ டீசல் புகையில் கருபாகிவிடுகிறது. இப்படி நிறம் மாறும் ஒரு வாழ்க்கையில் தாய் பாடும் ஒரு தாலாட்டு மட்டும் தடம் மாறிபோகாமல் இருக்குமா என்ன? எனவே தான் ஒரு குழந்தைக்கு முன்னிரவில் பாட பட வேண்டிய தாலாட்டு முற்பகலில் பாடும் தாலாட்டாய் முகம் மாறிவிடுகிறது.
வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது.
சோலைக்கு பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்கு போகின்றேன் - வெண்ணிலவே கண்ணுறங்கு!
அலுவலகம் விட்டு -
அம்மா வரும் வரைக்கும் -
கேசட்டில் தாலாட்டு - கேட்டபடி கண்ணுறங்கு!
ஒரு மணிக்கு ஒரு பாடல்
ஒளிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியில் - விழி சாத்தி நீயுறங்கு!
9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை -
9:30 மணி ஆனால் உன் அம்மா சொந்தமில்லை -
ஆயவும் தொலைக்காட்சியும் அசதியில் தூங்கிவிட்டால் -
தூக்கத்தை தவிர துணைக்கு வர யாருமில்லை!
20-ம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே!
இது தான் கதியென்று - இன்னமுதே கண்ணுறங்கு!
தூரத்தில் இருந்தாலும் தூயவளே -
உன் தொட்டில் ஓரத்தில் -
என் நினைவு - ஓடிவரும் கண்ணுறங்கு!
பேருந்தில் நசுங்கி, பிதுங்கி போகிற வேளையிலும்
எடை கொஞ்சம் இழந்து இறங்குகின்ற வேளையிலும்
பூப்பூவாய் உனது புகம் புறப்பட்டு வரும் கண்ணே!
தந்தை வந்து கொஞ்சுவதாய் -
தங்க மடியில் தூங்குவதாய் -
கண்ணனே கண்மணியே - கனவு கண்டு - நீயுறங்கு!
புட்டிபால் குறையவில்லை -
பொம்மைக்கும் பஞ்சமில்லை -
தாய்ப்பாலும் தாயும் இன்றி -
தங்க மகனுக்கு என்ன குறை?
மாலையிலே ஓடி வந்து
மல்லிகையே உன்னை அணைத்தால்
சுரக்காத மார்பும் சுரக்குமடி- கண்ணுறங்கு!
தாலாட்டு பாட்டில் தளிரே - நீ
தூங்கிவிட்டால கோலாட்டம் ஆட
கொண்டவனுக்கும் ஆசை வரும்!
உறவுக்கு தடையாக
'ஒ' என்று அலறாமல் -
இரவ்க்கும் மிச்சம் வைத்து
இப்போது - நீ உறங்கு!
தாயென்று காட்டுவதற்கும்
தாவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுகிழமை வரும் - நல்லவளே கண்ணுறங்கு!
http://kolipaiyan.blogspot.com/2009/10/blog-post.html
கடைசி தமிழன் உயிரோடு இருக்கிறான் ..!
வானம் தரையையும் தரை வானத்தையும் பார்த்து கொண்டிருந்தன.அனைத்து இடத்திலும் மௌனத்தின் இசை கேட்டுக் கொண்டிருந்தது.அந்த இடத்தில் வலியுடன் கூடிய அமைதி அப்பிக்கொண்டிருந்தது.ஒரு தனி மனிதனின் மரணத்தின் போது வலி ஒட்டி கொண்டிருக்கும்,ஒரு இனமே மரண படுக்கையில் இருக்கும் போது ஏற்படும் வலி அமைதியில் நிரம்பிக்கடந்தது.அழுவதற்கு யாரவது இருந்தால் அழுகலாம்,யாருமே உயிருடன் இல்லை.அமைதி மட்டுமே மௌன சாட்சியாய் இருந்தது.அமைதி அமைதி இல்லாமல் மௌனமாய் அழுது கொண்டிருந்தது.இது தான் மயான அமைதியோ?மழையும் அழ தொடங்கியது.
