05-07-2009: நியுசிலாந்தில் நடைபெற்ற "உயிர்த்தெழுவோம்" எழுச்சி நிகழ்வு
ஜுலை மாதம் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு ஒக்கிலாந்தில்
அமைந்துள்ள Mt Roskill Intermediate பாடசாலை மண்டபத்தில் "உயிர்த்தெழுவோம்" எழுச்சி நிகழ்வு நியுசிலாந்து தமிழ் இளையோர் அமைப்பினரால் ஒழுங்கு செய்து
நடாத்தப்பட்டது. எழுச்சி நிகழ்வு மாவீரரின் தாயாரால் தமிழீழ தேசிய கொடி ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ் நிகழ்வை எம் அருஞ் சொத்துக்களாம் கரும்புலிகளை நினைவு கூர்ந்து கொண்டு அக வணக்கம் செலுத்தி, பொதுச்சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி செய்து நிகழ்வு கொண்டுசெல்லப்பட்டது.
நிகழ்வில் முக்கிய அம்சங்களாக சிங்கள அரசாங்கத்தின் அட்டூழியங்களையும், தமிழன் தன் இலக்காம் தமிழீழத்தை அடையும் வரை ஒருபோதும் ஓய்ந்திருக்க மாட்டான் என்ற வேட்கையை பிரதிபலிக்கும் நடனங்கள், கவிதைகள் மற்றும் நாடகமும் மேடையேற்றப்பட்டன.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிராகரித்து, படைவலிமையின் மூலம் எமது தேசத்தை சிதைத்து உறவுகளை பலியெடுத்த சிங்களத் தேசத்துடன் ஈழத்தமிழர்களாகிய நாம் இனியும் சேர்ந்து வாழ்வது சாத்தியமல்ல, தமிழீழமே எங்கள் விடிவு, மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே என்றென்றும் எங்களின் தேசியத் தலைவர், விடுதலைப்புலிகளே எமது ஏகோப்பித்த பிரதிநிதிகள்.
தேசிய தலைவர் காட்டிய பாதையில் தமிழீழம் மலர எம் பயணம் தொடரும் என்ற உயிர்த்தெழுவோம் தீர்மானத்துடன் எழுச்சி நிகழ்வு நிறைவடைந்தது.
http://www.nerudal.com/nerudal.9079.html
05-07-2009: சுவிஸ் பாசல் நகரில் நடைபெற்ற "உயிர்த்தெழுவோம்"
சிங்கள பேரினவாதிகளின் சுயரூபத்தை அறிந்து கொண்ட வல்லாதிக்க சக்திகள் கூட தமிழரின் பாதுகாப்பை கருத்தில் எடுக்காததைத் தான் நாம் கண்டுகொண்டிருக்கிறோம். ஆகவே இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக உயிர்த்தெழுந்து போராட வேண்டிய இனமாக நாம் இருக்கிறோம்.
அந்தவகையில் உலக நாடுகளில் பலவற்றிலும் நடந்த உயிர்த்தெழுவோம் எழுச்சி நிகழ்வு சுவிசிலும் முன்னெடுத்து நடாத்தப்பட்டது.
சுவிஸ் பாசல் மாநிலத்தில் உள்ள Claramatte எனும் இடத்தில் 16.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகியது.
ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடரை மேஜர் கபிலின் தாயார் தெய்வேந்திரம் அல்வீன் அம்மா அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதைத்;தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியை பாசல் மாநிலத்தின் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர் திரு. முருகன் அவர்கள் ஏற்றினார். பின்பு சுவிசில் பேசப்படும் பிரதான மொழிகளில் தமிழ்; இளையோர் அமைப்பின் உறுப்பினர்களால் உரைகள் ஆற்றப்படடன.
டொச் மொழியில் செல்வன் தினேஸ் உரையாற்றினார்.
பிரேஞ் மொழியில் செல்வி திலானி உரையாற்றினார்.
