தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, October 4, 2009

லஞ்சம் கொடுக்க மாட்டேன் இயக்கம்
கவிதை, கதை எழுதுபவர்கள் எங்கே ???

'நான் சொந்தமாக பதிப்பகம் தொடங்க போறேன்.என்ன செய்யலாம் ?' என்று கேட்டேன். அவர், 'நல்ல தானே இருந்த. என்னப்பா ஆச்சு..?' என்று கிண்டலாக கேட்டார்.

உண்மையாக புத்தகம் எழுதுவதை விட புத்தகம் வெளியீடுவது அதை விட சிரமம் என்று அனுபவ ரீதியாக உணர்ந்தேன்.

பதிவு போடாமல் இதை சாதிக்க வேண்டும் என்று இருந்தேன். வேறு வழியில்லாமல் என் விரதத்தை விட்டு பதிவு போடுகிறேன். ஆர்வமுள்ளவர்கள் உங்கள் படைப்பை அனுப்புங்கள்.

நாகரத்னா பதிப்பகம் சார்பில் வெளியீடப்படும் இரண்டு தொகுப்பு நூல்

'ஒரு நிமிட கதை'- சிறுகதை தொகுப்பு

1.கதை ஒரு பக்க அளவில் இருக்க வேண்டும். அதிகப்படி 250 வார்த்தைகள் இருக்கலாம்.

2.கதை எது பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆபாசமான கதைகள் இருக்க கூடாது. அவ்வளவு தான்.

3.தேர்வு செய்யப்படும் கதைகள் தொகுப்பு நூலாக வெளியீடப்படும்.

'காந்தி வாழ்ந்த தேசம்'- கவிதை தொகுப்பு

1. 24 வரிகள் மேல் இருக்க கூடாது.

2. காந்தி வாழ்ந்த காலம், இப்போதைய இந்தியா, காந்தி அரசியல், காந்தி இல்லாத அர்சியல் என்று எது பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.

3. ஹைக்கூ, மரபு, புதுகவிதை - எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், 24 வரிகள் மேல் தாண்டக்கூடாது.

தயவு செய்து காந்தியை தாக்கி கவிதை எழுத வேண்டாம்.

( சத்தியமாக நான் காந்தியவாதி இல்லை. ஆனால், அவரை பற்றி தொகுப்பு நூல் போட வேண்டும் என்று தோற்றியது. அதான், இந்த தலைப்பு....!!)

4. தேர்வு செய்யப்படும் கவிதைகள் தொகுப்பு நூலாக வெளியீடப்படும்.

படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 20.10.09

படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :

TO :nagarathna_publication@yahoo.in
CC : kannan.gurumurthy@gmail.com போடவும்.

பொது விதிமுறைகள்.

நீங்கள் அனுப்பும் படைப்புகள் யுனி கோட்டில் இருக்க வேண்டும்.

மின்னஞ்சலில் அனுப்புபவர்கள் 'In-text' மெயிலாக அனுப்பவும். Download செய்யும் போது சில சமயம் பிரச்சனை வரலாம்.

தயவு செய்து பதிவில் போட்ட படைப்புகளை அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்பு தேர்வாகாத பட்சத்தில், நீங்கள் உங்கள் படைப்பை பதிவில் போட்டுக் கொள்ளுங்கள்.

இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் நீங்கள் அனுப்பும் கவிதைக்கும், கதைக்கும் உதவி தொகை கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.