ஆம் இது 2011 , காலன் பேசுகிறேன்! .ஒரு இனமே அழிந்ததால் அவர்கள் சார்பாக பேசுகிறேன்.சகோதரிகள் கற்பழிக்க பட்டார்கள் .குழந்தைகள் கருவிலேயே கொல்லப்பட்டார்கள்.முள் வேலிகள் மயானம் ஆகின.2011 ஜூன் 23 முள் வேலிக்குள் அனைத்து தமிழர்களும் கொல்லப்பட்டனர்.முள் வேலிக்குள் முழுவதும் பிண வாடைகள்.இறந்து கிடந்த பெண் பிணங்களை புணர்ந்தான் ராணுவ கோழை(வீரன்). யாவரும் இறந்து விட்டனர்.தமிழன் என்று சொல்லிக் கொள்ள கொள்ள ஒருவன் இல்லை.
இலங்கை ராணுவ அதிகாரிகள் மூவர் மற்றும் அதிபர் பிணங்களை பார்வை இட்டனர்."அனைவரும் இறந்து விட்டனர் தானே" அதிபர்.
"ஆம்" அதிகாரி தோரணையுடன்.
கண் மூடி இருந்த திலீபன் கண் முழித்து பார்த்தான்.பிண குவியலாக சகோதர சகோதரிகள்.அவன் அப்பா வீரசேகரன் மாவீரன் திலீபன் பெயரை மகனுக்கு வைத்தார்.தாயார் யாழினி கற்பழிக்கப்பட்டு இறந்தார்.அக்காவின் பெயர் மதிவதனி,அந்த பெயருக்காகவே நான்கு பேர் புணர்ந்து கொன்றனர்..தம்பி பிரபாகரன் அவனும் படுகொலை செய்யப்பட்டான்.அனைவரையும் கொல்லும் போதுஅவன் கழிவறைக்குள் சென்றதால் தப்பித்தான்.அவன் கண்மூடி படுத்துக்கொண்டிருந்தான்.
அவன் பக்கத்தில் சென்ற அதிகாரியின் துப்பாக்கி அவன் பிடுங்குவதற்கு தோதாக இருந்தது.கண் இமைக்கும் நேரத்தில் அதை பிடுங்கி அதிபர் மற்றும் மூன்று அதிகாரிகளை சுட்டான் கடைசி தமிழன்.
காலன் உறைந்து போய் பார்த்து கொண்டிருந்தது.கடைசி தமிழன் வேலியில் இருந்து வெளியே வந்தான்.அவன் கண்ணுக்குள் உக்கரம்.
அவன் காலடியில் வீதிகள் மண்டி இட்டு வீர வணக்கம் சொன்னது.இடிகள் முழக்கம் இட்டு கொண்டிருந்தது.மழை அவன் மேல் பூக்கள் தூவிக்கொண்டிருந்தது.கடைசி தமிழன் உயிரோடு இருக்கிறான் ..........முடிந்தால் மோதிப் பாருங்கள்.
http://vennirairavugal.blogspot.com/2009/09/blog-post_29.html
திருவள்ளுவர், முருகக்கடவுள் முகத்தில் மு.க.ஸ்டாலின்: கரூரில் பரபரப்பு! |
|
கரூர்: முருகக்கடவுள் போன்று அமைத்துள்ள பேனரில் மு.க.ஸ்டாலின் முகம் அமைக்கப்பட்டிருந்ததற்கும், திருவள்ளுவர் படம் போட்ட பேனரில் வள்ளுவர் முகத்திற்கு பதிலாக மு.க.ஸ்டாலின் முகம் அச்சிடப்பட்டுள்ளதற்கும் கரூரில் உள்ள இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 3ஆம் தேதி அரசு நலத்திட்ட உதவிகள், பெரியார் அண்ணா பிறந்த நாள் விழா, சிலை திறப்புவிழாக்களில் பங்கேற்க தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகிறார். இதற்காக இப்போதிலிருந்தே கரூரின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் ஸ்டாலினை வரவேற்று பேனர்களை வைக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கரூர்-திருச்சி சாலையில் லைட் ஹவுஸ் பகுதியில் மலேசியநாட்டில் உள்ள பட்டுக்குகை முருகன் கோவில் மலையில் உள்ள முருகக்கடவுள் உருவம் போல் படம் போட்ட பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது அதில் முருகர் முகம் இருக்கும் இடத்தில் மு.க.ஸ்டாலின் முகம் அச்சிட்டப்பட்டிருந்தது. இந்த பேனரை பார்த்த கரூர் பகுதி இந்து அமைப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பேனர் இந்துக்களை அவமதிக்கும், வகையிலும் முருகக்க் கடவுளை அவமதிக்கும் வகையிலும் உள்ளது எனவே இந்த பேனரை உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அகற்றப்படாவிட்டால் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதனால் பேனர் உள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் திருவள்ளுவர் படம் போட்ட பேனரில் வள்ளுவர் முகம் பகுதியில் ஸ்டாலின் முகம் அச்சிட்ட பேனருக்கும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கரூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
பதிவு எழுதிப்பார்!