இத்தாலி மொழியில் செல்வி நிதிலா உரையாற்றினார்.
தற்காலிக நிலமை சார்ந்தும் தமிழ் மக்கள் செய்ய வேண்டிய வேலைகள் சார்ந்தும் ஊடகவியளாளரான திரு. கனகரவி அவர்களும் உiரையாற்றியிருந்தார்.
நிகழ்வின் சிறப்புப் பேச்சாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பேச்சாளர் அல்பிரெட் அவர்கள் உரையாற்றினார்.
நிகழ்வினை எழுச்சியாக்கும் வகையில் பாசல் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எழுச்சி நடநங்களை ஆடி மக்களை உட்சாகப்படுத்தினர்.
ஈழம் மீட்பது உறுதி என்ற ஒலிப்பேளையும் இவ் நிகழ்வில் வெளியிடப்பட்டது. சுவிஸ் கிளையின் வெளியீட்டுப் பொறுப்பாளர் திரு.செல்வா அவர்களால் வெளியிடப்பட்ட ஒலிப்பேளையை தமிழ் இளையோர் அமைப்பின் சுவிஸ் பொறுப்பாளர் செல்வன் ஜீவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து உயிர்த்தெழுவோம் தீர்மாணம் முன்மொழியப்பட்டது
நிகழ்வை தமிழ் இளையோர் அமைப்பின் சுவிஸ் சுக் மாநில ஒருங்கிணைப்பாளர் குருபரன் தொகுத்து வழங்கினார்.
இறுதியாக தேசியக்கொடி இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் நிகழ்வு முற்றுப் பெற்றுது.
அமெரிக்க தூதரகம் முன்னாக கனடிய தமிழ் இளையோரால் மேற்கொண்ட தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
அமெரிக்க தூதரகம் முன்னாக கனடிய தமிழ் இளையோரால் மேற்கொண்ட தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
ரொரொன்ரோ மத்தியில் அமைந்து இருக்கும் அமெரிக்க தூதரகம் முன்னாக
கனடிய தமிழ் இளையோரால் நடத்தப்பட்ட தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று ஆடி மாதம் ஐந்தாம் நாளுடன் நிறைவு பெறுகிறது.
இத்தொடர் போராட்டமானது கடந்த எழுபத்து மூன்று நாட்களாக தொடர்ந்து இருபத்து நான்கு மணித்தியாலங்களும் கனடிய தமிழ் இளையோரால் சிறப்பாக எழுச்சியுடன் மேட்கொள்ளபட்டு வந்ததுடன் கனடிய ஊடகங்களுக்கு எமது செய்திகளை எடுத்துச்சென்றது.
போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்டத்தின் இலட்சியம் என்றும் மாறாது என்ற எமது தேசிய தலைவரின் கூற்றிற்கிணங்க தொடர்ச்சியாக நடைபெற்று வந்த கவனயீர்ப்பு போராட்டத்தை பூர்த்தி செய்து விட்டு புதிய திட்டங்களை உள்வாங்கிய வகையில் இலட்சிய கனவு நிறைவேறும் வரை தமிழின தேசிய விடுதலையை நோக்கிய பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என கனடிய தமிழ் இளையோர் அமைப்பு தெரிவித்துள்ளது.
http://www.nerudal.com/nerudal.9055.html
பேரெழுச்சியுடன் மெல்பேர்னில் நடைபெற்ற "உயிர்த்தெழுவோம்" நிகழ்வு
சர்வதேச சதியால் சரிந்த தமிழர் சேனையின் சாம்பலிலிருந்து புறப்படும் புதுப்புயலாக கிளம்பியுள்ள புலம்பெயர்நதுவாழும் தமிழ் உறவுகளின் "உயிர்த்தெழுவோம்" நிகழ்வு இன்றைய தினம் ஆஸ்திரேலியா மெல்பேரன் நகரில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்துகொண்ட இன்றைய நிகழ்வில் அமைதி ஊர்வலமும் அதனைத்தொடர்ந்து எழுச்சி உரைகள் மற்றும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
மெல்பேர்ன் நகரின் மத்தியில் அமைந்துள்ள பெடரேஷன் சதுக்கத்தில் பிற்பகல் ஒரு மணி முதல் கூடிய மக்கள் அகவணக்கத்தை நிறைவு செய்துவிட்டு அங்கிருந்து 1.30 மணியளவில் ஊர்வலமாக புறப்பட்டனர்.