நன்றி,

அன்புடன்,
குகன்
http://guhankatturai.blogspot.com/2009/10/blog-post_03.ஹ்த்ம்ல்

அம்பானியும் அம்பத்தூர் மணியும்

இந்த கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனை அல்ல.
சென்னை காலை பொழுது மணி எட்டு,வாகனங்கள் traffic ஜாம் இல் சிக்கும் நேரம்.47A சைதாபேட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தது.பஸ் நிறுத்தத்தில் ஏறினான் மணி.சுற்றி முற்றி பார்த்தான்,
" ஒரு அடையார் "
"மூணு ரூபா சில்லர கொடு. பா "
அவன் கண்கள் மக்களின் பர்சுகளை ஊடுருவின...
ஒருவனது பழைய பர்ஸ் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது......
அவன் கால்களை பார்த்தான் மணி.....ரப்பர் செருப்பு
"பாவம் இவனிட ம் கை வைக்கக்கூடாது...!"மனதில் நினைத்துக்கொண்டான்....
பக்கத்துக்கு சீட்டில் அமர்த்திருந்த ஒருவன் கையிலே coke மற்றும் ஆங்கில நாளிதழ் ....
TCS ID-கார்டு.....ரீபோக் சூ......"இவனிடம் கை வைத்தால் தப்பில்லை" யோசித்தான் மணி.
பர்சில் கை வைக்கும போது மாட்டிக்கொண்டான் ................
"திருடன் திருடன் ....."தராம அடி வாங்கினான்...........
"police stationuku விடுங்கப்பா......."கத்தினார் சென்னை நாட்டாமை...............
காவல் நிலையத்தில் மணியின் மணியிலேயே மிதித்தனர் .................அவன் எதற்கு திருடினான் என்று யாரும் கேட்கவில்லை ............????????
அப்பொழுது ஒரு செய்தி ஓடி கொண்டிருந்தது காவல் துறை தொலைகாட்சியில் ..........
"BSNL networkai........தவறாக பயன்படுத்திய reliance குழுமத்தால் 3000 கோடி
மோசடி......Supreme court தொண்ணுறு லட்சம் அபராதம் .........."
அம்பானி அபராதம் கட்டி விட்டு சிரித்துக்கொண்டே வெளியே வந்தார் ..............
வெளியில் செய்தியாளர்கள் அவரை மொய்த்தனர் .....
"பசிக்காக திருடுபவன் திருடன் ......"
மணி திருடன் .......
அம்பானி businessman .............சரிதானே


http://vennirairavugal.blogspot.com/2009/10/blog-post.html

அமெரிக்காவின் முன்னணி கோடீஸ்வரர் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம்அமெரிக்காவின் முன்னணி கோடீஸ்வரர் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியிலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேரும் இடம் பெற்றுள்ளனர். போர்பஸ் பத்திரிக்கை, முதல் 400 கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில், மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் ரூ. 2.4 லட்சம் கோடி சொத்து மதிப்பு பெற்று முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ரூ. 1.92 கோடி மதிப்புடன் வாரன் பப்பெட் இரண்டாம் இடத்திலும், ஆரகிள் நிறுவனர் லாரன்ஸ் ரூ. 1.29 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த சின்டெல் நிறுவனர் பரத் தேசாய், அவரது குடும்பத்தினர் 212வது இடத்திலும், கூகுல் வாரிய உறுப்பினர் கவிதர்க் 272 இடத்திலும், ரமேஷ் வாத்வானி 277 இடத்திலும், வினோத் கோஸ்லா 347 இடத்திலும் உள்ளனர்.

ஆண்களுக்கு அநீதி

அன்றாடம் பேப்பரைப் பார்த்தால் பெண்கொடுமை, பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றிய செய்திகள் தவறாமல் இருக்கும். அதை இங்கிலீஷ் பேப்பரில் படித்தவுடன், இல்லத்தரசிகள் 2 சொட்டு கண்ணீர் விடுவார்கள். அதற்கு பிறகு தன் வாழ்க்கையிலும் நடக்கும் கொடுமைகளை, பேப்பரில் வந்த செய்தியுடன் ஒப்பிட்டு, தான் இடம் பெற்றிருக்கும் மாதர் சங்கம் மற்றும் பக்கத்துவீட்டாரிடம் விவாதிப்பார்கள்.