வைரமுத்துவின் காதலித்துப்பார் கவிதையை ஆளாளுக்கு மாற்றி எழுதிப் பதிவிட்டுவிட்டார்கள். நானும் எழுதாவிட்டால் என்னைப் பதிவர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்ற பயத்திலேயே இதை எழுதிவிட்டேன். வைரமுத்து மன்னிப்பாராக.
பதிவு எழுதிப்பார்!
திரட்டிகளில் உன்பெயர்
தெளிவாகத் தெரியும்.
உன்தமிழ் அழகாகும்.
உனக்கும் கோபம்வரும்.
இணையம் தெய்வமாகும்
கம்யூட்டர் கோவிலாகும்.
பதிவு எழுதிப்பார்
அதிகம் சிந்திப்பாய்
பார்ப்பதெல்லாம் குறிப்பெடுப்பாய்
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப் போடுவாய்
பல்துலக்க முன்னேவந்து – உன்
பதிவுகளில் பின்னூட்டம் தேடுவாய்
பதிவு எழுதிப்பார்.
பதிவெழுத வந்துவிட்டால்
மணித்துளிகள் நிமிசமென்பாய்
பின்னூட்டம் வந்திடாத
நிமிசமும் மணிகளென்பாய்
ஒற்றை நிமிடத்தினுள்
ஒன்பதுமுறை ஓட்டுப்பார்ப்பாய்
பதிவு எழுதிப்பார்
மொக்கைப் பதிவுகளுக்கு
முக்கியத்துவம் தருவாய்
சீரியஸ் பதிவென்றால் – கொஞ்சம்
சிந்தித்தே பதிலளிப்பாய்
கும்மி அடிப்பதென்றால்
குதூகலமாய் கிளம்பிடுவாய்
கும்மி உனக்கென்றால் – கொஞ்சம்
ஒதுங்கியே பதுங்கிடுவாய்
பதிவு எழுதிப்பார்
நல்லாய் இருக்குதென்ற
டெம்ளெட் பின்னூடத்திற்கும்
நன்றிசொல்வாய்
அர்த்தமற்ற அனானிக்கும்
ஆறுதலாய்ப் பதிலுரைப்பாய்
அனானியாய் நீயேவந்து
சமயத்தில் பின்னிடுவாய்
பதிவு எழுதிப்பார்.
அனானிகள் வந்து
தாக்கினாலும்
பாலோவர்ஸ் எண்ணிக்கை
படிப்படியாய்க் குறைந்தாலும்
ஒரே பிளாக்கை இருவர்
சிக்கனமாய்ப் பகிர்ந்தாலும்
நீ பின்னூட்டமிடும் அவனோ, அவளோ
உனக்குப் பின்னூட்டமிட மறுத்தாலும்
பதிவு எழுதிப்பார்.
சொர்க்கம், நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்.
பதிவு எழுதிப்பார்.
http://subankan.blogspot.com/2009/09/blog-post_28.html
http://subankan.blogspot.com/2009/09/blog-post_28.html
|
|
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com