போர்க்கருமேகங்கள் அகன்றபோதிலும் தாயகத்தில் தமிழ் உறவுகளின் உயிரவலங்கள் தீரவில்லை என்பதையும் -
தமிழர்களுக்கு எதிராக சிங்கள தேசம் செய்துமுடித்தள்ள போர் வெற்றி என்ற பெயரிலான கொலைப்படலத்தையும் -
சித்தரிக்கும் பதாகைகள் மற்றும் தமிழீழ தேசியக்கொடி, ஆஸ்திரேலிய கொடி ஆகியவற்றையும் தாங்கியவாறு மக்கள் அமைதியாக ஊர்வலத்தில் நகர்நதனர்.
ஊர்வலத்தின் முன்னால் பேரிகை முழங்கா அதற்கு பின்னால், மூன்று லட்சம் அப்பாவி தமிழ்உறவுகளை தடுப்புமுகாமில் வைத்திருந்து வதை புரியும் சிங்கள படைகளின் கொடுமைகளை சித்தரிக்கும் வகையில் வீதி அரங்காற்றுகைக் குழுவினர் நகர்ந்தனர்.
அதற்கு பின்னால், மக்கள் அணிவகுத்து செல்ல வீதியின் இருமருங்கிலும் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த அமைதி ஊர்வலம் சுவான்ஸ்டன் வீதி வழியாக சென்று பேரக் வீதியால் வளைந்து பின்னர் எலிசபத் வீதிக்கு வந்து அங்கிருந்து கொலின்ஸ் வீதி வழியாக மீண்டும் சுவான்ஸ்டன் வீதிக்கு சென்று அதன் ஊடாக பெடரேஷன் சதுக்கத்தை அடைந்தது.
அங்கு எழுச்சிநிகழ்வுகள் பின்னர் ஆரம்பமாகின.
முதலில், டொமினிக் அவர்களின் எழுச்சிப்பாடல் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து ஜூட் பிரகாஷ் அவர்கள் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார்.
அதனை அடுத்து தமிழீழ எழுச்சி பாடலுக்கு செல்வி பைரவி சிவராஜா, நிஷானி நவரட்ணம் ஆகியோர் வழங்கிய நாட்டிய நிகழ்வு நடைபெற்றது. அதன்பின்னர், கோகுலன் வழங்கிய ஆங்கில பாடல் இடம்பெற்றது.
சனநெருக்கடி மிக்க பெடரேஷன் சதுக்கத்தில் மெல்பேர்ன் தமிழ் இளையோர் நேர்த்தியாக மேற்கொண்ட இந்த எழுச்சி நிகழ்வுகள் பல்லின மக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
அவர்கள் நிகழ்வுகளை நின்று பார்த்தது மட்டுமல்லாமல் அங்கு இளையோர் அமைப்பினால் வைக்கப்பட்டிருந்த, ஈழத்தில் தமிழ் உறுவுகளுக்கு விடிவு வேண்டி கோரி கையெழுத்துவாங்கும் விண்ணப்பத்திலும் கையொப்பமிட்டுச்சென்றனர்.
இந்த எழுச்சி நிகழ்வுகளை அடுத்து இறுதியாக நிகழ்வின் முக்கிய விடயமான உறுதிபூணும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த உறுதியுரையை சுதாகரன் தனபாலசிங்கம் வாசிக்க, அதனை அனைத்து மக்களும் தமது நெஞ்சில் கைவைத்து ஏற்றுக்கொண்டனர்.