பதிவர்கள், இந்த செய்திக்காகவே காத்திருந்து, உடனே ஒரு பதிவு இடுவார்கள். பாருங்கள் !!! பெண்கள் அடிமை/கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதே போல தான் பார்த்த கொடுமைகளை பதிவில் கொட்டுவார்கள். இப்பதிவிற்கு, பதிவர்களின், நண்பர்கள் உடனே வந்து, மிகவும் அற்புதமான பதிவு, இந்த மாதிரி பெண்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய சில பதிவர்கள் இருப்பதால் தான் இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறைந்துவருகிறது என்பார்கள். இது ஒரு சம்பிரதாயம்.


ஆனால் இவர்களின், பார்வையில், ஆண்களுக்கு எதிராக இந்த சமுதாயத்தில் நடைபெறும் கொடுமைகளை, மருந்துக்குக் கூட எழுத மாட்டார்கள். அப்படி எழுதினால் யார் படிப்பார்கள் ?. அழுவார்கள் ?

இப்பொழுது பிரபு தேவா சிக்கியிருக்கிறார். நயன்தாரவை எதிர்த்து எழுதும் பத்திரிக்கைகள், பிரபு தேவாவை பாராட்டுகின்றன என்பது இவர்கள் குற்றச்சாட்டு. பிரபுதேவாவை குறைசொல்லி எழுதும் பத்திரிக்கைகளை இவர்கள் படிக்க மாட்டார்கள். படித்தாலும் வசதியாக மறந்துவிடுவார்கள்.

சில உதாரணங்களை இங்கு பார்ப்போம்.

  • சில மாதங்களுக்கு முன், மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்த தகவல் படி, 50 சதவிகித, ஆண்களுக்கு எதிரான புகாரில், உண்மையில்லை என்றும், ஆண்களை பழிவாங்கும் எண்ணத்தில் பெண்கள் குடுத்த புகார்கள் எனச் சொல்லி, இதனைக் குறைக்க, ஆண்களின் மேல் புகார் வந்தால், உடனே கைது என அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் இறங்குவதை தடைசெய்திருக்கிறார்கள். இந்த செய்திவந்த உடன் எவரும், எந்த பதிவையும் இடவில்லை. எப்படி எழுதமுடியும் ?. அதற்கு பதிலாக, உண்மையான குற்றத்தை செய்த ஆண்களைப் பற்றி எழுதினால், சில கண்ணீர் துளிகள் கிடைக்கும்.
  • பிரசாந்த், கிரஹலஷ்மியின் விவாகரத்து வழக்கில், பிரசாந்தை எவ்வளவு கேவலமாக எழுதமுடியுமோ, அவ்வளவு எழுதினார்கள். பத்திரிக்கையை பெண்கள் ஆர்வம் + கவனமுடன் படித்தார்கள். கிரஹலஷ்மியின் முந்தைய திருமண செய்திகள் வந்த உடன், பெண்ணுரிமைவாதிகளுக்கு ஷாக் அடித்த மாதிரி ஆகிவிட்டது. அந்த மேட்டரில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்கள். பாவம் பிரசாந்த், அதற்கு பிறகு கொடுக்கும் பேட்டிகளை வெளியிட கூட பத்திரிகைகள் இல்லை.
  • ஒரு மணமான பெண் இறந்துவிட்டால், உடனே கணவர் கைது செய்யப்படுவான். ஏன் ?. ஏனென்றால், அவனைத்தவிர வேறு யார் அக்குற்றத்தை செய்திருக்க முடியும் ? . இந்த செய்தியை அரைகுறையாக பத்திரிக்கை செய்திகளில் படித்தவுடன், அடுத்த நாள் பதிவு வந்துவிடும். ஆ !!! இன்னொரு பெண் கொடுமைக்கு பலியாகிவிட்டாள் என. விசாரணை முடிவில் வேறு பல தகவல் வரும் போது பத்திரிக்கைகளுக்கும், பதிவர்களுக்கும் இன்னொரு ஷாக் அடித்த மாதிரி ஆகிவிடும். என்ன செய்வது?. சிம்பிள். அடுத்தடுத்து வரும் செய்திகளை கண்டும் காணாதது போல விட்டுவிடலாம்.
கொஞ்சம் யோசித்து பார்த்தால், பெண்ணுரிமை பற்றி கவலை படுபவர்கள் யார் எனத் தெரியும். மாதர் சங்கங்கள், வலைப்பதிவர்கள், பெண் எழுத்தாளர்கள். இதில் என்ன கொடுமையென்றால், சமூகத்தில் நடைபெறும் பெண்கொடுமைகளால் 99 சதவிகிதம் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களே. அவர்களைப் பற்றி எழுதி, போராடி, இவர்கள் பெறும் பல சலுகைகள், சம உரிமைகள், அடித்தட்டு மக்களை சென்றடைவது இல்லை. அதற்கு பதிலாக பயன்பெறுவது வேறொருவர்.

எடுத்துக்காட்டாக, வாஜ்பாய் பிரதமராக இருந்த போது போடப்பட்ட பட்ஜெட்டில், ஊதியம் பெறுபவர்களில், பெண்களுக்கு மட்டும் கூடுதலான சிறப்பு வருமான வரிச்சலுகை அறிவிக்கப்பட்டது. இதை அறிந்து, பாராட்டி எழுதினார்கள் பலர். காரணம் இது பெண்ணுரிமை வேண்டுபவர்களை திருப்தி படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கை மேலும், பெண்ணுரிமைக்காக போராடுபவர்கள் இதன் மூலம் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற தங்களின் போராட்டத்திற்கு அரசாங்கம் அடிபணிந்துவிட்டது என மகிழ்ந்தார்கள். இதனால் பயன் பெறுபவர்களில் பலர் வருடத்திற்கு 5 லட்சம், 10 லட்சம் வருமானமாக பெறுபவர்கள். ஒரே வேலையை செய்யும் போது பெண்ணுக்கு மட்டும் ஏன் வரிச்சலுகை. இவ்வரிச்சலுகை, இன்று வரை தொடர்கிறது. காங்கிரஸ் அரசு மேலும், வரிச்சலுகையை அதிகரித்திருக்கிறது. எதற்காக ? இதனால் ஏழைப் பெண்களுக்கு லாபம் ? இதை சரி செய்ய என்ன செய்யலாம் ?
  • அரசாங்கம் உடனடியாக இந்த வரிச்சலுகைக்கான வரம்பை குறைக்க வேண்டும் (இது நடக்கப் போவது இல்லை). குறைத்தால், அதன் மூலம், உண்மையான ஏழைப் பெண்களுக்கு இதன் பலன் போய் சேரும்.
  • பெண் கொடுமைகளை எதிர்த்து போராடும், எழுதும் பலர், இந்த சலுகையை அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் கூடுதலாக பெறும் அப்பணத்தை ஏழைப் பெண்களுக்காக செலவு செய்யலாம்.

ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஊதிய ஏற்றத்தாழ்வுகள் எந்த நிறுவனங்களில் இருக்கிறது ?. கண்டிப்பாக அரசாங்கத்துறையில் இல்லை. தனியார் துறையில் (கட்டிட வேலை, டீ, காப்பி எஸ்டேட், ஆடை ஏற்றுமதி) வேலை செய்பவர்களிடம் இருக்கிறது. அதை அரசாங்கம் தன் ஆணையின் மூலம் நீக்கலாம். அதை விடுத்து இந்த மாதிரி ஏற்றத்தாழ்வுகள் இல்லாத துறைகளான மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற ஊழியர்களுக்கு வரிச்சலுகைகள் கொடுப்பது மடத்தனமானது.