மாலை நான்கு மணியளவில் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற உறுதி முழக்கத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
நிகழ்வில் வாசிக்கப்பட்ட உறுதியுரை வருமாறு:-
தமிழீழ தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்து, சத்தியத்தின் சாட்சியாக நின்று எம்மை வழிகாட்டும் உயிர்ப்பூக்களாகிய மாவீரர்களின் தியாக வரலாறு மீதும், எமது கலங்கரை விளக்காகத் திகழும் பெருந்தலைவர் – தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீதும், எமது தாய்மண்ணாகிய தமிழீழ தாயகம் மீதும், தமிழ் மொழி மீதும் ஆணையிட்டு, புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களாகிய நாம், எமது அரசியல் வேணவாவை உலக சமூகத்திற்கு இடித்துரைக்கும் வண்ணம் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றுகின்றோம்:-
1. தலைமுறை தலைமுறையாக தமது வரலாற்று வாழ்விடமாக விளங்கிய தமிழீழ மண்ணை விட்டு ஆயுதமுனையில் எமது உறவுகளை சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றுவதற்கு உதவியும் இடமளித்தும், வதைமுகாம்களுக்குள் அவர்களை இட்டுச் சென்ற உலக வல்லரசுகளும், ஐக்கிய நாடுகள் சபையும், எமது உறவுகளை உடனடியாக பொறுப்பேற்று, அவர்களின் பாதுகாப்பையும், நலன்களையும், விடுதலையையும், உரிமைகளையும், மீள்குடியேற்றத்தையும் காலம் தாழ்த்தாது உறுதிசெய்யும் வகையில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம்.
2. சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள போராளிகளையும், அவர்களின் குடும்பங்களையும், மனிதநேயப் பணியாளர்களையும், ஏனைய பொதுமக்களையும், பன்னாட்டு மனிதநேய சட்டங்களுக்கும், போருக்குப் பின்னரான சமாதான நெறிமுறைகளுக்கு இசைவாகவும் உடனடியாக விடுதலை செய்து, அவர்களின் அமைதியான வாழ்விற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.
3. கடந்த இரண்டரை ஆண்டுகால யுத்தத்தில், வன்னியில் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான எமது உறவுகளை கொன்றுகுவித்தும், படுகாயப்படுத்தியும், காணாமல் போனோராக்கியும், மேலும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான எமது உறவுகளை தமது வரலாற்று வாழ்விடங்களை விட்டு வேரோடு குடிபெயர்த்தியும், பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அழித்தும் – சிதைத்தும், வாழ்வாதாரத்தை முற்றாக இல்லாதொழித்தும், வரலாறு காணாத மிகப் பெரும் மனிதப் பேரவலத்தை தமிழீழ மண்ணில் தோற்றுவித்த சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் இனப்படுகொலைகளுக்கு எதிராக, போர்க்குற்ற வழக்குகளையும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களுக்கான வழக்குகளையும், இனஅழித்தொழிப்பிற்கு எதிரான வழக்குகளையும் தாக்கல் செய்து, சிங்கள ஆட்சியாளர்களை உலக அரங்கில் நீதியின் முன்னிறுத்தி தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்தை நாம் வேண்டி நிற்கின்றோம்.
4. ஈழத்தீவில் எமது வரலாற்றுத் தாயகமாக விளங்கும் தமிழீழ தாயக பூமியில், எமது தேசிய அடையாளத்தைப் பேணும் தன்னாட்சியுரிமையுடைய, சகல விதமான ஒடுக்குமுறைகளும் நீங்கிய சமதர்ம தமிழீழ தனியரசை நிறுவுவதற்கான எமது இலட்சிய உறுதியையும், வேட்கையையும் மீண்டுமொரு தடவை உலக சமூகத்திற்கு நாம் இடித்துரைக்கின்றோம்.
5. எமது தேச சுதந்திரப் போராட்டத்தையும், அரசியல் அபிலாசைகளையும் நசுக்கும் நோக்கத்துடன் முழுவீச்சுடன் எமது தேசத்தின் மீது அந்நிய நாட்டவரின் உதவியுடன் முழுப் படைவலிமையைப் பிரயோகித்து, எமது உறவுகளின் உயிர்களை பலியெடுத்த சிங்கள தேசத்துடன், ஈழத்தமிழர்களாகிய நாம் இனியும் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்ற மெய்யுண்மையை, உலக சமூகத்திற்கு இவ்வேளையில் நாம் மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
6. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அரசியல் தீர்வு முயற்சிகள் சாத்தியப்படாத நிலையில், கிழக்குத் தீமோர், மொன்ரநிக்ரோ, கொசவோ போன்ற தேசங்களின் வெளியக சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, முழுமையான தன்னாட்சியுரிமையின் அடிப்படையில் அவர்களுக்கான தனியரசுகளை நிறுவிக் கொடுத்த உலக சமூகம், சிங்கள தேசத்துடன் தமிழீழ தேசம் இனியும் சமரசம் செய்துகொள்வது சாத்தியமில்லை என்ற மெய்யுண்மையைப் புரிந்துகொண்டு, தமிழீழ தேசத்தின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, பலஸ்தீனர்களுக்கு தனியரசை நிறுவிக் கொடுப்பதற்கு இணங்கியமை போன்று, தமிழீழ தனியரசை நிறுவுவதற்கு தேவையான அரசியல் – இராசதந்திர உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்று நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
7. தமிழீழ தேச விடுதலைக்காக தமது உயிரை காவலரணாக்கி, இத்தருணத்தில்கூட தமிழீழ தாயக பூமியில் எமக்காகவும், எமது தேச சுதந்திரத்திற்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து நிற்கும் எமது ஏகோபித்த பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்கி, பயங்கரவாத முத்திரையை அகற்றி, கடந்த போர்நிறுத்த காலப்பகுதியில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அரசியல் – இராசதந்திர அங்கீகாரத்தையும், சமதரப்பு நிலையையும் மீளளிக்குமாறு உலக சமூகத்தை நாம் வலியுறுத்துகின்றோம்.
8. எமது குருதியும், சதையுமாக விளங்கும் எமது உறவுகளாகிய தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழீழ மக்களாகிய நாமும் எவராலும் பிரிக்கப்பட முடியாதவர்கள் என்பதை இவ்வேளையில் நாம் நினைவூட்டுகின்றோம்.
9. மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே என்றென்றும் எங்களின் தேசியத் தலைவர் என்பதையும், அவரது இலட்சிய வழிகாட்டலில் நின்று நிச்சயம் எமது தேச சுதந்திரத்தை ஈட்டுவோம் என்பதையும், இவ்வேளையில் உலக சமூகத்திற்கு நாம் இடித்துரைக்கின்றோம்.
10. உலகரங்கில் தமிழன் என்ற அடையாளத்தை அளித்த, மாவீரர்களின் தியாகத்தில் உருவான புலிக்கொடியே தமிழீழ தேசியக் கொடி என்பதை மீண்டுமொரு தடவை உலக அரங்கில் நாம் உறுதிசெய்கின்றோம்.
11. உலக அரங்கில் அகதி என்றும், அந்நிய இனத்துக் குடிமகன் என்றும் அலைந்து திரியும் அவலத்தில் இருந்து விடுதலைபெற்று, எமது தமிழீழ தாயக பூமியில் தமிழீழத்தின் பூர்வீக குடிமக்களாக வாழ்வதற்கான எமது அசையா உறுதியையும் விருப்பையும், வேணவாவையும், மீண்டுமொரு தடவை நாம் வெளிப்படுத்துகின்றோம்.