ஆண் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ஆண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள், பெண்ணுரிமை என்ற பெயரில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதனால், ஆண்களுக்கு ஏற்படும் அநீதிகளைப் பற்றி எழுதுங்கள். இலங்கையில் ஒரு இனம் அழிக்கப்படுகிறது. ஆனால், உலக அளவில் இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் இனம் பெரும் கொடுமைகளுக்கு ஆளாகும் என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகிறது. அதனால் தயவு செய்து ஆண்களுக்கு எதிரான பெண்களின் கொடுமைகள் பற்றியும் எழுதுங்கள்.
http://pinnokki.blogspot.com/2009/10/blog-post_03.htmlலஞ்சம் கொடுக்க மாட்டேன் இயக்கம்

http://stopbribe.blogspot.com/2009/10/blog-post_5549.html

கீழே இருப்பது விளம்பரம் அல்ல…… (தாண்டி சென்று விடாதீர்கள்)

6ab6afc6eded13d7d5e0009a8a6b5ea7 இந்தியாவில் நாம் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர நாம் முதலில் மாறவேண்டும், என்ற கருத்தை வலியுறுத்தும் இயக்கம் ஒன்றை தொடங்கி உறுப்பினர்களை சேர்த்து கொண்டிருக்கிறது Tata Tea. இது வரை (நான் சேரும் போது) 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர்.

இங்குள்ள ஒவ்வொரு வீடியோவையும் பாருங்கள், பல விஷயங்களை கேள்வி கேட்க சொல்லுகிறார்கள்.

http://jaagore.com/main.php

அதிலொன்று, கையூட்டை யார் நிறுத்துவது?

கொடுப்பவனா? வாங்குபவனா? இங்கே விவாதம் நடைபெற்றது.

பதில் “கொடுப்பவன்தான்”

இந்த இயக்கத்தின் தாரக மந்திரம்

விழித்தெழுங்கள், நீங்கள் விரும்பும் மாற்றத்தை உங்களிடமிருந்தே ஆரம்பியுங்கள்”

“AWAKE, BE THE CHANGE YOU WANT TO SEE”

நீங்களும் இணையலாமே.


கற்பழிப்பு புகாரில் சிக்கிய கேப்டன் கட்சி நிர்வாகிகேப்டன் கட்சியோட மாநில நிர்வாகியா இருப்பவர், மகளிர் அணியைச் சேர்ந்த இளம்பெண்ணை கற்பழிச்சுட்டதா புகார் கிளம்பியிருக்கு... கட்சியில பெரிய பதவி வாங்கித் தர்றதா சொல்லி, அவர் காரியம் சாதிச்சுட்டதா பேசிக்கறாங்க..

பாதிக்கப்பட்ட பெண், சென்னை கொருக்குப் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க போயிருக்காங்க... தகவல் கேள்விப்பட்ட கட்சித் தலைமை, அந்தப் பெண்ணை, "கூல்' பண்ணி வச்சிருக்காம்... மாநில நிர்வாகிட்ட இப்ப தீவிர விசாரணை நடக்குது.

விஷயம் வெளிய தெரிஞ்சா கட்சிக்கு கெட்ட பேர் வந்துடும்னு, மாநில நிர்வாகியோட பதவியை டம்மியாக்கி, வேற ஒருத்தரை நியமிச்சிருக்காங்க.

தன் கட்சியில் இருக்கும் கருப்பு ஆடுகளை களையெடுத்து எறியாமல், போலீசையும் சட்டத்தையும் மதிக்காமல் பிரச்னையை மூடி மறைக்க முயற்சிக்கிறார் கேப்டன்.
கண்டதுக்கெல்லாம் சம்மந்தம் இல்லாமல் ஆஜர் ஆகி பரபரப்பு அறிக்கை விடும் கேப்டன்...இதை கமுக்கமாக மூடி மறைக்கவேண்டிய அவசியம் என்ன ?.
பாதிக்கப் பட்ட பெண்ணிற்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டாமா ?.
குற்றம் செய்த கள்வனை, காமுகனை சிறையில் அடைக்க வேண்டாமா ?.

ஊருக்குத்தான் உபதேசமா ? ? ?.
இந்த லட்சணத்துல 'பெண்கள் நாட்டின் கண்கள்' திட்டம் வேற.

http://error007.blogspot.com/2009/10/blog-post_9380.html

விஜய் fans அனுமதியில்லை பாகம்-4 +காணொளி போனஸ்
(இவை அனைத்தும் நகைச்சுவைக்காகவே.....விருப்பம் இல்லாதவர்கள் வெளியேரிடவும்)....