12. எமது அரசியல் உரிமைகளையும், அரசியல் சுதந்திரத்தையும், தன்னாட்சியுரிமையையும் வென்றெடுப்பதற்கும், தமிழீழ தனியரசை நிறுவும் எமது இலட்சியப் பயணத்தில் எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும், இடையூறுகளை எதிர்கொண்டாலும், பின்னடைவுகளை சந்தித்தாலும், தமிழீழ தாயக மண்ணில் இறுதி வரை இலட்சிய உறுதி தளராது, எம்தேசத்தை மீட்பதற்கும் நம் தமிழீழத் தேசியத் தலைவர் காட்டிய பாதையில் பயணித்து அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நமது மண்ணை மீட்டெடுக்க, புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களாகிய நாம் எமது பூரண ஆதரவை நல்கி என்றும் உதவி நிற்போம் என்பதையும், இவ்வேளையில் உலக சமூகத்திற்கு நினைவூட்டுகின்றோம்.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
http://www.nerudal.com/nerudal.8967.html
உயிர்தெழுவோம்'நிகழ்வில் கொக்கரிக்கும் சிங்களத்திற்கு நாம் ஓய்ந்துவிடவில்லை மாறாக வீறு கொண்டுள்ளோம் என எடுத்துரைத்த கனடியத் தமிழ் இளையோர்
கனடியத் தமிழ் மக்களால் இன்று சனிக்கிழமை மாலை ஐந்து மணி முதல் ஒன்பது மணி வரை ஒன்டாரியோ பாராளுமன்றத்தின் முன்றலில்உயிர்த்தெழுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் உணர்ச்சி பூர்வமாக கலந்து கொண்டனர்.
இலங்கை இராணுவத்தின் கட்டுபாட்டில் இயங்கும் வதை முகாம்களில் வாழும் இரண்டு இலக்கத்துக்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களை விடுவித்துமீண்டும் அவர்களை அவர்களது சொந்த வீடுகளில் குடியேற்ற வேண்டியும் போர்குற்றங்களில் ஈடுபட்ட ராஜபக்சே சகோதரர்களையும் இராணுவஅதிகாரிகளையும் சர்வதேச நீதிமன்றளில் நிறுத்த வேண்டியும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச குமுகம் அங்கீகரிக்கவேண்டியும் உயிர்த்தெழுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்வு மாலை ஐந்து மணியளவில் மங்கள விளக்கேற்றல், கனடியத் தேசிய கீதம், தமிழீழ தேசிய கீதம் மற்றும் அமைதி வணக்கநிகழ்வுகளுடன் ஆரம்பமானது.
அத்துடன் வானம் பாடிகளின் உணர்ச்சிப்பாடல்கள், காசியானந்தனின் கவிதை, ஈழத்தமிழரின் சுயநிர்ணய அரசிற்கு ஆதரவு வழங்கும் வேற்றின அமைப்பு பிரதிநிதிகளின் பேச்சுக்கள் என்பனவும் இடம்பெற்றது.
மேலும் கனடிய உயர்பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ் மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர்களால் ஈழத்தமிழினத்தின் விடிவுக்கு கனடிய தமிழரின் பங்கும் அதன் முக்கியத்துவம் பற்றியும் மாணவர் குமுகத்தின் பலம் பற்றியும் தமிழீழ தேசியம் உருவாக கனடிய தமிழ் மாணவர்கள் உழைக்க வேண்டும் எனவும் உணர்ச்சி பொங்க உரையாற்றினார்கள்.
இறுதியாக தமிழீழ தேசிய சின்னங்களுக்கு உரிய முறையில் மதிப்பளித்தல், ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலை புலிகளின் தடையை நீக்குதல், வதை முகாம்களில் இருந்து ஈழத்தமிழர்களை விடிவித்தல், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய ஆட்சியை அங்கீகரிக்கும் வரை தமிழீழ தேசிய தலைவரின் வழிகாட்டலில் மாவீர்களின் கனவுகளை சுமந்தபடி போராடுதல், உட்பட பன்னிரண்டு உறுதி மொழிகள் எடுக்கப்பட்டன. இயக்குனர் சீமானின் பேச்சுடன் உயிர்தெழுவோம் நிகழ்வு முடிவுபெற்றது.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com