ஹைய்யோ ஹைய்யோ முடியலிங்க......எங்க பாத்தாலும் இளைய தளபதி அடிவாங்கராறு,எனக்கு வர sms ல பல அவர ரணகள படுத்தற மாதிரியே வருது....
sms மட்டும் இல்லாம அப்பப்ப மேல இருக்குற மாதிரி வீடியோ பலவும் மெயில் வழியா வருது...
சரி கொஞ்சம் சாம்பிள்....கடவுள் :பக்தா!உனது வரத்தை மெச்சினோம்,என்ன வரம் வேண்டும் கேள்.....
பக்தன்:எங்கள் வீட்டில் இருந்து நேரா சொர்கத்துக்கு ஒரு ரோடு போட்டு கொடு.....
கடவுள்:சாரி dude,அது முடியாது,நெறைய ரிஸ்க்...வேறு கேள்....
பக்தன்:எங்கள் இளயதளபதியை சூப்பர் ஸ்டார் ஆக்கு....

கடவுள்:சிமெண்ட் ரோடு வேண்டுமா அல்லது தார் ரோடு வேண்டுமா?
-----------------------------------------
பத்திரிக்கையாளன்:நீங்க நடிக்க வரலைன்னா என்னா ஆகியிருப்பீங்க?

டாக்டர் விஜய்:MBBS படிச்சிட்டு பெரிய lawer ஆகி ரெண்டு மூணு மேம்பாலம் கட்டி இருப்பேன்....

பத்திரிக்கையாளன்:!!!!??????!!!! முடியல....

---------------------------------------------

சர்தார் 1:இப்போ எல்லாம் நம்மள பத்தி நக்கல் msg வரது இல்ல பாத்தியா?

சர்தார் 2:ஆமாம் யாரோ டாக்டர் விஜயாம் பயபுள்ள அவன் பண்ற காமெடி நாம பன்றதோட பயங்கர அதிகமாம்....ஹைய்யோ ஹைய்யோ....

------------------------------------------
அரசாங்கத்தின் புதிய தண்டனைகள்:

சிறு திருட்டு:
கண் முன் விஜய் போட்டோவை காமித்தல்.....

கொள்ளை:
விஜய் பட trailer....

கொலை:
முழு விஜய் படத்தையும் பார்க்க வைத்தல்....

தீவிரவாதம்:எல்லா விஜய் படங்களும்....

---------------------------------------------

கடைசியில் நம் இந்திய டாக்டர்கள் பன்றி காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டனர்......

மருந்து:சமிபத்திய டாக்டர் விஜய் படம்,
ஹ்ம்ம்ம்ம்ம்,மனுசனே சாவறான் தம்மாதுண்டு வைரஸ் சாகாதா?
------------------------------------------------

வருடம் 2209:

குழந்தை:அப்பா பயங்கர த்ரில்லிங்கா ஒரு பேய் படம் சொல்லு....

அப்பா:அந்த காலத்துல்ல,dr.விஜய் அப்படின்னு ஒருத்தர்....

குழந்தை:அப்பா வேணாம்ப்பா,பயங்கர பயமா இருக்கு....

----------------------------------------------------ஹைய்யோ ஹைய்யோ.....
ஒன்னும் முடியல.....

(அனைத்தும் நகைச்சுவைக்கே)

நன்றி நண்பர்களே.....
http://coolzkarthi.blogspot.com/2009/09/fans-4.html


http://tamiljokes4u.blogspot.com/2009/10/blog-post_02.html
யாருமே கேட்காத 'உளியின் ஓசை' க்கு கருணாநிதிக்கு விருதா? - ஜெயலிலதா காட்டம் !
யாருமே கேட்காத ஓசையற்ற உளியின் ஓசை படத்திற்கு உரையாடல் எழுதியதற்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

விருதை வழங்கும் இடத்தில் இருக்கும் ஒரு மாநில முதல்வரே, தனது தலைமையிலான அரசு வழங்கும் விருதை பெற்றுக் கொள்வது மரபு மீறிய செயல் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது

பிறரை வற்புறுத்தி தனக்கு பாராட்டு விழா எடுக்கச் சொல்வது, துதிபாடிகள் மத்தியில் உலா வருவது தன்னையும், தன் குடும்ப உறுப்பினர்களையும் புகழ் பாடுபவர்களை வைத்து பட்டிமன்றம் நடத்தச் சொல்லி புளகாங்கிதம் அடைவது, தனக்குத் தானே விருதுகளை அளித்துக் கொள்வது ஆகியவற்றை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர் முதல்வர் கருணாநிதி. இதை தன்னுடைய பல நடவடிக்கைகள் மூலம் நிரூபித்து இருக்கிறார்.


அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, அண்ணாவின் உருவம் பொறித்த ஐந்து ரூபாய் நாணயம் வெளியிடப்பட்ட போது கூட, அண்ணாவின் படத்தை விட கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரின் பதாகைகள் தான் வழிநெடுகிலும் அதிகம் காணப்பட்டன.

அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி நடைபெற்ற பட்டிமன்றத்திலும் சரி, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவிலும் சரி, அண்ணாவின் கொள்கைகளையும், பெருமைகளையும், புகழையும் போற்றுவதற்கு பதிலாக, கருணாநிதியையும், அவரது

குடும்பத்தினரையும் மனம் குளிர வைக்கும் பேச்சுக்கள் தான் ஓங்கி ஒலித்தன.அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவா ? அல்லது கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் குளிர வைக்கும் விழாவா ?

என்று மக்கள் சந்தேகிக்கும் அளவுக்கு அந்த நிகழ்ச்சிகள் இருந்தன.

இவைகள் எல்லாம் போதாது என்று திமுக சார்பில் வழங்கப்படும் 2009 ம் ஆண்டுக்கான அண்ணா விருதையும் தனக்குத் தானே கருணாநிதி பெற்றுக் கொண்டார்.

ஏற்கனவே 2008 ம் ஆண்டுக்கான பெரியார் விருதை கருணாநிதி பெற்றுக் கொண்டதும் தன் பெயரிலான விருதை தனது மகனுக்கு கொடுத்து மகிழ்ந்ததையும் அனைவரும் நன்கு அறிவர்.

கருணாநிதி குடும்பம் தான் திமுக என்று ஆகிவிட்ட நிலையில் விருதுகள் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அளிக்கப்படுவதில் வியப்பு ஏதுமில்லை.

கட்சி சார்பில் வழங்கப்பட்ட விருதுகள் போதாது என்று தமிழக அரசின் விருதையும் தனக்குத் தானே பெற்றுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி .

அதாவது தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் திரைப்பட விருதும் இந்த ஆண்டு முதல்வர் கருணாநிதிக்கே வழங்கப்பட்டிருக்கிறது.

யாருமே கேட்டிராத, ஓசையற்ற உளியின் ஓசை படத்திற்கு உரையாடல் எழுதியதற்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

விருதை வழங்கும் இடத்தில் இருக்கும் ஒரு மாநில முதலமைச்சரே தனது தலைமையிலான மாநில அரசு வழங்கும் விருதைப் பெற்றுக் கொள்வது மரபு மீறிய செயல் . உலகத்திலேயே இதுவரை யாரும் கடைபிடித்திராத நடைமுறை . இதைவிட வெட்கக்கேடான செயல் எதுவும் இருக்க முடியாது.

இந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதை தனக்கு பெற்றுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி .

அடுத்த ஆண்டு தன்னுடைய ஆட்சியின் கடைசி ஆண்டு என்பதால் தனது மகன், மகள், பேரன், பேத்திகள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரையம் திரைப் படங்களில் ஏதாவது ஒரு துறையில் நுழைத்து, அவர்கள் பெரிய சாதனை புரிந்ததாக விளம்பரப்படுத்தி, அவர்களுக்கும் விருதுகளை பெற்றுக்கொடுத்து விடுவார்.

அடுத்த ஆண்டு பாதி விருதுகள் கருணாநிதி குடும்பத்திற்குத் தான் கிடைக்கும். விருதுகள் வழங்குவதில் கூட அரசியல் தலையீடு இருக்கிறது என்பதை கருணாநிதி தன்னுடைய நடவடிக்கையின் மூலம் நிரூபித்து இருக்கிறார்.

கடுமையான மின் வெட்டு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, தினம் கொலை, கொள்ளை, மணல் கொள்ளை, அரிசி கடத்தல் ஆகியவற்றை நிகழ்த்திக் கொண்டிருப்பதற்காக கருணாநிதிக்கு உலகச் சாதனையாளர் விருது வேறு.

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை விட ஒரு நடுநிலையான அமைப்பு இந்தியாவில் எதுவும் கிடையாது.அப்படிப்பட்ட நீதிமன்றங்களிடம் இருந்தே பல நற் சான்றிதழ்களை பெற்றவர் தான் கருணாநிதி .

உள்ளாட்சித் தேர்தலை நடத்தி சாதனை புரிந்தது, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலை வேடிக்கைப் பார்த்து சாதனை புரிந்தது,

நீதிமன்றத்திற்குள் புகுந்து நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், பொது மக்களையும் தாக்கியதை வேடிக்கை பார்த்தது, பந்த் நடத்தியதற்காக சான்றிதழ் என பல'சான்றிதழ்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எல்லாவற்றிலும் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பங்கு வேண்டும் என்ற சுயநலப் போக்கை கடை பிடிக்காமல், நதி நீர்ப் பிரச்சனைகள், விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு, கடுமையான மின்சார வெட்டு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் தினசரி தாக்குதல் ஆகியவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தி, தமிழர்களின் துயர்களை துடைக்க நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/3426-jeyalalitha-karunanidhi-

அடுத்த சுனாமி அமெரிக்காவிலா? (வீடியோ)செப்டம்பர் 29, அமெரிக்க சமோவா தீவு, 8.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம். தொடர்ந்து சுனாமி! பின்பு 30 அன்று 10.16 மணிக்கு இந்தோனேசியா சுமத்ரா தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில் நிலஅதிச்சி! பிறகு அன்றே 1.52 மணிக்கு 6.6 அளவில் ஏற்ப்பட்டது. இன்று காந்தி ஜெயந்தி அன்று, பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா , நியூ ஸீலாந்து அருகில் டோங்கா தீவுகளில் 6.1 அளவில் மீண்டும்.

இந்தச் செய்திகளை அலசிக்கொண்டிருந்தப்போது கீழுள்ள வீடியோ கண்ணில் பட்டது. சுனாமி என்ற அழிவுச் சக்தியை அக்கு வேறு ஆணிவேராக பிரித்துப் போட்டிருக்கிறார்கள். 2004 இல் வந்த ஆசியச் சுனாமியின் பிறப்பிடத்திற்கு சென்று கடலுக்கடியில் அது எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ச்சி செய்துள்ளனர். அப்படியே போகிறப்போக்கில் அமெரிக்காவின் வடமேற்கு கடற்க்கரை பகுதிகள் எதிர்நோக்கியுள்ள அதிபயங்கர அபாயத்தையும் போட்டு உடைத்துச் செல்கின்றனர். ஒன்றும் சொல்லுகிற மாதிரி இல்லை. நீங்களே வந்துப் பாருங்கள். எல்லாம் இயற்கை விட்ட வழி! ......எல்லோரயும் விஞ்ஞானமும் அதன் மூலம் மனிதன் பெறும் அறிவின் செயல்பாடுத்தான் காப்பாற்றவேண்டும்!


No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!